பின்னுரை

காலம்‌: 1999 ம்‌ ஆண்டு, பெப்ரவரி மாதம்‌, முதலாவது வாரம்‌. இடம்‌ தென்கிழக்கு ஆசிய. நாடு ஒன்றின்‌, சுறுசுறுப்பும்‌ வளர்ச்சியும்‌ கண்ட தலை நகரம்‌. மிகவும்‌ நவீனமான, சுத்தமான மருத்துவ மனை ஒன்றின்‌ வரவேற்பு மண்டபத்திற்குள்‌ சுகவீனமுற்றிருந்த எனது கணவரை அழைத்துச்‌ செல்கிறேன்‌. அவரை உயிருடன்‌ வைத்திருக்க வேண்டும்‌ என்ற உழைச்சலில்‌ இனி நான்‌ தனித்து நிற்கப்போவதில்லை என்ற உணர்வு எனக்குப்‌ பெரும்‌ நிம்மதியைக்‌ கொடுத்தது. அவசர மருத்துவ பரிசோதனைக்காக பாலா அங்கு அனுமதிக்கப்பட்டார்‌. பாலாவின்‌ சிறுநீரக நோய்க்கு வைத்தியம்‌ அளிக்கவல்ல நிபுணத்துவமும்‌ அனுபவமும்‌ வாய்ந்த மருத்துவர்கள்‌ அங்கு பணிபுரிந்து வந்தனர்‌.

மருத்துவ மனையில்‌ அனுமதிக்கப்பட்டு 36 மணி நேரத்திற்குள்‌ பாலாவின்‌ நோய்‌ நிலைமை அறிவதற்கான சகல பரிசோதனைகளும்‌ முடிவடைந்து தீர்வுகளும்‌ தீர்மானிக்கப்பட்டன. பாலாவின்‌ நோய்‌ பற்றியும்‌, அதற்கான சிகிச்சை முறைகள்பற்றியும்‌, எமக்கு விளக்கம்‌ அளிக்கப்பட்டது. நீண்டகால நீரழிவு நோயினால்‌, பாலாவின்‌ சிறுநீரகங்கள்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டிருப்பதாகவும்‌, குருதியடைப்புக்‌ காரணமாக இடதுபுற சிறுநீரகம்‌ பெரிதாக வீங்கி வெடிக்கும்‌ நிலையில்‌ இருப்பதா கவும்‌, அறுவைச்‌ சிகிச்சை மூலம்‌ அதனை அகற்றிவிட வேண்டும்‌ என்றும்‌ மருத்துவ நிபுணர்கள்‌ எமக்கு விளக்கம்‌ அளித்தார்கள்‌.

பாலாவுக்கு அறுவைச்‌ சிகிச்சை நடந்தது. இடதுபுற சிறுநீரகம்‌ வெட்டி அகற்றப்பட்டது. நோய்ப்பட்டு, பெரிதாக வீங்கியிருந்த அந்த சிறுந்ரகத்தை மருத்துவ நிபுணர்கள்‌ என்னிடம்‌ காண்பித்தார்கள்‌. வீங்கிப்‌ புடைத்த இச்சிறுநரகத்தை அகற்றுவதில்‌ தாமதம்‌ ஏற்பட்டிருந்தால்‌ பாலாவுக்கு உயிராபத்து ஏற்பட்டிருக்கும்‌ என்றும்‌ சொன்னார்கள்‌. அந்து. மருத்துவ மனையில்‌ வழங்கப்பட்ட கருசனையும்‌, கண்காணிப்பும்‌ காரணமாக, பாலா சீக்கிரமே குணமடைந்து உடல்‌ தேறினார்‌. ஒரு ஆபத்தான கட்டத்தைக்‌ கடந்துவிட்டோம்‌. எனினும்‌ வேறு சிக்கல்கள்‌ இருக்கவே செய்தன. சட்டவிரோதமாக அந்த நாட்டில்‌ நாம்‌ குடிபுகுந்து இருப்பதால்‌ நாம்‌ எப்பொழுதும்‌ கைது செய்யப்படும்‌ ஆபத்தும்‌ இருந்தது. பாலா மேலும்‌ நோயுறுவதற்கு முன்னராக அந்நாட்டிலிருந்து நாம்‌ வெளியேறிவிடூுவது அவசியமாக இருந்தது. சிறிதுகாலம்‌, அந்நாட்டின்‌ தலைநகரில்‌ நாம்‌ தலைமறைவாகவே வாழ்ந்தோம்‌. எமது நடமாட்டங்‌ களைக்‌ கட்டுப்படுத்தி, அதிகாரிகளின்‌ கண்களில்‌ சிக்குப்படாமல்‌ . ஒதுங்கிவாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம்‌. எமது கடவுச்சீட்டுகள்‌ காலாவதி யாகிவிட்டதால்‌ நாம்‌ லண்டனுக்குச்‌ செல்லமுடியவில்லை சட்டரீதியான பத்திரங்கள்‌ எதுவுமில்லாமல்‌ விமான நிலையங்கள்‌ வழியாக பயணங்களை நாம்‌ மேற்கொள்ள முடியாத நிலை. எனவே சட்டரீதியான கடவைச்சீட்டை பெற்றுக்‌ கொள்வதே முக்கியபணியாகக்‌ கருதினோம்‌. லண்டனில்‌ எமது பழைய நண்பர்களைத்‌ தொடர்பு கொண்டோம்‌. அவர்கள்‌ எமது இக்கட்டான நிலையை, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்குத்‌ தெரிவித்து உதவி கேட்டார்கள்‌. இறுதியில்‌, பிரித்தானியாவுக்கு வெளியே, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாட்டின்‌ தூதரகத்தில்‌, பாலாவுக்கு புதிய கடவுச்ச்ட்டை வழங்க பிரித்தானிய அரசு இணங்கியது. எனக்கும்‌ புதிய கடவுச்சீட்டை வழங்க லண்டனிலுள்ள அவுஸ்திரேலியத்‌ தூதரகம்‌ இணங்கியது. நாம்‌ தலைமறைவாக வாழ்ந்துவந்த நாட்டிலும்‌ உயர்பீடத்தில்‌ ்‌ சில நண்பர்கள்‌ எமக்கு இருந்தார்கள்‌. இவர்களின்‌ உதவியோடு, அந்நாட்டின்‌ பிரதான விமான நிலையம்‌ ஊடாக, நாம்‌ பாதுகாப்பாக லண்டன்‌ புறப்பட்டோம்‌.

நாம்‌ லண்டன்‌ திரும்பியதையடுத்து, எனது வாழ்வில்‌, சவால்கள்‌ நிறைந்த புதிய அத்தியாயம்‌ ஒன்று, திறந்துகொண்டது. பாலாவின்‌ நோய்‌ நிலவரமும்‌ மருத்துவ தேவைகளும்‌ காரணமாக, எமது வாழ்க்கை முறையிலும்‌ அடிப்படையான மாற்றங்களைச்‌ செய்யவேணடியிருந்தது. பாலாவுக்கு மறுவாழ்வு கொடுக்கும்‌ வகையில்‌, அவருக்கு சிறு நீரக மாற்றுச்‌ சிகிச்சை அளிப்பதற்கு லண்டன்‌ மருத்துவ நிபுணர்கள்‌ இணக்கம்‌ தெரிவிக்கவில்லை. அதேவேளை, சிறுநரக நோயினால்‌ பாலாவின்‌ உடல்‌ நிலையும்‌ மோசமாகி வந்தது. இப்படியான சோதனை மிகுந்த காலத்தில்‌ தான்‌, எமது வாழ்க்கையில்‌ நோர்வே இராஜதந்திரிகளின்‌ தொடர்பும்‌ நட்புறவும்‌ ஏற்பட்டது. சமாதானத்‌ தூதுவர்களாக அவர்கள்‌ எம்மை லண்டனில்‌ சந்தித்தார்கள்‌. திரு. எரிக்‌ சுல்ஹைம்‌, முன்னாள்‌ நோர்வேயின்‌ உதவி வெளிவிவகார மந்திரி திரு. வேகர்‌ ஸ்ரோமன்‌, கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர்‌ திரு. ஜோன்‌ வெஸ்ட்போர்க்‌, நோர்வே வெளிவிவகார அமைச்சின்‌ நிர்வாக அதிகாரி செல்வி. ஜேஸ்டி ரொம்ஸ்டால்‌ ஆகியோர்‌, தென்மேற்கு லண்டனிலுள்ள எமது வீட்டுக்கு அடிக்கடி வருகைதந்து, விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ சிறீ லங்கா அரசுக்கும்‌ மத்தியில்‌ சமாதான முயற்சிகளை மேற்கொள்வது சம்பந்தமாக எம்முடன்‌ கலந்துரையாடினர்‌. வன்னியிலுள்ள புலிகளின்‌ தலைமைப்‌ படத்துடன்‌ கலந்தாலோசித்த பின்னர்‌, சமாதான முயற்சியில்‌ நோர்வேயின்‌ அனுசரணையை நாம்‌ - ஏற்றுக்கொண்டோம்‌.

பாலாவின்‌ உடல்நிலை மோசமாகி வந்ததால்‌, மனிதாபி மான அடிப்படையில்‌ அவருக்கு வசதிகளை அளிப்பதற்கு நோர்வே அரசாங்கம்‌ முன்வந்தது. நோர்வேயின்‌ மருத்துவக்‌ கண்ணோட்டத்தின்‌ படி, பாலாவுக்கு சிறுநீரக மாற்றுச்‌ சிகிச்கை அளிப்பதே சிறந்த வழியெனக்‌ கருதப்பட்டது. இறுதியாக, நோர்வேயின்‌ தலைநகரான ஓஸ்லோவுக்கு அழைத்துச்‌ செல்லப்பட்ட பாலா, அங்குள்ள பிரதான அரச மருத்துவ மனையில்‌ சேர்க்கப்பட்டார்‌. சிறுந்ரக மாந்று அறுவைச்‌ சிகிச்சையை மேற்கொள்ள, பாலாவின்‌ உடல்நிலை தாக்குப்பிடிக்குமா என்பதைக்‌ கண்டறியும்‌ நோக்கத்துடன்‌ பல்வேறு வகையான உடற்பரிசோதனைகள்‌ அவருக்கு நடத்தப்‌ பட்டது. பரிசோதனைகள்‌ சாதகமாக அமைந்ததால்‌, நாம்‌ அறுவைச்‌ சிகிச்சைக்கு இணங்கினோம்‌. இரண்டாயிரம்‌ ஆண்டு ஆரம்ப காலத்தில்‌ பாலாவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்‌ சிகிச்சை நிகழ்ந்தது. சீக்கரமே அவர்‌ குணமடைந்து தேறினார்‌. உடல்‌ ஆரோக்கியத்து! ன்‌, புதிய மனிதராக ஒஸ்லோ மருத்துவ மனையிலிருந்து அவர்‌ வெளியேறினார்‌.

மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாலா, ஓஸ்லோவிலுள்ள விடுதியொன்றில்‌ ஓய்வெடுத்து குணமடைந்து வந்தார்‌. அவ்வேளையில்‌ சிறீ லங்காவின்‌ அரச அதிபரான சந்திரிகா குமாரதுங்க, Far Eastern Economic Review என்ற ஆங்கில ஏட்டிற்கு ஒரு கேலிக்கூத்தான செவ்வியை வழங்கியிருந்தார்‌. அதாவது பாலாவுக்கு சிறுநரக மாற்று அறுவைச்‌ சிகிச்சை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்தை தாமே பணித்ததாக சந்திரிகா உரிமை கோரியிருந்தார்‌. இது முற்றிலும்‌ பொய்யானது மட்டுமன்றி , பொறுப்பந்றதுமான கூற்றாகும்‌. நாம்‌ உடனடி யாக, நோர்வே வெளிவிவகார அமைச்சை தொடர்புகொண்டு எமது ஆட்சேபத்தை தெரிவித்தோம்‌. சந்திரிகாவின்‌ கூற்று நோர்வே அரசாங்‌ கத்திற்கும்‌ எரிச்சலூட்டியது. ஏனென்றால்‌ பாலாவுக்கு மருத்துவ உதவி வழங்க சந்திரிகாவின்‌ அனுமதியை அவர்கள்‌ கோரவில்லை. மனிதாபிமான அடிப்படையில்‌ அவர்கள்‌ தாமாக எடுத்த முடிவு அது. ஓஸ்லோ மருத்துவமனையில்‌, சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின்னரே, கொழும்பிலிருந்த நோர்வே தூதுவர்‌ சந்திரிகாவுக்கு தகவல்‌ தெரிவித்திருந்தார்‌. எனவே சந்திரிகாவின்‌ கூற்றை மறுத்து உண்மை நிலையைத்‌ தெளிவுபடுத்துமாறு நாம்‌ நோர்வே அரசை வேண்டிக்‌ கொண்டோம்‌. நாம்‌ வேண்டிக்‌ கொண்டதற்கு இணங்க, நோர்வே வெளிவிவகார அமைச்சைச்‌ சேர்ந்த உயர்‌ அதிகாரி ஒருவர்‌ சந்திரிகாவின்‌ கூற்றை மறுதலித்ததுடன்‌, நோர்வே அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து, மனிதாபிமான அடிப்படையில்‌ பாலாவுக்கு மருத்துவ உதவி வழங்கியதாக ஊடக உலகிற்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்‌. அதேவேளை தமிழ்‌ கார்டியன்‌ (25 மார்ச்‌ 2000) பத்திரிகைக்கு வழங்கிய ஒரு விபரமான செவ்வியில்‌ . பாலாவும்‌ நிலைமையைத்‌ கதெளிவுபடுத்தினார்‌. கடும்‌ சுகவீனமுற்றிருந்த பாலாவை வன்னிக்‌ காட்டிலிருந்து வெளி உலகத்திற்கு அழைத்துச்‌ செல்ல நோர்வே அரசும்‌ சர்வதேச செஞ்சிலுவைச்‌ சங்கமும்‌ அனுமதி கேட்டபோது, சந்திரிகா அம்மையாரும்‌ திரு. கதிர்காமருமாகச்‌ சேர்ந்து, விடுதலைப்புலிகளால்‌ ஏற்றுக்கொள்ள முடியாத கடும்‌ நிபந்தனை களை விதித்து, பாலாவின்‌ பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்‌ என்பதையும்‌ இந்த செவ்வியில்‌ பாலா விளக்கினார்‌.

சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, பாலா குணமடைந்து உடல்‌ தேறியதும்‌, நாம்‌ தொடர்ந்து தமிழழ மக்களின்‌ விடுதலைப்‌ போராட்டத்தை முன்னெடுக்கும்‌ அரசியல்‌ இராஜதந்திரப்‌ பணிக ளில்‌ ஈடுபட்டு வருகிறோம்‌.