முகவுரை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, இலங்கையில் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் ஒரு விடுதலை இயக்கம் என்பது உலகம் நன்கறிந்த விடயம். ஆயினும் இவ்வியக்கத்தின் உண்மையான தன்மை பற்றியோ, கட்டமைப்புப் பற்றியோ, அதன் தலைமைத்துவத்தின் சிறப்பியல்புகள் பற்றியோ உலகத்தாருக்கு அதிகம் தெரியாது. அது போன்றே தமிழ். மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்கள் பற்றியும் அனைத்துலகம் அறியாது. இறுக்கமான பத்திரிகைத் தணிக்கை, யுத்தப் பிரதேசங்களுக்கு வெளியார் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை, உலக அரசுகளினதும் சர்வதேச ஊடகங்களினதும் பாராமுகம் ஆகியன இந்நிலைமைக்குக் காரணம் எனலாம். இந்த இருட்டடிப்பானது, அரசியல் ஆய்வாளர்கள், இராணுவ நிபுணர்கள், எதிர்ப்புரட்சி விற்பன்னர்கள் எனக் கூறிக் கொள்வோருக்குத், தாம் எண்ணியதை எழுத கட்டுப்பாடுகள் அற்ற பரந்த இடைவெளியைத் திறந்து விட்டது. இதனால் விடுதலைப் புலிகள் . அமைப்புப் பற்றியும், தமிழர்களது போராட்டம் பந்றியும் உண்மையைத் திரிவுபடூத்தி பொய்யும் புரட்டுமாக எழுதுவதற்கு இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வேண்டுமென்றே இவர்களால் உருவகிக்கப்பட்ட கோரமான, அசிங்கமான படிமங்கள், பதிவுகள், சித்தரிப்புகள் காரணமாக தமிழரின் இன நெருக்கடிக்குப் பின்னாலுள்ள உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை மூடிமறைத்து நிற்கும் மர்மத் திரையை நீக்கி, ஒரு மக்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட கொடூரமான அடக்குமுறை பற்றியும் அதற்கு எதிராக வெடித்த எதிர்ப்பு முறை பற்றியுமான உண்மைக் கதையை, உள்ளார்ந்த கதையை எடுத்துக் கூறுவதே இந்த நூலின் நோக்கமாகும்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நான் எனது வழ்க்கையை தமிழ்ப் புலிகளுடன் செலவிட்டிருக்கின்றேன். தமிழீழ சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்காற்றிய எனது வரலாற்றுப் பயணமும், அந்தக். காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்களும் இந்த நூலில் விபரிக்கப்படூுகின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் படிநிலை வரலாற்று வளர்ச்சியில், காலவரிசைப்படி கட்டவிழும் நிகழ்வுகள், சம்பவங்கள், வாழ்வனுபவங்களை சரித்திர ரீதியாகவும், சுயசரித விபரணையாகவும் இங்கு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவிலுள்ள ஓர் சிறிய, அறியப்படாத கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், புதிய அனுபவம் தேடி, தனது சொந்த நாட்டை விட்டு ஐரோப்பாவிற்கு பயணித்தபோது தனது வாழ்க்கையிலே ஒரு புரட்சிகரமான மாற்றத்துக்கு எவ்வாறு ஆளாகிறாள் என்ற கதைபற்றி இந்த நூலின் ஆரம்ப பகுதிகளில் விளக்கப்படூுகின்றது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஜரோப்பிய பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நான் விமானம் ஏறிய பொழுது எனது வாழ்க்கையில் ஒரு அடிப்படையான மாற்றம் நிகழப் போகிறது என்பதை அப்பொழுது நான் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அது நடந்தேறியது உண்மைதான். வெளியுலகப் பயணங்கள் அன்றி இங்கிலாந்தில் பெற்ற உயர் கல்வி போன்றவற்றிற்கு அப்பால் அது நிகழ்ந்திருக்கின்றது. எனது உலகப் பார்வை அடிப்படையாகவே மாற்றம் கண்டது. எனது வாழ்நிலை மாற்றத்தை தீர்மானிக்கும் சக்தியாக பெரும்பங்காற்றியவர் எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களே. 1978ம் ஆண்டு எமது திருமணம் நிகழ்ந்தது. இத் திருமணமானது கருத்தியல் ரீதியான, கண்ணோட்ட ரீதியான, விழுமிய ரீதியான ஒரு பிணைப்பு என்றே சொல்வேன். அன்றுதொட்டு, எவரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், நாம் எல்லா சவால்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் முகம்கொடுத்து, ஒரு புரட்சிகரமான பாதையில் ஒன்றாகக் கைகோர்த்து நடந்திருக்கின்றோம். இவ்வாறு, தமிழரின் சுதந்திரப் போராட்டத்தில் எமது ஈடுபாடு ஒரு அபூர்வமான வாழ்க்கை வரலாறாக கட்டவிழ்கிறது.
1978ம் ஆண்டு, லண்டனில் தமிழழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நாம் அறிமுகமானதைத் தொடர்ந்து, இந்தியா சென்று புலிகள் அமைப்பின் தலைவர்களையும் போராளிகளையும் சந்திப்பதென ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தோம். இந்தியாவில், தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில், புலிகள் இயக்கத்தின் நிறுவன கர்த்தாவான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற இளைஞரைச் சந்தித்தோம். இவர், கடந்த இரு தசாப்தத்திற்கு மேலான காலத்தில் ஒரு காவிய நாயகனாக போற்றப்படுவது மட்டுமன்றி, தனது ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியத் தலைவன் என்ற பாத்திரத்தையும் பெற்றிருக்கின்றார். திரு பிரபாகரனுக்கும், அவரது தோழர்களுக்கும் நாம் அறிமுகமான விபரங்களை இரண்டாவது அத்தியாயத்தில் விபரிக்கின்றேன். அத்தோடு அங்கு விடுதலைப் . புலிகளின் உள்ளார்ந்த செயற்பாட்டுச் சிக்கல்களையும் விளக்குகின்றேன். ஒரு தலைமறைவான கெரில்லா இயக்கத்தை, சிங்கள அரசின் படைபலத்திற்கு ஈடுகொடுக்கும் வல்லமை படைத்த ஒரு தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதில் புலிகள் எதிர்கொண்ட இடர்களையும், சிக்கல்களையும் அவர்களது ஆரம்ப வரலாறு தெளிவாக புலப்படுத்துகிறது. உள்ளீடான முரண்பாடுகளும் செயற்பாட்டுச் சிக்கல்களும் இயக்கத்தின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவே செய்தது. அத்தோடு, அரச ஒடுக்குமுறை போன்ற யதார்த்தப் புறநிலைகளும் இயக்கத்தின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் தாக்கத்தை விளைவிக்கத் தவறவில்லை. 1983ல். வெடித்த இனவாதக் கலவரங்கள் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியி லான உறவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். அது, தமிழ்ப் பாராளுமன்ற அரசியலுக்கு சாவுமணி அடித்ததுடன், ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்து அதனை அரசியற் போராட்ட வடிவமாக முதன்மைப்படூத்தியது. இனக் கலவரங்களை அடுத்து, சிறீலங்காவின் சக்திவாய்ந்த அயல் நாடான இந்தியா, இனப் பிரச்சினையில் தலையிட்டமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
குமிழரின் இனப்பிரச்சினையில் இந்திய மத்திய அரசும் தமிழ் நாட்டு முதலமைச்சர் திரு எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும் எவ்வாறு தலையீடு செய்தனர் என்பதனை மூன்றாவது அத்தியாயத்தில் நான் | விபரமாக விளக்குகின்றேன். தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா வழங்கிய இராணுவப் பயிற்சியும், எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டு முதல்வர் புலிகளுக்கு வழங்கிய நிதியுதவியும் விடுதலைப் புலிகள் அமைப்பினதும் ஆயுதப் போராட்டத்தினதும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் என்றுமில்லாத உந்துதலைக் கொடுத்தன. இந்தியாவின் நலன்களுக்கும், தமிழ்ப் போராட்ட அமைப்புகளின் அபிலாசைகளுக்கும் மத்தியில் எழுந்த முரண்பாடுகள் ஈற்றில் இரு தரப்பினரையும் ஏமாற்றத்திற்குள் தள்ளியது. இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடானது அதன் புவிசார் - அரசியல், கேந்திர நலன்களையே மையமாகக் கொண்டது என்பது காலப்போக்கில் தெளிவாகப் புலனாள்யது. இலங்கையை தனது வல்லாதிக்க வியூகத்தினுள் கொண்டுவந்து, தமிழ்ப் போராளி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்தத் தூண்டும் நோக்குடனேயே இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்கியது. இந்தியா கடைப்பிடித்த வலிந்த இராஜதந்திரத்தின் விளைவாகவே 1985ல் பூட்டான் தலைநகரான திம்புவில் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் சிறீலங்கா அரச தூதுக்குழுவினருக்கும் மத்தியில்: பேச்சுகள் நிகழ்ந்தன. திம்புப் பேச்சுக்கள் இடைநடுவில் முறிந்ததால் சீற்றமடைந்த இந்திய அரசு பாலா -வை நாடு கடத்தியது. ஆயினும் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் பேச்சுகள் மீண்டும் தொடர்ந்த போது இந்தியாவுக்குத் திரும்பி வருமாறு பாலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் சென்னைக்கு திரும்பி வந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு எமது வீடு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஆயினும் இந்தக் கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரது வாக்கு மூலத்தின்படி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அமைச்சர் ஒருவரே இந்தக் கொலை முயற்சியின் சூத்திரதாரியெனத் தெரியவந்தது. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்த தொல்லைகள், நெருக்குதல்கள் பற்றியும் இந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிடுகின்றேன். இந்தச் சம்பவங்கள் இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் படிப்படியாக விரிசலை ஏற்படுத்தியது.
1987ம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் சிங்கள ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் இராணுவ மோதல்கள் தீவிரமடைந்தன. இறுதியில், சிங்கள ஆயுதப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாடு மீது பாரிய படையெடுப்பை மேற்கொண்டன. இதனால் பொது சனங்கள் மத்தியில் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், தீவிரமடைந்த மோதல்களை நிறுத்தும் நோக்கத்துடன் இந்தியா தலையிட்டது. இதனையடுத்து இரு அரசுகளுக்கும் மத்தியிலான இந்திய-இலங்கை இப்பந்தம் கைச்சாத்தாகியது. இந்த ஒப்பந்த வரைவிலிருந்து புலிகள் புறக்கணிக்கப்பட்டனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைய, அமைதி காக்கும் படை என்ற போர்வையில், இந்தியத் துருப்புகள் வடகிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் போர்நிறுத்தத்தைக் கண்காணித்தல், புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைதல் போன்ற பணிகள் இந்திய அமைதிப் படைக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளின் பின்னணியை நான்காவது அத்தி யாயத்தில் நான் விபரித்துக் கூறுகிறேன். விடுதலைப் புலி வீரர்களுக்கும் இந்திய இராணுவத்திற்கும் மத்தியில் ஆயுத மோதல்கள் வெடித்து, இந்திய - புலிகள் யுத்தமாக (1987 - 1990) பரிணமித்த வரலாற்று நிகழ்விற்கு காரணமாக அமைந்த சோகமான, அவலமான சம்பவங்களையும் நான் இந்த அத்தியாயத்தில் விபரிக்கின்றேன்.
பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அரச ஒடுக்குமுறையின் ஆழமான பரிமாணங்களை உலகத்திற்கு எடுத்துக் கூறுவதுடன் எதிர்காலச் சந்ததிக்கும் அவை வரலாற்றுப் பதிவேடாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்நூலை எழுதுவதன் பிரதான நோக்கங்களில் ஒன்று. பேரவலமான சூழ்நிலைகளுக்குள். வாழவேண்டிய அரிய சந்தர்ப்பங்கள் எனக்குக் கிட்டியதால், யாழ்ப்பாண மக்கள் மீது இந்திய இராணுவம் ஏவிவிட்ட பயங்கரக். கொடுமைகளையும் வன்முறைகளையும் தனிப்பட்ட அனுபவம். மூலமாகவும், மற்றைய சாட்சிகள் மூலமாகவும் பதிவு செய்ய என்னால் முடிந்தது. கூட்டாகக் கைது செய்தல், சட்டத்திற்கு மீறி கொலை செய்தல், தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தல் போன்ற இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு சாட்சியாக இருந்தது மட்டுமன்றி, நானும் பாலாவும் இந்திய இராணுவத்தின் தேடி அழித்தல் வேட்டைக்கும் இலக்காகினோம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு பகுதியான வடமராட்சியில் நாமிருவரும், இந்திய இராணுவத்தால் வேட்டையாடப்பட்ட கதை ஐந்தாவது அத்தியாயத்தில் விபரமாகத் தரப்படுகின்றது. நாம் அனுபவித்த துன்பங்களைவிட எமது அவல நிலைக்காக மக்கள் காட்டிய அனுதாபமே எனக்கு முக்கியமாகத் தென்பட்டது. இந்திய துருப்புகளால் வேட்டையாடப்பட்டு நாம் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட அந்த மாதங்களில் தமிழ் மக்கள் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்குப் பாதுகாப்பைத் தேடித்தந்தார்கள். அந்த ஆபத்தான காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்கள் எம்மீது காட்டிய அன்பையும், பரிவையும், பெருந்தன்மையையும் நான் நன்றியுடன் என்றும் எனது நினைவில் வைத்திருப்பேன். தமிழ் மக்களது ஆதரவும், இயல்பான, தன்னலமற்ற உதவிகளும் இல்லாதிருந்தால் நாம் உயிரோடு பிழைத்திருக்க முடியாது. இறுதியில் நாம் பாக்கு நீரிணையைக் கடந்து தமிழ்நாட்டுக் கரைக்குத் தப்பிச் சென்ற சம்பவமும், இடரைத் தாங்கும் ஆன்ம பலத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெரிய இடர்களை எதிர்கொண்டு ஒரு சின்னம் சிறிய படகில் அந்தப் பெருங்கடலைத் தாண்டிய பயங்கரச் சம்பவமும் இந்த அத்தியாயத்தில் சித்தரிக்கப்படுகிறது.
பிரேமதாசா - விடுதலைப் புலிகள் பேச்சுக்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வாக அமையப் பெறுகிறது, ஆறாவது அத்தியாயம். இலங்கையிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றும் நோக்கோடு பேச்சுக்களில் கலந்து கொள்ள பிரேமதாசா ஆட்சிப் பீடமும் விடுதலைப் புலிகளின் தலைமையும் முடிவெடுத்தமைக்கு இரு சாரருக்கும் சொந்த நிர்ப்பந்தங்கள் இருந்தன. தமிழர் தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்து நின்றதால், வடகிழக்கில் இந்திய இராணுவத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் மத்தியிலான போர் உக்கிரமடைந்தது. இந்திய இராணுவம் இலங்கைத் தீவில் கால்பதித்து நிற்கின்றது என்ற காரணத்தைக் காட்டி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) தென்னிலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியை ஏவிவிட்டது. என்றுமில்லாத பரிமாணத்தில் முழுத் தீவிலும் வன்முறையும், கிளர்ச்சியும் தலைவிரித்தாடின. தமது மக்களின் விசேட நலன்கருதி, தமிழ், சிங்கள தலைவர்களான திரு பிரபாகரனும், திரு பிரேமதாசாவும் இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பினர். இந்தப் பரஸ்பர நோக்கம் தான் விடுதலைப் புலிகளையும் பிரேமதாசா அரசாங்கத்தையும் கொழும்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளச் செய்தது. பேச்சுக்களுக்கு அதிகாரபூர்வமான பொறுப்பாளர் என்ற ரீதியில், அரச தூதுக்குழுவுடனான பேச்சுவார்த்தையின்போது பாலா ஒரு முக்கிய பங்காற்றினார். விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினருக்கு செயலாளராகப் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. இந்தப் பொறுப்பைப் பெற்றதால், அந்த வரலாற்றுக் கட்டத்தில் அரசியல் அதிகார பீடத்தில் அமர்ந்திருந்த ஜனாதிபதி பிரேமதாசா, திரு ஏ.சீ.எஸ். ஹமீட், வெளிவிவகார அமைச்சர் திரு ரஞ்சன் விஜயரட்ணா மற்றும் முக்கிய பிரபலமான அரசியற் பிரமுகர்களை அறிந்து கொள்ள முடிந்தது. பேச்சுக்கள் சினேகபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் அமைந்தன. இந்திய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான இலட்சியத்தை அடைவதில் பேச்சுக்கள் வெற்றியடைந்தன. இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்தை - அடுத்து, இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் சிக்கல் எழுந்தது. அரசியல் நீரோட்டத்தில் இறங்கி, தேர்தலை எதிர்கொள்ள புலிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவுசெய்ய திரு பிரேமதாசா பின்னடித்தார். ஜனாதிபதி பிரேமதாசாவுடனும், திரு ஹமீட்டூடனும் நடத்திய தனிப்பட்ட கலந்துரையாடல்கள் பற்றியும், அமைச்சர்களுடன் நிகழ்த்திய பலகட்ட சுற்றுப் பேச்சுக்கள் பற்றியும் இவ்வத்தியாயத்தில் நான் விபரமாகக் கூறியுள்ளேன். மிகவும் அரிதான சம்பவங்களைக் கொண்ட இந்த வரலாற்றுக் கட்டத்தை நான் இந்நூலில் விபரமாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளேன். இந்த சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்து, இரண்டாம் ஈழப்போர் என்ற வடிவத்தில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகிய காரணங்களையும் நான் இங்கு விளக்கியிருக்கின்றேன்.
வடகிழக்கிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியதை அடுத்து, நானும் பாலாவும் யாழ்ப்பாணம் சென்று அங்கு வசித்து வந்தோம். தொண்ணூறுகளின் முதல் அரைவாசிப் பகுதியை, யாழ்ப்பாணக் குடாநாட்டில், கொடிய யுத்தத்தின் மத்தியில், தமிழ் மக்களோடு எப்படி வாழ்ந்தோம் என்ற எமது வாழ்வனுபவத்தை ஏழாவது அத்தியாயம் விபரித்துக் கூறுகின்றது. யாழ்ப்பாண குடாநாட்டின் நிலப்பரப்பு மீது தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் இக் காலகட்டத்தில் உக்கிரமான சமர்கள் நிகழ்ந்தன. ஆயினும் சிங்கள ஆயுதப் படைகள் இச்சமர்களை போர் அரங்குகளில் மட்டும் நிகழ்த்தவில்லை. வெகுசனங்கள் மத்தியில் உயிரிழப்பை ஏற்படுத்தி பீதியை உண்டுபண்ணும் நோக்கில் குடியிருப்புப் பகுதிகளில் போர் விஸ்தரிக்கப்பட்டது. வெகுசனங்கள் நிறைந்து வாழும் குடியிருப்புப் பகுதிகளில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுகளும், பீரங்கித் தாக்குதல்களும் பேரழிவை உண்டுபண்ணின. இந்த ஆபத்தான காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட ஓடுக்குமுறையின் ஆழத்தையும், அவர்கள் அனுபவித்த பயங்கர அவலங்களையும் எனது நூலின் இப் பகுதியில் விபரித்துக் கூறியுள்ளேன். ஒருபுறம், கொடிய யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோதும் மறுபுறத்தில் தமது கட்டுப்பாட்டிலுள்ள குடாநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறப்பான நிர்வாகத்தை நடத்திவந்தனர். இது பற்றியும் இவ்வத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
நான் ஒரு சமூகவியலாளர் என்ற ரீதியில், யாழ்ப்பாணச் சமுதாயமானது ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டிய ஒரு புதிய, திறந்த ஆய்வுகூடம் போல எனக்குத் தென்பட்டது. ஒவ்வொரு சமூக அலகும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகத் தோன்றியது. விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தமிழ் சமுதாயத்தில் ஒரு புதிய பரிமாணத்தைப் புகுத்தியிருந்தார்கள். தமிழ்ப் பெண்களின் வாழ்வியக்கத்தில் பெண் போராளிகளின் வரலாற்று ரீதியான தலைய்ட்டை பதிவுசெய்வதோடு, முழுச் சமுதாயத்திலும் இதன் நாக்கத்தைக் கவனமாக பதிவு செய்ய வேண்டுமென எண்ணினேன். இதன் அடிப்படையில், விருதலைய் புலிகளின் பெண் யோராளிகள் என்ற நூலை எழுதி, அதில் பெண்போராளிகளின் ஆரம்ப கால வரலாற்றை ஆவணப்படுத்தினேன். பெண்களுக்கு சீதனம் வழங்கும் பண்பாட்டு மரபு, தமிழ்ப் பெண்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை: விளைவிக்கும் பாரிய சமூகப் பிரச்சனையாக விஸ்ஹுூபப் பரிமாணம் பெற்றிருந்தது. ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்குபற்றும் நவீன போக்கிற்கும், பெண்களுக்கு சீதனம் வழங்கித் திருமணம் செய்யும் பண்டைய வழக்கிற்கும் மத்தியிலான முரண்பாடு களையப்பட வேண்டிய தேவையும் இருந்தது. சீதன நடைமுறை ஒழிக்கப்பட வேண்டுமென உ றுதிபூண்டு நின்ற பெண் போராளிகள் தமது கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படூத்துமாறு புலிகளின் தலைமைப் பீடத்தை வற்புறுத்தினர். சீதனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சம்பந்தமாக வெகுசனம் மத்தியில் எழுந்த சர்ச்சைகள், மிகவும் சுவாரசியமான கருத்துகளை வெளிக் கொணர்ந்தன. இதன் அடிப்படையிற் பார்த்தால், சீதன வழக்குமுறை நினைத்ததை விட மிகவும் சிக்கலானதாகத் தோன்றியது. பொதுமக்களிடமிருந்து வெளிவந்த கருத்துகளே, இப்பிரச்சனையில் எனக்கிருந்த ஈடூபாட்டை மேலும் ஆழமாக்கியது. சீதன வழக்கு சம்பந்தமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூலகத்தில் நான் மேற்கொண்ட ஆய்வின்போது, யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பானது, ஒரு பண்டையை தாய்வழிச் சொத்துடமை உறவுமுறைமையுடன் தொடர்புடையது என அறிந்துகொண்டேன். இதனையடுத்து, உடையாத விலங்குகள் என்ற தலைப்பில், யாழ்ப்பாணத் தமிழர்களின் சீதன வழக்குமுறை பற்றி ஒரு நூலை எழுதிப் பிரசுரித்தேன்.
1994ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா நாட்டின் ஜனாதிபதி யாகப் பதவியேற்று, அவரது அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் பேச்சுக்கள் நிகழ்ந்தபோது போர் நெருக்கடியிலிருந்து விடிவு பிறக்கப்போகின்றது என தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். 1995ம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் ஒரு சில சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றதையடுத்து பேச்சுவார்த்தை முறிவடைய போர் மூண்டது. அதனைத் தொடர்ந்து சிநீலங்கா அரச படைகள் யாழ் குடாநாடு மீது படையெடுத்தனர். மூன்றாவது ஈழப்போர் வெடித்தபோது நாம் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தோம். எனினும், நாம் அந்தப் போர் அனர்த்தத்திலிருந்து தப்பிப் பிழைத்தோம். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக சிங்கள ஆயுதப் படைகள் வகுத்த போர் வியூகம் பற்றியும், அப்போரை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு விளைவித்த சாவும் அழிவும் பற்றியும் நூலின் ஏழாவது அத்தியாயத்தில் விபரிக்கின்றேன். இப்போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அழிவு சக்தியைப் பார்க்கும்போது, தனது போர் இலக்குகளை எட்டுவதற்கு சிங்கள இராணுவம் எத்தகைய கொடூரமான, ஈவிரக்கமற்ற முறையில் செயற்படத்தக்கது என்பதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. யாழ்ப்பாண நகரை ஆக்கிரமிப்புப் படைகள் அண்மித்தபோது, வலிகாமத்திலிருந்து பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றுவதென விடுதலைப் புலிகளின் தலைமை முடிவெடுத்தது. முன்னேறி வந்துகொண்டிருந்த சிங்கள இராணுவத்தின் படையணிகளிடம் சிக்குப்படாமல் தப்புவதற்காக, பீதியும் பதட்டமும் கொண்ட ஐந்து லட்சம் மக்கள் மூச்சுத் திணறும்படி யாழ்ப்பாண வீதிகளை மொய்த்தனர். வலிகாமத்தின் ஒட்டுமொத்தமான குடிசனங்களும் வெளியேறிய பிரமாண்டமான. புலப்பெயர்வு, மற்றும் சாவகச்சேரியில் இடம்பெயர்ந்த மக்களின் முயரமான வாழ்க்கை, போன்ற பேரவலங்களையும் இந்த . அத்தியாயத்தில் எடுத்துக் காட்டூுகின்றேன். வலிகாமத்திலிருந்து வெளியேறிய ஐந்து லட்சம் மக்களில் நானும் ஒருத்தி. சனநெருக்கடிக்குள் சிக்காமல் ஒரு நாள் முன்பாக வெளியேறியதுதான் வேறுபாடு.
சிங்கள இராணுவம் முன்னேறி ஆக்கிரமிப்பை விஸ்தரிக்க, நாம் குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னியில் தஞ்சம் புகுந்தோம். வன்னியில், இடம்பெயர்ந்த மக்களதும் எங்களதும் வாழ்வனுபவங்களை கடைசி அத்தியாயத்தில் எடுத்துக் கூறுகின்றேன். இவ் வரலாற்றுக் காலகட்டம், விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் மத்தியில் நிகழ்ந்த கொடிய சமர்களைக் கொண்டதாக அமைந்தது. வன்னிப் பெருநிலத்தை நடுவாக ஊடறுத்துச் செல்லும் கண்டி- யாழ்ப்பாண பெருவ்தியைக் கைப்பற்றும் நோக்குடன் “ஜெயசுக்குறு” என்ற பெயருடன், சிங்கள இராணுவத்தினர் பெரும்படைநகர்வை மேற்கொண்டனர். எனினும், விடுதலைப் புலிகளின் வலுவான எதிர்த் ஜாக்குதல் காரணமாக அரசாங்கத் துருப்புகளின் இப்படை நகர்வு, தென்னாசிய இராணுவ வரலாற்றிலேயே மிகவும் நீண்டதும் கொடியதுமான சமர்களைக் கொண்ட போராக உருவெடுத்தது.
ஒரு அரசின் அதிகாரப்டத்திற்கு சவால் விடுத்து நின்ற விடுதலை அமைப்பு என்ற ரீதியில், பல்வேறு திறனாய்வாளர்கள் பல்வேறு விடயங்களில் விடுதலைப் புலிகளை கண்டன விமர்சனத்திற்கு இலக்காக்கினர். விடுதலைப் புலிகளின் வளர்ச்சிப் போக்கில், பெண்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடூத்தியமையே பலரது புருவங்களை உயர்த்தியது. இந்த விமர்சகர்களில் ஒருவர்தான் ராதிகா குமாரசாமி. பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற விடயத்தில் ஐ.நாவின் விசேட பிரதிநிதியாக பணிபுரிபவர். இவர் கொழும்புப் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பற்றி மிகவும் மோசமாக, உண்மைகளைத் திரித்து விமர்சித்து எழுதினார். வன்முறைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி, புலிகளின் தலைமைத்துவத்தை கடுமையாகச் சாடினார். பெண்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடூபடூத்திய காரணத்தினால் கமிழ்ச் சமுதாயம் இராணுவ மயமாகிவிட்டது எனப் புலிகள் மீது குற்றம் சுமத்தினார். பெண் போராளிகளை வன்முறையாளர்கள் எனவும் சீண்டினார். பெண் புலிகளை ஆயுதம் தரித்த கன்னிகள் எனக் கிண்டல் செய்த ராதிகா குமாரசாமி பெண்கள் ஆயுதப் போராட்டத்திற் பங்குபற்றுவது தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் முற்றிலும் முரணானது எனவும் கண்டித்தார். ஏழாவது அத்தியாயத்தில் ராதிகாவின் கருத்துக்களை அலசி ஆராய்ந்து ஒரு நீண்ட விபரமான விமர்சனத்தை நான் முன்வைத்திருக்கிறேன். தமிழ்த் தேசிய இனக் கட்டமைப்பில் இணைபிரியாத அங்கமாக பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே தமிழினத்தை முழுமையாக அழிக்கும் நோக்கில் ஏவப்பட்ட இனப்படுகொலையை எதிர்கொள்ளும்போது தம்மைப் பாதுகாக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்பதுதான் எனது வாதத்தின் சாராம்சம். தமிழ் மக்கள் எதிர்கொண்ட அரசு ஓடுக்குமுறையானது ஒரு நுட்பமான, சூட்சுமமான இன அழிப்பு வடிவம் என்ற வாதத்தை முன்வைக்கும் நான், தமிழ் மக்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறையின் உண்மையான வரலாற்றையும், அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் நிகழ்த்திவரும் வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தையும் ராதிகா குமாரசாமி உதாசீனம் செய்திருப்பதைக் கண்டித்துள்ளேன். அத்தோடு, பெண்ணியம் சம்பந்தமாக . அவர் முன்வைத்த விமர்சனங்களுக்கும் நான் பதிலளித்துள்ளேன்.
முல்லைத்தீவில், புதுக்குடியிருப்பிலுள்ள எமது வட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் புலிகள் இயக்கத் தலைவர்கள், குறிப்பாக திரு. பிரபாகரன், மூத்த உறுப்பினர்கள் மற்றும் களத் தளபதிகள் ஆகியோர் பற்றிய எனது பார்வையையும் கருத்துகளையும் கடைசி அத்தியாயத்தில் எடுத்துக் கூறுகின்றேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகிய அனுபவத்தின் அடிப்படையில் திரு. பிரபாகரனது அற்புதமான ஆளுமை பற்றி எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். தமிழரின் ஆயுதப் போராட்டத்தில் புகழ்மிகு வீரர்களாகக் கெளரவிக்கப்படும் மூத்த களத்தளபதிகள் பற்றியும் எனது கருத்துக்களையும் இங்கு வெளிப்படுத்தியிருக்கின்றேன். சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக நோய்வாய்ப்பட்ட பாலாவை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினதும் நோர்வே அரசினதும் உதவியுடன் வன்னியிலிருந்து வெளியே அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் நூலின் இப்பகுதியில் விபரிக்கின்றேன். பாலாவின் வாழ்க்கைக்கு விலை கூறி, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா முன்வைத்த ஏற்றுக் கொள்ளமுடியாத நிபந்தனைகள் பற்றியும் இங்கு குறிப்பிடுகின்றேன்.
பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகள் பற்றிய எனது தனிப்பட்ட அனுபவங்களையும், அவதானிப்புகளையும் நினைவுகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டபோதும், சாராம்சத்தில் இந்நூல், . கமிழரின் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று இயக்கத்தையே விளக்குகிறது. எனவே இந்நூலை, ஒரு வரலாற்றுப் பதிவேடாகவே கருதவேண்டும். தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவான பல்வகைப்பட்ட சிறப்பம்சங்கள், விளக்கவுரைகள், புதிய தகவல்களைக் கொண்டிருப்பதால் இந்நூல் வாசகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் எனக்கு உறுதியான . நம்பிக்கை உண்டு. இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அரச ஒடுக்குமுறையின் ஆழத்தையும் பரப்பையும் மெய்யுண்மையான சித்தரிப்பாக வெளிக்காட்டுவதே இந் நூலின் பிரதான நோக்கங்களில் ஒன்று. அரச ஒடுக்குமுறையின் பரிமாணங்களைப் பார்க்கும்போது, அவை இன அழிப்பையே நோக்காகக் கொண்டவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். ஆயினும் இந்த விளக்கத்தை உலக அரசுகளும் அன்றி அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்களும் முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அன்றி அக்கறையுடன் பரிசீலிக்கவோ மறுத்து வருகின்றன. இனவாத அரசு இழைத்துவரும் கொடுமைகளையும், தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் நிகழ்த்திவரும் அட்டூழியங்களையும், . மனித உரிமை மறல்களையும் இந்தியாவும், மேற்குலக வல்லரசுகளும் உதாசீனம் செய்து வருவதுடன், அரசியல் சுதந்திரம் வேண்டும் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் ஏந்றுக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
சுயநிர்ணயம் என்ற தமது நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளர்ந்தபோதும், எத்தகைய பாரிய இடையூறுகளையும் எதிர்கொண்டு தமது அரசியல் இலட்சியத்தை அடைவதில் தமிழீழ மக்கள் உறுதிபூண்டு நிற்கின்றார்கள். இத்தகைய. தளர்வுறா மனவுறுதியை, சுதந்திர வேட்கையை தமிழீழத்தில் போராளிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நான் காணக்கூடியதாக இருந்தது. இச் சுதந்திர வேட்கையானது இறுதியில் வெற்றிபெறும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.