2 புலிகணின் குகைக்குள்
லண்டனில் இருந்து இந்தியாவுக்கு 1979 இல் நாம் புறப்பட்டபோது, எமது வாழ்விலே புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கியது. முற்றிலும் வேறுபட்ட அத்தியாயம் அது. ஒரு விடுதலை அமைப்புடனும், விடுதலைப் போராட்டத்துடனும் சம்பந்தப்படும்போது, அது அமைதியானதாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடைசியிலே நாம் முகம் கொடுத்த சிக்கல் இவ்வளவு ஆழமானதாக இருக்கும் என, என்றுமே நாம் சிந்தித்துப் பார்த்ததில்லை. புரட்சிகர அரசியலில் உள்ள சூட்சுமங்களும் தென்னிந்தியாவின் சமூக, கலாச்சார வாழ்க்கைச் சூழலும் எனக்குள் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; எனது உணர்வில் புதிய எல்லைகளைத் தோற்றுவித்தது. புதிய சூழலில் ஏற்பட்ட விசித்திரமான, அசாதாரண சம்பவங்கள், புதிய உறவுகள், புதிய சவால்கள் ஆகியவை எனது வாழ்விலே மறக்கமுடியாத ஒரு காலகட்டமாக அமைந்தன. இவை எனது சிந்தனையிலும் உள் உணர்வுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தின; எனது ஆளுமைக்கு உரமூட்டின; என்னை ழு பலம் மிக்க மனிதப் பிறவியாக்கின.
உண்மையிலேயே, 1979-1987 காலப் பகுதியை மீள நினைவு கூரும்போது, தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் நாம் எதிர்கொண்ட அத்தனை சம்பவங்களையும் இந்த நூலின் சில பக்கங்களில் பதிவு செய்வது இலகுவல்ல. அந்தக் காலகட்டத்தை மேலோட்டமாகத் தொட்டுக் காட்டவே எண்ணுகின்றேன். இவை எல்லாம் 1979 பிற்பகுதியிலேயே தொடங்கின.
உண்மையான போர்க்கள முனையில் இருந்து ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபத்து இல்லாத பாதுகாப்பான சூழலில் இருந்து கொண்டு, புரட்சி அரசியலைப் பற்றி உரத்துப் பேசிக் கொண்டிருப்பது வேறு; ஆயுதப் புரட்சிப் போராட்டம் ஒன்றிலே தீவிரமாகப் பங்கெடுக்கும் நிலையில் ஒருவர் தனது உரிமையையும், உயிரையும் அர்ப்பணிப்பது முற்றிலும் வேறான ஒரு விடயம். ஆகவே, இந்தியாவுக்கு நாம் பயணித்ததும், அங்கே தலைமறைவாக இருந்த விடுதலைப் புலித் தலைமையையும், போராளிகளையும்’ சந்தித்தது, விடுதலைப் போராட்டத்தில் எமக்கிருந்த ஆழமான அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்தது. இங்கிலாந்தின் செளகரியங்களோடு நாற்காலி அரசியல் பேசுவது அல்ல இது. மாறாக புரட்சிகர புதிய அரசியலுக்காக சிறீலங்கா அரசினால் தேடப்படும் தீவிரவாத இளம் போராளிகளை சந்திக்கும் ஒரு முயந்சியே இது. மக்களின் விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் புலிப் போராளிகள் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான ஆயுதப் போராட்ட அரங்கிற்குள் கொண்டு சென்றிருந்தார்கள். அந்த வரலாற்றுக் கால கட்டத்தில், அரசின் பாதுகாப்பு யந்திரங்களான அரச படைகள் மீதும் காவற்துறை மீதும் சிறு சிறு கெரில்லாத் தாக்குதல்களில் விடுத்லைப் புலிப் போராளிகள் ஈடுபட்டிருந்தார்கள். ஆகவே தமிழ் மக்களையும் போராளிகளையும் எம்மையும் ஆழமாகப் பங்குகொள்ளச் செய்யப்போகும் புரட்சி அரசியலில் நாம் ஈடுபடத் தொடங்கி இருந்தோம். இது வெறும் விநோதம் அல்ல. அந்த நேரம் நாம் இருவரும் ஆயுதங்களை ஏந்தவில்லையாயினும், கெரில்லா அமைப்பின் தலைமையோடு நெருக்கமான உறவும் புரிந்துணர்வும் கொண்டிருந்தோம். இயக்கத்தின் உள்ளார்ந்த செயற்பாடுகள் பற்றிய விபரங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைக்கு உரியவர்களாக நாம் இருந்தோம். இதனால், போராளிகள் மட்டிலும் போராட்டம் மட்டிலும் பாரிய பொறுப்புணர்வு எம்மீது படிந்திருந்தது. இந்தப் போராளி இயக்கத்தின் அமைப்புப் பற்றியும் அதன் தலைமறைவான தலைவர்கள் யார் யார் என்பது பற்றியும் அந்தரங்க விபரங்களை நாம் அறிந்து கொண்டதால், கனதியான பொறுப்பு எம்மீது இருப்பதையும் உணர்ந்து கொண்டோம்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தோம். திரு. கிருஷ்ணனும் எம்முடன் கூட வந்தார். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சென்னையில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. அன்று இரவு நாம் விமானத்தில் வருவது புலிகளுக்குத் தெரியும். ஆனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எம்மைப் பகிரங்கமாக சந்திக்க யாரும் இல்லை. தலைமறைவு அரசியலுக்குள் இப்படித்தான் ’நாம் பிரவேசித்தோம். அன்றிலிருந்து இரகசிய அரசியல் எம் வாழ்வில் இரண்டறக் கலந்தது.
1979ம் ஆண்டு நாம் சென்னைக்கு விஜயம் செய்தபோது, வணங்காமுடியான இந்திரா காந்தி அம்மையார் இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்கு ஆயத்தமாக இருந்தார் (1980 ஒனைவரியில் இந்திய பிரதம மந்திரியாக அவர் பதவிறேறார்). மூத்த அரசியல் வாதியான கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியிலிருந்தார். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலும், இந்திய வெளிவிவகாரக் கொள்கையுமே தமிழீழ மக்களின் தேச
சுதந்திரப்போராட்டத்தின் பாதையை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கின. குறிப்பாக, இந்திய வெளிவிவகாரக் கொள்கையானது உள்நாட்டிலும், பிராந்திய ரீதியாகவும், அனைத்துலக மட்டத்திலும் தாக்கத்தை விளைவிக்கும் பரிமாணத்தைக் கொண்டதாக அமைந்தது.
பனிப்போர் காலத்து அனைத்துலக உறவுகளும், அணிசேரா இயக்கத்தின் கொள்கைகளுமே 70 களிலும் 80 களிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தன. அணிசேரா இயக்கத்தின் மூல பிதா என்ற வகையில், நடுநிலைக் கொள்கையையும், தலையிடாக் கொள்கையையும் மூன்றாவது உலக நாடுகளுக்கு இந்தியா பரிந்துரைத்து வந்தது. ஆயினும், அறுபதுகளின் ஆரம்பத்தில் இந்திய வட கிழக்கு எல்லையில் சீனா படையெடுப்பு நடத்தியதைத் தொடர்ந்து வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு சிக்குப்படாமல் ஒரு புதிய உலக. ஒழுங்கைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற இந்தியாவின் கனவு தகர்ந்து போனது.
உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்ற வகையில் உலகப் பெருநாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த இந்தியா விரும்பியது. ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆசியாவில் ஏற்படுத்திய உடன்பாட்டு இணைப்பின் பலம், தனக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் இந்தியா கருதியது. இந்தப் பாதுகாப்புத் தொடர்பான அச்சமே சோவியத் யூனியனுடனான ஒரு தந்திரோபாய உடன்பாட்டில் இணைந்து கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்தது. இதுவே 70 இன் முற்பகுதிகளில் அணுகுண்டு ஒன்றையும் பரீட்சித்து, அணு வல்லரசாக உயர்வதற்கு இந்தியாவை ஊக்குவித்தது. மூன்றாவது உலக நாடுகளுக்கு உகந்தது அணிசேராக் கொள்கை என்று தொடர்ந்து இந்தியா பரிந்துரை புரிந்தாலும், சோவியத் முகாமிற்குள்ளேயே இந்தியா நிலையூன்றி நின்றது. பல நூற்றண்டுகளாகக் குடியேற்றவாத சுரண்டலுக்கு உள்ளாகி, போராட்டம் மூலமே சுதந்திரத்தை வென்றெடுத்த ஒரு நாடு என்ற வகையில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மட்டில் இந்தியா அனுதாபம் காட்டியது. அத்துடன் அப் போராட்டங்களுக்கு தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா ஆதரவு வழங்கியது. அனைத்துலக மட்டத்தில் கண்டிக்கப்பட்ட “அப்பாதைட்”” இன ஓடுக்கல் முறைக்கு எதிராகப் போராடிய ஆபிரிக்க . தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதில் முதல் நிலை நாடாக இந்தியா திகழ்ந்தது. அத்தோடு ஆபிரிக்காவின் ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கும், முதல்நிலை ஆதரவு வழங்கியது. பலஸ்தீன. போராட்டம் “பயங்கரவாதம்” என்று கருதப்பட்ட அரசியல் ராஜதந்திர உலகில், பஸ்தீன விடுதலை இயக்கமான PLO வுக்கு இந்தியா வலுவான ஆதரவு வழங்கியது. இது பலஸ்தீன மக்களுக்கு பெரியதொரு தார்மீக உந்துதலாக விளங்கியது.
ஏனைய கண்டங்களிலும் பிரதேசங்களிலும் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தாராள மனப்பான்மையுடன் வெளிப்படையாக தார்மீக, ராஜதந்திர உதவிகளை வழங்கி வந்த இந்தியா, தனது கொல்லைப் புறத்தில் நிகழ்ந்த போராட்டங்கள் சம்பந்தப்பட்டவரை சந்தர்ப்ப வாதத்தையும் பிரதேச நலன்பேணும் சாணக்கியத்தையுமே கடைப்பிடித்தது. தமிழ் மக்களின் போராட்டத்தை உதாரணமாக இங்கு எடுத்துக் கொள்ளலாம். தமிழீழ மக்களின் அவல நிலைபற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றியும் இந்தியா நன்கு அறிந்திருந்தது. 1978 ல், விடுதலைப் போராட்டத்தை எடுத்து விளக்கி, பாலா, இந்திரா காந்தி அம்மையாருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பழ. நெடுமாறன் போன்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்திரா காந்திக்கு விளக்கம் அளித்திருந்தார்கள்.
இவற்றையெல்லாம் அறிந்த பின்னரும், தமிழ் மக்களின் துன்ப நிலை தொடர்பாக, தனது மனக் கலக்கத்தை மட்டும் இந்திய அரசு அறிக்கைகளில் தெரிவித்தது. குறிப்பாக, “ஆழ்ந்த துயரம்” என்ற, யாருக்கும் பாதகம் இல்லாத ராஜதந்திர பதத்தைப் பிரயோகித்தது. இனி, தான் ஒரு பிரதேசப் பேரரசு என்ற நிலையில் இலங்கையில் நடப்பவை மீது ஒரு கண் வைத்திருப்பதாகச் சிங்களவருக்கு எச்சரிக்கை செய்ததோடு நிறுத்திக்கொண்டது.
தனது நாட்டின் எல்லைக்குள் பிரிவினைப் போக்குகளைத் தூண்டிவிடவோ உற்சாகப்படூுத்தவோ கூடாது என்பதில் இந்தியா என்றுமே விழிப்பாகவும் அக்கறையாகவும் இருந்திருக்கின்றது. ஆகவே அருகே உள்ள இலங்கையில் தமிழ் மக்கள் தொடுத்திருக்கும் தனியரசுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கும் நோக்கம் இந்தியாவுக்கு அறவே கிடையாது. ஆனால் தென்னகத்தில் உள்ள ஆறு கோடி கமிழ் மக்கள் பொங்கி எழுந்தால், நாட்டில் நிலைகுலைவு ஏற்படலாம் என்ற ஆபத்தையும் குறைத்து எடைபோட்டு ஒதுக்கிவிடவும் இந்தியாவால் முடியவில்லை. தமிழ் நாட்டுத் தமிழர்கள் பாக்கு நீரிணைக்கு 22 மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சகோதரர்களுக்காகப் பெரும் அனுதாபம் கொண்டவர்கள்.
இதைவிட, சிறீலங்கா அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா, ஒளிவு மறைவின்றி மேற்குலகத்துக்கு சார்பாக இருந்தது குறித்தும் இந்திரா காந்தி அம்மையார் பெரிதும் கலவரம். அடைந்திருந்தார். இந்து மாகடல் பிரதேசத்தில் அமெரிக்கா தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டூவதற்கான புநநிலைச் சூழலை சிறீலங்கா அரச தலைவர் வேண்டுமென்றே உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் அஞ்சினார். ஆனால் இந்தப் பிரதேசத்தில் தனது செல்வாக்கையே தக்க வைக்க இந்தியா விரும்பியது. எனினும், அரசியற் சித்து விளையாட்டில் கைதேர்ந்தவரான இந்திரா காந்தி இலங்கையின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் தொடர்ந்து அங்கீகரித்ததோடு, புது டெல்லியின் செல்வாக்கு வீச்சுக்குள் சிங்கள அரசை மீளவும் கொண்டுவரவேண்டும் என்பதற்கான ஒரு தந்திரோபாயமாகத் தமிழ்ப் போராளிகளைச் சகித்துக் கொண்டார். மேற்குலக ஆதிக்க வலைக்குள் சிங்கள அரசைச் சிக்க விடாது, அதனை தனது ஆதிக்க வியூகத்திற்குள் கொண்டுவருவதே இத் கந்திரோபாயத்தின் ஓட்டுமொத்த நோக்கமாகும். ஆகவே, இந்த பிராந்திய அரசியல் பின்புலத்தில், இலங்கையின் வடகிழக்கில் வாழ்ந்த பெருந்தொகையான கமிழ் மக்கள் தமிழ் நாடு தமக்குப் பாதுகாப்பான இடமெனக் கருதினார்கள். விடுதலைப் புலிப் போராளிகளுக்கு தமிழகம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக மட்டுமல்லாது உறுதியான தளமாகவும் அமைந்தது. தாம் வசிக்கவும் அச்சமின்றித் தங்கள் திட்டங்களை வகுக்கவும் வாய்ப்பான இடம் இது என்று அவர்கள் கருதினார்கள். ஆகவேதான், புலிப்போராளிகள் சென்னையில் தங்கினார்கள். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் வழங்கிய ஆதரவோடு, இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்த தமிழ்ப் போராளிகள், தமிழ்நாட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள். ஆனாலும் உள்வீட்டு எதிரிகளால் எழுந்த பிரச்சினைகள், புலனாய்வுப் பிரிவுகளின் கூரிய கண்கள், சிறீலங்கா தூதரக அதிகாரிகளின் நாசகார நடவடிக்கைகள் ஆகியன காரணமாக தமிழ் நாட்டில் கூட, ஒரு தலைமறைவான அமைப்பாகவே விடுதலைப் புலிகள் இயங்கினர். இப்படியான பின்புலத்திலேயே . மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தோம். இச் சூழல் காரணமாகவே அங்கே எம்மை யாரும் கண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இரண்டு மூன்று சோடிக் கண்கள், சனக்கும்பலுக்குள் எமது ஒவ்வொரு நடவடிக்கையையும் இரகசியமாக நோட்டமிட்டபடியே இருந்தன. கடைசியாக எமது இரகசியச் சந்திப்பு ஏற்படும் வரை, அவை எம்மைத் தொடர்ந்தன.
பழைய, ஆட்டம் கண்ட, கறுப்பு நிற வாடகைக் கார் ஒன்று விமான நிலையத்திலிருந்து எம்மை ஏற்றிக் கொண்டு, கட கடவென்ற சத்தத்துடன் சென்னை வதிகளூடாகச் சென்று, முன்னேற்பாடு செய்யப்பட்ட ஒரு விடுதியின் முன்னே நின்றது. அதை விடூதி என்பதை விட, தங்கிடம் என்று கூறுவதே பொருந்தும். திரு. கிருஷ்ணன் எம்மை அங்கே சேர்த்துவிட்டு, நாம் இருக்கும் இடத்தை விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தெரியப்படுத்துவதற்காக, எமக்குத் தெரியாக வேறு ஒரு இடத்துக்கு சென்றுவிட்டார். நாம் சென்னை வந்த விடயம் இரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நகரின் வறிய ஒரு பகுதியிலே இந்தத் தங்குமிடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கருதினேன். ஆனால் விபரம் இரகசியமாக இருக்க முடியாது போய்விட்டது. இந்தியாவின் வெய்யில் வாட்டியெடுக்க யன்னல்களை இடைவிடாது திறந்து வைத்திருந்தோம். பிரதான வீதியில் யன்னலைத் திறந்து வைத்திருக்கும் போது, போவோர் வருவோருக்கு உள்ளே இருப்பவர்களை நன்கு தெரிந்தது. அறை விசாலமாகத் திறந்து இருந்ததால் - தனிமையில் நின்று ஆடை மாற்ற முடியாது. அதற்காக வசதி குறைவான குளியல் அறைக்குள்ளேயே செல்லவேண்டியிருந்தது. குளியல் அறையில் குழாய் ஒழுகிய வண்ணமே இருந்தது. இதனால், அசுத்தமான நிலம் எந்தநேரமும் ஈரமாக இருந்தது. அந்த ஈர அசுத்தம் உடூப்பில் புரளாது ஆடை மாந்றுவது கடின- மாக இருந்தது. இனி, ஒரு வெள்ளைக்காரப் பெண், தமிழன் ஒருவனைக் கொண்டு வந்து அந்த - அறையை காந்தர்வபுரியாக்குகிறாளோ என்ற சந்தேகமே பலருடைய கண்ணைக் குத்தியிருக்க வேண்டும். மேலை நாட்டவர் அனைவரும் செல்வந்தர் என்பதே பெரும்பாலான இந்தியர் மட்டில் நிலவும் நம்பிக்கை. அப்படியான நிலையிலே ஒரு தமிழரும் வெள்ளைக்காரப் பெண்ணும் தவறான நோக்கத்தோடு கூடிவரவில்லை என்றால், நகரின் வறிய பகுதி ஒன்றில், ஏன் இத்தகைய வசதி குறைவான தங்கிடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே அவர்களுடைய கேள்வி. பிரபாகரன் அவர்களும் அவருடைய போராளிகளும் நடுச் சாமத்திலே எம்மைச் சந்திக்க வந்தபோது ஏற்கனவே சந்தேகக் கண் கொண்டிருந்த தங்கிடப் பணியாளர்களினதும், உள்ளூர் மக்களினதும் கண்கள் மேலும் விரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2.1 திரு. பிரபாகரனை சந்தித்தோம்
விடுதலைப் புலித் தலைவர்களை முதலில் சந்திக்கும்போது அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்க வேண்டும் என்று நான் முன்கூட்டியே எதையும் யோசித்து வைக்கவில்லை. அவர்களுடைய புரட்சிகரப் போராட்ட நடவடிக்கைகள் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். அவர்களுடைய ஆயுதப் போராட்டத்தை நான் மனப்பூர்வமாக ஆதரித்தேன். லண்டனில் விடுதலைப் புலிகளுக்காக பணிபுரிபவர்கள் கூறியதன்படி, தமிழ்ப் போராட்ட இயக்கத்தின் வரலாற்று நாயகர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தான். ஒடுக்கப்பட்ட தமது மக்களின் விடுதலை என்ற அரசியல் இலக்கில் விடா முயற்சியுடன் கம்மை அவர் அர்ப்பணித்து இருந்தார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒரே இறுதியான தீர்வு, தனியான தமிழ் அரசை நிறுவுவதே என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இவை எல்லாம் இலண்டன் செயந்பாட்டாளர்கள் எனக்குக் கூறியவை.
ஆரம்ப காலத்தில் இருந்தே ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றில் அவர் கண்டிப்பானவர் என்பது மிகப் பிரசித்தம். உண்மையில் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தும் அவருடைய சீலமே அவருக்கு பெயரையும் மரியாதையையும் நிறுவியிருந்தது. அதுவேதான், சிறீலங்கா இராணுவக் கட்டமைப்போடு மோதும் வல்லமை படைத்த கெரில்லாப் படையணிகளை நிறுவப்பாடுபட்ட ஏனைய ’ அனுபவமற்ற தலைவர்களிடமிருந்து அவரைப் பிரித்து எடுத்துக் காட்டியது. ஆனால், ழுக்கக் கட்டுப்பாடு என்பதற்காகவே, பிடிவாதமாக ஓழுக்கக் கட்டுப்பாட்டை அவர் வலிந்து திணிக்கவில்லை. போராளிகள் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றால், அவர்களுடைய உறுதிப்பாட்டுக்கும் உயர்ந்த செயற்பாட்டுக்கும், கட்டுப்பாடு அவசியம் என்று அவர் நம்பினார். அவருடைய உயர்ந்த நல்லொழுக்கம், அவரைத் தூய்மைவாதி என்று கூறும் அளவிற்கு, அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. . தலைவன் ஒருவன் தனது அதிகாரத்தைத் தங்க வைக்க வேண்டுமானால் தனிப்பட்ட அவனுடைய வாழ்க்கையில் அவன் அப்பழுக்கற்ற நடத்தையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அவருடைய ஆளுமையின் இச் சிறப்பம்சங்கள் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சிறிது கூட மழுங்கவேயில்லை. பிரபாகரனை விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அவரது பண்பமைதியின் இலட்சணங்களை அடிப்படையாகக் கொண்டே அவரைச் சர்வாதிகாரத் தன்மை பொருந்தியவர் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய பண்புகள் பரந்துபட்ட தமிழம் மக்களிடையே அவர் தமது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள வழிகோலின எனலாம். பிரபாகரன் ஒரு இரும்பு மனிதன் என்ற பெயர் நிலவிய போதிலும், எமது முதற் சந்திப்பின்போது, பழகுவதற்கு இனிய, அன்பும் பண்பும் மிக்க ஒரு. மனிதரையே நான் கண்டேன். அவரை விட மூத்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பாசத்தோடு அழைக்கும் அந்த “கம்பி” எமது தங்கிடத்தின் வசதிக் குறைபாடுகளை உடனே புரிந்து கொண்டார். அங்கு எத்தகைய அசெளகரியங்களை நான் எதிர் கொள்கின்றேன் என்பதையும் ஊகித்துக் கொண்டார். “வசதியான” விடுதி ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு தமது போராளி ஒருவரை அனுப்பினார். மறுநாளே நாம் விடுதி மாறினோம்.
பிரபாகரன் அவர்களுடனான முதல் சந்திப்பு நள்ளிரவில் நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரான பேபி சுப்பிரமணியமும் அவரோடு கூட வந்திருந்தார். பிரபா- கரனைச் சந்திப்பதற்கு முன், நாள் முழுவதும் அந்த மோசமான அறைக்குள் வியர்வையில் தெப்பமாக நனைந்து, சென்னைக்கு உரித்தான வியர்வை ஈரக் கசிவோடு காத்திருந்தோம். தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், எதற்கும் இருளும்வரை காத்திருக்க வேண்டும் என்பது, சூதுவாதற்ற கற்றுக் குட்டிகளான எமக்கு முதலில் தெரியாது. இருண்ட பின்னரும், தாமதமாகவேதான் சந்திப்புகளும் நிகழும் என்பது கூட அப்போது தெரியாது. பிரபாகரன் அவர்களைப் பொறுத்த வரையில் அவர் பாதுகாப்பைக் கூர்மையாகக் கடைப்பிடிப்பவர். இருண்ட பிறகே நடமாட வேண்டும் என்பதை தேவையைக் கருதி, பழக்கத்தில் கொண்டு வந்தார். தமது அர்ப்பணிப்பையும் இலட்சியத்தையும் அவர் எவ்வளவு தீவிரமாகக் கருதினார் என்பதை, பாதுகாப்புப் போன்ற பிரச்சனைகளிலே கூட அவர் காட்டிய அக்கறை புலப்படுத்தியது. எனக்கும் அது உடன்பாடானதே. அவருடைய பதினாறு வயதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருபவர். விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணிப்போடு ஈடூபட்டவர்களை ஒழித்துக் கட்டத் தயங்காதவர்கள் நடமாடிய ஒரு சூழலிலே தமது பாதுகாப்பில் அவர் கவனமாக இருந்தது நியாயம் தானே? போராட்டம் என்பது அவரைப் பொறுத்த வரையிலே ஒரு பொறுப்பு வாய்ந்த காரியமாகும்.
இரண்டு இளைஞர்கள் நன்றாக இருட்டிய பின் ஆரவாரம் எதுவும் இல்லாமல் வாயிலில் வந்து அமைதியாக நின்றார்கள். ஒருவர் வெள்ளை வேட்டி கட்டி நாட்டு உடையில்; மற்றவர் நீளக்காற்சட்டையும் வெளிறிய நிறச் சேட்டும். இவ்வளவு இளமையான அப்பாவிகளான அந்த “இரண்டு பயங்கரவாதிகளைப்” பார்த்தபோது நான் திகைத்துப் போனேன். அவர்களுடைய தோற்றம் அவர்களுக்குச் சூட்டப்பட்டிருந்த பெயருக்கு ஈடாகவேயில்லை. இரண்டு பேரும் உயரம் குறைந்தவர்கள். துப்பரவாக காணப்பட்டார்கள். அவர்களுடைய பெயருக்கும், புகழுக்கும் ஏற்றதாக அவர்களது தோற்றம் அமையவில்லை. மிகவும் மென்மையான இதயத்தைக் கொண்ட அப்பாவிகள் போன்ற தோற்றம்.
பேபி சுப்பிரமணியத்திடம் எப்போதும் ஒரு பை. அதில் வெவ்வேறு பத்திரங்களும் அரசியல் பிரசுரங்களும் நிரம்பி இருக்கும். பேபி. சுப்பிரமணி யத்தை எப்போது நினைத்தாலும், நாட்டு உடையுடன், வெள்ளை வேட்டி, சுமக்க முடியாத சுமை கொண்ட அந்த உப்பிப்போன தூக்குப் பையோடு தோன்றும் குள்ளமான, சற்றுக் குண்டான மனிதரே நினைவுக்கு வரும். இப்படியான சுமைகளோடு பிரபாகரன் அவர்களைப் பார்க்க முடியாது. அவருடைய பாணியே வேறு. அவருடைய அணிகலன் கச்சிதமாக இருக்கும். ஆடை புனைவது பிரபாகரன் அவர்களுக்கு ஒரு நிகழ்வு. அவதி அவதியாக ஆடை அணிந்து வேகமாக வெளிக்கிட வேண்டும் என்ற அவசரத்தை அவரிடம் காணமுடியாது.
பிரபாகரனுடைய இளம் முகம் தெளிவானதாக, பிரகாசமாக இருக்கும். அவருடைய அகன்ற கண் விழிகளில் ஊடுருவும் பார்வை. உள்ளே ஊடறுத்து ஆத்மாவை உற்றுப் பார்ப்பது போன்ற உணர்வே மற்றவருக்கு ஏற்படும். அவருடைய கண்களின் ஆழமே அவரது மனதையும் சிந்தனையையும் பிரதிபலித்துக் காட்டும். மற்றவருடைய முகத்தை நுணுக்கமாக அளவையிடூவது ஒரு பொதுவான நிகழ்வு. மற்றவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் அவரது பார்வை ஊடறுக்கும் போது உரையாடலில் எவ்வித பொய்களோ அன்றி ஏமாற்றுகளோ நுழைவது என்பது இயலாத காரியம்.
எமது முதல் சந்திப்பு பல மணிநேரம் நள்ளிரவிலிருந்து விடியும் வரை நீண்டது. பிரபாகரன் அவர்களுடைய விசாரணை எல்லாம் பாலா வின் தனிப்பட்ட வரலாறு பற்றியும், குறிப்பாக தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பான பாலாவின் கருத்துப் பற்றியே இருந்ததாக பாலா பின்னர் என்னிடம் தெரிவித்தார். பாலாவின் அரசியல் எழுத்துகளையும், சேகுவேரா, மாவோ சேதுங் ஆகியோரின் கெரில்லாப் போர் முறை பற்றிய பாலாவின் மொழி பெயர்ப்புகளையும் “தம்பி” ஏற்கனவே படித்திருந்தார். ஆனாலும் பாலாவுடையதும் என்னுடையதும் போராட்ட உறுதிப்பாடு பற்றி பிரபாகரன் நம்பிக்கை வைப்பதந்கு இவை போதுமானவையாக இருக்கவில்லை. இலண்டனில் உள்ள ஆட்கள் பற்றி, போராட்டம் மட்டில். அவர்களுடைய ஈடுபாடு உண்மையானதா, தன்னியல்பானதா, நீடித்ததா என்பது பற்றி அவர் விரிவாக அறிய விரும்பினார். ஆயுதப் புரட்சிப் போராட்டம் ஒன்றை முன் நகர்த்த அரசியல் கோட்பாடும் செயற்பாடும் எவ்வளவு அவசியம் என்பதைத் “தம்பிக்கு” உணர்த்த பாலா முற்பட்டார். சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது. எடுத்த எடுப்பிலேயே ஒருவரை ஒருவருக்குப் பிடித்திருந்ததாலும் அவர்களிடையே ஓர் ஆழமான புரிந்துணர்வின் அடிப்படையில் தனித்துவமான நட்பை வளர்த்தெடுக்க பல ஆண்டுகள் பிடித்தன. எனக்கும் பிரபாகரன் அவர்களைப் பிடித்திருந்தது. என்மீது என்றுமே அவர் சந்தேகம் கொண்டதில்லை. என்னை எப்படி அழைப்பது என்பது அவருக்குப் பிரச்சனையாகப் பட்டது. தமிழ்க் கலாச்சாரத்தில் திருவாளர் என்றோ, திருவாட்டி என்றோ பொதுவாக நேராக . அழைப்பதில்லை. சமூகப் படிநிலை, சமூக உறவுகள், குடும்ப உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் கூப்பிடுவார்கள். எங்கள் உறவு குடும்ப உறவல்ல; பழகி வந்த உறவுமல்ல; ஆகவே என்னை அவர் “அக்கா என்று கூப்பிட முடியவில்லை. அதே சமயம் திருமதி பாலசிங்கம் என்றும் அழைக்க முடியவில்லை. நான் அவரை விட வயது கூடியவள் என்பதால் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடவும் முடியவில்லை. இந்தப் பிரச்சனைக்கு “தம்பியே” ஒரு சமரசத் தீர்வு கண்டார். பாசத்தோடும், சுருக்கமாகவும் “அன்ரி” என்று கூப்பிட்டார். பாலாவையும் வேறு ஒன்றிரண்டு பேரையும் சுவிர வயது வித்தியாசமின்றி ஏனைய தமிழ் மக்களுக்கு “அன்ரி?’ என்றே அறிமுகம் ஆனேன். அன்ரி என்றே எல்லோரும் அழைத்தார்கள். பலருக்கு எனது இயற் பெயர் தெரியாது என்றே நினைக்கின்றேன்.
முதல் நாள் சந்திப்புக்குப் பின், கூடுதலான வசதிகள் கொண்ட வேறு விடுதியிலே சேர்க்கப்பட்டோம். அதையடுத்து, தம்பி தம்முடன் ஒருவரையோ, கூடுதலான போராளிகளையோ கூட்டிக் கொண்டு கிரமமாக வந்தார். உரையாடல் விடியும் வரை நடக்கும். பாலாவிடம் பேசுவதற்கு தம்பியிடம் நிறைய இருந்தது; தம்பியோடு விவாதிக்க பாலா விடம் நிறைய இருந்தது. தமிழ் நாட்டில் இருந்த போராளிகளுக்கு அரசி யல் பாடங்களை பாலா நடத்த வேண்டும் என்றும் தீர்மானமாயிந்று. இதற்காக விடுதிக்கு இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருந்தால், அது கவனத்துக்கு உள்ளாவதோடு சந்தேகத்தையும் தோற்றுவிக்கும் என்பதால், வகுப்புகளை நடத்த, விடுதி ஒரு பொருத்தமான இடமாகப் படவில்லை. தமிழ் நாட்டு சட்ட மன்ற உறுப்பினர் செஞ்சி இராமச்சந்திரன் அவர்களுடைய பிரத்தியேக வாழ்மனைக் கூடத்திலே வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியில், விடுதியை விட்டு, எம்.எல்.ஏ யின் தொடர் இல்லத்தில் குடியேற்றப்பட்டோம். கருணாநிதி அவர்களுடைய மாநில அரசின் சட்டமன்ற உறுப்பினரும் வேளாண் துறை அமைச்சருமான காளிமுத்து அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவி புரியும் இன்னொருவர். அங்கே இருக்கும் போது அவரையும் சந்தித்தோம். மேலும் ஒருவர் புலமைப் பித்தன்; புகழ் பெற்றவர்; அலையலையாக சுருண்ட, நரை நிறைய ஓடிய முடி; நரை ஓடிய கொடுவாள் மீசை. இவரும் விடுதலைப் புலிகளின் பலமான ஆதரவாளர். இரண்டு தடவை அவருடைய வீட்டுக்கு போயிருக்கிறோம்.
பாலா நடத்திய பாடங்களில் சமூக அரசியலும் உளவியல் தத்துவங்களும் அடிப்படையாக நன்கு இழையப்பட்டிருக்கும்; சமகால தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளக்கம் இருக்கும்; சோஷலிச தத்துவங்களும் அரசியல் எண்ணக் கருக்களும் துலக்கப்பட்டிருக்கும்; மேற்குலக சமுதாய வடிவத்தை பிரதிபலிக்கும் வர்க்க அமைப்புக்கும் இந்தியா, சிறீலங்கா போன்ற தெற்காசிய சமூகங்களின் சாதி அமைப்புக்கும் உள்ள வேறுபாடுகள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும்; மேற்குலக சமுதாய சிந்தனையாளர் வரையறை செய்த “சமுதாயம்?” என்பதன் வெவ்வேறு எண்ணக் கருக்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும். பாலியல் பண்புகள் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்வதில் சில இளம் போராளிகள் ஆர்வம் காட்டிய போது சிக்மண்ட் பிரைட்டின் கோட்பாட்டின் அடிப்படையில் பாலா அதற்கென சில வகுப்புகள் நடத்தினார்.
சோஷலிச தத்துவம் மட்டில் பல போராளிகளுக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. ஆனாலும் யாரும் மாக்சிய நிலைப்பாட்டை என்றும் தழுவியதில்லை. மாக்சிய புரட்சியாளர்கள் என்ற அந்த மாமூல் தோற்றம் கூட இவர்களில் இல்லை. இளம் புரட்சியாளர் என்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் போன்ற அமைப்புகளில் இருந்தவர்களைப் போல, இவர்களில் எவரையும் வர்ணிக்க முடியாது. இவர்கள் எவரும் நீண்ட தாடியுடனோ, அழுக்கான உடைகளுடனோ அவர்களைப் போல நடமாடவில்லை. அப்படிப் பட்ட தோற்றம் பிரபாகரனுக்கு சகிக்க முடியாத ஒன்று. முன்னர் குறிப்பிட்டது போல, சுத்தம், கச்சிதமான உடை ஆகியவற்றில் அவர் கண்டிப்பானவர். தம்முடைய போராளிகளிடமும் இதே தரங்களை ஊட்டுவார். குறிப்பாக, மூத்த உறுப்பினர்கள் இதில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் ’ என்று எதிர்பார்ப்பவர். உடலையும் உடையையும் மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது ராணுவ அமைப்பின் எதிர்பார்ப்பும் கூட. வெளித் தோற்றத்தில் அசட்டையாகவும் அழுக்காகவும் காட்சியளித்து தம்மை முற்போக்கான புரட்சியாளர் என பாசாங்கு செய்வதை விட சுத்தமாக இருத்தல் இயற்கைக்கு இசைவானது மட்டுமன்றி உடல் நலத்திற்கும் அவசியமானது அல்லவா?
இதையெல்லாம் விட, காலப் போக்கில் வேறொன்றை ஆழமாக உணர்ந்தோம். அதாவது, தமிழ் மக்களின் சமூக கட்டமைப்பில் மாக்சியம் பெருமளவு எடுபடவில்லை என்பதே அது. அங்கே சமயம், குறிப்பாக இந்து சமயம் தமிழ் மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கையின் தத்துவமாக ஆழப் பதிந்திருந்தது. ஒரு சமூக, அரசியல் கோட்பாடாகவே மாக்சியத்தை விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பாலா அறிமுகப்படுத்தியிருந்தார். மாக்சிய சிந்தனைகளை பயன்படுத்தி ஆயுதப் போராட்டமானது அரசியல் போராட்டத்தின் உயர்ந்த வடிவம் என்பதை விளக்கியிருந்தார். ஆனால் மாக்சியத்தில் ப குறைபாடுகளும் அளவெல்லைகளும் இருந்தன. அது ஜரோப்பிய சூழலைத் தழுவிய தத்துவம் ஆதலால் அடிப்படையிலேயே வித்தியாசமான, வேறு சமூக அரசியல் சூழலுக்குத் தேவையான விளக்கங்களைத் தரக்கூடிய பொருத்தமான தத்துவார்த்த வடிகாலாக அது இருக்கவில்லை. எடுத்துக் காட்டாக, மாக்சிய சிந்தனைகளைப் பயன்படுத்தி, சாதிப் பின்னலோடு அமைந்த யாழ்ப்பாண i தொடர்பான சமூகக் கட்டமைப்பு ஆய்வை நடத்துவது ட அதைப் போலவே முதலாளித்துவமோ, மானிய முறையோ அல்லாத ஒரு சமூக அமைப்பில் வர்க்க அடுக்குகளைப் பொருத்திப் பார்ப்பது கடினம். அச்சடித்த முதலாளித்துவ வடிவமோ அன்றி மானிய பிரபுத்துவ வடிவமோ . உயர் சாதி “வேளாளர்” என அழைக்கப்படும் நடுத்தர a ப் நிற்கின்றது. மேலும், யாழ்ப்பாணத் தமிழரைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கென்று “நம்பிக்கை முறைகளும் அரசியல் உள்ளுணர்வுகளும் உண்டு. எவ்வளவுதான் தத்துவப் பகுப்பாய்வுகளை முன்வைத்தாலும், அல்லது OO கூறினாலும் அவர்களுடைய சிந்தனைப் போக்கை அவை இலகுவில் மாற்றப் போவதில்லை. ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படூத்துவதற்காகவே விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்ப கால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மாக்சிய-லெனினிச தத்துவங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் பின்னர் கொம்யூனிச ஆட்சி அமைப்புகள் தகர்ந்த போது மாக்சிய சிந்தனையை இயக்கம் கைவிட்டு, சமூக சமநிலைத் தத்துவத்தை இயக்கத்தின் சித்தாந்தமாக ஹிந்து கொண்டது. தமிழ்த் தேசிய உணர்வு எழுச்சியே போராட்டத்தின் உந்து சக்தியாக விளங்கியது என்பதில் ஜயமே இல்லை.
சென்னையில் இந்தக் கலந்துரையாடல்களும் வகுப்புகளும் நடைபெறும் போதெல்லாம் நான் அடிக்கடி வெளியே சென்று விடூவேன். போராளி ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்னை நகரக் காட்சிகளைச் சுற்றிப் பார்ப்பேன். இந்தியா, எனக்கு ஒரு புது அனுபவம். முற்றிலும் நேர்மாறான உ லகமாகவே அது எனக்குத் தோன்றியது. கால அடைவில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில பல ஆண்டுகள் வாழ்ந்த பின், அந்த நாட்டையும் அதன் மஃ னையும் நேசிக்கத் தொடங்கினேன். இலங்கை வடகிழக்குப் பகுதியில் இருந்து நான் 1999 ல் வெளியேறு நிர்ப்பந்திக்கப்பட்டபோது, அடுத்து வசிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்ய சந்தர்ப்பம் வளங்கப்பட்டிருந்தால், லண்டனுக்குத் திரும்புவதற்குப் பதிலாக சென்னையையே தேர்ந்தெடுத்திருப்பேன்.
2.2 இந்தியா பற்றிய எனது முதல் மனர்யபதிவுகள்
இந்தியாவிலே நான் 1979 இல் இருந்து 1987 வரை வாழ்ந்தேன். அந்தக் காலம் முழுவதும் மேற்குலக அமைப்புக்கு நேர்முரணான வேறு ஒரு சமூக கலாசார சூழலிலேயே வாழ்ந்தேன். இரண்டுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் எண்ணில் அடங்காதவை; சிக்கலானவை. அவற்றின் ஏற்ற தாழ்வுகளைப் பதிவு செய்ய முனைந்தால் அதுவே ஒரு தனி நூல் ஆகிவிடும். அங்கும் இங்குமாக ஒரு சில மனப் பதிவுகளையே இங்கு குறிப்பிடுகின்றேன். எடுத்த எடுப்பிலேயே பரந்துபட்ட பார்வையின் அடிப்படையில் ஒன்றைக் குறிப்பிடலாம். எனது மேலைத்தேய சமூகமயமாக்கலுக்கும் தமிழ் நாட்டு வாழ்க்கை முறைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடாக முதலில் சமூக உறவுகளைக் கூறலாம். அந்த உறவுகளின் அடிப்படைகளே முதலில் குறிப்பிடத் தக்கவை. தனி ஆள், தனியான வாழ்க்கை, ஒடுக்கமான சிறிய குடும்பம் போன்ற அடிப்படைகள் மீதே மேற்கத்தைய சமூக வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, தனித்து ஒதுங்கி வாழ முயல்வது தோல்வியிலேயே முடியும். அப்படியான அபிலாசை இந்த சமூகங்களில் வாழும் மக்களுக்கு இல்லை. வெளியார் தலையீடு இல்லாமல், இனி முன்னறிவித்தல் கொடுத்துவிட்டே விருந்தினர் வரவேண்டும் என்ற நியதி இல்லாமல் ஒரு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் ஒதுங்கியிருந்து தனிப்பட்ட வாழ்க்கை நடத்துவது என்பது தெற்கு ஆசியாவில் பெரும்பாலான . மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்த அடிப்படைச் சிந்தனையை நான் மனதிலே பதித்துக் கொள்ள வேண்டி இருந்தது மட்டுமன்றி யதார்த்த வாழ்க்கையிலும் அதைப் பேண வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் எமது வீட்டுக்கு வந்த பிரித்தானிய செய்தியாளர் ஒருவர் என்னிடம் விடுத்த கேள்வியை என்னால் என்றுமே மறக்க முடியாது. அப்பொழுது 1991ம் ஆண்டளவில் என்று நினைக்கிறேன். ஒரு திறந்த வீட்டில் எந்த நேரமும் மக்களால் சூழப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அதுவேதான் மிக இயல்பாகவும் இருந்தது. எதைப் பற்றியுமே சிந்திக்க மறந்திருந்தேன். அப்படியான சூழலில் தனிமையின்றி உங்களால் எப்படி ஒரு கூட்டத்திற்குள் வாழ முடிகிறது என அந்த செய்தியாளர் திடீரெனக் கேட்டதும், திகைத்துப் போனேன். வீட்டின் உள்ளும் புறமும் அத்தனை பேரும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பது அவரை வியக்க வைத்தது. எமது வீடு பரக்கப் பரக்க திறந்திருந்தது. எமக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் இரவு பகல் ல் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இந்தியாவில் எங்கள் வடு எப்போதாவது பூட்டியோ யாரும் இல்லாமலோ இருந்ததில்லை. கனி ஒருவரிடம் சமுதாயம் எதிர்பார்க்கும் உறவும் இத்தகைய சமூக ஊடாட்டத்தோடேயே இணைந்து இருந்தது. சொல்லப் ல தாய்மை, ஒரு பெண்ணுக்கு குறித்த ஒரு சமுதாயக் கதக் தகமையையும் கொடுக்கிறது. அந்தக் கடமையை அவா நிறை வற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார். அது அவருக்கு கமத உறவுகளையும் அதிகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. வீட்டில் மூத்த மகன் மீது தனியான பொறுப்பும் தகமையும் சுமத்தப்படுகின்றன; அதற்கான கடப்பாடுகளும் பொறுப்புகளும் கூட, பளு ஏற்றப்படுகின்றன. அதைப் போலவே ஒவ்வொரு தனி மனிதருக்கும் சமுதாயக் கடமையும் தகமையும் உண்டு; இவற்றில் இருந்து உறவுகள் துளிர்க்கின்றன. மக்களிடையே சமூக ஊடாட்டம் தொடர்ந்து நிகழ இது வழி ஏற்படுத்துகிறது. இந்தச் சமூக உறவுகள் பலமுகம் கொண்டவை, நிலைத்து நிற்பவை. தனியாள் தேவைகளுக்கு நேரம் கிடைப்பதே அரிது. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் ஏதாவது. பேசுவதற்கு நேரம் கிடைக்கிறது என்றால், அது பெரும்பாலும் இரவில் ஒரு சில மணிநேரம் தான். இந்தச் சூழலுக்குப் பொதுவான காரணம் கூட்டுக் குடும்ப முறைதான். இதுவே தான் இந்திய, இலங்கை சமுதாயங்களில் சமூக உறவுகளின் அடிப்படையாகும்.
தமிழ்ச் சமுதாய வடிவமைப்பில் குடும்பம் என்று வரும்போது கூட்டுக் குடும்ப முறையே முக்கியத்துவம் பெறுவது. பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் பிள்ளைகள் தவிர யாரோ ஒரு உறவினரும் அவர்களோடு வாழ்வார். வயதான பெற்றோர், குடும்பமாக வளர்ந்து விட்ட பிள்ளைகளோடு வாழ்வதும், தமையன், தமக்கை குடும்பங்களுடன் இளையவர்கள் வசிப்பதும் மிகவும் பொதுவானது. மருமக்கள் கூட, வந்து தங்குவார்கள். தமிழ் மக்களிடையே நிலவும் தாய்வழிச் சமுதாய முறைமைகளால், வீடுகளைச் சகோதரிகள் பங்கு போடுவதும் ஆங்காங்கே உண்டு. வீட்டூத் தளத்தில் ஒரு சகோதரி குடும்பமும் மேல்மாடியில் இன்னொரு சகோதரி குடும்பமும் வசிப்பது பொதுவான ஒன்று.
சாப்பாட்டு வேளையும் ஒரு பொது நிகழ்வேதான். சாப்பாட்டுக்கு மற்றவர்கள் அழைக்கப்படுவதும் உண்டு. அப்படியான வேளைகளில் சிறப்பு ஏற்பாடுகள் நடக்கும். உயிர் வாழ குடி நீர் அடிப்படையோ உணவும் அப்படியேதான் கருதப்படுகிறது. பகிர்ந்து உண்ணல் நியதி ஆகிறது. ஆகவே இந்தச் சூழலில், தனியொரு தம்பதியர்க்குச் சமைக்கும் எனது வழக்கத்தை நான் மாற்றிச் சமூகச் சமையலாக செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக தமிழ்ச் சமுதாயத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டாருக்குத் தேவையானதைக் காட்டிலும் கூடுதலாகவே சமைப்பார்கள். இதனால், வீட்டுக்கு விருந்தினர் எந்த நேரம் வந்தாலும் அவர்களுக்கு உணவு பரிமாறக் கூடியதாக இருக்கும். எந்த வேளை எவர் வந்தாலும் சாப்பிட அழைப்பதும் விருந்து பகிர்வதும் தமிழ் மக்களின் விருந்தோம்பலில் முக்கிய அம்சமாகும். இந்தச் சமூக கலாசார வழக்கத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, பொதுவாக பெண்களுடையதே. இனி, பெண்கள் அண்டை வீட்டுப் பெண்களுடன் உணவு பகிரும் வழக்கமும் உண்டு. ஒரு பெண், தான் சமைத்த உணவில் சிறு பகுதியையேனும் சுவைத்துப் பார்ப்பதற்காக ஒரு நண்பருக்கோ அண்டை வீட்டுக்கோ அனுப்பாது ஒரு நாளேனும் கழியாது எனலாம். தாம் சமைக்கும் உணவில் ஏதோ ஒன்று எமக்குப் பிடிக்கும் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தால், அந்த உணவில் சிறிதேனும் ஏதாவது ஓரு சாப்பாட்டு வேளைக்கு எமக்கு வந்து சேர்ந்து விடும். கிராமப் பகுதிகளில் ஒரே குடும்பத்தில் உள்ள பெண்களிடையேயும், இனி அண்டை வீட்டுப் பெண்களுடனும் சமூக உறவு நெருக்கமாக இருக்கும். தாம் எங்காவது வெளியே செல்லும் போது, தமக்காக உணவு சமைக்குமாறு சிநேகிதியையோ உறவினரையோ அண்டை வீட்டாரையோ கேட்பதற்கு, பெண்கள். தம்மிடையே குயங்குவதில்லை. எதிர்பாரா விருந்தினர் வந்து சேர்ந்து தம்மிடம் போதுமான உணவு இல்லாவிட்டால், அண்டை வீட்டு அல்லது நண்பர்களின் சமையல் அறைக்குச் சென்று அங்கு இருப்பதை உரிமையோடு பெறவும் பெண்கள் சுயங்குவதில்லை.
மேற்குலக வாழ்க்கை முறையோடு இந்தியாவை ஒப்பு நோக்குகையில் இன்னுமொரு முக்கியமான வேறுபாட்டைக் கண்டுகொள்ளலாம். இந்தியாவில், தனி ஆளின் நடத்தை மீது செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் பிரயோகிக்கும் பலம் பொருந்திய சமூக அழுத்த சக்தியாக விளங்குவது குடும்பமும் சமுதாயமுமாகும். சமூக அபிப்பிராயம் ஒருவருக்கு கீர்த்தியை உருவாக்கலாம். அல்லது அதை உடைக்கலாம்; அவருடைய எதிர்காலத்தையே பாதிக்கலாம். பெண்களைப் பொறுத்த வரையில், இது மிக முக்கியமானது. சமூக அபிப்பிராயம் மட்டிலான அச்சத்தை, பெண்கள் மீதான சமுதாயக் கட்டுப்பாட்டின் காத்திரமான வடிவமாகக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய சனத் தொகை கூட, ஜரோப்பிய வாழ்க்கைக்கு நேர் மாறான ஒரு சூழலை அங்கே வடிவமைப்பதை நாம் காணலாம். இன்னொரு மனிதப் பிறவியைப் பார்க்காமல் ஒரு நிமிடம் கூட அங்கு கழியுமா என்பது சந்தேகமே. இதற்கு நேர் மாறாக இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டில், ஒரு வீதியில் செல்லும் போது, ஆளரவம் இல்லாது வதி வெறிச் சோடிக்கிடப்பது, நடக்க முடியாத ஒன்றல்ல. ஆனால் இந்தியா வில் பொலிந்து விளங்கும் நட்புறவும், இந்திய மக்களின் பண்பட்ட மனிதாபிமானமும், அநாதரவு உணர்வுடன் எவரும் கைவிடப்படாது பார்த்துக் கொள்ளும் எனலாம். இத்தகைய சமூகச் சூழல்களில் வாழும் மனித வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் எனது உள்ளார்ந்த உணர்ச்சிகளும் எப்போதும் விழிப்பாக இருந்த இடம் தமிழ்நாடு. இந்த உணர்வு, சமூக ஊடாட்டங்களினால் மட்டும் வரவில்லை. இலட்சோப லட்சம் மக்களின் சமூக, பொருளாதாரப் பரிதாபச் சூழ்நிலையை அடுத்தடுத்துப் பார்த்து அதனால் திளர்ந்த உணர்வும் ஒரு காரணம். மக்களின் வாழ்வில் வறுமை புரிந்த கோரம் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்தத் துயரம் என்னை ஆழமாகப் பாதித்திருந்தது. அதைப் பற்றிக் குறிப்பிடாது இருப்பது தவறு என்றே கருதுகிறேன்.
செல்வம் கொழிக்கும் மேற்குலகில் வளர்ந்தவள் நான். கோடிக்கணக்கான மக்களின் வறிய வாழ்க்கைத் தரத்தை நான் இந்தியா வில் பார்த்தபோது திகைத்துப் போனதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். வறுமை, சமூகச் சுரண்டல், அநீதி, முரண்பாடுகள் இவை எல்லாம் அப்பட்டமாகத் தெரிந்தன. இவை மட்டில் பாராமுகமாகவோ இவற்றால் மனம் நெகிழாமலோ ஒருவர் .இருப்பாரேயென்றால் அவர் பார்வை அற்றவராகத் தான் இருக்க முடியும். எதிரே தெரிந்த வறுமையும் சுரண்டலும் எனக்குள் ஏற்படுத்திய கடுப்பு, காலத்தால் தணியவே இல்லை. தொடக்கத்தில், நிலைமையை நேரே பார்க்கும் போதெல்லாம் இது நிசமல்ல, மாறிவிடும் என்று கருதுவேன். ஆனால் இது மாறவில்லை; நிரந்தர பிரசன்னமாக இருந்தது; மனச் சாட்சியை உறுத்தியது; மனதையும் குடைந்தது. விமானம் மூலம் மும்பையில் போய் இறங்குவதற்கு முன், விமான யன்னலால் வெளியே எட்டிப் பார்த்தால் எல்லாமே புரிந்து விடும். விண்முட்டும் மாடங்களின் கவர்ச்சியை, நகரின். எல்லையில் கண்ணுக்கு எட்டாத் தூரத்துக்கு விரிந்து கிடக்கும் சேரிகள் மழுங்கடித்துவிடும். விமான கூடத்தை விட்டு வெளியே வந்ததும் பிச்சைக்காக நீளும் பெருந் தொகைக் கரங்களே பயணிகளை வரவேற்கும்.
எனது மனச் சாட்சியில் சுருக்கென்று தைத்த இன்னொரு சம்பவம், சென்னையில் ஒரு சாதாரண உணவு விடுதியில் நிகழ்ந்தது.. நாம் உணவைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். அந்த உணவு விடுதியின் வாயிலை மூன்று நான்கு பிள்ளைகள் துணிச்சலாக அகலத் திறந்தார்கள். அவர்களுடைய வாடிய முகங்கள் நாம் உண்பதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. நாம் தமக்காக உணவில் ஏதாவது மீதம் விடமாட்டோமா என்ற ஏக்கம் அந்த முகங்களில் தெரிந்தது.
என்னைப் பாதித்த இன்னொன்று, சென்னைப் பிச்சைக்காரரின் பரிதாப நிலை; என்றுமே மாறாத நிலை; எங்கும் வியாபித்து இருந்த சமூக ஏற்றத் தாழ்வுகளையும் சுரண்டலையும் பிரதிபலித்த நிலை; நான் ஒரு வள்ளைக்காரி என்பதால் பிச்சைக்கார சமூதாயத்தின் இரத்தலுக்கு கூடுதலாக உள்ளானேன். ஆகவே எனக்குப் பின்னால் ஒரு பிச்சைக்கார பட்டாளமே வந்து கொண்டிருக்கும்; அதுவும் சென்னை பிரதான வீதிகளில் நான் கடைத் தெருக்களுக்கு ஏதாவது வாங்கப் போனால் நீட்டிய கரங்களோடு “அம்மா! அம்மா!” ௭ன்று கெஞ்சியபடியே வந்து கொண்டிருக்கும். மனிதராகப் பிறந்தவர்கள் என் முன்னே நின்று பிச்சைக்காக என்னிடம் கையேந்துவது எனக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. இதில் இருந்து மீள்வதற்கும் எனக்கு நாள் பிடித்தது; இதை எப்படித் தீர்ப்பது என்பதும் கவலையைத் குந்தது. தொடக்கத்தில் இவ்வளவு அசுத்தமான தோற்றத்தில் பிச்சைக்காரர் என்னைத் தொந்தரவு செய்வது எனக்கு ஒரு அசெளகரிய உணர்வை ஏற்படுத்தியது. இத்தகைய கொடிய வறுமையை நான் முகமுகமாக இதுவரை பார்த்ததில்லை. இனி, நான் மேற்குலகில் இருந்து வந்தவள் ஆதலால் என்னிடம் பணம் இருக்கும் என்று ரம்பா என் நினைக்கிறார்கள் என்று நான் கருதினேன். இந்த நிலையில், ஒன்றிரண்டு சில்லறையைக் கொடுக்க மறுத்தால், மற்றவர்கள் கருமியாக என்னைப் பாரப்பாாகள். அதை நான் விரும்பவில்லை. மறுபுறம் உண்மையான நிலையை உணராது இரக்கம் காட்டும் ஒருவராக மற்றவர்களால் கருதப்படூவதையும் நான் விரும்பவில்லை. பெரும்பாலான சமூகம் அங்க்கரிக்காத தொழில் இரத்தல் தொழில் என்பதை நான் அறிவேன். நாம் உதவுவதாகக் கருதிச் சில்லறை கொடுக்கும் அதே மக்களைச் சுரண்டி நசுக்கும் தொழில் இது என்பது எனக்குத் தெரி யும்.
என்னைப் பொறுத்த வரையிலே பிச்சை எடுத்தலை ஒழித்துக் கட்டும் சமூகப் பணியில் ஈடுபடுவது எனது நோக்கம் அல்ல. நான் வீதியில் இறங்கி நடக்கும் போது, பிச்சைக்காரரால் மொய்க்கப்படாதிருக்க விரும்பினேன். அதே சமயம், எதையும் கொடுக்காது. அவர்களை விரட்டவும் நான் விரும்பவில்லை. தொடக்கத்தில் நான் எல்லோருக்கும் முடிந்ததைக் கொடுப்பேன். கொடுத்தால் அவாகள் போய்விடுவார்கள் என்று கருதினேன். ஆனால் விளைவு நேர் மாறாக இருந்தது. எனது இளகிய மன்தைக் கண்டு பிச்சைக்காரர் கூட்டம் பலமடங்கு பெருகியது. இந்த நிலையில், மாநில அரசு விரும்புவது போல, பிச்சை போடாது விஙவேதே சிறந்தது என்று தீர்மானித்தேன். ஆனால் அதுவும் முடியாது போய்விட்டது. நான் கொடுக்கும் வரை அவாகளும் விடாது தொடர்ந்தார்கள். இந்தக் குழப்பமான சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? பிச்சைக்காரரால் சூழப்பட்டு விடுவேன் என்பதற்காக கடைத் தெருவுக்கும் போகாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் அலையலையாகப் பெருகிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் சில்லறை கொடுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
இந்த வெளிப்படையான பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று ஆழமாகச் சிந்தித்தேன். என்னை மலைக்க வைத்தது என்னைச் சூழ்ந்து கொள்ளும் பிச்சைக்காரரல்ல. மாநாக அவர்களது! பிரசன்னம் ஒரு உண்மையை எனக்கு எடுத்துக் காட்டியது. அதிர்ஷ்டவசமாக, சமூக சலுகையுடனும், நல்வாய்ப்புகளுடனும் எனது வாழ்க்கை அமைந்து விட்டது. அதே சமயம், எனது முகத்திற்கு முன்னே அந்தியும் சமூக சமத்துவமின்மையும் மெய்யுண்மையாக வடிவம் எடுத்து நிற்கின்றது. இந்த முரண்பாட்டை உணர்ந்து நிலைகுலைந்து க்ப் ஆகவே, இந்தப் பிள்ளைகள், பெண்கள், ஊனமுற்றோர், வயது குறைந்தவர்கள் முதியோர் அடங்கிய இச் சமூகம் எனக்கு தொந்தரவு தருகிறது என எண்ணி, அவர்களை ஒதுக்கித் தள்ளாது, பிரச்சினையை எனக்குள்ளேயே தீர்த்துவிடத் தீர்மானித்தேன். பிச்சை எடுப்பது ஒரு தொழிலாகவே மாறி விட்டிருந்தது. இதை ஊக்கப்படுத்தக் கூடாது என்று மாநில அரசு விரும்பியது. ஆனால் இதில் ஈடுபட்ட மக்களுக்கு ர் ல் க்கலாம்; இழி தொழிலே தங்களுக்கும் ள் கி்ஹுலுஸ் அவர்கள் கருதியிருக்க வேண்டும். இவர்களுக்குச் சில்லறை கொடுப்பதால் நான் குறைந்து போய்விடமாட்டேன். ஆகவே எனக்குள் ஒரு முடிவுக்கு வந்தேன். சில்லறையை அவர்களுக்குக் கொடுத்த பின், கொச்சைத் தமிழில் “போயிடுங்க” என்று கூறுவேன். அவர்களும் மரியாதையாகக் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அமைதியாகப் போய்விடுவார்கள். அதன் பின் வெளியே போகும் போதெல்லாம் ஐந்து பைசா நாணயங்கள் நிறைய எடுத்துக் கொண்டு போவேன். பிச்சைக்காரர்கள் அருகே வந்ததும், சில நாணயங்களைக் கொடுத்து, “போயிடூங்க” என்று சொல்வேன். அவர்களும் போய்விடுவார்கள். சில ஆண்டுகளில் பிச்சைக்காரர் சமுதாயம் எனக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்டது. பிச்சைக்காரர் ஒருவர் எதிரே வந்தால் அல்லது பின்னே தொடர்ந்து வந்தால் அவரைத் தவிர்த்து ஒதுங்க முயல மாட்டேன். உப்பிய வயிற்றோடு காணப்படும் குழந்தை அல்லது பெண்பிள்ளைதான் இந்தியாவின் வறுமையையும் ஒடுக்கு முறையையும் எனக்கு எந்த நேரமும் உணர்த்திக் காட்டும் குறியீட்டுச் சின்னங்களாக விளங்கின. எலும்பும் தோலுமாக கை கால், குழி விழுந்த கண்கள், வெறித்த பார்வை, கலைந்து சிக்கேறிச் செம்பட்டை பற்றிய கருங்கூந்தல் - இப்படியான கோலம். அந்தக் குழந்தை எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் தாயின் இடுப்பில் ஓட்டிக் கொண்டிருக்கும் காட்சி எனது நெஞ்சைப் பதற வைக்கும். பெண்கள் பிச்சை எடுக்கலாமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அந்தச் சின்னப் பெண் குழந்தையின் பரிதாப நிலையேதான் பிரச்சினை. மகப் பேற்றில் ஆண் பிள்ளையை விரும்புவதும் பெண்களுக்குச் சமூக நீதிப் புறக்கணிப்பு இழைப்பதும் இந்தியாவில் ஒரு பொது நியதி. உணவு ஊட்டும் போது கூட, ஆண் குழந்தைக்கு ஊட்டுவதற்காகப் பெண் சிசுவைப் புறக்கணிப்பதும், இனி, ஊட்டச் சத்தில்லாத பெண் குழந்தையைப் பிச்சை எடுக்கும் வேளையில் வைத்திருப்பதால் அனுதாபத்தைப் பெற முடியும் என்ற எதிர்பார்ப்பில் அதை மேலும் வாட்டுவதைக் கூட காண முடிகின்றது.
2.3 அமையப்பக்குன் பிரச்சினைகள்
பாலாவும் நானும் விடிேதலைப் புலித் தலைவர்களுடனும் போராளிகளுடனும் ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டோம். அமைப்பின் உயர் மட்டத்தில் நிலவிய மிக அந்தரங்கப் பிரச்சினைகளை எமக்குத் தெரிவிக்கும் அளவுக்கு அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரம் ஆனோம். இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் தமிழ் சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரப் போட்டிகளும் ஆளுமை மோதல்களும் எழுந்ததால் இயக்கத்தில் பிளவு தோன்றி மாற்றங்கள் நிகழ்ந்து, இறுதியில் உறுதியான வளர்ச்சி ஏற்பட்டது. மூத்த தலைவர்களுக்கும் மத்திய குழுத் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையே பாரதூரமான ஒரு முரண்பாடு எழுந்தது. அமைப்பிலே ஒரு தவிர்க்க முடியாத பிளவு ஏற்படும் நிலை தோன்றியது. அறிவுரை ஆலோசனைக்காக பாலா சென்னைக்கு அழைக்கப்பட்டார். நெருக்கடியின் அப்பட்டமான காரணம், அமைப்பின் ஒழுக்கக் கோவையை மீறும் ஒரு பாலியல் விவகாரமாக இருந்தது. ஒடுக்கப்பட்ட தமது மக்களுக்கு விடுதலை பெறவேண்டும் என்ற உயரிய சீலத்தைச் சாதிக்கும் நோக்கத்தை ஏற்று, அதற்காக தம்மை அர்ப்பணித்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் கட்டுப்பாட்டுக்கும் கண்ணியத்துக்கும் ஒழுக்கக் கோவை இன்றியமையாத்து. இந்த ஓழுக்கக் கோவையை மீறுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், திருமணமாகாத மனிதரான உமா மகேஸ்வரன், விவாக ரத்துப் பெற்றவரும் விடுதலைப். புலி அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினருமான ஊர்மிளாவுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
உமாவும் ஊர்மிளாவும், தொடக்கத்திலே, தமிழர் ஜக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) இன் இளைஞர் அணித் தலைவர்களாக இருந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக பரப்புரையை விரிவுபடுத்துவதற்காக, பிரபாகரன் . அவர்களால் சேர்க்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும், ஏனைய போராளிகளுடன் சென்னையில் ஒரு வீட்டிலே வசித்து வந்தார்கள். உமாவையும், ஊர்மிளாவையும் பாலியல் உறவு நிலையில் நேரே கண்ட போராளிகள் விடயத்தைத் தலைமைப் பீடத்திற்கு அறிவித்திருக்கிறார்கள். இதற்காகத்தான் பிரபாகரன் அவர்களும் ஏனைய தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து விடயத்தை விசாரிக்க வேண்டிய . நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அமைப்பின் ஒழுக்கக் கோவையின் படி, திருமணத்துக்கு புறம்பாகவோ, திருமணத்துக்கு முன்னதாகவோ பாலி யல் உடல் உறவுகள் தடை செய்யப்பட்டிருந்தன. ஒரு விரிவான. விசாரணை நடைபெற்றது. ஊர்மிளாவைத் திருமணம் செய்ய வேணடும்; அல்லது மத்திய குழுத் தலைமையில் இருன்ந்து விலக வேண்டும் என்று உமாவிடம் தெரிவிக்கப்பட்டது. ஏனைய போராளிகளை விட, உமா உலக நடைமுறைகள் தெரிந்த ஒரு மனிதர். தங்களிடையே தகாத உறவு இருப்பதை வன்மையாக மறுத்தார். பசுவியில் இருந்து விலகவும் மறுத்தார். இது அமைப்புக்குள் ஒரு பெரிய நெருக்கடியைத் தோற்றுவித்தது. ஊர்மிளாவும் அதேயளவு பிடிவாதமாக இருந்தார். உறவை ஓப்புக் கொள்ள மறுத்தார். இது தொடர்பாக ஆலோசனை கூற பாலா அழைக்கப்பட்டார். உமாவுடனும் ஊர்மிளாவுடனும் பாலா பேசினார். அவர்கள் இருவரும் தமது உறவை ஓப்புக் கொண்டு பின்னொரு நாளிலேனும் திருமணம் செய்யச் சம்மதித்தால், பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்று பாலா கருதினார். ஆனால் அவர்கள் இருவரும் தாம் சுற்றவாளிகள் என்றே தொடர்ந்து வாதிட்டார்கள். ஆனால் சம்பவம் நடந்ததாகக் கண்டவர்களும் தங்கள் கூற்றில் உறுதியாக நின்றார்கள். இறுதியாக, பெரும்பான்மையான தீர்ப்பு அந்தச் சோடிக்கு எதிராகவே அமைந்தது. மகேஸ்வரன் தமது பதவியிலிருந்து இறங்கி, இயக்கத்தில் இருந்தும் விலக வேண்டும் என்று தீர்மானம் ஆயிற்று. தீர்ப்பை மகேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்தார். இதன் விளைவாக, இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டார். உமா மகேஸ்வரனும் ஊர்மிளாவும் வவுனியாவுக்குத் திரும்பிச் சென்றார்கள் என்றும், அங்கு ஊர்மிளா . மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு, கடூுஞ்சுகவீனம் அடைந்து மருத்துவக் கலாநிதி ராஜசுந்தரம் நடத்திய மனித காருண்ய அமைப்பான காந்தி இல்லத்தில் காலமானார் என்றும் பின்னர் அறிந்தோம்.
இயக்கப் பிரச்சினைகள் பாரதூரமாக இருந்தபோதும், எமது இந்திய முதல் பயணம் தொடர்பான இனிய நினைவுகளோடு லண்டன் திரும்பினோம். விடுதலைப் புலி இயக்கத் தலைமையுடன் எமக்கு நல்ல புரிந்துணர்வு இருந்தது. அவர்கள் மட்டில் அனுதாபமும் இருந்தது. ஆயினும் அமைப்பை ஒரு தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்து எடுப்பதானால், அதந்கான அரசியல் பணி நிறையப் புரியப்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து இருந்தோம். இது ஆரம்ப காலம். சிறு விதை யில் இருந்துதான் பெருவிருட்சம் முளைக்க வேண்டும். ஆகவே நாம் தளர்வு அடையவில்லை. போராட்டத்துக்காகக் கஷ்டப்பட நாம் தயாராக இருந்தோம். எம்மைப் பொறுத்த வரையிலே விடுதலைப் புலிகளே தமிழ் மக்களுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு என்றும் உணர்ந்து கொண்டோம்.
லண்டனில் இருந்த வேளையில் தலைமையோடு தொடர்பைப் பேணியபடியே அமைப்புக்காகத் தீவிரமாக உழைத்தோம். இரண்டு ஆண்டுகள் கழிய, 1981 இலே இரண்டாவது தடவையாகச் சென்னைக்குச் சென்றோம். திரும்பவும் அமைப்புக்குள் பாரதூரமான பிரச்சினைகள் காணப்பட்டன. இந்தக் காலகட்டத்திலேயே பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலை அமைப்புடன் (TELO) கூட்டு ஒன்றை நிறுவினார். அவ்வேளை சிறீசபாரத்தினம் ரெலோவின் தற்காலிகத் தலைவராக இருந்தார். ரெலோவைத் தோற்றுவித்த தலைவர்கள், தங்கத்துரையும், குட்டிமணியும் சிநீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதச் சட்டத்துக்கு அமைவாக சிறீலங்காச் சிறை யில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். பின்னர் விடுதலைப் புலிகளையும் ரெலோவையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்து, ஆயுதப் போராட்டத்தை பலப்படுத்தி விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவர் தாமே என்று உமா மகேஸ்வரன் வஞ்சகமாக உரிமை பாராட்டத் தொடங்கியிருந்ததால், இணைப்பு தடைப்பட்டது. ஆயுதப் போராட்ட வரலாறு விடுதலைப் புலிகளின் கொடி யின் கீழேயே பதியப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் அவருடைய போராளிகளும் அக்கறையாக இருந்தார்கள்; விடுதலைப் புலிகளின் தலைமை தமதே என்று உமா மகேஸ்வரன் விடுத்த உரிமைப் பாத்தியதையை எதிர்த்தார்கள். விடுதலைப் புலிகளும் ரெலோவும் அந்தச் சந்தர்ப்பத்திலே இணைந்த ஒரு அமைப்பாக வடிவெடுத்தால், விடுதலைப் புலிப் பெயரையும் தலைமையையும் தமதாக்கிக் கொள்ள அது மகேஸ்வரனுக்கு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆகவே, மகேஸ்வரனின் பிரச்சனையைத் தீர்க்கும் வரை, தங்கள் அமைப்பைக் குலைத்துவிட புலிகளின் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. எனவே, மகேஸ்வரனுடைய உரிமைப் பாத்தியதையை நிர்மூலமாக்கும் வரை ஒன்றிணைந்த அமைப்பை உருவாக்குவதைத் தாமதப்படூத்த வேண்டும் என்றும் அதே சமயம் புலிகளையும் ரெலோவையும் தனித்தனியே பலப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது. இந்த இணைப்பை ஒத்திப் போடுவதை சிநீசபாரத்தினம் விரும்பவில்லை. ஆனாலும் அந்தத் தீர்மானத்தின் பின்னே இருந்த நியா யத்தை அவர் புரிந்து கொண்டார். இதற்குப் பின்னர் பாலாவும் பேபி சுப்பிரமணியமும் ஒரு பலமான ஊடகப் பரப்புரையைச் சென்னையிலே தொடக்கினார்கள். உமா மகேஸ்வரனின் தவறான உரிமைக் கோரிக்கையை நிராகரித்தார்கள். அதே சமயம் உலகம் பூராவும் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. உமா பதவி இறக்கப்பட்ட காரணம் கடிதங்களில் விளக்கப்பட்டது. இறுதியில், விடுதலைப் புலிகளின் தலைமைக்கான கோரிக்கையை உமா மகேஸ்வரன் கைவிட்டார். தனியான போராளி இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதே கால கட்டத்தில் வெவ்வேறு வளர்ச்சிகள் இடம்பெற்றன. விடுதலைப் புலிகள்-ரெலோ இணைப்பு கைகூடவில்லை.
2.4 புதிய அனுபவங்கள்
எமது 1981ம் ஆண்டு இந்தியப் பயணத்தின் போது தலைமைகளுக்கு இடையே அரசியல் இழுபறி நாடகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஏனைய போராளிகளுடன் கூடிப் பழகுவதில் நான் ஈடுபட்டேன். இந்தத் தடவை, சென்னை நகரப் புறத்திலுள்ள வரசலவாக்கத்தில் வீடு ஒன்றைப் போராளிகள் அமர்த்தி இருந்தார்கள். அரசியல் சூட்சுமங்கள் நடந்து கொண்டிருந்தபோதும், அந்த வீட்டில் தோழமை உணர்வே நிலவியது. எம்மோடு அங்கே தரித்திருந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவர்கள்; முக்கிய புலிப் போராளிகள். ஒருவர் பேபி சுப்பிரமணியம். இளங்குமரன் என்றும் அவர் அழைக்கப்பட்டார். இவர் பிரபாகரனின் ஆயுட் தோழர். இளம் போராளியாக இருந்தபோதே இவர் வெடி மருந்திலும் நேரக் குண்டிலும் விற்பன்னர். ஆனாலும் மிகவும் சாதுவானவர். மற்றவர்களுக்கு என்றுமே கெடுதி விளைக்காதவர். . அதிகாரப் போட்டியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவர். அற்பத்தனமான வதந்திகளைப் பரப்பாதவர். அவரிடம் தற்பெருமை கிடையாது. போராட்ட வரலாறோ, அதில் புலிகளின் பங்கோ அத்தனையும் அவருக்கு மனப்பாடம். அவர் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். உணவில் சுத்த சைவம். பச்சை மிளகாயைத் தாமே பொரித்து, ஐந்து, ஆறு ஈர வெங்காயத்தோடு சோறு சாப்பிடுவார். அதுதான் அவருடைய பிரதான உணவு. போக்கு விசித்திரம் என்றாலும் விடுதலைப் புலிகளின் இலட்சியத்தில் உ றுதியுடையவர். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். எமது நீண்ட கால நண்பர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய பின்னரும் . நெருங்கிய நண்பராகத் தொடர்ந்து திகழ்ந்தவர் நேசன்-ரவந்திரதாஸ். இப்போது வெளிநாடு ஒன்றில் வாழ்கிறார். பிரபாகரனுடன் போராட்டத்தில் சேர்வதற்காக மருத்துவக் கல்லூரிப் படிப்பை இடையில் முறித்துக் கொண்டு வந்தவர். முன்பு பிரபாகரனின் பெரும் நம்பிக்கைக்கு பாத்திர- . ராய் இருந்தவர். அவர்களுக்கு இடையே மனமுறிவு ஏற்பட்டதும் இயக்கத்தின் உள்விவகார இழுபறிகளுக்கு முகம் கொடுக்க இயலாமலும் ஆன்மீகத்தில் நாட்டம் பெருகியதாலும், அமைதியான வேறு வாழ்க்கையை அவர் நாடினார்.
அந்த நாட்களில் சங்கர் எம்மோடுதான் இருந்தார். விடுதலைப் புலிப் போராளிகளில் முதல் உயிர்ப் பலியானவர் இவரே. இவர் மரணம் அடைந்த நவம்பர் 27ம் திகதியே மாவீரர் நாளாக வீரச்சாவைத் தழுவிய போராளிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1982 இலே சங்கர் தரித்திருந்த வீட்டைச் சுற்றி வளைத்த சிறீலங்கா அரச படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய, ரவை இவர் வயிற்றிலே பாய்ந்தது. சிகிச்சைக்காகப் போராளிகள் இவரை இந்தியா கொண்டு சென்றார்கள். உடனடியாக உரிய சிகிச்சை | வழங்கப்படாததால், உள் வயிற்று நீர்ப்பை சேதமாகி, குருதியிலும் நஞ்சூறத் தொடங்கியிருந்ததால், அவர் மரணமானார். 1981 இலே அவர் எம்மோடு சென்னையில் இருந்த நாட்களில், உடற் பயிற்சிக்காக ஒவ்வொரு நாளும் ஓடிவிட்டுத் திரும்பும்போது, ஒரு திடாத்காரமான இளைஞனாக அவரைப் பார்த்த எனக்கு, அந்த இளைஞனின் மரணத்தை ஏற்றுக் கொள்வது மிகக் கடினமாக இருந்தது. ஆயுதப் போராட்டம் எனும் போது, அதில் இளைஞர்கள் மரணம் அடையப் போகிறார்கள் என்பது எனது மனதில் உறைத்தது.
ரகு, பல ஆண்டுகளாக பிரபாகரனின் மெய்க்காவலராகவும் நம்பிக்கைக்கு உரிய மூத்த உறுப்பினராகவும் திகழ்ந்தவர். அந்த நாட்களில் சென்னையில் பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக சங்கரோடு இருந்தவர்களில் அவருடைய பாலிய நண்பர் ரகுவும் ஒருவர். பல ஆண்டுகளுக்குப் பின், விதிகளை மீறயதால், இயக்கத்தில் இருந்து ரகு விலக்கப்பட்டார். பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பான மூன்றாவது ஆளும் ஒரே ஊரில் இருந்து வந்த அவர்களுடைய பாலிய வயது நண்பரேதான். அவரது பெயர் பண்டிதர்.
நான் சென்னைக்கு சென்றபோது எனக்குத் தமிழில் ஒரு வார்த்தையும் பேச வராது. பண்டிதருக்கு ஆங்கிலம் அறவே தெரியாது. ஆனாலும் கை சமிக்ஞைகளாலும் கலகலத்த சிரிப்பாலும் போதுமான அளவு புரிந்துணர்வை இனிமையாக ஏற்படுத்திக் கொண்டோம்: பண்டிதரின் நினைவு வரும் போதெல்லாம் தொய்வு நோயுடன் போராடும் ஒரு இளைஞரின் நினைவுதான் வரும். எந்த நாளாவது, இந்தியத் தூசியோ, சமையலில் மிளகாயின் காரமோ பண்டிதருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தாமல் விட்டது கிடையாது. ஆனால் இந்த உடல் அசெளசரியம் அவரைத் தளர்வடையச் செய்ததில்லை. தமது அரசியல் பணிகளை தமது நோய் கட்டுப்படுத்த அவர் இடமளித்ததும் இல்லை. யாழ்ப்பாணத்தில் அவரை நான் போய் சந்திப்பதற்கு முன்னதாகவே அவர் இறந்து போனார். ஆனாலும், விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவர் என்பதற்காக அவர் தேடப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஆபத்தான நாட்களில் கூட மூச்சுத் திணறும் தொய்வோடு அங்கும் இங்கும் அவர் சைக்கிளில் ஓடித் திரிவதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. யாழ்ப்பாணம் அச்சுவேலியிலே 1985 ஜனவரியில் அவர் மரணம் அடைந்தது பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாள் எனக்கு ஒரு துயர நாள். பண்டிதரின் மரணம் பற்றி எனக்கு விபரம். தெரிவிக்க, பிரபாகரனுக்கு பல நாள் பிடித்தது. அந்தத் துயரச் செய்தி என்னை வெகுவாக வாட்டிவிடும் என்று அவர் கருதியிருக்க வேண்டும். பண்டிதருடைய அணியினுள் ஊடுருவி இருந்த உளவாளி ஒருவன் காட்டிக் கொடுத்ததை அடுத்து அவருடைய இரகசிய வதிவிடம் சுற்றி வளைக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்து இருந்தார்கள். அந்தச் சுற்றி வளைப்பில் ஒருவரோ இருவரோதான் உயிர் தப்பிச் சென்றனர் என்றும் பண்டிதர் பற்றிய தகவலுக்காகக் காத்திருந்தார்கள் என்றும் அறிந்தேன். பிரபாகரனின் சங்கடமும் பண்டிதர் பற்றிய தெளிவின்மையான தகவலும் எனக்குச் சந்தேகத்தையே தந்தது. சுற்றி வளைப்பில் பண்டிதர் தப்பியிருப்பாரா என்று ஐயப்பட்டேன். விடுதலைப் புலித் தாக்குதல் குழு ஒன்றின் தலைவராகவும் பிரபாகரனுக்குப் பிடித்தமான தோழராகவும் இருந்த பண்டிதர் எங்கே இருக்கிறார் என்பது தலைமைப் பீடத்திற்கு உடனடியாக தெரிந்திருக்க வேண்டும். சில நாள் கழித்து பேபி சுப்பிரமணியம் எமது மாடி வீட்டுக்கு வந்து பண்டிதர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறியபோது எனது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. காட்டிக்கொடுத்த அந்த இராணுவ உளவாளி தப்பியோடி, பின்னர் சிநீலங்காப் படையில் ஒரு நல்ல பதவியில் அமர்ந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். விடுதலைப் புலிப் போராளிகளில் தொடக்கத்தில் இறந்தவர்களில் பண்டிதரும் ஒருவர். தமது மரணத்துக்குச் சில மாதங்கள் முன்னதாக எம்மைப் பார்க்க அவர் சென்னைக்கு வந்தது எம் பாக்கியம். வல்வெட்டியில் உள்ள அவருடைய வீட்டுக்கு 1987 இலே நான் சென்றபோது அவருடைய தாயார் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சித் துயரத்தை நேரிலேயே கொட்டியபோது அதிர்ந்து போனேன். அவருடைய தாயார், அவர் வாழ்ந்த அவருடைய அறையில் மாற்றம் எதுவும் செய்யாது அதையே ஒரு கல்லறையாக்கி, அப்படியே பூட்டி வைத்திருந்தார். அந்த எளிமையான அறை வாயிலில் அவருடைய நிழற்படம் மாட்டப்பட்டு இருந்தது. அந்த வீட்டில் எம் எல்லோருடைய கண்களும் குளமாகி இருந்தன.
எம்மோடு தங்கியிருந்த ரெலோ போராளிகளில் சிறீசபாரத்தினமும் ஒருவர். பின்னர் இவரே அந்த அமைப்பின் தலைவரானார். அவர் அமைதியானவர். நன்கு பிரபலமான வல்வெட்டித்துறைப் போராளிகள் தங்கத் துரையையும் குட்டிமணியையும் தமது அரசியல் தலைவர்களாக அவர் வரித்திருந்தார். வடமராட்சி கிழக்கு கரையோரமாக அவர்கள் கைதானதையடுத்து, அவர்களை வெலிக்கடைச் சிறையில் இருந்து மீட்பதற்காக திட்டம் இட்டுக் கொண்டிருந்தார். ராணுவப் போர்த்திறனில் சிறீ பிரமாதமான- வரல்ல; போராட்ட அனுபவமும் அவருக்கு குறைவே. ஆனால் சிறை . உடைக்கும் ராணுவ முயற்சிக்கு வேண்டிய ஆற்றல் திறன்களை எங்கிருந்து பெறலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். பிரபாகரனுடைய ராணுவத் திட்டமிடல் ஆற்றலும், எந்தத் திட்டத்தையும்
செயற்படுத்தக்கூடிய புலிப் போராளிகளின் களம் கண்ட துணிச்சலும் அவருக்கு மிகத் தேவையாக இருந்தன. தற்கொலைக்கு ஒப்பான ஒரு கடின ஆபத்தான இராணுவ நடவடிக்கையில் பிரபாகரன் ஈடுபட இருந்தார். பாலாவின் தலையீடு பிரபாகரனைக் கட்டிப் போட்டது. இதனால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசியலையும் போர்த் தந்திரோபாயத்தையும் ஒருபுறம் ஒதுக்கி விட்டால், சிறீ எம் மட்டில் மிகவும் கருணையுடனேயே நடந்து கொண்டார். ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஒரு முறை பாலாவுக்கு நெருப்புக் காய்ச்சலும் வயிந்றோட்டமும் ஏற்பட்டு கடும் சுகவீனமுற்றார். பாலாவால் எழுந்து நடக்க முடியவில்லை. சிறீ அவரைத் தூக்கிக் சென்று வண்டியில் ஏற்றினார். பின்னர், வண்டியில் இருந்து இறக்கி, மருத்துவமனையில் மருத்துவரின் அறைக்கும் தாமே தூக்கிக் கொண்டு போனார். துரதிர்ஷ்டவசமாக ஆளுமைர்தியாகவும், அரசியல் ரீதியாகவும் சிக்கலான முரண்பாடுகள் உருவானதால், ஒரு நெருக்கமான உறவு எம்மிடையே வளரவில்லை. ஆனால், அதேவேளை தனிப்பட்ட குரோதமும் இருக்கவில்லை. ஆகவேதான் பின்னர் பாலாவுடன் அரசியல் சந்திப்பு ஒன்றுக்காக சென்னையில் உள்ள விடுதலைப் புலிகளின் பணி- மனைக்கு 1985 இலே சிறீ வந்தபோது அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர், விடுதலைப் ’ புலிகளுக்கும் ரெலோவுக்கும் இடையே கொடூரமான மோதல் வெடித்து ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சிறீ கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிப் போராளிகள் என்று க்றக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை 1981 இலே மிகக் குறைவே. ஆனாலும் அந்தச் சிறிய . தொகையினரிடையே கூட, வழிநடத்தல், ஒன்று படுத்தல், ஒழுக்கத்தை வலியுறுத்தல் ஆகியவற்றால், தமது தலைமைச் சிறப்பை கிரு. பிரபாகரன் நன்கு வெளிப்படூத்தினார். ஆண்டுக் கணக்கான அனுபவம் அப்போது இல்லாததாலும் நாம் ஒரு சிறிய குழுவாக இருந்ததாலும் எமக்கு நல்ல பெயரே நிலவியது. ஆகவே எவர் எவருக்கு என்ன . என்ன பதவி, பொறுப்பு, கட்மை என்று இருந்தாலும், ஒரு சமத்துவம், உண்மையான உறவு, பாசம் ஆகியவை வஹசலவாக்கத்தில் வசித்த எம்மிடையே இழையோடி இருந்தது. பெரும்பாலான வீடுகளில் இருப்பதுபோல சமையல் அறையே நாம் கூடும் இடம். கூடி உண்ணும் போது நாம் பெற்ற மகிழ்ச்சியே தனியானது. பாலா, பண்டிதர், சங்கர், ரகு, பேபி, நேசன் நான் எல்லோரும் கூட்டுச் சமையலில் ஈடுபடும்போது ஒரே சிரிப்பும், பகிடியும் கும்மாளமுமாக இருக்கும். பாலா மீன் வெட்டிக் கொடுப்பார். அதன் பின் சமையலறை மூலையில் அரிசி மூடை மீது அமர்ந்தபடியே பகிடி விடுவார். போராளிகளின் வெடிச் சிரிப்பில் இருந்து பாலியல் ரீதியான பகிடிகள் என்று புரிந்து கொள்வேன். நான் ஈர வெங்காயம் உரிப்பேன். நேசன், தரையில் அமர்ந்து தேங்காய் துருவுவார். தலைமைச் சமையல்காரர் என்ற தோரணையில் பண்டிதர் மண்ணெண்ணய் அடுப்புடன் போராடூவார். பண்டிதர் குறிப்பிடும் அளவுகளில் ரகுவும் சங்கரும் காய்கறி நறுக்கிக் கொடுப்பார்கள். சில சமயம் சிறீ இறைச்சி காய்ச்சும் பொறுப்பைத் தாமே ஏற்பார். அவருடைய கறி, தனிச் சுவையாக இருக்கும். பிரபாகரனும் அடிக்கடி இந்தக் கும்மாளத்தில் கலந்து கொள்வார். அவருடைய கோழிக்கறி தனிச் சுவையானது. இவை எல்லாம் ஒரு சாதாரண நடைமுறை போலப் பட்டாலும், பிரபாகரன் தமது போராளிகளுக்கு வழங்கிய பயிற்சியின் வெளிப்பாடே இது. சமையற் தகைமை உடையவர்களாக இருப்பது கெரில்லாப் போராளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை பிரபாகரன் அவர்களுக்கு புகட்டியிருந்தார். சமையல் முடிந்து சமையல் அறை துப்புரவாக்கப்பட்ட பின், எல்லோரும் போய்க் கழுவிக் குளித்துவிட்டு வருவோம். தரையிலே பாய் விரிக்கப்படும். வட்டமாக சப்பணம் கட்டி உட்காருவோம். சமைத்ததைப் பகிர்ந்து புசிப்போம். பிரபாகரனும் சுவைத்து உண்பார். அவரும் அவருடைய போராளிகள் அனைவரும் தரமான சமையலாளர்களே. ஆனாலும் பண்டிதரே அனைவரிலும் சிறந்த சமையற்காரர் என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட உணமை.
சாப்பிட வேண்டுமானால் சமைக்க வேண்டும். அதற்கு முன் சந்தைக்குப் போக வேண்டும். மேற்குலகில் என்றால், உணவை மொத்தமாக வாங்கிக் குளிர் சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். இந்தியாவில் அப்படி அல்ல. உடன் மீன், இறைச்சி, காய்கறி ஆகியவற்றை அன்றாடம் வாங்க வேண்டியது தேவையாகும். ஆனபடியால், திரு. திருமதி பாலசிங்கமும் பண்டிதரும் தினமும் சந்தைக்குப் புறப்படுவோம். மற்றவர்களில் யாராவது விரும்பினால், அவர்களும் கூடி வருவார்கள். முற்பகல் வெய்யிலில் சந்தைக்குப் புறப்படுவோம். ஒரு கிலோ மீட்டர் நடந்து, பேருந்துத் தரிப்பை அடைவோம். இடக்கு முடக்கான பெரிய சாம்பல்-பச்சை நிறப் பேருந்தைக் கண்டதும் எம்மில் ஒருவர் குறுக்கே நின்று மறிப்போம். பாலாவும் நானும் பேருந்தில் திறந்த யன்னல் பக்கமாக அமர்வோம். பேருந்து நாட்டுப் புறத்துக்குள் நின்று நின்று போகும். கடைசியில் பேரூர் சந்தையில் நிற்கும். அங்கே பெரிய சனக் கூட்டம். எமது செலவுத் திட்டத்தின்படி ஆளுக்கு பத்து ரூபா. நியாயமான விலையில் புத்தம் புது மீனை பாலா வாங்கிவிடூவார். இதனால் பண்டிதருடைய பொறுப்பு சுமை இறங்கி விடும்.
தமிழ் நாட்டில் நண்பகலுக்கு மேல் பொழுது நன்றாகச் சாயும் வரை, வெய்யிலில் வெளியே வராமல் வீட்டுக்கு உள்ளே இருப்பது புத்திசாலித்தனமானது. கட்டாயத் தேவை இருந்தாலன்றி, பெரும்பாலான மக்கள் நிழலில் ஒதுங்கி விடுவார்கள். பொதுவாக ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள். நாமும் தூங்கி விடுவோம். ஆனால் பண்டிதர், அதிகம் கணிதம் தெரியாவிட்டாலும், காசுக் கணக்கைத் திரும்பத் திரும்ப சரிபார்த்துக் கொண்டிருப்பார். இயக்கத்தின் நிதிக் கணக்கைக் கூட்டூவதும், கழிப்பதும் சரி பார்ப்பதும் புத்தகத்தில் குறிப்பதுமாக அதிக நேரம் மூழ்கிப் போய் இருப்பார்.
பகல் வெய்யில் கொதி அடங்கி, கதிரவன் செந்நிறம் பாரித்து அடங்கத் தொடங்க மாலை வேளையின் மென் குளிரை அனுபவிக்க வேண்டும் என்ற புது உற்சாகம் எமக்குள் ஊறும். எல்லோரும் கூட்டாக வாரம் ஒரு தடவை சினிமாவுக்குப் போவோம். பிரபாகரனும் கூட வருவார். தமிழ் நாட்டில் பொதுவான பொழுது போக்கு, தமிழ் சினிமாதான். சனக் கூட்டம் அங்கேதான் போய்க் கொண்டிருக்கும். சினிமாவின் உள்ளடக்கத்தில் அல்ல. அதன் கற்பனைக் காட்சியிலே தான் மக்களுக்குக் கவர்ச்சி. அழகான சினிமா நட்சத்திரங்கள், மறைமுகமான பாலியல் சேட்டைகள் புரிவார்கள். வெளி வெளியான பாலியல் வெளிப்பாடு அடக்கப்பட்ட சமூகத்தில், அந்த அதீத கற்பனை உணர்ச்சிக் கிளுகிளுப்பேற்றும். மக்கள் மயங்கிப் போவார்கள். இதுவே லட்சக் கணக்கில் மக்களை சினிமாவுக்கு சுண்டியிழுக்கும். ஆனால் பிரபாகரனுக்கு அவருடைய போராளிகளுக்கும் ஆங்கிலப் படங்கள் தான் பிடிக்கும். குறிப்பாகப் போர்ப் படங்கள்.
நாம் சினிமாவுக்குப் போகாவிட்டால், இந்திய வீடுகளுக்கே தனிச் சிறப்பான மொட்டை மாடியில் கூடீவோம். அங்கே முகில் இல்லாத வானத்தையும் முடிவற்ற பிரபஞ்ச வெளியையும் பார்த்தபடியிருப்போம். எண்ணுக்கணக்கற்ற அத்தனை நட்சத்திரங்களுக்குள் எவ்வளவு சின்னஞ்சிறியவர்கள் நாம் என்ற எண்ணம் பொறிக்கும். இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்தது கை மண்ணளவே என்பதையும் உணர்வோம். தத்துவ மெஞ்ஞான சஞ்சரிப்பில் ஈடுபாடு இல்லாத போராளிகளுக்கு, வாழ்வின் புதிர்கள் பற்றிய அவர்களுடைய வினாக்களுக்கு பாலா சுவையாகப் பதிலளிப்பார்.
தமிழ் ஆடவர்களிடையே பிரபலமான இன்னொரு பொழுது போக்கு சீட்டு ஆடுவது. பிரபாகரன் இதைத் தடை செய்திருந்தார். ஆனால் பாலா இளவயதில் தீவிரமாகச் சீட்டு ஆடியவர். பிரபாகரன் வீட்டில் இல்லாத தருணங்களில், போராளிகளை பாலா வலிந்து இழுத்துவிட்டு இரகசியமாக “கடதாசி விளையாடுவார்” எதிர்பாராமல் பிரபாகரன் திரும்பி வந்தால், தம்பி உரக்கச் சிரித்து விட்டு, பெடியளைத் தவறான பாதையில் இட்டுச் செல்வதற்காக விளையாட்டு விளையாட்டாக பாலாவைக் கண்டிப்பார்.
ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல இயக்கத்தின் நிதி நிலை இக்கட்டானதாகவே இருந்தது. உணவுக்காக ஆளுக்குப் பத்து ரூபாய் மட்டுமே செலவிடலாம். போராளிகள் ஒவ்வொருவரும் இரண்டு மாற்றுடைகள் மட்டுமே வைத்திருக்கலாம். ஆண்டுக்கு இரண்டு கடவையே புதுத்துணி. வாரம் ஒரு தடவை சினிமா பார்க்க ஒவ்வொருவருக்கும் கைச் செலவுக்குப் பணம் தரப்படும். மதுவிலும் புகைத்தலிலும் மட்டும் செலவே இராது. ஏனென்றால் இயக்கப் போராளிகளுக்கு அவை முற்றாகத் தடை செய்யப்பட்டு இருந்தன.
இருந்த போதிலும் என்மட்டில் தாராளமாகவே நடந்து கொண்டார்கள். நான் அவர்களுடைய “செல்லப் பிள்ளை’. கடைத் தெருவிலும் சேலை வாங்கித் தருவார்கள். கேட்டது எல்லாம் கிடைத்தது. பாலாவுக்குப் புதிய கண்ணாடி கிடைத்தது. பாலாவுடைய நரை முடியைப் பார்த்துக் கவலைப் பட்டார்கள். சாயம் பூசுமாறு அவரை நச்சரித்து இசைய வைத்து விட்டார்கள். உணவுக்கான மேலதிகச் செலவில் மிகச் சிக்கனமாகவே இருந்தார்கள். ஆனாலும் என்மீதுள்ள பரிவினால், அவ்வப்போது வெளியே சாப்பிடப் போவாம். பிரபாகரனும் அதற்கு இணங்குவார். வெவ்வேறு வகை உணவுகளைச் சுவை பார்ப்பதில் அவருக்கு ஆர்வம். அதிலும் வெளிநாட்டு உணவு வகைகளில் தனி ஈடுபாடு உண்டு.
இந்தப் பயணத்தின் போதுதான் உண்மையன போர் ஆயுதங்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளோடும் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தோடும் நான் சம்பந்தப்பட்டபோது, எனக்கு உயிர் ஆபத்தைத் தேடிக் கொள்கிறேன் என்பதையும் நன்கு அறிந்திருந்தேன். ஒருவர் தமது உயிரை இழக்க நேரலாம் என்பதற்கு அவர் தயார் இல்லை என்றால் ஆயுதப் போராட்டத்தில் அவர் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முடியாது. நான் ஆயுதங்களைத் தொட்டுத் தூக்கியபோது, போராட்டத்தில் அது ஒரு தேவையான பங்கு என்றாலும், தற்காப்புக்கும், விடுதலைக்குமான ஊடகமாகவே நான் ஆயுதத்தை மதித்தேன். தமிழ் மக்களின் போராட்டத்தில் ஆயுதம் மிகவும் முக்கியமானது. பிரபாகரன், ரகு, பண்டிதர், பேபி, எல்லோருமே பாதுகாப்பு நோக்கத்திற்காக நிவோல்வர் பிஸ்ரல் தரித்திருந்தார்கள். அவர்களிடம் கனரகத் துப்பாக்கிகளும் இருந்தன.
அன்ரிக்கும் இலக்குப் பயிற்சி தரத் தீர்மானித்தார்கள். அதற்கு, முதலில் மறைவிடங்களில் இருந்து துப்பாக்கிகளை மீட்டு வர வேண்டும். இதற்காக ரகுவும் பண்டிதரும் போனார்கள். நாம் சந்திக்க வேண்டிய இடத்துக்கு அவர்கள் வந்தபோது இரண்டு அப்பாவி இளைஞர்களையே அவர்களில் கண்டேன். புதினத் தாளிலே சுற்றிய இரண்டு பொதிகள் கையிலே தொங்க, எதிலுமே அக்கறை இல்லாதவர்கள் போல, அமைதி யாக வந்தார்கள். நன்கு மறைக்கப்பட் ஆயுதங்களே அந்தப் பொதிகள். நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். தேடப்பட்ட “இரண்டு பயங்கரவாதிகள்?” சென்னைக்கு சில மைல் வெளியே, தானியங்கித் துப்பாக்கிகளோடு தங்கள் இலக்குப் பயிற்சிக்காக சென்று கொண்டிருப்பதை பொதுமக்கள் பார்த்திருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று ஒரு கணம் சிந்தித்தேன்.
சென்னைக்குத் தெற்கே கரையோரமாக, சில மைல் தூரம் பயணம் செய்தோம். அங்கே ஒரு சவுக்குத் தோப்பு. அங்கேயே துப்பாக்கிச் சூட்டூப் பயிற்சிக் களம் அமைக்கப்பட்டது. சுடும் கலைப் பயிற்சி எனக்கு அங்கேயே வழங்கப்பட்டது. பிரபாகரன் முதலில் விளக்கம் அளித்தார்; அதன் பின் கைத் துப்பாக்கியை எப்படிக் கையாள்வது என்று செய்து காட்டினார். அதன் பின்னர் ஆயுதத்தை என்னிடம் தந்தார். சரியாகக் குறிபார்க்க என்னால் இயலவில்லை. ஆனாலும் போராட்டத்தில் நான் பங்கெடுப்பதானால், அதைக் கற்நாக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இலக்கைக் குறி வைத்தேன். ஆறுக்கு ஒன்றாவது இலக்குத் தைத்தது. அதன் பின் தானியங்கித் துப்பாக்கிப் பயிற்சி. அது ஒரு அச்சம் கரும் அனுபவம். அது வேகமாக எகிறும்போது ஆயுதத்தை கழே விழுத்தப் பார்த்தேன். ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு சிரமம் இல்லை. ஆனால் ஒரு தானியங்கித் துப்பாக்கியைக் கையாண்டவர்களுக்கு அது ஏற்படுத்தக்கூடிய சேதத்தின் விளைவு புரியும். ஆயுதம் சிறிதோ, பெரிதோ, அதன் விளைவு உயிர் அழிவே. இந்தப் பயிற்சியின் போது ஆயுதத்துக்கு மதிப்பு அளிக்கக் கற்றுக் கொண்டேன். அதே சமயம் சில நிமிடப் பயிற்சிக்கே எவ்வளவு செலவாகிறது என்பதையும் புரிந்து கொண்டேன். இவற்றுக்கெல்லாம் நான் அருகதை உடையவள் ஆனேன் என்பதை உணரும்போது உள்ளூரப் பெருமையாக இருந்தது. நான் எடுத்த எடுப்பில் சுட்டுப் பயின்ற ஆறு சுற்றிலும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த ஒவ்வொரு ரவையின் பெறுமதியும் ரூ. 25 ஆகும். இனித் தொடக்க நாட்களில் துப்பாக்கி ரவை வாங்குவதே மிகக் கடினம். இயக்கம் வளரத் தொடங்கிய காலத்தில் விடுதலைப் போராளிகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி வாரத்தில் ஒரு சுற்று அல்லது இரண்டு சுற்று மட்டுமே கிடைக்கும். ஒரு சாதாரண கைத்துப்பாக்கி புதிதாகக் கிடைத்தால் அதுவே கொண்டாட்டம் ஆகிவிடும். நாள் ஏற, ஏற இந்தப் பயிற்சியிலும் அதிகம் கட்டுப்பாடுகள் வந்தன. ரவைகள் அருந்தலாகவே கிடைக்கும். ஆகவே இலக்குப் பயிற்சியின்போது, ஒவ்வொரு தடவையும் கூடிய கவனம் எடுத்து இலக்குத் தைப்பதில், போராளிகள் குறியாக இருந்தார்கள். துப்பாக்கி ரவைத் தட்டுப்பாடு அடிக்கடி தொடர்ந்தும் ஏற்பட்டது. ஆயுதங்களையும் துப்பாக்கி ரவைகளையும் பெறுவதில் இடர்பாடு அதி- கரித்தது. இதன் விளைவாக அவற்றின் அருமையைப் புரிந்து கொண்டவர்களாக, போராளிகள் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டார்கள். ஆயுதங்களின் பெறுமதி உணர்ந்த பொறுப்புணர்வு, விடுதலைப் புலிப் போராளிகளின் மனதில் இன்றும் அவர்களுடைய மரபா- கச் செதுக்கப்பட்டிருக்கின்றது. ஆண்டுகள் செல்லச் செல்ல ஆயுதங்கள் மட்டில் போராளிகள் கொண்ட மதிப்பும் பற்றுதலும் அதிகரித்து வந்திருக்கிறது. தங்கள் போராட்டத்தை விரிவு படுத்துவதற்காக, போர்க்களத்தில் ஆயுதங்களைச் சேகரிக்கும் பணியில் பல போராளிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருப்பதும், ஆயுதங்கள் மட்டில் அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பை உறுதிப்படூத்துகின்றது. அன்றும் சரி, இன்றும் சரி, போராட்டம், மக்களின் விடுதலை ஆகியவற்றுடன் ஆயுதம் பின்னிப் பிணைந்திருக்கின்றது. பிரபாகரனைப் பொறுத்த வரையில் துப்பாக்கிகளில் அவருக்கு நாட்டம் உண்டு; குறி வைப்பதிலும் அவர் ஒரு புலி; ஆயுதங்களின் உயிர் போக்கும் ஆற்றலை முழுமையாக உணர்ந்தவர்; ஆகவே அவந்றைக் கையாளும் போது ஒழுங்கு முறையும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை போராளிகள் மனதில் ஆழமாகப் பதித்திருக்கிறார். கைபிழைபாடாக போராளி ஒருவர் உயிரிழக்க நேர்ந்தால் ஆயுதங்களைக் கையாளும்போது அதிக கவனமும், ஓழுங்குக் கட்டுப்பாடும், மீண்டும் புதுப்பிக்கப்படும். இதனால் ஆயுதங்களோடு சீவிப்பது எனது வாழ்வில் இணைந்து கொண்டது. 1983 இலே சென்னைக்கு நான் திரும்பிய பின்னர் ஆயுதம் தரிக்கத் தொடங்கிய முதற் பெண் நானே. பாலாவுக்கும் எனக்கும் தற்காப்புக்காக எஸ்.ஐ.ஜீ சோர் பிஸ்ரல் ஒன்றை பிரபாகரன் எனக்கு வழங்கியிருந்தார். நான் எங்கு சென்றாலும் அதை எனது கைப் பையில் கொண்டு திரிந்தேன். கடைசியில் தானியங்கி றைபிள் ஒன்றுடன் நடமாடுவதும் எனது அறையில் அதை வைத்துக் கொண்டு தூங்குவதும் சாதாரண நடைமுறையாகியது. நன்றியுணர்வுடனேயே நான் அந்த ஆயுதத்தை வைத்திருந்தேன்.
தமிழ் நாட்டிலே நாம் 1981 இலே சென்றபோது, வேறும் பல வரலாற்றுப் போராளிகள் அங்கே இருந்தார்கள். ஒருவர் மாத்தையா (மகேந்திரராஜா); துயரமான முடிவுக்கு ஆளான விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் இவர். இனத் துரோகத்துக்காக 1994 இலே மரண தண்டனைக்கு ஆளானார். இவரும் சில நாட்கள் எம்மோடு தங்கியிருந்தார். பாராட்டுதற்குரிய ஒரு நிகழ்வே அவரை அங்கு வரவழைத்தது. விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவருடைய குடும்பத்தினரை சிறீலங்கா ராணுவம் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. காவலிலிடப்பட்டிருந்த பெண்ணையும் நான்கு பிள்ளைகளையும் ராணுவக் கடூங்காவலுக்கிடையே மாத்தையா துணிச்சலோடு மீட்டு, கடல் கடந்து கூட்டி வந்து சென்னையில் உள்ள கணவனிடம் ஓப்படைத்திருந்தார். மாத்தையா அதிக நாள் தங்கவில்லை. ஆகவே அவரை ஆழமாகப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அவரோடு பழகக் கிடைக்கவில்லை. மாத்தையா மென்மையாகப் பேசுவார்; கலகலப்பாகப் பழக மாட்டார்; பிரபாகரனுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டிருப்பார். அநேகமாக தமிழீழப் பிரச்சினைகள் தொடர்பானதாகவே அவை இருந்திருக்கும். பின்னைய ஆண்டுகளில் கூட ஏனைய தலைவர்களுடனும் பழகியது போல மாத்தையாவுடன் நான் என்றுமே நெருங்கிப் பழகியதில்லை. வாய்ப்புக் கிடைக்காததுதான் காரணமின்றி அரசியந் கருத்து வேறுபாடோ தனிப்பட்ட விருப்பு வெறுப்போ அல்ல. ஆனால் பாலாவைப் பார்ப்பதற்காக எமது வீட்டுக்கு வரும்போதெல்லாம் மிகவும் கண்ணியமாகவே என்னோடு பழகுவார்.
ஆரம்ப காலத்தில் இருந்தே இன்னொரு வரலாற்று நாயகன் என்றால் அவர்தான், என்றுமே கலகலப்பாக உற்சாகம் மிகுந்து காணப்படும் கிட்டு. நாம் இந்தியாவுக்கு 1981 இலே சென்ற போது அவரை விடுதலைப் புலிகளின் மதுரை முகாமில் முதற் தடவையாக சந்தித்தோம். இளமைப்பருவத்தில் குறும்புக்காரராக விளங்கிய கிட்ட, குமிழ் நாட்டு உள்ளூர்வாசிகளின் பழமைக் கொள்கைகளைக் கிண்டல் செய்து சவால் விட்டு மகிழ்வார். ஒரு தடவை வேதியர்க்கு உரிய புனிதப் பூணூல் தரித்து உணவு விடுதி ஒன்றுக்குள் நுழைந்து ஆட்டிறைச்சிக் கறியும், கோழிப் பொரியலும் தருவித்து, அங்கிருந்த சைவ உணவினர் வியப்போடும் வெறுப்போடும் பார்த்துக் கொண்டிருக்க, கிட்டு தனது அசைவ உணவை நன்கு சுவைத்து உண்டார். தலைமைப் பண்புகள் அபரிதமாக நிறைந்த ஒரு இளைஞரே கிட்டு என்பதில் சந்தேக இல்லை.
1983 ற்கும், 1987 ற்கும் இடைப்பட்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் அவர் விடுதலைப் புலிகளின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்கி பல இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதனால் ஒரு துணிகரமான கெரில்லாப் போராளியாகவும், போர்த் தந்திரோபாயத்தில் ஒரு விற்பன்னராகவும் மக்களிடையே அவர் புகழீட்டினார். கட்டிறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கலகலப்பான. அவரது சுபாவமும் ஒத்திசைந்து அவருக்கு ஒரு கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொடுத்தது எனலாம்.
ஆனால் கிட்டுவைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் போராளிகள் மீதும், மக்கள் மீதும், தமிழரின் தாயகம் மீதும் உணர்ச்சிபூர்வமாக அவர் கொண்டிருந்த அளவு கடந்த நேசம்தான் நினைவுக்கு வருகிறது. 1985 இலே எம்மைச் சந்திக்க கிட்டு சென்னைக்கு வந்தபோது பாலாவையும் என்னையும் தம்மோடு கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்ப அவர் திட்டமிட்டு வந்தார். அங்கே ம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதுடன் தாம் நேசித்த யாழ்பபாணத்தை எனக்கு சுற்றிக் காட்டவும் கருதியிருந்தார்.
இந்தியக் கடற்படையினரின் கரங்களில் சிக்கி 1993 இலே, துயர் தரும் வகையில் அவர் மரணம் அடைந்தார். அதையடுத்து அவருடைய சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிரமாண்டமான அளவில் துயராஞ்சலி ஒன்று நடைபெற்றது. ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் அந்த வைபவத்தில் திரண்டிருந்தார்கள். வெறுமே அஞ்சலி செலுத்த அல்ல. அந்த மண்ணின் மைந்தன் மீது இருந்த ஆழமான அன்பையும் மதிப்பையும் வெளிக்காட்டவே பெரும் திரளாக மக்கள் அங்கு அணிதிரண்டனர். இன்னுமொரு சரித்திர நாயகனாக திகழ்ந்தவர் பொன்னம்மான். பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மூத்த தலைவர்களில் ஒருவர். கிட்டுவோடூு 1981 இலே மதுரையில் இவர் தங்கியிருந்தார். அமைதியான போக்குடையவர்; போராளிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்தியாவிடம் இருந்து 1983 இலே ராணுவப் பயிற்சி . பெற்ற முதற்தொகுதிப் போராளிகளில் இவரும் ஒருவர். தமிழ் நாட்டில் புலிகளின் இராணுவப் பயிற்சி முகாம்களை நிறுவிச் செயற்படுத்தும் பொறுப்பு பொன்னம்மானிடமே ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தற்செயலாக நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி இவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
2.5 இறுதி முடிவுகன்
வரலாற்று நாயகனான பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிப் போராளிகளையும் நேர்நேராக சந்தித்து, அவர்களுடன் கூடி வாழக்கிடைத்த அரிய பெருமையுடன் இலண்டன் திரும்பினோம். லண்டனில் இருக்கும் போது, சென்னைக்கோ யாழ்ப்பாணத்துக்கோ திரும்பிச் செல்லும் அந்த நாளுக்காகக் காத்து இருந்தோம். இந்தியப் பயணத்தின் பின் அரசியல் ரீதியில் முழுமையாக எம்மை அர்ப்பணித்தது போலவே, உளரீதியிலும் எம்மை அர்ப்பணித்திருந்தோம். போராட்ட களத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாற்காலியில் உட்கார்ந்தபடி கற்பனாவாத அரசியல் பற்றி பேசுவதை விட்டுவிட்டு களத்துக்கு நேரே சென்று பங்கெடுக்க விரும்பினோம். இயக்கத்தோடு தொடர்ந்தும் தொடர்பைப் பேணினோம். இலண்டனில் எமது அரசியல் பணியையும் புரிந்தோம். அதே சமயம் பாலா அரை மனதோடு தனது கலாநிதி ஆய்வைத் தொடர்ந்தார். வெற்றுக் கருத்தியல் தத்துவார்த்தங்களால் யாருக்கு என்ன பயன் என்பதே அவர் கொண்டிருந்த கருத்தாக இருந்தது. வருமானம் தேவை என்பதால் இலண்டனில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் இரவு வேளையில் பணிபுரியும் மருத்துவத் தாதியாக வேலையில் சேர்ந்தேன். விரைவிலே இந்தியாவுக்கோ இலங்கைக்கோ திரும்பிச் செல்வோம் என்று எதிர்பார்ப்போடு நாட்களை ஓட்டினேன். ஏனென்றால், உடல் ர தியாகவும் உளரீதியாகவும் தாதித் தொழிலில் சலிப்பு அடைந்து இருந்தேன். மருத்துவத் தாதித் தொழில் எனது அடிப்படைத் தொழில். அதைவிட எனக்கு வேறு தொழில் தகைமைகளும் கல்வித்துறைத் தகமைகளும் இருந்தன. ஆகவே அவற்றை ஏன் பயன்படுத்தக்கூடாது அல்லது அவற்றை மேலும் ஏன் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று கேட்கத் தோன்றியது. தாதித் தொழிலில் இருந்த ஒரே வாய்ப்பு என்னவென்றால், எனது தொழில் நேரத்தை நானே தெரிவு செய்யலாம் என்பதே. அதை விட தாதித்தொழில் ஆயாசம் தருவதாகவே இருந்தது.
பார்க்கும் தொழிலால் ஏற்பட்ட சலிப்பை ஒருபுறம் ஒதுக்கிவிட்டாலும், குடும்பத்தைப் பற்றியும் நான் சிந்திக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி சிந்திக்காமலே விட்டிருந்தேன். எனது வாலிப வயதிலும் இளம் பெண்ணாக இருக்கும் போதும் குழந்தைகள் பெற வேண்டும் என்று பேசுவதும் சிந்திப்பதுமாக இருந்தேன். ஆனால் வளர வளர அதைப் பற்றிப் பேசுவதோ சிந்திப்பதோ குறைந்தது. தாய்மை எய்த வேண்டும் என்ற நினைவே அற்றுப் போயிற்று. இப்போது திருமணமாகி மூன்று ஆண்டு கழிய, முப்பத்தியொரு வயதில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று விரும்பிக் கொண்டு இருக்கும் வேளையில் தாய்மை எய்துதல் உட்பட நான் தெரிவு செய்யக்கூடிய அனைத்து வழிகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஏன் கர்ப்பமாகவில்லை என்பது சென்னையில் உள்ள போராளிகளுக்கு புதிராகவே இருந்தது. ஆனால் அதில் தவறு ஏதும் இல்லை. தமிழக் கலாச்சாரத்தில், திருமணமான உடனே கர்ப்பம் தரிப்பதும் தாய்மை எய்துவதும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வது இயல்பு. திருமணமாகி முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஒரு குழந்தையைப் பெற்றுவிட வேண்டும் என்று எந்தப் பெண்ணும் எதிர்பார்க்கப்படூவாள். பெரும்பாலான பெண்கள் முதல் ஆண்டிலேயே பிள்ளையைப் பெற்று விடூவார்கள். பேசிக் கட்டும் திருமணத்தில் மகப்பேறு, உறவைப் பலப்படுத்தி குடும்பச் சூழலை உருவாக்கிவிடும். இது ஒவ்வொருவர் மீதும் பரஸ்பரம் சில பொறுப்புகளைச் சுமத்தும். இதன் பின் கணவன் மனைவியிடையே சுமுக நிலை நிலவாவிட்டாலும், குடும்பத்திலிருந்து உறவை முறித்துக் கொள்வது சுலபமாகிவிடாது. திருமணம் புரியும்போது எனது நோக்கம் பிள்ளைகளைப் பெறுவது அல்ல. நான் விரும்பிய மனிதரை மணந்து அவரோடு வாழ்வது சமூகத்தில் ஏற்கப்படவேண்டும் என்பதற்காகவே திருமணம் புரிந்து கொண்டேன். பிள்ளைகளைப் பெற்று ஒரே குடும்ப வாழ்க்கை தொடங்க வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்யவில்லை. வேரோடிப் போன வாழ்க்கை முறைகளோடு மக்கள் எவ்வளவிற்கு ஆழ்ந்து போயிருந்தார்கள் என்பது என்னை மலைக்க வைத்தது. வெவ்வேறு விதமான வாழ்க்கைப் பாங்குகளை உலகம் ஏற்றுக் கொள்ளும் . அளவிற்கு முன்னேறியிருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் சமூக வரம்புகளுக்கு வெளியே வரும்போதுதான் சமுதாயக் கண்ணோட்டங்கள் எவ்வளவு வேரூன்றி இருக்கின்றன என்பது தெரியும். நாம் சென்னையில் இருந்தபோது பிள்ளை பெறுவது பற்றிப் போராளிகள் விசாரிக்கும்போது நான் அதைப் பொறுத்துக் கொண்டேன். திருமணம், தாய்மை ஆகியவை தொடர்பான அவர்களுடைய கலாச்சார கருத்துகளே அவர்களது கேள்விகளில் பிரதிபலித்தன. மலட்டூத் தன்மை உடைய ஒருவர், அதை மூடி மறைப்பதற்காக, பிள்ளை வேண்டாம் என்று கூறுவதாகக் கருதுவார்கள். இங்கிலாந்திலே வேலைத் தளத்திலே என்னோடு வேலை செய்பவர்கள் கூட, திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய்மையே பிரதானமானது என்று நேருக்கு நேர் வாதிடுவதைப் பல தடவை கேட்டிருக்கிறேன். தாய்மையைத் தேர்ந்தெடுக்காது விட்டமைக்காக என்னில் ஏதோ குறைபாடு இருப்பதாகவும் சில பெண்கள் கருதினார்கள். சிலர் எடுத்த எடுப்பிலேயே பகைமை பாராட்டினார்கள். ஒரு சந்தர்ப்பம் நினைவுக்கு வருகின்றது. அப்போது மகப்பேறு தொடர்பாக நான் இறுதி முடிவுக்கு வந்திருக்கவில்லை. நாலோ ஐந்து பேர் ஒன்றாக இருந்து குழந்தைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்குக் குழந்தை இல்லை என்று கூறினேன். உடனடியாக நருவர் குதித்து எழுந்தார். குழந்தை பெறுவதை விட வேலை செய்து பணம் சம்பாதிக்க முயலும் பேராசை கொண்ட ஒரு சுயநலவாதி என்று என்னைத் திட்டினார். வேறு சிலரும் அவரை ஆதரித்தார்கள். நாம் ஓட்டாண்டிகள் என்பதும், கையிலே பணம் புழங்கினால் நான் இரவு வேலைக்குச் சென்றிருக்க மாட்டேன் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இத்தகைய ஈவிரக்கமற்ற கண்டனங்கள் என்னைத் திகைக்க வைத்தன; மற்றவர்கள் என்னைப்பற்றி கொண்டிருந்த கருத்துப் பற்றிச் சிந்திக்க வைத்தன; அவர்களுடைய கண்டனம் சரிதானா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். ஆனாலும் எனது முடிவை அவர்களுடைய கண்டனங்கள் பாதிக்கவில்லை. எனது தொழில் அனுபவம் காரணமாக தாய்மை, நோக்காடு, பிரசவம் ஆகியவை தொடர்பாக நீண்ட நாட்களாக நான் உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருபத்தியொரு வயதில் மகிழ்ச்சியுடனேயே இளம் மருத்துவிச்சியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். தாய்மையோ, நோக்காடோ, பிரசவமோ என்னைப் பெரிதாக அப்போது ஈர்க்கவில்லை. இனி உடல் நலன் பராமரிப்பாளராக நான் பணியாற்றியபோதெல்லாம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே தமது முழு நேரத்தையும் பெண்கள் செலுத்திக் கொண்டிருப்பது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இதற்கு மேலாக வாழ்க்கையில் அர்த்தங்கள் உள்ளன எனக் கருதினேன். நான் இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று வயதில் மணம் புரிந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கலாம். ஆனால் நான் திருமணம் செய்தபோது எனது வாழ்வு நகரத் தொடங்கிவிட்டது. இருபத்தியேழு வயதில் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். இந்தக் காலத்தில் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அதன் பின் அரசியலுக்குள் புகுந்ததும் அது முற்றிலும் வேறு உலகமாக இருந்தது. பச்சையாகக் கூறுவதானால் நான் எனது கணவருடன் மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னைப் பற்றிய தெளிவான உணர்வே எனக்கு இருந்தது; சுதந்திரமான உணர்வே எனக்குள் மேலோங்கி நின்றது. உலகம் முழுவதும் என் முன்னே விரிந்து கிடக்க, ஒன்றிரண்டு குழந்தைகளோடு என்னையே நான் கட்டிப்போடுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தக் கால கட்டத்தில் எனது சிந்தனை பல இலட்சம் மைலுக்கு அப்பால் சென்றிருந்தது. தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு அப்பால் ஒரு இலட்சிய வாழ்க்கைக்காக மனம் ஏங்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டிலும் வறியவர்கள் மட்டிலும் எனது கரிசனை திரும்பியிருன்ந்தது; அவர்களுக்குத் தொந்டு செய்யவே உண்மையில் விரும்பினேன். தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடூபட்ட பெண்கள் பற்றி ஆழமாகவும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடூபட்ட பெண்கள் பற்றிப் பொதுவாக நிறையப் படித்திருந்தேன். கணிசமான அளவு அரசியல் மயப்படுத்தப்பட்டும் இருந்தேன். என்னைக் காட்டிலும் தாழ்நிலையில் உள்ள மக்களுக்கு அதாவது ஓடுக்கப்பட்டவர்களுக்கு, வறியவர்களுக்கு, உதவி தேவைப்பட்டவர்களுக்குப் பணி புரிவதே சிறந்தது என்று உணர்ந்தேன்.
எனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மனிதரைச் சந்தித்தது நான் பெற்ற பேறே. எமது அபிலாஷைகளை அடையக் கூடிய ஒரு சூழலிலேயே இருவரும் இருந்தோம். குடும்ப விருத்தி பற்றி அவரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பிள்ளைகள் பெறுவது பற்றிய இறுதி முடிவு எனதாகவே இருந்தது. அதற்காக நான் என்றுமே வருந்திய- தில்லை. ஒரு சுதந்திரமான பெண்ணாக நான் இருக்க வேண்டும் என்பதில் வாழ்வில் எப்போதும் குறியாக இருந்திருக்கிறேன். வளர வள, வயது முதிர நான் விடுதலை பெற்றுவருவதாகவே உணர்கிறேன். . சுதந்திரத்தை நோக்கிய பாதையில், பற்று அறுக்க வேண்டிய பாச பந்தங்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை இருக்கிறது. எனக்கு அந்தப் பாசப் பற்றறுப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது என்றே கூறுவேன். இதற்காக எனது இந்தக் கருத்துகளையோ எனது வாழ்க்கை முறையையோ மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பேன் என்பது அர்த்தமல்ல; தை எவர் மீதும் சுமத்தவும் மாட்டேன். என்னைப் பொறுத்த வரையிலே பிள்ளை பெறுவதைத் தெரிவு செய்வதும் கட்டூப்படுத்துவதும் முற்றுமுழுதாக ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாகும். தமது வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதும் பெண்ணிடமே விடபட வேண்டும். அதே சமயம் தாய்மையைத் தெரிவு செய்யும் ஒரு பெண்ணை என்றுமே குறைவாக மதிப்பிட மாட்டேன். அப்படிச் செய்தால் 99 விகிதமான பெண்களுடன் நான் கருத்து மோதல் கொள்ள வேண்டியிருக்கும். அதை நான் விரும்பவில்லை. இனி எனது தனிப்பட்ட கருத்துப்பந்றிய தப்பபிப்பிராயத்தையும் அது தோற்றுவிக்கும். பிள்ளை இல்லாமல் இருப்பதே பெண்களுக்கு நல்லது என்று நான் கூறவில்லை. அப்படிக் கூறினால் மக்களின் வாழ்வில் இனி சமுதாயத்துக்கும் குழந்தைகள் கரும் மகிழ்ச்சி, பாசம் எல்லாவற்றையும் புறக்கணிப்பதாகவும் இழப்பதாகவும் அமைந்துவிடும். படைப்பு மட்டில் நான் கொண்டிருக்கும் அளவற்ற மரியாதையையும் அது தகர்த்து விடும். பிள்ளைகளைப் பெறுவதென்பது மானிடம் தழைப்பதற்கு அடிப்படையானது; சமூக வாழ்வுக்கும் தேவையானது. ஆகவே பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுதான் ஆகவேண்டும். குடும்ப வாழ்க்கையை அவர்கள் விரும்பினால் அது அவர்களுடைய உரிமை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நான் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. பிள்ளை பெறும் அவர்களுடைய விருப்பத்திற்கு நான் மதிப்பளிப்பதுபோல, மற்றவர்கள் என்னோடு மூர்க்கமாக கருத்து வேறுபட்டாலும், எனது தெரிவை மதிக்க வேண்டும் எனறு எதிர்பார்க்கின்றேன்.
2.6 காத்திருந்த காலம்
தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் நாம் ஈடுபட்டிருந்தோம். அது தவிர, விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் சந்திக்க இந்தியாவுக்கு பயணங்களையும் மேற்கொண்டோம். இதனால், இலண்டனில் உள்ள வெவ்வேறு தமிழ்க் குழுக்களுடன் எமக்குத் தொடர்பு ஏற்பட்டது. அநேகமாக அனைத்து இளம் தலைமுறையினரும் தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தையே ஆதரிக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இவற்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), ஆகியவற்றின் இலண்டன் பிரதிநிதிகள் அங்கேயே இருந்தார்கள். ஈழப் புரட்சி இயக்கம் (EROS) இலண்டனில் இயங்கி வந்ததும் எமக்குத் தெரியும். இப்போது போலவே அன்றும் அவர்களிடையே வேறுபட்ட கோட்பாடுகள். இனி, ஆயுதப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பதில் வேறுபட்ட சிந்தனைகள். ஏதோ ஒரு காரணத்துக்காக விடுதலைப் புலிகளை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தார்கள். அரசியலைப் புறக்கணித்த ஆயுதப் போராட்டம் ஒன்றிலேயே புலிகள் முழுமையான அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள் என்பது தான் அவர்கள் முன்வைத்த முக்கிய கண்டனம். அவ்வி, இப்பொழுது காலம் ஒன்றை நிரூபித்திருக்கிறது. இப்படிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லோருமே வெறும் வாய் வீச்சாளர்களாகவே இருந்தார்கள். தேசிய விடுதலைக்கான வலுவான தேசிய இயக்கத்தை இவர்களால் கட்டியெழுப்ப முடியவில்லை. சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்வதில் பயனில்லை என்பதை அண்மையிலேயே சில போராளி அமைப்புகள் உணர்ந்திருப்பதோடு விடுதலைப் புலிகளின் இலட்சியம் மட்டில் கூடுதலான அனுதாபத்துடன் இருக்கிறார்கள்.
இந்த நாற்காலிப் புரட்சியாளர் மட்டில் எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால், தார்மீக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஏதோ ஒரு மட்டத்தில் சீரழிந்து போய் லண்டனில் உழன்று கொண்டிருக்கும் இந்த வெற்றுப் பாண்டங்களோடு ஏன்தான் வணாகப் பேசி, நேரத்தை வீணடிக்க வேண்டுமென்றே எனக்குப் பட்டது. அளவுக்கு மீறிய அகம்பாவம் உடைய கபட புரட்சியாளர்கள் மட்டும் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொள்ள எத்தனிக்கவில்லை. அர்ப்பணிப்போடும் இலட்சிய உறுதியோடும் செயற்பட்ட பல கண்ணியமான இளைஞர்களையும் யுவதிகளையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளிடம் இருப்பதை எனது அனுபவ அடிப்படையில் கண்டிருந்தேன். சென்னையிலும் சரி, இலண்டனிலும் சரி, தமிழீழத்திலும் சரி இதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன்.
இலண்டனில் இளைஞர்கள் இரண்டு பேரைக் குறிப்பிடலாம். இவர்கள் எமது வீட்டுக்கு கிரமமாக வந்தார்கள். பின்னர் இலங்கைக்குத் திரும்பிய இவர்கள் விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மிக முக்கியமான புகழ் பெற்ற பாத்திரங்களாக மாறினார்கள். ஒருவர் ரத்னா; பின்னர் முரளி என்று அழைக்கப்பட்டார். வளமான வாழ்வு தேடி வெளிநாடு வந்த இவர், பாதுகாப்பான வெளிநாட்டுச் சூழலில் பணம் சம்பாதித்து, ஊரிலே உள்ள தமது குடும்பத்தின் வறுமையைப் போக்க எண்ணியிருந்தார். ஆனால் ஊர் திரும்ப வேண்டும் என்பதே அவருடைய தாகமாக இருந்தது. இலண்டனில் மன ஈடுபாட்டோடு காலூன்ற அவரால் முடியவில்லை. எனவேதான் அவர் ஊர் திரும்பினார். 1983 இலே தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் சிறீலங்காவில் இடம்பெற்ற சில மாதங்களில் எம்மைத் தொடர்ந்து ரத்னா சென்னைக்கு வந்தார். அங்கேயே 1983 ஆகஸ்டில் இருந்து எம்முடன் தங்கினார். யாழ்ப்பாணம் திரும்பியவர் அங்கு விடுதலைப் புலிகள் மாணவர் பேரணியை முதலில் நிறுவியவராவார். பலரது நட்பையும் பரந்துபட்ட மக்களின் அன்பையும் வென்றெடுத்தவர்களில் இவரும் ஓருவர். யாழ்ப்பாணத்தில் மாணவர்களை போராட்டத்தின் பால் கவர்ந்து இழுப்பதிலும் அவர் வெற்றி பெற்றார். இந்திய இராணுவத்திற்கு எதிரான விடுதலைப் புலிகளின் போரில் முதலில் உயிரிழந்தவர்களில் ரத்னாவும் ஒருவர். யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தை கோப்பாயிலே தடுத்து நிறுத்த முற்பட்ட விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னணி வரிசையில் நின்று போராடிய அவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக இலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இன்னொரு போராளி பகன் ஆவார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் வெடித்து மிகப் பெரிய வன்முறையாகக் கிளர்ந்த வேளையில் நாம் சென்னைக்கு பயணமானபோது பகீனும் எம்முடன் கூடவந்தார். இனக் கலவரம் பக்னை நிலைகுலையச் செய்திருந்தது. எமது இலண்டன் மாடி வீட்டில், ரத்னாவுக்கு அருகே தரையில் அமர்ந்து அவர் கதறி அழுதது, இப்பொழுதும் என் கண் முன் நிழலாடுகிறது. அடுத்த சில நாட்களில் நாம் சென்னைக்கு திரும்ப எண்ணியபோது, தம்மையும் கூட்டிச் செல்லுமாறு அவர் எம்மிடம் கெஞ்சினார். முடியாது என்ற சொல்லை அவர் ஏற்பதற்குத் தயாராக இல்லை. அவரைத் தேற்றவும் முடியவில்லை; தொடர்ந்து கெஞ்சிக் கொண்டே இருந்தார். இறுதியில் நாமும் இணங்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவரைக் கூட்டிச் செல்வதில் எமக்கு ஒரு சிக்கல் இருந்தது. இங்கிலாந்தில் தரித்திருக்க அனுமதிக்கப்பட்ட நாட்களை விட, கூடுதலான நாட்கள் தரித்திருந்து விட்டார். அது தவிர அவரது கடவுச் சீட்டும் காலாவதியாகியிருந்தது. இதிலிருந்து தப்புவதற்காக இவருடைய நண்பர்கள் இவருடைய கடவுச் சீட்டில் முடிவடையும் திகதியை மாற்றி எழுதியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கவனமெடுத்து மாற்றம் செய்யவில்லை என்பது கடவுச் சீட்டைப் பார்த்தவுடன் புரிந்தது. பயணத் தொடக்கத்தில் ஹீத்ரோ விமான நிலைய குடிவரவுக் கடவையைக் கடந்து பாலாவும் நானும் முதலில் சென்று, பகீனுக்காக உள்ளே காத்திருந்தோம். முகத்திலே கனிவு இல்லாத குடிவரவு அதிகாரி ஒருவரிடம் பகன் தனது கடவுச் சீட்டைக் கையளிப்பதைப் பதற்றத்தோடு உள்ளேயிருந்து நாம் நோட்டம் விட்டோம். அவர் அதைப் பக்கம் பக்கமாகத் துருவித் துருவிப் பார்த்தார்; அடிக்கடி பகீனின் முகத்தையும் பார்த்தார். தமது பயணம் தடைபடக கூடாது என்பதற்காக, பகீன் தமது முகத்திலே சலனம் எதுவுமே இல்லாமல் அப்பாவி போல நின்றார். கூர்மையான கண்ணுடைய எந்தக் குடிவரவு அதிகாரிக்கும் கடவுச் சீட்டில் புரியப்பட்டிருக்கும் மாற்றம் தெரிந்திருக்கும். ஆனால் நாட்டை விட்டு வெளியேற விடாமல் பகீனைப் பிடித்து உள்ளே அடைத்து வைப்பது தமது நாட்டுக்கு கூடுதலான செலவாகும் என்று எண்ணினாரோ என்னவோ அவர் பகனைப் போக அனுமதித்தார். நிம்மதியாக மூச்சுவிட்டோம். மகிழ்ச்சியாக ஆனால் சிறிது அசட்டுத்தனத்தோடு பகீனும் சென்னைக்கு விமானம் ஏறினார். சென்னையை அடைந்த மறுகணமே உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் நலத்தைப் பேணியதோடு தம்மை யாழ்ப்பாணம் அனுப்புமாறு ஒவ்வொருவரையும் நச்சரிக்கத் தொடங்கினார். இறுதியில் தமது கிராமமான வல்வெட்டித்துறையைச் சென்றடைந்தார். ஆனால், விரைவிலேயே உலகை விட்டே அவர் செல்ல நேர்ந்தது. வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற சுற்றிவளைப்பிலே கைதான இளைஞர்களில் பகீனும் ஒருவர். தப்பி ஓட முடியாத நிலை ஏற்பட்டதும் பகன் தமது சயனைட் குப்பியைக் கடித்தார். விடுதலைப் புலிப் போராளிகளிடையே தற்கொலை செய்து வீரச்சாவைத் தழுவிய முதல் வீரர் பகீனேதான்.
1983 இற்கு முன், நாம் காத்திருந்த காலத்தில் நிறையப் படிக்கக் கிடைத்தது. புத்தகக் கடைகளில் நூல்களைத் தேடி வாங்குவதில் நேரத்தைப் போக்காட்டூவது எமது ஆகப் பெரிய மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது. என்னை அறியாமலேயே பெண்கள் எழுதிய நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். அல்லது பெண் எழுத்தாளர்களின் நூல்களையே தேடிக் கொண்டிருந்தேன். பெண எழுத்தாளரான டொறிஸ் லெசிங் அவர்களின் படைப்புகள் என்னைக் கவர்ந்தன; அவரது ஆளுமையும் என்னைக் கவர்ந்தது. தவறுகளை இனம் காண்பதில் அவருக்கு இருந்த ஆற்றலும், தமது வாழ்க்கையை மாற்றுவதற்கு வேண்டிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சி பூர்வமாகத் தாம் எவ்வளவு பாதிக்கப்படுவார் என்றோ மந்றவர்கள் எத்தகைய வேதனை அடைவார்கள் என்றோ மனத்தளம்பல் இல்லாமல் அவர் முடிவுகளுக்கு வரும் உறுதி எனக்குப் பிடித்திருந்தது. இன்னொருவர் எலிசபெத் குரோல். சீனப் பெண்களைப் பற்றி இவர் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக “சீனாவில் பெண்ணியமும் சோஷலிசமும்” என்ற அவருடைய நூல் என்னைக் கவர்ந்தது. சீனாவில் பெண்கள் இயக்கம் பற்றிய சுவையான விபரம் அதில் உள்ளது. பெண்ணியப் போராட்டத்துக்கும் சமுதாயப் போராட்டத்துக்கும் இடையிலான நலன்களின் முரண்பாடுகள் பற்றி அவர் அதில் விபரிக்கிறார். அதே போல சோஷலிச சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அவர் க்றுகிறார். அடுத்து அலனோ ஹெயற்லிங்கர் எழுதிய “பெண்களும் அரச சோஷலிசமும்; சோவியத் யூனியனிலும் செக்கோஸ்லாவாக்கியாவிலும் சமத்துவம் இன்மை” என்ற எழுத்தாக்கத்தின் தலைப்பே கருவை உணர்த்துவது. அதில் நிறைய விபரங்கள் உண்டு. சிந்தனையைக் கிளறுவதாகவும் அது அமைந்திருக்கிறது. சூசன் பிறவுண் மில்லர் என்பவர் பாலியல் வன்முறைக்கு எதிராக “எமது விருப்பத்திற்கு மாநாக” என்ற மிகச் சிறந்த நூலை எழுதியிருக்கிறார். ஆன் ஓக்லியின் பெண்கள் தொடர்பான சமூக : ஆய்வுகளும் எப்போதுமே கருத்துப் பொதிந்தவை. “சாண்டினோவின் புதல்விகள்”, “மூன்றாம் உலகு இரண்டாம் பால்?” ஆகியவையும் இன்னும் பல நூல்களும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் வெற்றிகளையும் அவர்கள் முகம் கொடுத்த இடர்களையும் விளக்குவன; அவற்றோடு எம்மையும் இணைத்துக் கொள்ளத் தூண்டுவன; உற்சாகம் தருவன. இவை எல்லாம் எப்போதோ நடந்தது போன்ற பிரமையைத் தருவன. இவை எல்லாம் நேற்றைய நூல்கள். ஆனாலும் அவை போராட்டத்தில் ஒரு வேறுபட்ட மெய்யுண்மையை விளக்குகின்றன.
ஒரு ஆய்வு முயற்சிக்கான அறிவைத் தரவல்ல ஒரு ந்ண்ட பட்டியல் நூல்களை வாசித்திருந்தேன். எழுதத் தொடங்கலாமா என்ற சிந்தனை கூட வந்து போயிற்று. இளவயதில் இருந்ததை விட இப்போது தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது. போராட்டத்தில் ஈடூபடவிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு உதவியாக, வேறு உலக விடுதலைப் போராட்டங்களில் ஈடூபட்ட பெண்களின் அனுபவங்களை சிறிய நூல் வடிவில் கொண்டுவர முற்பட்டேன். உலகம் பூராவும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் எவ்வளவோ பொதுத் தன்மைகள் இருக்கின்றன. ஆகவே போராட்டங்களில் ஈடுபடும் ஏனைய பெண்களின் அனுபவங்களைத் தமிழ்ப் பெண்களுக்கு பகிர்ந்து கொள்ள என்றும், அவர்களுடன் இதய பூர்வமாக ஒன்றித்து நிற்க வேண்டும் என்றும் விரும்பினேன். நான் எனது நூலை எழுதத் தொடங்குமுன்னரே தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் தோன்றியதால், 1983 ஓகஸ்டில் நாம் சென்னைக்குத் திரும்பினோம். எனது ஆய்வுத் தரவுகள் அனைத்தையும் இலண்டனில் விட்டூவிட்டு ஒரு சில குறிப்புகளுடனேயே புறப்பட்டேன். இறுதியில் இவையே “பெண்களும் புரட்சியும்?” என்ற சிறுநூலாக வடிவெடுத்தது.
2.7 திருப்புமுனை: கறுப்பு யூலை
தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் என்ற வடிவில், 1983 யூலையில் இலங்கையிலே வெடித்த வன்செயல் சம்பவங்கள், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்கள் 1958 ல்: இருந்தே காலத்துக்குக் காலம் தலைதூக்கியபோதும், 1983 ல் இடம்பெற்ற இனப் பூகம்பமே இலங்கை வரலாற்றில் மிகக் கறை படிந்ததாகும். குரூரமும், காடைத்தனமும், காட்டுமிராண்டித்தனமும் ஒன்றையொன்று விஞ்சி நின்றன. தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் நாடு முழுவதையும் உலுக்கியது. சிங்கள மக்களிடம் உறைந்து கிடந்த வரலாற்றுக் குரோதமானது வன்செயல் எரிமலையாய் வெடித்துச் சிதறி முன்னெப்போதும் காணாத அளவுக்கு மரணத்தையும் கின்பம் ஏற்படுத்தியது. இரத்த வெறி கொண்டு அட்டகாசம் புரிந்த சிங்களக் காடையர்களால் அனாதரவான பல்லாயிரம் தமிழ் மக்கள் கண்ட துண்டமாக வெட்டிச் சரிக்கப்பட்டார்கள். சிங்களவரின் மனிதத்துவம் மறைந்த நிலையும் இனக் கலவரத்தில் காணப்பட்ட இனக் கருவறுப்பு நோக்கமும், இனக் காழ்ப்புடனான வன்செயல் பிரீடலும் நாகரீக உலகின் மனச் சாட்சியை ஒரு கணம் உலுக்கியது. இந்த இனவெறி தெற்காசியாவின் நோயாளியாக, சிங்கள இனம் மீது கறை பூசியது.
வடபுல நகரமான யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கெரில்லாத் தாக்குதலுக்குச் சிங்கள மக்களின் பதிலடியாகவே இந்த இனக் கலவரம் பொங்கி வழிந்ததாகக் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் கெரில்லா அதிரடிப் பிரிவு ஒன்று, பிரபாகரன் அவர்களின் நேரடித் தலைமையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே, இராணுவ வண்டித் தொடர்மீது பதுங்கித் தாக்குதல் ஒன்றை நடத்தியது. இது 1983 யூலையில் நடந்தது. பதின்மூன்று இராணுவத்தினர் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இது ஒரு வெற்றிகரமான அதிரடித் தாக்குதலாகும். ஆனால் சிங்கள அரசைப் பொறுத்த வரையிலே இது மானத்தை வாங்கும் படுதோல்வியாகும். சிறீலங்கா இராணுவத்தில் இத்தனை படையினர் கொல்லப்பட்டது இதுவே முதற்தடவை. ஜெயவர்த்தனா அரசு குமுறியது. சிங்கள ஊடகங்களும் இந்தச் சம்பவத்தை பூதாகாரப்படூுத்தின; உணர்ச்சியைக் கிளறும் அறிக்கைகளால் த மூட்டின. சிங்கள மக்களிடையே இன வெறி கனன்றது. கொல்லப்பட்ட அரச படையினர்க்கு, சம்பவம் நடந்த மறுநாள் தேசிய கெளரவத்துடன் இறுதிச் சடங்கு நடத்தப் போவதாக அரசு அறிவி த்தது. தேசிய துக்க தினமாக அந்த நாள் வடிவமைக்கப்பட்டது. ஆனால் சிங்கள அரசியல் வாதிகள், பெளத்த தேரர்கள், காவற்துறையினர், அரச படையினர் ஆகியோரிடையே வேறொரு இரகசியத் திட்டம் இருந்தது. றந்து போன அரச படையினர்க்காக பழிக்குப் பழி வாங்கும் நாளாகவே அந்த நாளை அவர்கள் இலக்குக் குறித்தார்கள்.
“வீழ்ந்து பட்ட வீரர்க்கான” அரச இறுதிச் சடங்கானது தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரக் கலவரமாக வடிவெடுத்தது. இக்கலவரத்துக்கு அரசின் ஆசீர்வாதமும் இருந்தது. அரசியல்வாதிகளும் பெளத்த தேரர்களும் வழிநடத்த, காவற்துறையினரும், ஆயுதப் படையினரும் உதவியாக முண்டுகொடுக்க தறிகெட்ட சிங்களக் காடையர், தமிழ் மக்களின் வீடுகள், கடைகள், கட்டடங்கள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றினுள் அடாத்தாகப் புகுந்து சொத்துக்களை சூறையாடினர். அத்தோடு பாதுகாப்பற்ற நிலையிலிருந்த தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தனர். தறிகெட்ட காடையர்களை வழிநடத்தியவர்கள், தமிழ் மக்களின் வதிவிடங்கள் எவை, சொத்துக்கள் எவை என்ற அச்சொட்டான விபரம் வைத்திருந்தார்கள். தமிழ் மக்களின் வீடுகளை அடையாளம் காட்ட, பெரும்பாலானவர்களிடம் வாக்காளர் பட்டியல்கள் இருந்தன. கொழும்பிலும், தெற்கிலும் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்களே இந்தத் தமிழ் மக்கள். ஆகவே, அடையாளம் காணப்பவதிலிருந்து அவர்களால் தப்ப முடியவில்லை. வாய்விட்டுக் கூறமுடியாத கோரங்கள் நிகழ்ந்தன. தவறு இழைக்காத தமிழ் மக்கள் அடித்து நொருக்கப்பட்டார்கள்; வெட்டிச் சரிக்கப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானோர் உயிருடன் எரிமூட்டப்பட்டார்கள். தாக்கப்படும் தமிழ் மக்கள் வேதனையில் ஓலமிட, தாக்கும் சிங்களக் காடையர்கள் எக்காளமிட்டுக் கொக்கரித்தார்கள். கொழும்புச் சம்பவம் ஒன்றிலே வாயடைத்து மலைத்து நின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் கண்முன்னே, தமிழ் மக்கள் பயணம் புரிந்து கொண்டிருந்த வாகனத்தில் அவர்கள் உயிரோடு தீயிடப்பட, சிங்களக் காடையர் உன்மத்த உருவேறி நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அரச படையினர் கொல்லப்பட்டமைக்குப் பழிவாங்கும் முகமாக காடையர் கும்பல்களுக்கு வசதியளித்த அரசு, நாற்பத்தியெட்டு மணிநேரத்திற்கு வேண்டுமென்றே மெளனம் சாதித்தது. இந்தப் பேரழிவுக்கு வித்திட்ட அந்தப் பிரபல அரசி யல்வாதிகள், பெருந்தொகைத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை மட்டுமல்லாது தமிழ் மக்களின் சொத்துக்கள் பரவலாக அழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொழும்பிலே வேரோடியிருந்த உயர்நிலைத் தமிழ் வர்த்தகர்களின் பொருளாதாரத் களம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. அரசுத் தலைவர் - ஜெயவர்த்தனா இறுதியாக ஊரடங்கு பிரகடனம் செய்தபோது, தமிழ் மக்களின் உயிருக்கும், சொத்துக்கும் அளப்பரிய சேதம் ஏற்கனவே விளைக்கப்பட்டிருந்தது. வெலிக்கடைச் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் கூட மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்களில் முப்பத்தைந்து பேர் ஜுலை 25ம் திகதி பலியானார்கள். சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இந்த மிருகத்தனமான கூட்டுக் கொலை நிகழ்த்தப்பட்டது.
தமிழ் மக்களின் ஆன்மா மீது 1983 கறுப்பு ஜூலை ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தியது. இரண்டு இனங்களும் இனி ஒன்றுகூடி வாழ்வது முடியவே முடியாது என்று தமிழ் மக்கள் உணர்ந்தார்கள். இந்நிகழ்வானது சுயநிர்ணய உரிமை, அரசியல் விடுதலை ஆகியவை தொடர்பான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு புதிய உத்வேகம் அளித்தது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக மிதவாத தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், பாராளுமன்ற அரசியலைக் கைவிட்டு தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். யாப்புக்கு அமைந்த அரசியலுக்கான கதவுகள் தமிழர்க்கு அடைக்கப்பட்டன. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமே அவர்களுக்குக் கிடைத்த ஒரு மாற்று வழியாகியது. 1983ல் இடம்பெற்ற அருவருப்பான நிகழ்வுகள், தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. அவை ஜனநாயக நாடாளுமன்ற அரசியல் முறையில் இருந்து புரட்சிகர ஆயுதப் போராட்டமாக முகிழ்த்தது. கொழும்பிலும் தென்னிலங்கையிலும் டம்பெற்ற கலவரங்கள் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் செய்திகள் லண்டனை எட்டியபோது, தமிழ்ச் சமுதாயம் முழுவதுமே ஆத்திரமும் ம்பத் அடைந்தது. என்ன நடந்தது என்பதை அறிய ஒவ்வொருவரும் துடித்தனர். பதைபதைத்த மக்கள் இலங்கையில் தங்கள் உறவினருடன் தொடர்பு கொள்ளத் துடித்தனர். பெரும்பாலான மக்கள் வெகுண்டெழுந்து சீற்றம் அடைந்தனர். தங்கள் உரிமைகளுக்காக் குரல்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை மண்டியிட வைத்து அவர்களுக்குப் பாடம் புகட்டுவதையே நோக்கமாகக் கொண்டு முடுக்கிவிடப்பட்ட ஒரு பயங்கரமான இனக்கலவரம், எதிர்வினைலையே ஏற்படுத்தியது. இனவேரறுப்பு முயற்சியானது, தமிழ் மக்களின் சுயகெளரவத்தையும் இனப் பெருமையையும் தூண்டியது. சிங்கள அரசி யல்வாதிகள், தமிழ் மக்களின் எந்த ஒற்றுமை உணர்வைச் சிதறடித்து நசுக்க முனைந்தார்களோ, அதே ஒற்றுமை உணர்வே, தமிழ் மக்களின் பொது எதிரிக்கு எதிரான ஒரு தேசிய ஒருமைப்பாட்டு எழுச்சியாக உருவெடுத்தது. திட்டமிட்ட இனப்படுகொலை, இரண்டு இனங்களிடையேயும் இணைய முடியாத அழமான பிளவை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட தமிழ் மண்ணிலே தங்கள் அரசியல் சுதந்திரத்தை நிறுவ வேண்டும் என்ற தமிழ் மக்களின் போராட்ட உணர்வை விரிவடையச் செய்தது.
உணர்ச்சி பீறிட்டு எழுந்த அந்த இனக்கலவர நாட்களின்போது, நண்பர்களும், கூட்டாளிகளும் எமது மாடிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஜரோப்பாவில் உள்ள _ விடதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று கூடி ஆராய லண்டனுக்கு விரைந்தார்கள். ஆயுதப் போராட்டத்துக்காக நிதி திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விடுதலைப் புலி ஆதரவாளர்களும் புதிதாக ஈழக் கொள்கையை ஏற்கத் தொடங்கியவர்களும் தாராளமாகக் ப்ப புரிந்தார்கள். சில ஆண்டுகளாக மதில்மேல் ஊசலாடிய புலத்துத் தமிழர்கள் பலர், இப்போது ஏதோ ஒரு பக்கத்தை அறுதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழமுடியாது என்று பலர் தீர்க்கமாக முடிவுக்கு வர, இனக் கலவரம் வடிகால் அமைத்தது. சென்னைக்கு உடன் திரும்புமாறு பிரபா- கரன் அவர்களிடமிருந்து எமக்குச் செய்தி வந்தது. லண்டனுக்கு நாம் இனிமேல் திரும்பி வரமாட்டோம் என்று கருதிக்கொண்டு அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்தோம். எமது கனிப்பட்ட A 2 தீர்த்தோம். பெட்டியை அடுக்கினோம். சென்னைக்குப் புறப்பட்டோம். ஏறத்தாள பன்னிரெண்டு மணிப் பயணத்தின் பின் சென்னையை சென்றடைந்தோம். இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஆர்ப்பரித்த இலட்சோபலட்சம் தமிழ் மக்களை அங்கே காணக்கூடியதாக இருந்தது. எமது கடந்த கால வாழ்க்கைக்கு முற்றிலும் புறம்பான ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் நாம் காலடி வைத்தோம்.