5 இந்திய இராணுவத்தின் வேட்டை
இந்திய-புலிகள் யுத்தம் தொடங்கிய காலத்தில், இன்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாக பணியாற்றும் கேணல் சூசை அன்று வடமராட்சிப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அடிக்கடி எமது வீட்டுக்கு வந்து செல்வார். வடமராட்சியில் எமது பாதுகாப்பிற்கு அவரே பொறுப்பாகவும் இருந்தார். யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் நிகழும் இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் வடமராட்சி நோக்கி இந்தியப் படைகள் நகர்வது பற்றியும் சூசையே பாலாவுக்கு கிரமமாக அறிவித்து வந்தார். வடமராட்சிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் படைபலம் எத்தகையது, இந்திய இராணுவத்தை எதிர்த்து நிற்க எவ்வகையான தற்காப்புப் போர் வடிவத்தை வகுக்க வேண்டும் என்பவை தொடர்பாக இரண்டு பேரும் கலந்துரையாடுவார்கள். விடுதலைப் புலிகளிடம் ஆளணிப் பற்றாக்குறையும், ஆயுதப் பற்றாக்குறையும் இருப்பதால், முன்னேறிவரும் இந்தியப் படைகளுக்கு எதிராக, பகிரங்கமான மரபுவழிப் போரை நடத்துவது அர்த்தமற்றது என்றும், இதனால் புலிகளுக்கு மோசமான உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என்றும் பாலா வாதாடினார். வலிகாமம் மீதும் சாவகச்சேரி மீதும் இந்தியப் படைகள் நிகழ்த்திய மிருகத்தனமான தாக்குதல்களைப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மரபுவழித் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் பலாலியிலும் வல்வெட்டித்துறையிலும் உள்ள தமது படைத்தளங்களில் இருந்து இந்தியர்கள் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை வடமராட்சி மீது நடத்துவார்கள் என நாம் கணிப்பிட்டோம்.. இதன் விளைவாகப் பெருந்தொகையான பொதுமக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதும் தெளிவாகியது. இது நேர்ந்தால், இறுதியில் வடமராட்சியிலிருந்து புலிகள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்படூவர். நின்று நிலைக்கக்கூடிய மாற்று வழிப் போர்த்திட்டத்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு அனாவசியமான பேரழிவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதே சாலச் சிறந்தது எனக் கருதினோம். சிறிது காலத்திற்கு முன்னராகவே சிநீலங்கா இராணுவம் வடமராட்சியின் மீது “ஓஒப்பரேஷன் லிபரேஷன்” என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு பெருமளவில் உயிரழிவையும் பொருளிழப்பையும் விளைவித்திருந்தது.
சூட்டோடு சூடாக இன்னொரு பாரிய இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் மக்களால் அதைத் தாங்க முடியாது என்றும் கருதினோம். பாலாவின் யதார்த்தக் கருத்துக்களைச் செவிமடுத்த சூசை ஆழமாகச் சிந்தித்தார். அவற்றை ஏற்றுக் கொண்டார். இதனால் பீரங்கி எறிகணைத் தாக்குதலில் இருந்து அந்த பிரதேசம் காப்பாற்றப்பட்டது. சூசையும் அவருடைய போராளிகளும் தலைமறைவான கெரில்லாப் படையாக இயங்கி வடமராட்சியில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இருந்த காலம் முழுவதும், அதற்குத் தலைவலியாக இருந்தார்கள்.
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத் தீபகற்பத்துக்கு வந்ததில் இருந்து, அதன் ஒரு பிரிவு, வல்வெட்டித்துறை எல்லையில் உள்ள சிறீலங்கா இராணுவத் தளத்தில் தங்கியிருந்தது. போர் தொடங்கிய பின், அங்கிருந்த இந்திய ஜவான்கள் சிலர் நோட்டம் விடும் காவல் உலா புரிந்தார்களேயன்றி, சிநீலங்கா இராணுவத் தளத்திலிருந்து வெளியே நகர்ந்து வல்வெட்டித்துறையைக் கைப்பற்றும் பெரும் தாக்குதல் முயந்சி எதிலும் ஈடுபடவில்லை. நோட்டமிடும் காவல் உலா ஜவான்கள் மீது கெரில்லாத் தாக்குதல் நடந்த போதெல்லாம் அவர்கள் உடனே சுங்கள் தளத்திற்கு பின்வாங்கி விடுவார்கள். இறுதியாக வடமராட்சி மீதான இந்திய இராணுவ நகர்வு நிகழ்ந்த போது, அந்தப் படைகள் வேறொரு புறத்திலிருந்து, அதாவது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடூஞ்சாலை வழியாகவே நகரத் தொடங்கியது.
இந்திய இராணுவம் எந்த நேரமும் வடமராட்சிக்கு உள்ளே நுழையலாம் என்ற நிலை ஏற்பட்டதும், அங்கிருந்து பாதுகாப்பான ஒரு பகுதிக்குச் செல்வதே சாலச் சிறந்தது என்று கருதினோம். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட இந்த நிலையில், எம்மோடு கொண்டு செல்ல, என்ன என்ன பொருட்களை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி என் முன் எழுந்தது. பெருஞ்சுமையோடு அலைவது, சூழ்நிலைக்கு ஒவ்வாது. அதற்கேற்ற வகையில் எனது தெரிவுகளை வரிசைப்படுத்துவதே சிறந்தது என்று உணர்ந்தேன். தேவையில்லாத எவற்றைக் கழிக்க வேண்டும் என்று கவலை கொள்வதிலும் பார்க்க, அத்தியாவசியமாக எதை எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே நலம் என்று கண்டேன். உடைமைகளால் நிரம்பி வழியும் “கையஸ்” வான் வண்டியை . ஒருகணம் பார்வையால் துளாவினேன். முதலில் கைவிட வேண்டியவை புத்தகப் பெட்டிகளே என்பதை உணர்ந்தேன். எம்மிடம் பெருந்தொகை நூல்கள்; பலவகை நூல்கள்; இலண்டனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவை; யாழ்ப்பாணத்துக்கு எம்மோடு அவற்றை எடுத்து வந்திருந்தோம். பல ஆண்டுகளாக சேகரித்த அறிவுப் பெட்டகம் இது. ஆனால் விருப்பு வெறுப்புக்கு இதுவல்ல நேரம். மற்றவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுப்பதும் எளிது. அவற்றை அவர்கள் பாதுகாப்பதும் சுலபம். ஆனால் படித்த குடும்பங்களுக்கே அவந்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. படிக்காத குடும்பங்களிடம் ஆங்கில நூல்களைப் “பகிர்ந்தால், தேடுதல் நடத்தும் இந்திய இராணுவத்தினர் சந்தேகம் கொள்ளவும் தகவல் திரட்டவும் எளிதாகி விடும். இனி, சமையல் பாத்திரங்களை ஓப்படைப்பதில் சிரமம் இருக்கவில்லை. உடைகள் என்று வரும்போதும், மிகத். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டோம். எனக்கு மிகவும் பிடித்த சில ஆடைகளையும் எடுத்துக் கொண்டேன். எமது உடைகளை இரண்டு பயணப் பைகளில் அடைத்தேன். ஒன்று பாலாவுக்கு, மற்றது எனக்கு. நாம் போயடைந்த இடத்தில் மின்சாரம் இல்லை. ஆகவே ரோச் லைற்களையும், (மின்விளக்குகள்) பற்றறிகளையும் கொண்டு செல்வது அவசியமாகப் பட்டது. எம்மிடமிருந்த மண்ணெண்ணெய் விளக்கையும் கொண்டு செல்லத் தீர்மானித்தேன். சில மெழுகுவர்த்திகளையும் தீப்பெட்டிக ளையும் கூட, தேவைப் படக்கூடும் என்ற நினைப்பில் பையில் பொதித்தேன். பின்னர் அவை பெரும் உதவி புரிந்தன. மிஞ்சிக் கிடந்தவந்றை, பெட்டிகளில் அடைத்து, வெவ்வேறு வீடுகளில் ப்படைத்தேன். இந்தச் சுத்திகரிப்பு முயற்சியின் பயனாக வாழ்க்கையில் நான் சேர்த்து வைத்திருந்த ஜந்தில் நான்கு பாகப் பொருட்கள் என்னைவிட்டுப் போயின. ஒன்றே ஒன்றை விட்டுப் பிரிவது கடினமாக இருந்தது. எனது நிழந்பட அல்பம். எனது பிள்ளைப்பருவ பள்ளிப்படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், இவை அடங்கிய நினைவு மீட்டும் படங்கள் - பிளாஸ்டிக் பக்கங்களில் ஓட்டப்பட்டிருந்தன. போராளி ஒருவர் அந்த அல்பத்தை எடுத்துக் கொண்டுபோய் இருட்டிய பின் நிலத்தைத் தோண்டி, அதில் புதைத்தார். தேடப்படும் அதன் சொந்தக்காரரைப் பற்றிய தடயம் எல்லாமே அங்கு புதைக்கப்பட்டன. அவை தப்பிப் பிழைக்கும் என்று எனக்கு ஒரு நப்பாசை! அது நிராசையாகவே முடிந்தது. இரண்டு ஆண்டுகள் கழிந்து, நான் வடமராட்சிக்குத் திரும்பி புதைத்த இடத்தில் இருந்து நிழற்பட அல்பத்தைத் தோண்டி எடுத்த போது படங்கள் உருக்குலைந்து பழுதாகி இருந்தன. பிளாஸ்ரிக் உறையூடாக பூஞ்சணம் பிடித்து, முகங்கள் அழிபட்டிருந்தன. எனது கடந்த காலத்தைப் பறிகொடுத்த இழப்பு நிலை உணர்வே தலைதூக்கியது.
பிரதான வீதிகளில் இருந்தும் கரையோரப் பகுதிகளில் இருந்தும் விலகி வடமராட்சியின் நடுப்பகுதிக்குள் நகர்வதே எமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதினோம். வடமராட்சியில் உள்ள ஒடுக்கமான ஒழுங்கைகள் பாய்ப்பின்னல் போல, தனித்துவம் வாய்ந்தவை. எங்கே நாம் தங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அந்த ஒழுங்கை அமைப்பு வாய்ப்பான ஒன்றாகக் கருதப்பட்டது. இது பாலாவுக்கு நியாயமாகப்பட்டது; பிடித்தமாகவும் இருந்தது. அவரும் அவருடைய குடும்பமும் நண்பர்களும் வடமராட்சியின் இந்தப் பகுதியிலே வாழ்ந்தனர். சிறுவனாக இருக்கும் போது, இந்தப் பகுதியிலேயே அவர் மகிழ்ச்சியாக விளையாடித் திரிந்திருக்கிறார். இந்தப் பகுதியின் மூலை முடுக்குகள் அவருக்கு நன்கு தெரிந்தும் இருந்தது. இந்தப் பகுதியில் வாழ்வது என்பது, பாலாவுக்கு இளமைப் பருவத்துக்கு மீளச் செல்வது போல இருந்தது.
வல்வெட்டித்துறையில் இருந்து நாம் வெளியேறியதும் இந்தியப் படைகள் அங்கே காவல் சாவடிகள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை நிறுவி, தங்கள் நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டன. அதன் பின்னர், தங்கள் ஆக்கிரமிப்பை அவர்கள் படிப்படியாக விரிவாக்கி நகரத்தையும் பிரதான வீதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள். கொண்டு வந்தார்கள்.
5.1 கரவெட்டிக்குன் நகர்ந்தோம்
எமது வாழ்வின் இக்கட்டான இந்தக் கட்டத்திலே சுக்ளா எம்மோடு இணைந்தார். விடுதலைப் புலிகளிடையே அனுபவம் மிக்க. மூத்த உறுப்பினர் இவர். வடமராட்சியின் இதயப் பகுதியான கரவெட்டிப். பிரிவுக்கு இவர் பொறுப்பாக இருந்தார். போர் அனுபவமும் இவருக்கு நிறைய உண்டு. அந்தப் பகுதியைப் பற்றியும் அங்கு வாழும் மக்கள் பற்றியும் விலாவாரியாக அறிந்திருந்தார். எத்தகைய வசதிகளை மக்கு ஏற்படூுத்தவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். வல்வெட்டித். துறையில் இருந்து நான்கு மைல் தூரத்தில் எமக்கு ஒரு வடு பார்த்த. சுக்ளா, எமது பாதுகாப்புப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். கரவெட்டி, கலட்டியில் ஒரு நவீன வசதிகள் உள்ள வீடொன்றை எமக்காக அமர்த்தினார். இந்தியப் படைகளின் வரவால் பாதுகாப்பான: இடம் தேட வேண்டியிருந்த பொட்டு அம்மானுக்கும் ஏனைய காய மடைந்த போராளிகளுக்கும் இந்த வீடு போதுமாக இருந்தது. இங்கிருந்து, மந்திகை மருத்துவமனைக்கு மருந்து கட்டப் போவது பொட்டு அம்மானுக்கு வசதியாக இருந்தது, வீட்டிலே தங்குவதற்கு வரும் ஆட்களின் தொகை கூடிக் குறையும். ஆனால் எம் எல்லோருக்கும் பொதுவாக ஒன்று இருந்தது. அதுதான் பொதுவான ஆபத்து. பாதுகாப்பும் தங்குமிட வசதியும் எல்லோருக்கும் பொதுவாகத் தேவையாகவும் இருந்தது.
வடமராட்சியில் மக்கள் வாழும் பகுதிக்குள் இந்திய இராணுவம் படிப்படியாகத் திட்டமிட்டு ஊடூருவியது. ஆனால் அந்தப் புவியியல் அமைப்பு அவர்களுக்குப் புதிராகவே இருந்தது. இனி, கிராமங்களில் காணப்பட்ட ஓஒழுங்கைகளின் சிக்கலான பின்னல் அமைப்பு புதிதாக அங்கு செல்பவர்களுக்குத் திகைப்பூட்டிக் குழப்பம் ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் புலிகளுக்கு இதுவே வாய்ப்பாக இருந்தது. இந்தியப் படைகளைத் குவிர்ப்பதற்கு கிராம வாசிகளுக்கும் இந்த இடியப்பச்சிக்கல் போன்ற ஓழுங்கை அமைப்பு உதவியாக இருந்தது. குழப்பம் அடைந்த இந்தியப் படைகள், ஆக்கிரமிப்பின் ஆரம்ப காலத்தில் பிரதான வீதிகளில் மட்டுமே காவல் உலா புரிந்தார்கள். இது எமக்கும் நல்ல வசதியாக இருந்தது. காயமடைந்த போராளிகளுக்கு, குறிப்பாக பொட்டு அம்மானுக்கு உடல் தேறிவர அவகாசம் கிடைத்தது. அடுத்ததாக இந்திய இராணுவம் வருகிறதா என்று கலவரம் அடையாமல், நிலைமையை அவதானிக்கவும் ஒவ்வொரு வளர்ச்சியையும் கூர்ந்து கவனிக்கவும் பாலாவுக்கும் எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமார் வடமராட்சியைச் சேர்ந்தவரே. இந்த நாட்களில் எமது புதிய முகாமில் பாலாவைச் சந்திக்க அவர் வந்தார். இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் இருந்தே பாலகுமாரை, பாலாவுக்கு நன்கு தெரியும். விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கை மீது பாலகுமாருக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. இந்திய அமைதிப் படையோடு அவருடைய அமைப்புக்கும் பிணக்கு இருக்கவில்லை. ஆகவே இந்திய இராணுவத் தலைமையிடமிருந்து புலிகளுக்குச் செய்தி கொண்டு வரக்கூடிய வசதியான நிலையில் அவர் இருந்தார். மேலும், நாட்டுப் பற்று உடையவர் என்ற நிலையில் பகைமை உணர்வு கொண்ட இந்தியர்களோடு அல்லாது புலிகள் மட்டிலேயே அவருக்கு ஆழ்ந்த அனுதாபம் இருந்தது. அவர் வரும்போதெல்லாம் இந்தியப் படைகளின் சிந்தனை என்ன, நகர்வுகள் என்ன என்பது போன்ற முக்கிய தகவல்களுடன் வருவார். அவர் கொண்டு வந்த சுவையான செய்திகளில் ஒன்று வடமராட்சி இந்திய இராணுவத் தளபதிகளிடமீருந்து வந்திருந்தது. இந்திய இராணுவ உ யர்ப்டத்துக்கும் பாலாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம் பெற அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அந்த அழைப்பு ஒரு சூழ்ச்சியாக இருக்குமோ என்று பாலா சந்தேகப்பட்டார். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர, வழிபிறக்குமா என்ற சிந்தனையில், பிரபாகரன் அவர்களுக்கு விபரம் அறிவித்தார். ஆழமாகச் சிந்தித்த பிரபா கரன் பாலாவைக் கைது செய்யும் சூழ்ச்சியாக இது இருக்கலாம் என்று கருதியதால், இந்தியத் தளபதிகளைப் போய்ப் பார்க்க வேண்டாம் என்று பாலாவுக்கு அறிவுரை கூறினார். பிரபாகரன் அவர்களுடைய அனுமானம் சரியாகவே இருந்தது. ஏனென்றால், இதே ஏமாற்று முறையை இந்தியர் மட்டக்களப்பில் கையாண்டு, மூத்த விடுதலைப் புலிப் போராளி ஒருவரைத் தடுத்து வைத்தார்கள். நல்ல காலம், அவர்கள் வீசிய வலையில் நாம். சிக்கவில்லை. பாலாவை இந்தியர் கைது செய்திருந்தால், அவர்களுக்கு அது ஒரு பரப்புரை வெற்றியாக இருந்திருக்கும். அதற்கு இடமளிக்கும் எண்ணம் எமக்கு இருக்கவில்லை. அவர்களுடைய பரப்புரை முயற்சிகள் மும்முரமாக முடுக்கி விடப்பட்டிருந்தன. கொழும்பின் கட்டுப்பாட்டில் வானலைகள் இருந்தன. கொழும்பு அரசு இந்தியர்களுடன் ஒத்துழைத்தது. ஆகவே தமிழ் மக்கள் நம்பும் வகையில் செய்திகள் புனையப்பட்டன. இராணுவ பெருவெற்றிகள் பற்றியும் கைதான அல்லது கொல்லப்பட்ட அல்லது சரணடைந்துவிட்ட புலிப் போராளிகள் பந்றியும் பொய்க் கணக்குகளைப் பெருப்பித்துக் கூறியது. தவறான தகவல்களைச் செய்தி அறிக்கை களாக வெளியிட்டு, தமிழ்ப் பொதுமக்களுக்கும் புலிப் போராளிகளுக்கும் மனமுறிவு ஏற்படூத்த முயன்றது. இப்படியான நிலையில் பாலாவோ பொட்டு அம்மானோ கைது செய்யப்பட்டு விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள் என்று இந்திய பரப்புரை அமைப்பு பெருமை பீற்றிக் கொள்ள இடமளிக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். இந்திய இராணுவம் எம்மை உயிரோடு பிடிப்பதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்பதே பாலாவுடையதும் என்னுடையதும் எண்ணமாக இருந்தது.
இந்திய இராணுவம் வடமராட்சியில் தனது ஆக்கிரமிப்பைத் . தீவிரப்படுத்தி, தனது கட்டூப்பாட்டையும் இறுக்கமாக நிறுவியது. முக்கிய கேந்திர நகரங்களில் இந்திய இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. இந்திய இராணுவ நிர்வாக அமைப்புக்கள் செயற்பட்ட நகரங்களில் பருத்தித்துறை, நெல்லியடி, பொலிகண்டி, உடுப்பிட்டி, துன்னாலை ஆகியவையும் அடங்கும். தடுப்புக் காவலும் சித்திரவதையும் பரவலாக இடம்பெற்ற நிலையங்களில் உடுப்பிட்டி முகாமும் ஒன்றாகும். அந்தப் பகுதி முழுவதிலும், பிரதான வீதிச் சந்திகளில் பலமாக ஆயுதம் தரித்த. இந்திய இராணுவத்தினர் காவல் சாவடிகளை நிறுவியிருந்தார்கள். பகைமை உணர்வும், எடுத்ததெற்கெல்லாம் துப்பாக்கியை நீட்டும் பண்புடனேயே சோதனைச் சாவடிகளில் அவர்கள் நின்றார்கள். இந்திய அமைதிப் படையின் பிரசன்னம் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. வடமராட்சியில் இராணுவக் குவிப்பு படிப்படியாகத் தீவிரமடைய எமது பாதுகாப்புக்கான வாய்ப்பு, குறையத் தொடங்கியது. இந்தியப் படையினர் துணிச்சலும் நம்பிக்கையும் பெறத் தொடங்கினர். . கிராமங்களின் உட்பகுதிகளையும் .ஊடறுக்கத் தொடங்கினர். நேரடி யாகத் தெரியாத இடங்களை வரைபடங்களில் பார்த்து அறிந்தனர். குறித்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள பிரதான வீதியிலிருந்து கிளைபிரியும் ஒழுங்கைகளில் ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் உலா செல்லத் தொடங்கினர். இத்தகைய நடவடிக்கைகள் தந்த துணிச்சலால், ஒரு பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தி, அழிக்கும் பணியிலும் துணிந்து ஈடுபட்டனர். இந்திய இராணுவ நடவடிக்கையில் இது ஒரு ஆபத்தான வளர்ச்சியாக எமக்குப் பட்டது. ஆகவே ஆபத்தான அவசர நிலை ஏற்படும் போதெல்லாம் நாமும் அவசர திட்டங்களை வகுத்து அடிக்கடி இடம் மாற நேர்ந்தது.
படையினரின் நடமாட்டம் பற்றி, அந்தப் பகுதி மக்கள் எமக்குப் புதிய புதிய தகவல்களை அடிக்கடி வழங்குவார்கள். சின்னப் பிள்ளைகள் எலும்பும் தோலுமான பிஞ்சுக் கால்களோடு எமது வீட்டுக்குள் வேகமாகப் பாய்ந்து நுழைந்து எதிர்பாராத வகையில் அங்குவரும் இந்தியப் படையினர் பந்றி எம்மை எச்சரிப்பார்கள். எத்தனை பேர் வந்தார்கள், எவ்வளவு நேரம் நின்றார்கள், இறுதியாக எந்தப்பக்கமாகச் சென்றார்கள் என்ற விபரமும் வரும். குடும்பத்தினரா லும் உறவினராலும் காப்பாற்றப்பட்டு வடமராட்சியில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த வேறு புலிப் போராளிகள் அடிக்கடி எம்மை வந்து பார்ப்பார்கள். அப்போது தாம் சேகரித்திருந்த வேவுத் தகவல்களும் கொண்டு வருவார்கள். இவந்றை அடிப்படையாக வைத்து படையினரின் நடமாட்டங்களை நாம் ஊகித்து உணர்வோம். எப்பொழுதும் எமக்குத் தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். அதே போல இந்தியர்களுக்கும் தகவல்கள் போய்க் கொண்டிருக்கும் என்பதும் எமக்குத் தெரியும். குழுமங்களாக வாழும் சிறிய சமுதாயங்களில் எதுவும் ஒளிவு மறைவாக நீண்ட நாள் இருக்காது. ஆகவே நாம் எங்கே இருக்கிறோம் என்பது பற்றிய விபரம் நாம் இருந்த இடத்தை விட்டு வெளியே போயிருக்கும் என்பதில் எவருக்கும் ஜயம் இருக்கவில்லை. வடமராட்சியில் நாம் தொடர்ந்தும் இருக்கிறோம் என்பது மக்களிடையே வஞ்சகம் இன்றி பேசப்பட்டது. இதைத் தமிழ் பேசும் இந்திய இராணுவத்தினர் இலகுவாகப் புரிந்து கொண்டனர்.
இன்னொரு பாரதூரமான தகவலை பாலகுமார் கொண்டுவந்தார். பாலாவும் நானும் கரவெட்டியில் இருப்பது இந்தியர்களுக்குத் தெரிய வந்து விட்டதாம். எம்மைத் தீவிரமாகத் தேடி கைது செய்யுமாறு ஆணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தேடுதல் வேட்டை தீவிரமாகியபோது எமது மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. நாம் கைது செய்யப்டுவது இனிமேல் தற்செயலாக இருக்கப் போவதில்லை. இந்தியர்களுடைய குறி எல்லாம் இப்பொழுது எம்மீதே இருந்தது. ஆனால் அவர்களிற் பொரும்பாலானவர்கள் பாலாவை நேரில் கண்டதில்லை. அவருடைய அடையாளங்களும் அவர்களுக்குத் தெரியாது. பாலசிங்கத்தை எளிதாக அடையாளம் காணக் கூடியது அவருடைய வெள்ளைக்கார மனைவி மூலமாகவே என்பது தெளி வாகியது. முதலில் பாலசிங்கம் என்ற பெயர் உடையவர்களின் வீடுகளைப் படையினர் சோதனையிட்டார்கள். சிலரைப் பிடித்துச் சென்று அடையாள அணிவகுப்புக்குப் பின் விருதலை செய்தார்கள். வேறு ஒரு விசாரணை முறையையும் கையாண்டார்கள். அந்தப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரப் பெண் எங்கே இருக்கிறார் என்று பொதுமக்களிடம் கேட்கத் தொடங்கினார்கள். வீடூவ்டாகத் தேடல் நடத்தும் போது, “ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை இந்தப் பகுதியில் பார்த்தீர்களா?” என்று தீவிரமாக அவர்கள் விசாரிக்கும் செய்தி எம்மை எட்டியது. எம்மோடு பழகிக் கொண்டிருந்த எல்லோருக்குமே எனது நிறம் ஆபத்தைத் தோற்றுவித்தது. தேடுதல் சூடுபிடிக்கத் தொடங்க எனது வெள்ளைத் தோலை வெறுக்கத் தொடங்கினேன். அது வேறு கதை. ஆனால் எமது பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் தீவிரம் அடைவதும் எமது வீட்டுக்கு மேலே உலங்குவானூர்த்திகள் சுற்றிவருவதும், இந்தியப் படையினர் எமது முகாமுக்கு மிக அருகாக வரத் தொடங்கிவிட்டார்கள் என்பதை எமக்கு உணர்தியது. உலங்குவானூர்த்தியில் இருந்து எமது முகாம் மது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதும் எமது சந்தேகம் உறுதியாயிற்று.
போர் தொடங்கிய நாட்களில் இருந்தே வடமராட்சி மீது இந்திய விமான நடமாட்டம் தீவிரப்பட்டிருந்தது. இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் வானத்திலிருந்து தாக்குவதற்கும் உலங்குவானூர்திகள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன. பகல் வேளையில் அவற்றின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இரவில் குறைவு. இதனால் உலங்குவானூர்திச் சத்தம் அந்தப் புறச் சூழலுடன் சாதாரணமாக இரண்டறக் கலந்திருந்தது. தூரத்தில் உலங்குவானூர்திச் சத்தம் ்கட்டதும் நாம் உசாராகிவிடூவது, எமது வாழ்க்கையோடு ஓட்டிக் ம்கொண்டது. அந்தச் சத்தத்தில் இருந்தே அதன் தூரத்தையும் கணிப்பிட்டு விடுவோம். ஆனால் ஒரு நாள், மாலை மங்கத் தொடங்கும் நேரம், தாழப் பறந்த ஒரு உலங்குவானூர்தி தனது வழக்கமான பாதை யை விட்டு, நேரே எமது வீட்டை நோக்கி வந்து, சுற்றி வட்டமடிக்கத் தொடங்கியதும் ஆபத்து வந்துவிட்டது என்பதை உடனே உணர்ந்தோம். தாக்குதல் நடவடிக்கை இது என்பதை உணர்ந்த மக்களும் உடனே ஆபத்துக்கு முகம் கொடுக்கத் தயாரானார்கள். உடனே, போராளிகளும் தாம் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டூவிட்டு, கட்டங்களுக்குப் பின்னே பதுங்கிக் கொண்டார்கள். காயமடைந்த போராளிகள் பலமான ஒரு சிறிய கொங்கிநீட் கட்டடத்துக்குள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தார்கள். உலங்குவானூர்தி அருகே வரும்போது, பாலாவும் நானும் தோட்டத்தில் இருந்தோம். எமது வீட்டை நோக்கி உலங்குவானூர்தி மெதுவாகத் திரும்பத் தொடங்க பாதுகாப்பைத் தேடி ஓடினோம். அந்த வளவுக்குள் இருந்த தண்ணீர்த் தொட்டியின் சீமெந்துத் தூணுக்குப் பின்னே நின்று கொண்டோம். தூணில் முதுகை ஓட்டியபடி, சுற்றிவரும் உ லங்குவானூர்தியின் கண்ணில் படாமல் அப்படியே சுற்றிச் சுற்றி அரக்கினோம். உலங்குவானூர்தியில் இருந்து தானியங்கித் துப்பாக்கிச் சூடு எமது வசிப்பிடத்தைச் சல்லடை போட்டது. தாம் ஒன்றில் நிறையச் சேதம் விளைவித்து விட்டதாக அல்லது போதுமான அளவு அச்சுறுத்தி விட்டதாக மனத் திருப்தியோடு அந்த விமானப் பறவை தனது தளம் நோக்கிச் சென்றது.
5.2 வீருகவ் மாறும் படலம்
அதிசயம் என்னவென்றால் இந்தத் தாக்குதலின்போது, எமது போராளிகளோ அந்தச் சூழலில் வாழும் மக்களோ, யாருமே காயம் அடையவில்லை. எமது வீட்டுக் கூரையில் சில ஓடுகள் உடைந்தன. சில வாழை மரங்கள் சிதைக்கப்பட்டன. சூழவுள்ள காய்கறித் தோட்டத் குரையிலேயே பெரும்பாலான வேட்டுக்கள் தைத்திருந்தன. நாம் எல்லோருமே கொதிப்படைந்திருந்தோம். மக்கள் வாழும் பகுதியில் பொறுப்பற்ற முறையில் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்திய இந்தியப் படையினரைத் திட்டித் தீர்த்தோம். வானத்திலிருந்து தாக்குதல் நடத்துவதைப் பார்க்கும்போது, விரைவிலே நாம் வாழும் பகுதிக்குள் தாக்கி அழிக்கும் நோக்கத்தோடு இந்தியர்கள் வரப்போகிறார்கள் என்ற சந்தேகம் உறுதிப்படூத்தப்பட்டது. ஆகவே பாதுகாப்பான பகுதிக்கு நாம் இடம் மாறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. பெரிய குழுவாக ஒரே இடத்தில் இருப்பதைக் காட்டிலும் சிறிய சிறிய குழுக்களாக இருந்தால் கைது செய்யப்படூவதந்கான வாய்ப்புக் குறைவாக இருக்கும் என்ற பொதுவான கருத்துத் தோன்றியது. அப்படியான நிலையில் பாதுகாப்பான வீடுகளைப் பெறுவதும் இலகுவாக இருக்கும். எனவே வேறு வேறு திக்குகளிற் செல்லத் தீர்மானித்தோம். இந்தியப் படையினர் தமது தேடுதகலைக் குறி வைக்காத பகுதியில் உள்ள பாதுகாப்பான . வீடொன்றில் தங்கியிருக்க காயமடைந்த போராளிகள் ஏற்பாடு செய்து கொண்டார்கள். நாம் தங்குவதற்கு வேறொரு வீடொன்றை சுக்ளா ஏற்பாடு செய்தார். எம்மிடமிருந்த குறைந்த பட்ச உடைமைகளைச் சுருட்டிக் கட்டிக்கொண்டு நாம் வெளியேறினோம். உயர்ந்த மதில்களும் ஒடுங்கிய ஓழுங்கைகளும் செறிந்த பாதையூடாக கரவெட்டியில் உள்ள வடொன்றுக்குச் சென்றோம். ஒரு பெரிய வளவுக்குள் ஒரு விசாலமான செங்கல் வடு. கிணறு பின்புறத்தில். நிழலுக்குத் தென்னை மரங்கள் அங்கே இருந்தன.
எமது பாதுகாப்பான வீட்டை நாம் அடைந்தபோது, மூதாட்டி ஒருவர் தமது காணிக்குள் நடமாடுவதைக் கண்டோம். வீடு வெறுமையாக இருளடைந்து இருந்தது. வீட்டினுள் அந்த மூதாட்டிக்குச் சொந்தமான ஒரு சில உடைமைகள் மட்டுமே இருந்தன. வீடு இருளடைந்து இருந்ததன் காரணம் மர நிழலல்ல. மனை அமைப்புச் சோதிடமே காரணம். வீட்டுச் சொந்தக்கார மூதாட்டி ஒரு சைவப் பழம். சோதிடத்திலும் நம்பிக்கை கொண்டவர். வீட்டைக் கட்டு முன் மனை பார்க்கும் சோதிடரை குடும்பத்தினர் கலந்தாலோசித்திருக்கிறார்கள். அவருடைய ஆலோசனையின் படியே வீட்டுக்கான வரைபடம் வரையப்பட்டது. சமையலறையும் ஏனைய அறைகளும் எங்கே எங்கே இருக்க வேண்டும் என்பது சோதிடரின் ஆலோசனைப்படியே முடிவு. செய்யப்பட்டது. இதன் விளைவாக, அறைகள் இருளில் மூழ்கின. மற்றும்படி, மீதிப்பகுதிகள் வெளிச்சமும் வெப்பமுமாக இருந்தன.
பாதுகாப்பான புதிய வீட்டில் எமக்கு ஒவ்வொரு அறையைத் தேர்ந்து நாம் குடியமர்ந்த பின், மூதாட்டி தமது கதையை எடுத்துரைத்தார். அந்தத் தருணத்தில் வடமராட்சியில் வாழ்ந்த முதியவர்களின் ஒரு பொதுப் பிரதிநிதியே இந்த மூதாட்டி. ஒரு சிறிய கூனல். உதிர்ந்து நரைத்த கூந்தலை சிறிய கொண்டையாக முடிந்திருந்தார். தளர்வாக அணிந்திருந்த நூற்சேலை. இவை அவருடைய வயது போன தோற்றத்துக்கு சான்றுகள். அவருடைய சாதாரண வெளி றிய சேலையும், தாலி இல்லாத கழுத்தும் அவருடைய கணவனைப் பற்றி நாம் விசாரிக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்தின. முதுமையும் கைம்மையும் பூண்ட தோற்றம் அவருடையது. யாழ்ப்பாணச் சமூக மட்டத்தின் உயர் சாதியாகக் கொள்ளப்படும் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர் அந்த மூதாட்டி. நண்ட நாள் வாழ்ந்த முதியவர் என்ற கதன்நம்பிக்கையோடு தமது குடும்ப வரலாற்றை அவர் கூறினார். யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தின் சமூக முறைமைகள் பந்றி அவர் விளக்கினார். பரம்பரை பரம்பரையான நில உடைமையாளரான அந்த மூதாட்டியும் அவருடைய கணவரும் தங்கள் செல்வத்தில் பெரும் பகுதியைத் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவிட்டிருக் கிறார்கள். உண்மையில் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் தனித்துவம் வாய்ந்த அம்சங்களில் ஒன்று கல்வி மீது அவர்கள் கொண்டிருக்கும் அத்த பற்றாகும். கல்வியை. ஆழ்ந்த பந்றோடும் மன வைரக்கியத்தோடும் ஊட்டுவிப்பார்கள். கல்வித் தெய்வமான சரஸ்வதி உயர் நிலையில் வைத்து வணங்கப்படுவதோடு கலைமகள் விழா வரும்போது, யாழ்ப்பாண சமூகம், குறிப்பாக பெண்கள், மிக உற்சாகமாகப் பங்குபற்றுவார்கள். எனது அனுபவத்தில் யாழ்ப்பாண சமூகம் தனித்துவம் கொண்டது என்பேன். கல்வி என்று வரும்போதும், அறிவு தேடல் என்று வரும்போதும், அதன் மகிழ்ச்சியும் ஈடுபாடும் அலாதியானது. மனித இனம் கல்வியை வேணவாவாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்தச் சமுதாயம் எதிர்பார்க்கிறது எனலாம். யாழ்ப்பாணத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலே கல்வி என்பது சமூக உயர்வுக்கும் திரவியம் திரட்டுவதற்கும். உயர் சமூக அந்தஸ்து பெறுவதற்கும் திறவுகோலாக அமைகிறது. ஒரு பண்பாட்டு வாழ்க்கைக்கும், மரியாதையான சமூக நடத்தைக்கும், சமூகப் பொறுப்புக்கும் அதுவே அவசியம் என்று மதிக்கப்படுகிறது. தற்பெருமை கொண்ட இந்த மூதாட்டி, இளம் பெண்ணாக இருந்தபோது. கமிழ்ச் சமுதாயம் கனவு காணும் தொழிலான மருத்துவத் தொழிலை நோக்கி, தமது புதல்வனின் அக்கறையை திசை திருப்பியிருப்பார். நினைத்ததை சாதிக்கும் ஒரு தாயாக ஒரு ஒளி மயமான எதிர்காலத்தை சமது மகனுக்கு ஈட்டிக் கொடுக்கும் முனைப்போடு செயற்பட்டிருப்பார். அந்த மகன், தமது பிரத்தியேகக் கல்விக்காக பல மணிநேரம் செல விடக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து ஊக்கப்படுத்தியிருப்பார். அதிகாலையில் மைந்தனை எழுப்பி, அவருக்கு வேண்டிய தேனீரையோ, கோப்பியையோ பாலையோ தயாரித்து பள்ளிக்குச் செல்வதற்கு முன், அந்தக் காலை வேளையில் கூடுதலாகப் படிப்பதற்கு வழி வகுத்திருப்பார். பள்ளி முடிந்த பின், மாலை வேளையில் ரியூசன் படிப்புக்கு ஏற்பாடு செய்து, கல்வி மேம்பாட்டை அதிகரிக்க உதவியிருப்பார். இந்தக் கடமைகளை கிரமமாக தமது மற்றப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஒரு அளவில் அவர் செய்திருப்பார். தமது முயற்சியில் இந்தத் தாய் வெற்றியும் கண்டிருக்கிறார். அவருடைய மகன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவராக தேறி யிருக்கிறார். இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் கடைத்தேறக் கிடைத்த ஒரே வழி வெளிநாடு செல்வதேயாகும். அந்த மகனும் அதே வழியில் வெளிநாடு சென்றுவிட்டார். உண்மையில், அவருடைய எல்லாப் பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கே சென்று விட்டார்கள். இத்தனையும் சாதித்த அந்தத் தாய்க்கு இறுதியாகக் கிடைத்தது, இப்போதைய தனிமையும் வெறுமையும்தான். இதே வழியைக் கடைப்பிடித்த எத்தனையோ பெற்றோருக்குக் கிடைத்ததும், இந்த மதிப்புக்குரிய மூதாட்டிக்குக் கிடைத்த அதே துயரக் கதிதான். இப்பொழுது அவருக்கு தள்ளாமை நிலை. உயிரின் தீபம் மெள்ள மெள்ள ஓடுங்கத் தொடங்கியிருக்கிறது. பிள்ளைகளால், பேரப்பிள்ளைகளால், பூட்டப் பிள்ளைகளால் கிடைக்கும் மகிழ்ச்சி, அரவணைப்பு, பாதுகாப்பு எதுவுமே கிடைக்காத ஏக்கம். சுற்றி அடைக்கப்பட்ட பரம்பரைக் காணி பூமியிலும் வீட்டிலும் இன்று அடைபட்டு, தனிமையும் துயரமும் வாட்ட, இன்று ஒடுங்கும் நிலை அவருடையது. வெளிநாடுகளில் இருந்து வரும் கடிதங்கள் மிக அரிதாகவே இருப்பதாக அவர் வருந்திக் கூறும்போது அதில் ஒரு சோக இழையையும் கடூப்பையும் காணலாம். தனது உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, யார் மீதும் தங்கியிராத இந்த மூதாட்டியும், இவரைப் போல பலரும், காலத்தின் விளைவுகளாக இங்கே இருக்கிறார்கள். தமிழ் இனம் மீதான அரசின் ஒடுக்கு முறையும் சித்திரவதைகளும் இவருடைய வேணவாவுக்குக் குறுக்கே நின்றன. படிப்படியாகத் தமது பிள்ளைகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவருடைய ஆசையில் மண் போட்டன. எனவே தமது வயதான காலத்தில் கூட்டுக் குடும்ப இனிமையைச் சாதிக்க வேண்டும் என்ற தமது ஆசையை துக்கிக் கொண்டு வெளிநாடுகளில் தமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அவர்களை வழியனுப்பி வைத்தார். அதே சமயம், பரம்பரை பரம்பரையாக வந்த காணி பூமிகளுடனும் சொத்துடமைகளுடனும், பண்பாட்டூப் பாதுகாப்பு. களுடனும் வாழ்ந்து வந்த . வாழ்க்கையை விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. எனவே நாம் முதற்தடவையாக அந்த வீட்டுக்குச் சென்றபோது, ஒரு புறம் படூக்க ஒரு பாய், இரவு கூதலில் போர்க்க ஒரு போர்வையைக் கண்டோம். அடுக்களைக்குள் அவர் ஏதோ செய்து கொண்டிருந்தார். சமுதாயம் அவரிடம் எதிர்பார்ப்பது போல, ஒரு பாட்டிக்குரிய இரக்கத்தோடு அவர் எம்மை நடத்தினார்.
பொட்டு அம்மான் வேறொரு பகுதிக்குச் சென்றார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூத்த போராளிகளில் ஒருவரான நடேசன் எம்முடனேயே இருந்தார். அவருடைய கிராமத்தில் இந்தியப் படையினரின் தேடுதல் நடவடிக்கை அதிகரித்ததும், அவர் தமது மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு பாதுகாப்பான இடம் நாடவேண்டியதாயிற்று. இந்தியப் படைகள் அவருக்காக வீடு வடாகத் . தேடிக் கொண்டிருந்தபோது வீட்டுச் சுவர்களில் அமைக்கப்பட்ட இரக சியப் பலகை அறைகளில் அவர் பல மணிநேரம் பதுங்கியிருக்கிறார். தமிழேந்தியும் எம்முடன் சேர்ந்து கொண்டார். இவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய நம்பிக்கைக்கு உரியவர். புலிகளில் அவரும் ஒரு மூத்த போராளி. முழு இயக்கத்தின் நிதிக்கும் அவரே பொறுப்பாளர். அவரிடம் ஒரேயொரு பயணப் பை. அதில் பணமும் நகையும். இயக்கத்தின் நிதி அது. அந்தப் பை அவருடன் எப்போதும் ஓட்டியபடியே இருக்கும். தமிழேந்தி எமது குழுவுடன், போவதும் வருவதுமான தொடர்பை வைத்திருந்தார். வடமராட்சியில் இருப்பது ஆபத்து என உணர்ந்த ஒரு கட்டத்தில் வன்னி வனத்துக்குப் புறப்பட்டார். கெட்டகாலம்: வழியில் ஒரு சுறந்றிவளைப்பின்போது சிக்கிய அவர், இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருந்த காலத்தில் காங்கேசன்துறைச் சிறையில் அடைக்கப்பட்டார். இரும்பு மனவுறுதி கொண்ட இந்த மனிதரை இந்தியர் கடூஞ்சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். மன வைராக்கியத்தோடு அவர் அதைத் தாங்கிக் கொண்டார். அவரைப் பணிய வைக்க அவர்களால் முடியவில்லை. அவருடைய உதடுகளிலிருந்து தகவல் எதுவும் உதிரவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியர் பின்வாங்கியபோது விடுதலையான அவர், விரைந்து சென்று, புதைத்த இடத்திலிருந்து நிதியை மீட்டு, பிரபா- கரன் அவர்களிடம் கையளித்தார். இன்றும் விடுதலைப் புலிகளின் தளம்பாத் தலைவர்களில் ஒருவராகத் திகழும் தமிழேந்தி, இயக்கத்தின் நிதியைத் தொடர்ந்தும் நிர்வகித்து வருகிறார். தமிழேந்தியேதான் நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை இனம் கண்டு, அந்தப் பகுதியில் இருந்து எம்மை வெளியேற்ற உடனடியாக ஆயத்தம் செய்ய வேண்டும். என்று வன்னி வனத்தில் உள்ள பிரபாகரன் அவர்களுக்கு அவசரச் செய்தி அனுப்பியவராவார். அன்று எம்மிடையே நிலவிய செய்திக் தொடர்புகள் கடினமான நிலையிலேயே இயங்கிக் கொண்டிருந்ததால். பதில் வர நாள் பிடித்தது. இறுதியாக பதில் எம்மை வந்தடைவதற்கு முன்பாக மிகப் பெரும் ஆபத்துக்களுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
நாம் இருந்த சூழ்நிலையில் மனம் சோர்ந்து போகாமல் இருப்பதற்கு மக்கள் தந்த ஆதரவு எனது மனதை நிறைத்தது. ஆனால் தலைமறைவு வாழ்க்கையின் முழுக் காத்திரத்தையும் நாம் உணர்ந்திருக்கவில்லை. நாம் திரும்பவும் இடம்பெயரவேண்டும் என்றும், அதுவும் சில நாட்களிலேயே புறப்பட வேண்டும் என்றும் சுக்ளா கூறியபோது, ஒரு இடத்தில் தரிப்பதற்கும் அங்கிருந்து நகர்வதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பது தலைமறைவு வாழ்க்கையில் ஓர் அம்சம் என்பதைப் புரிந்து கொண்டோம். ஒரே இடத்தில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பது தெளிவாகப் புரிந்தது. ஆனால் இடையறாது இடம் மாறுவது கூட ஆபத்தைத் தரலாம். நாம் தவிர்க்க விரும்புவர்களின் கரங்களிலேயே சிக்கலாம். நாம் ஓர் இடத்தில் தரிக்கும் போது அங்கே இருப்பது வெளியே தெரிய வர இரண்டு மூன்று நாட்கள் போதும். காரணம் எனது நிறம். போராளிகளில் பெரும்பாலானவர்கள் பகல் வேளையில், சாதாரண உடையில் வடமராட்சியில் நடமாடினார்கள். பாலா கூட. ஒரு விவசாயியின் தலைப்பாகையும், மழித்த முகமும், பாமரத் தோற்றமுமாக தம்மை மறைக்க முடிந்தது. ஆனால். என்னால் முடியவில்லை. கோடியில் உள்ள கழிப்பகத்துக்கு நான் நடந்து செல்வதை யாராவது பார்த்தாலே போதும். நாம் இருக்கும் இடம் வெளியாகிவிடும். அதன் பின் இடம்பெயர்வது பற்றி நாம் உடனே யோசிக்க வேண்டும். மக்களுக்குத் தெரிந்து விட்டால் தகவல் உடனே பரவிவிடும். நாம் சுற்றிவளைப்புக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டு விடும். ஆனால் அதுவரை, இந்தியரை ஓர் அடி முந்திக் கொண்டு தப்பியபடி இருந்தோம். இப்படி, எமது அடுத்த நகர்வு, கரவெட்டியில் இருந்து சில மைல் தூரத்தில் உள்ள நவிண்டில் என குறிக்கப்பட்டது. அதுவரை இந்தியர் ஊடுருவாத இடமாக அது இருந்தது.
நவிண்டிலில் பொட்டு அம்மானுடன் சேர்ந்து கொண்டோம். காயங்கள் நன்றாகப் பராமரிக்கப்படாத நிலையல் அவர் இருந்தார். அவருடைய கமக்கட்டுக் காயத்தால் ஊனம் வடிந்து கொண்டிருந்தது. அதற்குக் கட்டுப் போட்டு விடுமாறு அவர் என்னை வேண்டினார். வெப்ப : அவியலான நிலையில் காயங்கள் சீழ் பிடிக்கத் தொடங்கியிருந்தன. அவருடைய வயிற்றுக் காயத்திலும் புதிய சிக்கல். விட்டு விட்டு வலிக்கத் தொடங்கியது. காரணத்தை கண்டுபிடிக்க கருவிகள் எதுவும் இல்லை. ஆகவே பிரச்சினை என்ன என்பதும் தெரியவில்லை. எப்படி சிகிச்சை அளிப்பது என்றும் புரியவில்லை. மென்பதமான ஊசி மருந்தேற்றினேன். அதனால் பலன் எதுவும் இல்லை. இரவு முழுதும் முனகியபடியே கிடந்தார். அதுவே எம்மை இனங்காட்டக்கூடிய ஆபத்தைத் தோற்றுவித்தது. இரவில் இந்தியப் படைகள் நடமாடும்போது, நாய்கள் குரைக்கும். நாம் விழிப்படைந்து விடுவோம். அதை விட்டால் இரவில் வடமராட்சியில் மயான அமைதி நிலவும். இந்த நிலையில் அந்தப் பகுதியில் இந்தியத் துருப்பினர் இருந்தால் பொட்டு அம்மானின் முனகல் எமது மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
பொட்டு அம்மானுடைய காயங்கள் அவரை எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும். இனி அவரால் நண்ட தூரம் நடக்க முடியாது. அவரைச் சாய்மனைக் கதிரையில் இருத்தி போராளிகள் அவரைத் தோளிலேயே காவ வேண்டியிருந்தது. என்னுடைய இருப்பிடத்தை மறைப்பதற்கு ஒன்றில் நாம் இரவில் பயணம் புரிய வேண்டியிருந்தது. அல்லது ஒரு நோயாளியைப் போல போர்வையால் தலையிலிருந்து கால்வரை போர்த்தபடியே செல்ல வேண்டும். நெல்லியடியில் உள்ள எமது மறைவி டத்துக்கு இருண்ட பின்னரே நகர்வது என்று தீர்மானித்தோம்.
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நெல்லியடியில் தங்களுடைய காணி ஒன்றில் உள்ள ஒரு சிறிய வீட்டை எமக்குத் தந்தார்கள். அது ஒரு பழைய பரம்பரை வீடு. நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கவேண்டும். உள்ளூர் மூலப் பொருட்களால் கட்டப்பட்ட வீடு அது. கற்களை அடுக்கி, சுண்ணாம்புக் காரையால் மெழுகிய சுவர்கள் கொண்ட பலமான வீடு அது. யாழ்ப்பாண நிலக் கனிவளங்களில் சுண்ணாம்பும் முக்கிய ஒன்றாகும். இரண்டு சிறிய அறைகள், அவற்றில் குட்டி யன்னல்கள். அதற்குள்ளேயே அடுக்களையும் இருந்தது. அதனுள் களிமண் அடுப்புகள். ஒரு காணி மூலைக்குள் வேப்ப மர நிழலில் வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த வீடும் வேம்பும் ஒரே காலத்தைப் போலத் தோன்றியது. அடுக்களைக்கு அருகே கொல்லைப் பக்கத்தில் ஒரு பெரிய கிணறு. அதில் குளிர்மையான சுத்தமான, பச்சைத் தண்ணீர்!
அந்தப் பகுதி மக்களின் ஆதரவு எமக்கு இருந்தது, அடுத்த நகர்வுக்கு முன் சில நாட்களேனும் அந்த வீட்டில் தங்க முடியும் என்று கருதினோம். அடுத்த இடத்தை ஏற்பாடு செய்வதில் சுக்ளா ஈடுபட்டார். அதை உறுதிப்படுத்த அவருக்கு நேரம் தேவைப்பட்டது. எமது போராளிகளும் வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். படை நட மாட்டம் அசுமாத்தம் எதுவும் அந்தப் பகுதியில் இல்லை. ஆனால் அதைப் பெரிதாக நம்பி விடவோ, உசார் நிலையைத் தளர்த்தவோ கூடாது என்பதை எமது அனுபவம் எமக்குக் கற்பித்திருந்தது. நாம் உயிர் சப்பி வாழ வேண்டும் என்நால், எந்த நேரமும் உசாராகவும் விழிப்பாதவும் இருக்க வேண்டும் என்பதையும் கற்றிருந்தோம்.
5.3 எமது வீடு மீது தாக்குதல்
பொழுது சாயும் நேரம்தான் அந்தச் சம்பவம் இடம்பெற்றது. சூழவிருந்த காணியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக சின்னப் பிள்ளைகள் சிலர் எமது வீட்டை நோக்கி மூச்சிரைக்க ஓடிவந்தார்கள். எமது வீட்டை நோக்கி காவல் உலா வந்த சில இந்தியப் படையினர் இரகசியமாக நகர்ந்து கொண்டிருப்பதாக மூச்சுவாங்கிய படியே கூறத் தலைப்பட்டார்கள். பிள்ளைகள் தகவல் தந்த மறுகணம், அந்தப் பகுதியில் வாழும் வேறு ஆட்களும் அவசர அவசரமாக அங்கே வந்து இராணுவக் காவல் உலா அணி ஒன்றைக் கண்டதாகக் கூறினார்கள். ஆனால் இவர்கள் குறிப்பிட்ட இராணுவத்தினர் வேறு திக்கில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள். பொட்டு அம்மான் இதைக் கேட்டதும் எழுந்து உட்காந்தார். விழிப்படைந்தார். சுந்றி வளைப்புகளில் இருந்து எதிரி யைத் திணறடித்து வெளியேற்றுவதில் அவருக்கு பல ஆண்டு அனுபவம் உண்டு. மட்டக்களப்பில் இருந்தபோது, சிறீலங்கா இராணுவம் அவருடைய காட்டு முகாம்களை சுற்றி வளைத்தபோது, அவர்களோடு போராடியபடியே நழுவிய அனுபவம் அவருக்கு உண்டு. இராணுவ நடமாட்டம் பற்றிய விபரம் கிடைக்கும்போது எந்தக் கட்டத்தில் அதைப் பந்றிக் - கவலைப்படவேண்டும் என்பதை அனுபவத்தால் உணர்ந்திருந்தார். அதே சமயம் வேறும் ஒரு புறத்தில் இருந்து படைகள் வரும் தகவல் வந்தடைந்தது. இதைக் கொண்டு எமது வீடு ஒரு மிகப் பெரிய இந்தியப்படை சுற்றிவளைப்புக்கு உள்ளாகப் போகிறது என்பது தெளிவாகியது. வெவ்வேறு பக்கங்களில் இருந்து பலத்தோடு நகர்ந்து எமது முகாமைச் சுற்றி வளைத்து தப்பி ஓடும் பாதைகளைப் படிப்படியாக மூடி அடைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தது. நிலைமை மோசமடைவதும் தெரிந்தது. எமது உடன் தேவை என்ன என்பதைத் தீர்மானித்தேன். பாலாவுடைய இன்சுலின் பையை மட்டும் என்டைன் வைத்துக் கொண்டேன். எந்த நேரம் ஓடுவதானாலும் அதை எடுத்துக் கொண்டு ஓடினால் போதும். அந்த நேரம் சுக்ளா ஒரு சைக்கிளில் வேகமாக வந்தார். இந்தியப் படைகள் சில நூறு யார் தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். மருந்துப் பையைக் கையில் எடுத்தேன். பாலாவும் நானும் செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டுக்கு வெளியே தாவினோம். பொட்டு அம்மான் கஷ்டப்பட்டு எழுந்து போராளி ஒருவரின் உதவியோடு வயிந்றைப் பிடித்தபடி வீட்டை விட்டு நொண்டியபடி வெளியே வந்தார். உள்ளூர் போராளியான கந்தையா முன்னே வழிகாட்டிச் சென்றார். வெளியேறும் பாதையைப் பிடித்தபடி, பாதுகாப்பான வேளை பார்த்து எமக்குச் சைகை காட்டினார். எமது நல்ல காலம் இராணுவ அணி ஒன்று ஒரு பெரும் பிழை விட்டது. தங்களுடைய நிலைகளை உறுதிப்படுத்துவதில் தாமதம் செய்தன. சுந்றி வளைப்பை அவர்கள் துரிதமாகச் செய்யாததால் அந்த முக்கிய ஒழுங்கையைக் கடப்பதற்கு எமக்கு நேரம் கிடைத்தது, ஓழுங்கையில் தூரத்திலே படைகள் வீடு வீடாகச் சோதைனையிடச் செல்வது தெரிந்தது. அவர்கள் அங்கே தங்கள் கருமத்தில் கண்ணாக இருக்கும் போது நாம் ஒவ்வொருவராக ஒழுங்கையைக் கடந்து எமது விட்டைச் சுற்றி இறுகும் தடத்திலிருந்து தப்பினோம். எமது நிலையை உணர்ந்த உள்ளூர் மக்கள் இந்தியப் படைகள் இருக்கும் திசையை சைகைகளால் உணர்த்தி நாம் எட்டத்தே செல்லுமாறு பார்த்துக் கொண்டார்கள்.
அந்த இடத்திலிருந்து நாம் தப்பிச் சென்று கொண்டிருந்தபோது, நாம் விட்டு வெளியேறிய வீட்டூப் பக்கம் அடு தொடராகத் துப்பாக்கி வேட்டு கேட்டது. பின்னர், அங்கே சுற்றி வளைக்கப்பட்ட ஊர் மக்களிடமிருந்து என்ன நடந்தது என்பது தெரிய வந்தது. இந்தியப் படையினர், காட்டிக் கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆள் ஒருவரின் வழிகாட்டலோடு அந்த இடத்தை மொய்த்து வீட்டை இறுக்கமாகச் சுந்றி வளைத்து துப்பாக்கிகளை நட்டியபடி நிலையெடுத்திருக்கின்றனர். ஒவ்வொருவராக வெளியே வரவேண்டும் என்று உரக்கக் கூவி அழைத்திருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே ஒரே அமைதி. சலனமே கிடையாது. பொறுமை இழந்த அமைதி காப்பாளர் தானியங்கித் துப்பாக்கியால் வெறும் வீட்டின் மீது சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். விரை வில் அவர்களுடைய தவறை உணர்ந்தார்கள். வீட்டின் மீது தாக்குதல் நடத்த வந்த இந்தியப் படையினரை நாம் மண் கெளவச் செய்திருந்தோம்.
வீட்டுச் சொந்தக்காரரான மார்க்கண்டு அவர்கள் மீது படையினர் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அந்த நேரம் துணை அரசாங்க அதிபராக இருந்த மார்க்கண்டு அவர்களைப் படையினர் படைப் பாதுகாவலில் கொண்டு போய் நையப் புடைத்திருக்கிறார்கள். சில நாட்கள் வைத்துக் கொடுமைப் படுத்தியபின், புலிப் போராளிகளுக்கு இனிமேலும் இடவசதி வழங்கிப் பிடிபட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு அவரை விடுவித்திருக்கிறார்கள். மார்க்கண்டு அவர்கள் கிலேசமடைந்தார். அவருக்கு ஒரு குமர்ப் பெண்ணும், விடுதலைப் புலிப் போராளியான விஜயன் என்ற மகனும் உண்டு. இந்திய இராணுவத்தின் யாழ்ப்பாண நடவடிக்கையின்போது, அவர்கள் புரிந்த கொடிய பாலியல் வன்தாக்கல் சம்பவங்கள் பற்றி அறிந்திருந்த அவர், எதிர்காலத்தில் ஏதாவது தண்டனை என்று வந்தால், அந்தத் தண்டனை தமது மகளுக்கே. கிடைக்கும் என்று அஞ்சினார். ஆனால் துணிச்சலும் தாராள மனமும் கொண்ட இந்த மனிதர் வளைந்து கொடுக்கவே இல்லை. இந்திய இராணுவம் அந்த வீட்டின் மீது தொடர்ந்து கண்வைத்திருந்ததால், அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல நாம் நினைக்கவேயில்லை.
நாம் தப்பிய இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து ஒன்று தெளிவானது. பொட்டு அம்மானை நடமாட விடாதபடி அவருடைய . காயங்கள் அவரைக் கட்டுப்படுத்துவதை உணர்ந்தோம். வடமராட்சியில் புலிப் போராளிகளைத் தேடும் முயற்சியை இந்தியப் படையினர் . தீவிரப்படுத்தியிருந்ததால், சுற்றி வளைப்பும் தேடுதலும் அன்றாட நடவடிக்கையாயின. பொட்டு அம்மான் உயிர் பிழைக்க வேண்டு மென்றால், அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறி, மருத்துவப் பராமரிப்பும் ஓய்வும் பெறுதல் அவசியமானது என்பதும் தெளிவாயிற்று. எனவே அவரை மருத்துவ பராமரிப்புக்காக கடல்மூலம் தமிழ் நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று. இதனால் எமது குழுவை விட்டு அவர் பிரிந்து சென்றார். காயமடைந்திருந்த ஏனைய போராளிகளுக்கும் தனித் தனியான தொடர்புகளும் வழிகளும் கிடைத்தன. இவர்களும் தமக்கு உதவி புரிய முன்வந்தவர்களுடன் சிகிச்சைப் பராமரிப்பு வழிதேடி, வெளியேறினார்கள். உயிர் தப்பிப் பிழைக்கும் போராட்டத்தில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டோம்.
இந்தியர்கள் எம்மைத் தொடர்ந்து தேடிய வண்ணம் இருந்தார்கள். நாமும் இடம் மாறியபடியே இருந்தோம். அந்தப் பகுதியின் அரசியற் பொறுப்பாளர் சுக்ளா என்பதால், இந்தியர் அவரையும் வேட்டையாட முயன்று கொண்டிருந்தார்கள். இதனால், புதிய பாதுகாப்பான வீடுகளை ஆயத்தப்படூத்துவதற்காக அவர் அடிக்கடி வெளியே செல்வதும் அவருக்கு ஆபத்தை ஏற்படூத்தும் போலப் பட்டது. அந்தப் பகுதி முழுவதும் அவருக்கு நன்கு பரிச்சியமாக இருந்ததால், அப்போதைக்கேனும் அகப்படாமல் இருப்பது அவருக்கு இயலுமாயிற்று. . ஆனால் நெல்லியடி நகருக்குள் அவர் வெளிவாரியாக நடமாட முடியவில்லை. இந்தியப் படையினருக்குத் தங்கள் எதிரிகள் யார் யாரென்று அடையாளம் தெரியாது. ஆகவே விடுதலைப் புலிப் போராளிகளையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் அடையாளம் காட்டுவதற்காக முகமூடி தரித்த உளவாளிகளை மக்கள் கூடுதலாக உள்ள பகுதிகளில் நிறுத்தியிருந்தார்கள். விடுதலைப் புலிப் போராளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை முகமூடி தரித்தவர் கண்டதும், அவர் பக்கமாகத் தலையை ஆட்ட படையினர் அவரைக் கைது செய்வர். இந்த உளவாளிகளைத் தமிழ் மக்கள் வெறுத்தார்கள். தலையாட்டிகள் என்று ஏளனமாக அழைத்தார்கள். தலையாட்டிகளை படையினர் சந்தையிலோ, சோதனைச் சாவடி ஒன்றிலோ நிறுத்தும்போது, அதிர்ஷ்டவசமாக போராளிகளுக்கு தகவல் கிடைத்து விடும். அந்த இடங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்து விடுவார்கள்.
தமது உறவுக்காரப் பெண்களிடமும் நண்பர்களிடமும் எமக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுக்ளா செய்திருந்தார். மிகவும் காரமான கறிவகைகளைச் சமைப்பதில் வடமராட்சி ஒரு பெயர் பெற்ற இடமாகும். ஆகவே, வகைவகையாக எமக்கு உணவ கிடைத்தது. விசுவாசமும் அக்கறையும் உள்ள எத்தனையோ முகம் தெரியாத பெண்கள், தங்கள் உயிராபத்தையும் பொருட்படுத்தாது எமக்கு உணவு தயாரித்தார்களோ தெரியாது. உணவைச் சேகரிக்கும் பணி கந்தையா என்ற போராளியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் ஒழுங்கைகள் மாறி மாறி, சமைக்கும் வீட்டுக்குச் சென்று, பத்திரமாக உணவைக் கொண்டு வந்து விடுவார். வேறு வழிகளிலும் அங்குள்ள மக்கள் தாராள குணத்தோடும் ஆதரவோடும் நடந்து கொண்டார்கள். பின்னேரத் தேனீர் வேளை ஒரு முக்கியமான நேரமாகும். தேனீரோடு உண்பதற்காக தமிழ்ப் பெண்கள் ஏதாவது இனிப்பு வகையோ காரவகையோ சிற்றுண்டிகளாகச் செய்வார்கள். நாம் அந்தப் பக்கத்தில் இருப்பது தெரிந்தால், சின்னப் பையனோ பெண்ணோ கையில் ஒரு ஓலைப் பெட்டியுடன் என்னிடம் ஓடிவருவார்கள். தாயார் கொடுத்து விட்ட சிற்றுண்டி ஏதாவது அதில் இருக்கும். கோவில் திருவிழாக்களுக்காக பெண்கள் பொங்கும்போது எனக்கும் ஒரு வெள்ளித்தட்டு வந்து சேரும். அதில் அழகாக அடுக்கிய வாழைப்பழமும் ஒரு கிண்ணத்தில் புக்கையோ, எனக்கு வெகுவாகப் பிடித்த மோதகமோ இருக்கும். இந்தப் பெண்களை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், என்னையும் நினைத்து தங்கள் குடும்ப உணவை என்னோடு பகிரும் உணர்வு பூர்வமான தாராண்மை அவர்களிடம் இருந்தது. இப்படியான சிறிய சிறிய : கருணை வெளிப்பாடுகளே, நானும் அவர்களில் ஒருத்தி என்ற உணர்வையும். நானும் அங்கத்தையவளே என்ற உணர்வையும் எனக்குத் கந்தன.
சுக்ளாவும் எமது போராளிகளும் மக்களுக்குள் நன்றாக ஊடாடிப் பழகினார்கள். இதனால் வடமராட்சியில் இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான பல தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அந்தப் பகுதி முழுவதிலுமே, இராணுவச் சுற்றி வளைப்பும் தேடுதல் முயற்சிகளும் சாதாரண நடவடிக்கையாகிவிட்டது. அவர்கள எவ்வளவுக்கு எவ்வளவு தேடுதல்கள் நடத்தினார்களோ, அவ்வளவுக்கு அவர்களுடைய நடவடிக்கை ஒழுங்கு விபரங்கள் பற்றி நாம் அறிய முடிந்தது. பொதுவாக இரண்டு வழிமுறைகளை அவர்கள் கையாள்வதை அவதானித்தோம். அநேகமாக அதிகாலையில், வெவ்வேறு பக்கங்களில்: இருந்து படையணிகள் வந்து ஒரு இடத்தில் குவியும். அந்த இடத்தைச் சுற்றி வளைத்து, தேடுதலை நடத்துவார்கள். ஆனால் கூடுதலாக என்ன நடக்கும் என்றால், சிறுசிறு காவல் உலா அணிகள் வெவ்வேறு பக்கத்திலிருந்து அல்லது வெவ்வேறு முகாம்களில் இருந்து ஒரு இடத்துக்கு வந்து, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, வெளியே இருந்து யாரும் உள்ளே வராமலும், உள்ளே இருந்து யாரும் வெளியே போகாமலும் அறுக்கை செய்து, அதன் பின் வீடுவீடாக, கட்டடம் கட்டடமாகத் தேடுதல் நடக்கும். கிளர்ச்சியை முறியடிப்பதற்கு இத்தகைய நடவடிக்கை அத்தியாவசியம் என்று இந்திய படைத் தலைமை கருதியது. ஆனால் அடுத்தடுத்து நடந்த தேடுதல்களே அவர்களுடைய மோசமான பலவனத்தை உணர்த்தியது. படையினரின் இந்தத் தொந்தரவை மக்கள் வெறுத்தார்கள். இந்தியர்கள் மட்டில் மக்களுக்கு இருந்த ஆதரவு ஒழிந்து போயிற்று. இந்த நடவடிக்கைகளின் போதே மக்களுடைய வீடுகளின் பெளத்திரம் சிதைக்கப்பட்டது. இந்தியர் புரிந்த மிக மோசமான அடாவடித்தனங்களும் இடம் பெற்றன. இந்தியப் படைத்தளபதிகளும் சாதாரண படையினரும் கலகங்கள் நடக்கும் வட இந்தியாவில் இருந்து தமிழர் தாயகத்திற்கு . இறக்கப்பட்டவர்கள். தனது விழுமியங்களிலும் பண்பாடுகளிலும் பெருமை கொண்டிருந்த, இந்த அமைதி காக்கும் யாழ்ப்பாண சமுதாயத்தின் வாழ்க்கை முறையும் மொழியும் பண்பாடும் அவர்களுக்கு முற்றிலும் வேறானதாக காணப்பட்டது. அவர்களுடைய கண்களுக்குப் புலனாகாத எதிரி, அடிக்கடி பொதுசன சமுத்திரத்தில் கரைந்து காணாமல் போய் விடுவதால், அனைத்து தமிழ் மக்களும் ஒன்றில் புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்று இந்திய இராணுவம் கருதியது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தன்மையையோ வரலாந்றையோ இந்தியப் படையினர் சிறிதும் அறிந்திருக்கவில்லை. மேலும் முக்கியமானது என்னவென்றால், இந்த அமைதி காப்பாளர்கள் தமிழ் பகுதிகளில் தங்களுக்கு வழங்கப்பட்ட மனுவின் நோக்கம் என்ன என்பதை மறந்துவிட்டார்கள். நெறிமுறைக் கட்டமைப்புடன் ஒழுகும் தலைமையின் வழிகாட்டல் இல்லாததால், இந்தியப் படைகள் இலக்கின்றி கிராமங்களில் அலைந்து திரிந்து புலிவேட்டை என்ற பெயரில், பொதுமக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடுமை புரிந்தார்கள். வீடுகளுக்குள் புகுந்த இந்தியப் படையினர், இரக்கமற்ற காடையர்களாக மாறினர். மானுட கண்ணியத்தின் அடிப்படைச் சீலங்களையே மீறினார்கள். பாலியல் வன்முறை, திருட்டு, காடைத்தனம், குற்றமற்றவர்களை தாக்குதல், ஆகியவை இந்தத் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் கிரமமாக நடந்தன. சந்தேகத்துக்கு உரிய தனி ஒருவரை அடையாளம் காட்டுவதற்கு ஆயிரமாயிரம் பொதுமக்கள் ஊர் மைதானங்களுக்கு நிர்ப்பந்தமாக அழைக்கப்பட்டு, பாரிய அடையாள அணிவகுப்புக்கள் நடத்தப்பட்டன. பல முதியவர்களை இந்தியப் படையினர் பலவந்தமாக வீட்டுக்கு வெளியே இழுத்து, வீதியோரமாக பல மணிநேரம் சுடு வெய்யிலில் நிறுத்தி வைத்ததை அந்த முதியவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள். வயது வித்தியாசம் பார்க்காது, எல்லாப் பொதுமக்களுமே மிகக் கீழ்த்தரமான சிறுமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள். சந்தேகத்தில் கைதானவர்கள் வெளித் தொடர்பு முற்றிலும் மறுக்கப்பட்டு, வெவ்வேறு தடுப்பு நிலையங்களில் இடப்பட்டார்கள். விசாரணை நடவடிக்கை ஒரு சாதாரண நடவடிக்கை ஆகியது. ஆயுதம் தரித்த படையினர் முன்னிலையில் பாதுகாப்பு எதுவும் இல்லாத பெண்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இரங்குமாறு கேட்டு அவர்கள் கெஞ்சிக் கதறினாலும், பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்கள். கூட்டு பாலியல் வன்முறையும் பெரிதும் இடம் பெற்றது. அறுபது வயது மூதாட்டி ஒருவர் தமக்கு நேர்ந்த சிறுமையை என்னிடம் கனியே விபரித்தார். ஆயுதம் தரித்த மூன்று இள வயதுப் படையினர் திடீரென்று வட்டுக்குள் பாய்ந்து புகுந்து, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்து அசைய முடியாது கிடந்த முதிய கணவரிடமிருந்து தம்மைப் பிரித்து அறை ஒன்றினுள் இழுத்துச் சென்று, கூட்டாக பாலியல் வன்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அவலமான துன்பியல் நிகழ்வை என்னிடம் கூறும்போது, கண்ணியமான அந்தப் பெண் தன் கண்ணீரை அடக்க சிரமப்பட்டார். அலுமாரி, பெட்டகங்களைத் துளாவி, பெறுமதி வாய்ந்த நகைகள், பணம் விலையுயர்ந்த பொருட்கள், இனி என்னென்ன பண்டங்கள் தம்மைக் கவர்கின்றனவோ அவற்றையெல்லாம் இந்தியப் படையினர் அபகரித்த போது, மக்களின் அந்தரங்க வாழ்வின் தனித்துவமும் பங்கப்பட்டது. படை நடவடிக்கை என்று வரும் போதெல்லாம், தமது இராணுவ உணவுக்கு மேலதிக ஊட்டமாக தோட்டத்தில் இருக்கும் கால்நடைகளைப் பிடித்துச் செல்வதும் ஒரு வழமையாகியது. ஒழுக்கமோ கட்டுப்பாடோ இல்லாமல், தங்கு தடையற்று குரூரத்தனத்தையும் பாலியல் வன்முறையையும் வடக்கு, கிழக்கு முழுவதிலும் இந்தியப் படையினர் கடைப்பிடித்ததால், பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழ் மக்களின் தேசியப் பெருமையுணர்வு பாடுகேடாக அவமானப்படுத்தப்பட்டது. அதே சமயம் இந்திய ஆக்கிரமிப்புப் படை மட்டில், ஆழமான வெறுப்பையும் உள்ளே கனன்று கொண்டிருக்கும் சீற்றத்தையும் வளர்த்தது.
நாட்கள் வாரங்களாயின. இராணுவ நடவடிக்கைகள் பரவிச் செல்ல, அதற்குச் சமதையாக மக்களிடம் அச்சமும் ஆழம் பெற்றது. ஆனால், நெருக்கடியின்போது, மக்கள் வறுகொண்டெழுந்து சவாலுக்கு முகம் கொடுப்பது இயல்பு. எதிர்பாராத கோணங்களில் இருந்து துணிச்சலும் தியாகமும் மேம்பட்டன. படையினரின் அடாவடித் தனைத்தையும் மீறி, மக்களின் மனவுறுதி உடைபடாது தாக்குப் பிடித்தது, ஆகவே, நாம் வாழ்ந்த பகுதிகளில் அச்சம் பரவியிருந்தாலும், துணிச்சலும், அனுதாபமும் கொண்ட மக்கள் தங்கள் வீடுகளை எமது பாதுகாப்பிடமாகப் பயன்படுத்த இடமளிப்பது தொடர்ந்து நடைபெற்றது. அதே சமயம் இந்தியர் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய சுந்றிவளைப்புத் தேடுதல் எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் நாம் நன்கு அறிந்திருந்ததால், பிரச்சினை வரக்கூடும் என்று எமக்குத் தோன்றிய பகுதிகளை அடிக்கடி தவிர்த்தோம். ஆனாலும் வடமராட்சியை படிமுறையாகத் தேடும் முயற்சி முடிந்தபின், திடீர், திடீரென்று ஆங்காகங்கே தேடுதல் நடத்துவதில் படையினர் ஈடுபட்டனர். தப்பிப் பிழைக்கும் எம் முயற்சியில் இது ஒரு புதிய சிக்கலை தோற்றுவித்தது. எந்த ஒரு பகுதியையும் அவர்கள் குறிவைத்து திடீர்த் தேடுதல் நடத்தலாம். அப்படியானால், நாம் வாழும் வீடு, இரவோ பகலோ எந்த நேரமும் தேடுதலுக்கு உள்ளாகலாம் என்ற அந்தரித்த நிலை எமக்கு! ஒரு கத்திமுனையில் சீவியம்.
5.4 யாழ்ப்பாண சொத்துடமை முறை
கரணவாய் கிழக்கில் பாதுகாப்பான வீடொன்றுக்குச் சென்றோம். யாழ்ப்பாண சமூக கட்டமைப்பை பரவலாகப் பிரதிபலிக்கும் குடும்பக் கட்டமைப்பே இங்கு நிலவியது. இந்தப் பாதுகாப்பான வீட்டில் நிலவிய குடும்ப உறவுகள் நடைமுறையில் உள்ள தாய் வழிச் சமுதாய அமைப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சமூக அமைப்பில் தாய் வழிச் சமுதாய விதிப்படியான பரம்பரைச் சொத்துரிமை முறையே வழக்கில் உள்ளது. ஒரே காணி எல்லைக்குள் அவர்களுடைய வழித்தோன்றல்களும், அடுத்தடுத்தே அமைந்த இரண்டு மூன்று வீடுகளில் வாழ்வது, குடும்ப உறவுகளில் நிலவும் பொதுவான கட்டமைப்பாகும். இங்கே ஒரு பெரிய காணிக்குள் இரண்டு சராசரி வீடுகள் இருந்தன. நவீன வசதிகளுடனான வீடு இளைய பெண்ணுக்கும் அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் உரித்தாக இருக்க பழைய வடு, வயதான அவருடைய தயாருக்குச் சொந்தமாக இருந்தது. அவர் களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லையாயினும், திருமணத்தின் போது வடுகள் பெண்களுக்கே சீதனமாக வழங்கப்படுவதால், இந்த இரண்டு வீடுகளும் பெண்களுக்கே சொந்தமானவை என்று நாம் ஓரளவு உறுதியாக நம்பினோம். நிச்சயமாக, இரண்டு வீடுகளில் ஒன்றும், இனிக் காணி முழுவதும், குடும்பத்தின் ஒரே மகளுக்கே வழங்கப்பட்டிருக்கும். தேச வழமையில் வரிக்கப்பட்டதுபோல, பெண்களுக்கே சொத்துடமை செல்லும் புரதான பாரம்பரியச் சட்டம் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். இந்தக் காணி யில் குடும்ப உறவுகள் எவ்வாறு வழிப்படுத்தப்படூுகின்னனவோ, அதே போல தன்னில்தானே தங்கி நிற்கும் ஒரு சிறிய வீட்டு பெருளாதாரமும் வழிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றுள் முதல் முக்கியமானதாகத் தென்னை மரங்களை எடுத்துக் கொண்டால், இங்குள்ள முதிய பெண், தமது இளவயதில் அவற்றை நாட்டியிருப்பார். அவை குடும்பத்துக்குத் தேவையான தேங்காய்களை வழங்கிக் கொண்டிருக்கும். தமிழ் மக்களின் அனைத்துச் சமையல் பாகங்களிலும் தேங்காய் ஒரு முக்கிய இடம் பெறுகின்றது. தென்னையில் இருந்து கிடைக்கும் ஓலை அடி மட்டைகளை சிக்கனமாக வாழும் இந்தப் பெண்கள் விறகாகப் பயன்படுத்துவார்கள். ஓலையை ஒன்றில் காயவைத்து, கிடுகாகப் பின்னி, கொட்டில் கூரைகளை வேயவோ வீட்டைச் சுற்றி வேலி அடைக்கவோ பயன்படுத்துவார்கள். அல்லது விற்றுச் சிறுவருவாய் பெறுவார்கள். பச்சை ஓலையை வார்ந்து அதன் நடுவில் உள்ள ஈர்க்கிலை ஒன்றாகக் கூட்டிக் கட்டினால் அது, வளவு கூட்டும் விளக்குமாறாகும்.
பெரும் பயன் தருவது என்றால் அது பனைமரமே. யாழ்ப்பாண இயற்கைச் சூழலின் குறிய்டே பனைதான். எங்கு பார்த்தாலும் பனை காடாக நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும். மர உச்சியில் உள்ள ஓலையில் இருந்து அடி வேர் வரை இது மக்களுக்குப் பயன் தரும். ஓலையானது வீடு வேய, வேலி அடைக்க, மாட்டுத்தீனியாக உதவும். பழம் சாறு நிறைந்தது, இனிக்கும். பூவின் தண்டிலிருந்து உள்ளூர் மதுவான கள் வடிக்கப்படும். பனை மட்டை விறகாகிறது. அதன் வைரமான தண்டு பல நூற்றாண்டுகளாக தமிழ் வீடுகளின் நடுத்தூணாக விளங்குகிறது. கிழங்கு ஓடியலாக உலர வைக்கப்பட்டுவெவ்வேறு வகை உணவாகிறது. வளம் நிறைந்த இவ்விரண்டு மரங்களும், உள்ளூர் பொருளாதாரத்தின் அழிநாதடமாக அமைகின்றன. இவற்றை ஓட்டிய வெவ்வேறு பணிகள் வீட்டுப் பெண்களை நாள் முழுவதிலும் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன.
வீட்டு வளவினுள், காணியில் ஒரு சிறிய பகுதி, துப்புர வாக்கப்பட்டு, அங்கு மிளகாயும் வெங்காயமும் நடப்பட்டிருந்தன. கத்தரி பூக்கத் தயாராக இருந்தது, இதன் காய்கள் நாளாந்தம் வீட்டுக் கறியாக இருக்கும். வீட்டுத் தேவைக்கு மிஞ்சிய கத்தரிக்காய் உள்ளூர்ச் சந்தையில் விற்பனையாகி, வீட்டுக்குச் சிறு வருமானம் தரும். கிணந்றைச் சுற்றி கத்தையாக வாழை மரங்கள். கிணற்றைச் சுற்றியுள்ள அழுக்கு நீர் வடிகாலிடப்பட்டு வாழைக்குப் போகும். வாழை செழிக்க அந்த நீர் போதும். உணவின் மேல் வாழைப்பழம் உண்பர். பிட்டு காலை உணவாக அல்லது இரவு உணவாக அமையும். மீதமாகும் வாழைக் குலைகளும் சந்தைக்குப் போகும். வாழைப் பொத்தி எனப்படும் வாழைப்பூ ஒரு சிறப்பான மரக்கறியாகத் தயாரிக்கப்படும். வாழைக் குலையை வெட்டியவுடன், மரம் நிலமட்டத்துக்கு வெட்டப்பட்டு, தண்டு மாட்டுக்கு உணவாகிறது. வெட்டிய இடத்தில் உள்ள வாழைக் கிழங்கில் இருந்து புதிய மரம் வளரும். வீட்டில் வளரும் கோழி முட்டை கரும். கறியாகவும் மாறும். ஆடும் மாடும் பால் தரும். மரங்களுக்கு பசளையும் தரும்.
இவ் அசையும் சொத்துக்களும் அசையாச் சொத்துக்களும் இருந்தபோதிலும் குடும்பத்தின் முக்கிய தேவையான பணம், தட்டுப்பாடாகவே இருந்தது. ஆகவேதான் பிள்ளைகளின் தந்தை வீட்டில் இல்லை. தாயே வீட்டுத் தலைமையைப் பொறுப்பேர்றிருந்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு சின்னப் பையன். ஒரு பதினான்கு வயதுப் பையன். ஒரு பதின்மூன்று வயது குமர்ப் பெண். எதிர் காலத்தில் பல காரணங்களுக்காக இவர்களுடைய தந்தை பணம் சம்பாதித்தாக வேண்டும். அவர்களுடைய முதந்கவலை, பிள்ளைகளின் உயர் கல்வியே. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அல்லது வேறேதாவது சிறீலங்கா பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நுழைவுப் புள்ளிகள் பிள்ளைகளுக்குக் கிடைத்து விட்டால் அவர்களுடைய எதிர்காலக் கல்வி பிரச்சினையாக இருக்காது. ஆனால், பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்குச் சிங்களவரைக் காட்டிலும் தமிழர்கள் கூடுதலான தேர்வுப் புள்ளிகள் பெற வேண்டும் என்பதால், போட்டி கடுமையாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் இடம்பிடிக்க ஆயிரமாயிரம் பேர் போட்டி போடுவார்கள். சிலருக்கே அனுமதி கிடைக்கும். மகனார் கெட்டிக் காரனாக இருக்கலாம். ஆனால் பல்கலைக்கழக இடம்பெறுவதற்கு தேவயைன உயர்ந்த தேர்வுப் புள்ளிகள் பெறக்கூடிய அதீத திறமை இல்லாவிட்டால், உடனே அவரை வெளிநாட்டுக்கு, வெளிநாட்டுக் கல்விக்காக அனுப்பப் பெற்றோர் முனைவர். அந்த மகன், தமது தொழில் கல்வித் தகைமைகளைப் பெற்றுவிட்டால், உழைத்துச் சம்பாதித்து, தமது தம்பியாரின் கல்வியையும், தங்கையின் சீதனத்தையும் பொறுப்பு ஏந்கலாம். மகளுடைய சீதனமே, பெற்றோருடைய இரண்டாவது கவலையாக இருக்கும். தான் படித்து, ஒரு தொழில் பார்க்க வேண்டும் என்று பிள்ளை விரும்பலாம். ஆனால் தன் மகளுக்கு ஒரு நல்ல கல்யாணம் பேசி, ஏற்பாடு செய்வதே தமது மிகப் பெரும் கடமை என்றே யாழ்ப்பாண பெற்றோர் கருதுவர். அது பலிதமாவதற்கு, குடும்பத்துக்கு நிறையப் பணம் வேண்டும். பரம்பரைச் சொத்து மகளுக்கே செல்லும் என்ற உத்தரவாதம் இருந்தாலும், கொழுத்த சீதனம் எதிர்பார்க்கும் யாழ்ப்பாணத்தாருக்கு அது போதாமல் இருக்கும். சீதனத்துக்கு மேலே பண ரொக்கமும் எதிர்பார்ப்பார்கள். ஆகவே, பெற்றோரின் கடப்பாடுகளும் சமூக உயர் வேணவாக்களும் நிறைவேற்றப்பட வேண்டுமானால், குடும்பத் தலைவர் தொழில் வாய்ப்புத் தேடி வெளிநாடு செல்வது அவசியமாகிறது. விதவை நிலை, திருமண முறிவு, கணவன் காணாமல் போதல், வெளிநாட்டில் கணவன், போன்ற வெவ்வேறு சமூக காரணங்களால் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தினிடையே குடும்பத்தின் தலைவராக பெண் அமைவது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தில், மூதாட்டியார் நண்ட கால விதவையாவார். மிகக் கொடுமையான நாட்டு நிலையில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, தங்கள் குடும்பத் தையும் காணி பூமிகளையும் மன உறுதியுடனான இந்த இரண்டு பெண்களும் நிர்வகிக்கும் நிலையை இங்கே காண முடிந்தது.
மூதாட்டியின் வீட்டில் தங்கியிருக்கவே எமது சிறிய குழு சென்றது. இரண்டு பெண்களுக்குமே பாரிய பொறுப்புகள். ஆனாலும் இரண்டு பேருமே விரும்தோம்பலில் உயர்ந்து நின்றார்கள். எமக்காக உணவு சமைத்தார்கள். தங்கள் உணவை எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். பிள்ளைகள், குறிப்பாக மூத்த பையன், கிரமமாக எம்மைப் பார்க்க வருவார். ஒரு சுமூகச் சூழலை இங்கே காண முடிந்தாலும், இந்த வீடு எமக்குத் துரதிர்ஷ்டவசமாகவே அமைந்தது. பல தடவை இராணுவ சுற்றி வளைப்புக்கள் நடந்தன. மறு நாள் அதிகாலை சுற்றி வளைப்பு நடக்கப் போவதாக எமக்கு ஒரு தடவை முன்கூட்டியே தகவல் கிடைத்தது. ஊர் நன்றாக அடங்கிய பின்னிரவிலேயே தகவல் கிடைத்த போதிலும் உடனடியாக நாம் இடம் மாற வேண்டியிருந்தது. நிலாவொளியில் வயல் வரப்பு வழியாக எமது குழு ரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்தது. ஒழுங்கைகளில் உள்ள வளைவு நெளிவுகளில், போராளிகள் சைக்கிளின் முன்தண்டிருக்கையில் எம்மை ஏற்றிக் கொண்டு அடுத்த கரிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். நேரம் போகப் போக மன அங்கலாய்ப்பு அதிகரித்தது. மரணமே நேர்ந்தாலும் ஒருவரில் இருந்து ஒருவர் பிரிக்கப்படக்கூடாது என்பதில் பாலாவும் நானும் உறுதியாக இருந்தோம். எம்மிடையே ஒருவரில் இருந்து ஒருவர் பிரிக்கப்படலாம் அல்லது பிடிப- டலாம், அல்லது கொல்லப்படலாம் என்ற அச்சமே, முன்னைக்காட்டிலும் எப்போதுமே எம்மை ஓட்டியபடி வைத்திருந்தது. எனவே கடும் அபாயம் வருகிறது என்று தோன்றும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்காக அருகிலேயே இருக்க வேண்டும் என்ற உணர்வையும் தந்தது. எம்மிருவரையும் பிரித்து வைப்பதால் உயிர் தப்புதற்கான வாய்ப்பு அதிகம் என்ற கருத்து எப்போதாவது தெரிவிக்கப்பட்ட மறுகணமே நாம் அதை ஒரேயடியாக நிராகரித்து விடுவதால், அந்தப் பேச்சு எடுபடுவதே முற்றாக நின்றுவிட்டது. கரவெட்டியில் உள்ள கத்தோலிக்க கன்னியர் மடம் ஒன்றில் கன்னியர் போல நான் வேடமிட்டு இருக்கலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதை நான் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டேன்.
இரவு வேளைகளில் அடிக்கடி நானே பாலாவின் விழிகளாகவும் இருக்க வேண்டியதாயிற்று. ஒழுங்கைகளுூடாகவும் செல்லும் தருணங்களில் நானே அவருடைய விழியானேன். இரவில் பாலாவுக்கு பார்வை மங்கல். அடிக்கடி எனது தோளை அணைத்தபடி வர, ஒழுங்கையில் கூட்டிச் செல்வேன். அதே சமயம் அந்தக் குழுவில் நான் ஒருத்தியே பெண். ஆகவே திருமணம் மூலம் கிடைத்த நெருங்கிய உறவு பெரும் பயன் தந்தது, எனது கண்ணியத்தையும் தனித்துவத்தையும் பேண பாலா உதவினார். சின்னச் சின்ன விடயங்களே எனக்கு முக்கியமாக இருந்தன. கழிப்பிட வசதிகளில் எனக்கு முன்னுரிமை வழங்கப்படவும், எனக்கு தேவைப்பட்ட போதெல்லாம் வசதி ஏற்படுத்தக்கூடியதாகவும் பாலா பார்த்துக் கொண்டார். கழிப்பிடத்துக்கு உள்ளே இருப்பஹிடம் அன்ரிக்கு கழிப்பிடம் தேவை என்று பாலா கத்துவது அவ்வப்போது நடக்கும். நான் குளிக்கும்போதும் அது நடக்கும். யாழ்ப்பாண வீடுகளில் பெரும்பாலானவற்றில், குறிப்பாக பழைய வீடுகளில் குளியல் அறை வீட்டினுள் இருப்பதில்லை. வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலேயே மக்கள் கழுவுவது வழக்கம். கிணற்றிலிருந்து நீரை அள்ளி, வாளியால் குளிர் நீரை மேலில் ஊற்றிக் கொண்டிருக்கும்போது, மேலில் மெல்லிய காற்றுத் தடவிச் செல்லும்போது, அந்த இயற்கை நிலை தரும் சுகானுபவம், அதை அனுபவித்தவர்களுக்கே புரியும். இளைஞர்கள் கிணற்றடியில் தங்கள் சாரத்தில் அல்லது உள்ளாடையுடன் கூடி நின்று யார் தம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் ஆறுதலாகக் குளித்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் சாறத்தை தங்கள் மார்புக்கு மேலே குறுக்குக் கட்டாகக் கட்டியபடி குளிப்பார்கள். ஆனாலும் குளியல் என்பது ஆண்களைப் பொறுத்த வரையில் ஆரவாரமாகவே இருக்கும். இப்படியான கழுவும் முறையை நான் கடைப்பிடிக்கவும் இல்லை. அது எனக்கு பிடிபடவும் இல்லை. இயற்கையாக நின்று, வாளிகளில் நிரப்பிய நீரில், மூடிய குளியல் அறைக்குள் நின்று கழுவுவதே எனக்கு பழக்கப்பட்ட ஒன்று. அநேகமாக இருட்டும் வரை குளிப்பதற்காக நான் காத்திருப்பதுண்டு. எல்லோரையும் பாலா விரட்டிவிட்டு, இடத்தை வெளியாக்கி, நான் தனிமையில் குளிப்பதற்கு வசதி ஏற்படுத்துவார். அதன் பின், கிணற்றில் இருந்து நீர் இறைத்து என்மேல் ஊற்றுவார். அப்படியான தருணங்களில் எமது நிலைபற்றியும் எமது வாழ்க்கை பற்றியும் கூடிப் பேசுவோம். குளிக்கும் வேளைகளிலேயே காப்பு உணர்வும் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இராணுவச் சுற்றிவளைப்பு இருக்கிறதா என்பதை பாலா கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கும். நான் இயற்கையாக நின்று குளித்துக் கொண்டிருக்கும் போது அல்லது கழிப்பறையில் இருக்கும்போது இராணுவ சுற்றி வளைப்பு நடக்கக் கூடுமோ என்ற அச்சம் எப்போதுமே எனக்குள் இருந்தது. இதனால், எமது குளியலை ஆறுதலாக நடத்தாது அவசர அவசரமாகச் செய்து முடிக்கும் நிர்ப்பந்தமே பெரும்பாலும் நிலவியது.
5.5 ஒரு பண்பான யெண்
தலைமறைவாகத் தப்பிப் பிழைக்கும் வழிமுறைகளை நாம் உருவாக்கியிருந்தோம். இந்திய இராணுவத்தின் வெவ்வேறு நடவடிக்கைகளுக்கும் அவை ஈடூுகொடுத்தன. உள்ளூர் மக்களின் அச்சத்தையும் அவை தவிர்த்தன. பாதுகாப்பான வீடுகளுக்கு இடம் மாறுவதைப் பொதுவாக இரவில் வைத்துக் கொண்டோம். எமது நகர்வில் புதிரையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் விடியற்காலைக்கு முன்னதாகவும் இடம்பெயர்ந்தோம். பகலில் பயணம் புரிவதில்லை என்று நாம் பிடிவாதமாக இருந்ததில்லை. தவிர்க்க முடியாத அல்லது எதிர்பாராத ஒரு சூழலில் பகலில் இடம் மாறுவது எனத் தீர்மானித்திருந்தோம். இந்திய இராணுவத்தின் தண்டனைக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தில் எமக்கு உதவாமல் பலர் ௧ம் கதவுகளை அடைத்தனர். எனவே பழைய இடங்களை நாடும் புத்திசாலித்தனமற்ற நிலையிலும் நாம் இருந்தோம். நாம் எங்கே சென்றாலும் இந்தியப் படை காவல் உலா அணிகளைக் காண நேர்ந்தது. எனவே இருபத்திநான்கு மணி நேரமும் விழிப்போடு இருந்தோம். இரவுக் காவல் உலாவை அவர்கள கிரமமாக நடைமுறைப்படுத்தாதபோதிலும் எந்த நேரமும் எந்த இடத்திலும் படையினர் வரலாம் என்று எதிர்பார்த்தோம். ஆகவே ஒரு பின்னிரவில், நவிண்டிலில் எமது ஆதரவாளர்களில் ஒருவரான ரதியின் வீட்டை நாம் சென்றடைந்தபோது, கரவெட்டியிலிருந்து நாம் புரிந்த பயணத்தின்போது பருவ மழையில் சிக்கி தெப்பமாக நனைந்திருந்ததால், ரதியின் உபசாரம் எனது வாழ்வில் கிடைத்த மிகக் குதூகலமான, மறக்க முடியாத வரவேற்பாக மனதில் பதிந்தது. |
ரதியின் வீட்டை நாம் சென்றடைந்தபோது, அவர் எம்மை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சூடான பிட்டு அடுப்பில் இதமாக மணந்து கொண்டிருந்தது. மெழுகுவர்த்தி ஒளியில் அவர் தரையில் உட்கார்ந்து கூடுதலான பிட்டு அவிப்பதற்காக மாவைக் குழைத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி அவருடைய மூன்று பிள்ளைகளும் சமையலில் உதவி புரிந்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். எமது போராளிகளிற் சிலரும் அங்கே உதவி புரிந்து கொண்டிருந்தார்கள். எம்மைக் கண்டதும் எம்மை வரவேற்க ரதி உடனே எழுந்து வந்தார். மழை நீர் எம்மிலிருந்து சொட்டிக் கொண்டிருந்தபோதும், எமக்கென கவனமெடுத்து ஆயத்தப்படுத்தியிருந்த அறைக்குள் எம்மை இட்டுச் சென்றார். அந்த அறை தந்த வரவேற்பு என்னை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது. எளிமையான மிகச் சுத்தமான அறை. இரண்டு கட்டில்கள், ஒவ்வொன்றும் எதிர் எதிர்ச் சுவர்களுக்கு அருகே. ஒவ்வொரு கட்டில்களுக்கும் அருகே குட்டிப் படுக்கை மேசை. ஒரு விடுதியின் அறையை அது நினைவூட்டியது. ஆனால் ரதியின் வருக வருக என்ற உணர்வும் அங்கே தனியாகத் தெரிந்தது. படுக்கை மேசையில் வெந்நீர்க் குவளைகள். அருகே தேனீர், சீனி, பால்மா!
என்னை வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய தொட்டி அருகே கூட்டிச் சென்றார். கொங்கிநீற்றால் கட்டப்பட்ட குளிக்கும் தொட்டிபோல அது இருந்தது, தோட்டத்துக்கு இறைப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் தோட்டக்காரர் நீரைத் தேக்கி வைத்த தொட்டி அது. நீர் நிறைந்திருந்தது. என்னிடம் ஒரு துவாயையும், புதிய சவர்க்காரம் ஒன்றையும் தந்தார். வெதவெப்பான அந்த பருவ மழையில் நின்று குளித்தேன். கதகதப்பான மழை பொழிந்து கொண்டிருக்கும்போது கிணற்றடியில் நின்று குளிப்பது. யாழ்ப்பாணத்தில் ஒன்றும் புதுமையல்ல. இளைஞர்களிடைய அது பொதுவான நடைமுறை. இதைப் பார்க்கும்போது ஒரு முரண்பாடான செய லாகத் தோன்றினாலும், யாழ்ப்பாண வாழ்க்கையில் சிறப்பாகக் காணப்படும் அனுபவங்களில் இதுவும் ஒன்றாகும். குளித்து விட்டு வந்ததும் ரதி எமக்கு உணவு பரிமாறினார். சுடச் சுட மென்மையான பிட்டு. சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயமும், பச்சை மிளகாயும் இட்டு முட்டைப் பொரியல். கடைசியில் பழுத்து இனித்த கதலி வாழைப்பழம். இந்த வீட்டுக்கு நாம் இப்போதுதான் வந்திருந்தோம். நாம் அங்கு இருப்பது யாருக்கும் தெரியாது. படையினரும் இன்னமும் காவல் உலா புறப்படவில்லை. அமைதியாகக் தூங்கலாம் போலப் பட்டது. தூங்குவதந்காகக் கண்களை மூடும்போது அப்படியான ஒரு அமைதி உணர்வு வந்ததென்றால், நான் கடுமையான மன நெருக்குவாரத்துக்குள் சீவித்திருக்கின்றேன் என்பதுதானே அர்த்தம்!
இந்தக் கல்வீடு மிகப் பெரியது அல்ல என்றபோதிலும், ரதியின் பொருளாதார நிலைக்கு முற்றிலும் பொருந்தாத ஒன்று. இன்னமும் முப்பது வயதை எட்டாத ரதி மெலிந்த தோற்றம் உடையவர். திருமணம் புரிந்ததில் இருந்து, ஏமாற்றம், துயரம், நிதி நெருக்கடி போன்றவற்றிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூத்த மகனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதாக இருக்க வேண்டும். ஆகவே, இருபது வயதைத் தாண்டியவுடன் ரதி திருமணம் செய்திருக்கலாம் என்று நாம் ஊகிக்கலாம். அவருடைய கணவர் ஒரு வர்த்தகர். தென்னிந்தியா விலேயே அவருடைய கூடுதலான வர்த்தகத் தொடர்புகள். அவர் வட்டுக்கு வருவது ஒழுங்காக இருக்கவில்லை. இறுதியில் வராமலேயே நின்று விட்டார். ரதியின் கணவர் தென்னிந்தியாவிலேயே தமக்கென ஓர் இரண்டாவது மனைவியைத் தேடிக் கொண்டதாகக் கேள்வி. அவர் உண்மையில் ரதியையும் மூன்று பிள்ளைகளையும் கைவிட்டிருந்தார். வருவாயைத் தேடுவதற்கான தொழிற்பயிற்சி எதுவும் இல்லாத ரகி, தமது பிள்ளைகளுக்கு உணவும் உடையும் வழங்க முடியாது திணறினார். தன்னுடைய கஷ்டங்களை பொறுமையோடு சகித்துக் கொண்ட ரகி. தமது பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். பிள்ளைகளின் கல்வி வாய்ப்புக்கு குறுக்கே தமது வறுமை தடையாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர் குறியாக இருந்தார். தனது குடும்பத்தின் மீட்சி, தமது பிள்ளைகளின் கல்வியிலேயே தங்கி யிருப்பதாக ரதி கருதினார். உண்மையில் பொதுவான குமிழ்ச் சிந்தனையே அதுதான். இதற்காக அவர் தன்னை வருத்கி, தனது வளங்கள் அனைத்தையும் செலவிட்டார். போர்களினால் அவர்களுடைய வாழ்க்கையில் இடையுறுகள் ஏற்பட்ட போதிலும், பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும் என்பதில் ரதி, மன உறுதியோடு பிடிவாதமாக இருந்தார். நாம் அங்கே இருந்த போது ரதி தமது கதை மைக் கூறினார். சிறீலங்கா இராணுவத்தின் விடுதலை நடவடிக்கை யின்போது (ஒப்பரேஷன் லிபரேஷன்) இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலின்போதும், தமது பிள்ளைகளைக் காப்பாற்ற அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை விளக்கினார். வல்வெட்டித்துறையில் குமது வீட்டிலே பதுங்குகுழி இல்லாததால், தாமும் அச்சத்தால் நடுங்கிய கமது பிள்ளைகளும் கட்டிலுக்கு கீழே ஒடுங்கிக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். அவருடைய வாழ்க்கை வரலாறு பரிதாபகரமானது. இந்தத் துயரத்துக்கு முகம் கொடுக்க அவர் எங்கிருந்துதான் மனவலிமையைப் பெற்றாரோ என்று நான் வியந்தேன். மேலை நாடுகளில் கைவிடப்படும் பெண்களின் சமூக-பொருளாதார நிலையோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாணத்தில் கைவிடப்படும் பெண்களின் நிலை, வெகுவாக வேறுபட்டது. கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு உதவி புரிய முன்வராவிட்டால், இவர்கள் கதி அதோ கதிதான். அரச நலன் புரி உதவிகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. தமது பிள்ளைகளுடைய வயிற்றை அன்றாடம் நிரப்புவதற்கு வேண்டிய பணம் தப்ப தொட்டாட்டு வேலைகளைக் கூட ரதி தேடினார்.
ஓர் இரவு, புலிகளுடைய வடமராட்சித் தளபதி சூசை எம்மைப் பார்க்க வந்திருந்தார். சுற்றிவளைப்புக்களில் இருந்து சூசை நூலிழையில் தப்பியிருந்தார். அவர் பிடிபட இருந்தபோது, அவரைப் பாதுகாத்துக் கொண்டவர்களின் சமயோசித புத்தியால் அவர் காப்பாற்றப்பட்டார். சுருட்டி வைக்கப்பட்ட பாய்க்குப் பின்னே அவரைப் பதுக்கி விட்டு, துணிமணிகளையும் அவருக்குமேல் குவித்து விட்டிருந்தார்கள். அவருடைய நல்ல காலம், இந்தியர்கள் அங்கே துளாவவில்லை. பொதுவாக எவரும் ஒளிந்திருக்கக்கூடிய இடம் பாய்ச்சுருள் ஆதலால், அதனுள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் படையினர் நினைத்திருக்க வேண்டும். அதனால், பாய்ச் சுருளை விட்டுவிட்டார்கள் போலும். நூலிழையில் உயிர்தப்பிய சம்பவங்கள் அந்த நாட்களில் அதிகம்! தப்புவதற்கும் ஒளித்திருப்பதற்கும் கடைப்பிடிக்கப்பட்ட புதுப் புது வழிகளும் அதிகம். இந்தியர்கள் கீழே அறைகளில் தேடிக் கொண்டிருக்கும்போது, போராளிகள் பல மணிநேரம் வீட்டுக் கூரையில் ஓட்டிக் கிடந்திருக்கிறார்கள். வைக்கோல் போருக்குள், புகையிலை சூடுகளுக்கு இடையில், புதைந்து கிடந்திருக்கிறார்கள். அந்தரித்த வேளைகளில் மலக்குழிக்குள் பதுங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால், இருண்ட பின்னரே நடமாடுவது புத்திசாலித்தனம் என்று சூசை உணர்ந்து கொண்டார். கால நிலையும் கடலும் சாதகமாக அமையும்போது, படகுமூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு புலி இயக்கத் தலைமை பணிப்புரை வழங்கியிருப்பதாக சூசை எம்மிடம் தெரிவித்தார். ஆனால் மேலும் சில காலம் நாம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ரதியின் வீட்டில் நாம் சில நாட்களே தரித்திருந்தோம். அந்த நாட்களில் எதுவித இடர்பாடுகளோ குழப்பங்களோ எமக்கு வரவில்லை. ஆனால் நீண்ட நாட்கள் அங்கே தரித்திருப்பது புத்திசாலித்தனமாகப் படவில்லை. அப்படித் தங்கியிருந்தால் எல்லோருக்கும் அது ஆபத்தாக முடியும் என்பது எமக்குத் தெரியும். எனவே அங்கிருந்து வெளியேறினோம்.
5.6 கண் இறுக்கும் தெொழிலானர்
இந்தியரிடம் இருந்து நாம் தப்பி ஓடிக் கொண்டிருந்துபோது கிடைத்த அனுபவங்களில், மனம் நிறைந்தவையும் இருந்தன. கசப்பானவையும் இருந்தன. யாழ்ப்பாண சமுதாய அமைப்பின் வெவ்வேறு மட்டங்களில் உள்ள மக்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. வடமராட்சியின் இதயக் கிராமமான துன்னாலை என்ற புரதான கிராமம் ஒன்றிலே நாம் தங்கியிருக்க சென்றபோது, கள் இறக்கும் சமுதாய மக்களின் விருந்தோம்பலையும் தாராள குணத்தையும் சுகிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தக் கூட்டுக் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளின் உறுதியான ஆதரவாளர்கள். ஒரு குடும்பச் சிற்றூர் என்று அவர்கள் வாழ்ந்த இடத்தைக் கூறலாம். அந்த வடுகளில் ஒன்று இரண்டு அறைகள் கொண்டது. அவற்றின் வாயில்கள் ஒரு அகன்ற விறாந்தையோடு ஓட்டியவை. அடுக்களை, தனியான, சுத்தமான மண் குடிசை. இங்கேயே குடும்பப் பெண்கள் ஒன்றுகூடி, ஒற்றை விறகடுப்பில் உணவு சமைப்பார்கள். இரண்டு பெரிய மாமரங்கள் வட்டுக்கு மேலே கிளைவிட்டு குளிர் நிழல் தந்து கொண்டிருந்தன. வளவுக்கு வெளியே பனங்காடு. அதனுள் அடர்ந்த முள்ளுப் பற்றைகள். வீட்டுச் சொந்தக்காரர் தாராள குணத்தோடு, தமது குடும்பத்தினரைத் தமது உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு, தமது வீட்டைத் தற்காலிகமாக நாம் தங்கியிருக்க வசதி செய்து தந்தார். அந்த உறவினர் வீடும் பின்புறத்திலேயே இருந்தது. ஓலையால் வேய்ந்த மண் குடிசை அது. பனை ஓலை வேலி ஒன்று இரண்டு வீடுகளையும் பிரித்தது. இந்த வீடு இருந்த வளவுக்குள் ஒரு பெரிய, திறந்த கிணறு இருந்தது.
குறித்த இந்தச் சமூக மக்கள், யாழ்ப்பாண சமுதாயக் கட்டமைப்பில் கள். இறக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள். தென்னம் பாளைகளிலிருந்தும், பனம் பாளைகளிலிருந்தும் வடிக்கப்படும் இயற்கையான மதுவே கள்ளாகும். மங்கலான இந்தத் திரவம் யாழ்ப்பாண ஆடவரிடையே பிரபலமானது. குறிப்பாக மதிய உணவின் போதும், மாலையிலும், மரத்திலிருந்து புதிதாக இறக்கப்பட்ட மறுகணமே அருந்தப் படுவது. இந்த மதுவுக்கு எந்த நேரமும் கிராக்கி இருக்கும். சில ஆடவர் இதன் கிரமமான வாடிக்கையாளர். பால் விநியோகம் போல, ஒவ்வொரு நாளும் புதிதாக இறக்கியதும், போத்தல்களில் அவர்க ளுடைய வீடுகளில் இது விநியோகிக்கப்படுவதும் உண்டு. ஆனால் பொதுவாக மதிய உணவு வேளைகளில் ஆண்களின் சைக்கிள் வண்டிகள் ஒரே பக்கத்தை நோக்கிச் செல்வதை காணலாம். நகரத்தின் எல்லையில் அல்லது யாரும் பயன்படுத்தப்படாத ஒரு காணியி ல் ழெுங்காகக் கட்டப்படாத ஒரு கள்ளுக் கொட்டிலில், கள் விற்பனை நடக்கும். யாழ்ப்பாணம் பயணம் புரிபவர்கள், மதிய வேளையில் ஒரு கொட்டிலுக்கு அருகே நிறைய சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டால், அது கள்ளுக் கொட்டிலே என்று இலகுவாக ஊகிக்கலாம்.
இந்தக் குடும்பங்கள் கள் இறக்குவதோடும், கள் விற்பதோடும் மட்டும் நின்றுவிடவில்லை. பலதிற வளங்கள் நிறைந்த பனையோடு தொடர்புடைய பல்வேறு சிறிய குடிசைக் கைத்தொழில்களிலும் ஈடுபட்டுவந்தார்கள். குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தினர் முயற்சியும்; கடின உழைப்பும் கொண்டவர்கள். அவர்களுடைய பொருளாதார சுகந் திரத்தையும் கண்ணியத்தையும் பேண அவர்களுடைய வருவாய் போதுமானதாக இருந்தது. ஆனால் அவர்கள் பணக்காரரல்லர். பரிதாபம் என்னவென்றால், ஆற்றலும் கடின உழைப்பும் தற்பெருமையும் கொண்ட இந்த மக்கள், யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பின் அடிமட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இந்தியாவிலும், இலங்கையிலும் நான் வசித்த காலம் முழுவதிலும் சாதித்துவத்திற்கு எதிரான எனது அருவருப்பை என்னால் அமைதிப்படுத்த முடியவில்லை. பிறப்பினால் ஒரு மனிதரை ஒரு சாதிக்குள் தள்ளி விடும் சமுதாய அமைப்பானது காட்டு மிராண்டித்தனமானது. ஒடுக்குமுறை நிறைந்தது. யாழ்ப்பாண சமூகத்தின் பொருளாதார சமூக வாழ்வில் இது பின்னிப் பிணைந்ததாயினும், சாதயமைப்பானது, மனித உழைப்புக்குக் கண்ணியமும் மரியாதையும் வழங்கும் நவீன சிந்தனைக்கு முரணானது. யாழ்ப்பாண சமூகத்தை நான் கணிப்பிட்ட அளவில், அங்கு உயர் சாதி என்றும், தாழ்ந்த சாதி என்றும் வகுத்திருப்பது ஒரு போலியான அடிப்படையிலேயே என்பேன். கடுமையாக உழைத்து, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தக்கதும், வளமிக்கதும், சமூக உற்பத்தித்திறன் கொண்டதுமான ஒரு சமூகத்தை தாழ்ந்தது என்று கூறுவதில் என்ன நியா யம் இருக்கிறது. இந்தக் குடும்பத்துடன் நான் தங்கியிருந்தபோது, யாழ்ப்பாண சமுதாயத்தில் உள்ள பெருந்தொகை முரண்பாடுகள் பற்றி அறிந்து கொண்டேன். தம்மை உ யர் சாதி என்று கூறிக் கொள்ளும் வெள்ளாள ஆண்கள், தம் அயலில் உள்ள கள்ளிறக்கும் வீடுகளுக்கு மாலையில் மறைவாகச் செல்வதை நான் கணடுபிடித்தபோது, அது வேடிக்கை யாகவே இருந்தது. எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். புளாவில் கள் அருந்தியபடியே, தாழ்ந்த சாதிப் பெண்களின் தண்டப்படக்கூடாத கரங்களால், மீன் பொரியலையும், இறால் பொரியலையும் சுவைத்து மகிழ்வதில் பலமணிநேரம் அவர்கள் செலவிடுவார்கள். நல்ல சுண்ணி போட்டதும், உயர்ந்த, தாழ்ந்த என்ற சமூகப் படிமுறைகள் காணாமல் போய்விடுகிறது என்பதை அறிந்த போது அது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. இத்தகைய வேளைகளில் அவர்கள் அன்றைய அரசியலை ஆராய்வதும் தனிச் சுவையாக இருக்கும். பொதுமக்களின் அபிப்பிராயம் மக்களின் சிந்தனையோட்டம், உணர்வுகள் ஆகியவை பற்றியே நேரடியான சமூக ஆய்வு அங்கே வெளியாகும். விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள், வாய்ச் சண்டைகள், என்று பலதும் அலசப்படும். இந்திய பற்றியுமே பெரிதாகப் பேசப்படும். ஆனால், கள் அருந்துபவர்களின் குடிகாரப் பேச்சாக இருந்தாலும், புலிப் போராளிகளுக்கு அதாவது பொடியளுக்கு பொதுவான அனுதாபம் இருந்தது. கள்வெறி ஏறிய பின், புலித் தலைமைக்கும் வசவு நடக்கும். எப்படியாயினும் நாம் அங்கு இருப்பதைப் பொருட்படுத்தாது அவர்கள் சுவையாக விவாதம் நடத்துவது, நாள்முழுவதும் சப்பென்றிருக்கும் எமக்குத் தென்பூட்டுவதாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். எம்மையே மறந்து இந்த உரையாடல்களைச் சுவைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள், சில போராளிகள் ஓடிவந்து இந்திய காவல் உலாப் படையணி வருவது பற்றி எச்சரித்தனர். உடனடியாக நாம் எமது பைகளை அடுக்கிக் கொண்டு புறப்பட ஆயத்தமானோம். நாம் புறப்படும் வேளையில் வீட்டுக்காரர் ஓடி வந்தார். எம்மை அவசரப்படவேண்டாம் என்றும், அஞ்ச வேண்டாம் என்றும் கூறினார். அங்கு வந்த படையினர், கள் கிடைக்கும் இடம் தேடி : வந்திருக்கிறார்கள். வீட்டுக்காரரும் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் படையினருக்கு திருப்தி தரும் வகையில் கள் வழங்கிக் கொண்டிருக்கும்போது, நாம் முன்புறமாக விழிப்போடு காத்திருந்தோம். படையினர் தள்ளாடியபடி வெளியேறிய பின்னரே ஆறுதல் அடைந்தோம்.
இந்த மக்களிடையே நாம் சீவித்த நாட்களில், ஒரு சிறிய ஆனால் தர்ம சங்கடமான பிரச்சினை எழுந்தது. நாம் இருந்த வீட்டிலோ, அயலில் உள்ள வீடுகளிலோ கழிப்பிடம் கிடையாது. இந்தச் சமூகத்து மக்களுக்கு இது ஒரு பிரச்சினையாகப் படவில்லை. பனந் தோட்டத்துப் பற்றைகள் வேண்டிய மறைவிடம் வழங்குவதால், அவை அப்படியே விடப்பட்டிருந்தன. பாலாவுக்குக் கூட அது பிரச்சினையாக இருக்க வில்லை. அவர் தமது பிள்ளைப் பருவத்துக்குத் திரும்பியிருந்தார். எப்படி சமாளிப்பது என்பதும் அவருக்குத் தெரியும். எனக்கு, இது பெரிய பிரச்சினையாகவிருந்தது. எனது நிறமும் அனுகூலமாக இருக்கவில்லை. பற்றைகளின் பச்சைக் குழைகளினூடாக எனது வெள்ளை நிறம் வெளியே தெரியக் கூடியதாக இருந்தது. அந்தப் பக்கத்தால். போகிறவர்களுக்கு அது கண்ணைக்குத்தும் என்பது புரிந்தது. இதனால், பாலாவுக்கும் எனக்கும் இடையே இருந்த நெருக்கம் மீண்டும் உதவிக்கு வந்தது. ஒரேயொரு வழிதான் இருந்தது. விடிவதந்கு முன்னதாக, அதிகாலையில் எழுந்து, பந்றைக்குப் போகிறவர்களின் வரிசையை முந்திக் கொள்ள வேண்டும். பொதுவாக விடியுமுன்னரே பெண்கள் எழுந்து தம் காலைக்கடனை முடித்து பந்றைப்பக்கம் ஆண்கள் செல்ல இடமளிப்பார்கள். பயன்படுத்தப்படாத பற்றைக்குப் பின்னே ஆண்கள் சென்று குந்துவதற்கு முன், கிளைகளில் காத்திருக்கும் காகங்கள், கழிப்பிடத் துப்புரவு செய்து காலையாகாரம் முடித்து விடும். ஆகவே நானும் பாலாவும் காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவோம். மற்றவர்களும் அந்த நேரம் விழித்து விடுவார்கள். ஆனால் மரியாதையை ஒட்டி தூங்குவது போல பாசாங்கு செய்வார்கள். நான் உடனே பாலாவுக்கு தேனீர் தயாரிப்பேன். அவருக்கு ஒழுங்காகப் போக அது உதவும். இல்லாவிட்டால், வெளிச்சம் வந்த பின்னரும் அவர் பனங்கூடலுக்குப் போக வேண்டிய தேவை இருக்கும். பாலசிங்கம் பற்றைக்குள் போய்க் குந்துவது கிராம மக்களுக்கு பெரும் வேடிக்கையாக இருந்திருக்கும். ஆகவே, அப்படிக் காட்சியளிப்பதில் பாலாவுக்கும் ஆர்வம் இல்லை. தேனீர் பருகிய பின், நான் கிணற்றடிக்குச் சென்று சத்தம் இல்லாமல் ஒரு வாளி தண்ணீர் அள்ளுவேன். கழுவுவதற்கு நீர் தயாரானதும் பாலா ஒரு கையில் லாம்பையும் மறு கையில் ஆறு அடி நீளத் தடி ஒன்றையும் எடுப்பார். பாலா முன்னே செல்வார். ஒற்றையடிப்பாகையால், அடிக்கடி நிலத்தைத் தட்டியபடி செல்வார். நீர்வாழியைத் தூக்கியபடி நான் பின்னே செல்வேன். சுரையில் ஏன் தடியால் தட்டவேண்டும் என்று கேட்டேன். அந்தப் பகுதியில் நிறைய நாக பாம்புகள் இருப்பதாகவும் தரையில் தட்டியபடி சென்றால், அவை விலகி, பற்றைக்குள் நழுவிவிடும் என்று அவர் விளக்கியபோது அது நல்ல முன்யோசனை என்று கருதினேன். சீறும் பாம்பு ஒன்று, என் மீது தனது நச்சுப் பல்லைப் பதிப்பதை நான் விரும்பவில்லை. எமது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நாம் குந்தக்கூடிய இடம் ஒன்றைக் கண்டு பிடித்தோம். அதன்பின், நான் ஒரு புறமும் பாலா மறுபுறமும் சென்று, விளக்கு ஒளி படக்கூடிய தூரத்தில் குந்துவோம். இது ஒரு திருப்தியான ஏற்பாடு அல்ல. ஆனால் என்னுள் ஊறிய பழக்கம் எனக்குத் திருப்தி தராதிருப்பதை உணர முடிந்தது. என்றாலும் எமது காலைக்கடனை முடித்துக் கொண்டு, தரையில் தடியால் தட்டியபடி திரும்பிச் செல்லும்போது, இதே அலுவலுக்காக வந்து கொண்டிருக்கும் சில பெண்களைக் கடந்து வட்டுக்குத் திரும்புவோம்.
பாதுகாப்பான புதிய வீடொன்றுக்குச் சென்றவுடன், முதல் வேலையாக, ஒளித்திருக்கும் இடம் தேடுவதையும், தப்பி ஓடும் பாதை தேடுவதையும் வழமையாகக் கொள்ள அனுபவம் பாடம் கற்பித்திருந்தது. ஆனால் இந்தப் பகுதியில் ஓடி ஒளிப்பதற்கு அதிகம் வசதிகள் இருக்கவில்லை. அங்கே ஒரு மயானமும், அதில் சில புதைகுழிகளும் இருந்தன. நடுகல் நடுவதற்காகத் தோண்டிய இடத்தின் அருகே சிறிய குழிகளும் இருந்தன. தேவை ஏற்பட்டால், இந்தக் குழிகளில் எம்முள் ஒருவராவது பதுங்கி இருக்கலாம் என்று எண்ணினேன். பழுதடைந்த அந்த மயானத்துக்கு அருகே படையினர் வரமாட்டார்கள் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் இப்படியான ஓர் இடத்தில் ஒளிந்து மறைய வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை என்பதே நிம்மதி.
இந்த மக்களோடு நாம் வசித்தவரை, இந்திய இராணுவத் தலையட்டால் எமக்குத் தொந்தரவு அதிகம் இருக்கவில்லை. ஆனால் நாம் விலகிச் சென்றபின், அந்தக் குடும்பத்துக்குப் பெரும் உபத்திரவம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விபரம் பின்னர் பார்க்கலாம். எப்படியாயினும், 1990 இலே நாம் யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர், நன்றி கூறுவதற்காக இந்த வீட்டாரை நாம் மீண்டும் தரிசித்தோம்.
5.7 நெருக்கடி நிறைந்த நாட்கன்
இந்தியப் படையினர் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராக வடமராட்சியில் மேற்கொண்ட இராணுவ நடடிக்கைகள் வெற்றியை அளிக்கவில்லை. போராளிகள் மத்தியில் பெருமளவு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. சுற்றி வளைப்புகளின்போது சில போராளிகள் கொல்லப்பட்டார்கள். சிலர் கைதாகி காவலிலிடப் பட்டார்கள். ஆனால் புலிகளின் பாதுகாப்பான மறைவிடங்களில் இருந்து அவர்களை விரட்ட, படையினரால் முடியவில்லை. ஆயுதங்களைக் களைய வந்தவர்கள், கெரில்லாப் போராளிகளுக்கு எதிராக பெரிய கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை முயற்சியில் ஈடுபட நேர்ந்தது. ஆனால், போராளிகளோ, மாவோவின் உவமானப்படி, மக்கள் கடலோடு கலந்த மன்கள் போல இருந்ததால், இராணுவத்தினரின் நடவடிக்கை பிசு பிசுத்துப் போனது. விடாப் பிடியாகத் தேடுதல் நடத்திய இந்தியரிடமிருந்து புலிகள் நழுவுவதில் வெற்றி கண்டார்கள் என்றால், வடமராட்சி மக்களின் விடுதலைப் பற்றும், துணிச்சலுமே, அந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறலாம். தப்பியோடும் விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் புகலிடம் அளித்ததாலும், படையினரின் நடமாட்டம் பற்றித் தாமாகவே முன்வந்து தகவல் கூறியதாலும், தங்கள் உயிரை அர்ப்பணித்த எண்ணற்ற பொதுமக்களை நோக்கி நாம் கரம் கூப்பவேண்டும். அவர்கள் தன்னலமற்ற துணிச்சல் மிக்க செயல்களில் ஈடூபட்டமையாலும், போராட்டத்தில் கலந்து கொண்டமையாலும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதே போல, எமது போராளிகளுக்கு உதவி புரிந்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் துன்பம் அனுபவித்த பொதுமக்கள், அவமானத்துக்கும், சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்ட போதிலும், வியக்கத்தக்க வகையில் மனோ வலிமையோடு அனைத்தையும் சகித்துக் கொண்டார்கள். இந்தியரைப் பொறுத்த வரையில், குற்றமற்ற பொது மக்கள் மீது, பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதிலேயே அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்தியப் படைகள் இரவு வேளைகளில் தமது நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய முற்பட்டபோதே அவர்களுடைய கொடம் உச்சத்தைத் தொட்டது.
இந்திய-விடுதலைப் புலிகள் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரெண்டு மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், வடமராட்சிப் பகுதி செயலிழந்து போனது என்றே கூறலாம். விடுதலைப் புலிப் போராளிகளும் எம்மைப் போன்றவர்களும் ஓரிடத்தில். இருந்து வேறொரு இடத்திற்கு இரவில் செல்வதைத் ஒதுக்கினால், அந்தப் பகுதி முழுவதும் மயான அமைதியே இரவில் நிலவியது எனலாம். எமது போராளிகளை இந்தியப் படையினர் இனம் காண்பதற்கு இரவு ஊரடங்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. எவராவது ஊரடங்கை மீறினால், அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள் என்று இந்தியர் முடிவு செய்தனர். எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான பெரிய நடவடிக்கைகளை அவர்கள் நடத்தும் போது இரவு வேளைகளையே தேர்ந்தெடுத்தார்கள். இது, மக்களுக்குப் பெரும் தொந்தரவாகியது. பெருந்தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு, இந்தியப் படைகள் தங்கள் வீடுகளுக்குள் திடீரென நுழையலாம் என்ற அச்சத்தில், இரவிலேயே நிம்மதியாகத் தூங்குவது மக்களுக்கு இயலாது போயிற்று. சூழ்ச்சி நோக்கத்தோடு இரவுக் காவல் உலாக்களையும் இந்தியர் அதிகரித்தனர். படையினர் எங்கே இருக்கிறார்கள் என்றோ, எங்கே தலைகாட்டுவார்கள் என்றோ எவராலும் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இரவிலே படையினரின் நடமாட்டத்தை மோப்பம் பிடிப்பதற்கான வழி, எதிர்பாராத கோணத்தி லிருந்து கிடைத்தது.
எமது போராளிகள், தமது மறைவிடங்களில் முடியுமான அளவு நோட்டக் காவலை அதிகரித்திருந்தார்கள். அனாலும், மனிதனின் மிருக நண்பனான நாய் புரியும் உதவிக்கும் இரவுப் பாதுகாப்பிற்கும் நிகராக எதுவும் இல்லை எனலாம். வடமராட்சியில் இருந்த பெருந்தொகையான வீட்டு நாய்களும் தெரு நாய்களுமே, எதிர்பாராத அளவிலும் நம்பிக்கை தரும் வகையிலும், அந்தப் பிரதேசத்தில் மிகச் சிறந்த எச்சரிக்கை யையும் பாதுகாப்பையும் வழங்கின. இருளின் போர்வையில் எமது போராளிகள் நகரும்போது, கிராமத்து நாய்கள் அவ்வளவு பலமாக குரைப்பதில்லை என்பதை அவதானித்தோம். அதே சமயம் பெருந்தொகை இந்தியப் படையினர் தங்களுடைய சப்பாத்துக்களை அடித்து நடக்கும்போது, வயிற்றைப் பிடுங்குவது போல நாய்கள் உரத்துக் குரைக்கும். உலா செல்லும் படையினரை அதுவே காட்டிக் கொடுத்துவிடும்.: நாய்கள் குரைக்கும் சத்தத்தின் அளவை வைத்துக் கொண்டு, எமது முகாமுக்கு எவ்வளவு அருகில் படையினர் இருக்கிறார்கள் என்பதை ஊகித்து விடுவோம். எத்தனையோ இரவுகள் விழித்தபடியே படுத்திருந்து நாய்குரைப்பின் ஒலி ஏற்ற இறக்க வேறுபாடுகளுக்கேற்ப, படையின் நகர்வை அனுமானித்துக் கொண்ட தருணங்களில், அந்த விசுவாசமுள்ள பிராணிகளுக்கு மனதார நன்றி கூறிக் கொண்டேன்.
புலிப் போராளிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் நடத்திய இராணுவ நடவடிக்கைகளில், காவல் உலாவோடு மட்டும் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. எண்ணிக்கையில் கூடுதலான புலிகளை அவர்கள் சிக்க வைக்க விரும்பினார்கள். எனவே தங்கள் இரவு நடவடிக்கைகளை விரிவு படுத்தினார்கள். வீதிகளின் அருகே குழிகளிலும், ஒழுங்கைகளிலும், பாலங்களின் கீழும் பதுங்கிக் காத்திருந்தார்கள். கூடுதலான புலிகளைப் பிடிக்க வேண்டும் என்ற வெறியே இதற்குக் காரணம். இந்த அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியதால், இரவில் நாம் நடமாடுவது கடின மாயிற்று. இராணுவத்தின் எதிர்பாராத இந்த அதிரடி முறை தொடக்கத்தில் அவர்களுக்கு பலனைக் கொடுத்தது. இரவிலே இந்தியப் படையினர் பதுங்கி இருக்கிறார்கள் என்பது பரவலாகத் தெரியும் வரை, சந்தேகப்படாத பொது மக்கள் ஓழுங்கைகளில் ஆபத்து இராது என்ற நம்பிக்கையில் இரவிலே நடமாடப் புறப்பட்டு, புலிப் போராளிகள் என்ற சந்தேகத்தில் கைதாகி, அடிவாங்கி, அமைதிப் படையினரால் தடுப்புக் காவலிலும் இடப்பட்டார்கள். ஆனால் படையினரின் இந்த இரவு நடவடிக்கை தீவிரம் அடைந்து, பலர் கைதாகியபோது, வாழ்வா சாவா . என்ற போராட்டத்துக்குள் எம்மையும் தள்ளியது.
போராளிகளுக்கான இந்தியரின் வேட்டை தனது இறுதி அத்தி யாயத்தை அடையும் கட்டம் வந்தபோது, இந்தியப் படையினரால், வடமராட்சி மக்கள் கணிசமான அளவு அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள். குறித்த ஒரு பகுதியில், நாம் இருப்பது தெரிந்தால், அங்குள்ள மக்களுக்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்றும், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மிரட்டியும் இருந்தார்கள். எனவே, ஒரு பகுதியில் நாம் இருப்பது தெரிந்ததும் அங்குள்ள மக்கள் அஞ்சினார்கள். ஒரு தடவை நு சிறிய கிராமத்தில் ஒரு வீட்டில் அவசர அவசரமாக நாம் புகலிடம் நாட நேர்ந்தபோது, அங்குள்ள மக்களின் அச்சம். வெளிப்படையாகத் தெரிந்தது. மக்களின் அமைதியைக் கெடுத்து, அச்ச உணர்வைத் தூண்டுவதற்கு நாம் காலாக இருக்கிறோம் என்பது எனது மனச்சாட்சியை உறுத்தியது. நாம் தங்கள் கிராமத்தில் தங்கியிருப்பதாக ஒரு கிராம மக்கள் அறிந்தபோது, இந்திய இராணுவத்தின் கொடூரமான பழிவாங்கலுக்கு அஞ்சி அந்தக் கிராமம் முழுவதுமே அங்கிருந்து வெளியேறியபோது, அதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. மக்களின்றி, கிராமமே வெறுமையாகியபோது, அதுவே இராணுவத்தை விழிப்படையச் செய்திருக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது முகாம் சுற்றி வளைக்கப்படலாம் என்ற எண்ணத்தோடு, இரவு முழுவதும் விழித்திருந்தோம். படையினர் வந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம். மக்களுக்கு இவ்வளவு அசெளகரியம் ஏற்படூத்திவிட்டோமே என்ற அங்கலாய்ப்பு மறுபுறம். எனவே அந்த வீட்டில் இனியும் இருக்க முடியாது என்று உணர்ந்தோம். வெள்ளைக்காரியாக நான் இருப்பதால் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து ஏற்படுத்துகிறேன் என்ற உண்மையையும் இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது. வேறு எந்தப் போராளியும் எவராலும் சந்தேகிக்கப்படாது, வடமராட்சியில் எந்தப் பகுதியிலும் இலகுவாக நடமாட முடியும். ஆனால் எனது நிறம், எமது குழு முழுவதையுமே ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தது. நிறத்தை மறைக்க அரிதாரம் பூசலாமா அல்லது குறைந்தபட்ச நிறம் மட்டும் வெளியே தெரியக் கூடிய வண்ண ஆடை புனையலாமா என்று சிந்தித்தேன். ஓரளவு முஸ்லிம் வடிவில் அமையக்கூடியதாக போர்வையால் போர்த்தி எனது பாதங்கள் தெரியாவண்ணம் காலுறை அணிந்தால் யாரும் என்னை அடையாளம் காணமாட்டார்கள் என்று கருதினேன். நோயாளிகள் உடலைக் கதகதப்பாக வைத்திருப்பதற்காக இப்படி ஆடை அணிவது வழக்கம். ஆகவே யாரும் கவனிக் மாட்டார்கள் என்றும் நினைத்தேன். வண்ணப் போர்வை ஒன்றால், என்னை முடிந்த வரை மறைத்துக் கொண்டு, அதிகாலை நான்கு மணியளவில் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினோம். பல மணி நேரத்துக்குப் பின், கிராமம் பலமாகச் சுற்றி வளைக்கப்பட்டு, கடும் தேடுதலும் அங்கு நடந்தது.
எமக்கான தேடுதல் வேட்டை ஓய்வதாக இல்லை. நாமும் தொடர்ந்து நகர்ந்தபடியே இருந்தோம். சில தருணங்களில், சில மணிநேரமே ஒரு இடத்தில் தரித்தோம். எவ்வளவு நெருக்குவாரம் இருந்தபோதும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அறிவுறுத்தல் ஒன்றை பொதுமக்களுக்கு எழுத வேண்டும் என்று பாலா உந்தப்பட்டார். பாதுகாப்பான வீடொன்றை அடைந்ததும், வெள்ளைத்தாளையும் பேனாவையும் எடுத்து, மங்கலான லாம்பு வெளிச்சத்தில் சிரமப்பட்டபடி, ஒப்பந்தம் பற்றிய கருத்தாய்வு ஒன்றைத் தமிழில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்ததும், அச்சடிப்பதற்காக அது அனுப்பப்பட்டது. அச்சடித்து வரும்வரை காத்திருந்தபோது, கரணவாயில், எமக்கு முன்பு அடைக்கலம் தந்த மூன்று பிள்ளைகளின் தாயுடைய வீட்டுக்குச் சென்றோம். இரவு எட்டுமணிபோல, சுக்ளா, ஒப்பந்தம் பற்றிய அந்த அச்சடித்த கட்டுரை யைப் பெற்றுவர, எமது பாதுகாப்பான வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நம்பிக்கைக்குரிய அவர் வீட்டுக்குத் திரும்பி வரமாட்டார் என்பதை நாம் அப்போது உணரவில்லை.
5.8 நெருக்கமான கற்றிவனைய்புகன்
படையினர் தம் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அந்தப் பகுதியில் அதிகரித்து விட்டார்கள் என்றும், மழுெங்கைகளிலும் வீதிகளிலும் இரவு பகலாகக் காவல் உலாவை நடத்திக் கொண்டிருக் கிறார்கள் என்றும் எமக்குத் தகவல் கிடைத்தது. பேராபத்தான நிலை உருவாகிவிட்டிருந்தது. இருப்பினும், இரவில் நகர்வதைக் காட்டிலும், பகலில் வெளியேறுவதில் ஆபத்து அதிகம் என்று சுக்ளா கருதினார். அதே சமயம் அந்த வட்டாரம் தமக்கு நன்கு பரிச்சயமானது என்பதால், தாம் கைதுசெய்யப்படுவதைத் தவிர்த்து விடலாம் என்பது அவர் எண்ணம். ஒப்பந்தம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையைத் கதட்டச்சளாரிடமிருந்து பெற்றுவர அவர் தீர்மானித்தார். கட்டுரையோடு அவர் மிக விரைவிலேயே திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்தோம். கவன- மாக இருக்கும்படியும் அனாவசிய ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது என்றும் அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தோம். ஆபத்து அதி- கரித்துக் கொண்டிருக்கும் அந்த நெருக்கடியான சூழலில், அவர் இருளில் கரைந்தார். ஆபத்தான அந்த வேளையில் அவர் செல்வதை நாம் யாரும் விரும்பவில்லை. அந்தப் பகுதியைப் பற்றியும், பாதுகாப்பான வீடுகள் பற்றியும் எம்மிடையே நன்கு அறிந்தவர் சுக்ளாவே. அன்றிரவு அவர் வெளியே செல்லக்கூடாது என்று நாம் அஞ்சியது சரியே என்பது பின்னர் தெரிய வந்தது. இரவு கழிந்து கொண்டே இருந்தது. சுக்ளா வரவேயில்லை. பொதுவாக அவர் இவ்வளவு சுணங்குவதில்லை. அவர் பாதுகாப்பாக இருப்பாரா என்ற அச்சம் அதிகரித்தது. நேரம் செல்லச் செல்ல கவலை அதிகரித்தது. சுக்ளாவின் நிலை என்ன என்பது தெரி யாத நிலையில், எம்மோடு இருந்த போராளிகளில் ஒருவரான ஆனந்த், நிலைமையை அறிந்து வருவதற்காக இருட்டுக்குள் பாய்ந்தார். ஆனந்தும், திரும்பி வராததால், கிலேசம் அதிகரித்தது. ஏதோ நேர்ந்து விட்டது என்ற உணர்வு மேம்பட்டது. ஒரேயொரு மன ஆறுதல் என்னவென்றால் துப்பாக்கி வேட்டு எதுவும் கேட்கவில்லை. ஆகவே அவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் அவர்கள் காணாமற் போய்விட்டதால், என்ன நடந்திருக்கலாம் என்ற ஊகங்களும் பெருகின. நாம் இனி என்ன செய்யலாம். ஏதோ தாமதம், விரைவில் வந்து விடுவார்கள் என்று நினைத்தோம். வேறு யாராவது அவர்களைத் தேடிப் போகலாமா? அவர்கள் பிடிபட்டிருந்தால், அருகே வேறு போராளிகள் ஒளிந்திருக்கிறார்களோ என்ற எதிர்பார்ப்பில் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைக்கத் தொடங்குவார்களா? இப்படியெல்லாம் கேள்விகள் கிளர்ந்தன.: அடுத்த முக்கிய பிரச்சினை என்னவென்றால், இந்த வீட்டை விட்டு வெளியேறும் போது நாம் அடுத்து எங்கே செல்வது என்பதாகும். சுக்ளா ஒருவருக்கு நாம் எங்கே போவது என்பது தெரியும். இந்தச் சிந்தனைகள் எம்மைக் குழப்பின. வெளியே நிலவிய இருளைப் போல வீட்டுக்கு உள்ள எமது மனங்களும் குழம்பிப்போய் இருந்தன. திடீரென்று, வானத்து மின்னல் போல ஆனந்த் வீட்டுக்கள் வந்து இறங்கினார். அவரில் அச்சம் தெரிந்தது. பைகளை அடுக்குமாறு சைகை காட்டியபடி, வெளியே உள்ள நிலைமை பற்றியும், சுக்ளா பற்றியும் தடூுமாறியபடியே விளக்கினார். எல்லா இடமும் இந்தியப் படையினர் பதுங்குத் தாக்குதலில் பிடிபட்ட சுக்ளா, வட்டுக்கு அருகிலேயே கட்டப்பட்டு கைதியாகக் கிடக்கிறார். பொதுமக்களும் பிடிபட டிருக்கிறார்கள். பதுங்கியிருந்த படையினர் ஆனந்தையும் கைது செய்திருக்கிறார்கள். படையினர் தாம் கைது செய்த மக்களை கூட்டமாகச் சேர்த்து கட்டி உட்கார வைத்திருக்கிறார்கள். வைத்திருந்த இடத்தில் சுக்ளாவை ஆனந்த் சந்தித்திருக்கிறார். அவர்கள் எல்லோரு மாகத் திட்டமிட்டு ஆனந்த்தைத் தப்பிச் சென்று ஆபத்து நிலை பற்றி எம்மை எச்சரிக்குமாறு அனுப்பியிருக்கிறார்கள். இந்தியப் படையினர் அதிகம் விழிப்பாக இராதது எமது அதிர்ஷ்டமாயிற்று. மெதுவாகத் தம்மைக் கட்டிய கயிற்றைத் தளர்த்திக் கொண்டு, காவலர்களின் கவனம் கைதிகளில் இருந்து வேறு பக்கம் திரும்பிய வாய்ப்பை பயன்படுத்தி, எம்மை எச்சரிப்பதற்காக பாய்ந்தோடி வீட்டுக்கு வந்திருக்கிறார். இந்தியர்கள் தமக்கு பின்னே வந்து கொண்டிருப்பதாகவும் அவர் நம்பினார்.
வீட்டிலிருந்து வெளியேறுமாறு எமது முதல் உள்ளுணர்வு கூறியது. பாலாவின் இன்சுலின் பையைக் கையில் எடுத்தேன். செருப்பை மாட்டினோம். இருளில் பாயந்தோம். இரண்டு குழுக்களாகப் பிரிந்து, சிலராவது உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கையோடு எதிரெதிர் பக்கம் நழுவினோம். இருளில் தடவித் தடவிச் சென்றோம். எங்கே இருக்கிறோம் என்பதோ, எங்கே போகப் போகிறோம் என்பதோ தெரியவில்லை. சிறிது தூரம் நடந்து சுத்தமான காற்றை சுவாசித்த பின், சிந்தனை உணர்வும் தெளிவடைந்தது. தெளிவில்லாமல் வெறுமே இருட்டில் உழல்வதால் நிலைமை மேலும் மோசமாகும் என்பது தெளிவாகியது: ஒழுங்கைகள் வழியாகத் தொடர்ந்து செல்வோமே என்றால், எந்த இந்தியப் படையினரைத் தவிர்க்க விரும்புகிறோமோ, அதே படையினரின் கரங்களில் சிக்குவோம் என்பதும் உறுதியாகத் தெரிந்தது, ஆகவே முதலில் ஒழுங்கைகளைத் தவிர்க்கத் தீர்மானித்தோம். உடனடியாகவே ஒரு வேலியால் பாய்ந்து, காய்கறித் தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்தோம். மிளகாய் கன்றுகளுக்கு மத்தியில் அமர்ந்து எமது நிலைமையைப் பரிசீலனை செய்தோம். எங்கும் படையினர் இருந்தனர். எங்கே போவது என்பது எமக்குத் தெரியாது. சுக்ளாவும் அகப்பட்டு விட்டார். என்ன செய்யலாம் என்பதை அமைதியாக உட்கார்ந்து எடை போட்டோம். திடீரென்று, தூரத்தில் யாரோ முணுமுணுப்பது எனது காதில் விழுந்தது. சத்தமில்லாமல் அப்படியே உறையுமாறு மற்றவர்களுக்கு உணர்த்தினேன். தூரத்தில் யாரோ பேசும் ஒலி எனக்குக் கேட்டது. பேச்சு ஒலி அருகே வர, எல்லோரையும் தரையிலே படுத்துவிடுமாறு சைகையால் காட்டினேன். கீழே படுத்து, மிளகாய் மரங்களூடாக எம்மை எவரும் காணமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டோம். ஹிந்தி மொழியில் பேசுவது உரத்துக் கேட்டது. சப்பாத்துக் காலடியும் காதில் கனமாக விழுந்தது, மூச்சை அடக்கிக் கொண்டோம். பீதியால் உறைந்து போன எங்கள் உடல்களின் மேலே நட்சத்திரங்களின் மங்கலான ஒளி படர்ந்திருந்தது. படையினரின் காவல் அணியினர் சில அடி தூரத்தின் இருந்த எம்மைக் கடந்து சென்று கரைந்து போய்விட்டார்கள். அதிர்ஷ்டம் எம் பக்கம்! படையினரும் கெட்டித்தனம் அற்றவர்களாக இருந்தார்கள். தெருவின் கரையோரங்களை அவர்கள் நன்றாகப் பார்க்கவில்லை. எழுந்து உட்கார்ந்து ஆழமான மூச்சை உள்ளிளுத்தோம். நாம் நூலிழையில் உயிர் தப்பியிருப்பதை உணர்ந்தோம். பாலாவும் ஏனையவர்களும் நட்சத்திர வெளிச்சத்தில் அடையாளம் தெரியக் கூடிய தங்கள் மேற்சட்டைகளைக் கழற்றினார்கள். அதன் பின்னரும் சிறிது காத்திருந்தோம். சில நிமிடங்களில் மீண்டும் பேச்சொலியும் படையினர் வருவதும் கேட்டது. அதே காவல் உலா அணி எமது பக்கமாக திரும்பி வந்து கொண்டிருந்தது. முதல் செய்தது போல, எம்மைக் கடந்து சென்றார்கள். தூரத்தில் ஒரு துப்பாக்கி வேட்டுக் கேட்டது. பாவம், யார் மீது குறி தைத்ததோ தெரியவில்லை.
நாம் அங்கு அப்படியே இருக்க முடியாது என்பதை உணர்ந்தோம். விடிந்து விட்டால், படையினரின் துப்பாக்கி இலக்குக்கு உள்ளாவோம். தோட்டத்துக்கு அப்பால் தூரத்தில் ஓர் ஒளி தெரிந்தது. அது நம்பிக்கை ஒளிக்கீற்றையும் தந்தது. போராளி ஒருவருக்கு அந்தப் பகுதி பரிச்சயமாகத் தோன்றியது. ஆனால் அங்கே போவத்ற்கு திறந்த வெளியைக் கடக்க வேண்டும். எமக்கு வேறு வழி இல்லாததால், அங்கே செல்லத் தீர்மானித்தோம். உழுதிருந்த வயல் ஊடாக மண் கட்டிகளில் தடக்கி விழுந்து பதுங்கியபடியே நகர்ந்தோம். சில யார் தூரமே ஒரு மைல் போலப் பட்டது. நல்ல காலம், அந்த வயலையும் அதன் சொந்தக்காரரையும் எமக்குத் தெரியும். இரவை அங்கேயே கழித்தோம்.
பகல் ஒளியில் ரதி வீட்டுக்குத் திரும்பிச் சென்றோம். ஆனால் அங்கே நண்ட நேரம் தரிக்க முடியவில்லை. தேடுதல் : வேட்டை முழுமூச்சாக நடந்து கொண்டிருந்தது. மாலை ஆறு மணியளவில் ப்தியடைந்த மக்கள் “ஆமி”, “ஆமி” என்று உரத்துக் கத்துவது ஊரெங்கும் எதிரொலித்து எல்லோருக்கும் எச்சரிக்கை கொடுத்தது. ரதியின் வீடும் சோதனைக்கு உள்ளாகும் என்பது எமக்குத் தெரியாது. தாம் தேடுபவர்கள் எங்கே ஒளிந்திருப்பார்கள் என்று தமக்குத் தெரிந்த இடங்களில் படையினர் கவனமாகத் தேடூதல் நடத்திக் கொண்டி ருந்தார்கள்.
எமது மெய்க்காவல் போராளியான கிங்ஸ்லி சைக்கிளில் தாவ, பாலா முன் தண்டு இருக்கையில் அமர அவர்கள் பாய்ந்தார்கள். அடுத் சைக்கிளில் எனக்கு இருக்கை. போராளிகள் தம்பாட்டில் கொண்டு சென்ற இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தோம். அந்த நேரம், பின்னால் உள்ள படையினருக்கு நான் அஞ்சவில்லை. படையினரிடமிருந்து கடும் வேகத்தில் ஒழுங்கைகளால் ஓடிக் கொண்டிருக்கும்போது, எமக்கு முன்னே போய்க்கொண்டிருக்கும் பாலாவின் சைக்கிளை பிடித்துவிட வேண்டும் என்பதே எனது ஒரே தவிப்பாக இருந்தது.
அதே வேளை, வடமராட்சியில் எமக்குப் பாதுகாப்பு வழங்கிய அத்தனை வீடுகளும் அடுக்காக சோதனையிடப்பட்டன. நாம் வெளி யேறிய பின் ரதியின் வீட்டைப் படையினர் மொய்த்தார்கள். ஆனாலும், தமது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு தாய்க்குரிய மன உறுதியும், கடினமான உலகுக்கு முகம் கொடுத்து வந்த பல்லாண்டு அனுபவமும் அவரை வேகமாச் சிந்திக்க வைத்தது. சித்திரவதைப் பழிவாங்கலில் இருந்து தப்பும் வண்ணம் நடந்து கொண்டார். கடும் எச்சரிக்கையோடு அவரை விட்டதால், அவருக்கோ அவருடைய பிள்ளைகளுக்கோ, பாதகம் எதுவும் நேரவில்லை. ஆனால் துன்னாலை யில் இருந்த கள் இறக்கும் குடும்பத்தினருக்கு, பாவம் அதிர்ஷ்டம் ் இருக்கவில்லை. அவர்களுடைய வட்டாரம் கடுமையாக சுற்றி வளைக்கப்பட்டு, அவர்கள் வீடுகளுக்குள் வெறி கொண்டு படையினர் நுழைந்தார்கள். அந்தக் குடும்பம் புகலிடம் வழங்கியதற்கு ஆதாரம் தேடினார்கள். அந்த வீட்டாரின் இளம் வயது மகனே படையினரின் தாக்குதலுக்கு முதலில் இலக்காவார் என்ற எதிர்பார்ப்பில், படையினர் வீட்டுக்குள் வருவதற்கு முன்னதாக அந்த இளைஞனை ஏளித்துக் கொள்ளுமாறு அவருடைய பெற்றோர் அனுப்பி விட்டார்கள். அவர் அங்கிருந்து தப்பி ஓடியதால், கைது செய்யப்படவில்லை. பெண்களையும் வீட்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப் புணர்வோடு கந்தை வீட்டில் இருந்திருக்கிறார். படையினர் வீட்டை முந்றுகை இட்டபோது அவரே பழிவாங்கப்பட்டார். நாம் தரித்திருந்ததற்கு எந்த வித ஆதாரத்தையும் வீட்டூத் தேடலில் பெறமுடியாததால், தங்கள் ஆத்திரத்தையும் எரிச்சலையும் வீட்டுச் சொந்தக்காரர் மீதே படையினர் கட்டவிழ்த்து விட்டனர். அங்கேயே அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அண்மையில் இருந்த படை முகாமுக்கு அவரை நடத்திச் சென்று அங்கே சித்திரவதை செய்திக்கிறார்கள். குற்றமற்ற அந்த மனிதர் தடுப்புக் காவலில் இடப்பட்டு, ஆறு மாதம் கழித்தே விடுதலை செய்யப்பட்டார். இரண்டு பெண்களால் தலைமை தாங்கி நடத்தப்படுவது பற்றி முன்னரே குறிப்பிட்ட மூன்று பிள்ளைகள் உள்ள பரம்பரை வீட்டையும் படையினர் முந்றுகையிட்டிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் எத்தகைய பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை என்னால் என்றுமே அறிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்ப காலத்தில் காயமடைந்த போராளிகளுடன் நாம் தங்கியிருந்த கலட்டி வீடு, இந்திய இராணுவ முகாமாக மாறியிருந்தது. வடமராட்சி முழுவதும் இதுவே நடந்தது. எமது பாதுகாப்பான வீடுகளில் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் ஒன்றில் ஆக்கிரமிக்கப்பட்டன அல்லது தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டன.
5.9 மரணத்தை எதிர் கொண்டோம்
கரவெட்டியிலிருந்து எமது மெய்க் காவலராக வந்த கிங்ஸ்லி, தமது பெற்றோரின் வீட்டுக்கு முன்னே இருந்த மருத்துவரின் வீட்டுக்கு எம்மைத் திரும்பவும் கொண்டு சென்றார். பின் இரவில் போய்ச் சேர்ந்தோம். அந்தப் பகுதி அமைதியாக இருந்தது. நாம் அடிக்கடி சென்று . கொண்டிருக்கிறோம் என்று எல்லோரும் அறிந்த ஒரு வீட்டுக்குத் திரும்பவும் செல்வது எமக்கு பிடித்தமானதாகவும் இல்லை. ஆனால் வேறு வழி இருக்கவில்லை. போவதற்கு வேறு இடமும் இருக்கவில்லை. போய்ச் சேர்ந்த ஒரு மணி நேரத்தில், தூரத்தே நாய்கள் குரைப்பது கேட்டதும் எம்மை அச்சம் பீடித்தது. படையினர் எங்கே போகிறார்களோ என்று யோசித்தோம். ஆனால் நாய்கள் குரைப்பது வரவரப் பலமாகக் . கேட்டது. ஒலிகள் எமது பக்கமே வந்து கொண்டிருந்தன. எமது வீட்டைச் சுந்றி வளைக்கத்தான் படையினர் வந்து கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகித்தோம். பின்புறமாக மழுங்கை வழியாக வெளியே ஓடி வ்ட்டிலிருந்து 30 யார் தூரத்தில் உள்ள ஒரு வெற்றுக் கொட்டிலுக்குள் நுழைந்தோம். கிங்ஸ்லியின் குடும்பத்துக்குச் சொந்தமான ஓலைக் குடிசைக்கு அடுத்த வளவில் தட்டு முட்டுச் சாமான் வைக்கும் களஞ்சியமாக அது பயன்படுத்தப்பட்டது. நாள் முழுவதும் நாம் சாப்பிடவில்லை. பாலாவுக்கு பசியால் வயிற்று வலி எடுத்திருந்தது. கிங்ஸ்லியின் அம்மா த்மது அடுப்பிலே எமக்காகச் சமைத்துக் கொண்டி ௫க்கும் இடியப்பமும் கோழிக்கறியும் மூக்கைத் துளைக்க பாலாவின் வாயால் நர் வடியத் தொடங்கியது. ஆனால், அடுத்திருந்த மருத்துவரின் வீட்டுக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததும் கிங்ஸ்லி வீட்டுச் சூழ்நிலையும் தேடுதல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் சடும்பங்களும் நடுங்கத் தொடங்கியிருந்தன. கிங்ஸ்லியின் தாயார் வீட்டுக்குப் பின் புறமாக தரையில் ஒரு குழி தோண்டினார். எமக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கோழிக் கறியையும் இடியப்பத்தையும் அந்த மூதாட்டி அந்தக் குழியில் புதைத்தபோது, பாலாவின் முகம் நிராசையால் விழுந்தது. ஒரு சிறிய குடும்பத்தில் தேவைக்கு அதிகமான உணவு நள்ளிரவிலே தயாரிக் கப்படும்போது, சந்தேகத்துடன் வரும் படையினருக்குத் திருப்தியளிக்கும் விளக்கம் கொடுப்பது கடினமாக இருக்கும். ஆகவே அனாலசியக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக உணவைப் புதைப்பதே பொருத்த மாகப்பட்டது. பசிக் கொடுமையைக் காட்டிலும் மிகப் பெரிய ஆபத்தான நிலையை எதிர் நோக்கிக் கொண்டிருந்தோம். இந்தியப் படைகள் எம்மைச் சூழ்ந்துவிட்டிருந்தன. இந்தத் தடவை தப்பவே முடியாது என்று தோன்றியது.
கிங்ஸ்லி எச்சரிப்பதற்காக எம்மிடம் ஓடி வந்தார். பெற்றோரின் வீட்டை நோக்கி, பெருந்தொகைப் படையினர் ஒழு வழியே நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். இனி, எமது ௧ நிர்ணயிக்கும் நிலையில் நாம் இல்லை. நிலைமை எமது கட்டுப்ப மிஞ்சிவிட்டது. மரணத்தையல்ல, இந்தியாவை முக முகமாக ௭ நிந்கும் ஒரு கட்டத்தை நாம் அடைந்து விட்டோம் என்று பட்டது. எமது மறைவிடத்தை விட்டு நாம் வெளியேற முற்பட்டிருந்தால் படையினர் எம்மை நிச்சயம் கண்டிருப்பார்கள். சுட்டுக் கொன்றிருப்பார்கள். வெறுமையாக இருந்த அந்தக் கொட்டிலில் பழைய கட்டில் ஒன்றில் நாம் படுத்திருந்தோம். விதிப்படி நடக்கட்டும் என்ற நிலை. “பயப்படாதே! உடலைத் துப்பாக்கி ரவைகள் துளைக்கும்போது, தற்காலிக நோவேற்படும். அதோடு எல்லாம் சரி” என்று பாலா என்னிடம் இரகசிய மாக கூறினார். நான் அதையொட்டி அஞ்சவில்லை, கிங்ஸ்லியின் பெற்றோருடைய வீடு தேடப்பட்டுக் கொண்டிருந்த வேளை, கிங்ஸ்லியும் எம்மோடு, கொட்டிலில் ஒளிந்திருந்தார். தன்னுடைய வாழ் நாள் அன்றோடு சரி என்று அவரும் முடிவு செய்தார். சத்தம் எவுதும் போடாது அப்படியே இருந்தோம். தற்செயலாக அவாகள் எம்மைப் பார்க்காது விடலாம் என்ற ஒரு நப்பாசை. ஆம் ஒரு நப்பாசைதான். நாமே எம்மைக் கைவிட்ட நிலையா? வரப்போகும் மரணத்தை ஏற்றுக் கொண்ட உணர்வா? இரண்டு பேரும் ஒன்றாகச் சாகப் போகிறோம் என்ற எண்ணமா? என்னவோ தெரியவில்லை. ஆனால் எம்மில், எவரிடையும் கலக்கமோ அச்சமோ இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று மௌனிகளாக நிலைமையைப் பார்த்த வண்ணம் இருந்தோம். சூழவிருந்த வீட்களில் வாழ்ந்த மக்களும் தமக்கு ஏற்படப் போகும் கதியை எதிர்பார்த்தபடி, காத்திருந்தார்கள். கிங்ஸ்லியின் வீட்டில் தேடுதல் நடத்திக் கொண்டிருக்கும் போது, படையினர் ஹிந்தியில் சத்தம் போடுவது கேட்டது. அதன் பின்னர் எங்கள் கொட்டிலுக்குள் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். அவர்கள் வந்தார்கள். அவர்களுடைய ரோச்லைற் ஒளி கொட்டில் யன்னல் உட்டாக அங்கும் இங்கும் பாய்ந்தது. மூச்சை அடக்கிக் கொண்டோம். படையினிரின் சப்பாத்துச் சத்தம் கொட்டிலை நெருங்க நெருங்க, மரணமும் என்னை நெருங்குவது போங்ற உணர்வு. அவர்கள் வருகிறார்கள் என்று ரகசியமாக கூறியபடி பாலா என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டார். வரப்போஒகும் துப்பாக்கி ரவைகளைப் பார்க்க விரும்பாது எனது தலைக்குமேல் ஒரு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். கொட்டில் வாயிலில் படையினர் கால் வைக்கப்போகும் நேரத்தில், கிங்ஸ்லியின் அக்காவினுடைய கணவரின் குரல், வேகமாக்ச் சிந்தித்து, துணிச்சலோடு முன்வந்து, படையினரின் கவனத்தை திசை திருப்பியது. அந்த வெற்றுக் கொட்டிலுக்குள் போவதால் எந்தப் பயனுமிருக்காது என்று அவர் கருத்துத் தெரிவித்தார். அந்த கொட்டிலுக்குள் எவருமே இருக்க முடியாது என்றும் அவர் படையினரிடம் கூறினார். அத்துடன் நிறுத்தாது, படையினர் தேடுதலுக்காகச் செல்லக் கூடிய வேறு பாதையையும் காட்டினார். அவருடைய வார்த்தைகுக் மதிப்புக் கொடுத்துப் படையினர் கொட்டிலை விட்டு வேறு புறம் சென்றார்கள். இரவின் இருட்டு மீண்டும் கனத்தது. படையினர் ஒழுங்கையின் மறுபுறத்தில் உள்ள வீடுகளை நோக்கிப் போனார்கள். கிங்ஸ்லியின் அக்கா கணவர் எம் யிரிகளைக் காப்பாற்றியிருந்தார். படையினர் அப்பால் செநன்றதும் கிங்ஸ்லி குடும்பத்தினர் கொட்டிலுக்கு ஓடி வந்தார்கள். படையினர் சென்ற பக்கத்துக்கு எதிர்ப்பக்கமாக கிங்ஸ்லியின் மைத்துனர் எம்மை இட்டுச் சென்றார். படையினர் திரும்பி வரலாம் என்ற அச்சத்தில் எம்மை ஒளித்து வைப்பதற்கு ஏற்ற வேறிடம் தேடுவதில் அந்த வீட்டார் துடிப்போடு முனைந்தார்கள். ஆனால், எங்கே எம்மை ஒளித்து வைப்பது? மருத்துவர் வீட்டுக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் படையினர் அங்கே தரித்திருந்தார்கள். படையினரின் சுற்றி வளைப்பிலிருந்து நாம் தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால், ஒரேயொரு வழி, சில யார் தூரத்தில் இருந்த நெல்வயலுக்குள் போய்ப் பதுங்குவதே என்று எல்லோரும் அபிப்பிராயப்பட்டார்கள். உடனடியாகப் புறப்பட்டு அப்பால் உள்ள தென்னந்தோட்டத்தில் காத்திருக்கும் அவருடைய பாட்டனாரிடம் சென்றார். உயரமான முதியவர் அவர். படையினர் வருகிறார்களா என்று பார்த்து, ஒழுங்கை எல்லைக்கு எம்மை கூட்டிச் செல்ல அவருக்கு அசாத்திய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். நாம் குறிவைத்துச் சென்ற நெல் வயலைச் சுற்றியிருந்த ஒழுங்கைகளில் படையினர் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். முதியவரின் நெடிய உருவம் அந்த இருளில் நகர்வதைப் படையினர் கண்டால், அவரைச் சுட்டுக் கொல்ல அவர்கள் தயங்கமாட்டார்கள். நாம் ஓழுங்கையைக் கடக்கும்போது காவல் உலாப் படையினர் எம் முன்னே வந்து விடுவார்களா, அல்லது இனம் கண்டுவிடுவார்களா என்ற சிந்தனையோடு தயங்கினோம். ஆனால் ஒழுங்கையைக் குறுக்கு வெட்டிக் கடப்பதிலேயே எமது உயிர் தங்கியிருக்கிறது என்பதும் எமக்குத் தெரியும். தப்பிவிட வேண்டும் என்ற மன உந்தலோடு வெளியே வந்து ஒவ்வொருவராக ஒழுங்கையைக் கடந்து வெட்டுக் குறுக்காகச் சென்று வயநற்கரையில் உள்ள முள்ளுப் பறந்றைகளை மிதித்து கடந்து, புதிதாக நெல் முளைவிடும் வயலுக்குள் இறங்கினோம்.
நெல்வயலுக்கூடாக வரம்புமீது நடந்து போய்க் கொண்டிருந்தபோது, பாலாவுக்கு கால் சறுக்கியது. வயல் நீருக்குள்ளும் சேற்றுக்குள்ளும் கணைக்கால் புதைத்து எழுந்து வந்தார். வயல் வரம்பிலே அமர்ந்திருந்தோம். திடீரென்று நிலை தழும்பி விழுந்த தாக்கத்திலிருந்து தேறிக் கொண்டிருந்தபோது அச்சத்தில் பாலா எகிறிக் குதித்தார். ஒரு நீர்ப்பாம்பு அவருடைய காலைக் கடந்து அப்பால் நழுவிக் கொண்டிருந்தது. ஒரு புறம் பாம்புகளுடனும் நுளம்புகளுடனும் போராட வேண்டிய நிலை! மறு புறம், வெளிச்சம் எங்கள் பக்கமாகப் பாய்ச்சப்படூும்போது உடனே பதுங்க வேண்டிய நிலை! மக்களுடைய வளவுக்குள் அத்து மீறி நுழையும் படையினர் எம்மைத் தேடத் தொடங்கும்போது, ரோச் ஒளிகள் ஒன்றன் பின் ஒன்றாக வீடுகளில் வெளிச்சம் பாய்ச்சும். நாம் வயல் வரப்பிலே உட்கார்ந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க எமது கண் முன்னே எமக்கான தேடுதல் இரவின் இருளில் மணிக்கணக்காக ஒரே போக்கில் நடந்து கொண்டிருந்தது. காத்திருப்பதைத் தவிர எம்மால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. நெல் வயலுக்கு அப்பால் உள்ள ஒரு பழுப்பு வண்ணக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டிய பாலா, இதுதான் பிரசித்தி பெற்ற கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி என்றார்.
இருள் கரந்து வைகறை ஒளி அரும்பத் தொடங்க, எமது அடுத்த நகர்வைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதாயிற்று. உலங்குவானூர்திகள் மேலே வட்டமிடத் தொடங்க, பகல் வெளிச்சமும் நெல்வயலும் எமக்குப் பாதுகாப்பு அளிக்கமாட்டா. எனவே, கிங்ஸ்லி தமது வீடு சென்று நிலைமைய அறிந்துவரத் தீர்மானித்தார். அவருடைய அனுபவப்படி, தேடுதல் நடவடிக்கையே முடித்திருந்தால், படையினர் தங்கள் முகாமுக்குத் திரும்பியிருப்பார்கள். ஆனால் வெவ்வேறு பக்கங்களில் இருந்து வரும் ஒலிகளை வைத்து அனுமானிக்கும்போது, படையினர் இன்னமும் அங்கே இருப்பதாக எனக்குப் பட்டது.
காலை ஒளி பரவத் தொடங்க, நானும் பாலாவும் வயற்கரையை அடுத்த முள்ளுப் பற்றைகளுக்குள் கிங்ஸ்லியின் வருகைக்காக காத்திருந்தோம். சிறிது பின்னா கிங்ஸ்லி வந்தபோது மனதுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. எமது சந்தேகத்தை அவர் உறுதிப்பட்த்தினார். நாம் திரும்பி வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில், இரவு முழுவதும் மருத்துவரின் வீட்டில், படையினர் காத்திருக்கிறார்கள். அவர்கள் பின்வாங்குவதுபோல பாவனை செய்து எம்மைத் திரும்பவும் கவர்ந்திழுத்து, பின் வீட்டைத் துரிதமாகச் சுற்றி வளைத்து எம்மைகக் கைது செய்யத் திட்டம் இட்டிருப்பார்களோ என்றும் சிந்தித்தோம். ஆனால் கிங்ஸ்லியின் அனுமானத்தின்படி, அந்தத் தருணத்தில் அந்தப் பகுதியில் படையினர் இருக்கும் அசுமாத்தம் இல்லை. ஆகவே, லவயல் காணியிலிருந்து தமது வீட்டுக்குப் போய், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி, அங்கிருந்து திட்டமிடுவதே நல்லது என்று அவருக்குத் தோன்றியது.
ஒரு புறம், தூக்கமற்ற களைப்பு, மறுபுறம் வயிற்றைக் குடையும் பசி. ஒரு குட்டித் தூக்கும் போட்டுவிட்டு, ஏதாவது சாப்பிட்டு விட்டு, தப்பிப் பிழைக்கும் எம் போராட்டத்தின் அடுத்த நகர்வு பற்றி அதன் பின் சந்திக்கலாம் என்று கருதினோம். எதிரநோக்கும் ஆபத்தைத் தற்காலிகமாக மனதில் இருன்ந்து ஒதுக்கிவிடடு, வெற்றுக் கொட்டிலில் இருந்த கட்டிலில் படுத்துத் தூங்கினோம். கிங்ஸ்லியின் சகோதறி, சுடச் சுடத் தேனீர் கொண்டு வந்தார். எனது வாழ் நாளில் என்றுமே சுவைத்திராத, பாலில்லா வெறும் தேனீர் அது. பாலாவிடமிருந்து கிளம்பிய ஒற்றைக் குறட்டை, அவர் ஆழ்ந்த தூக்கத்துக்குள் செல்லும் நிலையில் இருப்பதை உணர்த்தியது. எமது பாதுகாபபை மறந்து நானும் ஆழ்ந்த நித்திரைக்குள் அமிழ்ந்து விடலாமா என்று கருதியபோ, எம்மை உதறவைக்கும் சொல் காற்றிலே மிதந்து வந்தது. ஆம்! என்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து யன்னலூடாக உற்று நோக்கினேன். ஒரு புறத்தலிருந்து மறுபக்கம் மக்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்க எனது இதயம் உறந்தது. ஏதோ பாரதூரமான ஒன்று நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. பாலாவை எழுப்பி, படையினர் வந்துவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும் போது கிங்ஸ்லியும் உள்ளே ஓடி வந்து, படையினர் மருத்துவரின் வீட்டுக்கு அருகே வந்துவிட்டதால், நாம் உடனே வெளியேற வேண்டும் என்று அவசரப்படுத்தினார். அந்த வட்டாரம் மீண்டும் சுற்றிவளைப்புக்கு உள்ளாகி இருந்தது.
5.10 சுற்றிவனைப்பிலிருந்து தப்பியோட்டம்
கிராமத்தவர் ஒருவர் வேகமாக வந்து, தமது சைக்கிளை கிங்ஸ்லியிடம் மனமுவந்து கையளித்தார். பாலா அதில் ஏறி நகரச் தயாரானார். அந்த நேரம், எமது இன்னொரு போராளியான சந்திரன், எங்கிருந்தோ ஓடிவந்து என்னைத் தமது சைக்கிளில் ஏறுமாறு கூறினார். சந்திரனும் அதே பகுதியைச் சார்ந்தவர். கிங்ஸ்லியின் நண்பர். தூரத்தில் ஒழுங்கை முடிவில் காக்கிச் சட்டைகளின் நகர்வை காணமுடிந்தது. என்மீது கரிசனை கொண்ட ஒரு கிராமப் பெண் முன்னே வந்து என் நிறத்தை மறைக்கும் நோக்கத்தோடு எனது தலையை ஒரு கரும் போர்வையால் போர்த்தினார். நிதானமாகச் செயற்படும் கிங்ஸ்லியின் சகோதரி, சுற்றிவளைப்பின் ஊடாக எமக்குப் பாதை திறக்கும் நோக்கத்தோடு எமக்கு முன்னே பிரதான வீதியை நோக்கி வேகமாகச் சென்றார். பெருந்தொகையான படையினர் அங்கே குவிந்திருந்ததால், கிராம மக்கள் பதறியபடி நின்றார்கள். பிரதான வீதியால் கிங்ஸ்லியின் சகோதரி எட்டிப் பார்த்தார். அங்கே அவருக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அடையாளம் கண்டார். அந்தப் பெண், தமது சிநேகிதி ஒரு நெருக்கடியில் சிக்கியிருப்பதைப் புரிந்து கொண்டு, வீதியை எட்டிப் பார்த்து, இந்தியப் படையினர் வீதியில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு எம்மை முன்னேறுமாறு சைகை காட்டினார். அவர் இன்னொரு பெண்ணிடம் க அசைத்து உசாவ, அவரும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு வ் தொடர்ந்து முன்னேறுமாறு கை காட்டினார். துணிச்சலான இந்தப் பெண்கள், எழுந்தமானமாக, நிலைமையை அளவிட்டு, வழிகாட்டியமையால், நாம் அகப்படாமல் தப்பினோம். அந்த வட்டாரத்தைச் சுற்றி நிறுவப்பட்ட மூன்று சுற்றி வளைப்பு வளையங்களில் முதல் வளையத்தை உடைத்துச் செல்ல அவர்களுடைய துணிச்சலே உதவியது. படையினரின் சுற்றிவளைப்புத் தடைகளை அதிர் ஷ்ட வசமாகக் கடந்து கரவெட்டி கிழவித் தோட்டத்தில் உள்ள இந்துக் கோவிலில் எமது ஓட்டத்தை நிறுத்தினோம்.
கோவில் மடத்துக் குளிர்மையான சுத்தமான குரையில் அமர்ந்தபோது, இனி எங்கள் பாடு முடிந்தது என்றே கருதினோம். எமக்குப் பாதுகாப்பளிக்கும் அத்தனை வீடுகளுமே சோதனை யிடப்பட்டிருந்தன. வடமராட்சியின் இந்தப் பகுதி பற்றி கிங்ஸ்லிக்கும் அதிகம் தெரியாது. ஒரு நம்பிக்கையில், கிங்ஸ்லியும், சந்திரனும், எமக்குப் பொதுவாக உதவக் கூடியவர்கள் என்று தாம் கருதிய ஒரு குடும்பத்தினரை சந்திக்க சைக்கிளில் சென்றார்கள். நாம் எமது உடனடிப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் வரை, கும்முடன் தங்கியிருக்க அந்த வீட்டார் இடமளிப்பார்கள் என்று இவர்கள் நம்பினார்கள். தாம் திரும்பி வரும்வரை நாம் கோவிலிலேயே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, அவர்கள் போனார்கள். இடியப்பச் சிக்கலான ஓழுங்கைகளில் அவர்கள் மறைந்த மறுகணம், விடூப்புப் பார்க்கும் உள்ளூர்வாசிகள், மெதுவாகத் தங்கள் வீடுகளுக்கு வெளியே வந்து, கோவிலில் கூடத் தலைப்பட்டார்கள். விரைவில் ஒரு பெரும் கூட்டம் அங்கே திரண்டு, எம்மைப் பார்த்துக் கொண்டு நின்றது. ஆபத்தான சூழ்நிலை விரைவாக உருவாகும் போலப்பட்டது. அந்த வீதியில் சில மைல் தூரம் சென்றால், ஒரு பெரிய இந்திய இராணுவப் பாசறை நிறுவப்பட்டிருந்தது. படையினரின் வாகனமோ நடைக் காவல் உலா அணியோ அந்தப் பக்கம் வந்தால், கூட்டமாக மக்கள் நிற்பது அவர்கள் கவனத்தை ஈர்க்க படையினரும் அங்கே வந்துவிடுவார்கள். ஆனால், இந்தத் தருணத்தில் நாம் எங்கே போவது, எங்கே ஒளிப்பது என்று வகையறியா நிலையில், எமது உயிர் இந்த மக்களின் கரங்களிலேயே தங்கியிருப்பதாக நான் பாலாவிடம் கூறினேன். எமது எதிரிகள் யாராவது அங்கிருந்து எம்மைக் காட்டிக் கொடுக்க நினைத்தால், கோவிலில் நாம் இருப்பதைக் காட்டிக் கொடுக்க சில நிமிடங்களே போதும். நான் இதை பாலாவுக்குக் கூறிக் கொண்டிருக்க, ஒரு நடுத்தர வயது ஆண்மகனார், திடீர் உள்ளுணர்வோடு, சனக் கூட்டத்தால் எமக்கு வரக்கூடிய ஆபத்தை உணர்ந்தவராக, மக்கள் முன்னே நின்று அவர்களைக் கலைந்து. போகுமாறு, அமைதியாகவும் மரியாதையாகவும் வேண்டினார். மக்களும் தீடீரென்று ஆபத்தை உணர்ந்தவர்கள் போல நிலைமையைப் புரிந்து கொண்டு எம்மை ஆபத்துக்குள் தள்ளக்கூடாது என்பவர்கள்போல, துரிதமாக் கலைந்து சென்றார்கள். அதன் பின்னர் வேலியாலும் யன்னலூடாகவும் மட்டுமே விழிகள் எம்மைக் கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்தன.
எமது போராளிகளின் பாட்டியார் ஒருவர் தமது வீட்டில் ஒரு நாள் தங்கியிருக்க எமக்கு இடமளித்தார். இந்த மூதாட்டி, இனியவர், கருணை உள்ளம் கொண்டவர். இந்தியரால் நாம் வேட்டையாடப்படுவதையும், இரண்டு நாட்களாக நாம் உணவு அருந்தவில்லை என்பதையும் கடுமையாக களைத்துப் போய்விட்டோம் என்பதையும் கேள்விப்பட்டதும், தமது வயதுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப மனிதாபிமானத்தோடும் புரிந்துணர்வோடும் செயற்பட்டார். எம்மைக் கிணற்றடிக்குக் கூட்டிச் சென்றார். முதல் நாளிரவு வயலில் அப்பிய சேற்றை நாம் ஆறுதலாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது, தமது ந்ண்ட காலச் சமையல் அனுபவத் திறமையை ஒன்று திரட்டி, சுவை சொட்டும் உணவைத் தயாரித்து தந்தார்.அற்புதமான விருந்து உண்ட திருப்தியோடு எவர் தொந்தரவும் இன்றி, பொழுதுபடும்வரை நன்றாக தூங்கி எழுந்தோம். இரவு தொடங்கும் வேளை பாலாவின் நண்பர் ஒருவர் ஓடி வந்தார். நாம் இருக்கும் இடம்பற்றி படையினர் தகவல் பெற்றிருக் கிறார்கள் என்று தாம் கருதுவதாகக் கூறினார். நாம் இருக்கும் இடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவது உ சிதம் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்தார். எனவே திரும்பவும் ஒழுங்கைகளூடாக இழுபட்டோம். எங்கேயாவது இடம் கிடைத்தால் போதும் என்பதே எங்கள் நிலை. வடு எதுவும் கிடைக்காவிட்டால், மீண்டும் நெல்வயலில் படுத்துத் தூங்குவது . என்றும் கூறிக் கொண்டோம். நாம் போகும் பாதை யில் எமக்குச் சில நிமிடம் முன்னதாக இராணுவக் காவல் அணி ஒன்று சென்றதாக மக்கள் விபரம் தந்தார்கள். மணலில் அவர்களுடைய சப்பாத்து அடை யாளங்களைக் காண முடிந்தது. இருளத் தொடங்கி விட்டதாலும் படையினர் தமது இரவு உலாவில் ஈடூபட்டிருப்பர் என்றதாலும், பாழடைந்த வீடொன்றுக்குள் புகுந்து அங்கு காத்திருந்தோம். எம்மோடு திரும்பவும் சேர்ந்திருந்த கந்தையா திடீரென்று இருளில் மறைந்தார். அவர் திரும்பி வரும் வரை தவிப்போடு காத்திருந்தோம். நேரம் கழியக் கழிய, அவரும் காவல் உலா அணியி னரிடம் சிக்கியருப்பாரோ என்று ஊகித்தோம். அவர் பிடிபட்டிருந்தால், எமது பகுதி அன்றிரவு நிச்சயம் சுற்றிவளைப்புக்கு உள்ளாகும் என்பது எமக்குத் தெரியும். நடப்பது நடக்கட்டும் என்று நாம் முடிவுக்கு வந்தபோது, வாயில் வழியாக கந்தையா அமைதியாக வந்தார். அவருடைய கையில் உணவு நிறைந்த ஒரு பிரம்புக் கூடை. அவர் தமது ஒரு நண்பர் வீடு சென்று, உணவு தயாரிப்பித்து இருந்தார். மக்களின் தாராள மனப்பான்மையும் எம்மீதான அக்கறையும் என்னை வாயடைக்க வைத்தது.
என்னிடமிருந்த மின் ஒளிவிளக்கை தரையின் நடுவில் வைத்து கூடையில் என்ன உணவு இருக்கிறது என்று பார்த்தோம். தட்டுகளை ஒவ்வொன்றாகப் பிரிக்கும்போது, அந்த உணவைத் தயாரிப்பதில் கரிசனை உள்ள ஒரு பெண், சம்பந்தப்பட்டிருபபதை உணர முடிந்தது. அதன் பின்னர் கூடையின் அடியில் இருந்து கல்போன்ற ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்து அதை வெளியே எடுத்தேன். அது ஒரு கரித்துண்டு. வியப்பாக இருந்தது. கரிசனையுள்ள அந்தப் பெண், உணவுடன் ஏன கரிக்கட்டியை வைக்க வேண்டும் என்பது புதிராக இருந்தது. இரவு வேளைகளில் வீட்டில் இருந்து உணவை எடுத்துச் செல்லும்போது காற்றுக் கறுப்புப்பட்டு ஆபத்து நேராமல் இருப்பதற்காக ஒரு கரித்துண்டைப் பாதுகாப்பாக வைப்பது உள்ளூர் நம்பிக்கை என்று விளக்கம் பெற்றபோது உள்ளுக்குள் உருகிப்போனேன். கிராமத்தில் எங்கேயோ நு புறத்தில், அந்த இரவு நாம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஏங்கும் ஒரு பெண்மணி இருக்கிறார் என்பதை உணர்ந்தபோது மனத் தெம்பு பிறந்தது. நாம் மிருகங்களைப் போல வேட்டையாடயப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் பெருந்துன்பம் அனுபவித்துக் கொண்டி ருக்கிறோம் என்றும் அந்த வட்டாரம் பூராவும் விபரம் பரவியிருந்தது. எம்மைத் தம் வீட்டுக்குள் ஏற்பவர்கள், ஆணோ, பெண்ணோ பெரும் ஆபத்தை விலைக்கு வாங்குபவர்களாக இருப்பார்கள். ஆனால் மனித உள்ளுணர்வின் ஆழத்தை அழவிடூவது எளிதல்ல. எதிர்பாராத வேளையில், எதிர்பாராத வழியில், அது தனது பெருந்தன்மையையும் விசாலத்தையும் வியாபிக்கச் செய்யும். பதவி ஓய்வு பெற்ற காவற்துறை அதிகாரி ஒருவரும் இருபதாவது வயதைத் தாண்டிய அவருடைய இரண்டு புதல்விகளும் தம் வீட்டில் எமக்கு அடைக்கலம் தந்தார்கள். எம்மிருவர் நெஞ்சிலும் நன்றி உணர்வு பெருகியது. ஆனால், நாம் இருக்கும் இடத்தை இராணுவத்தினர் அறிந்து கொண்டால், அந்த இரண்டு இளம் பெண்களுடையவும் பாதுகாப்பு என்னவாகும் என்ற நினைப்பு வந்ததும் சஞ்சலம் அடைந்தோம். நான் அந்த வீட்டில் இருப்பதையொட்டி அந்தப் பெண்களுக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது என்று மன உறுதி பூண்ட வளாக பகல் வேளையில் அறைக்குள் முடங்கிவிட்டு குளித்த. லையும் மற்ற அலுவல்களையும் இரவில் பார்த்துக் கொண்டேன். பொதுவான ஆபத்துத் தவிர இந்த வீட்டில் வேறு தொந்தரவு இராது என்ற போதிலும், சூழலின் நிழலைமை எம் இருவரையும் பாதிப்பதை உணந்தோம். அமையவியாக எம்மால் தூங்க முடியவில்லை, சிறுநீர் கழிப்பதுற்காக இரவில் அடிக்கடி எழுந்கோம். எமக்கு ஏற்பட்டிருந்த மன நெருக்குவாரமும் உளைச்சலுமே என்பது இதிலிருந்து புரிர்சுது. நாம் தூங்க முற்படும்போது. எமது வீட்டைச் சுற்றிய ஒழுங்னககளில் நாய் குரைப்பதை வைத்துக் கொண்டு இந்திய இராணுளக்தினர் அங்கு காவல் உலா புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பனத உணர்ந்தொம்.
தாராள குணமும் பரிவும் கொண்ட இந்த இளம் பெண்களின் பராமரிப்பில் இரண்டு நாட்கள் அசம்பாவிதம் எதுவும் இன்றிக் கழிந்தன. தொடர்ந்தும் அந்த வட்டில் நாம் இருந்தால் அனைவருக்கும் ஆபத்தாக முடியும். ஆனால், தமக்கு வரக்கூடிய ஆபத்தைப் பற்றிப் பொ பொருட் பத்தாது. எவ்வளவு வேண்டுமோ அத்தனை காலம் நாம் நம் வீட்டில் தங்கலாம் என்று, இந்தக் குடும்பம் உறுதியளித்தது. எமது அடுத்த விடுதி என என்ற விசாரனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அகிர்ஷ்டனரமாக சூசை அங்கே வந்தார். எமக்கு ஏற்பட்ட சொல்லொணா இடுக்கண் பற்றியும் நாம் எவ்வாறு தப்பிப் பிழைத்துக் கொணடிருக்கிறோம் என்பது பற்றியும் அவருக்கு முழுனமையான விபரங்கள் கடைத்திருந்தன. கால நிலையும் கடல் நிலையும் ம் சீரடையத் தொடங்கி இருந்ததால், வடமராட்சியை விட்டு நாம் வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சூசையிடம் இருந்து வந்த இந்தச் செய்தி, எம் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு விந்துத். மறுநாளே, இறுதி ஆயத்தங்களுடன் தாம் வருவார் என்று அவர் உறுதியளித்தார். அதே சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் 1987 டிசெம்பர் 23ம் திகதி காலமாகி விட்டதை செய்தி ஒலிபரப்புக்கள் தெரிவித்தன. தேசிய துக்க தினமும் பொர்நிறுத்தமும் அறிவிக்கப்பட்டன. முதலமைச்சருக்கு மரியாதையாக அமைதிப் படைகள் தங்கள் பாசறைகளில் முடங்கி இருக்கும் என்றும் கூறப்பட்டது. இது ஒரு விதியின் விணையாட்டு. துமிழ்நாட்டில் நாம் இருந்தபோது அமைப்பின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் காலாக இருந்து. சென்னையில் நாம் இருந்கபோது பாலாவின் மருத்துவ சிகிச்னசக்கு நிதியளித்து பேருதவி புரந்து அந்த பெரிய மனிதர் நமது மறைவிலே கூட எமக்கு உயிர் அளிப்பதில் பெரும் பங்கு வகித்தார்.
எமது இந்த சமாப்தத்தின் இறுதிப்படிகளுக்கான ஆயத்துங்களை புரியுமாறு சூசை எம்மிடம் கூறினார். டிசெம்பர் 24ம் திகதி சாயந்தரம், இரண்டு போராளிகள் சைக்கிளில் வந்கார்கள். வடமராட்சி ஒரு மூலையில் இருந்து வடகரைத் திக்கத்தில் எமக்காக் காத்திருக்கும் படகு ஒன்றில் ஏற்ற எம்மை அனைத்துச் சென்றார்கள். பிரி யாவிடை பெறும்போது, அந்த இளம் பெண்களிடமும் அவர்களுடைய தந்தையிடமும் எனது நன்றியையும் பாராட்டுணர்வையும் தெரிவிக்க வார்த்தை
இன்றி தடுமாறினேன். நாம் சென்ற பின் அவர்களுக்குக் கெடுதி எதுவும் நேரக்கூடாது என்று எம் அடிமனத்தில் நாம் ஆசித்ததை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு எதுவும் நேரவில்லை. தர்மத்தின் விதிகள் நிலைபெற்றன. இந்த நல்ல மனிதரின் வீட்டில் நாம் அடைக்கலம் பெற்றது பற்றி இந்தியர் அறிய வரவேயில்லை. மலர்ந்த புன்னகையோடு எம்மைச் சூழ்ந்து நின்றவர்களிடம் பிரியாவிடை பெற்று. சைக்கிளில் புறப்பட்டோம். உலவும் படையினரின் பிரசன்னம் இல்லாத அன்றைய நாளில் மக்கள் தங்கள் முன்வாயிலில் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சைக்கிள் முன்தணடு இருக்கையில் ஒருக்களித்து இருக்கும் என்னன, கைகளை அசைத்து வழியனுப்பினார்கள்.
5.11 இறுதியான சவால்
பெரும்படைபலத்துடன் ஈவிரக்கமற்ற முறையில் கடுமையாக நடத்தப்பட்ட மனித வேட்டையில் தெய்வாதீனமாக நாம் உயிர் பிழைத்திரும்தோம். நாம் முகம் கொடுத்து வெற்றி கண்ட உயிருக்குப் பங்கம் விளைக்கும் மிகக் கொடிய அந்தச் சூழலை விடப் பயங்கரமான வேறு சூழல் எதுவும் இருந்திருக்க முடியாது. மிக மோசமான நிலையை நாம் கடந்து வந்து விட்டோம் என்றே கருதினேன். அடுத்து, பாக்கு நீரிணையைக் கடந்து தமிழ் நாட்டுக்கு நாம் புரியவிருந்கு கடற்பயணம் ஒரு உல்லாசப் பயணமாக இருக்கமாட்டாது என்றாலும், அந்த நாள்வரை நாம் முகம்கொட்த்த கஷ்டங்ககளோரு ஒப்பிடும்போது, அந்தப் பபணம் அவ்வளவு மோசமாக இருக்க மாட்டாது என்று நம்பினேன். கடற்கரையை அடைந்து இந்தியாவுக்குப் படகு ஏறிவிட்டால். சில மணி நேரத்தில் எமக்குப் பாதுகாப்பு கிடைத்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது எந்தப் பெரிய தவறு. தரையிலே உயிர் பிழழக்க எவ்வாறு போராடினோமோ, கடலிலும் அதே போராட்டத்தை நாம் எதிர் நோக்க நேர்ந்தது. நாம் ஏற்கனவே எதிர்நோக்கி வெற்றி கொண்ட அதே வகை இடர்ப்பாடுகளை எமது புதிய பயணத்திலும் எதிர்நோக்க நர்ந்தது.
திக்கம் கரைனைய அடைந்து போது எமது பனழய நண்பர்கள், சிலர் எம்மோடு மீளச் சேர்ந்துக் கொண்டார்கள். அவர்களும் எம்மைப்போல ஓடிக் கொண்டிருந்தவர்கள். கடற்பயணத்தில் எம்மோடு சேர்ந்து கொள்ள காத்திருந்தார்கள். சூசையும் அங்கு வந்கிருந்தார். அவர், நாம் புறப்படுவதற்கு முந்திய ஏற்பாடுகளைக் கவனித்தார். பயணம் புறப்படும் முன் என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காக, பயணம் எவ்வளவு நேரம்பிடிக்கும் என்றும் சூசையிடம் கேட்டேன். நான்கு மணிநேரம் என்று உடன் பதில் வந்தது. நான்கு மணிநேரமா? இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தபோது ஒரு மணிநேரமே பிடித்தது. இந்தப் பயணம் நீளமாகவே இருக்கப்போகிறது. ஆனால் சமாளித்து விடுவேன் என்று எனக்குள் அமைதியாகக் கூறிக்கொண்டேன். ஆனால் புறப்படூுமுன், வெண்மணலில் இறங்கிப் படகை நோக்கி நடந்தபோது, அச்ச உணர்வு என்னைக் கெளவியது. பருவகால மழை ஓரளவு விட்டுக் கொடுத்தது என்றபோதிலும், குளிர் காற்று, கடலைக் கெம்ப வைத்திருந்தது, பயணம் ஒரு சவாலாகவும் அச்சமூட்டுவதாகவும் அமையப் போகிறது என்று பட்டது. கொந்தளிக்கும் கடல் முன்னே விரிந்து கிடந்தபோதும், பயணம் பற்றித் தோன்றிய அச்சத்தையும் மனதில் பின்னே தள்ளினேன். கடந்த சில மாதங்களாக எதிர்த்த தடைகளை வெற்றி கண்ட எனக்கு, இந்த கடற் பயணம் கூட வெற்றி கொள்ள வேண்டிய இன்னொரு தடை என்று நினைத்தேன். ஆனால், அலையடிக்கும் கடலில் நாம் செல்லவிருந்த படகைப் பார்த்ததும் எனது நம்பிக்கை ஒரு கணம் அதிர்ந்தது. அது ஒரு சிறிய கண்ணாடி இழைப்படகு. அதன் கடையாரில் எட்டுப்பரி வலு இயந்திரங்கள் இரண்டு இணைக்கப்பட்டிருந்தன. குமுறும் கடலின் சவாலை இந்தப் படகு எப்படிச் சமாளிக்கப்போகின்றது என்று ஒரு கணம் திகைத்தேன். எனக்கு வேறு வழி இருக்கவில்லை. சூசையின் அனுபவத்திலும் திறைமையிலும் நம்பிக்கை வைக்க வேண்டி இருந்தது. எம்மை அழிவுப்பாதையில் அவர் அனுப்பி வைக்கமாட்டார் என்று உறுதியாக நம்பினேன். என்ன இருந்தாலும் எமது எத்தனையோ போராளிகள் இதே படகைப் பயன்படுத்தி, கடலைக் கடப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். எத்தனையோ மீனவர், இத்தகைய படகுகளில், இத்தகைய இயற்கைச் சக்திகளை எதிர் . கொண்டிருக்கிறார்கள். இயற்கையுடனான இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி கண்டு, இந்தியாவைச் சென்றடைந்தால், முட்டிமோதும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் நாம் காணாமற் போய், உயிர் தப்பிப் பிழைக்கக் கூடூமாயிருக்கும் என்று என் மனதைத் கிடப்படூத்தினேன். யாழ்ப்பாணத்தில் நாம் இருந்தபோது, மரணம் எம்மைத் துரத்திக் கொண்டிருந்தது. வாய்ப்பு எதுவும் இல்லை என்ற கட்டத்தில் சிறிது வாய்ப்புக் கிடைத்தாலும் அதைப் பெரிது என்று கொள்ளக்கூடியதுதானே? எம்மை எதிர்நோக்கும் ஆபத்துக்களைப் பொருட்படுத்தாதவளாக எமது பைகளைப் படகில் ஏற்றிக் கொண்டு பயணம் புறப்பட்டோம்.
நாம் செல்லப்போகும் திசையில், விரைவாக இருள் படியத் தொடங்கியது. வானிலே காணப்பட்ட கரிய மேகமும் சூழலை மங்கலாக்கிக் கொண்டிருந்தது. நேரம் போகப் போக ஓர் அவசர உணர்வு படியத் தொடங்கியது. நாம் இன்னமும் புறப்படாமல் நின்றோம். படையினர் இரவில் வெளியே வருமுன்னர் அந்த இடத்தை விட்டு அகன்று விடவேண்டும் என்று எமது போராளிகள் விரும்பினார்கள். எனவே படகில் ஏறி, உள்ளே தரையில் உட்கார்ந்தோம். விரைவில், சூசையும் டசின் கணக்கிலான போராளிகளும் ஓங்கி அடிக்கும் அலைகளினூடாக சமுத்திரத்துக்குள் எங்கள் படகை தள்ளிச் சென்றார்கள். இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. , எமது பயணம் தொடங்கியது. கரையிலிருந்து படகு எட்டத்தே செல்ல், குற்ற உணர்வும் துயர உணர்ச்சியும் திடீரென என்னை மேவின. இதுநாள் வரை நாம் முகம் கொடுத்து வந்த நெருக்குவாரங்களின்போது மானுட உயர் சீல மாணிக்கங்கள் சிலருடன் நான் உறவு பூண நேர்ந்தது. எமது அவல வேளையில், எமக்காகத் தாம் பேரிடரைச் சந்தித்துத் தியாகம் புரிய அவர்கள் புரிந்த அர்ப்பணிப்புக்கள். அவர்களுடைய அடி மனதிலிருந்து கிளர்ந்த ஒப்பற்ற பண்புகளாகும். அவர்களோடு ஆழமான பிணைப்பு என் மனதில் ஏற்பட்டிருந்தது. எனவே நாம் புறப்பட்ட கரை என் பார்வையில் இருந்து மறையத் தொடங்க எமது நம்பிக்கைக்குரிய நண்பர்களை ஒரு நிச்சயமற்ற எதிர் காலத்துக்குள் கைவிட்டுச் செல்லும் உணர்வே என்னுள் மிதந்து வந்தது. போராட்டத் தில் ஈடுபட்டிருக்கும் மக்களோடு சேர வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் காத்திருந்து விட்டு யாழ்ப்பாணத்தில் சில மாதங்களே வாழ்ந்த போதிலும் தமிழ் மக்கள் முகம் கொடுத்த ஒடுக்குமுறையையும் அடிமனத் துயரையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அவர்களுடைய கையறு நிலையில் அவர்களை விட்டுச் செல்வது துயரமாக இருந்தது. அதே வேளை, ஆறுதல் உணர்வும் ஏற்பட்டது. வேட்டையாடப்பட்ட நெருக்குவார உணர்வும் அகன்றிருக்கிறது. ஆனால் . ஆறுதல் உணர்வு சிறிது நேரமே நிலைத்திருந்தது.
கரையருகே ஓங்கி அடிக்கும் அலைகளை வெற்றிகரமாகக் கடந்தபின், மலையும் மடுவுமாக உருளும் கரிய கடலுக்கு முகம் கொடுக்கும் சூழல் உருவாகியது. சில மைல் தூரம் சென்றவுடன் காத்திரமான பிரச்சினை ஒன்று தோன்றியது. இயந்திரங்களில் ஒன்று சீராக இயங்கத் தவறியது. திடீரென்று விக்கி விக்கிக் குலுங்கும், பின் சிறுதூரத்துக்கு ஓடும். அதன் பின் திரும்பவும் குலுக்கல் ஏற்படும். இந்தியாவுக்கு அது தாக்குப் பிடிக்குமா என்று ஓட்டி சந்தேகப்பட்டார். அப்படியென்றால் கரைக்கு மீளவும் திரும்பவேண்டியதுதான் என்று முணுமுணுப்பும் கேட்டது. ஒரேயொரு இயந்திரத்தோடு பயணத்தை தொடர்வது ஆபத்தாக முடியும் என்று அவர்களுடைய அனுபவம் கூறியது. இரண்டு இயந்திரங்கள் இல்லாமல் ஆழ்கடலுக்குள் செல்லக்கூடாது என்ற நடைமுறையை ஓட்டிகள் கடைப்பிடித்து வந்தார்கள். நடுக்கடலில் ஒரு இயந்திரம் பழுதடைந்தாலும், இரண்டாவது இயந்திரத்துடன் மீதித் தூரத்தைக் கடந்து விடலாம் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. ஆனால் நாம் புறப்பட்டு ஒரு சில மைல் தூரமே வந்திருந்தோம். இயங்கக் கூடிய ஒற்றை இயந்திரத்துடன் நீண்ட பயணம் தொடர்வது ஆபத்தாகத் தோன்றியது. அதுவும் பழுதடைந்தால் நடுக்கடலில் நாம் தத்தளிக்க நேரும். அதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இயந்திரத்தைப் பழுது பார்த்தார்கள். சில யார் தூரம் அது மெதுவாக ஓடியது. அது அவர்களுக்குத் திருப்தி தரவில்லை. எமக்கு ஒரு பெரிய சோதனை. என்ன தீர்மானத்துக்கு வரப் போகிறார்களோ என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. எதிரே அறிமுகமில்லாத ஆபத்து. பின்னே நாம் முகம் கொடுத்த ஆபத்து. திரும்பிச் செல்வதை நினைக்க உள்ளூர நடுக்கம். கரையில் உள்ள போராளிகளோடு தொலைத் தொடர்பு கொண்டபோது, கரைப்பகுதியில் இந்தியப் படையினர் நடமாடூவதாக தகவல் கிடைத்தது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல், படகை கரைக்கு விடூவதும், இயந்திரம் திருத்தப்படும் வரை அல்லது புதிய இயந்திரம் பூட்டப்படூும்வரை அங்கு காத்திருப்பது மிகுந்த ஆபத்தாக முடியும். நேரே படையினர் கரங்களில் சிக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் எமக்கு வேறு வழியிருக்கவில்லை. கரைக்குத் திரும்பியே ஆக வேண்டும். படகு மெதுவாகத் திரும்பி, கரையை நோக்கிச் செல்ல, எமது இதயம் உறைந்தது. மீண்டும் ஆபத்து வந்துவிட்டது என்பதையும் இந்தியரின் வேட்டையில் இருந்து இன்னமும் நாம் தப்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டோம். எமது இயந்திர பிரச்சனையை கரையில் ஒளித்து நிற்கும் போராளிகளுக்கு தொலை தொடர்பு மூலம் ஓட்டி தெரிவித்தார். துருப்பு நடமாட்டம் குறித்து அவர்கள் ஓட்டிக்கு விபரம் வழங்கினார்கள். கடலில் சில கிலோ மீட்டர் தொலைவில் இயந்திர இயக்கம் நிறுத்தப்பட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று காத்துநின்றேன்.
இரவு இருள் நன்றாகப் படிந்து அலைக்கும் கடலில் எமது படகு வழியத் தொடங்கியது. சீரற்ற அந்தக் கடலில் ஓட்டி ஒருவர் திடீரென்று குதித்தபோது எமக்கு வியப்பாக இருந்தது. அவர் கரைக்கு நந்திச் சென்று படை நடமாட்டத்தை நோட்டம் விட்டு இயந்திரத்தை பழுது பார்க்க உதவி பெறப் போகிறாரோ என்றே நான் நினைத்தேன். ஆனால் வாயடைக்கும் வகையில் துணிச்சல் மிக்க இந்த இளைஞர் நேரெதிரான ஒரு காரியம் செய்தார். கொந்தளிக்கும் கடலிலும், பழுதடைந்த இயந்திரத்தைக் கஷ்டப்பட்டு கழற்றி, அதை தம் தோளில் சுமந்தபடி கரையை நோக்கி பக்கவாட்டாக நந்தத் தொடங்கினார். நாம் கரைக்குச் செல்வது ஆபத்து என்பதால், தாம் கரைக்குச் சென்று, அங்கேயுள்ள மீனவர்களில் ஒருவரிடம் இருந்து பதிலீடாக இயந்திரம் ஒன்றை மாறிப் பெற்று, மீளவும் படகுக்கு நீந்தித் திரும்பி, அதை இணைக்க எண்ணினார். இந்த இளைஞர் இதை எப்படி சாதிக்கப் போகிறாரோ என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கும்மிருட்டு, மாரிக்கடலும் அவருக்குக் குளிராக இருந்திருக்கும். கடற்கரையில் அந்தப்பக்கத்தில இந்தியப் படை நடமாட்டமும் இருந்திருக்கும். தமக்கு வரக்கூடிய ஆபத்தை யொட்டி சிறிதும் தயங்காதவராக தமது திட்டத்தை நிறைவேற்றுவதில் அவர் கண்ணாக இருந்தார். உருளும் கடல் நீரில் அவர் சிரமப்பட்டு செல்ல, அவருடைய மீள்வரவுக்காக நாம் காத்திருந்தோம். உருளும் மலைக்குன்றுகளூடாக மேலும் கீழும் புரியும் பயணம் போல கடலின் மனோநிலைக்கு ஏந்ப எமது சிறிய படகும் வழிந்து கொண்டிருந்தது. எனது வயிற்றில் இருந்த அனைத்தையும் வாந்தியாக கடலில் கொட்டினேன். கரையோர வீதியில் ஓடும் வாகனங்களின் வெளிச்சம் வரவரத் தெளிவாகத் தெரியத் தொடங்க, கடல் சுழிகளும் ஈர்ப்பும், நீரையும் எமது படகையும் இந்தியப் படைகளின் கரங்களை நோக்கி இழுத்துச் செல்வதை உணர்ந்தோம். கடற்கரை வீதியால் சென்று கொண்டிருக்கும் படையினரின் வாகனங்களின் கவனத்தை ஈர்க்க கூடாது என்பதால், வேலை செய்யக் கூடிய இயந்திரத்தை இயக்கி ஆழக்கடலை நோக்கிச் செல்லவும் இயலவில்லை. நர் இழுவையையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. நேரம் இழுபட்டுச் சென்றது. ஒரு புறம் நீரோட்டம் இந்திய இராணுவத்தினரை நோக்கி இழுத்துச் செல்லப் போகிறது என்ற தவிப்பு. மறு புறம் புதிய இயந்திரத்துடன் எமது ஓட்டி வருவார் என்ற எதிர்பார்ப்பு. கரையிலிருந்து சில நூறு யார் தூரத்துக்குள் வந்து விட்டோம். எமது பக்கம் படையினரின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, இருளில் ஓர் ஒளி மின்னி மின்னி மறைந்தது. அது கரையிலிருந்த ஓட்டியிடம் இருந்து வந்த சமிக்ஞை. அவருக்கு புதிய இயந்திரம் கிடைத்து விட்டது. படகுக்கு திரும்ப அவர் தயாராகி விட்டார். சிறிது நேரத்தின் பின் அலைக- ளின் மத்தியில் தலை ஒன்று எழுவதும் ஆழ்வதுமாக முக்குளித்து வருவதைக் கண்டபோது, எமக்கு உயிர் திரும்பவும் மீண்டது. தமிழரின் விடுதலைப் போராட்டத்துடனான எனது அனுபவம். முழுவதிலும் இப்படியான அதிசயத்தை நான் கண்டதில்லை. புதிய இயந்திரம் ஒன்றை தமது தோளிலே சுமந்த படி அலையோடு போராடி நீந்தி வந்து கொண்டிருக்கும் அந்த இளைஞனின் தோற்றமானது, மனித ஆன்மத்தின் தீரம், தியாகம், இலட்சிய உறுதி, ஆகியவற்றின் அதி உயர்ந்த வடிவமாகவே எனது மனதில் படிந்தது. கடலின் பலத்தை எதிர்த்துக் களம் குதித்த இந்த இளைஞன் வெற்றி பெற்று எழுந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இரண்டு இயந்திரங்களும் சுமுகமாக இயங்கும் நிலையில், திரும்பவும் பயணத்தைத் தொடர்ந் தோம். கரையிலிருந்து வந்த செய்தியின்படி, நாம் புறப்பட்ட சில நிமிடத்தில் திக்கம் கடற்கரையில் படையினர் குவிந்திருக்கிறார்கள். நாம் திரும்பவும் அவர்களைத் தோற்கடித்து விட்டோம். வெள்ளைக்காரப் பெண் நேுத்தி கடற்கரைப் பகுதியை நோக்கி பகல் வேளையில் பயணம் புரிந்தார் என்ற செய்தி படையினர் காதுகளை எட்டியிருந்தது என்பதும் அதிலிருந்து புலனாகியது.
திரும்பிச் செல்ல முடியாது என்ற உணர்வோடு கடலின் ஆழத்தை நோக்கிச் சென்றோம். செய் அல்லது செத்துமடி என்ற நிலை. இன்னும் சில மணிநேரமே, பெண்ணே பொறு, இன்னும் சில மணிநேரமே, என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். இயந்திரப் பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டு கடல்மீது செல்லத் தொடங்க அதேயளவு ஆபத்தான மேலும் ஒரு பிரச்சனை கண்முன்னே விரிந்தது. எமது ஓட்டிகள் வரைபடங்களுடனோ காவல் கருவிகளுடனோ பயணம் புரிவதில்லை. விண்மீன்களின் நிலையை வைத்தே செல்லும் திசையை நிர்ண யிக்கிறார்கள். அவர்களுடைய நீண்ட கால அனுபவ அடிப்படையில் தாம் காண்பது இலங்கைக் கப்பலா அல்லது இந்தியக் கப்பலா என்று கூறி விடுவார்கள். எனவே எமக்கு எதிரே அடிவானத்தை அடைத்தபடி ஒரு பயங்கரமான கரிய உருவம் எழுந்ததும், நேரே ஒரு இந்தியக் கடற்படைக் கப்பலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தோம். தரையிலே படையினர் விட்ட பணியை, கடலிலே இந்தியக் கடற்படை தொடர்வது, எதிர்பாராது ஒருங்கணைத்து நிகழும் செயல்போல அல்லவா இடம் பெற்றது. எமது பயணத்தில் சிறிய திசை மாற்றம் செய்து, கப்பலின் நேடார் கண்டறிப் பொறிப் பரப்பில் எமது படகு தட்டூப்படா வண்ணம் எட்டத்தே சென்றோம். முகமற்ற இந்தக் கடற்பூதம் இருளில் கரைந்தது. அதன் பார்வையில் நாம் படவில்லை என்பதைப் புரிந்து கொண்டோம். ஆனால் இதை நேரு வெந்றியாக நாம் மகிழ நேரம் இருக்கவில்லை. அதற்குள் சிநீலங்கா கடற்படைக் காவற் படகு ஒன்றைக் கண்டோம். அதன் காவல் அணியினர் எம்மைக் காணவில்லை. எம்மைக் கடந்து சென்றார்கள். பெருங்கண்டத்தில் இருந்து தப்பிய உணர்வோடு பாக்கு நீரிணையில் எமது பயணம் தொடர்ந்தது.
தூரம் செல்லச் செல்ல இருள் கப்பியது. கதகதப்பும் குறைந்து குளிர் மேவியது. குளிர் காற்று கடலைக் கடைய மலையும் மடூவுமாக கடல் ஏறி இறங்கியது. கருமேகம் வானத்தில் மூட்டம் கட்டி, வரவரக் கனதி பெற்றது. பார்வைக்கு எட்டா இடமெல்லாம் காரிருள் கப்பியது. சிறு ஒளிக்கீற்றுக் கூட எமக்கு நம்பிக்கை தரும் வகையில் எங்கும் காணோம். இதுவரையில் நாம் குறைந்தது நான்கு மணிநேரம் பயணம் புரிந்திருந்தோம். பொறுமை இழந்தவளாக “இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?” என்று கேட்டேன். ““அதிக தூரமில்லை அன்ரி,” என்று ஓட்டி பொய் சொன்னார். எம்மை எதிர்நோக்கிய பிரச்சினைகளில், ஓங்கி எழும் கடல் ஒன்று மட்டுமே. இயந்திரங்களில் ஒன்று பணி புரிந்து களைப்படைந்து இருமிவிட்டு ஓய்ந்து விட்டது. மீந்திருந்த ஒரு எட்டுப் பரிவலு இயந்திரமும் நினைத்துப் பார்க்க முடியாத பேரண்ட பணியை நிறைவேற்றுமா . என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டோம். வடம. ராட்சியில் இத்தனை இடருக்கும் முகம் கொடுத்துத் தப்பிப் பிழைத்த நாம் சமுத்திர நடுவில் இருளின் தனிமையில் உயிரிழப்பது எமது விதியாக இருக்க மாட்டாது என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. ஓட்டிக்கு மட்டுமே விண்மீன்களை வைத்துத் திசையை அறிய முடியுமாக இருந்தது.ஆகவே எந்தத் திசையில் செல்கிறோம், தரையைச் சென்நடைய எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். பெரிய அலைகள் எம்முன்னே எழுந்த படகின் மீது விழுந்தன. படகுக்குள் சிறு குளங்கள் உருவாகின. கையில் கிடைத்த பாத்திரம் எதையும் எடுத்து படகில் இருந்த நீரை வெளியே இறைத்து, படகின் பாரத்தைக் குறைத்தோம். திடிரென்று ஒரு இயந்திரம் படகிலிருந்து கழன்று சென்றபோது நாம் அதிர்ந்து போனோம். படகு நின்று விட்டது. பழுதடைந்த இயந்திரமா, வேலை செய்து கொண்டிருந்த இயந்திரமா என்ற அச்சம் நெஞ்சைப் பிசைந்தது. ஓட்டி இயந்திரத்தை இயக்க முற்பட்டபோது மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றோம். அது இயங்கி ஓடத் தொடங்கியது. கடலிலே மூழ்கியது பழுதடைந்த இயந்திரமே என்பது நிம்மதியைத் தந்தது. நிம்மதியோடு உட்கார்ந்தோம். நண்ட நேரமாக சமுத்திரத் துடனும் கால நிலையுடனும் போராடிக் கொண்டிருந்தோம். பல் மணிநேரத்துக்குப் பின் இனி வெளியே காணப்படப்போகிறோம் என்ற அச்சம் தாவியது.
இந்தக் கடற்பயணம் இவ்வளவு நளமாக இருக்கும் என்று எம்மில் யாரும் எதிர்பார்க்கவில்லை. மெல்லிய பருத்தி ஆடைகளையும் றபர் செருப்புகளையும் அணிந்திருந்தோம். யாழ்ப்பாண வெக்கைக்கு அது பொருந்தும். ஆனால் இந்தப் பயணத்துக்கோ கால நிலைக்கோ அல்ல. இரவு குளிர் பரவிய போதே எமது மூடத்தனமும் புரிந்தது. கடல்கூட இரக்கமற்றதாக எமது கண்முன்னேயே உயர உயர எழுந்து உங்களை விழுங்கப் போகிறேன் என்பதுபோல மிரட்டிக் கொண்டிருந்தது. பல மணிநேரம் கடலில் கழித்துவிட்டோம். அடிக்கும் அலைகள் படகை அலைத்தன. கடல் நீரில் தெப்பமாக நனைந்திருந்தோம். அடிக்கடி வீசும் காற்று ஈர உடையில் படும்போது, குளிர் தாங்க முடியாதாகிவிட்டது. படகின் பக்கவாட்டில் நான் அமர்ந்திருந்து அடிக்கும் அலைகளையும் காற்றையும் தாங்கிக் கொண்டேன். என்னால் குளிர் தாங்க முடியவில்லை. பல் கடகடவென்று தந்தியடித்தது. படகின் பக்க வாட்டிலிருந்து எழுந்திருக்கக் கூட முடியாது படகைப் பிடித்தபடி உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பிடி, வாழ்வையும் விடாது பிடித்திருக்கும் என் நிலைப்பாட்டையே பிரதிபலித்தது. அதே நிலையில் . நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தது, பல் நடுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வும் நாம் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தியது. பாலாவும் குளிரால் நடு நடுங்கினார். ஈரமும் தலைச் சுற்றும் இந்தப் பயணத்துக்கு முடிவே இல்லை என்று கூறின. நேரம் என்பது அநாதியாகப்பட்டது. நான்கு மணிக்குக் கூடுதலாகக் கடலில் இருந்து விட்டோம். ஆகவே எமது பயணம் அநேகமாக முடியப் போகிறது என்று நினைத்தோம். இன்னும் அரைமணி நேரம், அரை மணி நேரம் என்று ஓட்டி தொடர்ந்து பொய் சொன்னார். பொங்கும் கடலிலிருந்தும் நடூீங்கும் குளிரில் இருந்தும் எப்படி வெளியேறப் போகிறோம் என்ற ஒன்றைப் பற்றியே சிந்திக்க முடிந்தது. அடிவானத்தில் ஒளிக்கற்றை ஒன்று தோன்றுவதை ஓட்டி ஒருவர் எனக்குச் சுட்டிக்காட்டினார். தமிழ் நாட்டுக் கரையோரக் கிராமங்களின் வெளிச் சங்கள் அவை. தூரத்தில் தெரிந்தன. நம்பிக்கை இழந்தவர்களுக்கு தெய்வ தரிசனம் போல அது இருந்தது. இன்னும் சில. நிமிடத்தில் கடலிலிருந்து வெளியேறிக் கதகதப்பைத் தேடிக் கொள்ளலாம் என்று கருதினேன். ஒளியைக் காட்டிய அந்தத் தம்பி நாம் அதைச் சென்றடைய பல மணிநேரம் பிடிக்கும் என்பதை எனக்குக் கூறவில்லை. கடல் பயணமும் எமக்குப் புதிது. கடலில் தூரத்தை அளக்கும் ஆற்றலும் குறைவு. நேரம் போகப் போகத்தான் இரவில் வழிகாட்டும் அந்த கலங்கரை விளக்கை சென்றடையுமுன் பல மணி நேரம் குளிரில் நடுங்க வேண்டியதுதான் என்பதைப் புரிந்து கொண்டோம். ஆனாலும், நம்பிக்கை மீண்டும் எம்முன்னே துளிர்விடத் தொடங்கியிருந்தது.
கரையை அண்மிக்கத் தொடங்க இந்தியக் கடற்படையினதும் கரைக் காவல்பிரிவினதும் படகுகள் வரலாம் என்பதால் நாம் விழிப்போடு நோட்டமிட வேண்டும். என்ற உணர்வு தலைதூக்கியது. ஆனால் நாம் பாதுகாப்பான கதகதப்பு பெற போகிறோம் என்ற இனிய உணர்வு மது அச்சத்தை ஓரம் கட்டியது. நான் குளிரால் உறைந்து போயிருந்தேன். காவல் உலா படகு வருகிறதா என்று பார்ப்பதற்கு தலையைத் திருப்புவதே கடினமாக இருந்தது. இனி விடியுமுன் நாம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற அவசியமும் இருந்தது. விடிந்த பின் சென்றால், எளிதாகக் காவல் படகுகளின் கண்ணில் தட்டுப்பட்டு கைதாகி விடுவோம்.
இரண்டு ஓட்டிகளுக்கும் இந்தக் கடற்பகுதி பரிச்சயமாக இருந்தது. கரைக் காவலர்கள் சுங்கத்துறை உலா அணியும் அதிகாலையில் நடமாடாத பகுதிகளைத் தேர்ந்து பத்திரமாகப் படகுகளை அங்கு செலுத்த அவர்களுக்குத் தெரியும். நல்ல காலமாக படகு எதையும் கடலின் இந்தப் பகுதியில் நாம் காணவில்லை. ஆனாலும் அசட்டையாக இருந்து விடாது எமது பயணத்தின் இறுதிக் கட்டத்தில் கொடிய இடையூறு எதுவும் நேர்ந்து விடாது, எங்கள் பார்வையைச் சுழல விட்டுக்கொண்டிருநதோம். ஒரு சில மழைத்துளிகள் விழுந்தன. உடனே எச்சரிக்கை அடைந்தோம். கருமேகங்கள் இப்பொழுது ஒரு உண்மை யான அச்சுறுத்தலாக அமைந்தன. தரையை அடையும்வரை மழை வரக்கூடாது என்று விரும்பினோம். அடிக்கும் அலைகள் ஊடாக கரைக் கடலுக்குள் நுழைந்தோம். குளிரால் விறைத்திருந்த நாம் படகிலிருந்து வெளியே இறங்கி கணுக்கால் புதையும் சேற்றுக்குள் நின்றோம். அந்த நேரம் வானம் பிய்த்துக் கொண்டு பொழிந்தது. மழையில் தெப்பமாக நனைந்தபடி, சேற்றுக்குள் காலை இழுத்தபடி எமக்கு வாழ்வளித்த படகிலிருந்து எட்டத்தே நகர்ந்ததோம். கரையோரம் நின்ற படகை பின்னே இருந்து குமுறியபடி ஓங்கி வந்த ஒரு அலை தலைகழாக கவிழ்த்தது. பத்துமணிநேர மறக்கமுடியாத கடல் அனுபவம் அந்தப் படகுக் கவிழ்ப்போடு முடிய, எமது புதிய தலைமறைவு வாழ்க்கையும் ஒளித்தோடு படலமும் அந்த இடத்தில் தொடங்கியது.
5.12 இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை
எந்தப் பெரிய முரண்பாடு! கடைசியாக இந்தியாவிலேயே நாம் தஞ்சமடையவேண்டியதாயிற்று. அது தவிர, தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் போர் நடத்திக் கொண்டிருக்க பெருந்தொகையான புலிப் போராளிகள் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழ் நாடு அரசி யல்வாதிகளுடைய உதவியும், பொதுமக்களின் ஆதரவும் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த முந்திய நாட்களில் இருந்ததற்கு நேர்மாறான நிலையிலேயே அவர்கள் இப்போது வாழ்ந்தார்கள். இப்பொழுது காவல்துறையினரும் புலனாய்வுப் பிரிவினதும் கண் அவர்கள் மீது இருந்தது. எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் நிலவியது, எமது போராளிகளும் எப்போதும் விழிப்பாகவே இருந்தார்கள். அதிகாரிகள் எந்த வேளையும் தம்மீது பாய்ந்து, கைது செய்து தடுப்புக்காவலில் இடலாம் என்று எதிர்பார்த்தார்கள். 1988 ஓகஸ்ட் மாதத்தில் மாநிலம் பூராவும் சுற்றிவளைப்பு நடத்தி, புலிகளைத் தடுப்புக் காவலில் இட்டதை அவர்கள் மறக்கவில்லை. ஆனால் எம்மைப் பொறுத்த வரையிலே இந்திய அரசுடன் போர் என்பது வேறு, நாம் தமிழ் நாட்டு மக்கள் மட்டிலும் இந்திய மக்கள் மட்டிலும் வைத்திருக்கும் மதிப்பு வேறு. எமது தாயகத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் இந்தியா மீதான எமது மரியாதை உணர்வை மாற்றவில்லை.
வேதாரண்யத்தை நாம் அடைந்ததும், எமது ஆதரவாளர்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு உள்ளூர் காவலதுறையினரிடமிருந்தும் சுங்க அதிகாரிகளிடமிருந்தும் அந்த மக்கள் எம்மைக் காப்பாற்றினார்கள். வேதாரணியம் ஒரு சிறிய பட்டினம். உள்ளூர் அதிகாரிகளுக்கு இந்த மக்களின் வீடுகள் நல்ல பழக்கம். ஆகவே எம்மைக் கண்டுபிடிப்பதும் மிகச் சுலபம். ஆகவே நாம் அங்கிருந்து புறப்படுவது நல்லது என்று அறிவுரை கிடைத்தது. தமிழ் நாட்டில் பாலாவை நன்கு தெரியும். இனி எனது நிறமும் எம்மைக் காட்டிக் கொடுத்துவிடும். ஆகவே அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி பாலாவை நன்கு தெரியாத கர்நாடக தலை நகரான பங்களூரில் கலைமறைவாக வாழ்வது என்று தீர்மானித்தோம். எனவே, திருச்சியில் உள்ள ஒரு பாதுகாப்பான வீட்டில் சிறிதுகாலம் தங்கிவிட்டு, பங்களூர் சென்று ஜெயநகரில் ஒரு வட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம்.
பங்களூரில், நாம் நன்கு காலூன்றிய பின், தமிழ் நாட்டில் தலை மறைவாக வாழ்ந்த சில இயக்கப் போராளிகள் பங்களூர் வந்து எம்மோடு சேர்ந்து கொள்ளத் தீர்மானித்தார்கள். பங்களூரில் ஆரம்ப நாட்களில் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்காதிருக்க பெருமுயற்சி மேற்கொண்டேன். கூடிய வரையும் வீட்டுக்குள்ளெ எனது பணிகளை முடக்கிக் கொண்டேன். ஆனால், நாட்கள் செல்ல நிலைமை தாங்க முடியாததாகியது. வீட்டுக்குள் ஒரு கைதிபோல் அடைந்து கிடந்தேன். இது எனது பொறுமையைச் சோதித்தது. அடங்கியிருப்பதை முற்றாக கைவிட்டு பாலாவும் நானும் நகரத்தைச் சுற்றிவரவும் கடைக்கும் பூங்காவுக்கும் போகவும் தீர்மானித்தோம். தமிழீழத்திலும் இந்தியாவிலும் இடம்பெறும் சம்பவங்களை ஊன்றிப் படித்தோம். போர் நிறுத்தம்; போர் முடிவுக்கு வரும்; நாம் யாழ்ப்பாணம் திரும்பலாம் என்று நம்பியிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. போர் விரைவிலே முடிவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் பிரபாகரன் அவர்களிடம் இருந்து செய்தி வந்தது. இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டன் செல்ல வேண்டும் என்பதே அந்தச் செய்தி. புலிகளுக்கும் இந்தியாவுக்கும் நீலடைபெறும் போரில் எத்தகைய நிலைமை உண்டாகி இருக்கிறது என்பதையும், அதிலிருந்து உருவான அரசியல் இராணுவ நிகழ்வுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு நாம் தெரிவிக்கலாம் என்றும் அந்தச் செய்தி விதப்புரை புரிந்திருந்தது. இந்தியாவை விட்டு நாம் வெளியேறலாம் என்று தீர்மானம் வந்தாலும் வெவ்வேறு இந்திய புலனாய்வுப் பிரிவுகளால் தடுக்கப்படாது நாம் இந்தியாவை விட்டு எவ்வாறு வெளியேறுவது என்பது எமக்குப் புதிராக அமைந்தது. நாம் வெளியேறுவதற்கு கிடைத்த ஒரே வழி, சென்னை அனைத்துலக விமான நிலையம் மூலமாகவே வெளியேறும் போது விமான நிலையத்தில் வைத்து நாம் கைது செய்யப்படாது இந்தியாவில் இருந்து நாம் வெளியேறும் ஏற்பாடுகளைப் புரிவதற்காக இரவு வேளையில் சென்னை திரும்பி, நண்பர் ஒருவருடன் குங்கினோம்.
கிட்டு, வீட்டுக்காவலில் சென்னையில் இருந்தார். அவருடைய வதிவிடத்தைச் சுற்றி காவல் அதிகாரிகள் பலர் இருபத்தி நான்கு மணிநேரமும் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்தார்கள். எமது பழைய நண்பரும், இயக்கத்தின் தமிழ்நாடு அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவருமான கிட்டுவை, நாம் லண்டன் புறப்படுவதற்கு முன் பார்த்தாக வேண்டும் என்று தீர்மானித்தோம். இரண்டடுக்கு வீடு ஒன்றில் மேல்மாடியில் கிட்டு வசித்து வந்தார். கீழ் தட்டில் காவல்துறையினர் தரித்திருந்தார்கள். நாம் அவரைப் பார்க்க விரும்பும் தகவல் கிட்டுவுக்கு தெரிவிக்கப்பட்டது. புதுப் புது சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லாத கிட்டு, காவலில் நிற்கும் காவலதிகாரிகளின் கவனத்தை திசை திருப்ப ஒரு திட்டம் ஒன்றை வகுத்தார். குறித்த இரவு இரண்டு பிரபலமான தமிழ்ப்படங்களைத் தருவித்து காவலதிகாரிகளுக்கு ஒரு வீடியோ காட்சிக்கு ஏற்பாடு செய்தார். வாயிலில் காவலுக்கு நிற்கும் காவலர். உட்பட, அனைத்துக் காவலதிகாரிகளும் வைத்த கண் வாங்காது படத்தில் மெய்மறந்திருக்க, முட்கம்பி வேலியூடாக நாம் சென்று, பின் படிகளால் மேல்மாடிக்குச் சென்றோம். தமிழ்நாடு காவற்துறையின் வலையில் சிக்காது கிட்டுவை நாம் சந்தித்தோம். சென்னையில், தலைமறைவாக சொற்பகாலம் இருந்தபோது இந்திய புலனாய்வுத் துறை உயர் அதிகாரி ஒருவரையும் சந்தித்தோம். நாம் இந்தியாவில் இருந்தபோது பாலாவுக்கு நன்கு அறிமுகமாகி இருந்தவர் இவர். முக்கிய கடைசி நாட்களில் சென்னையில் எமது நடமாட்டத்தைக் குறித்த சில பகுதிகளில் மட்டும் வைத்திருக்குமாறும், தமிழ்நாடு கியூ பிரிவினரின் பார்வையில் தட்டுப்படாது பார்த்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கினார். இந்தியாவை விட்டு வெளிறேம் திட்டத்தை நாம் அவரிடம் கூறினோம். பயண வேளையின்போது விமான நிலையத்தில் பயணச் சீட்டூச் சோதிக்கப்படும் -குடிவரவுக் கடவையில் தாம் நிற்பார் என்றும் அவர் தெரிவித்தார். எமது கடவுச்சீட்டுகளில் இந்தியாவில் தங்கியி ருக்கும் காலம் காலா வதியாகி பல ஆண்டுகள் கழிந்திருந்தன. குறித்த நேரத்தில், யாரும் கவனிக்காதவாறு, சீட்டுக் கடவைக்குச் சென்றோம். வேறு பெயரிலேயே எமது பயணச் சீட்டுக்கள் பதியப்பட்டிருந்தன. சீட்டுக்களைப் பார்வையிட்ட அதிகாரி, “பயணம் நல்லபடியாக அமையட்டும் பாலசிங்கம் அவர்களே” என்று கூறி, அவற்றை எம்மிடம் | திருப்பித் தந்தபோது, ஒரு கணம் அதிர்ந்து போனோம். உள்ளே சென்றுவிட்டோம். குடிவரவுக்கடவை ஒன்றே பாக்கி. கடமையுணர்வு மிக்கவர் போன்ற தோற்றமுடைய குடிவரவு அதிகாரி ஒருஹிடம் எமது . கடவுச் சீட்டுக்களை கையளித்தோம். அவர் அவற்றைப் பக்கம் பக்கமாக கூர்மையாக புரட்டிப் பார்த்தார். எம்மையும் உற்றுப் பார்த்தார். பின்னர். பின்னணியில் நிற்கும் ஓர் உருவத்தை திரும்பிப் பார்த்தார். அவரிடம் இருந்து ஒரு தலையசைப்பு கிடைத்தது. கடவுச் ச்ீட்டுக்களைத் துரிதமாக மூடியவர், எம்மிடம் அவற்றைத் தந்து உள்ளே செல்லுமாறு கையசைத்தார். மங்கலான பகுதியில், பின்னே நின்று தீர்மானம் செய்த அந்த உருவம், தமிழரான அந்த புலனாய்வு அதிகாரியே. சிறிது நேரத்தில் லண்டனை நோக்கி எமது விமானம் வானத்தில் பறந்தது. எமது வாழ்க்கைச் சகடவோட்டம் ஒரு முழுச் சுந்று சுற்றி வந்திருந்தது.