3  இந்தியாவில்‌ சந்தித்த நெருக்கடிகள்‌

சென்னை மீனம்பாக்கம்‌ விமான நிலையத்தில்‌ எம்மை வரவேற்க பேபி சுப்பிரமணியம்‌ வந்திருந்தார்‌. இது நடந்தது 1983 ஓகஸ்ட்‌ மாதம்‌. கசங்கிய வெள்ளை வேட்டி; ஒரு பழுப்பு நிற சேட்‌; முகத்திலே கவலைக்‌ கோடு. இதுதான்‌ பேபி சுப்ரமணியத்தின்‌ அன்றைய தோற்றம்‌. இந்தத்‌ தடவை அவருடைய கலைந்த கோலத்துக்குக்‌ காரணம்‌ அவருடைய வழமையான அசட்டையல்ல. நாம்‌ சென்றடைவதற்கு முந்திய சில வாரங்களாக மும்முரமாக அரசியல்‌ நடவடிக்கைகளில்‌ அவர்‌ ஈடுபட்டிருந்தார்‌ என்பதும்‌, சகிக்க முடியாத வேதனைகளை அவர்‌ தாங்கிக்‌ கொண்டிருந்தார்‌ என்பதும்‌ தெரிந்தது. சிறீலங்காவில்‌ தமிழ்‌ மக்களுக்கு எதிரான கலவரத்தை ஓட்டி, தமிழ்நாடே கொந்தளித்துக்‌ கொண்டிருந்தது. அனைத்து அரசியல்‌ தலைவர்களும்‌ சிங்கள அரசுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும்‌ பேரணிகளையும்‌ நடத்திக்‌ கொண்டிருந்தார்கள்‌. சென்னை வீதிகளை ஆர்ப்பாட்டச்‌ சனத்திரள்கள்‌ திணறடித்தன. கட்டடங்களிலும்‌ சிற்றுந்துகளிலும்‌ கறுப்புக்‌ கொடிகள்‌ பறந்து கொண்டிருந்தன. திராவிட இயக்க ஆதரவாளர்கள்‌ தமக்கே உரித்தான கறுப்புச்‌ சட்டைகளில்‌ பெருந்திரளாக நடமாடிக்‌ கொண்டிருந்தார்கள்‌.

நாம்‌ சென்னையை சென்று அடைந்த போது “வூட்லண்ட்ஸ்‌” விடுதியிலே தங்க ஏற்பாடாகியிருந்தது. இதைப்‌ பார்த்ததும்‌, தமிழ்‌ நாட்டில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ பலமாக காலூன்றாது விட்டார்களோ என்று உடனே ஐயம்‌ அடைந்தோம்‌. எமது ஐயத்தை உறுதிப்படுத்துவதுபோல, ஓர்‌ அரசியல்‌ அலுவலகம்‌ கூட நிறுவப்படவில்லை என்று அறிந்தோம்‌. நேசன்‌ போன்ற பழைய நண்பர்கள்‌ எம்மைச்‌ சந்திக்க வந்தபோது, எமது. சந்தேகம்‌ சரியே என்று உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும்‌ ஒரு சில விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளே ஆங்காங்கு தரித்திருந்து ஆரவாரம்‌ இல்லாத அரசியற்‌ பணிகளில்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருந்தார்கள்‌. உண்மையில்‌ மிகக்‌ குறைவான எமது போராளிகளே தமிழ்நாட்டில்‌ தரித்திருந்தார்கள்‌. பெரும்பாலான போராளிகளை, பிரபாகரன்‌ அவர்கள்‌ தம்மோடு யாழ்ப்பாணத்துக்குக்‌ கூட்டிச்‌ சென்றிருந்தார்‌.

இலங்கையில்‌ தமிழ்‌ மக்களுக்கு எதிரான கலகங்கள்‌ காரணமாக, தமிழ்‌ நாட்டிலும்‌, புதுடில்லியிலும்‌ உயர்‌ மட்ட அரசியல் மற்றும்‌ ராஜதந்திர நடவடிக்கைகள்‌ களைகட்டியிருந்தது. ரெலோ, புளொட்‌, ஈ.பி.ஆர்‌.எலீ.எஃப்‌, ஈரோஸ்‌ போன்ற ஏனைய போராளி அமைப்புகள்‌ திருமதி காந்தியின்‌ பிரத்தியேக புலனாய்வுப்‌ பிரிவான றோ என்ற அமைப்புடன்‌ தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததோடு, ராணுவப்‌ பயிற்சித் திட்டசத்திலும் ஈடுபட்டிருந்தன.

1983 இனக் கலவரத்தால்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயலின்‌ பரிமாணம்‌, இலங்கை முழுவதிலும்‌ நிகழ்ந்த கோரச்‌ சம்பவங்கள்‌ தொடர்பாக அரசுத்‌ தலைவர் ஜெயவர்த்தனா காட்டிய மமதை யான போக்கு, இதனால்‌ தமிழ்நாட்டில்‌ திரண்டெழுந்த உணர்ச்சிக்‌ கொந்தழிப்பு-இந்நிகழ்வுகள்‌. காத்திரமான நடவடிக்கைகளில்‌ ஈடுபட இந்திய அரசுக்கு வாய்ப்பை வழங்கின. இனி, தறிகெட்ட தன்‌ அண்டை நாட்டை ஒழுங்குகட்டுப்பாட்டுக்குள்‌ வைத்திருப்பது நியாயமே என்ற தார்ம்க உணர்வையும்‌ இந்தியாவுக்குக்‌ கொடுத்தது. புதுடில்லி இருமுனை நடவடிக்கைகளைத்‌ தேர்ந்தெடுத்தது. வன்செயல்‌ நிறைந்ததும்‌ இழுபட்டுச்‌ செல்வதுமான இலங்கையின்‌ இனப்பிரச்சனைக்குத்‌ தீர்வுகாணும்‌ விடயத்தில்‌, ஒரு முனையில்‌ ராஜதந்திர அணுகுமுறையையும்‌ மறுமுனையில்‌ ராணுவ நெருக்குவாரத்தையும்‌ கடைப்பிடிக்க, புதுடில்லி தீர்மானித்தது. ராஜதந்திரமானது உயர்‌ நிலையிலும்‌, வெளிப்படையானதாகவும்‌ இருக்க, ராணுவ ஈடுபாடு மூடுமந்திரமாக இருக்க வேண்டும்‌ என்றும்‌ வகுக்கப்பட்டது. பங்களாதேசில்‌ செய்தது போல, நேரடி ராணுவப்‌ படையெடுப்பில்‌ ஈடுபட, திருமதி காந்தி விரும்பவில்லை. இலங்கை, இறையாணமை மீது கை வைப்பதாக மேற்குலகம்‌ ஒரு பகைமைக்‌ கண்கொண்டு பார்க்கக்கூடும்‌ என்று அவர்‌ அஞ்சினார்‌. எனவே ராணுவ நெருக்குவாரம்‌ தமிழ்ப்‌ போராளி அமைப்புகள்‌ மூலம்‌ கொண்டுவரத்‌ திட்டமிடப்பட்டது. போராளி அமைப்புகள்‌ தங்கள்‌ ஆயுதத்‌ தாக்குதல்களைத்‌ தீவிரப்படுத்த வேண்டியிருந்தன. ராணுவப்‌ பயிற்சியையும்‌ ஆயுதங்களையும்‌ வழங்குவதன்‌ மூலம்‌ தமிழ்ப்‌ போராட்ட இயக்கத்துக்கு உதவி புரிவது இந்தியாவின்‌ திட்டமாகும்‌. இந்தியாவின் இரகசியத்‌ தலையீடு வெளியே தெரியாத வண்ணமும்‌, எவ்வித சந்தேகத்தைத்‌ தோற்றுவிக்காத வகையிலும்‌ மிகவும்‌ இரகசியமாகவே இத்‌ திட்டத்தை செயற்படுத்த வேண்டியிருந்தது. இறுதியில்‌, இந்தியா வின்‌ செல்வாக்கு வீச்சுக்குள்‌ சிநீலங்காவைக்‌ கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமான ஓர்‌ அரசியல்‌ தீர்வுக்கு சிங்கள ஆட்சியாளரை நிர்ப்பந்திப்பதே இந்தியாவின்‌ உள்ளார்ந்த திட்டமாக இருந்தது. இராணுவ உதவி வழங்கியதால்‌ அனைத்துப்‌ போராளிக்‌ குழுக்களும்‌ தனக்கு நன்றி விசுவாசக்‌ கீழ்ப்படிவோடு இருக்கும்‌ என இந்தியா எதிர்பார்த்தது. இதனால்‌ இக்‌ குழுக்களை தனது விருப்பிற்கு ஏற்ப செயற்படச்‌ செய்து, இதன்‌ மூலம்‌ தனது தேசிய, புவியியல்‌ நலன்களைப்‌ பேணிப்‌ பாதுகாத்து விடலாம்‌ என்றும்‌ கருதியது. இந்திய தலையீட்டுத்‌ திட்டத்தின்‌ ஓர்‌ அச்சாணியான நம்பிக்கை இதுதான்‌.

இராணுவப்‌ பயிந்சி வழங்குவது தொடர்பான இந்தியாவின்‌ இரகசியத்‌ திட்டம்‌ அனைத்துப்‌ போராளிக்‌ குழுக்களுக்கும்‌ அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தம்‌ அணியிலே புதிய போராளிகளை வடக்கிலும்‌ கிழக்கிலும்‌ சேர்த்துக்‌ கொள்ள இந்த அமைப்புகள்‌ அனைத்தும்‌ மும்முரமாக முயன்றன.

அதிகாரம்‌ உடைய விடுதலைப்‌ புலித்‌ தலைவர்‌ எவரும்‌ தமிழ்நாட்டில்‌ அந்தத்‌ தருணத்தில்‌ இல்லை. மாநில மட்டத்திலோ . அரசிடமோ புலிகளின்‌ கருத்தை உறுதியாகத்‌ தெரிவிக்கவல்ல பிரதிநிதி எவரும்‌ அங்கே இருக்கவில்லை. இதனால்‌ விடுதலைப்‌ புலிகளை ஓரங்கட்டிவிட்டு இந்தியப்‌ பயிற்சித்‌ திட்டங்களை ஏனைய அமைப்புகள்‌ ஆக்கிரமிக்க நேர்ந்தது. விடுதலைப்‌ புலிகளோடு எவரும்‌ தொடர்பு கொள்ள, புலிகளுக்கான அரசியல்‌ பணிமனை எதுவும்‌ தமிழகத்தில்‌ இருக்கவில்லை. எனவே இந்தக்‌ குறைபாட்டை நிவர்த்தி செய்யும்‌ பணியில்‌ நாம்‌ ஈடுபட்டோம்‌. அந்தத்‌ தருணத்தில்‌ அங்கு ஓடியாடித்‌ திருந்து கொண்டிருந்த பேபி சுப்ரமணி யம்‌, நேசன்‌ ஆகியோரின்‌ உதவியோடும்‌ விடுதலைப்‌ புலிகளுக்காக லண்டனில்‌ திரட்டப்படும்‌ நிதியோடும்‌, பாலாவும்‌ நானும்‌ நிலைமையை மாற்றிக்‌ கொள்ள முனைந்தோம்‌. வெளிநாடுகளில்‌ புலம்பெயர்ந்து வாழும்‌ மக்களில்‌ : எமக்குத்‌ தெரிந்தவர்களோடு தொடர்பு கொண்டு, நிதி ஆதரவை அதி- கரிப்பதிலும்‌ விடுதலைப்‌ புலிகளைப்‌ பலப்படுத்துவதிலும்‌ கடுமையாக உழைத்தோம்‌. “தமிழீழ விடுதலைப்‌ புலிகளும்‌ தமிழர்‌ விடுதலைப்‌ போராட்டமும்‌” என்ற தலைப்பில்‌ ஆங்கிலத்தில்‌ ஒரு நீண்ட கட்டுரையை பாலா எழுதத்‌ தொடங்கினார்‌. பக்கம்‌ பக்கமாக அவர்‌ எழுதியதை உடனே அச்சடித்து, எழுத்துக்‌ கோர்ப்பதற்காக அச்சகத்துக்கு அனுப்புவோம்‌ (நவீன அச்சகம்‌ எதையும்‌ அந்தத்‌ தருணத்தில்‌ அங்கு காணமுடியவில்லை. கையாலேயே ஒவ்வொரு சொல்லையும்‌ கோர்க்க வேண்டியிருந்தது. கோர்த்ததை உடனே படித்து, எழுத்துப்‌ பிழை திருத்தினோம்‌. இரவு பகலாக உழைத்ததால்‌, சில நாட்களிலேயே ஆவணம்‌ தயாராகி விட்டது. உடனடியாகவே அது பரவலாக விநியோகிக்கவும்‌ பட்டது. விடுதலைப்‌ புலிகளின்‌ நோக்கத்தையும்‌ அரசி யல்‌ சித்தாந்தத்தையும்‌ அந்த ஆவணம்‌ விளக்கியது.

நாம்‌ புரிந்த மூன்றாவது முக்கிய காரியம்‌, ஒரு புதிய வதிவிடம்‌ தேடியதாகும்‌. அங்கிருந்தே ஊடகவியலாளர்‌, அரசியல்வாதிகள்‌, புலனாய்வுப்‌ பிரிவினர்‌ ஆகியோருடன்‌ தொடர்புகளை ஏற்படுத்தினோம்‌.

சென்னையில்‌ சாந்தோம்‌ எனும்‌ இடத்திலுள்ள இரண்டு படுக்கையறை மாடிக்கு நாம்‌ இடம்‌ மாறியதும்‌, தமிழ்நாடு புலனாய்வுப்‌ பிரிவுச்‌ சிறப்புக்‌ கிளைக்கு தகவல்‌ எட்டியது. தமிழ்நாட்டில்‌ நாம்‌ என்ன செய்கின்றோம்‌ என்பதைக்‌ கேட்டறிவதற்காக, ஜம்போ குமார்‌ என்ற அதிகாரியை புலனாய்வுத்‌ துறையினர்‌ பாலாவிடம்‌ அனுப்பி வைத்தனர்‌.

பாலாவுடன்‌ நெருங்கிப்‌ பழகியவர்களில்‌ இன்னொருவர்‌ உதவி இன்ஸ்பெக்டர்‌ ஜெனரல்‌ அலெக்ஸாந்தர்‌. மாநில அரசில்‌, சிறீலங்கா அலுவல்களுக்குப்‌ பொறுப்பாக இருந்தவர்‌. இறுதியில்‌ அலெக்ஸாந்தரின்‌ உதவியோடு பாலாவுக்கு றோவின்‌ தொடர்பு ஏற்பட்டது. அமெரிக்க சீ.ஐ.ஏ புலனாய்வு அமைப்புக்குச்‌ சமதையானதே இந்தியாவின்‌ இந்த நோ அமைப்பாகும்‌. விடுதலைப்‌ புலிகள்‌, ஏனைய அமைப்புகளைப்‌ போல்‌ அல்லாது, ஆயுதப்‌ போராட்டத்தில்‌ ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டுக்‌ கொண்டிருப்பதை றோ அதிகாரிகளுக்கு பாலா எடுத்துரைத்தார்‌. புலிகளுக்கு இராணுவப்‌ பயிற்சி வழங்கப்பட வேண்டும்‌ என்று அவர்களை நம்ப வைத்தார்‌.

விடுதலைப்‌ புலிகளுக்கு இராணுவப்‌ பயிற்சி வழங்கலாம்‌ என்பது தீர்மானமாகியதும்‌, அந்தத்‌ திட்டத்தைச்‌ செயல்‌ வடிவில்‌ நடைமுறைப்படுத்துவதற்காக பிரபாகரன்‌ அவர்கள்‌ இந்தியா திரும்புவது அவசியம்‌ என்றாகியது. அந்தத்‌ தருணத்தில்‌ பிரபாகரனும்‌ வன்னியில்‌ பயிற்சிப்‌ பாசறை ஒன்றை நிறுவியிருந்தார்‌. விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளுக்குப்‌ படைப்‌ பயிற்சி வழங்க றோ சம்மதித்திருக்கும்‌ செய்தியைப்‌ பிரபாகரனுக்கு அறிவித்த பாலா, இந்தியாவுக்கு வருமாறும்‌ அவருக்கு வேண்டுகோள்‌ விடுத்தார்‌. இந்தியாவின்‌ பயிற்சித்‌ திட்டம்‌ பற்றி விபரமாக பாலாவிடம்‌ கேட்டறிய தமக்குக்‌ கீழுள்ள இரண்டு மூத்த உறுப்பினர்களை பிரபாகரன்‌ சென்னைக்கு அனுப்பி வைத்தார்‌. அவர்களில்‌ ஒருவர்‌ ரகு; மற்றவர்‌ மாத்தையா. அவர்களில்‌ இருவரும்‌ மதுரையில்‌ உள்ள விடுதி ஒன்றிலே பாலாவையும்‌ என்னையும்‌ சந்தித்தார்கள்‌. இந்தியாவின்‌ பயிற்சித்‌ திட்டம்‌ பற்றி, பாலா அவர்களுக்கு விரிவாக விளக்கினார்‌. ஆனாலும்‌ பிரபாகரன்‌ இந்தியாவுக்குத்‌ திரும்புவது தொடர்பாக அவர்கள்‌ மறுப்புத்‌ தெரிவித்திருந்தார்கள்‌. ஏனென்றால்‌, பிரபாகரன்‌ “அப்போது இந்தியாவில்‌ தேடப்பட்டு வந்தார்‌. கைது செய்வதற்காக அவரைக்‌ கவர்ந்திழுக்கும்‌ ஒரு சூழ்ச்சித்‌ திட்டமாகவே அவர்கள்‌ இந்தப்‌ பயிற்சித்‌ திட்டத்தைப்‌ பெரிதும்‌ சந்தேகித்தார்கள்‌. பாலா பிரபாகரனுக்கு ஒரு கடிதம்‌ எழுதினார்‌. அதில்‌, அன்றுள்ள அரசியல்‌ சூழ்நிலையில்‌, விடுதலைப்‌ புலிகளின்‌ க்‌ கைது செய்வது என்பதை நினைத்துக்‌ கூடப்‌ பார்க்க முடியாது என்று அடித்துக்‌ கூறினார்‌. அந்தக்‌ கடிதத்தோடு ரகுவும்‌, மாத்தையாவும்‌ யாழ்ப்பாணம்‌ திரும்பினார்கள்‌. பாலாவின்‌ அரசியல்‌ கணிப்பீட்டில்‌ பிரபாகரன்‌ நம்பிக்கை வைத்தார்‌. பிரபாகரனை இந்தியாவுக்கு தருவித்து றோவுடன்‌ அவருக்குத்‌ தொடர்பு ஏற்படுத்த ஆயத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும்‌ இவற்றை எல்லாம்‌ மூடுமந்திரமாக வைத்திருக்க வேண்டியிருந்தது. எல்லாமே ஒரு கண்ணாமுச்சி ஆட்டம்போல நடத்தப்பட வேண்டியிருந்தது. பிரபாகரன்‌ அவர்கள்‌ இந்தியா சென்றடைந்ததும்‌, தமிழ்நாடு மாநிலத்துக்கு அருகமைந்த பாண்டிச்சேரியில்‌, உயர்நிலை றோ அதிகாரிகளுடன்‌ சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, ஒரு நள்ளிரவில்‌ பாலாவும்‌ நானும்‌ மெய்காவலர்‌ இரண்டு பேரும்‌ கார்வண்டி ஒன்றில்‌ ஏறி, பாண்டிச்சேரிக்கு நெடும்பயணம் சென்றோம். அங்கே விடுதலைப்‌ புலித்‌ தலைவருக்கும்‌ றோ உயர்‌ மட்ட அதிகாரிகளுக்கும்‌ இடையே நடைபெறும் ‘இரகசியக்’ கூட்டத்தில்‌ கலந்து கொள்ளவே சென்றோம். குறித்த நேரத்தில் அந்த முக்கிய சந்திப்பு நடந்தது. பிரபாகரன்‌ அவர்களும்‌ பாலாவும்‌ றோ அதிகாரிகளும்‌ கலந்து கொண்டார்கள்‌. பாலாவும்‌ தம்பியும்‌ எமது அறைக்குத்‌ திரும்பியபோது அவர்கள்‌ முகங்களில்‌ மிளிர்ந்த மலர்ச்சி வெற்றிகரமாகக்‌ கூட்டம்‌ நடந்தேறியதை உணர்த்தியது. இந்தியா வழங்கும்‌ இராணுவப்‌ பயிற்சித்‌ திட்டத்தில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ பங்குபற்றுவது முடிவு செய்யப்பட்டது.

எமது சாந்தோம்‌ வடு, 1983 ன்‌ பிற்பகுதியில்‌ மிகவும்‌ பிரபலமாகி விட்டது; இட நெரிசலாகியும்‌ விட்டது. இந்தச் சிறிய இரண்டு அறை மாடியில் இருபது பேர் வரை நெருக்கியடித்துக் கொண்டிருந்தோம். இந்தச்‌ சன சந்தடிக்குள்‌ தீவிரமான பணி புரிவது கடினமாகியது. அது தவிர, பிரபாகரன்‌ அவர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்கும்‌ அச்சுறுத்தலாக அமைந்தது. ஆகவே திரும்பவும்‌ சென்னையில்‌ ஒரு வீடு தேட பாலாவும்‌ நானும்‌ முற்பட்டோம்‌. சென்னையில்‌ புறநகரான திருவான்மியூரில்‌ சிறிய வீடு ஒன்று கிடைத்தது. பிரபாகரன்‌ அவர்களும்‌, இனி பாலாவுக்கும்‌ எனக்கும்‌ பிரத்தியேகமான வதிவிடமாக அது இருக்க வேண்டும்‌ என்பதே நோக்கமாக இருந்தது. ஆனால்‌ தனிமையாகவும்‌ நாம்‌ இருக்க முடியவில்லை; தனிமையில்‌ நாம்‌ விடப்படவுமில்லை. விரைவிலேயே பிரபாகரன்‌ அவர்களுடைய மிக அந்தரங்க உயர்நிலைப்‌ போராளிகள்‌ ஒவ்வொருவராக வீட்டுக்கு வரத்‌ தொடங்கினார்கள்‌. அதன்பின்‌ நான்‌ முழுவதும்‌ போராளிகள்‌ வருவதும்‌ போவதும்‌ இடையறாது நடைபெற்றது.

இப்படி வந்தவர்களிடையே எனக்குப்‌ பிடித்தவர்களில்‌ ஒருவர்‌ ரஞ்சன்‌; ஒரு நல்ல கறுவல்‌; கட்டையர்‌. வெடி தகர்ப்பு விபரங்களை அமைதி யாக உட்கார்ந்து எனக்குச்‌ செய்து காட்டுவார்‌. அப்பாவித்‌ தனமான அவருடைய வெளித்‌ தோற்றத்துக்கும்‌ உண்மையான ஆளுக்கும்‌ நிறைய வேறுபாடு. உண்மையில்‌ அவர்‌ ஒரு கிறுங்காத, துணிச்சலான சுட்டிப்‌ பயல்‌. இன்னொரு போராளியின்‌ பெயர்‌ சந்தோசம்‌. பெயருக்கு ஏற்ப சந்தோசம்‌ எந்த நேரமும்‌ சிரித்தபடியே இருப்பார்‌. இந்த இரண்டு இளைஞர்களும்‌ பின்னர்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்கள்‌. வடமராட்சியில்‌ நடந்த சிறீலங்கா இராணுவ சுந்றிவளைப்பின்போது உயரமான வேலி ஒன்றைத்‌ தாண்டித்‌ தப்பி ஓட முற்பட்டபோது, ரஞ்சன்‌ சுடப்பட்டு மரணமானார்‌. இந்திய இராணுவத்தோடு நடந்த 1987 ஆம்‌ ஆண்டுச்‌ சமர்‌ ஒன்றிலே சந்தோசம்‌ கொல்லப்பட்டார்‌. இவர்‌ யாழ்ப்பாணம்‌ அரியாலையைச்‌ சேர்ந்தவராயினும்‌ தமது மரணத்துக்கு முன்‌ பல ஆண்டுகளாக திருகோணமலையில்‌, விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளுக்குப்‌ பொறுப்பான தளபதியாக இருந்திருக்கிறார்‌.

நாம்‌ தரித்திருந்த வீடு நீங்கலாக, வேறு பெரிய வீடொன்றை அடையாறில்‌ வாடகைக்கு அமர்த்தி, அரசியல்‌ பணிமனையை அங்கே நிறுவினோம்‌. இங்கிருந்து, உள்ளூர்‌ ஊடகங்களுடனும்‌ அதிகமதிகம்‌ தொடர்புகளை ஏற்படுத்தினோம்‌. நிதித்‌ துறைக்கு நேசன்‌ பொறுப்பாக இருந்தார்‌. வெளிநாடுகளில்‌ உள்ளவர்களிடம்‌ நிதி கோரி, நூற்றுக்‌ கணக்கான கடிதங்களை இவர்‌ அச்சிலே தயாரித்தார்‌.

அதே சமயம்‌, இலங்கையில்‌ இருந்து புறப்பட்டு, வடஇந்தியாவில்‌ நடைபெறும்‌ இராணுவப்‌ பயிற்சிக்குச செல்லும்‌ போராளிகள்‌, பிரபாகரன்‌ அவர்களிடம்‌ அறிவுறுத்தல்‌ பெறுவதற்காக இங்கே வருவார்கள்‌. இந்தப்‌ போராளிகளைச்‌ சந்திப்பதே ஒரு சுவையான அனுபவம்‌. ஏனென்றால்‌ இவர்களில்‌ பெரும்பாலானவர்கள்‌ இயக்கத்தின்‌ மூத்த உறுப்பினர்கள்‌. பிரபாகரன்‌ அவர்களுடன்‌ நெருங்கிப்‌ பணிபுரிந்த பல மூத்த போராளிகளுடன்‌ எமக்குப்‌ பழகக்‌ கிடைத்தது. பயிற்சிக்காக வந்த இவர்களில்‌ ஒருவர்‌ நாற்பத்தைந்து வயதைத்‌ தாண்டியவர்‌. பல ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலே தலைமறைவாக வாழ்ந்த விடுதலைப்‌ புலி உறுப்பினர்‌. நிலக்‌ கண்ணிஷெடிகளில்‌ நிபுணரான அப்பையா அண்ணாவே அவர்‌!

3.1 ஆரம்ப காலம்‌: யபோராட்டததிஸ்‌ பரிமாணங்கள்‌

போராட்டத்தோடு நான்‌ சங்கமித்த பல்லாண்டு கால அனுபவத்தில்‌ மனித நடத்தையின்‌ பல்‌ வேறு பரிமாணங்கள்‌ பற்றி நிறை யக்‌ கற்றிருக்கிறேன்‌. அதே போல போராளிகள்‌ ஒருவரோடு ஒருவர்‌ பூணும்‌ நுண்மையான உறவுகள்‌ தொடர்பாகவும்‌ கற்றிருக்கிறேன்‌. போராட்டமே ஒரு திறந்த பல்கலைக்‌ கழகம்‌ ஆகியது. அதில்‌ மனித ’ வாழ்வின்‌ விழுது ஓடிய அம்சங்களை நான்‌ கற்க முடிந்தது. உன்னத இலட்சியத்துக்காக போராடும்‌ ஓர்‌ இயக்கத்தையும்‌ இனத்தையும்‌ வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, மக்கள்‌ போராட்டம்‌ தொடர்பாகவும்‌ ஒரு தேசிய விடுதலைப்‌ போராட்டம்‌ தொடர்பாகவும்‌ ஒரு க்ளக்‌ கருத்தே நிச்சயம்‌ தோன்றும்‌. ஆனால்‌ விடுதலைப்‌ போராட்டத்தின்‌ முக்கிய நீரோட்டத்தில்‌ நேரே கலந்து கொண்டிருக்கும்‌ ஒருவருக்கு இது முற்றிலும்‌ வேறுபட்ட ஒன்றாகும்‌. தனித்துவமான அனுபவங்களையும்‌ சவால்களையும்‌ கொண்ட பட்டறிவாகவே அது அமையும்‌.

தேசிய விடுதலைப்‌ போராட்டம்‌ என்பது மிகவும்‌ சிக்கலானது பல முகம்‌ கொண்டது. முதலில்‌, போராட்டத்தை முன்‌ நின்று வழிநடத்தும்‌ புரட்சி இயக்கம்‌ அமைகிறது; இரண்டாவதாக விடுதலைப் போராட்டத்தின்‌ சமுதாயப் பரிமாணமும் மூன்றாவதாக, போராட்டத்திலே தனிப்பட்டவர்கள்‌ எவ்வளவுக்குப்‌ பங்குபற்றுகிறார்கள்‌ என்பதும்‌ அயம்‌ ஒரு தேசிய விடுதலை இயக்கம்‌, அரசியல்‌-ராணுவத்‌ தளத்தில்‌ நின்றே தனது போராட்டத்தை நடத்தும்‌. அரசியல்‌ சுதந்திரத்துக்காக நடத்தப்படும்‌ ஆயுதம்‌ தரித்த புரட்சிப்‌ போராட்டத்தில்‌ ராணுவமும்‌ அரசியல்‌ அம்சங்களும்‌ பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும்‌. விடுதலையின்‌ அரசியல்‌ இலட்சியத்தை அடையும்‌ கருவியாகவே ராணுவப்‌ போராட்டம்‌ அமைகிறது. தேச சுதந்திரம்‌ என்ற இறுதியான இலக்கை அடையும்‌ நோக்கத்துடன்‌ இராணுவ, அரசியல்‌ வழிமுறைகளை வகுக்கும்‌ பெரும்‌ பொறுப்பை விடுதலை இயக்கமும்‌ அதன்‌ தலைமையும்‌ ஏற்கின்றன. விடுதலைப்‌ போராட்டம்‌ என்பது நிச்சயமாக மக்களின்‌ ஒட்டுமொத்தமான பங்களிப்புடன்‌ ற்கும்‌ சுட்டிப்பாகக்‌ கூறுவதானால்‌, ஓர்‌ இன மக்களின்‌ அரசியல்‌ சுதந்திரத்துக்காகவே போராட்டம்‌ நடத்தப்படுகிறது. இப்‌ போராட்டமானது அரச ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுத எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து விரிவடைகிறது. ஒடுக்குமுறையும்‌ அதனை முகம்‌ கொடுக்கும்‌ எதிர்ப்பு முறையும்‌ ஒரு சுழற்சி முறையில்‌ அமையும்‌. அது மக்களுடைய சமூக-பொருளாதார பண்பாட்டில்‌ தன்‌ விளைவுகளை ஏற்படுத்தும்‌. போராட்டத்தின்‌ இயங்கு நிலைக்கு ஏற்ப, மக்களின்‌ தெரிவுக்கு அமைவாக ஏதோ ஒரு மட்டத்தில்‌ அவர்களும்‌ ்‌ போராட்டத்திலே கலந்து கொள்ளும்‌ நிலைக்கு கவரப்படுவார்கள்‌. இதன்‌ பின்னர்தான்‌ போராட்டத்தில்‌ பங்களிப்பு தீர்மானமாகிறது. ஒரு தேசிய விடுதலை இயக்கத்தில்‌ தனிமனிதரின்‌ ஈடுபாடுபற்றியே நான்‌ இங்கு குறிப்பிடுகிறேன்‌. பொதுவான தேசியப்‌ போராட்டத்தின்‌ முழுமைக்குள்‌ நின்றவாறே தனிப்பட்ட ஒருவர்‌ தனது போராட்டத்தை தொடுக்க நிர்ப்பந்திக்கபடுகிறார்‌. . சூழல்கள்‌, சவால்கள்‌, உறவுகள்‌ ஆகிய பலதரப்பட்ட நிலைகள்‌ அவரை நிர்ப்பந்திக்கின்றன. அதாவது, தனி மனிதருடைய போராட்டமானது தேசிய விடுதலை இயக்கத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ செயற்பாட்டிற்கும்‌ சமாந்தரமாக இடம்பெறும்‌. இவ்வகையில்‌ 1984, 1985ம்‌ ஆண்டு காலம்‌ கட்டவிழந்தபோது இயக்கத்தினதும்‌ போராட்டத்தினதும்‌ படிநிலை வளர்ச்சியில்‌ வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்த நிகழ்வுகளை நான்‌ சந்தித்தேன்‌. இவை எனது உணர்ச்சிகளுக்கும்‌ சிந்தனை வளத்திற்கும்‌ சவால்களாக அமைந்தன. இந்த அனுபவங்களால்‌ எதிர்காலப்‌ போராட்டத்துக்கான மன னைரக்கியத்தைப்‌ பெற்றேன்‌. அத்துடன்‌ பலவகையான இடர்பாடுகளை பின்னர்‌ எதிர்கொண்டபோது, அவற்றைத்‌ தாக்குப்‌ பிடிக்கவும்‌, துணிச்சலும்‌ உறுதியான மனத்திடமும்‌ பெற்றேன்‌.

எப்போதைக்‌ காட்டிலும்‌ 1984 இலேயே விடுதலைப்‌ புலிகள்‌ துரித வளர்ச்சியும்‌ விரிவாக்கமும்‌ கண்டனர்‌. ஒரு சிறிய கெரில்லா அமைப்பானது தேசிய விடுதலை ராணுவமாக அபூர்வமான முகிழ்ப்புப்‌ பெற இரண்டு முக்கிய காரணிகள்‌ இருந்தன. இரண்டும்‌ பொருத்தமான வேளையில்‌ வந்து முதிர்ந்தன. இந்தியா ஏற்பாடு செய்த பயிற்சித்‌ திட்டமானது விடுதலைப்‌ புலிகளை விடுதலை ராணுவமாக வடிவெடுக்கச்‌ செய்வதில்‌ முக்கிய பங்கு வகித்தது. இந்தப்‌ பயிற்சி, விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளின்‌ அறிவையும்‌ ஆற்றலையும்‌ புடமிட்டது. அவர்களது இராணுவத்‌ தகமையையும்‌ உள்ளார்ந்த திறனையும்‌ அமோகமாக வளர்த்துவிட்டது. ஆனாலும்‌ இந்தியாவின்‌ பயிற்சித்‌ திட்டம்‌ வரம்பு கொண்டதாகவே இருந்தது. இருநூறு போராளிகள்‌ மட்டுமே இதில்‌ பயிற்சி பெற்றார்கள்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ ராணுவப்‌ பலம்‌ வெகுவாக விரிவடைவதற்கு இந்தப்‌ பயிற்சித்‌ திட்டம்‌ மட்டும்‌ போதுமாக இருக்கவில்லை. சரியான தருணத்தில்‌ நிதியுதவியும்‌ அவசியமாகியது. இல்லையென்றால்‌ இந்திய அரசு வழங்கிய வாய்ப்போடு மட்டும்‌ இயக்கத்தைக்‌ கட்டியெழுப்புவது பிரபாகரன்‌ அவர்களுக்கு சிரமமாக இருந்திருக்கும்‌. தமிழ்நாட்டில்‌ மிகவும்‌ சக்திவாய்ந்தவரும்‌ வளம்‌ நிறைந்தவருமான முதலமைச்சர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ அவர்களிடமிருந்து நிதி ஆதரவு கிடைத்தது. இது நிகழ்ந்தது 1984 முற்பகுதியிலாகும்‌. முதலமைச்சரிடம்‌ இருந்து அழைப்பு வந்ததும்‌ பாலா -வின்‌ தலைமையில்‌ அணி ஒன்று சென்று, முதலமைச்சரின்‌ இல்லத்தில்‌ . அவரைச்‌ சந்தித்தது. அந்த அணியிலே பேபி சுப்ரமணியமும்‌, கேணல்‌ சங்கரும்‌, திரு நித்தியானந்தன்‌ அவர்களும்‌ சென்றனர்‌. சந்திப்பு நல்ல பயன்‌ அளித்தது. ஈழத்‌ தமிழ்‌ மக்களின்‌ விடுதலைக்கான விடுதலைப்‌ புலிகளின்‌ போராட்டத்தில்‌ உள்ள தேவையையும்‌ தர்மத்தையும்‌ பாலா எடுத்துரைத்து இராமச்சந்திரன்‌ அவர்களை நம்ப வைத்தார்‌. முதல்‌. சந்திப்பிலேயே பல கோடி ரூபா நிதி உதவி வழங்க முதலமைச்சர்‌ முன்வந்தார்‌. தமிழ்ப்‌ பகுதிகளிலே சிங்கள இராணுவத்தால்‌ நிகழ்த்தப்பட்ட கொலைகளையும்‌ அழிவுகளையும்‌ காட்டும்‌ நிழற்படங்களையும்‌ வீடியோ படங்களையும்‌ பார்த்ததும்‌ அவர்‌ வெகுவாக நெகிழ்ந்து போனார்‌. இத்தகைய நெருக்கடியான ஒரு கால கட்டத்தில்‌,

தமிழ்‌ நாட்டிலே பெருமதிப்புப்‌ பெற்ற ஒரு தலைவரின்‌ தங்குதடையற்ற . ஆதரவும்‌ துணிச்சலான தலைய்டும்‌ விடுதலைப்‌ புலிகளுக்குக்‌ கிடைத்த

பெரும்‌ வாய்ப்பு என்றே கூறலாம்‌. எம்‌.ஜி. ஆர்‌ அவர்களுடைய இந்தப்‌ . பெரும்‌ கொடை, இந்த வரலாற்று நாயகனுடன்‌ பிரபாகரன்‌ அவர்களுக்கு ஒரு நெருக்கமானதும்‌ அந்நியோன்யமானதுமான உறவை ஏற்படுத்தியது. விடுதலைப்‌ புலிகளின்‌ நிதியத்துக்குள்‌ திரு. இராமச்சந்திரன்‌ அவர்களுடைய சொந்த நிதி சொரியத்‌ தொடங்கியதும்‌, விடுதலைப்‌ புலிகளை ஒரு தரம்‌ மிக்க தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்‌ என்ற பிரபாகரனின்‌ இலட்சியக்‌ கனவும்‌ கைகூடி வந்தது. அந்த நிதியை மிக முன்னெச்சரிக்கையோடு கையாண்ட விடுதலைப்‌ புலிகளின்‌ தலைவர்‌, தமிழ்‌ நாட்டிலே பல பயிற்சி முகாம்களை நிறுவி, பெரும்‌ தொகையான புதிய போராளிகளையும்‌ அணியிலே சேர்த்ததோடு புதுவகை ஆயுதங்களையும்‌ வாங்கினார்‌. தொடர்ச்சியான காத்திரமான அரசியல்‌ பணிகளுக்காகவும்‌ பரப்புரைகளுக்காகவும்‌ கூட நிதி ஒதுக்கப்பட்டது. அன்றைய வரலாற்றுத்‌ திருப்புமுனையிலே விடுதலைப்‌ புலிகள்‌ வளர்ந்து விரிவடைவதற்கு, எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ வழங்கிய நிதி உதவியும்‌ அரசியல்‌ ஆதரவும்‌ உறுதுணையாக இருந்தன என்று கூறினால்‌ மிகையாகாது. ஆற்றலும்‌, ஆளுமையும்‌ மிக்க புதிய ஆட்களை அணிசேர்த்து பெருமளவு மனித வளங்களை விடுதலைப்‌ புலிகள்‌ திரட்டினார்கள்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ அரசியல்‌ சித்தாந்த வேலைத்‌ திட்டத்தை முன்னெடுப்பதில்‌ 1984 ஒரு முக்கிய ஆண்டாக விளங்கியது.

இயக்கம்‌ வளரத்‌ தொடங்கிய ஆரம்ப நாட்களில்‌ தலைமைப்‌ பீடத்துடனும்‌ உள்நிலைச்‌ செயற்பாடுகளுடனும்‌ நேரடியாகத்‌ தொடர்பு கொள்ளக்‌ கூடிய ஒரே பெண்‌ நானே தான்‌. அது தவிர, இயக்கம்‌ மற்றும்‌ போராட்டம்‌ தொடர்பாக நானும்‌ எனது தனிப்பட்ட சித்தாந்த நிலைகளையும்‌ எதிர்பார்ப்புக்களையும்‌ கொண்டிருந்தேன்‌. எனது சித்தாந்தத்துக்கும்‌ அரசியலுக்கும்‌ அடிநாதமாக, பெண்ணியமே திகழ்ந்தது. எனது பட்டப்‌ படிப்புக்‌ காலம்‌ முழுவதிலும்‌ கணிசமான அளவு பெண்ணிய இலக்கியம்‌ கற்றிருந்தேன்‌. “சமுதாயத்தில்‌ பெண்கள்‌” என்பதுவும்‌ எனது கற்கை நெறிகளில்‌ ஒன்றாக இருந்தது. அன்றைய பிரித்தானிய சமுதாயத்தில்‌ முற்போக்கு அரசியலைக்‌ கடைப்பிடித்த போது, “பெண்ணியம்‌” அல்லது “மாக்சிசம்‌” அல்லது மாக்சிச/ பெண்ணியம்‌ அல்லது சோசலிச/ பெண்ணியம்‌ போன்ற ஒரு சுலோகத்தை எம்மீது ஓட்டிக்‌ கொள்வது வசதியான போக்காக இருந்தது. பல்கலைக்‌ கழகத்தில்‌ எனது ஆங்கிலேயச்‌ சிநேகிதிகள்‌ ஏதோ ஒரு வகைப்‌ பெண்ணியவாதிகளாகவே இருந்தார்கள்‌. நான்‌ எந்தப்‌ பெண்ணியக்‌ குழுவிலும்‌ சேர்ந்திருக்கவில்லை. ஆனாலும்‌ எனது அனுதாபம்‌, குறித்த சில பெண்ணியங்களுக்குச்‌ சார்பாக இருந்தது. குறிப்பாக, மேற்குலகப்‌ பெண்ணியம்‌ எனப்படும்‌ சீர்திருத்தப்‌ பெண்ணிய அரசியலை நாடாது, மூன்றாவது உலக நாடுகளின்‌ புரட்சிகரப்‌ போராட்டப்‌ பெண்ணியக்கங்கள்‌ மட்டில்‌ அனுதாபியாகவே இருந்தேன்‌. இப்பொழுது, இருபது ஆண்டுகள்‌ கழித்த பின்‌, எந்தச்‌ சுலோகத்தையும்‌ அது பெண்ணியமாக இருந்தாலும்‌ அதை என்மீது ஓட்டத்‌ தயங்குவேன்‌. அதற்காக, பெண்‌ ஒடுக்குமுறை தொடர்பான எனது கரிசனையை நான்‌ கைவிட்டு விட்டேன்‌ என்பதல்ல. ்‌ இன்னமும்‌ அனுதாபியாகவே இருக்கிறேன்‌. ஆனால்‌, இப்போது பழைமைவாத பெண்ணியக்‌ கோட்பாடுகளுக்கு மாறாக ஆழமான சமூக்‌- பண்பாட்டுக்‌ கண்ணோட்டத்திலும்‌ பகுப்பாய்விலும்‌ இருந்து எழும்‌ நிலைப்பாட்டிலேயே ஆண்‌-பெண்‌ உறவுகளை பார்க்கத்‌ தொடங்கியிருக்கிறேன்‌ என்று கூறலாம்‌.

பெண்ணியம்‌ தொடர்பாக நான்‌ கொண்டிருந்த அறிவு நிலையே தமிழ்த்‌ தேசிய விடுதலைப்‌ போராட்டத்தில்‌ பெண்‌ புரட்சி பற்றிய நம்பிக்கையை என்னிடம்‌ தூண்டிவிட்டது. *பெண்களும்‌ புரட்சியும்‌” என்ற தலைப்பில்‌ 1983 இலே சென்னையில்‌ வெளியிடப்பட்ட எனது சிறிய நூல்‌ ஒன்றிலே தேசிய விடுதலைக்கும்‌ பெண்விடுதலைக்கும்‌ இடையே உள்ள உறவு தொடர்பான எனது கருத்துக்களை விரித்துரைந்திருந்தேன்‌. ஒரு தேசிய மக்கள்‌ திரளில்‌ பெண்களும்‌ அங்கம்‌ வகிப்பதால்‌ அவர்கள்‌ நாட்டூப்பற்றுடன்‌ தம்‌ மக்கள்‌ மீது ஏவிவிடப்படும்‌ அடக்குமுறையை முறியடிப்பதற்கு போராடும்‌ உரிமை அவர்களுக்கு உண்டு என்று அந்த நூலில்‌ வாதிட்டிருந்தேன்‌. ஆயுதப்‌ போராட்டத்தில்‌ பெண்கள்‌ பங்குபற்றும்போது, தேசிய விடுதலைச்‌ சக்திகள்‌ பலமடையும்‌. அத்துடன்‌ விடுதலை அடைந்த சமுதாயத்தில்‌ போராடவும்‌ அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்‌.

எத்தனையோ இளம்‌ பெண்கள்‌ தங்கள்‌ உயிரைப்‌ பணயம்‌ வைத்து, யாழ்ப்பாணத்தில்‌ உள்ள விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளுக்கு உதவி புரிந்து போராட்டத்தின்‌ ஆக்க முயற்சிகளில்‌ ஏற்கனவே ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ என்று பிரபாகரன்‌ அவர்கள்‌ என்னிடம்‌ கூறியிருந்தார்‌. ஆயுதப்‌ போராட்டத்தில்‌ பெண்களையும்‌ இணைத்துக்‌ கொள்ளும்‌ திட்டம்‌ ஒன்றைத்‌ தாம்‌ வகுக்க எண்ணியிருப்பதாகவும்‌ அவர்‌ தெரிவித்திருந்தார்‌. சில கடிதங்களையும்‌ அவர்‌ எனக்குப்‌ படித்துக்‌ காட்டினார்‌. யாழ்ப்பாணத்தில்‌ உள்ள பெண்‌ தொண்டர்களிடமிருந்து வந்தவை அவை. தமக்கும்‌ ராணுவப்‌ பயிற்சி தரவேண்டும்‌ என்று அவர்கள்‌ கேட்டிருந்தார்கள்‌. கொடுமையான ஓடுக்குமுறையில்‌ இருந்து தம்‌ மக்களை விடுவிக்கும்‌ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ தாமும்‌ மும்முரமாக ஈடுபட இப்‌ பயிற்சி உதவுமென அவர்கள்‌ கேட்டிருந்தார்கள்‌. ஆனால்‌ 1983 இன்‌ பிற்பகுதியில்‌ பிரபாகரன்‌ அவர்களுடைய கவனம்‌ முழுவதும்‌ இந்திய அரசு தமக்கு வழங்கும்‌ ராணுவப்‌ பயிற்சித்‌ திட்டம்‌ என்ற பொன்னான வாய்ப்பை முழுமையாகப்‌ பயன்படுத்துவதிலேயே குவிந்திருந்தது. அந்த நிலைப்பாடு சரியே என்பதும்‌ பின்னர்‌ நிரூபணமாயிற்று. ராணுவப்‌ பயிற்சியை நாடிய நூற்றுக்கணக்கான வட-கிழக்கு இளைஞர்கள்‌ விடுதலைப்‌ புலியணியில்‌ பிரபாகரன்‌ அவர்களுடைய மூத்த போராளிகளின்‌ கீழ்‌ சேர்க்கப்பட்டு வடஇந்தியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்கள்‌. இந்திய ராணுவத்‌ தளங்களில்‌ கணிசமான அளவு போராளிகள்‌ ராணுவப்‌ பயிற்சி பெற்ற பின்‌, தமிழ்‌ நாட்டிலே ராணுவப்‌ பாசறைகளை நிறுவுவதில்‌ பிரபாகரன்‌ தமது கவனத்தைத்‌ திருப்பினார்‌. அங்கே, இந்திய பயிற்சி பெற்றவர்களில்‌ சிலரைத்‌ தேர்ந்தெடுத்து புதிதாக சேர்ப்பவர்களுக்குத்‌ தரமான பயிற்சி வழங்கும்‌ பொறுப்பை அவர்களிடம்‌ ஒப்படைத்து, தமது ராணுவப்‌ பிரிவுகளை பலப்படுத்த அவர்‌ திட்டமிட்டார்‌. இத்தகைய சுறுசுறுப்பான நடவடிக்கைகளும்‌ திட்டமிடலும்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருந்த 1983 இறுதியில்‌ பிரபாகரன்‌ அவர்களிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அதன்படி யாழ்ப்பாணத்தில்‌ இருந்து நான்கு இளம்‌ பெண்கள்‌ எனக்குத்‌ துணையாக விரைவிலே வர இருந்தார்கள்‌. இந்த நான்கு பேரும்‌ போராட்டம்‌ மீது அனுதாபம்‌ கொண்டவர்கள்‌. ஆனால்‌ விடுதலைப்‌ புலிகளிடமிருந்து ராணுவப்‌ பயிற்சி பெறுவதற்காக என்று அவர்கள்‌ சென்னைக்கு வரவில்லை. தமிழ்‌ மாணவர்களுக்கு கல்வி வசதி வழங்கப்படாமைக்கு மறுப்புத்‌ தெரிவித்து உண்ணா மறியலில்‌ ஈடுபட்டிருந்த இந்த இளம்‌ பெண்களை மரணத்திலிருந்து விடுதலைப்‌ புலித்‌ தளபதிகள்‌ காப்பாற்றியிருந்தார்கள்‌. இந்த நான்கு ளம்‌ பெண்களுக்கும்‌ இப்போது குடும்பமோ, நண்பர்களோ இல்லை என்ற நிலையில்‌ இவர்களுடைய நலனில்‌ பிரபாகரன்‌ அவர்கள்‌ கரிசனை கொண்டிருந்தார்‌. இவர்கள்‌ யாழ்ப்பாணத்தில்‌ இருந்து வந்ததும்‌ திருவான்மியூரில்‌ உள்ள எமது பிரத்தியேக வீட்டில்‌ அவர்களை இருத்துவது என்றும்‌ தீர்மானித்தார்‌. அங்கே பிரபாகரன்‌ அவர்களுடைய நேரடிக்‌ கண்காணிப்பு இருக்கும்‌. அத்துடன்‌ திருமணம்‌ புரிந்த தம்பதியராக பாலாவும்‌ நானும்‌ இருந்தோம்‌. எம்மோடு சவிப்பதே இந்த இளம்‌ பெண்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த சமூகப் பண்பாட்டுச் சூழலாக இருந்தது. இவர்கள்‌ சென்னைக்கு வருவதும்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ தலைவருடன்‌ உடனடியாகத்‌ தொடர்பு ஏற்படுத்துவதும்‌ பெண்ணியம்‌ சம்பந்தப்பட்டதாகவோ அன்றி போராட்டத்தில்‌ பெண்களை ஈடுபடுத்துவதை நோக்கமாக கொண்டதாகவோ இருக்கவில்லை. ஆனாலும்‌ மதி, வினோஜா, ஜெயா, லலிதா என்ற இந்த நான்கு இளம்பெண்களின்‌ வருகை, எதிர்பாராத நிலையிலே இயக்கத்துக்குள்‌ ட்டிப்‌ புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்‌.

போராட்டத்தின் இந்தப் படிநிலையிலே கூட, போராளிகளிடையே கடுமையாக ஒழுக்கக்‌ கட்டுப்பாடுகளை விடுதலைப்‌ புலிகள்‌ கடைப்பிடித்தார்கள்‌. திருமணத்துக்கு முன்‌, ஆண்களும்‌ பெண்களும்‌ தனியாகப்‌ பிரிந்து வாழவேண்டும்‌ என்பது யாழ்ப்பாண இந்து சமுதாயத்தின்‌ பழமைபேண்வாதிகளிடையே நன்கு வேரூன்றிய ஒரு பண்பாட்டுக்‌ கோலமாகும்‌. தமிழ்‌ மக்களிடையே இது தொடர்பாக உள்ள இறுக்கமான உணர்வுகளை பிரபாகரன்‌ அவர்கள்‌ நன்கு உணர்ந்திருந்தார்‌. மக்களிடையே பரந்துபட்ட ஆதரவை விடுதலைப்‌ புலிகள்‌ தொடர்ந்து பெற வேண்டுமானால்‌ இந்தச்‌ சமூக பண்பாட்டு அம்சத்திற்கு முக்கியத்துவம்‌ வழங்க வேண்டும்‌ என்பதில்‌ பிரபாகரன்‌ மிகவும்‌ அக்கறையாக இருந்தார்‌. இது அவரது அரசியல்‌ சாணக்கியத்தை புலப்படுத்தியது. எனினும்‌ முன்பின்‌ அறியாத நான்கு இளம்‌ பெண்களுக்கு தங்கும்‌ இடம்‌ வழங்குவது இயக்கத்தின்‌ ஒழுக்கக்‌ கட்டுப்பாட்டை மீறுவது போல்‌ தோன்றியது. அதே சமயம்‌, பிரபாகரனது இல்லத்தில்‌ அவர்களுக்கு . இடம்‌ வழங்குவது அவரது சொந்தப்‌ பாதுகாப்பு ஒழுங்குகளுக்கு ஏற்றதாக அமையவில்லை என்றும்‌ கருதலாம்‌.

ஆனாலும்‌ ஒரு தமிழ்‌ மனிதனுக்கும்‌ ஓர்‌ அண்ணாவுக்கும்‌ உரிய பொறுப்புணர்வோடும்‌ ஓர்‌ இயக்கத்தின்‌ தலைவர்‌ என்ற கடமை உணர்வோடும்‌ திருமணமாகாத இந்த நான்கு இளம்‌ பெண்களினதும்‌ பாதுகாப்புத்‌ தொடர்பாக அவர்‌ கரிசனை காட்டியது வியப்புத்‌ தருவது அல்ல. ஆனால்‌ நாள்‌ செல்ல, செல்ல பிரபாகரன்‌ அவர்கள்‌ இந்த இளம்‌ பெண்களோடு நன்கு பழகத்‌ தொடங்க, இந்த மாணவிகளில்‌ ஒருத்தி மீது அவருக்கு கூடுதலான பிடித்தம்‌ ஏற்பட்டிருப்பது தெளிவாகத்‌ தெரிந்தது. மதி (மதிவதனி) அவருடைய இதயத்தைக்‌ கவர்ந்திருந்தார்‌. இது எமக்கு வியப்பைத்‌ தரவில்லை. ஏனென்றால்‌, மதி ஒரு அழகிய பெண்‌; மிக மிக மென்மையான இதயமும்‌ இரக்கமும்‌ கொண்டவர்‌; இந்து சமய ஒழுக்க சீலங்களைக்‌ பக்தியோடு கடைப்பிடிப்பவர்‌. விவசாய விஞ்ஞான பீட மாணவியான இவர்‌ யாழ்ப்பாணத்தில்‌ மாணவ ஆர்ப்பாட்டக்‌ . களத்திலிருந்து வரலாற்றுக்குள்‌ எடுத்து வரப்பட்டு, பிரபாகரன்‌ அவர்களிடமும்‌, அது காரணமாக இயக்கத்திலும்‌ ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருந்தார்‌.

ஒரு தேசிய விடுதலை இயக்கமானது, அமைப்பு ரீதியிலும்‌ தனிப்பட்ட முறையிலும்‌, தங்கள்‌ மக்களின்‌ அபிலாசைகளுக்கும்‌, நலன்களுக்கும்‌ பொருத்தமாக உயர்‌ சீலங்களையும்‌ ஓழுக்கக்‌ கட்டுப்பாடுகளையும்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என்று விடுதலைப்‌ புலித்‌ தலைவர்களும்‌ போராளிகளும்‌ கொண்டிருந்த கருத்துடன்‌ பாலாவுக்கும்‌ எனக்கும்‌ உடன்பாடு இருந்தது. ஆனால்‌ இந்த விதிகள்‌ களர்வின்றி, இறுக்கமாக இருப்பது எமக்குத்‌ திருப்தியாக இல்லை. எம்மைப்‌ பொறுத்த வரையிலே, விதிக்கப்பட்டிருந்த ஒழுக்கக்‌ கட்டுப்பாடுகள்‌ நடைமுறைச்‌ சாத்தியமானவையாகவோ, மனித உணர்வுகளையும்‌ உறவுகளையும்‌ முதிர்ச்சியோடு புரிந்து கொண்டிருப்பவையாகவோ நண்ட காலத்துக்குத்‌ தாக்குப்‌ பிடிக்கக்‌ கூடியதாகவோ எமக்குப்‌ படவில்லை. ஒழுக்கக்‌ கட்டுப்பாடுகளைப்‌ பேணியாகவேண்டும்‌ என்ற தனிப்பட்ட பிடிவாத முயற்சி தொடர்ந்தாலும்‌, எமது கருத்துப்படி, இயற்கை தனது போக்கிலே சென்று, ஆண்‌, பெண்‌ இருபாலருக்கும்‌ இடையே உறவுகளைத்‌ தோற்றுவிக்கும்‌ என்று நாம்‌ நம்பினோம்‌. காதலின்‌ பலமும்‌ வேகமும்‌ பிரபாகரன்‌ அவர்களைத்‌ தாக்கும்‌ போது, அந்த உக்கிரமான உணர்வெழுச்சி அவரை முழுமையாக ஆகர்சிக்கும்‌ என்பதையும்‌, பாலாவும்‌ நானும்‌ உணர்ந்திருந்தோம்‌. நாம்‌ எதிர்பார்த்ததேதான்‌ நடந்தது. அந்தப்‌ பெண்‌ மீதான காதல்‌ அவர்‌ இதயத்தில்‌ பொங்கி வழிந்தது. மதி மட்டில்‌ அவரும்‌ அவர்‌ மட்டில்‌ மதியும்‌ காதல்‌ வயப்பட்டு ஒருவரை ஒருவர்‌ முழுமையாக நேசித்தார்கள்‌. இயக்கத்தினதும்‌ போராளிகளினதும்‌ நண்ட கால நலன்களை நோக்கும்‌ போது, எம்மைப்‌ பொறுத்த வரையிலே இந்த உறவு மிகவும்‌ முஃயறான்‌: தாகப்‌ பட்டதுடன்‌, திருமணத்தில்‌ இது நிறைய வேண்டும்‌ என்றும்‌ உறுதியாக நம்பினோம்‌. பிரபாகரன்‌ அவர்கள்‌ தமது பிரம்மச்சாரியத்தைக்‌ கடையப்பிடிப்பதாக இருந்தால்‌, அவர்‌ ஒரு துறவிக்கான கோலத்துடனேயே வாழ்ந்திருக்க வேண்டும்‌. அப்படி நடந்தால்‌, அனைத்துப்‌ போராளிகளும்‌ அப்போதும்‌ சரி, இப்போதும்‌ சரி, உணர்ச்சியற்ற மலடர்களாகவும்‌ மனவிரக்தி பிடித்தவர்களாகவும்‌ வாழ வேண்டியிருக்கும்‌. ஓர்‌ அரசியல்‌ பின்புலத்திலே,. பிரபாகரன்‌ அவர்களுக்கும்‌, மதிக்கும்‌ இடையே மலர்ந்த இந்த உறவு, முக்கியமானதாகவும்‌, ஆரோக்கியமானதாகவும்‌, தலைவராக அவா

மதிக்கப்படூுவதற்கு வளமூட்டூவதாகவும்‌ அமைந்தது. தமிழ்ச்‌ சமுதாயத்தைப்‌ பொறுத்த வரையிலே, வயது வந்தவர்கள்‌ திருமணம்‌ ஆகாது இருக்கும்‌ போது, முழுமையான முதிர்ச்சி

அடையாதவர்களாகவே சமூகம்‌ அவர்களைப்‌ பார்க்கும்‌. Oo புரிந்து குடும்ப வாழ்க்கையில்‌ ஈடுபட்டு, அழமான உணர்ச்‌ அனுபவங்களையும்‌ பொறுப்புணர்வையும்‌ கொண்ட ஒரு ப்‌ தமது தீர்ப்பைக்‌ கூறும்‌ போது தமிழ்ச்‌ சமூகம்‌ அவரில்‌ ப்‌ வைத்து மதிப்பளிக்கும்‌. இருந்தபோதிலும்‌, பிரபாகரன்‌ அவர்கள்‌ மதியுடன்‌ கொண்டிருந்த உறவு, இயக்கத்தின்‌ ஒழுக்கக்‌ கோவைக்கு மாறாக இருந்ததால்‌, தமது போராளிகளிடமிருந்து பலத்த ் கண்டனமும், எதிர்ப்பும் வரலாம் என்பதை அவர் உண்ர்ந்தார்‌; பாலாவின்‌ உதவியை அவர் நாடினார். இயக்கத்தின் தலைவர்களிடமும் போராளிகளிடமும்‌ தமது காதல்‌ உறவைப்‌ பரிந்துரைக்க வேண்டும்‌ என்றும்‌ தொடர்ந்தும்‌ தாம்‌ தமது காதல்‌ உறவைப்‌ பேணுவதற்கு இடமளிக்குமாறு அவர்களிடம்‌ எடுத்துரைக்க வேண்டும்‌ என்றும்‌ கோரினார்‌.

நாம்‌ எதிர்பார்த்தது போலவே, பிரபாகரன்‌ அவர்களுக்கும்‌ மதிக்குமிடையே அரும்பிய காதல்‌ ஒரு ப்லைல கிளப்பியது. அவருடைய மூத்த தோழர்களும்‌ இயக்க உறுப்பினர்களும்‌ கடுமையாக எதிர்த்தார்கள்‌.

தகவல்‌ அறிவிக்கப்பட்டதும்‌ மதியின்‌ குடும்பத்தினர்‌ யாழப்பாணத்திலிருந்து சென்னைக்கு விரைந்து வந்தனர்‌. வந்த பின் தம்‌ மகளின் காதல் நன்றாக வளர்ந்து முதிர்ந்திருப்பதைக்‌ கண்டனர்; அவருடைய எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதையும்‌ உணர்ந்தனர்‌. மதியின்‌ தந்தைக்கும்‌ பாலாவுக்கும்‌ இடையே நீண்ட கலந்தாலோசனை நடைபெற்றது. அதையடுத்து, பெற்றோரின்‌ சம்மதம்‌ கிடைத்தது. இதன்‌ பின்னர்‌ பிரபாகரன்‌ அவர்களுடனான மதியின்‌ உறவை எமது கரங்களில்‌ ஒப்படைத்துவிட்டு, மதியின்‌ பெற்றோர்‌ மகிழ்ச்சியோடு யாழ்ப்பாணம்‌ திரும்பினர்‌. அந்தப்‌ பிரச்சினை தீர்ந்தாலும்‌ பிரபாகரனுடைய மூத்த தோழர்களுக்கும்‌ இயக்கப்‌ போராளிகளுக்கும்‌ இந்த விவகாரம்‌ தொடர்பான விளக்கம்‌ அளிக்க வேண்டிய பணி மீதம்‌ இருந்தது.

பிரபாகரனுக்கு நெருங்கியவர்களும்‌ இயக்கத்தில்‌ மூத்தவர்களுமான போராளிகள்‌ யாழ்ப்பாணத்தில்‌ இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்கள்‌. மதியுடனான காதல்‌ பற்றியும்‌ விரைவிலே திருமணம்‌ நடக்க இருப்பது பற்றியும்‌ அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இயக்கத்தின்‌ ஒழுக்கக்‌ கோவையைக்‌ கடைப்பிடிப்பதற்காக தங்கள்‌ காதல்‌ உறவுகளைத்‌ தியாகம்‌ செய்திருந்த சில மூத்த போராளிகளுக்கு, தங்கள்‌ தலைவரின்‌ காதல்‌ உறவு மகிழ்ச்சியைத்‌ தரவில்லை. இயக்கத்தின்‌ பழைய ஒழுக்கக்‌ கோவை மிகவும்‌ இறுக்கமானது என்றும்‌, தூய்மைவாதப்‌ போக்குடையது என்றும்‌, காலத்தோடு ஓட்டி பழைய விதிகளில்‌ மாற்றம்‌ ஏற்படூத்த வேண்டும்‌ என்றும்‌ பாலா விளக்கினார்‌. தமிழ்ப்‌ பண்பாட்டிலே காதலும்‌ வீரமும்‌ உயர்‌ விழுமியங்களாக இருந்து வருவதாக அவர்‌ சுட்டிக்‌ காட்டினார்‌. பிரபாகரன்‌ அவர்களுடைய காதல்‌ உறவு, இயக்கத்தின்‌ உள்ளார்ந்த நிலையை மாற்றியமைக்க வல்லது என்பதையும்‌ அவர்‌ விளக்கினார்‌. எதிர்காலத்தில்‌ இயக்கத்தின்‌ போராளிகள்‌ தங்கள்‌ காதல்‌ உறவுகளைத்‌ திருமணமாக நிறைவேற்றி, குடும்ப வாழ்க்கையிலும்‌ ஈடூபட இது வழிகோலுவதையும்‌ அவர்‌ எடுத்துரைத்தார்‌. இத்தகையை சம்பவத்‌ திருப்பங்கள்‌ அமைப்பின்‌ வளர்ச்சிக்கும்‌ அதன்‌ பெயருக்கும்‌ நல்லதே விளைக்கும்‌ என்றும்‌ பாலா வாதிட்டார்‌. தங்களின்‌ தலைவரின்‌ பிரம்மச்சாரிய வாழ்க்கைக்கு முடிவு வருவது தடுக்க முடியாததாகி விட்டது என்பதை மூத்த போராளிகள்‌ தயக்கத்தோடு ஏற்றுக்‌ கொண்டார்கள்‌. பிரபாகரன்‌ அவர்களுடைய காதலும்‌ திருமணமும்‌ இயக்கம்‌ மீது ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியது. போராளிகள்‌ ஒவ்வொருவரும்‌ காதல்‌ வயப்பட்டார்கள்‌; திருமணம்‌ புரியவும்‌ விரும்பினார்கள்‌. இன்று, திருமணமும்‌ குடும்ப வாழ்க்கையும்‌ இயக்கத்திலே சாதாரணமாக ஆகிவிட்டது.

இயக்கம்‌ மேலும்‌ விரிவடைய எங்கள்‌ திருவான்மியூர்‌ வீட்டில்‌ இடநெருக்கடி பெருகியது. செய்ய வேண்டிய பணிகளுக்கு அந்த வீட்டில்‌ இடம்‌ போதவில்லை. மேலும்‌ பெரிய வீடொன்றை வாடகைக்கு அமர்த்தத்‌ தீர்மானித்தோம்‌. இயக்கத்தில்‌ வந்து இணையும்‌ பெண்களின்‌ தளமாக அதுவே திகழ வேண்டும்‌ என்றும்‌ முடிவு செய்தோம்‌. இதற்கென, நாம்‌ வாடகைக்கு அமர்த்திய வட்டில்‌ நிறைய அறைகள்‌ இருந்தன. பெருந்தொகைப்‌ பெண்‌ போராளிகள்‌ தங்குவதற்கு ஏற்றதாகவும்‌ அது அமைந்தது. இந்தப்‌ புதிய வீட்டில்‌ மேன்மாடி அறை ஒன்று பாலாவுக்கும்‌ எனக்கும்‌ கிடைத்தது. இந்த அறையோடு ஒட்டியதாக மாடி முன்கூடம் ஒன்றும்‌ இருந்தது. மேலும்‌, மேலும்‌ இளம்‌ பெண்கள்‌ விடுதலைப்‌ புலிகள்‌ அணியிலே சேர்ந்து, நாம்‌ இருந்த வீட்டுக்கு வந்த போதிலும்‌ எமது அறை எமக்கு வேண்டிய தனிமையைத்‌ தந்தது. இனி, இதமான மாலை வேளைகளில்‌ பாலாவும்‌ நானும்‌ மாடி முன்‌ கூடத்தில்‌ தனியே அமர்ந்து நிறையப்‌ படிக்கவும்‌ விவாதிக்கவும்‌ முடிந்தது.

தமிழ்‌ மக்களுக்கு எதிரான 1983 ஜுலை மாதக்‌ கலவரங்களை அடுத்து இலங்கையின்‌ வட பாகத்தில்‌ ஆர்வம்‌ மிக்க பல இளம்பெண்களை ரெலோ அமைப்பின்‌ சிறீசபாரத்தினம்‌ திரட்டி, பாக்கு நீரிணையைக்‌ கடந்து சென்னைக்கு ராணுவப்‌. பயிற்சிக்காகக்‌ கொண்டுவந்திருந்தார்‌. குமிழ்நாடு சென்றடைந்த மறுகணமே, பெண்களுக்கான பிரிவு எதையும்‌ ரெலோ நிறுவவில்லை என்பதையும்‌, தம்மை வரவேற்று, தங்கவைத்து பராமரிக்க எந்த ஏற்பாடும்‌ செய்யப்படவில்லை என்பதையும்‌ அந்த இளம்‌ பெண்கள்‌ நேரில்‌ கண்டு பெருமளவு மன விரக்தியடைந்தார்கள்‌. அவர்களை விடுதலைப்‌ புலிகள்‌ சேர்த்துக்‌ கொள்வார்களா என்று சில கத்தோலிக்க ரவ கள்‌ ரெலோவின்‌ சார்பாக விடுதலைப்‌ புலிகளிடம்‌ விசாரித்தார்கள்‌. இந்தப்‌ பெண்களின்‌ நிலைமை பிரபாகரன்‌ அவர்களுடைய செவிகளுக்கு எட்டியதும்‌, இயக்கத்திலே அவர்கள்‌ சேர்வதற்கு அவர்‌ சம்மதித்தார்‌. அது தவிர, முதல்‌ பயிற்சிப்‌ பாசறையைத்‌ தொடக்கும்‌ அளவுக்குப்‌ போதுமான பெண்கள்‌ திரண்டதும்‌, அவர்களுக்கான ராணுவப்‌ பயிற்சித்‌ திட்டம்‌ ஒன்றையும்‌ புலிகள்‌ ஆரம்பிப்பார்கள்‌ என்றும்‌ உறுதிமொழிந்தார்‌. எனவே, நாம்‌ புது வீடு மாறியதும்‌, எம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த நான்கு மாணவிகளோடு ரெலோவிலிருந்து அதிருப்தியோடு வந்த இளம்‌ பெண்களும்‌ சேர்ந்து கொண்டார்கள்‌. இவர்களில்‌ ஒருவர்‌ சோதியா. பலராலும்‌ மதிக்கப்பட்டவரும்‌, ஆற்றல்‌ மிக்கவருமான சோதியா, பல ஆண்டுகளின்‌ பின்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ மகளிர்‌ இராணுவ அணியின்‌ தலைவியாக உயர்ந்தார்‌. எவரிலும்‌ தங்காது, தன்‌ காலில்‌ நிற்கும்‌ சுகி, குறிவைத்து சுடுவதில்‌ அபாரமானவர்‌. நெல்லியடி ராணுவ முகாமை 1987 ல்‌ தாக்கிய படைப்பிரிவில்‌ இவரும்‌ ஒருவர்‌. இந்தத்‌ தற்கொடைத் தாக்குதலைத்‌ தொடக்குமுன்‌, ஒரு முக்கிய காவல்‌ முன்‌ அரண மீது முதலாவது ஆர்‌.பி.ஜீ தாக்குதலை நடத்தியவர்‌ சுகியாவார்‌. ரெலோ குழுவில்‌ இருந்து வந்தவர்களில்‌ தீபாவும்‌ ஒருவர்‌; இவர்‌ முல்லைத்தீவைச்‌ . சேர்ந்தவர்‌; பெண்‌ போராளிகளால்‌ யாழ்ப்பாணத்தில்‌ நடத்தப்பட்ட முதற்‌ பயிற்சி முகாமில்‌ பயிற்சி நடத்துபவராக உயர்ந்தார்‌. இமெல்டா இன்னொருவர்‌. யாழ்ப்பாணத்தில்‌ இடம்பெற்ற சமர்‌ ஒன்றிலே உயிரைத்‌ தானம்‌ தந்தவர்‌. இன்னொருவர்‌ வசந்தி! அபாரமான திறமைகள்‌; நல்ல உடல்வாகு! இவருடைய சகோதரர்‌ தற்செயலாகச்‌ சுட, அந்த ரவை இவர்மீது பாய, அதனால்‌ கை இரண்டும்‌ கால்‌ இரண்டும்‌ செயலிழந்து, கிடையிலே வீழ்ந்தவர்‌.

யாழ்ப்பாணத்தில்‌ இருந்து முன்னதாக வந்த மாணவிகளில்‌ இரண்டு பேர்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ வரலாற்றில்‌ மிக முக்கிய பங்கு வகித்தவர்கள்‌. இயக்கத்திலே சேருமுன்‌, ஜெயா ஒரு அரசியல்‌ விஞ்ஞான மாணவியாக இருந்தவர்‌. இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக்‌ காலத்தில்‌ யாழ்ப்பாணத்திலே தலைமறைவு நடவடிக்கைகளில்‌ ஜெயா பெரும்‌ பெயர்‌ பெற்றார்‌. பின்னர்‌, விடுதலைப்‌ புலிகள்‌ மகளிர்‌ அணி அரசி யற்‌ பிரிவின்‌ தலைமைப்‌ பதவியை 1993 இலே பெற்றார்‌. இவர்‌ பின்னர்‌ திருமணம்‌ புரிந்து கொண்டார்‌. கால ஓட்டத்தில்‌ இயக்கத்தை விட்டு வெளியேறினார்‌.

இனி லலிதா. பல ராணுவ நடவடிக்கைகளில்‌ 1990 இற்குப்‌ பின்‌ களம்‌ கண்ட மூத்தவர்‌. போர்க்‌ களத்திலிருந்து இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்‌. ஆனால்‌, தமது வாழ்வின்‌ நீண்ட காலத்‌ தாகத்துடன்‌, அதாவது பாலர்கள்‌ மீது பாசம்‌ கொட்டும்‌ தாகத்துடன்‌ தம்மை இணைத்துக்‌ கொண்டு விட்டார்‌. இன்று செஞ்சோலைப்‌ பொறுப்பாளரா- கத்‌ திகழ்கிறார்‌. அனாதைப்‌ பெண்‌ பிள்ளைகளுக்கும்‌ சிறுவர்களுக்கும்‌ வதிவிடப்‌ பள்ளியாக விளங்குவது செஞ்சோலை.

மட்டக்களப்பில்‌ ஒரு சிறிய ஆயுதக்‌ குழுவில்‌ இருந்து விலகி வந்து விடுதலைப்‌ புலிகளோடு இணைந்து கொண்டவர்‌ சாந்தி. இறுதியில்‌ இவர்‌ பெண்கள்‌ அணியின்‌ புலனாய்வுப்‌ பொறுப்பாளராக உயர்ந்தார்‌. பல ஆண்டுகளின்‌ பின்னர்‌ இயக்கத்தில்‌ இருந்து இவர்‌ வெளியேறினார்‌.

இளம்‌ பெண்கள்‌ கூட்டமாக ஒரே குடையின்‌ கீழ்‌ ஒன்றாக வாழ வந்தது அவர்களுக்கே புதிய அனுபவம்‌. அதுவும்‌ தாம்‌ பெருமதிப்பு வைத்திருக்கும்‌ தலைமைக்கு அருகே வாழக்‌ கிடைத்தமையை ஒரு பாக்கியமாகவே அவர்கள்‌ கருதினார்கள்‌. பிரபாகரன்‌ அவர்கள்‌, இயக்க அலுவலாக பாலாவிடம்‌ வரும்போதும்‌ சரி, தமது இதயம்‌ கவர்ந்த மதியுடன்‌ உரையாட வரும்போதும்‌ சரி, அவருக்குப்‌ பிடித்தமான சிற்றுண்டிகளைத்‌ தயாரிப்பதில்‌ அந்த இளம்‌ பெண்கள்‌ காட்டும்‌ சுறுசுறுப்பான ஆர்வத்தைப்‌ பார்க்க வேண்டும்‌. நாம்‌ குடியிருக்கும்‌ சூழலின்‌ அமைதியைக்‌ கலைக்கா வண்ணமும்‌, சுற்றுப்புறத்தின்‌ கவனத்தை ஈர்க்கா வண்ணமும்‌ நாம்‌ அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம்‌. அந்த வதிவிடத்தின்‌ சமூகச்‌ சூழலையும்‌ நாம்‌ கவனத்தில்‌ இருத்த வேண்டியிருந்தது. ஆசாரம்‌ மிக்க பிராமணர்களின்‌ கூட்டுக்‌ குடும்பங்கள்‌ அமைந்த பகுதியின்‌ மத்தியில்‌ எமது வீடு அமைந்திருந்தது. ஆகவே உள்ளூர்‌ வாசிகள்‌ நம்‌ மட்டில்‌ எத்தகைய கருத்தை வகுக்கிறார்கள்‌ என்பது தொடர்பாக நாம்‌ எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டியிருந்தது. அந்தச்‌ சுதேசச்‌ சூழலில்‌ ஒரு வெள்ளைக்காரப்‌ பெண்‌ தரித்திருப்பதே புருவங்களை உயர்த்த வைத்திருந்தது. பொதுவாக இந்திய இளம்‌ பெண்களும்‌ சரி, குறிப்பாக மரபு பேணும்‌ பிராமணப்‌ பெண்பிள்ளைகளும்‌ சரி, அரைத்‌ தாவணி அணிவதே பொதுவாக இருக்க, எங்கள்‌ வீடு நிறைய இருந்த இளம்‌ பெண்கள்‌ பாவாடை சட்டை அணிந்திருப்பது அண்டையில்‌ வாழ்பவர்களுடைய கவனத்தை இயல்பாக ஈர்த்தது; அது புதிராகவும்‌ அவர்களுக்குத்‌ தோன்றியது. ஒரு நாளில்‌ எந்த நேரமும்‌ பிரபாகரன்‌ அவர்கள்‌ தமது வாகனம்‌ நிறைய மெய்க்காவலர்களுடன்‌ வருவது எமது வீடமைந்த சூழலில்‌ ஒரு வரவேற்பு உணர்வை உருவாக்கவில்லை. இதனால்‌, அனைவருடைய நலனைக்‌ கருத்தில்‌ எடுத்து, பிரபாகரன்‌ அவர்கள்‌ தமது தரிசிப்பை இருட்டுவதற்கு முன்னதாகவே வைத்துக்‌ கொள்வது நல்லது என்று மரியாதையாகவே அவரிடம்‌ சுட்டிக்‌ காட்டும்‌ நிலைக்கு பாலா தள்ளப்பட்டார்‌. எமது சூழலில்‌ நாம்‌. தப்பபிப்பிராயங்களுக்கு உள்ளாகாது இருப்பது அவசியம்‌ என்பதே எமது அங்கலாய்ப்பாக இருந்தது. எமது முந்திய திருவான்மியூர்‌ வீட்டுக்குக்‌ கசப்பான அனுபவங்களும்‌ எமக்குப்‌ படிப்பினையாக இருந்தன. குறிப்பாக என்னைப்‌ பற்றிய உள்ளூர்‌ அபிப்பிராயம்‌ முற்றிலும்‌ தவறானதாக இருந்தது. 1979 இலே சென்னைக்கு நான்‌ முதற்பயணம்‌ புரிந்திருந்தபோது, உள்ளூர்வாசிகளால்‌ தவறாகப்‌ புரிந்து கொள்ளப்பட்ட முதல்‌ அனுபவம்‌ எனக்குக்‌ கிடைத்திருந்தது. எமது தங்கிடத்தைக்‌ கடந்து செல்பவர்களின்‌ பார்வை குத்திட்டாகவே இருக்கும்‌; எமது அறையைக்‌ கடக்கும்‌ போது தலைகள்‌ தாமாகவே எமது அறையை நோக்கித்‌ திரும்பும்‌. ஆனால்‌ 1984 இலே திருவான்மியூர்‌ வீட்டில்‌ நான்‌ இருப்பது மிகவும்‌ விபரீதமான தப்பபிப்பிராயத்தைத்‌ தோற்றுவித்திருந்தது. ஒரு விலைமாதர்‌ விடுதியை நடத்தும்‌ முதலாளி அம்மாவாக உள்ளூர்‌ மக்களின்‌ சந்தேகங்களும்‌, கணிப்புகளும்‌ என்னைப்‌ படம்‌ போட்டிருந்தன. உள்ளூர்‌ மக்களின்‌ பார்வையில்‌ நான்‌ வேறு விதமாகத்‌ தோன்றுவதற்கு இடமில்லை என்றே கூற வேண்டும்‌. அவர்களுடைய பார்வையில்‌ ஒரு வெள்ளைக்காரப்‌ பெண்‌, வாடகை வீடொன்றில்‌ சில தமிழ்‌ ஆடவர்களோடும்‌ நான்கு அழகான இளம்‌ தமிழ்ப்‌ பெண்களோடும்‌ தரித்திருப்பதும்‌, இனி வெவ்வேறு ஆடவர்கள்‌ அடிக்கடி பகல்‌ இரவென்று எந்நேரமும்‌ வருவதும்‌ சந்தேகத்தைத்‌ தோற்றுவித்திருந்தது. நேரடியாக . எம்மைக்‌ கேட்டு தங்கள்‌ சந்தேகத்தைப்‌ போக்காது உள்ளூர்‌ சமுதாய விச மூளைகள்‌ சுவையான கதை ஒன்றை கருக்கூட்டி, அதற்கு காதும்‌ சிறகும்‌ வைத்து, தங்கள்‌ சூழலில்‌ ஒரு காமக்‌ கேளிக்கை கூடம்‌ ஒன்று யங்குவதாகப்‌ புரளியை பரப்பியிருந்தன. கன்னிமை, கற்பு, ஒற்றைத்திருமணம்‌, திருமணத்துக்கு முந்திய உடலுறவு தவிர்ப்பு ஆகியவற்றை உயர்‌ ஒழுக்க சீலங்களாக ஓம்பும்‌ ஒரு சமுதாயத்தில்‌ ஒரு விலைமாதர்‌ விடுதியை நடத்தும்‌ வெள்ளைக்காரப்‌ பெண்‌ ஒருத்தி, தாம்‌ மதிக்கும்‌ ஒழுக்க விழுமியங்களை வெளிப்படையாக அவமதிப்பது | உள்ளூர்‌ சமுதாயத்துக்கு கொதிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. இதனால்‌ தார்மீகச்‌ சீற்றம்‌ உருவேறிய நிலையிலே, உள்ளூர்‌ மக்கள்‌ சிலர்‌ ஒன்றாகத்‌ திரண்டு எங்கள்‌ வீட்டை நோக்கி ஊர்வலம்‌ வந்து தங்கள்‌ எதிர்ப்பைத்‌ தெரிவிக்க முற்பட்டார்கள்‌. அந்தத்‌ தருணத்தில்‌ ம்ம்‌ பிரபாகரன்‌ அவர்களோ, வேறு எந்த ஆண்‌ போராளிகளோ வீட்டில்‌ இருக்கவில்லை. எமது வீட்டின்‌ எதிரே சீற்றம்‌ கொண்ட கும்பல்‌ ஒன்றைக்‌ கண்டதும்‌ உள்ளே இருந்த இளம்‌ பெண்கள்‌ அச்சத்தால்‌ உறைந்து போனார்கள்‌. என்மீது வீசப்பட்ட நிந்தனை வார்த்தைகள்‌ எனக்குப்‌ புரியவில்லை; ஆனால்‌ வந்தவர்களின் முகந்களில் இருந்த கோபத்தையும்‌ வெறியையும் அப்பட்டமாகப் பார்க்க முடிந்தது. வெளியே நின்ற கும்பல்‌ பொறுமையை இழந்தது. வன்செயலில்‌ இறங்கி வீட்டைக்‌ கல்லால் தாக்கத்‌ தொடங்கியது. இந்தத்‌ தருணத்தில்‌ பொன்னம்மான்‌ அவர்கள்‌ அங்கே வந்தது எமக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு மூத்த தளபதியும்‌ பிரபாகரன்‌ அவர்களின்‌ நம்பிக்கைக்குப்‌ பாத்திரமான ஒரு தோழருமான பொன்னம்மான்‌ அவர்கள்‌ ஜீப்‌ வண்டி ஒன்றில்‌ சில போராளிகளுடன்‌ வீட்டுக்கு வந்தார்‌. அங்கு நின்ற கும்பல்‌ எம்மீது கொண்டிருந்த அருவருக்கத்‌ தக்க தப்பபிப்பிராயத்தைப்‌ பற்றியும்‌ எமது ஒழுக்கம்‌ மீது அவர்கள்‌ வீசிய வசைவுகளைப்‌ பற்றியும்‌ கேட்டறிந்ததும்‌ பொன்னம்மானும்‌ போராளிகளும்‌ சீற்றம்‌ அடைந்தார்கள்‌. பொன்னம்மான்‌ கூட்டத்தை நோக்கி உரத்துக்‌ கத்தினார்‌. நாம்‌ யார்‌ என்பதை விளக்கினார்‌. ஆதாரத்துக்கு பிஸ்டலை எடுத்துக்‌ காட்டினார்‌. கும்பல்‌ வாயடைத்து நின்றது; தங்கள் நடத்தைக்கு வருத்தம் தெரிவித்தபடி ஒவ்வொருவராக கழன்று சென்றார்கள். இந்திய ராணுவப் பயிற்சித்‌ திட்டத்தில்‌ கலந்து கொள்வதற்காகத்‌ தமிழீழத்தில்‌ இருந்து வந்த தமிழ்ப்‌ புலிகள்‌ என்ற விடுதலைப்‌ போராளிகளே நாம்‌ என்பதை அவர்களுக்கு பொன்னம்மான்‌ விளக்கினார்‌.

இந்த அனுபவம்‌ எனக்குள்‌ ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தியது. இத்தகைய ஒரு சமூகத்‌ தப்பபிப்பிராயமோ, இத்தகைய ஒரு அருவருப்பான விரோத சம்பவமோ இனி இடம்பெற இடமளிக்கக்‌ கூடாது என்று நெஞ்சுக்கு உள்ளே உறுதி பூண்டேன்‌. உண்மையிலே இந்தச்‌ சம்பவம்‌, சமுதாயத்தில்‌ பெண்களின்‌ நிலைபற்றிய எனது புரிந்துணர்வில்‌ ஓர்‌ ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒழுக்க விழுமியங்களைத்‌ தமிழ்‌ மக்கள்‌ எவ்வளவுக்கு வலியுறுத்துகிறார்கள்‌ என்பது பற்றியும்‌ எனக்கு ஒரு கையடக்கமான ஆனால்‌ கூர்மையான சமூக-பண்பாட்டுப்‌ பாடமாகவும்‌ அமைந்தது. பெண்கள்‌ மீதான சமூகக்‌ கட்டுப்பாடு, பொதுசன அபிப்பிராயம்‌ என்ற வடிவிலே மீண்டும்‌ மண்டும்‌ தலையெடுத்தது. இந்தியாவிலும்‌ இலங்கையிலும்‌ நான்‌ வாழ்ந்த காலம்‌ முழுவதும்‌ வெவ்வேறு அளவிலும்‌ வெவ்வேறு வடிவிலும்‌ இந்தப்‌ பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கியது. இன்னும்‌ ஒன்றைக்‌ குறிப்பிடலாம்‌. பெண்ணியவாதிகளின்‌ கவனத்தையும்‌ சீற்றத்தையும்‌ இது தூண்டலாம்‌. அதாவது, பெண்களே பெண்கள்‌ மீது இந்தக்‌ கொடுமைகளைப்‌ புரிந்தார்கள்‌ என்பதே அது. இங்கு நான்‌ மேலோட்டமாக மட்டுமே தொட்டுச்‌ செல்கிறேன்‌. உண்மையிலே சமுதாயத்தில்‌ பெண்கள்‌ என்ற முழுமையான கண்ணோட்டத்தில்‌ பார்க்கும்போது இந்தச்‌ சமூகப்‌ பிரச்சினை பல முகம்‌ கொண்டதும்‌ சிக்கல்‌ மிக்கதுமாகும்‌. இதை விரிவாக அலசுவதானால்‌, தனி ஒரு நூலே எழுதலாம்‌. ஆனால்‌ ஒன்றை மட்டும்‌ சுட்டிப்பாகக்‌ கூறலாம்‌. பெண்களுடைய ஒழுக்க சீலம்‌ தொடர்பாக அவதூறு ஒன்றைப்‌ பரப்பினால்‌, சமுதாயத்தில்‌ அவர்களுக்குச்‌ சாவுமணி அடிக்க அதுவே போதும்‌. அதற்குப்‌ பின்‌ அவர்கள்‌ சமூகத்தில்‌ ஒரு கண்ணியமான நட்பையோ, நன்மதிப்பையோ சம்பாதிக்க முடியாது; தமிழ்ச்‌ சமுதாயத்திலே ஒரு பெண்‌ “ஒழுக்கம்‌ கெட்டவள்‌” என்று நாமம்‌ சூட்டப்பட்டுவிட்டால்‌, அதன்‌ பின்‌ அவளுடைய வார்த்தைக்கு சமூக மரியாதை எதுவும்‌ கிடையாது. எம்மோடு இருந்த இளம்‌ பெண்களில்‌ எவரேனும்‌ ஒழுக்கம்‌ கெட்டவள்‌ என்று தவறுதலாகக்‌ கூட குற்றம்‌ சாட்டப்பட்டுவிட்டால்‌, விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கத்தில்‌ பெண்களின்‌ எதிர்காலம்‌ தொடர்பான கெட்ட பெயரே நிலைத்து விடும்‌. அத்தகைய கொடிய அவதூறான வதந்தி காட்டுத்‌ தீ போலப்‌ பரவினால்‌, நியாய விளக்கங்கள்‌ கூட, அவப்‌ பெயரை முழுமையாக கறையழிக்கப்‌ போதுமாக இராது. சந்தேகம்‌ தொடரவே செய்யும்‌. தமிழ்ச்‌ சமுதாயத்தில்‌, ஒரு பெண்‌ மழுக்கம்‌ கெட்டவள்‌ என்று கரும்‌ புள்ளி குத்தப்படூவதற்கு, அவள்‌ கட்டாயமாக ஒரு விலைமாதாகக்‌ தான்‌ இருக்க வேண்டும்‌ என்பதல்ல. ஒழுக்கம்‌ கெட்டவள்‌ என்பது தாராளமாகவும்‌ Cs பயன்படுத்தப்படும்‌ ஒரு பதமாகும்‌. ஒரு பெண்‌ மாரும்‌ சமூக எல்லைக்‌ கோடுகள்‌ ஒடுக்கமானவை. மேற்குலக நியமங்களோடு ஒப்பிடும்போது, ஒழுக்கம்‌ கெட்டவள்‌ என்று பட்டஞ்‌ சூட்டுவதற்கு வாய்ப்புகள்‌ அதிகம்‌. சொல்லப்‌ போனால்‌, திருமணம்‌ ஆகாத ஓர்‌ இளம்‌ பெண்‌, இளைஞர்களோடு அடிக்கடி பேசுவது காணப்பட்டால்‌, ஒழுக்கம்‌ கெட்டவள்‌ என்று எளிதாகக்‌ கருதப்படலாம்‌. காதலன்‌ உள்ள ஓர்‌ இளம்‌ அவனைத்‌ திருமணம்‌ செய்யாமல்‌ இருந்தால்‌, அவளும்‌ “ஒழுக்கம்‌ கட்டவள்‌” என்ற பட்டியலில்‌ அநேகமாகச் சேர்க்கப்படுவாள். ஆனாலும், திருவான்மியூர்ச்‌ சம்பவம்‌ என்னை வெகுவாக விழிப்படையச் செய்தது. மற்றவர்கள்‌ எமது நடத்தை பற்றி என்ன கருதுகிறார்கள்‌ என்பதை உணர்த்தியது. ஒரு பெண்ணின்‌ வாழ்வில்‌ பொது சன அபிப்பிராயத்தின்‌ ஆதிக்கத்தையும்‌ அது விளைவிக்கக்கூடிய பேரிடரையும்‌ புரிந்து கொண்டேன்‌. அரசியல்‌ போராட்டம்‌ ஒன்றிலே பெண்களை ஈடுபடுத்தும்‌ போது உருவாகக்‌ கூடிய பிரச்சினைகளைப்‌ புரிந்து கொள்ளும்‌ வாய்ப்பை அது எனக்குக்‌ கற்பித்ததால்‌, அது மிகவும்‌ பயனுள்ளதாக அமைந்தது எம்மை எவ்வளவுதான்‌ புரட்சியாளர்கள்‌ என்று கூறிக்கொண்டாலும்‌ சரி, சமுதாய, பண்பாட்டு நியமங்களை நிராகரிக்கும்போது ஏற்படும் விளைவுகளுக்கு முகம்‌ கொடுக்க ஆயத்தம்‌ என்று எவ்வளவுதான்‌ நாம்‌ கூறிக்‌ கொண்டாலும்‌, சமுதாயத்தின்‌ நியமங்களையும்‌ விழுமியங்களையும்‌ புரிந்து கொள்வதும்‌, அவந்றை மதிப்பதும்‌ மிகவும்‌ முக்கியமாகும்‌. சமூக மாற்றத்தை நாம்‌ ஏற்படுத்த வேண்டுமானால்‌ பண்பாட்டுக்‌ கோலத்தினாடாக அதை அணுகும்‌ வழிகளை நாம் தேடவேண்டும்‌. ஒருவர்‌ மேற்கொள்ளும்‌ நடவடிக்கைகள்‌ அரசியல்‌ serge அவரை வலிமை இழக்கச்‌ செய்யும்‌ என்றால்‌ சமுதாயத்தின்‌ நியமங்களை மீறுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது.

3.2 சோதனை மிகுந்த காலம்‌

லண்டனில்‌ புரட்சி அரசியலில்‌ நாம்‌ பங்கு கொண்ட காலத்தில்‌, சிறீலங்கா அரசுக்கு எதிரான பரப்புரைப்‌ பணியில்‌ ஈடுபட்டிருந்தோம்‌. நீலங்கா இராணுவம்‌ புரிந்த கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தோம்‌. சிங்கள இனவெறி அரசியல்வாதிகள்‌ என்று இனம்‌ காணப்பட்டவர்களுக்கு எதிராகவும்‌ பரப்புரை செய்தோம்‌. பயங்கரவாதத்‌ தடைச்‌ சட்டத்துக்கு அமைவாக இரண்டு மத்குரவர்‌, இரண்டு மருத்துவர்‌, இனி யாழ்ப்பாணப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ இருந்து இரண்டு விரிவுரையாளர்கள்‌ கைது செய்யப்பட்டு கொடுமைக்கு பெயர்‌ பெற்ற வெலிக்கடைச்‌ சிறையில்‌ அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்‌ என்ற தகவல்‌ கிடைத்ததும்‌, அவர்களுடைய . நிலைமையை அனைத்துலக சமுதாயத்தின்‌ கவனத்துக்கும்‌ கரிசனைக்கும்‌ கொண்டுவரும்‌ முயற்சியில்‌, லண்டனில்‌ கடுமையாக பரப்புரை புரிந்தோம்‌. தடுக்கப்பட்டவர்களில்‌ ஒருவர்‌, விரிவுரையாளரும்‌ பெயர்‌ பெற்ற தமிழ்‌ எழுத்தாளருமான நிர்மலா நித்தியானந்தன்‌ ஆவார்‌.

நிர்மலா நித்தியானந்தன்‌ ஒரு இலக்கிய வாதியாகவும்‌, பெண்ணியவாதியாகவும்‌ பிரபலப்படுத்தப்பட்டார்‌. அவருடைய அரசியல்‌ கருத்துகளுக்காக அவர்‌ சட்டத்துக்கு முரணாக சிறைப்படூத்தப்‌ பட்டிருக்கிறார்‌ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அவருடைய மனித உரிமைகள்‌ மீறப்படுவதாகவும்‌ மனிதாபிமானமற்ற முறையில்‌ அவர்‌ நடத்தப்படக்கூடும்‌ என்றும்‌ பரப்புரை புரியப்பட்டது. . அவருடைய விடுதலைக்காக அனைத்துலக மயப்பட்ட போராட்டம்‌ ஒன்று தொடக்கப்பட்டது. நிர்மலா தொடர்ந்தும்‌ சிறையிடப்பட்டிருப்பது ஓர்‌ ஆழ்ந்த மனப்‌ பதற்றத்தைத்‌ தோற்றுவித்திருந்த்து. அதுவும்‌ 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்‌ மக்களுக்கு எதிரான கலவரம்‌ நடத்தப்பட்டபோது, சிங்களக்‌ கைதிகளும்‌ சிறைக்‌ காவலர்களும்‌ தமிழ்‌ அரசியல்‌ கைதி- களைப்‌ படுகொலை செய்ததை அடுத்து, நிர்மலா தொடர்பான அங்கலாய்ப்பு பெருகியது. சிறைச்‌ சாலையின்‌ பெண்கள்‌ பிரிவில்‌ இடப்பட்டிருந்த நிர்மலா, பெண்‌ கைதிகளின்‌ சித்திரவதையில்‌ இருந்து அதிர்ஷ்ட வசமாகத்‌ தப்பினார்‌; பின்னர்‌, தடுப்புக்காவலில்‌ உயிர்‌ சப்பிய ஏனைய தமிழ்க்‌ கைதிகளோடு அவரும்‌ மட்டக்களப்புச்‌ சிறைக்கு மாற்றப்பட்டார்‌. இந்தத்‌ தமிழ்‌ அரசியல்‌ கைதிகளைச்‌ சிறையுடைத்து விடுவிக்க மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்‌ புலிப்‌ போராளிகள்‌ திட்டமிட்டார்கள்‌. சிறையிலிருந்து தப்புவதற்கு நடந்த முயற்சியின்‌ போது எமது போராளி ஒருவரால்‌ நிர்மலா மீட்கப்பட்டார்‌ என்பதைக்‌ கேள்வியுற்றதும்‌, பெரிதும்‌ மகிழ்ந்தேன்‌. நிர்மலாவின்‌ துணிச்சல்‌, அவர்‌ மட்டில்‌ நான்‌ வைத்திருந்த மரியாதையை மேலும்‌ உயர்த்தியது. இயக்கத்துடன்‌ கூடிப்‌ பணியாற்ற அவர்‌ சென்னைக்கு வர இருக்கிறார்‌ என்ற தகவலைப்‌ பிரபாகரன்‌ அவர்களிடமிருந்து பெற்றபோது பெரிதும்‌ மகிழ்ந்தேன்‌. ஆங்கிலம்‌ பேசவல்ல ஒரு தோழியுடன்‌ பல விடயங்களை விரிவாக ஆராயலாம்‌ ஆதலால்‌, அவர்‌ வருகைக்காக காத்திருந்தேன்‌

விடுதலை புலிகள் இயக்கத்தில்‌ நிர்மலா இணைவதை ஒட்டி பிரபாகரன் ஆர்வமாக இருக்கவில்லை. பெண்ணிய எண்ணக்கரு தொடர்பாக ஒரு தெளிவான முரண்பாடும்‌ இருவருடைய போக்கிலும் காணப்பட்டது. தமிழ்ப்‌ பெண்கள்‌ விடுதலை தொடர்பான அவருடைய கருத்துடனும்‌ இலக்குடனும்‌ நிர்மலாவின்‌ பெண்விடுதலைத்‌ திட்ட இலக்கு இணையவில்லை. பிரபாகரன்‌ அவர்களுடைய சித்தாந்தப்‌ பார்வையில், நிர்மலாவின்‌ பெண்விடுதலைப்‌ பார்வை, ஓர்‌ அச்சடித்த மேற்குலகப் பார்வையாக இருந்ததேயன்றி, விடுதலை வேண்டிநின்ற தமிழ்ப் பெண்கள் இனம்‌ கண்டு தழுவக்கூடிய பெண்விடுதலை இலசியமாக இருக்கவில்லை. எனவே, விடுதலைப்‌ புலிகளின்‌ பெண்கள் பிரிவைக் கட்டியெழுப்பும்‌ பொறுப்பை நிர்மலாவிடம் ஒப்படைக்கும்‌ நோக்கம்‌ பிரபாகரன் அவர்களுடைய திட்டத்தில் இருக்கவில்லை. பெண்கள்‌ பிரிவில்‌ எந்தப்‌ பொறுப்பையும்‌ வகிப்பதற்கு நிர்மலா தகுதியற்றவர்‌ என்ற அவருடைய கருத்து சரியே என்பது நிரூபணமாயிற்று. அவர்‌ மட்டுமல்ல, எம்மோடு இருந்த இளம்‌ பெண்கள் கூட நிர்மலாவின்‌ சீர்திருத்த வாதத்தை புரிந்து கொள்ளவோ, அதனுடன் தம்மை இணைத்துக்‌ கொள்ளவோ முடியவில்லை. போராட்டத்தில் தம்மை இணைத்து, தாய்மண்‌ விடுதலைக்காக போராட வந்தவர்களே இந்தக்‌ கிராமத்துப்‌ பெண்கள்‌. அவர்களிடம்‌ பெண்‌ விடுதலை பற்றிய ஆழமான பார்வை இருக்கவில்லை. இதனால்‌ இவர்களுக்கும் நிர்மலாவுக்கும்‌ இடையே மலைக்கும்‌ மடுவுக்கும்‌ உள்ள வேறுபாடே நிலவியது. இந்த இளம்‌ தமிழ்ப்‌ பெண்களின்‌ உள்‌ உணர்வுகளையும் சிந்தனைகளையும்‌ சரியான வகையிலே நெறிப்படுத்தி, அவர்களுடைய ஆதரவை வென்றெடுப்பதில்‌ பிரபாகரன்‌ அவர்கள்‌ தம்து ஆற்றலை நிரூபித்தார்‌. பெண்களுக்கான பிரிவு ஒன்றைக்‌ கட்டி எழுப்புவதிலும் அவர் அயராது பாடுபட்டார்‌; பின்னர்‌ அந்தப் பிரிவின் வழிகட்டியாகவும் குருவாகவும்‌ அவர்‌ நிலைபெற்றார். அரச படைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிர்மலாவின்‌ வீர வரலாறு கூட, ஏனைய பெண்களோடு ஒட்டுவதில் அவருக்கு உதவிக்கு வரவில்லை. அவரோடு மற்றவர்கள் ஒட்டிக்‌ கொள்ளவும்‌ இல்லை; பெண் விடுதலை தொடர்பான அவருடைய கருத்தின்‌ மேல்‌ அவர்கள் பற்றுக் கொள்ளவும் இல்லை. இயக்கத்தை நிர்மலா காரசாரமாக விமர்சித்தார்‌. ஆனால்‌ அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு முகம்‌ கொடுக்கும்‌ மக்கள்‌ எவ்வாறு ஒன்று திரண்டு எதிர்த்து நிற்கலாம்‌ என்பதற்கான மாற்று வழி எதனையும்‌ முன்வைக்கும் ஆற்றலும்‌ அவரிடம்‌ இருக்கவில்லை. இளம்‌ பெண்கள்‌ அவர் மீது கொண்ட வெறுப்பும்‌, பிரச்சினைகளைத்‌ தோற்றுவித்த வேறு பல விடயங்களும்‌, இறுதியில்‌ அவரை, இயக்கத்தை விட்டு ஒதுங்கச்‌ செய்தது. விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கத்துடன்‌ நிர்மலா பூண்டிருந்த உறவு நல்விளைச்சல்‌ எதையும்‌ தராவிடினும்‌, நித்தி. என்று அன்போடு அழைக்கப்பட்ட நிர்மலாவின்‌ கணவர்‌ நித்தியானந்தன்‌ அவர்களுடைய பங்களிப்பு பயனுள்ளதாகவும்‌ காத்திரமானதாகவும்‌ அமைந்தது. இயக்கத்தின் அதிகார பூர்வ “விடுதலைப்‌ புலிகள்‌” செய்த தாளின்‌ ஏட்டாசிரியராக பல கட்டுரைகளை எழுதினார். விடுதலைப்‌ புலிகளின்‌ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்‌. வேறு தேசிய விடுதலைப்‌ போராட்டங்கள்‌ பற்றிய விவரங்களை எமது போராளிகளுக்கும்‌ வாசகர்களுக்கும்‌ அறிமுகப்படுத்தினார்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ அதிகார நிலை வெளியீடாக அந்தச்‌ செய்தித்‌ தாள்‌ 1984 இலிருந்து இன்றும்‌ நிலைத்து நிற்கின்ற போதிலும்‌, நித்தியானந்தன்‌ அவர்கள்‌ தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கவில்லை. தமது மனைவியோடு 1984 இறுதியிலே இயக்கத்தில்‌ இருந்து அவரும்‌ வெளியேறினார்‌. இயக்க அலுவல்களில்‌ பெண்கள்‌ தொடர்ந்தும்‌ பங்காற்றிக்‌ கொண்டிருக்க வேண்டும்‌ என்பதில்‌ நான்‌ அக்கறை காட்டினேன்‌. ஆனாலும்‌ இந்த முயற்சி, எனது வல்லை போராட்டத்தின்‌ ஒரு வெளிப்பாடு மட்டுமே. இயல்பாகவே நன்கு, இணைந்து கொள்ளும்‌ தன்மை என்னிடம்‌ இருந்ததால்‌ என்னோடு தொடர்பு கொண்டவர்களுடன்‌ ஓட்டிக்‌ கொள்வதில்‌ எனக்குப்‌ பிரச்‌சனை இருக்கவில்லை. போராளிகளும்‌ என்னோடு மனம்‌ விட்டுப்‌ பழகினார்கள்‌. புதிய உலகு ஒன்றுக்குள்‌ வந்திருக்கும்‌ க்‌ நாட்டுப்‌ பெண் என்று கருதி அனுதாபமாகவும்‌ நடந்து கொண்டார்கள்‌. எனது அர்ப்பணிப்புப் பந்றி அவர்களுக்கு என்றும்‌ ஐயம்‌ எழுந்தது கிடையாது. தேசிய விடுதலைக்கான ஆயுதம்‌ தரித்த போராட்டத்தில்‌ நான்‌ எத்தகைய தியாகம்‌ புரிய வேண்டும்‌ என்பதை, போராளிகள்‌ நன்கு புரிந்து கொண்டு இருந்தார்கள்‌. ஆனாலும்‌ நான்‌ ஏற்கனவே இந்தியா சென்று அங்குள்ள சமூக பண்பாட்டுக்‌ கோலத்திலும்‌, வாழ்க்கை முறையிலும்‌ பரிச்‌சியம்‌ பெற்றிருந்தாலும்‌, சமூகத்தினதும்‌ பண்பாட்டினதும்‌ நெளிவு சுழிவுகள்‌ பற்றி நான்‌ அறிந்திருக்கவில்லை. சிக்கல்‌ மிக்க. அந்தப்‌ பண்பாட்டுக்‌ கோலத்தின்‌ ஊடாக என்னை வழிநடத்த பாலா இல்லாது விட்டிருந்தால்‌, மக்களோடு பழகத்‌ தெரியாதவளாகவும்‌, அறிந்தோ அறியாமலோ மக்களைப்‌ புண்படுத்துபவளாகவும்‌ என்னைத்‌ தப்பாகப்‌ புரிந்திருப்பார்கள். சுருங்கக்‌ கூறுவதானால்‌, . எனது பண்பாடு வயப்படும்‌ முயற்சி, தொடக்கத்தில்‌ பாரிய பண்பாட்டு அதிர்ச்சியாகவே இருந்தது. ஒரு புதிய சமூக-பண்பாட்டு உலகசூ பற்றி முழுமையாகக்‌ கற்பதாக அமைந்தது. ஒழுக்கம்‌ தொடர்பாகவும்‌ ஒரு புதிய பரிமாணத்தை கற்கவும்‌ புரிந்து கொள்ளவும்‌ வேண்டியிருந்தது. எனது நடத்தையில்‌ சில சீராக்கங்களைச்‌ செய்து கொண்டேன்‌. எனது சிந்தனைப்‌ போக்கை முழுமையாக மாற்றியமைத்தேன்‌. என்னுடைய கருத்துகள்‌ பல மாற்றம்‌ கண்டன; அன்றாட வாழ்க்கை முற்றாக மாறியது; ஆடை பற்றிய உணர்வும்‌ மாறியது. இறுதியாக ஆண்டுகள்‌ ஓட, ஒன்றை நன்றாக உணர்ந்து கொண்டேன்‌. சிறிதுகாலம்‌ வேறொரு நாட்டில்‌ வாழ்வது வேறு; வேறொரு நாட்டில்‌ ஒருவர்‌ தனது சொந்தச்‌ சமூகத்துக்குள்ளே வாழ்வது வேறு. ஆனால்‌ இன்னொரு சமுதாயத்தின்‌ அங்கமாக மாறுவது என்பது முந்றிலும்‌ வேறானது.

இந்த அடிப்படையில்‌ பார்த்தால்‌, இந்தியாவிலும்‌ இலங்கையிலும்‌ நான்‌ பெற்ற அனுபவம்‌ அபூர்வமானது எனலாம்‌. இறுதியில்‌ தமிழ்க்‌ கண்களால்‌ உலகைப்‌ பார்க்கத்‌ தொடங்கினேன்‌; தமிழ்ச்‌ சமுதாயம்‌ போலவே உணரத்‌ தொடங்கினேன்‌. பல பிரச்சினைக- ளில்‌ தமிழ்ச்‌ சமுதாயம்‌ போலவே சிந்திக்கத்‌ தொடங்கினேன்‌. நாளாந்த அடிப்படையில்‌ அவர்கள்‌ முகம்‌ கொடுக்கும்‌ ஒடுக்கு முறையின்‌ தன்மை பற்றி தமிழ்‌ மக்களுடைய உணர்வுகளையும்‌ சிந்தனைகளையும்‌ என்னால்‌ பகிர்ந்து கொள்ள முடிந்தது. இகுனால்‌ மக்களின்‌ எதிர்வினைகள்‌ இயல்பானவை என்பதையும்‌ நியாயமானவை என்பதையும்‌ உணர்வுபூர்வமாக முழுமையாக அறிந்தேன்‌. இந்தப்‌ பூரண. ஈட்டத்தின்‌ பின்‌, சில சாதாரண சில்லறை விடயங்களையும்‌ நான்‌ கற்க வேண்டியிருந்தது. கடைத்‌ தெருவில்‌ பேரம்‌ பேசுவது அவற்றில்‌ ஒன்று. சந்தையில்‌ நான்‌ ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பம்‌ மிகக்‌ குறைவே. எனக்கும்‌ வியாபாரத்‌ தந்திரங்கள்‌ புரியும்‌ என்பதை உணர்த்த வேண்டிய சந்தர்ப்பங்களும்‌ வந்தன. இதனால்‌ என்னை எளிதில்‌ ஏமாற்ற முடியாது என்பதையும்‌ புரிய வைத்தேன்‌.

3.3 வாழ்ககை முறையில்‌ நிகழ்ந்த மாற்றங்கன்‌

மதியும்‌ பிரபாகரனும்‌ 1984 ஒக்ரோபர்‌ முதலாம்‌ திகதி திருப்போரூர்‌ முருகன்‌ கோயிலில்‌ ஒரு எளிமையான சடங்கில்‌ திருமணம்‌ செய்து கொண்டார்கள்‌. அவர்களுக்கு ஒரு ஆண்‌ குழந்தை பிறந்தது. பிரபாகரனின்‌ நெருங்கிய தோழர்‌ ஒருவரின்‌ பெயர்‌ அந்தக்‌ குழந்தைக்குச்‌ சூட்டப்பட்டது; சாள்ஸ்‌ அன்ரனி சீலன்‌! சிறீலங்கா இராணுவத்துடன்‌ இடம்பெற்ற நேரடி மோதலில்‌ மிகத்‌ தொடக்கத்திலேயே வரச்சாவைத்‌ தழுவிக்கொண்ட இயக்கப்‌ போராளிகளில்‌ ஒருவரே சாள்ஸ்‌ அன்ரனி சீலன்‌. அதன்‌ பின்‌ மகள்‌ துவாரகா பிறந்தாள்‌. யாழ்ப்பாண இராணுவ நடவடிக்கை ஒன்றில்‌ உயிரிழந்த பெண்‌ போராளி ஒருவரின்‌ பெயரே துவாரகா. மதியின்‌ மெய்க்‌ காவலர்களில்‌ ஒருவராக இவர்‌ திகழ்ந்தவர்‌. மூன்றாவது ஆண்‌ குழந்தை பத்து ஆண்டுகள்‌ கழித்துப்‌ பிறந்தது. அக்‌குழந்தைக்கு பாலச்சந்திரன்‌ என்று பெயர்‌ சூட்டப்பட்டது. மதியின்‌ தம்பி பெயர்‌ அது. இந்திய இராணுவத்தால்‌ கொல்லப்பட்ட இயக்கப்‌ போராளி அந்த பாலச்சந்திரன்‌. போராட்டத்தில்‌ வீரச்சாவடைந்த இயக்கப்‌ போராளிகளின்‌ பெயர்களைத்‌ தங்கள்‌ பிள்ளைகளுக்குச்‌ சூட்டி மகிழ்வதை விடுதலைப்‌ புலிப்‌ போராளிகள்‌ தம்மிடையே ஒரு மரபாக்கியிருக்கிறார்கள்‌. இதன்‌ மூலம்‌ உறவினர்‌, நண்பர்‌, நெருங்கிய சகாக்கள்‌ ஆகியோரின்‌ நினைவையும்‌ வரலாற்றையும்‌ முன்னெடுத்துச்‌ செல்ல முனைகிறார்கள்‌.

மதியைத்‌ தனது மனைவியாகத்‌ தேர்ந்தெடுத்தது பிரபாகரன்‌ அவர்களுக்கு கிட்டிய மிகப்‌ பெரிய அதிர்ஷ்டம்‌ என்றே கூற வேண்டும்‌. திருமணமான இத்தனை ஆண்டுகளிலும்‌, மிகவும்‌ சோதனையான இடர்‌ படிந்த காலங்களில்‌ கூட, நிலையான ஆழமான அனபையும்‌ இனிமையான குடும்ப வாழ்வையும்‌ பிரபாகரன்‌ அவர்ளுக்கு மதி வழங்கியிருக்கிறார்‌. எனினும்‌ திருமண வாழ்வு என்பது மதிக்கு ஒரு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும்‌ யொறுமையும்‌ கொண்ட மதி, எத்தனையோ தடவைகளில்‌ மிகவும்‌ நெருக்கடியான துயர சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி இருந்தது. பிரபாகரன்‌ அவர்களது போராட்டப்‌ பணிகள்‌ காரணமாக தம்பதிகள்‌ இருவருக்கும்‌ மத்தியில்‌ நீண்ட காலப்‌ பிரிவுகளும்‌ ஏற்பட்டதுண்டு. இதனால்‌ திருமணமான புதிதில்‌, தனிமைத்‌ துயரை அவ்வப்போது அனுபவிக்கும்‌ கொடுமைக்கு மதி உள்ளானார்‌. வட-கிழக்கை இந்திய ராணுவம்‌ ஆக்கிரமித்திருந்த காலத்தில்‌ மதி பெரும்‌ மனத்‌ துயரங்களுக்கு முகம்‌ கொடுக்க நேர்ந்தது. இந்தியாவுக்கும்‌ புலிகளுக்கும்‌ இடையே போர்‌ தொடங்கியதும்‌, நல்லூர்க்‌ கந்தசாமி கோவிலில்‌ தமது பிள்ளைகளுடன்‌ அகதியாகத்‌ தஞ்சமடைந்தவர்களில்‌ மதியும்‌ ஒருவர்‌. அதன்‌ பின்னர்‌ மதி தமது பெற்றோரிடம்‌ பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு முல்லைத்தீவு மாவட்ட மணலாற்றுப்‌ பகுதியில்‌ அலம்பில்‌ காடுகளுக்குள்‌ தனது கணவருடன்‌ சேர்ந்து கொண்டார்‌. ஒரு புறம்‌ அவர்களுடைய அலம்பில்‌ முகாம்‌ மீது இடையறாது நடந்த பீரங்கி ஷெல்‌ அடி, தத்தி அடி வைக்கும்‌ மழலைப்‌ பாலரை விட்டுப்‌ பிரிந்த ஒரு இளம்‌ தாயின்‌ பிரிவுத்‌ துயர்‌, இனி, இந்திய இராணுவத்துக்கெதிரான மோதலில்‌, நெஞ்சார நேசித்த தம்பியைச்‌ சாகக்‌ கொடுத்த இழப்புத்‌ துயர்‌ - இவை எல்லாம்‌ மதியை வெகுவாகப்‌ பாதித்தன. பின்னர்‌ பிள்ளைகளோடு சேர்க்கப்பட்ட மதி, வெளிநாடு சென்று சுவீடனில்‌ வாழ்ந்தார்‌. சுவீடனில்‌ இரண்டு பிள்ளைகளுடன்‌ தலைமறைவான வாழ்க்கை. முன்பின்‌ அறிமுகம்‌ இல்லாத ஒரு கலாசாரம்‌, இடையறாத ஆபத்துக்கு மத்தியில்‌ வாழும்‌ கணவனிடம்‌ இருந்து பிரிவு. ஆதரவு தர நெருங்கிய உறவினர்‌ எவரும்‌ இல்லாது இருந்தமை. இவை எல்லாம்‌ மனச்சஞ்சலத்துக்கும்‌ மனச்‌ சோர்வுக்கும்‌ மதியை உள்ளாக்கின. பிரேமதாசா அரசுடன்‌ விடுதலைப்‌ புலிகள்‌ 1989 இலே பேச்சுவார்த்தையைத்‌ தொடக்கியபோது, இலங்கைக்கு மதி திரும்பிச்‌ செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா செய்தார்‌. இலங்கைக்கு நாம்‌ திரும்பிச்‌ சென்ற ஒரு பயணத்தின்போது மதியும்‌ பிள்ளைகளும்‌ சிங்கப்பூரில்‌ எம்மோடு சேர்ந்து கொண்டார்கள்‌. நாம்‌ கொழும்பு சென்றடைந்ததும்‌ அலம்பில்‌ காட்டுக்கு நாம்‌ செல்வதற்கு உலங்குவானூர்தி ஒன்றை பிரேமதாசா அரசு ஏற்பாடு செய்து தந்தது. இதனால்‌, 1989 இல்‌ மதி, திரும்பவும்‌ தமது கணவருடன்‌ இணைந்து கொண்டார்‌. திருமணமான நாளில்‌ இருந்து மதிக்கு ஒரு நிரந்தர வீடும்‌ இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்க்கையும்‌ கிடையாது. இருந்த போதிலும்‌ ஒரு கெரில்லாப்‌ படைத்‌ தலைவரின்‌ மனைவிக்கு உரிய துணிச்சலுடனும்‌, கண்ணியத்துடனும்‌ செயற்பட்டதோடு தமது பிள்ளைகளுக்கும்‌ ஒரு நிலையான, பாதுகாப்பான வாழ்வை வழங்குவதிலும்‌ அயராது பாடுபட்டார்‌. திருமணம்‌ புரிவதற்காக மதி எமது வீட்டிலிருந்து புறப்பட்ட கையோடு அங்கிருந்த மீதி இளம்‌ பெண்கள்‌ 1984 ஒக்ரோபரில்‌ திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ பெண்கள்‌ பிரிவுக்கான முதல்‌ ராணுவப்‌ பயிற்சித்‌ திட்டத்தில்‌ சேர்ந்து கொண்டார்கள்‌.

இளம்‌ பெண்களின்‌ பயிற்சி முகாம்‌ மதுரைக்கு இடமாற்றம்‌ பெற்றதும்‌, நாம்‌ வசித்த அந்தப்‌ பெரிய வீடு வெறிச்சோடிக்‌ காணப்பட்டது. அவ்வளவு பெரிய வீடு தேவையாகவும்‌ இருக்கவில்லை. எனவே எம்‌ இருவருக்கும்‌ அடக்கமான சிறிய வீடு ஒன்றைத்‌ தேடத்‌ தீர்மானித்தோம்‌. சென்னைப்‌ புறநகரான பெசன்ற்‌ நகரில்‌ கடலோரமாக கச்சிதமான இரண்டு படுக்கையறை மாடி வடொன்றை எமது நண்பர்‌ நேசன்‌ தேடிப்‌ பிடித்தார்‌. இங்கே, பாலா, தமது ஆழமான ஆசை ஒன்றுடன்‌ மீளத்‌ தொடர்பு கொண்டார்‌. இயற்கையுடன்‌ ஒன்றிப்‌ போகும்‌ ஆசையே அது. எனக்கும்‌ சிக்கல்‌ குறைந்த ஒரு சூழலில்‌ அமர்ந்து கடந்த ஆண்டின்‌ சிக்கல்களை ஒவ்வொன்றூக அவிழ்க்க வாய்ப்புக்‌ கிடைத்தது. இந்த வீட்டில்‌ மூன்றாமவர்‌ ஒருவரும்‌ எம்மோடு இணைந்து கொண்டார்‌. மெது நாய்‌ ஜிம்மியே அது. இடையிலே இரண்டே இரண்டு ஆண்டுகள்‌ மட்டும்‌ எம்மிடம்‌ இருந்து பிரிந்து வாழ்ந்த ஜிம்மி, தனது பதினைந்து ஆண்டு ஆயுட்‌ காலத்தின்‌ கடைசிச்‌ சில மாதம்‌ ரை, எம்முடனேயே சீவித்தது. அமைப்பின்‌ அலுவலகங்களில்‌ ஒன்றுக்கு ஒரு நாள பாலா போயிருந்தபோது, அங்கே தன்னைக்‌ கட்டிவைத்திருந்த சங்கிலியை அறுக்க முயன்று கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியைக்‌ கண்டிருக்கிறார்‌. அது சிறைப்படுத்தப்பட்டிருப்பதையும்‌ அதன்‌ முனகல்‌ முறுகல்களையும்‌ சகிக்க முடியாது, வீட்டுக்குக்‌ கொண்டுவந்திருக்கிறார்‌. அந்த மென்பந்து மூட்டையை என்னிடம்‌ நீட்டி “இது உமக்குத்‌ தான்‌; உமக்கு வீட்டுத்‌ துணையாக ஒரு நண்பன்‌,” என்று ஒப்படைத்தார்‌. அவர்‌ சொன்னது பலித்தது. ஜிம்மி ஒரு உண்மையான நண்பனாக மாறியது; வேண்டும்‌ என்று புரியாத சிறு கொடுமைகளையும்‌ மன்னித்தது; என்றுமே பொறுமை காத்தது; முழுமையாக என்னை நம்பியது. ஜிம்மி ஊடாகவே, விலங்கு உ லகத்தினூடாகப்‌ பயணம்‌ புரிந்தேன்‌. விலங்குகளை மதித்தேன்‌; இறுதியில்‌ சைவ உணவையே அருந்தத்‌ தொடங்கினேன்‌. ஓராண்டு ஆகிய பின்‌, இப்போது இந்த நாய்க்‌ குட்டியின்‌ கபடம்‌ இன்மை புத்துயிர்‌ அளித்தது; அத்தனுடைய தேவைகளை நிறைவேற்ற முற்பட்டபோது, எமது வீட்டுக்கு முன்பாக இருந்த கடற்கரையில் இயற்கையை அனுபவிக்கும்‌ வகையில்‌ கூடுதலான நேரம்‌ செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கும்‌ நாம்‌ உள்ளாக்கப்பட்டோம்‌.

இந்தியாவிலும்‌ சரி, இலங்கையிலும்‌ சரி, அன்றாட வாழ்க்கையில்‌ ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்னவென்றால்‌, அதிகாலையில்‌ துயில்‌ எழுவதே. இந்தியாவில்‌ சூரியோதயம்‌ என்பது பருவத்துக்குப்‌ பருவம்‌ மாறாது. ஒவ்வொரு நாளும்‌ காலையில்‌ 5:30 இற்கும்‌ 6:00 இற்கும்‌ இடையே சூரியன்‌ உதித்துவிடும்‌. ஆகவே துயில்‌ எழுவதில்‌ பிரச்சினை இராது. இங்கு காலை 3:30 இற்கே துயில்‌ எழுந்து விடுவார்கள்‌. காலையில்‌ 4:00 மணிக்கு விழிப்பதை நியாயமான நேரமாகக்‌ கொள்வார்கள்‌. பெண்கள்‌ அதிகாலையில்‌ எழுந்து, வீடு வளவைத்‌ துப்புரவாக்கி, காலை ஆகாரம்‌ தயாரிப்பது போன்றவற்றில்‌ ஈடுபடுவார்கள்‌. சிலர்‌ விடியு முன்‌ எழுந்து, பகல்‌ வெய்யில்‌ ஏறும்‌ முன்‌ எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வேலை செய்து முடிப்பார்கள்‌. மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு அதிகாலையில்‌ எழுந்து விடுவதே நல்லது என்ற கருத்தும்‌ உண்டு. ஆகவே மாணவர்கள்‌ அதிகாலைக்‌ குளிர்மையில்‌ எத்தனை மணிநேரம்‌ முடியுமோ அவ்வளவுக்குப்‌ படிப்பார்கள்‌. பலர்‌ காலையில்‌ விழித்தெழுந்து உடற்பயிற்சி செய்வார்கள்‌. எமது மாடி வீட்டின்‌ முன்பாக கடற்கரை வீதியில்‌ பெருந்தொகையானோர்‌ கிரமமாக உலா செல்வதும்‌ ஒரு நாளாந்த காட்சியே. கடற்கரையில்‌ காலைப்‌ பொழுது தனி. அலாதியானது. அடி வானில்‌ சூரியன்‌ மெதுவே எழுவதும்‌ கற்றை கற்றையாகத்‌ தனது ஒளியை வானில்‌ கோடுகளாக வீசுவதும்‌, சிறு சிறு அலைகள்‌ வெள்ளை மணலில்‌ மெதுவாக வருடூவதும்‌, எம்மை அந்த அமைதியிலே சேருமாறு காந்தம்‌ என அழைக்க, அந்த அழகு விதானத்துக்குள்‌ நாமும்‌ சென்று கடல்‌ நீரில்‌ கால்‌ நனைய நடப்போம்‌. சிறிது நேரம்‌ ஜிம்மியையும்‌ தனியே ஓடி உலாவ விடுவோம்‌. அந்தக்‌ குட்டியின்‌ பூரிப்பு அதன்‌ உடல்‌ பூராவும்‌ தெரியும்‌; மகிழ்ச்சியில்‌ அது தரையில்‌ உருண்டு புரண்டு ஓடுவது கொள்ளைக்‌ காட்சியாக இருக்கும்‌, எமக்கு ஏதாவது காலையில்‌ வேலை இருந்து கடற்கரைக்குச்‌ செல்ல முடியாது போய்விட்டால்‌ ஜிம்மியை அநேகமாக, மாலையில்‌ கூட்டிச்‌ செல்வோம்‌. கடற்கரையில்‌ எமக்கு வசதியான ஓர்‌ இடத்தில்‌ ஒரு சாப்பாட்டுக்‌ கடை; வகை வகையாகச்‌ சுவையான தமிழ்‌ உணவு; விலையும்‌ மலிவு; மாலையில்‌ எமது நண்பர்களைக்‌ கவர்ந்து இழுக்கும்‌ இடம்‌ அது… சூழலும்‌ இதமாக இருக்கும்‌. தமிழ்ப்‌ பாரம்பரிய கர்நாடக இசை, அருகே உள்ள கோவில்‌ ஒலிபெருக்கியில்‌ வெளியை நிரப்பும்‌. அரசியல்‌ சிக்கல்களால்‌ கொந்தளித்துப்‌ போயிருந்த எனது. உள்ளத்துக்கு, மாசற்ற இந்த இயற்கை உலகும்‌ அதன்‌ இயல்பான சூழலும்‌ சாந்தத்தை அளித்தன.

3.4 புதுடில்லியில்‌ புதிய நிர்வாகம்‌

இவை எல்லாவற்றிற்கும்‌ அப்பால்‌ எதிர்பாரா நிகழ்வுகளையும்‌ திருப்பங்களையும்‌ ஏற்படூுத்தியவாறு போராட்ட வரலாறு தொடர்ந்தது. இந்திரா காந்தி அவர்கள்‌ ஒக்ரோபர்‌ 1984 இல்‌ படுகொலை செய்யப்பட்டதும்‌ புதுடில்லியின்‌ அரசியல்‌ சூழலும்‌ திடீர்‌ மாற்றம்‌ கண்டது. ரஜவ்‌ காந்தி அவர்கள்‌ தமது தாயின்‌ இடத்தில்‌ பிரதம மந்திரி யாக அமர்ந்து நேரு குடும்ப ஆட்சியைத்‌ தொடர்ந்தார்‌. அரசியல்‌ முதிர்ச்சியும்‌ நடைமுறைத்‌ தேர்ச்சியும்‌ கொண்ட இந்திரா காந்தியின்‌ எதிர்பாராத திடீர்‌ மறைவு தமிழ்‌ விடுதலை இயக்கத்துக்கும்‌ ஒரு பேரிடியாக விழுந்தது. தமிழ்‌ மக்களின்‌ சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தின்‌ வரலாற்றையும்‌ அதன்‌ சிக்கலான பரிமாணங்கள்‌ பற்றியும்‌ ஆழமான புரிந்துணர்வு இந்திரா காந்தி அவர்களிடம்‌ இருந்தது. ஜெயவர்த்தனாவின்‌ ஓடுக்குமுறைக்‌ கொள்கைகளை அவர்‌ எதிர்த்தார்‌; ஒடுக்கப்பட்டவர்களின்‌ பரிதாப நிலை மீது அனுதாபம்‌ கொண்டவராக இருந்தார்‌. சிங்கள அரசுக்கு எதிரான தமிழ்‌ மக்களின்‌ ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை அவர்‌ ஆதரித்தார்‌. தமிழ்‌ மக்களின்‌ நியாயம்‌ மட்டில்‌ அவருக்கு அனுதாபம்‌ இருந்ததாலேயே தமிழ்ப்‌ போராளி இயக்கத்துக்கு ராணுவப்‌ பயிற்சி அளித்து, ஆயுதம்‌ வழங்கும்‌ துணிகர முடிவை திருமதி காந்தி மேற்கொண்டார்‌. இதன்‌ மூலம்‌ ஜெயவர்த்தனாவின்‌ ஆட்சிக்கு எதிராக பலமான ஒரு ஆயுத எதிர்ப்பு அணியைத்‌ தோற்றுவித்து, ஜெயவர்த்தனா அரசு தனது ராணுவ அடக்குமுறைக்‌ கொள்கையை கைவிட்டு, ஒரு நியாய அடிப்படையிலான அரசியல்‌ வழியைக்‌ கடைப்பிடிக்குமாறு அதை நீர்ப்பந்திக்கத்‌ துணிந்தார்‌.

புத்தி சாதுர்யம்‌ மிக்க பெருமாட்டியுடன்‌ இந்தியாவின்‌ புதிய பிரதம மந்திரியை ஒப்பிடும்போது, வெளிநாட்டுக்‌ கொள்கைகளை வழிநடத்தும்‌ நுண்ணிய சிக்கலான நடைமுறைகளில்‌, புதியவர்‌ ஒரு கற்றுக்‌ குட்டியே. இலங்கையில்‌ ஆயுதம்‌ தரித்த தமிழர்களின்‌ போராட்டத்திற்கு தீவிரமாக உதவும்‌ இந்தியாவின்‌ மறைமுக ஈடுபாட்டின்‌ புவியியல்‌, கேந்திர நோக்கங்களை, அனுபவமற்ற இளையவரான ரஜீவினால்‌ உடனடியாகப்‌ புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்‌ மக்களின்‌ அரசியல்‌ போராட்ட வரலாறு தொடர்பான அவருடைய அறிவு, சூனியமே. ஒடுக்கப்பட்ட தமிழ்‌ மக்கள்‌ அனுபவித்த கொடிய துயரையும்‌ அவர்‌ புரிந்து கொள்ளவில்லை. எனவே ஒரு நெகிழ்வற்ற தலையீட்டுக்‌ கொள்கையையே அவர்‌ கடைப்பிடித்தார்‌. இதனால்‌, போராளிகளுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்தி விடுவதற்கான தருணம்‌ வந்துவிட்டதாக ரஜீவ்‌ நிர்வாகம்‌ கருதியது. போர்‌ ஓய்வு ஒன்றை நடைமுறைப்படுத்தி, இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்‌ தீர்வு காணுமாறு போராளிகளை ணநிர்ப்பந்திக்கவும்‌ ரஜீவ்‌ நிர்வாகம்‌ தீர்மானித்தது.

ரஜீவ்‌ காந்தியின்‌ புதிய இந்திய நிர்வாகம்‌ கடைப்பிடித்த இந்தக்‌ கொள்கைத்‌ தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ்ப்‌ போராளி அமைப்புகளுக்கு இந்திய புலனாய்வு அதிகாரிகள்‌ அறிவுரை வழங்கினார்கள்‌. தனித்‌ தமிழ்‌ அரசுக்கான கோரிக்கையைக்‌ கைவிட்டு, இலங்கை அரசின்‌ ஒற்றையாட்சி அமைப்பினுள்‌ பேச்சுவார்த்தை மூலமான ஒரு அரசியற்‌ தீர்வை ஏற்க ஆயத்தமாக இருக்க வேண்டும்‌ என்றும்‌ ரஜீவ்‌ அரசு அறிவுரை வழங்கியது. அரசியல்‌ சுதந்திரத்துக்காகவும்‌ நாட்டு உரிமைக்காகவும்‌ பரப்புரை புரிந்து, படைதிரட்டி போராட்டம்‌ நடத்திய போராளிக்‌ குழுக்கள்‌ வெகுவாக மனம்‌ பேதலித்துப்‌ போயின. இந்தியாவின்‌ உள்ளார்ந்த திட்டம்‌ தொடர்பாக விடுதலைப்‌ புலிகளின்‌ தலைமை மட்டுமே தொடக்கத்தில்‌ இருந்து தெளிவான புரிந்துணர்வோடு இருந்தது. ஏனைய அமைப்புகள்‌ இந்தியா மீது அற்றை வரை நம்பிக்கை வைத்திருந்தன. கிழக்கு வங்காளிகளுக்கு பங்களாதேஷை உருவாக்கிக்‌ கொடுத்ததுபோல, தமிழ்‌ மக்களுக்கும்‌ சுதந்திர அரசு ஒன்றை இந்தியா வடிவமைத்துத்‌ தரும்‌ என்று நம்பியிருந்தார்கள்‌. தமிழ்‌ மக்களின்‌ போராட்த்துக்கு இந்தியா உதவுகிறது என்றால்‌, அது அரசுத்‌ தலைவர்‌ ஜெயவர்த்தனா மீது நெருக்குவாரத்தைக்‌ கொண்டு வந்து, தமிழ்‌ மக்களின்‌ பேரம்‌ பேசும்‌ பலத்தை அதிகரிப்பதேயன்றி, இலங்கையில்‌ தனித்‌ தமிழ்‌ அரசு ஒன்றை உருவாக்குவதற்கு அல்ல என்பதை விடுதலைப்‌ புலிகள்‌ தொடக்கத்தில்‌ இருந்தே ’அறிந்திருந்தார்கள்‌. ஆனால்‌, சிங்கள அரசு மட்டில்‌ ஒரு நல்லிணக்க அணுகு முறையை போராளி அமைப்புக்கள்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என்று இந்திய நிர்வாகம்‌ நெருக்கத்‌ தொடங்கியதும்‌, விடுதலைப்‌ புலித்‌ தலைவர்களிடையே ஆழமான ஏமாற்ற உணர்வே தோன்றியது. அமைதி முயற்சியைக்‌ கடைப்பிடிக்குமாறு இந்தியா கடுமையாக வற்புறுத்தத்‌ தொடங்கியதும்‌ போராளி அமைப்புகளிடையே அச்சம்‌ உருவானது. தந்திரம்‌ மிக்க “கிழட்டு நரி” ஜே.ஆர்‌ ஜெயவர்த்தனா, தமிழ்‌ மக்கள்‌ மட்டில்‌ நீதியாகவும்‌ நேர்மையாகவும்‌ நடந்து கொள்ள மாட்டார்‌ என்பது அவர்களுக்குத்‌ தெரியும்‌. தமிழ்‌ மக்களின்‌ இலட்சியத்துக்கும்‌ இந்தியாவின்‌ கேந்திர நலனுக்கும்‌ இடையே ஒரு பெரிய முரண்பாடு உருவாகுவதை பாலா உணர்ந்தார்‌. இத்தகைய முரண்பாட்டை எவ்வாறு தீர்த்து வைக்கலாம்‌ என்பதே. அவருடைய சிந்தனையை அப்போது குடைந்து கொண்டிருந்தது.

அதே சமயம்‌ இயக்கத்தின்‌ அரசியல்‌, ராணுவக்‌ கட்டமைப்பை விரிவாக்கும்‌ ஒரு பாரிய திட்டத்தை விடுதலைப்‌ புலிகள்‌ செயற்படுத்தத்‌ தொடங்கினார்கள்‌. தமிழ்‌ நாட்டில்‌ ஒதுக்குப்‌ புறமான காடுகளிலே பல ராணுவப்‌ பயிற்சிப்‌ பாசறைகளை பிரபாகரன்‌ ஏற்கனவே நிறுவியிருந்தார்‌. இதனால்‌, ராணுவப்‌ பயிற்சி பெறுவதற்காக, தமிழீழத்தில்‌ இருந்து இளம்‌ போராளிகள்‌ தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்‌. எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ சொரிந்த பெரும்‌ நிதியோடு விடுதலைப்‌ புலிகள்‌, வெளிநாடுகளில்‌ இருந்து ஆயுதங்களை வாங்கத்‌ தொடங்கினார்கள்‌. ஒரு தடவை எமது வீட்டு அறைகளில்‌ ஏ.கே 47 துப்பாக்கிகளும்‌ றொக்கற் விசிறி ஏறிகணைகளும்‌ நிரம்பி வழிந்தன. எமது அறையில்‌ ஆடைப்‌ பெட்டகத்தில்‌ ரூபாய்‌ நோட்டுகள்‌ கோடிக்கணக்கில்‌ அடுக்கப்பட்டு. இருந்தன. எமது அரசியல்‌ அலுவலகம்‌ நன்கு விரிவடைந்து, நன்கு நிறுவனமயமாக்கப்பட்டும்‌ இருந்தது. உலகம்‌ பூராவும்‌ உள்ள ஊடகவியலாளர்கள்‌ அங்கு அடிக்கடி வந்து போனார்கள்‌. இயக்கம்‌ தனது அதிகார பூர்வமான ஏட்டைத்‌ தமிழிலேயே வெளியிட்டுக்‌ கொண்டிருந்தது. விடுதலைப்‌ புலிகளின்‌ வெளியீட்டை ஆங்கிலத்திலே “வொய்ஸ்‌ ஓஃப்‌ ரைகர்ஸ்‌” என்ற பெயரில்‌ பிரசுரிக்க அதன்‌ தயாரிப்பிலும்‌, வெளியீட்டிலும்‌ நான்‌ பாலாவுக்கு உதவிக்‌ கொண்டிருந்தேன்‌. தமிழ்‌ நாட்டிலுள்ள அகதி முகாம்களுக்கு நான்‌ செல்வதற்கு இந்த வெளியீடே காரணமாக இருந்தது.

3.5 தமிழ்‌ நாபட்ரு அகதிகன்‌

இலங்கையிலிருந்து வந்த தமிழ்‌ அகதிகள்‌ ஒரு பாதுகாப்பான புகலிடமாகவே தமிழ்‌ நாட்டைக்‌ கருதி வந்திருக்கிறார்கள்‌. தங்களுடையதும்‌ தங்கள்‌ குடும்பத்தினருடையவும்‌ உயிர்களுக்கு அஞ்சி ஓடிய ஆயிரமாயிரம்‌ அகதிகளுக்கு, தமிழ்‌ நாட்டின்‌ மொழி, பண்பாடு, சமயம்‌ முதலானவை, “ஊருக்கு வெளியே ஊராக”, அமைந்திருந்தது. பல இலங்கைத்‌ தமிழ்‌ மக்கள்‌ தமிழ்‌ நாட்டிலே சிறிய வியாபராங்களைத்‌ தொடங்கி வீடு வாங்கி, நல்லபடியாக அங்கே குடியமர்ந்து இருக்கிறார்கள்‌. ஆனால்‌ பலருக்கு அந்த அதிர்ஷ்டம்‌ கிடைக்கவில்லை. மன்னார்த்‌ தீவின்‌ கரையோரத்தில்‌ வாழ்ந்த தமிழ்‌ மக்களில்‌ ஏறத்தாள இருபதாயிரம்‌ பேர்‌, 1985 முற்பகுதியில்‌, தங்கள்‌ பகுதியில்‌ சிறீலங்கா ராணுவம்‌ நடத்திய ஒடுக்குமுறைக்கு அஞ்சி, படகுகளில்‌ ஏறிப்‌ புலம்பெயர்ந்தார்கள்‌. வியந்னாமிய “படகு அகதிகளுக்குச்‌”” சமதையான தமிழ்‌ மக்களின்‌ படகு அகதிக்‌ கோலம்‌ இது. ஆனாதரவான, துயர்‌ தோய்ந்த இத்தனை பெருந்தொகைத்‌ தமிழ்‌ அகதிகள்‌ திடீரென்று தமிழ்‌ நாட்டுக்‌ கிழக்குக்‌ கரைகளிலே போய்‌ இறங்கிய போது, இத்தகைய பாரிய மனித அவலத்தைத்‌ தேற்ற தமிழ்‌ நாடு அதிகாரிகள்‌ ஆயத்தம்‌ எதுவும்‌ இல்லாது, வழி தெரியாது திகைத்தார்கள்‌. உள்ளூர்வாசிகள்‌ சூறாவளியால்‌ பாதிக்கப்பட்டபோது, காற்று மழையில்‌ இருந்து காப்பாற்றத்‌ தற்காலிகமாகக்‌ குடியேறும்‌ வட்ட வடிவிலான கட்டடங்கள்‌ கரை நீளம்‌ இருந்தன. மன்னாரில்‌ இருந்து வந்த தமிழ்‌ அகதிகளுக்கு அவையே வீடுகளாயின. தமிழ்நாடு கோவளத்துக்குப்‌ பயணம்‌ புரிந்து அவர்களுடைய நிலையைக்‌ கேட்டறிந்து, அவற்றின்‌ அடிப்படையில்‌, “புலிகளின்‌ குரலுக்கு” கட்டுரை எழுத தீர்மானித்தேன்‌.

உள்ளே அறைகள்‌ இல்லாத வட்ட வடிவக்‌ கட்டடங்களே இந்தச்‌ சூறாவளிக்‌ காப்பகங்கள்‌. தமிழ்நாடு கிழக்குக்‌ கரைநீளம்‌ இவை நிறுவப்பட்டு இருக்கின்றன. கரையோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்‌ காற்று சீறி அடிக்கும்போது, சுற்றிவர உள்ள கிராமத்தவர்களுக்குக்‌ காப்பிடமாக அமையும்‌ வண்ணம்‌ இவை நிறுவப்பட்டு இருந்திருக்கின்றன. இந்திரா காந்தி அவர்களுடைய மறைவுக்குப்‌ பின்னர்‌ 1984 இலே தமிழ்நாடு அத்தகைய ஒரு பேரிடரைச்‌ சந்தித்தது. நடுங்கச்‌ செய்யும்‌ இந்த இயற்கையின்‌ சீற்றத்தை நான்‌ நேரிலே கண்டிருந்தேன்‌. இந்தச்‌ சூறாவளி, தனது வழியில்‌ எதிர்பட்ட அனைத்தையும்‌ வேரோடு சாய்த்திருந்தது. இடுப்பளவு ஆழமான அழுக்கு நீரையும்‌ பரவியிருந்தது. சென்னையிலும்‌ அது வீறோடு சீறியடித்துக்‌ கடந்து சென்றிருந்தது. ஆகவே உறுதியான காப்பகங்கள்‌ தேவை என்பதை நான்‌ புரிந்து கொண்டேன்‌. அனால்‌ அவை அவசரகாலத்‌ தரிப்பிடங்களாக இருக்கவே பொருந்தும்‌. சூறாவளியின்‌ போதும்‌ பெருமழையின்போதும்‌ அவை. உதவும்‌. ஆனால்‌ அகதிகளை நிரந்தரமாகத்‌ தங்க வைக்க அவை போதுமானவை அல்ல. அந்தக்‌ கட்டடம்‌ ஒன்றுக்குள்‌ நுழைந்தபோது எனது இதயம்‌ உறைந்து போனது. எங்கும்‌ கூட்டம்‌ கூட்டமாக ஈக்கள்‌ மொய்த்துக்‌ கொண்டிருந்தன. அறைகள்‌ இல்லாத அந்தப்‌ பெருங்‌ கூடத்துக்குள்ளே குறுக்கு மறுக்காக கந்தல்களும்‌ பல. வண்ணச்‌ சேலைகளும்‌ கட்டப்பட்டிருந்தன. மனித வாழ்வின்‌ விசித்திரமே இதுதான்‌! கூட்டாக வாழுமாறு சூழ்நிலை மக்களைப்‌ பொது இடத்தில்‌ தள்ளியபோதும்‌ மக்கள்‌ தங்கள்‌ அடிப்படைச்‌ சமூக அலகை, அதாவது குடும்பத்தை நாடவே முற்படுகிறார்கள்‌. தனிமை காக்க வேண்டும்‌ என்ற பிடிவாதத்தோடு ஒவ்வொரு குடும்பமும்‌, சில அடி நீளம்‌ சில அடி அகலமானதாக இருந்தாலும்‌, தனக்கென ஒரு சிறு பகுதியைப்‌ பிரித்து - முடிச்சுப்‌ போட்ட சேலைகளால்‌ வேலிகளாகவும்‌ மேலிருந்து தொங்கும்‌ சேலைகளால்‌ சுவர்களாகவும்‌ அடைத்து, மந்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தியிருந்தது. இந்தத்‌ துணிச்‌ சுவர்களுக்கு உள்ளே ஜந்து, ஆறு, ஏழு, எட்டுப்‌ பேர்‌, இனி முதியவர்கள்‌, புதிதாக திருமணமானவர்கள்‌, பிறந்த குழந்தை இப்படி குடும்பத்தினர்‌ வாழத்‌ துடித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. மண்ணெண்ணய்‌ அடுப்பிலிருந்தும்‌ விறகு அடுப்பிலிருந்தும்‌, புகையும்‌ தீச்சுவாலையும்‌ அந்த இடத்தை ஆபத்தான- தாக உடல்‌ நலக்கேடானதாக ஆக்கியிருந்தது. மக்களோடு உரையாடி, இடத்தைச்‌ சுற்றிப்‌ பார்க்க முற்பட்டதும்‌ அங்கே இருப்பவர்களுக்குப்‌ போதுமான உணவு கிடைக்கவில்லை என்று கண்டு கொண்டேன்‌. குழந்தைகள்‌, உப்பிய வயிறோடு, எலும்பும்‌ தோலுமான கை காலோடு, செம்பட்டை பற்றிய கருங்கூந்தலோடு, எங்கும்‌ காணப்பட்டார்கள்‌. ஆதுவே பொது நியதியாக இருந்தது. காரணம்‌ பாலோ, பால்‌ மாவோ அங்கு கிடைப்பது அரிது. பால்‌ இல்லாத தேனிரில்‌ சிறிது சீனி கலந்து, அல்லது சோறுவடித்த கஞ்சியையே தாய்மார்‌ பாலர்க்கு ஊட்டினார்கள்‌. இருமல்‌, தடிமல்‌, ஒழுகும்‌ நாசி, காய்ச்சல்‌, சொறி, வயிற்றோட்டம்‌ ஆகியவை உடல்‌ நலப்‌ பிரச்சினைகளாக இருந்தன. ஆனால்‌ அங்கே மருந்து இருக்கவில்லை.

இந்த மனித அவலத்தைப்‌ பார்க்கும்போது குற்ற உணர்வும்‌ ஆற்றாமையும்‌ என்னைப்‌ பற்றிக்‌ கொண்டன. நானும்‌ அவர்களோடு ஒருவராக இல்லையே என்ற குற்றவுணர்வு; அவர்களுக்குக்‌ கொடுக்க என்னிடம்‌ எதுவும்‌ இல்லையே என்ற ஆற்றாமை உணர்வு. அதே நேரம்‌ அடக்க உணர்வும்‌ என்னை ஆட்கொண்டது. இந்த உணர்வை, இந்தியாவிலும்‌, இலங்கையிலும்‌ நான்‌ வாழ்ந்த அந்த நீண்ட காலப்‌ பகுதியில்‌, பல தடவை அனுபவித்திருக்கிறேன்‌. இவ்வளவு வறுமைக்கும்‌ துயரத்துக்கும்‌ மத்தியில்‌ கூட, இந்த மக்கள்‌ எப்படித்‌ தமது மனிதத்துவத்தைப்‌ பேணுதிறநார்கள்‌ என்பதும்‌, தங்கள்‌ கண்ணியத்தையும்‌ மரியாதை காட்டும்‌ பண்பையும்‌ காப்பாற்றுவதில்‌ எவ்வளவு கருத்தாக இருக்கிறார்கள்‌ என்பதும்‌ என்னை மலைக்க வைத்திருக்கிறது. இந்தத்‌ தடவை, பொருட்‌ தட்டுப்பாட்டையே எங்கும்‌ காண முடிந்தது என்றாலும்‌, தமிழ்‌ விருந்தோம்பலும்‌ தாராள மனப்பான்மையும்‌ அவர்களிடமிருந்து பீரிட்டு வெளியே வந்தன. சீனித்‌ தட்டுப்பாடு நிலவிய போதிலும்‌ தித்திப்பான தேனீரோடு எம்மை உபசரித்தார்கள்‌. யாரோ, அன்று தமது பங்கை எமக்கு மனம்‌ உவந்து கொடை புரிந்து விட்டு, தாம்‌ வயிறு காய்ந்து இருப்பார்‌.

இந்த மனிச அவலத்தை ஒரு கட்டுரை வடிவிலே செய்தித்‌ தாளுக்கு எழுதுவது எனக்கு வெகு இலகுவாக இருந்தது. ஆனால்‌ மனதை உருக வைத்த அந்த அவலக்‌ காட்சிகளை நெஞ்சில்‌ இருந்து நீக்குவது இலகுவாக இருக்கவில்லை. ஏனென்றால்‌, மிக மோசமான நிலையிலேயே அந்த மக்கள்‌ அங்கே வாழ்ந்து கொணடிருந்தார்கள்‌. பச்சைப்‌ பாலரில்‌ நான்‌ கண்ட நோய்‌ அறிகுறிகள்‌ எனக்கு கவலை அளித்தன. நாம்‌ எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அவர்களில்‌ இந்த அகதிகளும்‌ ஒரு பகுதியே. ஆகவே இந்தப்‌ பிரச்சினையை ஒதுக்கி விட்டு அப்பால்‌ நகர எனக்கு இயலவில்லை. ஒரு விடுதலை இயக்கமானது, அரசியல்‌ ராணுவ முனைகளில்‌ நின்று போராட்டம்‌ நடத்துவது போல, தான்‌ பிரதிநிதித்துவப்படூத்தும்‌ மக்களின்‌ நலன்கள்‌ மீது அக்கறை எடுக்கவும்‌ கடமைப்பட்டிருக்கின்றது. இயக்கத்தின்‌ செலவுகளை நிர்வகிக்கும்‌ போது நுணுக்கமாகக்‌ கணக்குப்‌ பார்த்துத்தான்‌ பிரபாகரன்‌ அவர்கள்‌ செலவைக்‌ கட்டுப்படுத்தி வைத்திருப்பது எனக்குத்‌ தெரியும்‌. ஆனாலும்‌ எனக்காக 5000 ரூபா சிறு தொகையை ஒதுக்கித்‌ தர அவர்‌ மறுக்க மாட்டார்‌ என்பதும்‌ எனக்குத்‌ தெரியும்‌. எனவே அவர்‌ எங்களைப்‌ பார்க்க வந்தபோது, பிரச்சினையை அவரிடம்‌ எடுத்துக்‌ கூறினேன்‌. இந்த ஒரு முகாமுக்காவது சில உணவுப்‌ பொருட்களும்‌ மருந்தும்‌ வாங்க நிதி வழங்குமாறு கேட்டேன்‌. அவர்‌ உடனடியாகச்‌ சம்மதித்தார்‌. மட்டக்களப்புச்‌ சிறையிலிருந்து தப்பி வந்த மருத்துவர்‌ ஜெயகுலராஜா, அகதி முகாம்களுக்கு என்னோடு கூடி வந்து நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப்‌. பரிசோதிக்க உற்சாகமாக ஒப்புக்‌ கொண்டார்‌. நிதிகள்‌ சேர்ந்தன; நன்கொடைகள்‌ திரண்டன: வேலை பெருகியது. எங்கள்‌ குழு தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அகதி முகாம்களைத்‌ தரிசித்தது. இறுதியில்‌ எமது பணியை ஓர்‌ ஒழுங்கமைப்புக்குள்‌ கொண்டு வரத்‌ தீர்மானித்தோம்‌. அந்த அமைப்புக்கான யாப்பை பாலா எழுதினார்‌. எமது பணி, தமிழர்‌ புனர்வாழ்வுக்‌ கழகம்‌ என்ற பெயரில்‌ அறக்கொடை அமைப்பாகப்‌ பதிவாகியது. தமிழ்‌ நாட்டில்‌ உள்ள ஆயிரமாயிரம்‌ இலங்கைத்‌ தமிழ்‌ அகதிகளுக்கு உதவி புரிவதே கழகத்தின்‌ நோக்கம்‌ ஆகியது. மருத்துவர்‌ ஜெயக்குலராஜா கழகத்தின்‌ தீவிர தொண்டர்‌ ஆனார்‌. காலம்‌ செல்ல, நிர்வாகம்‌, திட்டமிடல்‌, திட்ட நடைமுறை ஆகியவற்றின்‌ பொறுப்புகள்‌ மற்றவர்களிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. இப்பொழு தமிழர்‌ புனர்வாழ்வுக்‌ கழகம்‌ ஒரு வலுவான அமைப்பாக வளர்ந்து விட்டது. தனித்து இயங்கும்‌ அறக்கொடை அமைப்பாகச்‌ செயற்படுகிறது. இலங்கை வடக்கு-கிழக்கில்‌ தங்கள்‌ தாயகத்திலேயே வீடு வாசல்‌ இழந்து இடம்பெயர்ந்த ஆயிரம்‌ ஆயிரம்‌ தமிழ்‌ க்ப்‌ பல வகை உதவிகளைப்‌ புரிந்து கொண்டு இருக்கிறது.

இந்தியா பல புதிர்களையும்‌ முரண்பாடுகளையும்‌ கொண்ட நாடு. இந்திய சமூக வாழ்க்கை தொடர்பாக, வெளியாரைத்‌ திகைக்க வைக்கும்‌ மிகவும்‌ புதிரான முரண்பாடு என்னவென்றால்‌, பணக்காரருக்கும்‌ ஏழைகளுக்கும்‌ இடையேயுள்ள பாரிய ஏற்றத்தாழ்வே. இந்தியாவில்‌ இனி இல்லை என்ற பணக்காரர்‌ ஒரு புறம்‌; படுமோசமான ஏழைகள்‌ மறுபுறம்‌. எதிரும்‌ புதிருமான இந்தப்‌ படுகேடான வேறுபாட்டுக்கு, நடூவே பலம்‌ மிக்க நடுத்தர வகுப்புகள்‌. மிக மோசமான வறுமை பற்றிய வர்க்க ஆய்வை நான்‌ இங்கே நடத்த வரவில்லை. இந்தியாவில்‌ ஒப்பற்ற குபேரர்‌ ஒரு புறமும்‌, வறியவரிலும்‌ வறியவர்‌ மறுபுறமும்‌ உள்ள ஒரு பயங்கரச்‌ சூழல்‌ நிலவுகிறது என்பதையே அடித்துக்‌ கூற விரும்புகிறேன்‌. இந்தியாவிலே, தமிழ்‌ அகதிகள்‌, நெருக்கியடித்துக்‌ கொண்டு, மனிதாபிமானம்‌ மறுக்கப்பட்ட நிலையில்‌ வாழ்வது என்னை வெகுவாகப்‌ பாதித்தது என்பது உண்மையே ஆனாலும்‌ குமிழ்‌ நாட்டின்‌ வறிய நிலையும்‌ மனதைப்‌ பாதிப்பதே. எனது மனதில்‌ பதிந்த ஒரு சம்பவம்‌, இன்றும்‌ நெருடலாக வருகிறது.

பெசன்ற்‌ நகரில்‌ உள்ள எமது மாடி வீட்டில்‌ இருந்து கொண்டே உலகம்‌ உருள்வதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கலாம்‌. சமூக அந்தியையும்‌ வறுமையையும்‌ நினைவூட்டும்‌ சம்பவம்‌ ஏதாவது கண்முன்னே நடந்து கொண்டே இருக்கும்‌. ரு நாள்‌ மாலை சோம்பலோடு, சிந்தனையில்‌ ஆழ்ந்தபடியே யன்னலருகே நின்று வெளியே பார்த்துக்‌ கொண்டு நின்றேன்‌. தூரத்தில்‌ ஒரு ஓட்டி உலர்ந்த உருவம்‌. நடைபாதையில்‌ தள்ளாடியபடியே நகர்ந்து கொண்டிருந்தது. உருவம்‌ கிட்ட வர, முப்பது வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞனை அடையாளம்‌ காண முடிந்தது. வாரப்படாத நீண்ட தலைமுடி. விலா எலும்புகள்‌, ஓட்டிய தோலில்‌ புடைத்துக்‌ கொண்டிருந்தன. மெலிந்த, நீண்ட முடியுடைய தோற்றம்‌, நிழற்படங்களிலும்‌ கோவில்களிலும்‌ பார்க்கும்‌ யேசு கிறிஸ்துவின்‌ சிலையைப்‌ பார்க்கும்‌ ஞாபகத்தை ஏற்படுத்தியது. வீதியில்‌ வழி வழியே நிறுத்தி வைக்கபட்ட பீப்பா போன்ற குப்பைத்‌ தொட்டிகளுக்கு அருகே அவன்‌ அடிக்கடி நிற்பதை உணர்ந்தேன்‌. நல்ல தெளிவாகப்‌ பார்க்க முடிந்தபோது, அந்தக்‌ குப்பைத்‌ தொட்டிகளில்‌ வீசப்பட்ட எச்சில்‌ உணவை அவன்‌ தேடுவதைக்‌ கண்டேன்‌. குப்பைத்‌ தொட்டிகளில்‌ மனிதர்‌ எச்சில்‌ உணவு தேடுவது இந்தியாவில்‌ புதுமை அல்ல. ஆனால்‌ நான்‌ அங்கே பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ காட்சி எனது மனதை விட்டு அகலவேயில்லை. அந்த இளைஞன்‌, கடைசியாக எங்கள்‌ மாடிக்கு அருகே உள்ள குப்பைத்‌ தொட்டியை நோக்கி நகர்ந்தான்‌. அதே நேரம்‌ வேறு புறத்திலிருந்து ஒரு பசுவும்‌ மேய்ந்தபடி அங்கே வந்தது. இருவரும்‌ ஒரே நேரத்தில்‌ அந்தக்‌ குப்பைத்‌ தொட்டியை அடைந்தார்கள்‌. அங்கே நாற்றம்‌ எடுத்துக்‌ கொண்டிருக்கும்‌ அழுகலை இருவரும்‌ பகிர்ந்து உண்டார்கள்‌. குப்பைக்குள்‌ இருந்து கிளறி எடுத்த உணவு மீதங்களை அந்த இளைஞன்‌ கடித்துக்‌ கொண்டிருக்க, தொட்டியின்‌ மறுபுறத்தில்‌ அந்தப்‌ பசு தனது வாயில்‌ அகப்பட்டதை மென்று கொண்டிருந்தது. வறுமையின்‌ கொடுமையாக, கையறு நிலையாக, மானிட அவமதிப்பாக, இந்தக்‌ காட்சி எனது மனதை இன்றும்‌ குடைகிறது.

3.6 ஒற்றுமையும்‌ பிரிவும்‌

சிக்கல்களும்‌ திருப்பங்களும்‌ நிறைந்த தனியான ஆண்டாக 1985 அமைந்தது. தமிழ்ப்‌ போராளி அமைப்புகள்‌. தம்மிடையே உறவு பேணிய போதிலும்‌ சரி, இந்திய இலங்கை அரசுகளுடன்‌ தொடர்பு கொண்டதிலும்‌ சரி, புதிய அரசியல்‌ ராஜதந்திர சவால்களுக்கு முகம்‌ கொடுக்க நேர்ந்தது. இளையவரான ரஜீவ்‌ காந்தி, இந்தியாவின்‌ பிரதம மந்திரியாக பதவி ஏற்ற பின்‌, ஆட்சி அமைப்பிலே தமக்கு நம்பிக்கையானவர்களையே பதவியில்‌ அமர்த்தினார்‌. அவருடைய தாயாருக்கு விசுவாசமாக இருந்து அவருடன்‌ பல்லாண்டு பணி புரிந்த ஆற்றலும்‌ அனுபவமும்‌ மிக்க சிலரைப்‌ பதவியில்‌ இருந்து அகற்றினார்‌. ஆற்றல்‌ மிக்க தமது ஆலோசகர்‌ சிறீ. பார்த்தசாரதி இருந்த இடத்தில்‌, அனுபவம்‌ அற்றவரும்‌ அவசரக்‌ குடூக்கையுமான நெமேஷ்‌ பண்டாரியை வெளியுறவுச்‌ செயலராக அமர்த்தியதால்‌ புதிய பிரதமர்‌ பெருந்தவறு இழைத்தார்‌. பார்த்தசாரதி, ஒரு அனுபவமும்‌ ஆற்றலும்‌ மிக்க ராஜதந்திரி. இலங்கை இன நெருக்கடி தொடர்பான ஆழமான அறிவும்‌ கொண்டவர்‌. ஜே. ஆர்‌ ஜெயவர்த்தனா அரசின்‌ இனவாதப்‌ போக்கை அவர்‌ வெறுத்தார்‌: தமிழ்‌ மக்களின்‌ தர்ம நிலைப்பாட்டில்‌ அனுதாபம்‌ கொண்டார்‌. பிரபாகரன்‌ அவர்களும்‌ பாலாவும்‌ புதுடில்லி போகும்போதெல்லாம்‌ அவர்களைத்‌ தமது பிரத்தியேக, சொந்த வீட்டிலே சந்திப்பதில்‌ அவர்‌ எப்போதும்‌ குறியாய்‌ இருந்தார்‌. பார்த்தசாரதி அவர்கள்‌ ஜெயவர்த்தனாவை நம்பவில்லை என்றும்‌ அந்தக்‌ “கிழட்டு நரியின்‌” ஏமாற்றும்‌ இயல்பு பற்றி ரஜீவை எச்சரித்திருந்தூர்‌ என்றும்‌ பாலா என்னிடம்‌ கூறியிருக்கிறார்‌. ஆனால்‌ பார்த்தசாரதி அவர்களுடைய உறுதியான அறிவுரையை ரஜீவ்‌ புறக்கணித்ததும்‌, குறைத்து மதிப்பிட்டதும்‌ இறுதியில்‌ அவரைத்‌ தூக்கி எறிந்ததும்‌ துரதிர்ஷ்டவசமே. புதுடில்லி அதிகார பீடத்தில்‌ இருந்த இரண்டு பலம்‌ மிக்க பெரியார்களான இந்திராகாந்தியும்‌, பார்த்தசாரதியும்‌ போனதால்‌, முன்‌ யோசனை இன்றிச்‌ செயலாற்றுபவரும்‌, அனுபவம்‌ அற்றவருமான ரஜீவை, தனது அரசியல்‌ ஏமாற்று வலையில்‌ வீழ்த்துவது ஜெயவர்த்தனாவுக்கு எளிதாயிற்று. சாணக்கியம்‌ மிக்க ஜெயவர்த்தனா, தந்திரமாக பண்டாரி மூலம்‌ ரஜீவைக்‌ கவர்ந்திழுத்து, தமிழரின்‌ விடுதலைப்‌ போராட்டத்துக்கு எதிராக இந்திய அரசை மாற்றும்‌ தந்திர முயற்சியில்‌ வெற்றி கண்டார்‌.

ரஜீவ்‌ காந்திக்கும்‌ ஜெயவர்த்தனாவுக்கும்‌ இடையே உருவாகும்‌ இந்த அதர்மக்‌ கூட்டுறவை தமிழ்‌ நாட்டிலே முகாமிட்டிருந்த தமிழ்‌ விடுதலை அமைப்புகள்‌ வியப்போடும்‌ சந்தேகத்தோடும்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தன. அவர்களுடைய எதிர்காலமே நூலிழையில்‌ ஊசலாடியது. இந்தச்‌ சம்பவங்களை பாலா மிகவும்‌ உன்னிப்பாக கவனித்த வண்ணம்‌ இருந்தார்‌. இந்தியா தனது அதிகார பலத்தைப்‌ பயன்படுத்தி, ஆயுதம்‌ பூண்ட தமிழ்‌ அமைப்புகள்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்தப்‌ போகிறது என்று அவர்‌ எதிர்பார்த்தார்‌. அத்துடன்‌ சுய நிர்ணயத்துக்கான போராட்டத்தை அவர்கள்‌ கைவிட்டு, சிறீலங்கா அரசின்‌ ஜக்கிய அமைப்புக்குள்‌ ஓர்‌ அரசியல்‌ இணக்கத்துக்கு வருமாறு அவர்களை இந்தியா நிர்ப்பந்திக்கும்‌ ஒரு சூழல்‌ உருவாகப்‌ போகிறது என்றும்‌ முன்கூட்டியே அவர்‌ அனுமானித்தார்‌.

இந்திய அரசுடன்‌ முரண்படூுவதை எவ்வாறு தவிர்க்கலாம்‌ என்பது பாலாவுக்குத்‌ தலைவலியாக இருந்தது. அதே சமயம்‌ சுய நிர்ணயம்‌, அரசி யல்‌ சுதந்திரம்‌ ஆகிய இலட்சியங்களைக்‌ கொண்ட விடுதலைப்‌ புலிகளின்‌ அரசியல்‌ திட்டத்தை முன்னெடுப்பதிலும்‌ பாலா குறியாக இருந்தார்‌. இந்தியா பிராந்திய வல்லரசு என்பது எமக்குத்‌ தெரியும்‌. இனப்‌ பிரச்சனையின்‌ தீர்வை உறுதிப்படுத்தும்‌ விடயத்தில்‌ அது ஒரு முக்கிய பங்கு வகிக்கும்‌ என்பதும்‌ எமக்குத்‌ தெரியும்‌. இந்த நிலையில்‌ இந்தியாவுடன்‌ உறவு நலிவடைந்தால்‌ அது பேரிடராகவே முடியும்‌ என்பதும்‌ எமக்குத்‌ தெரியும்‌. பிரபாகரன்‌ அவர்களும்‌ பாலாவும்‌ அரசாங்க மூத்த தலைவர்களை, கட்சித்‌ தலைவர்களை, அமைச்சர்களை, புலனாய்வுப்‌ பிரிவுகளின்‌ உயர்‌ அதிகாரிகளை ஓடி ஓடிச்‌ சந்தித்து, தமிழ்‌ மக்களின்‌ சுய நிர்ணய உரிமைக்காக வாதாடிய போதும்‌ பதில்‌ சாதகமாக அமையவில்லை. சிங்கள அரசின்‌ இனப்படுகொலை வடிவான ஓடுக்கு முறைக்கு எதிராகப்‌ போராடும்‌ தமிழ்‌ மக்களின்‌ துயர்‌ நிலை தொடர்பாகச்‌ சில பகுதிகளில்‌ அனுதாபம்‌ நில விய போதும்‌, இந்தியா தனது அண்டை அயலில்‌ பிரிவினை தலைதூக்குவதை எதிர்த்தது. அப்படி எதிர்க்க வேண்டியதற்கான உள்நாட்டு நிர்ப்பந்த நிலைகளும்‌ இருந்தன. இந்தியாவிடம்‌ இருந்து எமக்கு நெருக்குவாரம்‌ வரப்போவது உறுதியாகத்‌ தெரிந்தது. இந்திய அரசுக்கும்‌ தமிழ்‌ விடுதலை இயக்கத்துக்கும்‌ இடையே நலன்‌ முரண்பாடு ஏற்படுவது சாத்தியம்‌ ஆகியது. இந்த நிலையில்‌ தமிழ்‌ அமைப்புகள்‌ ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டை வலியுறுத்துவது அவசியம்‌ என்று பாலா உணர்ந்தார்‌. இந்தியா, விரைவிலே தனது அரசியல்‌ ராஜதந்திர சவாலை விடுக்கும்‌ போது, விடுதலைப்‌ புலிகளால்‌ அதை அந்த நேரம்‌ தனித்து நின்று எதிர்க்க முடியாது என்று அவர்‌ கருதினார்‌. ரெலோ, ஈ.பி.ஆர்‌.எல்‌.எஃப்‌, ஈரோஸ்‌ ஆகியவற்றிடையே ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்‌.எல்‌.எஃப்‌) என்ற கூட்டணி ஒன்று 1984 இல்‌ இருந்து செயற்பட்டு வந்தது. இக்‌ கூட்டணியுடன்‌ விடுதலைப்‌ புலிகளும்‌ சேர்ந்து தமிழ்‌ மக்களின்‌ ஆயுத எதிர்ப்பு இயக்கத்தைப்‌ பலப்படுத்தி, தமிழ்‌ மக்களின்‌ சுயநிர்ணயப்‌ போராட்டத்துக்குப்‌ பெரும்‌ பலம்‌ சேர்க்க வேண்டும்‌ என்று பாலா கருதினார்‌. எல்லாவற்றிற்கும்‌ மேலாக, ஒரு பொதுவான. அரசியல்‌-ராணுவ கொள்கைத்திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்‌ விடுதலை அமைப்புகளின்‌ ஒற்றுமை உருவாக்கப்பட்டால்‌ ரஹஜவின்‌ நிர்வாகத்திடமிருந்து அரசியல்‌-ராஜதந்திரச்‌ சவால்‌ வரும்போது, அந்தப்‌ பொதுத்‌ திட்டம்‌ ஒரு காரிய சாத்தியமான கவசமாக இருக்கும்‌ என்பது பாலாவின்‌ கருத்தாகும்‌.

ஈழ தேசிய விடுதலை முன்னணியுடன்‌ சேருமாறு, பிரபாகரன்‌ அவர்களை பாலா இறுதியில்‌ ஒருவாறு இணங்கவைத்தார்‌. இந்தக்‌ கூட்டமைப்பின்‌ தலைவர்களுடன்‌ பாலா இது தொடர்பாகக்‌ கலந்துரையாடினார்‌. விடுதலைப்‌ புலிகளைத்‌ தமது கூட்டுக்குள்‌ சேர்ப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அமைப்புகளிடையேயான இந்த ஐக்கியம்‌, நாள்‌ எடுத்து, படிப்படியாக உடடியெழுப்பப்படவேண்டும்‌ என்று முடிவாகியது. தொடக்கத்தில்‌ குறித்த சில அரசியல்‌ இலக்குகள்‌ தொடர்பாக நான்கு அமைபகளும்‌ இணங்க வேண்டி௰ிருந்தன. இதன்‌ பின்னர்‌ தனியான ஒரே ராணுவ அமைப்பையும்‌, இறுதியாக நிதியையும்‌ ஒரு மத்திய நிர்வாக முறைக்குள்‌ கொண்டுவர முயல்வது என்றாயிற்று. ஜக்கிய முன்னணியை உறுதிப்படூத்துவதற்கான பேச்சுவார்த்தை, ஒரு வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்த சந்திப்புக்கு வழி கோலியது. விடுதலைப்‌ புலிகளின்‌ பிரபாகரன்‌, ரெலோவின்‌ சிறீசபாரத்தினம்‌, ஈ.பி.ஆர்‌.எல்‌.எஃப்‌ பத்மநாபா, ஈரோஸ்‌ பாலகுமார்‌ ஆகிய தலைவர்களின்‌ சந்திப்பே அது. சென்னையில்‌ ஓர்‌ ஓய்வு விடுதிக்‌ கூடம்‌ ஒன்றிலே 1985 ஏப்ரலில்‌. இந்த இரகசி யச்‌ சந்திப்பு நடந்தது. இச்‌ சந்திப்பின்போது தமிழீழ மக்களின்‌ அரசியல்‌ சுதந்திரத்துக்காகப்‌ போராடுவதென்ற பொதுவான அரசியல்‌ திட்டத்திலும்‌, ஒரு கூட்டுப்‌ பிரகடனத்திலும்‌ நான்கு தலைவர்களும்‌ கைச்சாத்திட்டார்கள்‌.

அதே சமயம்‌, இந்திய வெளியுறவுச்‌ செயலர்‌ பண்டாரியின்‌ அடுத்தடுத்த கொழும்புப்‌ பயணமும்‌ அவருக்குப்‌ பயனளித்தது. இந்தியாவில்‌ இருந்த தமிழ்ப்‌ போராளி அமைப்புகளுடன்‌ நேரடிப்‌ பேச்சுவார்த்தையில்‌ ஈடுபட சிறீலங்கா அரசுத்‌ தலைவர்‌ ஜெயவர்த்தனா சம்மதித்தார்‌. இதற்குப்‌ பதிலாக, தமிழ்ப்‌ போராளிகளுக்கு ராணுவ உதவி புரிவதை இந்தியா நறுத்த வேண்டும்; அத்துடன், தனி நாட்டுக்கான அவர்களுடைய கோரிக்கையையும் இந்தியா எதிர்க்க வேண்டும்‌ என்பன பந்றியும்‌ அவர்களிடையே இணக்கப்பாடு ஏற்பட்டது. தமிழ்ப்‌ போராளிக்‌ குழுக்களுக்கு இந்தியா இராணுவப்‌ பயிற்சியையும்‌ ஆயுதங்களையும்‌ வழங்கி வந்தது உண்மையே. ஆனால்‌ அது, நான்‌ ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, இந்தியாவின்‌ ஆதிக்க ராஜதந்திரக்‌ கொள்கையின்‌ ஒரு அம்சமேயாகும்‌. ஆயினும்‌, இலங்கைத்‌ தீவில்‌ தனி நாடு தொடர்பாகத்‌ தமிழ்‌ மக்கள்‌ விடுக்கும்‌ கோரிக்கை பற்றி ஜெயவர்த்தனா விதித்த நிபந்தனை தொடர்பாக, இந்தியாவுக்கு எதுவித மறுப்பும்‌ இருக்கவில்லை. பிரிவினைவாதம்‌ மட்டில்‌, இந்தியா என்றுமே அனுதாபம்‌ காட்டியதில்லை. தமிழ்க்‌ குழுக்களுடன்‌ பேச்சுவார்த்தைப்‌ பேரம்‌ பேச ஜெயவர்த்தனாவை பண்டாரி இணங்க வைத்த கையோடு, ஆயுதம்‌ தரித்த விடுதலை அமைப்புக்களை மிரட்டிப்‌ பணிய வைக்க இந்திய அரசு ஆயத்தமானது.

விடுதலைப்‌ புலிகள்‌ ஈழத்‌ தேசிய விடுதலை முன்னணியில்‌ இணைந்து கொண்டதை உடனடுத்து, 1985 ஏப்பிரல்‌/ மே காலப்பகுதியில்‌ தமிழ்‌ விடுதலை அமைப்புகளுக்கும்‌ சிறீலங்கா அரசுக்குமிடையே போர்‌ ஓய்வு பற்றி ஆராயப்பட்டது. இது 1985 ஜீனில்‌ நடைமுறைப்‌ படுத்தப்பட்டது. இதன்‌ பின்‌ 1985 ஜீலை/ ஓகஸ்டில்‌ பேச்சுவர்த்தைக்கும்‌ திட்டம்‌ இடப்பட்டது. இந்தியாவின்‌ ஆதரவின்‌ கீழ்‌ பூட்டான்‌ தலைநகர்‌ திம்புவில்‌ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்திய அரசின்‌ அனுசரணையுடன்‌ 1985 இல்‌ தமிழ்‌ அரசியல்‌ அமைப்புகளுக்கும்‌ சிறீலங்கா அரசுக்கும்‌ இடையே நடந்த இந்தப்‌ பேச்சுவார்த்தை “திம்புப்‌ பேச்சுவார்த்தை” என்று அழைக்கப்பட்டது.

தமிழ்‌ மக்களின்‌ அரசியல்‌ வரலாற்றிலே ஒரு முக்கிய நிகழ்வாகத்‌ திம்புப்‌ பேச்சுவார்த்தை அமைந்தது. முதற்‌ தடவையாக ஆயுதம்‌ தரித்த தமிழ்‌ விடுதலை அமைப்புகளும்‌, மிதவாத அரசியல்‌ கட்சியான தமிழர்‌ விடுதலைக்‌ கூட்டணியும்‌ தமிழ்த்‌ தேசியப்‌ பிரச்சிை னயின்‌ அடிப்படைகள்‌ அங்கீகரிக்கப்படவேண்டும்‌ என்று, கூட்டாகவும்‌ ஏகமனதாகவும்‌ கேட்கத்‌ தீர்மானித்தன. தமிழ்‌ மக்கள்‌ அனைவரும்‌ ஏகோபித்த குரலாக முன்வைத்த சுயநிர்ணய உரிமைக்‌ கோரிக்கையைத்‌ தங்கள்‌ தேசியப்‌ பிரச்சனையின்‌ அடி ஆதாரக்‌ கோரிக்கையாக முன்வைப்பது என்றும்‌ தீர்மானிக்கப்பட்டது. அரசியல்‌ தீர்வுக்கான அந்த உரிமையின்‌ அடிப்படையில்‌, இனப்பிரச்சினையின்‌ அடி நாதமாக நான்கு கோட்பாடுகளைத்‌ தமிழ்ப்‌ பிரதிநிதிகள்‌

முன்வைத்தார்கள்‌; -

  1. தமிழ்‌ மக்கள்‌ தம்மை ஒரு தேசிய இனமாக வரித்துக்‌ கொள்கிறார்கள்‌
  2. தமிழ்‌ மக்களுக்கு வரலாற்று ரீதியாக அடையாளம்‌ காட்டக்கூடிய ஒரு தாயகம்‌ உண்டு; அதன்‌ மீது அவர்களுக்கு பிரத்தியேக உரிமை உண்டு
  3. தமிழ்‌ மக்கள்‌ தனித்துவமான தேசிய இனம்‌ என்ற வகையில்‌ அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு
  4. தமிழ்‌ மக்களுக்கு அனைத்து அடிப்படை மனித உரிமைகளும்‌ குடியியல்‌ உரிமைகளும்‌ உண்டு

இந்தக்‌ கோட்பாடுகள்‌ அங்கீகரிக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ தமிழ்ப்‌ பிரதிநிதிகள்‌ வாதிட்டார்கள்‌. அத்துடன்‌ தமிழ்த்‌ தேசிய பிரச்சனைக்கான அர்த்தமுள்ள நிரந்தரத்‌ தீர்வானது இந்த அடிப்படைகள்‌ மீது வகுக்கப்பட்டதாக வேண்டும்‌ என்று சிறீலங்கா அரசுக்குத்‌ தெளிவா- கத்‌ தெரிவித்தார்கள்‌.

திம்புவில்‌, சிறீலங்கா அணிக்குத்‌ தலைமை தாங்கியவர்‌ ஒரு மூத்த அரசியல்வாதியல்லர்‌. அரசுத்‌ தலைவர்‌ ஜுனியஸ்‌ ஜெயவர்த்தனாவின்‌ சகோதரரும்‌ சட்டத்தரணியுமான ஹெக்ரர்‌ ஜெயவர்த்தனாவே தலைமை தாங்கினார்‌. தமிழரின்‌ அணியினால்‌ முன்வைக்கப்பட்ட பிரதான கோட்பாடுகளை ஏற்றுக்‌ கொள்ள ஹெக்ரர்‌ ஜெயவர்த்தனா மறுத்தார்‌. தமிழ்‌ மக்கள்‌ ஒரு தேசிய இனம்‌. என்பதையோ, அவர்களுக்கெனத்‌ தனியான பாரம்பரியத்‌ தாயகம்‌ உண்டு என்பதையோ, சுய நிர்ணய உரிமைக்கு அவர்கள்‌ உரித்தானவர்கள்‌ என்பதையோ ஏற்றுக்‌ கொள்ள முடியாதவை என்று அவர்‌ நிராகரித்தார்‌. தமிழ்‌ அணி முன்வைத்த கோட்பாடுகள்‌ சிறீலங்காவின்‌ ஐக்கியத்தையும்‌ இறையாண்மையையும்‌ நிராகரிப்பதால்‌, அவற்றைச்‌ சிறிதேனும்‌ ஏற்க முடியாது என்று அவர்‌ வாதிட்டார்‌. சிறீலங்கா அரசும்‌ சரி, தமிழ்‌ அரசியல்‌ அமைப்புகளும்‌ சரி, தங்கள்‌ தங்கள்‌ நிலையிலே விடாப்பிடியாக நின்று விட்டுக்‌ கொடாது உறுதியாக நின்றதால்‌ பேச்சுவார்த்தை முடக்கம்‌ அடைந்தது. நடூவராக நின்ற பண்டாரிக்கு, பேச்சுவார்த்தை நடத்தும்‌ திறனோ ராஜதந்திர மதியூகமோ இல்லாததால்‌, அவரால்‌ இணக்கம்‌ ஒன்றைக்‌ கொண்டுவர முடியவில்லை. மாறாக அவையடக்கமற்ற குறிப்புகளை அவர்‌ வெளியிட்டு, ரெலோவின்‌ பிரதிநிதியாகத்‌ திம்புப்‌ பேச்சுவார்த்தையில்‌. கலந்து கொண்ட நடேசன்‌ சத்தியேந்திரா அவர்களிடம்‌ செம்மையாக வாங்கிக்‌ கட்டிக்‌ கொண்டார்‌.

திம்புப்‌ பேச்சுவார்த்தையில்‌ புலிகளின்‌ பிரதிநிதிகளாகக்‌ கலந்து கொண்ட திலகருடனும்‌ அன்ரனுடனும்‌ தொலைபேசி மூலம்‌ பாலா அடிக்கடி தொடர்பு வைத்துக்‌ கொண்டார்‌. பூட்டான்‌ தலைநகருக்கும்‌. சென்னைக்கும்‌ இடையே நேரடித்‌ தொலைத்‌ தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. தமிழ்‌ நாட்டில்‌ உள்ள ஈழத்‌ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்‌.எல்‌.எஃப்‌) தலைவர்கள்‌ திம்புவில்‌ உள்ள தங்கள்‌ பிரதிநிதிகளுடன்‌ உடனுக்குடன்‌ தொடர்பு கொள்ள இது வாய்ப்பாக இருந்தது. இந்தியப்‌ புலனாய்வாளர்கள்‌ ஓட்டுக்‌ கேட்பதற்கு இந்த நேரடித்‌ தொலைபேசி பெரும்‌ வாய்ப்பாக அமைந்தது. இந்த வாய்ப்பு பாலாவுக்குக்‌ கிடைத்தமை எமக்குக்‌ கெடுதியாகவே முடிந்தது. தமிழ்‌ நாட்டில்‌ உள்ள ஈ.என்‌.எல்‌.எஃப்‌ தலைவர்களுக்கும்‌ திம்புவில்‌ உள்ள அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும்‌ இடையே என்ன உரையாடல்‌ நடக்கிறது என்பதை அறிய இந்திய வெளியுறவுப்‌ புலனாய்வுப்‌ பிரிவான “றோ? மிக ஆர்வமாக இருக்கும்‌ என்பது பாலாவுக்குத்‌ தெரியும்‌. ஆகவே ஈ.என்‌.எல்‌.எஃப்‌ தலைமைப்பீடத்தின்‌ முடிவுகள்‌ மற்றும்‌ நகர்வுகள்‌ தொடர்பான பின்னணிச்‌ சிந்தனைகள்‌ என்ன என்பதைத்‌ தவிர்த்து, வெறும்‌ செய்திகளை மட்டுமே பாலா அறிவித்துக்‌ கொண்டிருந்தார்‌. திம்புப்‌ பேச்சுவார்த்தை முறிவு அடையும்‌ கட்டத்தை எய்திக்‌ கொண்டிருந்தபோது, 1985 ஓகஸ்ட்‌ 17ம்‌ நாளன்று வடபுல நகரமான வவுனியாவில்‌ பயங்கரப்‌ படுகொலை ஒன்று நடந்தது. வெறிகொண்ட ராணுவத்தினர்‌ தமிழ்ப்‌ பொதுமக்கள்‌ பலரை வெட்டிச்‌ சரித்தார்கள்‌. இது போர்‌ நிறுத்த ஒப்பந்தத்தை முற்றிலும்‌ மறுவதாக அமைந்தது. திம்புப்‌ பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு, போர்‌ நிறுத்த ஒப்பந்தம்‌ ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது. பிரபாகரன்‌ அவர்கள்‌ சீற்றம்‌ கொண்டார்‌; கடும்‌ நடவடிக்கையினை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டார்‌. இச்‌ சம்பவத்திற்கு ஆட்சேபம்‌ தெரிவித்து திம்புப்‌ பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுமாறு இயக்க பிரதிநிதிகளுக்கு அறிவிப்பதென பிரபாகரன்‌ அவர்களும்‌ ஈ.என்‌.எல்‌.எஃப்‌ இன்‌ ஏனைய குலைவர்களும்‌ கூட்டாக முடிவெடுத்தார்கள்‌. நேரடித்‌ தொலைபேசி மூலமாக இந்தச்‌ செய்தியை ஈ.என்‌.எல்‌.எஃப்‌ பிரதிநிதிகளுக்கு அறிவிக்குமாறு பாலா கேட்கப்பட்டார்‌. பாலாவும்‌ அப்படியே செய்தார்‌. ஆறு தமிழ்‌ அரசியல்‌ அமைப்புகளின்‌ பிரதிநிதிகளும்‌ திம்புப்‌ பேச்சுவார்த்தையில்‌ இருந்து கூட்டாக வெளியேறினார்கள்‌. இதன்‌ விளைவாக பேச்சுவார்த்தை முறிவடைந்தது. புது டில்லி சீற்றம்‌ அடைந்தது. திம்புப்‌ பேச்சுவார்த்தை முறிவடைய விடுதலைப்‌ புலிகளின்‌ ஆலோசகரே காரணர்‌ என்று “றோ? முடிவு கட்டியது.

3.7 பாலா நாருகடத்தர்பட்டார்‌

எமது பயிற்சிப்‌ பாசறைகள்‌ பல தமிழ்‌ நாட்டிலே நன்கு நிறுவப்பட்டு இருந்தன. இந்தியா எம்‌ மட்டில்‌ கடுமையாக நடக்கத்‌ தீர்மானித்து, தமிழ்‌ நாட்டில்‌ நாம்‌ இருப்பதையே எமக்கு எதிராகப்‌ பயன்படுத்தி அரசியல்‌, ராஜதந்திர நெருக்குவாரத்தை பிரயோகிக்க முற்பட்டால்‌ அது எம்மைப்‌ பெரிதும்‌ பாதிக்கும்‌ என்பதை நாம்‌ உணர்ந்திருந்தோம்‌. ஒரு புறம்‌ நொமேஷ்‌ பண்டாரி கொழும்பை மிரட்டி, தமிழ்ப்‌ போராளிகளுக்கு மேலும்‌ உதவி வழங்கப்‌ போவதாகக்‌ கூறிக்‌ கொண்டிருக்க, மறுபுறம்‌, பயிந்சிப்‌ பாசறைகளைக்‌ கலைத்து, தமிழ்‌ நாட்டிலிருந்து வெளியேற்றப்‌ போவதாக மிரட்டி போராளிக்‌ குழுக்களைக்‌ கொழும்புடன்‌ பேச இசையுமாறு புதுடில்லி அவர்களை நிர்பந்தித்துக்‌ கொண்டிருந்தது. திம்புப்‌ பேச்சுவார்த்தைக்கு முன்னரே இப்படியான நிலை ஏற்படலாம்‌ என்று விடுதலைப்‌ புலிகளிடமும்‌ புது டில்லியில்‌ இருந்த ஏனைய போராளி அமைப்புகளிடமும்‌ மூத்த இந்திய அதிகாரிகள்‌ கூறியிருந்தார்கள்‌. திம்புப்‌ பேச்சுவார்த்தையில்‌ இருந்து நாம்‌ வெளியேறி, பேச்சுவர்த்தையே பொசுக்கென்று முறிந்து விட்டதால்‌, இந்தியாவின்‌ அதிருப்தியை நாம்‌ சம்பாதித்து விட்டோம்‌ என்று நாம்‌ உணர்ந்திருந்தோம்‌. திம்புப்‌ பேச்சுவார்த்தை முறிவு, புதுடில்லிக்கும்‌ தமிழ்‌ போராளி அமைப்புக்களுக்கும்‌ இடையே பிளவை ஏற்படுத்தி இருந்தது. தனது மத்தியஸ்த்தப்‌ பங்களிப்பு, சூழ்ச்சியால்‌ தகர்க்கப்பட்டதாக இந்தியா கருதியது. தெற்கு ஆசியாவிலே தனது வல்லரசு அந்தஸ்திற்கு தமிழ்‌ ஆயுதக்‌ குழுக்களே அவமானம்‌ ஏற்படுத்துவதாகவும்‌ இந்தியா கருதியது. ஏதாவது தண்ட நடவடிக்கை மூலம்‌ தனது அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தும்‌ என்று நாம்‌ எதிர்பார்த்தோம்‌. என்ன நடக்கும்‌ என்பது பற்றி, பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே நானும்‌ பாலாவும்‌ பேசியிருந்தோம்‌. பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்‌, என்ன நடக்கப்‌ போகிறதோ என்று சிந்தித்துக்‌ கொண்டிருந்தோம்‌. அது தவிர, ஈ.என்‌.எல்‌.எஃப்‌ தலைமையிடம்‌ இருந்து திம்புப்‌ பிரதிநிதிகளுக்குச்‌ செய்திகளையும்‌ அறிவுரைகளையும்‌, அவர்களுடைய அனுசரணையின்படி பாலா அனுப்பிக்‌ கொண்டிருந்ததை “றோ?” தவறாகப்‌ புரிந்து கொண்டிருந்தது என்பது எமக்குத்‌ தெரியும்‌. இதன்‌ பலன்‌ விரைவிலே தெரிந்தது.

இந்திய அரசு எம்மை நாடு கடத்தக்‌ கூடும்‌ என்பதை அன்று மதிய உணவின்போது விவாதித்திருந்தோம்‌. அன்று வெயில்‌ அகோரம்‌. பாலா ஒரு குட்டித்‌ தூக்கம்‌ போட்டு எழுந்தார்‌. முகம்‌ கழுவி, உடுத்திக்‌ கொண்டு அலுவலகம்‌ போகத்‌ தயாராகிக்‌ கொண்டிருந்தபோது, எமது மாடிக்கு முன்னே நிறைய காவற்துறை ஜீப்‌ வண்டிகள்‌ வந்து நின்றன. காக்கிச்‌ சீருடை தரித்த காவற்துறையினர்‌ வெளியே குதித்து, அந்தப்‌ பகுதியை. சுற்றி வளைத்தபதுபோல, வேறு வேறு நிலைகளில்‌ நின்றார்கள்‌. காவல்‌ அதிகாரிகள்‌ அணி ஒன்று படி ஏறி வந்து கதவைத்‌ தட்டியது. ஓர்‌ இக்கட்டான அல்லது அசெளகரியமான சந்தர்ப்பத்தில்‌, ஓர்‌ இசகு பிசகான செய்தியைத்‌ தெரிவிக்க, ஒரு பொருத்தமான ஆளைத்‌ தெரிவு செய்து அனுப்புவது ஒரு பொது மரபு. ஆகவே இதற்காக ஜம்போ குமார்‌ அவர்கள்‌ தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டிருந்தார்‌. பாலாவின்‌ நண்பர்‌ இவர்‌. தமிழ்‌ நாடு, புலனாய்வுப்‌ பிரிவைச்‌ சேர்ந்தவர்‌; 1983 இல்‌ சென்னைக்கு நாம்‌ வந்ததில்‌ இருந்து, எம்மோடு பழக்கம்‌. இந்திய அரசின்‌ கடுமையான ஒரு நடவடிக்கையை நோகாது புரிவதற்காக, ஒரு காவற்துறை அணியோடு அவர்‌ அனுப்பப்பட்டிருந்தார்‌. பாலாவுக்கு எதிராக நாடு கடத்தல்‌ கட்டளை பிறப்பிக்கப்‌ பட்டிருப்பதாக மிகவும்‌ வருத்தத்துடனும்‌ மரியாதையுடனும்‌ அவர்‌ எடுத்துக்‌ கூறியது, கட்டளை- யின்‌ குரூரத்தைக்‌ குறைத்தது. பாலாவும்‌ நானும்‌ ஒருவரை ஒருவர்‌ பார்த்துக்‌ கொண்டோம்‌. வருவது வரட்டும்‌ என்பதுபோல பதட்டம்‌ எதுவுமின்றி, காவல்‌ அதிகாரிகளுடன்‌ பாலா வெளியே சென்றார்‌. லண்டனுக்குச்‌ செல்லும்‌ அடுத்த விமானம்‌ வரும்‌ வரைக்கும்‌ காவல்துறைக்‌ காவலில்‌ இருக்க அவர்‌ புறப்பட்டுச்‌ சென்றார்‌.

துரிதமாகவும்‌ தீர்க்கமாகவும்‌ பாலாவின்‌ கைது இடம்‌ பெற்றது. திடீரென எமது மாடிக்குக்‌ காவல்‌ துறைப்‌ பிரிவு வந்தது; அவரைக்‌ கதவுக்கு வெளியே அழைத்துச்‌ சென்றது. மறுகணம்‌ அவர்‌ சென்றுவிட்டார்‌. ஆனால்‌ எனது நிலை என்ன என்பது அரச கட்டளையில்‌ கூறப்படவில்லை. ஆகவே, நாடு கடத்தல்‌ கட்டளையில்‌ நான்‌ இல்லை என்று புரிந்து கொண்டேன்‌. உடனடியாக ஒரு முச்சக்கர வண்டியில்‌ ஏறி, பிரபாகரன்‌ அவர்களுக்கும்‌ ஏனைய போராளிகளுக்கும்‌ அறிவிப்பதற்காக அரசியல்‌ பணிமனைக்கு விரைந்தேன்‌. பயிற்சி முகாம்களில்‌ இருந்த பிரபாகரன்‌ அவர்கள்‌ உடனே தலைமறைவானார்‌. குண்டனை நடவடிக்கை அவருக்கு எதிராகவும்‌ எடுக்கப்படலாம்‌ என்று நாம்‌ எதிர்பார்த்ததே அதற்குக்‌ காரணம்‌.

பாலாவைப்‌ பந்றிய செய்திக்காகவும்‌ அவர்‌ நாடுகடத்தப்படும்‌ நேரத்தை அறியவும்‌ அடையாறில்‌ உள்ள அரசியல்‌ பணிமனையில்‌ காத்திருந்தேன்‌. ஒழுங்கான சட்ட முறையைக்‌ காவற்துறை கடைப்பிடிக்கும்‌ என்றும்‌, அவர்‌ எங்கே வைக்கப்பட்டிருக்கிறூர்‌ என்பது போன்ற விபரங்களை வழங்கும்‌ என்றும்‌ நான்‌ பைத்தியக்காரத்தனமாக நம்பிக்‌ காத்து நின்றேன்‌. இருளத்‌ தொடங்க எனது மனக்கலவரம்‌ அதி- கரித்தது. அவர்‌ எங்கே என்று அறிவிக்கப்படாததால்‌, பயங்கரக்‌ கற்பனைகளும்‌ மனதில்‌ தோன்றின. ஒரு விபத்து நடக்கவில்லை என்றோ, அவர்‌ கொல்லப்படவில்லை என்றோ எப்படி நம்புவது? ஏனென்றால்‌ நாம்‌ சம்பந்தப்பட்ட அரசியல்‌ அத்தகையது. எனது நல்ல காலம்‌, பாலாவிடம்‌ அரசியல்‌ பாடம்‌ படித்த போராளிகள்‌ சிலர்‌ அரசியல்‌ பணிமனையில்‌ பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்‌. எனக்கு உசகுவ அவர்கள்‌ தயாராக இருந்தார்கள்‌. நம்பிக்கையான, விசுவாசமான நண்பர்கள்‌ என்பதையும்‌ நிரூபித்தார்கள்‌. எம்மை எமது வீட்டில்‌ இருந்து அரசியல்‌ பணிமனைக்கு ஒவ்வொரு நாளும்‌ கூட்டிச்‌ செல்லும்‌ குரு என்ற போராளியை வழியில்‌ கண்டேன்‌. அவரையும்‌ கூட்டிக்‌ கொண்டு மரீனா கடற்கரைக்கு முன்பாக உள்ள புலனாய்வுக்‌ காவல்‌ துறை .(“கியூ? பிரிவுத்‌) தலைமைப்‌ பணிமனைக்கு விரைந்தேன்‌. அங்கே போய்ச்‌ சேர்ந்தபோது இருட்டிவிட்டது. எனது உள்மனமும்‌ இருட்டாகவே இருந்தது. மற்றவர்களுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டு, தனியாக வைக்கப்பட்டிருந்த பாலாவை எப்படி நடத்தினார்களோ என்பது ஒரு கவலை. அதைவிட, வீட்டில்‌ இருந்து போகும்‌ போது அவர்‌ இன்சுலின்‌ மருந்து கொண்டு போகவில்லையே என்பது இன்னொரு கவலை. காவற்துறைப்‌ புலனாய்வுத்‌ திணைக்களத்தைச்‌ சென்றடைந்த போது, கொதியுடன்‌ போனேன்‌. பாலா எங்கே என்று அறிய வேண்டும்‌; அவரைப்‌ பார்க்க அனுமதி பெற வேண்டும்‌. இனி, அவர்‌ மட்டில்‌ அவர்களுடைய திட்டம்‌ என்ன என்பதை அறிந்தே தீர்வது என்று உறுதியும்‌ பூண்டிருந்தேன்‌. காவல்‌ அதிகாரிகளுடன்‌ முதற்தடவையாக நேர்‌ நேராக மோதுவதற்காக, இப்போது தான்‌ போய்க்‌ கொண்டிருந்தேன்‌. எனக்குள்ளே ஒரே கொதி. பாலாவை அவர்கள்‌ கடத்திக்‌ கொண்டு போய்‌, தொடர்பு கொள்ள விடாது அவரை ஒளித்து வைத்திருப்பது ஓர்‌ அத்துமீறலாகப்‌ பட்டது. சட்டக்‌ கடமையில்‌ இருந்து அவர்கள்‌ தவறி விட்டார்கள்‌ என்ற உணர்வே எனக்குள்‌ பொங்கி நின்றது. ஒரு மனோதர்ம ஓழுக்க பலத்தை அது எனக்குத்‌ தந்தது. பாலாவைப்‌ பற்றி நான்‌ முதலில்‌ விசாரிக்கத்‌ தொடங்கியபோது, பதிலாக மெளனமே எனக்குக்‌ கிடைத்தது. நான்‌ யாரைப்‌ பற்றிப்‌ பேசுகின்றேன்‌ என்பது காவற்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்‌. ஆனாலும்‌ பாலாவைப்‌ பற்றி நான்‌ விசாரித்ததும்‌, என்ன நடந்தது என்றோ அவர்‌ எங்கே என்றோ தமக்கு எதுவும்‌ தெரியாது என்றே எல்லோரும்‌ சாதித்தார்கள்‌. அஹிடம்‌ கேள்‌, இவரிடம்‌ கேள்‌ என்று தட்டிக்‌ கழித்த வண்ணம்‌ அலைத்தார்கள்‌. என்னுடைய நல்ல காலம்‌, தமிழ்நாடு காவநீதுறையின்‌ புலனாய்வுப்‌ பிரி வின்‌ தலைவரை எனக்குத்‌ தெரியும்‌. முதலமைச்சர்‌ எம்‌.ஜீ இராமச்சந்திரன்‌ அவர்களுக்காக அவர்‌ அரசை எவ்வாறு நடத்திக்‌ கொண்டிருந்தார்‌ என்பதும்‌ எனக்குத்‌ தெரியும்‌. ஆகவே எமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கு நிச்சயம்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. எனவே, எனக்குத்‌ தெரிந்த ஓர்‌ காவற்துறை அதிகாரியை அங்கே. கண்டதும்‌, அவரை மடக்கினேன்‌. மேல்மாடி அலுவலகத்தில்‌ இருக்கும்‌ பெரியவரிடம்‌ சென்று பாலாவுக்கு ஏதாவது இசகு பிசகாக நடந்தால்‌ அவரையே பொறுப்பாளியாக நான்‌ குற்றம்‌ சுமத்துவேன்‌ என்றும்‌, இது தொடர்பாக, செய்தியாளர்‌ மாநாடு ஒன்றைக்‌ கூட்ட எண்ணியிருக்கிறேன்‌ என்றும்‌ அவரிடம்‌ தெரிவிக்குமாறு, நிர்தாட்சண்யமாகக்‌ கூறினேன்‌. எனது மிரட்டல்‌ எப்படியாவது தனது வேலையைச்‌ செய்யும்‌ என்பதில்‌ எனக்குச்‌ சந்தேகமே இல்லை. நான்‌ கூறிய ஏதோ ஒன்று அவர்களை மிரள வைத்திருக்க வேண்டும்‌. மேலே சென்ற அந்த அதிகாரி, தமது உயர்‌ அதிகாரிகளுடன்‌ கலந்தாலோசித்து விட்டு, கீழே வந்தார்‌. காவந்துறைக்‌ காவலிலே பாலா இருப்பதாகக்‌ கூறினார். ஆயினும் அவரை விடுதலை செய்ய முடியாது என்றார்‌; பாலாவுக்கு நான் இன்சுலின் கொண்டு போகலாம்‌ என்றும்‌, அவ்வாறு செல்லும்‌ பட்சத்தில்‌ பாலா வெளியேற்றப்படும்‌ வரை நானும்‌ கரவலில்‌ இருக்க வேண்டும்‌ என்றும்‌ அவர்‌ நிபந்தனை விதித்தார்‌. இதற்கு நான்‌ உடனே இணங்கினேன்‌.

இந்தச்‌ சம்பவத்தில்‌ இருந்து ஒன்றை மனப்பூர்வமாக உணர்ந்தேன்‌. காவல்‌ நிலையங்களில்‌ அல்லது ராணுவ முகாம்களில்‌ காணாமற்‌ போகும்‌ உறவுகளைத்‌ தேடி அங்கே போகின்றவர்களுக்கு எங்கே திரும்பினாலும்‌ மெளனமே விடையாக எதிர்கொள்ளும்‌ போது, பெருந்‌ தொகையான அந்த சாதாரண மக்கள்‌ படும்‌ துயரம்‌, அச்சம்‌, ஆற்றாமை ஆகியவை எவ்வளவு ஆழமானவை என்பதை எனது அன்றைய அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ புரிந்து கொண்டூள்ளேன்‌. சிறீலங்காவில்‌ இத்தகைய சம்பவங்கள்‌ எத்தனையோ இடம்‌ பெற்றிருக்கின்றன அல்லவா?

தயாராக நின்ற காவற்துறைச்‌ சிற்றுந்து ஒன்றினுள்‌ உடனடியாகத்‌ தாவினேன்‌. அது எமது வீட்டுக்குச்‌ சென்றது. பாலாவின்‌ இன்சுலினையும்‌ ஒன்றிரண்டு துணிமணிகளையும்‌ நான்‌ திரட்டியதும்‌. பாலா காவலில்‌ இடப்பட்டிருந்த இடத்துக்கு என்னைக்‌ கொண்டு போனார்கள்‌. அவருடைய சிறைக்‌ கூண்டு என்று நான்‌ நினைத்திருந்தது ஒரு புதிய இரண்டடுக்கு மாடியில்‌ ஓர்‌ அறையாகும்‌. எனக்கு இது வியப்பாக இருந்தது. சென்னைப்‌ புந நகரில்‌ ஒதுக்குப்‌ புறமாக அந்த வீடு இருந்தது. சிறை இல்லாத சாதாரண வடு ஒன்றிலே அவரை ஏன்‌ சிறை வைத்திருக்க வேண்டும்‌ என்பது அப்போது எனக்குப்‌ புதிராக இருந்தது. ஆனால்‌, சட்டத்துக்குப்‌ புறம்பான விசாரணைக்காக, அனாமதேய வீடுகளை, புலனாய்வு, மற்றும்‌ காவற்துறையினர்‌ அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்‌ என்பதை அனுபவம்‌ எனக்குக்‌ கற்பித்திருக்கிறது. வீட்டை நாம்‌ நெருங்கும்‌ போது, அந்தக்‌ கட்டடத்தையும்‌ அந்தப்‌ பகுதியையும்‌ நூற்றுக்‌ கணக்கான காவலர்கள்‌ காவல்‌ புரிவது எனக்கு மலைப்பாக இருந்தது. வீட்டுக்கு உள்ளே கூட, எங்கே பார்த்தாலும்‌ காவற்துறையினர்‌. மேல்மாடி அறை ஒன்றிலே பாலா தனியாக இருந்தார்‌. அவர்‌ கவலையுடனோ மனச்‌ சஞ்சலத்துடனோ அங்கு காணப்படவில்லை. என்னைக்‌ கண்டதில்‌ அவருக்கு மகிழ்ச்சி. ஆனால்‌ தம்மிடம்‌ இன்சுலின்‌ இல்லையே என்ற கவலை மட்டுமே இருந்தது. அவர்‌ சிறிது கூடத்‌ துன்புறுத்தப்படவில்லை. உண்மையில்‌ நிலைமை நேர்மாறாக இருந்தது. அவருடைய நண்பரான காவல்துறை அதிகாரி ஜம்போ குமார்‌, அவரை மிகவும்‌ நன்றாகக்‌ கவனித்துக்‌ கொண்டிருந்தார்‌. . விடுதலைப்‌ புலிகள்‌ வீட்டை முற்றுகையிட்டு பாலாவை மீட்டுக்‌ கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில்‌ பாதுகாப்பு நடவடிக்கையாகவே பலத்த பாதுகாப்பு முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பேசும்‌ போது அவர்‌ கூறினார்‌.

லண்டன்‌ செல்லும்‌ அடுத்த முதல்‌ விமானம்‌ மறுநாள்‌ மாலையிலேயே புறப்படும்‌ என்று கூறினார்கள்‌. எனவே, நாமும்‌ தொடர்ந்து காவலில்‌ இருந்தோம்‌. பாலா புறப்படுவதற்கு சில மணிநேரம்‌ முன்னதாக மீண்டும்‌ என்னை எமது வீட்டுக்கு கொண்டு சென்றார்கள்‌. பாலாவுடைய கடவுச்‌ சீட்டையும்‌ ஒன்றிரண்டு துணிமணிகளையும்‌ எடுத்தேன்‌. நான்‌ விரும்பினால்‌, நானும்‌ பாலாவுடன்‌ லண்டன்‌ போகலாம்‌ என்றார்கள்‌. ஆனால்‌ நான்‌ மறுத்து விட்டேன்‌. தமிழ்‌ நாட்டையோ போராட்டத்தையோ விட்டுச்‌ செல்ல நான்‌ விரும்பவில்லை. என்மீது நாடு கடத்தல்‌ கட்டளை எதுவும்‌ இல்லை. ஆகவே போகப்‌ போவதில்லை என்று நான்‌ தீர்மானித்தேன்‌.

திம்புப்‌ பேச்சுவார்த்தை முறிவடைந்தது தொடர்பாக இந்தியா வின்‌ அதிருப்தி வெளிப்பாடாகவே பாலாவின்‌ நாடுகடத்தல்‌ கட்டளை அமைந்திருப்பதாக நான்‌ உணர்ந்தேன்‌. பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தை ஏற்படுத்த ரஜீவ்‌ நிர்வாகம்‌ உண்மையாக விரும்பினால்‌, பாலா திருப்பி அழைக்கப்படுவார்‌ என்றும்‌ நான்‌ கருதினேன்‌. இந்தியாவில்‌ நான்‌ தங்க வேண்டும்‌ என்றே பாலா விரும்பினார்‌. இரண்டு வார காலத்தில்‌ தான்‌ இந்தியா திரும்பி விடுவேன்‌ என்றும்‌ நம்பிக்கையோடு கூறினார்‌. விமான நிலையத்துக்கு புறப்படுவதற்கு சற்று முன்பாகத்‌ தம்மை விடுதலைப்‌ புலிகளின்‌ அரசியல்‌ பணிமனைக்கு கொண்டு செல்லுமாறு காவநீதுறை அதிகாரி குமாரிடம்‌ பாலா வேண்டுகோள்‌ விடுத்தார்‌. தலைமறைவாகிவிட்ட பிரபாகரன்‌ அவர்களுக்கு ஓர்‌ அவசர செய்தி அனுப்ப வேண்டும்‌ என்று பாலா தெரிவித்தார்‌. அரசியல்‌ பணிமனையிலே, காவற்துறையினர்‌ கட்டடத்தைக்‌ காவல்‌ காத்து நிற்க, விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளோடு பாலா ஒரு அவசரக்‌ கூட்டம்‌ நடத்தினார்‌. தமது நாடு கடத்தலின்‌ பின்னணியில்‌ உள்ள காரணங்களை அவர்‌ கவலையோடு நின்ற போராளிகளுக்கு விளக்கி, அரசு தம்மைத்‌ திருப்பி அழைக்க வேண்டும்‌ என்ற பரப்புரையை முடுக்கி விடுமாறு அவர்களைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. ஒரு ரகசிய வழி மூலம்‌ பிரபாகரனுக்கு செய்தி அனுப்பினார்‌. அதன்‌ பின்னர்‌ விமான நிலையம்‌ புறப்பட்டோம்‌. காவற்துறை வாகனங்களும்‌ விடுதலைப்‌ புலி வாகனங்களும்‌ பின்னே தொடர்ந்து வந்தன.

மறுநாள்‌ காலை, அநேகமாக அனைத்து இந்தியத்‌ தேசியச்‌ செய்தித்‌ தாள்களும்‌ - தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பதிப்புகள்‌ - பாலா நாடு கடத்தப்பட்டதையே பெரிதுபடுத்தியிருந்தன. செய்தித்‌ தாள்‌ அறிக்கைகள்‌ விடுதலைப்‌ புலிகளுக்கு ஆதரவாக இருந்தன. சில ஆசிரியத்‌ தலையங்கங்கள்‌, அவசர, மூடத்தன நடவடிக்கைக்காக ரஜீவ்‌ நிர்வாகத்தை கண்டித்திருந்தன. இந்தியாவிலிருந்து பாலா : நாடு கடத்தப்பட்ட உடனடியாகவே தமிழ்‌ நாட்டு அரசியல்‌ கட்சிகள்‌ அதைப பெரிதுபடுத்தியிருந்தன; பாலா நாடு கடத்தப்பட்டிருந்ததைக்‌ கண்டித்தன. அவர்‌ திரும்பி வர வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொண்டன.

திம்புப்‌ பேச்சுவார்த்தை முறிவு, பாலாவின்‌ நாடுகடத்தல்‌, பிரபா- கரனின்‌ தலைமறைவு ஆகியவை சிறீலங்காவுடனான எதிர்காலப்‌ பேச்சுவார்த்தைக்கு முற்றுப்‌ புள்ளி வைத்தன. இந்த நிலையை இந்தியா எதிர்பார்க்கவில்லை. இந்தியாவுக்கு பாலா திரும்பினாலன்றி நிலைமை சுமுகமாகாது என்பது தெளிவாகியது. இந்தியாவுடனோ, சிறீலங்காவுடனோ பேச்சுவார்த்தை மீளத்‌ தொடக்கப்பட வேண்டும்‌ என்றால்‌, பாலா இந்தியாவுக்குத்‌ திரும்பி வந்தாக வேண்டும்‌ என்று பிரபா- கரன்‌ அவர்களும்‌ ஈ.என்‌.எல்‌.ஜஃப்‌ இன்‌ ஏனைய தலைவர்களும்‌ நிபந்தனை விதித்தார்கள்‌. இதையடுத்து, பாலா இந்தியாவுக்கு விரைவிலேயே திரும்பி விடுவார்‌ என்று இந்தியப்‌ புலனாய்வுப்‌ பிரிவினர்‌ எனக்கு நம்பிக்கையூட்டூும்‌ செய்திகள்‌ அனுப்பினர்‌. இறுதியில்‌, லண்டனில்‌ உள்ள இந்திய தூதரகம்‌ புதுடில்லி செல்வதற்கு அவருக்கு வீசாவும்‌ விமானச்‌ சீட்டும்‌ வழங்கியது. அதே சமயம்‌ நான்‌ புதுடில்லி போய்‌ பாலாவைச்‌ சந்திக்க இந்திய அதிகாரிகள்‌ ஏற்பாடு செய்தார்கள்‌.

பாலா திரும்பி வந்தபோதிலும்‌, இந்தியாவுக்கும்‌ விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ இடையே உறவு தொடர்ந்தும்‌ நலிவடைந்தது. இந்தியாவின்‌ உள்நோக்கம்‌ மட்டில்‌ ஆழமான அவநம்பிக்கை பிறந்தது. இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசு என்று வரித்துக்‌ கொண்டு, தனது கேந்திர, தேசிய நலன்களுக்கு விடுதலைப்‌ புலிகள்‌ வளைந்து கொடுக்க வேண்டும்‌ என்ற முனைப்பில்‌ புலிகளை அடிபணியச்‌ செய்ய முயன்றது. இருந்தபோதும்‌, இந்தியாவின்‌ இந்த உள்நோக்கங்களை நன்கு புரிந்து கொண்டு, விடுதலைப்‌ புலிகள்‌ தங்கள்‌ நடவடிக்கைகளை இந்தியாவில்‌ தொடர்ந்தார்கள்‌. சிநீலங்காவும்‌ தனது கடும்போக்கைத்‌ தொடர்ந்து கடைப்பிடித்தது. இனப்‌ போராட்டத்துக்குப்‌ பேச்சுவார்த்தை மூலம்‌ தீர்வு காணப்பட வேண்டும்‌ என்ற இந்தியாவின்‌ அபிலாசையை ஆதரிப்பது போல, ஜெயவர்த்தனா ஒருபுறம்‌ பாசாங்கு பண்ணினார்‌. மறுபுறம்‌, தமிழ்த்‌ தாயகத்திலே பாரிய ராணுவத்‌ தாக்குதல்‌ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சிறீலங்காவின்‌ ராணுவக்‌ கட்டமைப்பைப்‌ படிப்படியாக அவர்‌ பலப்படுத்தினார்‌. அதே சமயம்‌, சிறீலங்கா அரச அமைச்சர்‌ ஒருவர்‌ இரகசியமாகத்‌ திட்டமிட்ட ஒரு கொலைச்‌ சூழ்ச்சி , பற்றி நாம்‌ எதுவுமே அறியாதிருந்தோம்‌. பாலசிங்கத்தைப்‌ படுகொலை செய்வதே அந்தச்‌ சூழ்ச்சித்‌ திட்டம்‌. பாலாவின்‌ நாடுகடத்தல்‌ கட்டளை இரத்துச்‌ செய்யப்பட்ட மூன்று மாத காலத்தின்‌ பின்‌, 1985 டிசம்பர்‌ 23 இல்‌, பாலாவின்‌ உயிரைப்‌ பறிக்கும்‌ முயற்சி நடைபெற்றது. விபரீத சம்பவங்கள்‌ நிறைந்த ஆண்டின்‌ உச்சமாக இது அமைந்தது. நாம்‌ எதிர்கொள்ளும்‌ குரூர சக்திகள்‌, தங்கள்‌ ஆற்றா நிலையிலே எத்தகைய கீழ்த்தரத்‌ தன்மையுடன்‌ நடந்து கொள்கின்றன என்பது பந்றி எமக்குப்‌ பாடம்‌ புகட்டுவதாகவும்‌ இந்தப்‌ படுகொலை முயற்சி அமைந்தது.

3.8 படுகொலை முயற்சி

ஒடுக்குமுறை அரசு ஒன்று, விடுதலைப்‌ போராட்டத்தை நசுக்கிவிடும்‌ கைங்கரியமாக, தன்னை எதிர்க்கும்‌ விடதலை இயக்கத்‌ தலைவர்களைப்‌ படுகொலை செய்வது, பொதுவான வழிமுறையாகும்‌. கிளர்ச்சியை முறியடிக்கும்‌ ஒரு தந்திரோபாயமாகவே இது கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகம்‌ பூராவும்‌, அரசுகளால்‌ இயலா நிலையில்‌ கடைப்பிடிக்கப்படும்‌ இந்தக்‌ கொடிய அணுகுமுறை பற்றி, பாலாவும்‌ நானும்‌ அடிக்கடி கலந்துரையாடி இருக்கின்றோம்‌. படுகொலை முயந்சி இடம்‌ பெறலாம்‌ என்ற எதிர்பார்ப்போடு மேலும்‌ கூடுதல்‌ விழிப்பாக இராமல்‌ விட்டது எமது முட்டாள்த்தனமே என்று, இப்போது நினைத்துப்‌ பார்க்கும்‌ போது கூறுவேன்‌. பிரபாகரன்‌ அவர்கள்‌ இந்த அச்சுறுத்தலை உணர்ந்தே வாழ்கிறார்‌. ஆயினும்‌ அதைத்‌ தடுக்க, தமது பாதுகாப்பு முறைகளை ஒழுங்காக வகுத்திருக்கிறார்‌. ஆனால்‌, பாலா, தமது ஆபத்தைப்‌ பற்றிக்‌ குறைவாக மதிப்பிட்டிருந்ததாலோ என்னவோ, தம்மைக்‌ கொல்ல எவரும்‌ நேரம்‌ செலவிட்டுச்‌ சதிபுரிய மாட்டார்கள்‌ என்று கருதியிருந்தார்‌. அப்படி அவர்கள்‌ கொல்வதாக இருந்தால்‌, போராட்டத்தில்‌ அது எதிர்பார்க்கப்பட வேண்டியதே என்றும்‌ அவர்‌ நியா யம்‌ கற்பிப்பார்‌. தனிப்பட்ட முறையில்‌ அவர்‌ என்றுமே தனது பாதுகாப்பில்‌ அக்கறை செலுத்தாது, மற்றவர்கள்‌ அதைப்‌ பார்த்துக்‌ கொள்வார்கள் என்று ஒதுக்கிவிடுவார்‌. பாதுகாப்பைப்‌ புறக்கணித்து, காவல்‌ எதுவும்‌ இல்லாதிருந்த தருணத்திலேயே அவருடைய உயிரைப்‌ பறிக்கும்‌ முயற்சி நடத்தப்பட்டது. அந்த நாளில்‌ தேசிய பாதுகாப்புக்குப்‌ பொறுப்பாக இருந்தவரும்‌ அரசுத்‌ தலைவர்‌ ஜெயவர்த்தனாவின்‌ அந்தரங்க நம்பிக்கைக்குப்‌ பாத்திரமானவருமான லலித்‌ அத்துலக்‌ முதலியே அந்தச்‌ சதியைப்‌ புரிந்தார்‌.

தமது உயிரைப்‌ பறிக்க முயன்ற சதிகாரரை பாலாவுக்கு ஏற்கனவே தெரியும்‌. 1984 இலே, இந்தக்‌ கொலை முயற்சியாளர்‌ சென்னையில்‌ வந்து இறங்கிய நாளில்‌ இருந்தே அவரை பாலா அறிவார்‌. அவர்‌ பெயர்‌ கந்தசாமி; சிநீலங்காவின்‌ முன்னாள்‌ புலனாய்வு அதிகாரி; இவரைப்‌ போன்றவர்களுக்கு இலட்சிய சீலம்‌ எதுவும்‌ கிடையாது. இவர்களுக்குப்‌ பல எசமானர்கள்‌. அவர்களுக்காக தகவல்களைப்‌ பெறவும்‌ தகவல்களைத்‌ திரிவுபடுத்தவும்‌ இவர்கள்‌ பயன்படுத்தப்படுவார்கள். தாமாகவும்‌ இவர்கள்‌ இயங்குவார்கள்‌; ஏவலர்களாலும் பயன்படுத்தப்படுவார்கள். இவர்களைப்‌ புலனாய்வுப் பரத்தையர்‌ என்பதே பொருந்தும்‌. பெசன்ற்‌ நகர்க்‌ கடற்கரையில்‌ உலா செல்லும்‌ போது, இவர்‌ பாலாவுடன்‌ ஓட்டிக்‌ கொண்டார்‌. இவரோடு நடத்திய உரையாடல்களில்‌ இருந்து, இவரை ஓர்‌ இரட்டை வேட உளவாளி என்று பாலா புரிந்து கொண்டார்‌. இவர்‌ நாணயம்‌ அற்றவர்‌ என்று பாலா கடுமையாகச்‌ சந்தேகித்தபோதிலும்‌, படுகொலை முயற்சி நடந்த பின்னேதான்‌ இவருடைய பின்னணியையும்‌ தமது உயிரைப்‌ பறிக்க நடைபெற்ற சதி முயற்சியையும்‌ பாலா தொகுத்துப்‌ பார்த்தார்‌. இவரைப்‌ பற்றி பாலா சரியாக அளவிட்டிருந்ததாலேயே, தமிழ்நாடு புலனாய்வு சிறப்புப்‌ பிரிவினர்‌ அவரைக்‌ கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர்‌ நிலைகுலைந்து உண்மையை ஓப்புக்‌ கொண்டார்‌. கொலை முயற்சிக்‌ குற்றச்சாட்டு அவர்‌ மீது சுமத்தப்பட்டது.

நடந்தது இதுதான்‌. படுகொலை முயற்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்‌ எமது மாடியின்‌ முன்‌ கதவருகே நான்‌ நிலம்‌ பெருக்கிக்‌ கொண்டிருந்தேன்‌. எமது வீட்டின்‌ மொட்டை மாடிக்கு எமது தளத்தில்‌ இருந்து செல்லும்‌ படிக்கட்டில்‌, அழகாக ஆடை அணிந்த இளம்‌ பெண்‌ ஒருத்தி செல்வதைக்‌ கண்டேன்‌. என்னைப்‌ பார்த்ததும்‌ அவர்‌ திடுக்கிட்டப்‌ போனார்‌. மேல்‌ மாடியில்‌ யாராவது குடியிருக்கிறார்களா என்று அவர்‌ என்னைக்‌ கேட்டார்‌. “மேலே யாரும்‌ இல்லை; மொட்டை மாடிதான்‌ இருக்கிறது” என்று நான்‌ பதிலளித்ததும்‌, எதுவுமே நடக்காதது போல மாடிப்படிகளால்‌ கீழே இறங்கி அவர்‌ வெளியே சென்றார்‌. எமது மாடியைக்‌ கடந்து, மேலே மொட்டை மாடிக்கு எவராவது செல்ல முயன்றதை நான்‌ பார்த்தது இதுவே முதந்தடவை. எமது மாடியின்‌ சொந்தக்காரர்கள்‌ கீழ்த்‌ தளத்திலேயே குடியிருந்தார்கள்‌. அவர்கள்‌ கூட, என்றுமே மொட்டை மாடிக்குப்‌ போனதில்லை. எமது தளத்துக்கு அருகே கூட வந்ததில்லை. ஆகவே இது எனக்கு விநோதமாகப்‌ பட்டது. அன்று பத்தும்‌ பலதும்‌ பற்றி உரையாடும்போது, அந்த இளம்‌ பெண்ணை மாடிப்படியில்‌ பார்த்ததை பாலா விடம்‌ கூறினேன்‌. அவர்‌ அந்தச்‌ சம்பவத்தை அவ்வளவு பொருட்படுத்தவில்லை.

குண்டு வெடிப்பதற்கு முதல்நாள்‌ மாலையும்‌ அதே மாதிரிச்‌ சம்பவம்‌ ஒன்று நடந்தது. மாலை ஏழு மணிபோல, நான்‌ வீட்டில்‌ தனியாக இருந்தேன்‌. அரசியல்‌ பணிமனையில்‌ இருந்து வரவேண்டிய பாலாவுக்காகக்‌ காத்திருந்தேன்‌. யாரோ படியேறும்‌ சத்தம்‌ கேட்டது. கதவில்‌ பொருத்தப்பட்டிருந்த வெளிப்பார்வைக்‌ கண்ணாழடியுடாகப்‌ பார்த்தேன்‌. ஓர்‌ இளம்‌ பெண்‌, படியேறி மொட்டை மாடிக்குச்‌ செல்வதைக்‌ கண்டேன்‌. “இதென்ன விசித்திரம்‌” என்று எனக்குள்ளே கூறிக்கொண்டேன்‌. “கீழ்வீட்டுக்காரர்கள்‌ மொட்டை மாடிக்கு எதையோ எடுத்துச்‌ செல்கின்றனர்‌” என்று நினைத்தேன்‌. எனது அறைக்குள்‌ ஏதோ செய்ய வேண்டியிருந்ததால்‌, உள்ளே போய்விட்டேன்‌. கழே வெளிக்கதவு கிறீச்சிட்ட சத்தம்‌ கேட்டது. பாலா வீடு திரும்பி விட்டார்‌ என்ற நினைப்பில்‌, யன்னல்‌ ஊடாக வெளியே எட்டிப்‌ பார்த்தேன்‌. ஆச்சரியம்‌ என்னவென்றால்‌ மாடிப்படியில்‌ ஏறிய அந்தப்‌ பெண்‌ வெளியே சென்றுகொண்டிருந்தார்‌. ஆனாலும்‌ வெளிக்‌ கதவைத்‌ தாண்டி, அந்தப்‌. பெண்‌ சென்ற திக்கு, எனக்கு விசித்திரமாகப்‌ பட்டது. கீழ்‌ வீட்டில்‌ வசிக்கும்‌ குடூும்பத்தினரிடம்‌ செல்வதாக இருந்தால்‌, அவர்களுடைய வாயில்‌ பக்கம்‌ அந்தப்‌ பெண்‌ திரும்பியிருக்க வேண்டும்‌. ஆனால்‌ அவர்‌ எதிர்ப்பக்கம்‌ நோக்கி நடந்து இருளில்‌ மறைந்து விட்டார்‌. சிறிது நேரத்தில்‌ பாலா வந்து விட்டார்‌. அவரிடம்‌ நடந்ததைக்‌ கூறினேன்‌. ஒரு கொலைகாரனுக்கு உடந்தையாக அந்தப்‌ பெண்‌ இருப்பார்‌ என்று நான்‌ கருதவில்லை. ஆனாலும்‌ அவருடைய போக்கு விசித்திரமாகவே எனக்குப்‌ பட்டது. பத்து மணியளவில்‌ மொட்டை மாடிக்குச்‌ செல்லும்‌ கதவு காற்றில்‌ அடித்துக்‌ கொண்டிருப்பது கேட்டது. இந்தக்‌ கதவுக்கு உட்‌ பக்கமாக ஒரேயொரு தாழ்ப்பாள்‌. இரவிலே அது அடித்துக்‌ கொண்டிருக்கக்‌ கூடாது என்பதற்காகவும்‌, பாதுகாப்புக்காகவும்‌ அதை எப்போதும்‌ பூட்டியே வைத்திருந்தேன்‌. கட்டடத்துக்குள்‌ நுழைந்த அந்தப்‌ பெண்தான்‌ கதவைத்‌ திறந்திருக்க வேண்டும்‌. இதன்‌ மூலம்‌, கட்டடத்தின்‌ பின்பக்கத்தில்‌ உள்ள வேலைக்காரரின்‌ பகுதியில்‌ இருந்து, எவரும்‌ உள்ளே வர, அந்தப்‌ பெண்‌ வசதியேற்படுத்தியிருந்தார்‌. அதாவது அந்தக்‌ கட்டடத்தின்‌ பின்பக்கப்‌ படிகளால்‌ எவரும்‌ மொட்டை மாடிக்குச் செல்லலாம்‌. அங்கே திறந்திருந்த கதவு வழியாக, முன்னே இருந்த எமது மாடி வீடுகளுக்கு வரலாம். எமது வாயிலுக்கும்‌ வரலாம்‌; படிகளால்‌ கழே இறங்கி வெளியே போகலாம். ஏனென்றால் கீழ்த்தளக்‌ கதவிலும்‌ உள்பக்கமாகவே தாழ்ப்பாள்‌. எம்மோடு வசித்துக்‌ கொண்டிருந்த எனது மருமகனிடம்‌ மேலே போய்க்‌ கதவைத்‌ தாழ்ப்பாளிடுமாறு கூற அவரும்‌ போய்ப்‌ பூட்டிவிட்டு வந்தார்‌.

படுகொலை முயற்சி நடந்த அன்று காலை, எமது விசுவாசமான நாய்க்குட்டி ஜிம்மி, வழக்கத்துக்கு மாறாகக்‌ குரைத்துக்‌ கொண்டிருந்ததோடு, குறித்த ஒரு யன்னலைப்‌ பார்த்து எகிறவும்‌ தொடங்கியது. நாயிடம்‌ சென்று அதைத்‌ தடவிக்‌ கொடுத்தேன்‌. அது பின்னே பாய்ந்து, தனது கதிரைக்குள்‌ தாவி, அமைதியாகியது. அதன்‌ அமைதியைக்‌ குலைத்தது எதுவோ என்று அறிய, யன்னல்‌ வழியே எட்டிப்‌ பார்த்தேன்‌. எதையும்‌ காணமுடியவில்லை. ஆனால்‌ வெளிக்கதவு கிறீச்சிட்டுக்‌ கேட்டது. எமது போராளிகளில யாரோ கடற்கரையில்‌ அதிகாலை உடற்பயிற்சி செய்ய வந்து, கீழ்வீட்டில்‌ தங்கள்‌ மிதி உந்து வண்டிகளை விட்டுவிட்ட, வெளிக்கதவைப்‌ பூட்டாமல்‌ போயிருக்க வேண்டும்‌ என்று கருதினேன்‌. காலைக்‌ காற்றில்‌ குளிர்‌ அடித்தது. ஒரு படுக்கை விரிப்பால்‌ பாலாவைப்‌ போர்த்திவிட்ட, நானும்‌ போய்த்‌ தூங்கினேன்‌. அருமையான அரைத்தூக்கம்‌. காலை ஆறு மணி. கோவில்‌ ஒலிபெருக்கியில்‌ வேத ஆலாபனை காதில்‌ விழுந்தது. திடீரென உலகமே அதிர்ந்தது; யன்னல்கள்‌ நொருங்கின; புகையும்‌ தூசியும்‌ அறைக்குள் மண்டிப்போயிருந்தன. தனது உயிரைக்‌ கையில்‌ பிடித்தபடி ஜிம்மி ஓடியது. எனது மூளையில்‌ முதலில் உறைத்தது, “கடவுளே, சமையல் வாயுக் குடுவை வெடித்து விட்டது” என்பதுதான்‌. நான் எழுந்தபோது நொருங்கிய கண்ணாடித் துண்டுகள்‌ கலீரென்றன. பாலா வைப்‌ பார்த்தேன்‌. நான்‌ அவரைப்‌ போர்த்திய போர்வை மீது கண்ணாடிச்‌ சிதறல்கள்‌ குவிந்திருந்தன. அந்தச்‌ சுமையின்‌ கழே பாலா அசைய மாட்டாமல்‌ கிடந்தார்‌. சிதறிய கண்ணாடி யன்னல்‌, அதனருகே படுத்திருந்த என்மீது விழாமல்‌, என்னைக்‌ கடந்து பறந்து பாலாமீது இறங்கியிருந்தது. பாலாவின்‌ மீதிருந்த போர்வையை நான்‌ சுருட்ட, கண்ணாடிச்‌ சிதறல்கள்‌ அதனுள்‌ சுருண்டன. எம்மையே நம்ப முடியாதவர்களாக, என்ன நடந்தது என்று பார்க்க, கூடத்துக்குச்‌ சென்றோம்‌. எங்கே பார்த்தாலும்‌ புகையும்‌ தூசியும்‌. எனது மருமகன்‌ தலையிலிருந்து கால்வரை வெள்ளைத்‌ தூசியால்‌ போர்க்கப்பட்டவராக, அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில்‌, அங்கும்‌ இங்கும்‌ மிலாந்திக்‌ கொண்டிருந்தார்‌. முழுமையாகப்‌ பாதிக்கப்பட்டவர்‌ அவரே. மொட்டை மாடியில்‌ வெடித்த குண்டு, அவருடைய அறைக்கு நேரே, மேற்‌ கூரையைத்‌ தகர்த்திருந்தது. ஒரு வாரம்‌ முன்னதாகத்தான்‌ நாம்‌ எமது அறைகளை மாற்றியிருந்தோம்‌. கடற்கரைக்‌ காட்சியைப்‌ பார்ப்பதற்காக அவருடைய அறையை நாம்‌ எடுத்து, எமது அறையை அவருக்குக்‌ கொடுத்திருந்தோம்‌. எனக்குள்ளே திடீரென்று ஒரு சந்தேகம்‌ தோன்றியது. தமது முயற்சி முழுமையாக வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த, கொலையாளிகள்‌ இரண்டாவது குண்டையும்‌ நட்டிருப்பார்கள்‌ என்று தோன்றியது. இரண்டாவது குண்டும்‌ வெடிக்கலாம்‌ என்ற எதிர்பார்ப்போடு கூடத்தின்‌ நடுவே நின்று கொண்டிருந்தோம்‌. நாம்‌ வெளியே ஓடினால்‌, எம்மைச்‌ சுடுவதற்காகக்‌ கொலையாளிகள்‌ காத்திருக்கலாம்‌ என்ற நினைப்பில்‌ யாருமே வெளியே போகக்‌ கூடாது என்று உரக்கக்‌ கூறினேன்‌.

சில நிமிடங்களில்‌ சீருடை தரித்த காவற்துறையினர்‌ எமது மாடி வீட்டுப்‌ படிகளில்‌ ஏறினார்கள்‌. பொது மக்களும்‌ வெளியே கூடிவிட்டார்கள்‌. எமது போராளிகள்‌ பிரபாகரன்‌ அவர்களுக்கு விடயத்தை அறிவித்தார்கள்‌. பல கிலோ மீட்டர்‌ தொலைவில்‌ தமது வீட்டில்‌ இருந்த பிரபாகரனுக்கும்‌ இந்த வெடிச்‌ சத்தம்‌ கேட்டிருக்கின்றது.

ஒன்று தெளிவாகப்‌ புரிந்தது. கொலையாளிகள்‌ பின்புறப்‌ படிகளால்‌, மேலே மொட்டை மாடிக்கு வந்திருக்கிறார்கள்‌. மாடிகளுக்கான கதவு பூட்டியிருப்பதைப்‌ பார்த்ததும்‌ பயந்து, கால வெடிகுண்டை மொட்டை மாடியிலே வைத்து விட்டு, வந்த வழியே ஓடியிருக்கிறார்கள்‌. உடந்தையாக வந்த அந்தப்‌ பெண்‌ மொட்டை மாடிக்‌ கதவைத்‌ திறந்து விட்டிருந்தால்‌ கொலையாளிகள்‌ மாடிக்கு வந்து எமது கதவுப்‌ படியில்‌ குண்டைப்‌ பொருத்திவிட்டு, கீழே இறங்கி, வாயில்‌ கதவுத்‌ தாழ்ப்பாளைத்‌ திறந்து, காத்திருந்த மோட்டார்‌ சைக்கிளில்‌ தப்பிச்‌ சென்றிருக்கலாம்‌.

இந்தச்‌ சம்பவத்துக்குச்‌ சில நாட்களுக்கு முன்னதாக எமது வீட்டுக்கு எதிரே கடற்கரையில்‌ இரவு பத்து மணிக்கு பாலாவை தனிமையிற்‌ சந்திக்க விரும்புவதாக, கொலையாளி கேட்டிருந்தார்‌. ஆனால்‌ பாலாவைத்‌ தனியே போகக்‌ கூடாது என்றும்‌, வேண்டுமென்றால்‌ கூடவே ஒரு போராளியைக்‌ கூட்டிச்‌ செல்லுமாறும்‌ பிரபாகரன்‌ கூறினார்‌. அன்று, எமது போராளிகளில்‌ ஒருவர்‌ பாலாவைக்‌ கூட்டிச்‌ சென்றார்‌. இல்லையென்றால்‌ அந்தக்‌ கடற்கரைச்‌ சந்திப்பில்‌ இருந்து பாலா உயிரோடு திரும்பியிருக்க - மாட்டார்‌ என்பதில்‌ எனக்கு ஐயமே கிடையாது.

தூசி கீழே படிந்து, புகையும்‌, தெளிவடைந்த பின்‌, எமது திடீர்‌ அதிர்ச்சியில்‌ இருந்து நாம்‌ மீண்ட பின்‌ எமது மாடிக்கு ஏற்பட்ட சேதத்தைப்‌ பார்வையிட்டோம்‌. யன்னல்கள்‌ எல்லாமே உடைந்திருந்தன. கதவுகள்‌ ஒன்றுமே இல்லை. சிறிதும்‌ பெரிதுமாக எல்லாச்‌ சுவரிலும்‌ வெடிப்பு. ஆனால்‌ வெடித்‌ தகர்ப்பின்‌ முழுத்‌ தாக்கத்தையும்‌ எமது மருமகனின்‌ அறையிலேயே கண்டோம்‌. வெடியின்‌ பலம்‌, கம்பி வலையையும்‌ இரும்புச்‌ சலாகைச்‌ சுவரையும்‌ தகர்த்திருந்தது. மொட்டை மாடிக்‌ கூரையில்‌ ஓர்‌ அடி ஆழமும்‌ நான்கு அடி விட்டமுமான ஒரு பெரிய துவாரம்‌. அதனூடாக வானம்‌ தெரிந்தது. மாடிப்‌ படிகளுக்கும்‌ கடும்‌ சேதம்‌. சுவரில்‌ ஓட்டை. எமது வாயில்‌ கதவுக்கு முன்னே குண்டு வைக்க கொலைகாரனுக்கு வாய்ப்புக்‌ திடைத்திருந்தால்‌, கட்டடம்‌ முற்றாகத்‌ தகர்ந்திருக்கும்‌. குண்டு எம்மை மட்டுமல்ல, கீழ்‌ வீட்டில்‌ வாழ்ந்த குடும்பத்தையே கொன்றிருக்கும்‌.

தமிழ்‌ நாட்டின்‌ பல்வேறு பகுதிகளில்‌ இருந்தெல்லாம்‌ மக்கள்‌ எம்மைப்‌ பார்க்க வந்தார்கள்‌. தம்‌ கவலையைத்‌ தெரிவித்தார்கள்‌; ஆறுதல்‌ கூறினார்கள்‌. சம்பவம்‌ நடந்த உடனடியாகவே நூற்றுக்‌ கணக்கானோர்‌ எமது வீட்டைத்‌ தரிசித்துச்‌ சென்றார்கள்‌. அனைத்து இயக்க அமைப்புகளின்‌ தலைவர்களும்‌ வந்தார்கள்‌. ஈ.பி.ஆர்‌.எல்‌.எஃப்‌ இன்‌ பத்மநாபா, ரெலோவின்‌ சிறீசபாரத்தினம்‌, ஈரோசின்‌ பாலகுமார்‌, புளொட்டின்‌ சித்தார்த்தன்‌, ரீ.யூ.எல்‌.எஃப்‌ இன்‌ சிவசிதம்பரம்‌ ஆகிய எல்லோரும்‌ தமிழ்‌ மக்கள்‌ ஒன்றுபட்டு நிற்பதை உணர்த்தும்‌ வகையில்‌ வந்திருந்தார்கள்‌. தமிழ்நாடு முதலமைச்சர்‌ எம்‌.ஜி. இராமச்சந்திரனும்‌ எம்மைப்‌ பார்க்க வரவிருந்தார்‌. ஆனால்‌ பாதுகாப்புக்‌ காரணங்களுக்காக, அவர்‌ தமது வருகையை இரத்துச்‌ செய்ய வேண்டியதாயிற்று. காவற்துறையினர்‌ தம்‌ புலனாய்வைத்‌ தொடக்கினர்‌.

எனது கதையைக்‌ காவற்துறையினர்‌ செவிமடுத்தார்கள்‌. நான்‌ அடையாளம்‌ காண்பதற்காக ஒரு வெளிறலான பெண்ணை அடையாளம்‌ காட்டினார்கள்‌. அவர்களுடைய புலனாய்வு திசை மாறத்‌ தொடங்கியது விடுதலைப்‌ புலிகளின்‌ உள்வீட்டு வேலையே இந்தக்‌ குண்டுச்‌ சம்பவம்‌ என்று சந்தேகப்பட்டார்கள்‌. இறுதியில்‌ பாலா கூறியதை வைத்துக்‌ கொண்டு உண்மைக்‌ குற்றவாளியைக்‌ காவற்துறையினர்‌ கண்காணிக்கத்‌ தொடங்கினர்‌. கொலையாளி கொழும்பிலுள்ள தனது முதலாளி - லலித்‌ அத்துலத்‌ முதலியோடு தொலைபேசி மூலம்‌ உரையாடிக்‌ கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தேச கொலையாளி விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார்‌. அங்கே, குற்ற உணர்வு மேலிட கண்ணீரும்‌ கம்பலையுமாகச்‌ சதிச்திட்டக்தை ஒப்புக்‌ கொண்டார்‌. உடந்தையாக இருந்த பெண்‌ அவருடைய மருமகள்‌ என்பதும்‌ தெரிய வந்தது.

குற்றவாளி, பல்‌ மாதங்களாக சென்னை மத்திய சிறையில்‌ காவலில்‌ இடப்பட்டார்‌. கொலை முயற்சிக்காக வழக்குப்‌ பதிய மாநில காவற்துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும்‌ மத்திய அரசு | அதிகாரிகள்‌ முறியடித்தார்கள்‌. ஜெயவர்த்தனாவின்‌ அமைச்சரவையின்‌ | மூத்த அமைச்சர்‌ ஒருவர்‌ அதில்‌ சம்பந்தப்பட்டிருந்ததால்‌, நாடுகளின்‌ உறவில்‌ அது பெருஞ்சேதம்‌ விளைவிக்கும்‌ என்று அவர்கள்‌ கருதினார்கள்‌. சம்பவத்தை முழுமையாக மூடி மறைக்க இரண்டு அரசுகளூம்‌ கூடி முடிவெடுத்ததால்‌, இறுதியில்‌ கந்தசாமி விடுவிக்கப்பட்டார்‌. யாரும்‌ அறியாமல்‌, சிறீலங்கா திரும்பி குற்றவியல்‌ பதிவு எதுவும்‌ இன்றி அமைதியான வாழ்வில்‌ ஈடுபட்டார்‌. I

மாடி வீட்டைத்‌ திருப்பிக்‌ கட்டிக்‌ கொடுக்க விடுதலைப்‌ புலிகள்‌ பெருமளவு நஷ்டாடு செலுத்த நேர்ந்தது. ஆனாலும்‌ வசதியான அந்த இடத்தில்‌ தொடர்ந்தும்‌ எம்மை வசிக்க விடுவதற்கு வீட்டுச்‌ சொந்தக்காரர்‌ இணங்கவில்லை. சிறு குழந்தைகளோடு அவர்‌ கீழ்‌ வீட்டில்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌. வெடிச்‌ சம்பவத்தின்‌ பின்‌, நடுங்கியபடி, அந்தக்‌ குடும்பம்‌ அச்சத்துடனேயே வாழ்ந்தது. குண்டு வெடிச்‌ சம்பவத்துக்குப்‌ பிறகு, பாலசிங்கம்‌ குடும்பத்துக்கு வாடகைக்கு வீடு தர சென்னையில்‌ உள்ள வீட்டுச்‌ சொந்தக்காரர்‌ பலரும்‌ தயங்கினார்கள்‌, அது, புரிந்து கொள்ளப்பட வேண்டியதுதானே? கடைசியில்‌ ஒரு முஸ்லிம்‌ குடும்பம்‌ துணிந்து வடு த்ந்தது. எமது புதிய வசிப்பிடம்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ அரசியல்‌ பணிமனைக்கு அருகே அமைந்திருந்தது. எமது போராளிகளும்‌ அதே சூழலில்‌ தரித்திருந்தார்கள்‌. அதனால்‌, அதுவும்‌ எமக்கு நல்ல வசதியாக இருந்தது. ஆனால்‌ இந்தப்‌ புதிய வீடும்‌ எனக்கு ஒரு புதிய அனுபவத்தை இந்தியாவில்‌ தந்தது.

3.9 இந்தியாவில்‌ வீட்ரு ஊழியம்‌

இந்த நூல்‌ முழுவதிலும்‌, தமிழ்‌ நாட்டில்‌ பரந்து கிடக்கும்‌ சமுதாய முரண்பாடுகளையும்‌ வறுமையையும்‌ உணர்த்தும்‌ வகையிலே, ஆங்காங்கே பல நிகழ்வுகளைத்‌ தொட்டுக்‌ காட்டியிருக்கின்றேன்‌. அல்லது மனப்‌ பதிவுகளை விபரித்திருக்கின்றேன்‌. நகரங்களில்‌ ஒரு புறம்‌ மத்திய வர்க்கத்தினரும்‌, பணக்காரரும்‌ சொந்த அல்லது வாடகை வீடுகளில்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌. மறுபுறம்‌, கிராமங்களிலும்‌, நகர்ப்புறச்‌ சேரிகளிலும்‌ பெரும்பான்மை வறியவர்கள்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌. இவர்கள்‌ சமூக, பொருளாதார புறக்கணிப்பாலும்‌, இடர்பாடூுகளாலும்‌ சபிக்கப்பட்டவர்கள்‌; பல இலட்சக்கணக்கானவர்கள்‌; சிறிய ஓலைக்‌ குடிசைகளில்‌ ஹைடியிருக்கிறார்கள்‌. இந்தக்‌ குடிசைகளில்‌ தூங்க, சமைக்க, குளிக்க என்று தனித்தனியான அறைகள்‌ கிடையாது. இவை எல்லாமே ஒற்றை அறைக்‌ குடிசைகள்‌. இதற்கு உள்ளேயே ஒரு முழுக்குடும்பமும்‌ சமைத்து, உண்டு, உறங்கும்‌. இங்கே சமையல்‌ வாயு விநியோகம்‌ கிடையாது. மின்சார வழங்கலும்‌ இல்லை. இந்தக்‌ குடிசையின்‌ பின்புறத்தில்‌ சிறிது தூரம்‌ நீண்டு செல்லும்‌ நெடும்புல்‌ புதர்‌, பற்றை, செடிகள்‌ ஆகியவை வழங்கும்‌ மறைவிடமே அவர்களுடைய கழிப்பிடம்‌. வீட்டின்‌ அன்றாட குப்பை, சுற்றுப்‌ புறத்தில்‌ இறைந்து கிடக்கும்‌.

இந்த வறுமைக்கும்‌ சிறுமைக்கும்‌ மத்தியில்‌, தங்கள்‌ கண்ணியத்தைக்‌ காப்பாற்றுவதிலும்‌, குடும்பத்தை உயிரோடு பேணுவதிலும்‌, பெண்கள்‌ படும்‌ சிரமம்‌ கொஞ்ச நஞ்சமல்ல. இந்த இடர்பாடுகளின்‌ சிகரமாக பெண்கள்‌ முகம்‌ கொடுப்பது குடிசைகளுக்கான நீர்த்‌ தட்டுப்பாடு! பெரும்பாலான இந்தக்‌ குடிசைக்‌ குடும்பங்களுக்கு பொதுவான ஒரு நர்க்குழாய்‌ இருக்கும்‌. இதிலிருந்து நர்‌ எடுப்பதும்‌ பெண்களின்‌ பணியே. மிகச்‌ சின்ன வயதிலேயே பெண்கள்‌ வீட்டு வேலையில்‌ ஈடூபடத்‌ தொடங்கி விடுவார்கள்‌. ஆறு ஏழு வயதுச்‌ சிறுமிகள்‌ நீர்க்குழாயிலிருந்து குடங்களில்‌ நீர்‌ சுமந்து வீடுகளுக்கு கொண்டு வருவார்கள்‌. முதலில்‌ தண்ணீர்‌ வரிசையில்‌ காத்து நிற்க வேண்டும்‌; நீர்ப்பம்பியை அமுக்கி, நீர்‌ பிடிக்க வேண்டும்‌. பெண்ணின்‌ நேரத்தை உறிஞ்சி, பொறுமையைச்‌ சோதிக்கும்‌ சடங்கு இது. கோடைக்‌ காலத்தில்‌, உள்ளூர்ச்‌ சமூகத்தின்‌ நீர்த்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்ய நீர்‌ விநியோகம்‌ போதாதிருக்கும்‌. அப்போது, அந்தச்‌ சுற்றுப்‌ புறத்தில்‌ உள்ள வேறு நீர்க்குழாயைத்‌ தேடும்‌ நிர்ப்பந்தம்‌ பெண்களுடையதாகவே இருக்கும்‌. தண்ணீர்‌ தேடிக்‌ கூட்டம்‌ கூட்டமாகச்‌ செல்லும்‌ பெண்கள்‌, அடிக்கடி எமது வீட்டு முன்‌ வாயிலில்‌ நின்று, முன்வளவக்குள்‌ இருக்கும்‌ நீர்க்குழாயில்‌ நீர்‌ பிடிக்க அனுமதி கோருவார்கள்‌. கோடையில்‌ மத்திய தர வர்க்கத்தினரும்‌ நீர்த்தட்டூப்பாட்டால்‌ பாதிக்கப்பட்டு, நீருக்காகத்‌ தேடுதலில்‌ ஈடூபடூவர்‌. இல்லையென்றால்‌, அந்தப்‌ பக்கம்‌ நீர்‌ வழங்க வரும்‌ நீர்‌ வண்டிக்காக காத்து நிற்பர்‌.

போதுமான அளவு சுத்தமான நீர்‌ கிடைப்பது இந்தியாவில்‌ பெரும்‌ பிரச்சினையே. கிராமப்‌ புறத்தில்‌ ஒரு சில குடம்‌ குடி நீருக்காக பெண்கள்‌ நண்ட தூரம்‌ நடந்து செல்வது பொதுவானது. தமிழ்‌ நாட்டுக்கு நாம்‌ முதலில்‌ சென்றபோதே, சென்னையின்‌ வாழ்க்கைத்‌ தரத்தையும்‌ தன்மையையும்‌ தண்ணீரே நிர்ணயிப்பதை நாம்‌ புரிந்து கொண்டோம்‌. ப்‌ தமிழ்நாட்டுக்கு நாம்‌ சென்று அங்கே நிரந்தரமாக வாழ்வதற்கு வடு தேடும்‌ போது, அந்தப்‌ பகுதியின்‌ நீர்‌ விநியோகம்‌ பற்றி விசாரிப்பதும்‌ எமக்கு முக்கியமானதாக இருந்தது. இந்தச்‌ சமூகப்‌ பிரச்சினை பற்றிய அறிவுடனே வீடு தேடியதால்‌, வீட்டின்‌ அடிப்படைத்‌ தேவைக்காகத்‌ தலையைப்‌ பிய்க்கும்‌ சிரமம்‌ எனக்கு ஏற்படவில்லை. ஆனால்‌ குண்டு வெடித்த பிறகு கிடைத்த வீடு அமைந்த இடத்தில்‌ நீர்‌ விநியோகம்‌ குறைவாகவும்‌, நிலையற்றதாகவும்‌ இருந்தது. அதுவும்‌ வெப்பமான கோடையில்‌ அதன்‌ பாதிப்பு மிகவும்‌ மோசமாக இருந்தது. ஆகவே புதிய வட்டுக்கு இடம்‌ மாறிய பின்‌, நீர்‌ தொடர்பான பல பிரச்சனைகள்‌ என்‌ வாழ்க்கைத்‌ தரத்தைப்‌ பாதிக்கத்‌ தொடங்கின.

வீட்டின்‌ முன்வளவுக்குள்‌ கையால்‌ அமுக்கும்‌ நீர்க்குழாய்ப்‌ பம்பி இருப்பது பெரும்‌ வசதி என்று நான்‌ கருதியபோதும்‌, கோடைக்கால. வெப்பம்‌ அதிகரித்துச்‌ செல்ல, நீர்‌ விநியோகம்‌ வருவதும்‌ நிற்பதுமாகத்‌ தொடங்கி, இறுதியில்‌ படிப்படியாக இல்லாது போகும்‌ நிலையை எய்தியது. கோடைக்காலத்‌ தொடக்கத்திலே எமது வீட்டு நீர்‌ விநியோகம்‌ நாளுக்கு அரைமணிநேரமாக குறைக்கப்பட்டது. அந்த நேரத்துக்குள்‌ நீர்ப்‌ பம்பியைக்‌ கையால்‌ அமுக்கி, அன்றைய வீட்டுத்‌ தேவைக்கான நீரை, குடங்கள்‌ எல்லாவற்றிலும்‌ நிரப்பி விடுவேன்‌ சமையல்‌ கட்டிலோ, குளியல்‌ அறையிலோ, குழாயில்‌ நீர்‌ வராது. ரய நீர்‌ இல்லாது போனபோது ஓர்‌ இயற்கையான அன்றாட அவசியத்தேவை மறுக்கப்பட்டதை உணர்ந்தேன்‌. அது எமது வாழ்க்கை முறையையும்‌ தரத்தையும்‌ வெகுவாகப்‌ பாதிக்கிறது என்பதையும்‌ ம்ம்மா உணர்ந்தேன்‌. நர்‌ கிடைக்காது இருப்பது அப்படி என்ன பிரச்சினை என்று நினைப்பவர்களுக்குக்‌ கூட, அதற்கு முகம்‌ கொடுக்கும்‌ போதுதான்‌, அது எத்தகைய பெரிய பிரச்சினை என்பதும்‌, நீரை எப்படி சேமிப்பது என்று சதா சிந்தித்துக்‌ கொண்டேயிருக்க வேண்டும்‌ என்பதும்‌ புரியும்‌ சமையலுக்காக ஒதுக்கும்‌ ஒரு வாளி நீரை எப்படிச்‌ சேமித்து, அதில்‌ சமையலுக்கு எவ்வளவு நீர்‌, பாத்திரங்களைக்‌ கழுவ எவ்வளவு நீர்‌ என்று கவனமாக இருப்பதே தலையைக்‌ குடையும்‌. குறைந்த பட்ச நீரில்‌ எப்படிப்‌ பாத்திரங்களைக்‌ கழுவலாம்‌, சமையல்‌ அறையை எப்படி ஒற்றி எடுக்கலாம்‌ என்று, புதிய சிறந்த வழிகளைச்‌ சோதித்துப்‌ பார்ப்பதே தனிக்‌ கலையாகும்‌. இறுதியில்‌ இலகுவான வழி, சமையல்‌ முடிந்த சட்டி பானைகளை வெளியே தூக்கிச்‌ சென்று, ஒரு சிறிய குந்திலே அமர்ந்து, பாத்திரங்களுக்குச்‌ சவர்க்காரம்‌ போட்டு, கழுவி எடுத்து. கொதிக்கும்‌ வெய்யிலில்‌ கவிழ்த்துக்‌ காய விடுவதே சிறந்த வழி என்பதை பட்டறிந்து கொண்டேன்‌. காய்ந்த பின்‌ அவற்றைச்‌ சமையற்கட்டில்‌ அடுக்கி விடுவேன்‌.

மேல்வீட்டுக்‌ குளியல்‌ அறைக்கு நீர்‌ சுமப்பது மேலும்‌ ஒரு பிரச்சனையாகியது. ஒரு வாளி நீரில்‌ உடலைக்‌ கழுவிச்‌ சுத்தம்‌ செய்து கொள்ளலாம்‌ என்பதைக்‌ கற்றுக்‌ கொள்வதே திகைப்பூட்டும்‌ அனுபவம்‌. பொசுக்கும்‌ வெக்கையில்‌, ஒவ்வொரு நாளும்‌ ஒரு வாளி நீரில்‌ என்னை ஒற்றி எடுப்பது எனக்குக்‌ கிடைத்த அதிர்ஷ்டம்‌. நீர்ப்‌ பிரச்சினை எனக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது உண்மையே. ஆனால்‌ தங்கள்‌ குடும்பத்தின்‌ அடிப்படைத்‌ தேவைக்கான இந்தப்‌ பண்டத்தைப்‌ பெறுவதில்‌ தங்கள்‌ நேரத்தையும்‌ சக்தியையும்‌ செலவிடும்‌ பல லட்சக்கணக்கான இந்தியப்‌ பெண்களோடு ஒப்பிடும்போது, நான்‌ கொடுத்து வைத்தவள்‌ என்பேன்‌.

நீர்ப்‌ பிரச்சினை இருக்கிறதோ இல்லையோ, வீட்டு வேலை என்று வரும்போது அது இந்தியாவில்‌ ஒரு பெரும்‌ சுமையே ஆகும்‌. சமையல்‌ ஒரு பெரிய வேலை. பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட தொல்லை. தேங்காய்‌ துருவி, ஈர வெங்காயம்‌ உரித்து, இறைச்சி வெட்டி, மீன்‌ துப்புரவாக்கி, காய்கறி நறுக்கி, சோறு காய்ச்சி, வடித்து இப்படி சமையல்‌ வேலையே நாள்தோறும்‌, அடுத்தடுத்து, மாற்றம்‌ இல்லாமல்‌ செய்து கொண்டிருப்பது சலிப்புத்‌ தருவதாகும்‌. இனி, சமையலுக்கு நீண்ட நேரம்‌ பிடிக்கும்‌. சமையலுக்கு வாயு அடுப்பே பொதுவாகப்‌ பயன்படுத்தப்படும்‌. அதில்‌ இரண்டு நெருப்பு முனைகளே இருக்கும்‌. அரிசியின்‌ தரத்துக்கு ஏற்ப, சோறுகாய்ச்ச, ஒரு நெருப்பமுனை அரை மணிநேரம்‌ பயன்படுத்தப்படும்‌. அனைத்து கறி வகைகளையும்‌ தயாராக்க மீதமாக ஒரு முனை மட்டும்‌ இருக்கும்‌. வேறு வாய்ப்பு என்றால்‌ அது, விறகு அடுப்பே. பெரும்பாலும்‌ ஒன்றிரண்டு விறகடுப்புகளைக்‌ காணலாம்‌. சமையல்‌ என்பது உணவு தயாரிப்பில்‌ ஒரு பகுதி மட்டுமே. ஆனால்‌ இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின்‌ பணியே ஆகும்‌. இதைவிட, அரிசியை ஊறவிட்டு, மா அரைப்பது; மா இடிப்பது; மிளகாய்த்‌ தூள்‌ சரக்குகள்‌ வறுப்பது; தானியங்களை ஊறவைத்து அம்மியில்‌ அரைப்பது; இப்படிப்‌ பல!

நாம்‌ இந்தியாவில்‌ இருந்த காலத்தில்‌ ஆடை கழுவும்‌ பொறி வசதி எமக்குக்‌ கிடைக்கவில்லை. கைகளாலேயே எமது உடைகளைக்‌ குளிர்‌ நீரில்‌ கழுவ வேண்டும்‌. எனக்குப்‌ பஞ்சியாக இருந்தால்‌, அல்லது நீர்த்‌ தட்டுப்பாடு நிலவினால்‌, ஒவ்வொரு வாரமும்‌ குறித்த நாளில்‌ வடு. வரும்‌ . ஒரு பெண்மணியிடம்‌ எனது ஆடைகளையும்‌, பாலாவின்‌ சட்டைகளையும்‌ ஒப்படைப்பேன்‌. அவற்றை அவர்‌ எடுத்துச்‌ சென்று, துவைத்துக்‌ கொண்டு வருவார்‌. அழுக்கு நீர்‌ உள்ள சிறிய குளங்களில்‌ தோய்க்கிறாரோ, நோய்‌ ஏதும்‌- தொற்றிக்‌ கொள்ளுமோ, என்று கவலை இருக்கும்‌. ஆனால்‌ ஆடைகளைக்‌ கழுவி, மடித்து, பெட்டிபோட்டு அவர்‌ எடுத்து வரும்போது எனது கவலை பறந்து விடும்‌.

இவற்றையெல்லாம்‌ விட, புதிய காய்கறி, உடன்‌ மீன்‌, இறைச்சி ஆகியவற்றுக்காக அன்றாடம்‌ கடைத்‌ தெருவுக்குப்‌ போக வேண்டும்‌. இத்தகைய அன்றாடச்‌ சிறிய சிறிய பணிகள்‌ பெண்‌ மீதான சுமையாகி, அவள்‌ பலம்‌ உறிஞ்சப்பட்டு, அவள்‌ சிந்தனை வளர்ச்சியும்‌, மந்தமாகி, அன்றாட வாழ்க்கையே அவளுக்கு சிரமம்‌ ஆக்கிவிடும்‌. சமூகச்‌ சூழலே சிந்தனையைத்‌ தீர்மானிக்கிறது என்று கூறும்‌ மாக்சிய சித்தாந்தத்தை நான்‌ அடிக்கடி நினைவு கூருவேன்‌. இங்கு, மாக்ஸ்‌ கூறுவது முற்றிலும்‌ உண்மையே என்றும்‌ முடிவு செய்தேன்‌. இடையறா வீட்டு வேலைச்‌ சுமை காரணமாக, உயர்‌ சிந்தனைக்கு இடம்‌ இருப்பதில்லை. இந்தியாவிலே : வசதியான பெண்கள்‌ வீட்டு வேலைக்காரரை வைத்திருக்க விரும்புவதன்‌ நோக்கமும்‌ தெளிவாகியது. வீட்டுப்‌ பொறுப்பு அனைத்தையும்‌ பொறுப்பான ஒருவரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என்று மனக்‌ கோட்டை கட்டுவேன்‌. ஆனால்‌ எனக்கு அந்த வாய்ப்பு என்றுமே கிடைத்ததில்லை.

இன்னொரு பெண்‌ எனக்காகச்‌ சமைத்து, வீட்டைச்‌ சுத்தப்படூுத்துவது எனக்குச்‌ சிறிதும்‌ பிடிக்காத ஒன்று. வீட்டில்‌ உள்ள எல்லோருமே அந்த வீட்டுக்கான பணிகளைப்‌ பங்கிட்டுச்‌ செய்ய வேண்டும்‌ என்பதுதான்‌ என்றுமே எனது நிலைப்பாடு. இரண்டாவதாக, வீட்டு வேலைக்காக அமர்த்ப்படும்‌ இந்தப்‌ பெண்களுக்குக்‌ குறைந்த சம்பளம்‌ வழங்கி, அவர்களைச்‌ சுரண்டூவதிலும்‌, எனக்கு விருப்பம்‌ இல்லை. இனி, பலர்‌ செய்வது போல, மிகக்‌ குறைவான சம்பளத்தில்‌ சிறுமி ஒருத்தியை பணிக்கு அமர்த்துவதையும்‌ என்னால்‌ சிறிது கூட ஏற்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும்‌, அதிகாலையில்‌ வீட்டு விறாந்தையில்‌ அமர்ந்து தேனீர்‌ பருகும்போது, என்‌ கண்முன்னே இரண்டு காட்சிகள்‌ விரியும்‌. ஆறில்‌ இருந்து பத்து வயது வரையான சிறுமிகள்‌ வீட்டு வேலைக்காரிகளாக, தங்கள்‌ குடிசைகளிலிருந்து போவது ஒரு காட்சி. வசதியான குடும்பத்துச்‌ சிறுமிகள்‌ கச்சிதமாகச்‌ சீருடை அணிந்து தங்கள்‌ வீடுகளில்‌ இருந்து பள்ளி செல்வது இன்னொரு காட்சி. அதிலும்‌ வறிய சிறுமி ஒருத்தி, வசதியான வீட்டில்‌ இருந்து பள்ளி செல்லப்‌ புறப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ தனது சம வயதுச்‌ ௪ றுமிஃகா க உணவு தயாரிக்க, வீட்டு வேலைக்காரியாக அங்கே செல்லும்‌ காட்சி, அந்தச்‌ சமுதாய முரண்பாட்டைத்‌ தோலுரித்துக்‌ காட்டும்‌. பள்ளி செல்லும்‌ தனது சம வயது முதலாளிக்காக வீட்ட வேலைக்காரியான அந்தச்‌ சிறுவயதுத்‌ தொழிலாளி, அவருடைய சீருடையைத்‌ தோய்க்கும்‌ சடங்கும்‌ அங்கு நடைபெறும்‌.

3.10 உறவில்‌ நிகழ்ந்த பாதிய்புகன்‌

இந்திய ஆதரவுடன்‌ 1985 ஓகஸ்ரில்‌ இடம்பெற்ற திம்புப்‌ பேச்சுவார்த்தை, இலங்கை அரசுக்கும்‌ தமிழ்ப்‌ போராளிக்‌ குழுக்களுக்கும்‌ இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது. ஆயினும்‌ இனப்‌ பிரச்சனைக்கு அரசியல்‌ தீர்வைக்‌ கொண்டு வந்து விடலாம்‌ என்ற முயற்சியை இந்தியாவும்‌ கை விடுவதாக இல்லை. இந்திய அமைச்சர்களும்‌ அதிகாரிகளும் கொழும்புக்குப்‌ பல பயணங்களை மேற்கொண்டார்கள்‌. சிறீலங்காவின் அரசியல்‌ யாப்பு மாற்றங்கள்‌ தொடர்பான கருத்துக்களையும் பரிந்துரைகளையும்‌ வகுப்பதும்‌ திருத்துவதுமாக இருந்தார்கள்‌. அதே சமயம்‌, புது டில்லிக்கும்‌, புலிகளுக்கும்‌ இடையே 198 இற்கு முன்‌ நிலவி -ய உறவின்‌ சுமுக நிலை அதற்குப்‌ பின்‌ என்றுமே மீண்டதில்லை. திம்புப்‌ பேச்சுவார்த்தை முறிவடைந்ததில்‌ இந்தியாவுக்குக்‌ கசப்பு. பாலாவை நாடு கடத்தியதாலும்‌, கொழும்புடன்‌ புதுடில்லி கூடிய உறவு பேணியதாலும்‌ இந்தியா மட்டில்‌ விடுதலைப்‌ புலிகளுக்குக்‌ கசப்பு. தமிழ்நாடு காவற்துறையானது, பிரதிக்காவல்‌ மா அதிபர்‌ மோகன்தாஸ்‌ தலைமையில்‌ 1986 நவம்பர்‌ நடத்திய பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை அடுத்து, தமிழ்நாட்டின்‌ ஆதரவிலும்‌, புதுடில்லியின்‌ ஆதரவிலும்‌ தாம்‌ தொடர்ந்தும்‌ தங்கியிருக்க முடியாது என்பதை விடுதலைப்‌ புலிகளும்‌ ஏனைய போராளிக்‌ குழுவினரும்‌ புரிந்து கொண்டார்கள்‌.

தமிழ்ப்‌ போராளிக்‌ குழுக்களின்‌ உறுப்பினர்கள்‌ அதிகமதிகமாகத்‌ தங்கள்‌ ஆயுதங்களுடன்‌ நடமாடுவது தமிழ்நாடு காவற்துறையையும்‌ புலனாய்வு அதிகாரிகளையும்‌, அச்சமடையச்‌ செய்திருந்தது. விடுதலைப்‌ புலிகள்‌ உயர்வான சஒழுக்கக் கட்டுப்பாடுகளைப்‌ பேணியதோடு, பொதுமக்களுடன்‌ நல்லுறவு பேணிக் கொண்டிருந்த போதிலும்‌, ஏனைய ஆயுதக்‌ குழுக்கள்‌ புரிந்த வண்சையல்‌ சம்பவங்கள்‌ மாநிலக்‌ காவற்துறைக்கு எரிச்சலூட்டியது. சென்னையின்‌ மையப்‌ பகுதியான சூளைமேட்டில்‌, 1986 நவம்பெர்‌ முதல்‌ திகதியன்று, ஒரு சம்பவம்‌ நிகழ்ந்தது. சிறீலங்கா அரசில்‌ பின்னர்‌ அமைச்சரான டக்ளஸ்‌ தேவானந்தா அப்போது ஈ.பீ,ஆர்‌.எல்‌.எஃப்‌. இன்‌ மூத்த தலைவர்களில்‌ : ஒருவராக இருந்தார்‌. அவருக்கும்‌ ஓட்டோ வண்டி ஓட்டுனர்‌ ஒருவருக்கும்‌ இடையே ஒரு சில்லறைத்‌ குகராறு! அதில்‌ டக்ளஸ்‌ தேவானந்தா, தானியங்கித்‌ துப்பாக்கியால்‌ சிலாவிச்‌ சுட, இளவயது வழக்கறிஞர்‌ ஒருவர்‌ அந்த இடத்திலேயே பலியாகியிருக்கிறார்‌; பல பொதுமக்கள்‌ காயமடைந்திருக்கிறார்கள்‌. இதன்‌ விளைவாக தமிழ்‌ நாட்டிலே பலத்த கண்டனம்‌ கிளர்ந்தது. கடும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று, ஊடகங்கள்‌ நிர்பந்தித்தன.

எம்‌.ஜீ. ஆர்‌ நிர்வாகத்தில்‌ சட்டத்துக்கும்‌ ஒழுங்குக்கும்‌ பொறுப்பாக இருந்தவர்‌ காவல்துறைப்‌ பிரதிமா அதிபர்‌ மோகன்தாஸ்‌. தமிழ்நாடு புலனாய்வுப்‌ பிரிவின்‌ தலைவரும்‌ அவரே. சூளைமேட்டுச்‌ சம்பவம்‌ அவருக்கு நல்ல வாய்ப்பை வழங்க, இலங்கைத்‌ தமிழ்ப்‌ போராளிக்‌ குழுக்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்க அவர்‌ தீர்மானித்தார்‌. அந்தத்‌ துப்பாக்கிச்‌ சூட்டுச்‌ சம்பவம்‌ தவிர, கர்நாடக மாநிலத்தில்‌ விரைவிலே நடைபெற இருந்த சார்க்‌ மாநாட்டை ஒட்டிக்‌ கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சும்‌ கேட்டிருந்தது. அந்த மாநாட்டில்‌ சிறீலங்கா அரசுத்‌ தலைவர்‌ ஜே.ஆர்‌ ஜெயவர்த்தனாவும்‌ கலந்த கொள்ள இருந்தார்‌. ஆனபடியால்‌ இலங்கைத்‌ தமிழ்ப்‌ போராளிகளுக்கு எதிராக கடும்‌ நடவடிக்கை எடுக்க சூளைமேட்டுச்‌ சம்பவம்‌ வாய்ப்பாக அமைந்தது. இளம்‌ வழக்கறிஞர்‌ கொலையில்‌ விடுதலைப்‌ புலிகளுக்கு சிறிதும்‌ பங்கில்லை. ஆனால்‌ அனைத்துப்‌ போராளி அமைப்புகளையும்‌ புலிகள்‌ என்றே பொதுமக்கள்‌ வாய்ப்பாடு செய்திருந்தார்கள்‌. ஆகவே 1986 நவம்பர்‌ 8ம்‌ நாள்‌, தமிழ்நாடு காவற்துறையினர்‌, இலங்கைத்‌ தமிழ்ப்‌ போராளிக்‌ குழுக்களை நிராயுத பாணிகளாக்கும்‌ நடவடிக்கையில்‌ இறங்கினார்கள்‌. ‘புலி நடவடிக்கை’ என்று அதற்குப்‌ பெயரும்‌ சூட்டினார்கள்‌.

அதிகாலை ஆறு மணியிருக்கும்‌! ஆயுதம்‌ தரித்த காவற்துறை அணி ஒன்று எமது வீட்டு முன்வாயிலால்‌ முண்டியடித்துக்‌ கொண்டு உள்ளே வந்தது. அவர்களுடைய தோரணை ஏதோ ஒரு பெரிய காரியம்‌ நடைபெறுகிறது என்பதை உணர்த்தியது. என்ன நடக்கிறது, ஏன்‌ வந்தார்கள்‌ என்பதே புரியவில்லை. அனால்‌ பொது இடம்‌ அல்லாத தனிப்பட்ட வாழ்மனைக்குள்‌ அவர்கள்‌ புகுந்ததில்‌ இருந்தே அது, நட்புணர்வற்ற நடவடிக்கை என்பது புரிந்தது. நாம்‌ கைது செய்யப்படலாம்‌ என்று உள்‌ மனம்‌ கூறியது. எனது கைத்துப்பாக்கி பறிமுதல்‌ செய்யப்படக்கூடாது என்பதற்காக அதை ஒளித்து வைக்க உடனடியாக விரைந்தேன்‌. அதைத்‌ தூக்கி கூரை மீது வீசினேன்‌. பின்னர்‌ அதை மீட்டெடுக்கலாம்‌ என்பதே என்‌ எண்ணம்‌. உள்ளே நுழைந்த காவற்துறை அதிகாரிகள்‌ அனுமதி கேட்காமலே வீட்டில்‌ தேடுதல்‌ தொடங்கினார்கள்‌. அக்குவேறு ஆணி வேறாகச்‌ சோதனையிட்டார்கள்‌. அந்தத்‌ தருணத்தில்‌ எனது பெற்றோரும்‌ அங்கே கூட இருந்தார்கள்‌. எம்மைப்‌ பார்ப்பதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார்கள்‌. எவ்வித சமாதானமும்‌ கூறாது காவந்துறையினர்‌ எமது வீட்டுக்கு அடாத்தாக நுழைந்து நடந்து கொண்ட விதமும்‌, யாரும்‌ உள்ளே வராமலும்‌ வெளியே செல்லாமலும்‌ அறுக்கையிட்ட விதமும்‌ அவர்களை மலைக்கச்‌ செய்திருந்தன. தங்கள்‌ பயணப்‌ பெட்டிகளையும்‌ கைப்பைகளையும்‌ கவிழ்த்துக்‌ கொட்டி, ஒவ்வொரு பொருளையும்‌ துருவித்‌ துருவி ஆராய்வதை ஆற்றாமையோடு பார்த்துக்‌ கொண்டிருக்கவே அவர்களால்‌ முடிந்தது. மற்றவர்களுக்கு இப்படி நடப்பது பந்றி அவர்கள்‌ இதற்கு முன்‌ படித்திருக்கலாம்‌; அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்‌. ஆனால்‌, காவற்துறையின்‌ இத்தகைய அடாவ- டித்தன நடவடிக்கைக்கு தாமும்‌ உள்ளாக்கப்படலாம்‌ என்று அவர்கள்‌ கனவு கூடக்‌ கண்டிருக்கமாட்டார்கள்‌. தமிழ்நாடு காவற்துறை பற்றிய அவர்களுடைய மதிப்பு, தரம்‌ இறங்கியிருக்கும்‌ என்பது இயல்புதானே! காவந்துறையினர்‌ எதைத்‌ தேடுகிறார்கள்‌ என்பது எமக்கு இன்னமும்‌ புதிராகவே இருந்தது. ஏனென்றால்‌ எமது வீடு, ஆயுத பதுக்கலுக்காக என்றுமே பயன்படுத்தப்படவில்லை. வீட்டுக்கு வெளியே, காவற்துறை வாகனங்களும்‌, ஆளணிகளும்‌, பெருந்திரளாக அந்தப்‌ பகுதியைச்‌ சுற்றி வளைத்துக்‌ காவிலிட்டிருந்தன. விடுதலைப்‌ புலிகளின்‌ வீடுகள்‌ அனைத்திலும்‌ கடும்‌ தேடுதல்‌ நடப்பது தெரிந்தது. மாநிலத்தில்‌ உள்ள போராளிக்‌ குழுக்களின்‌ அனைத்துப்‌ பாசறைகளும்‌ முழுமையான அதிகாலைச்‌ சோதனைக்கு உள்ளாகி இருந்தன. எமது வீட்டுச்‌ சோதனையின்‌ முடிவில்‌, எனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இருந்த கைத்‌ துப்பாக்கி ஒன்று மட்டுமே அவர்கள்‌ கையில்‌ அகப்பட்டது. எனினும்‌ காவல்‌ நிலையத்துக்குத்‌ தம்முடன்‌ வருமாறு அவர்கள்‌ பாலாவைக்‌ கேட்டார்கள்‌. உள்ளூர்‌ காவல்‌ நிலையத்தில்‌ பாலாவைப்‌ படம்‌ பிடித்தார்கள்‌; கைரேகை பதிவு செய்தார்கள்‌; சொல்லொணா அவமானத்துக்கும்‌ சிறுமைக்கும்‌ உள்ளாக்கினார்கள்‌. இதே சூழ்நிலையில்‌ பிரபாகரன்‌ அவர்களும்‌ அழைத்துச்‌ செல்லப்பட்டு, அந்தச்‌ சிறுமைப்படுத்தும்‌ சடங்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்‌. பல மணிநேர விசாரணைக்குப்‌ பின்‌ அவர்கள்‌ இருவரும்‌ வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்‌. ஆனாலும்‌ உடனடியாக வீட்டு மறியலில்‌ வைக்கப்பட்டார்கள்‌. வீதிமுனையிலே ஆயுதம்‌ தரித்த காவலர்‌ நிறுத்தப்பட்டார்கள்‌. எம்மைச்‌ சந்திக்க எவரும்‌ வரலாம்‌ என்று அனுமதித்தார்கள்‌; ஆனால்‌ பாலா மட்டும்‌ வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பிரபாகரன்‌ அவர்கள்‌ மீதும்‌ அதே நிபந்தனைகள்‌! இவையெல்லாம்‌ பாலாவின்‌ பாதுகாப்புக்காகவே என்று அவர்கள்‌ நியாயம்‌ கூறினார்கள்‌. ஆனால்‌ ஏற்கனவே படுகொலை முயற்சிக்கு இலக்காகி இருந்த பாலாவுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு, அல்லது ஏன்‌ பாதுகாப்பு என்பதை அவர்கள்‌ விளக்கிக்‌ கூறத்‌ சுவறிவிட்டார்கள்‌.

பாலாவும்‌ சரி, பிரபாகரன்‌ அவர்களும்‌ சரி, இதனால்‌ கொதிப்படைந்தார்கள்‌. தாம்‌ அவமானப்படுத்தப்பட்டதாக அவர்கள்‌ கருதினார்கள்‌. தமிழ்‌ நாடும்‌ புதுடில்லியும்‌ வேண்டுமென்றே தம்மை அச்சுறுத்தி அவமானப்படுத்துவதாக எண்ணினார்கள்‌. மாநில, மற்றும்‌ மத்திய அரச அதிகார பீடங்களுக்குத்‌ தெரியாமல்‌ இத்தகைய பாரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை நம்ப, நாம்‌ எவரும்‌ முட்டாள்களல்ல. விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ புதுடில்லிக்கும்‌ இடையே அரசியல்‌ வேறுபாடு அடிக்கடி தலைதூக்கிய போதிலும்‌, இத்தகைய காவற்துறைக்‌ கடும்நடவடிக்கை இடம்பெற்றிருக்கக்‌ கூடாது என்பதே . விடுதலைப்‌ புலிகளின்‌ கருத்தாகும்‌. பாதுகாப்புப்‌ பதகளிப்பு ஏதாவது இருந்திருந்தால்‌, அதைப்பற்றி விவாதித்து, பொருத்தமான ஏற்பாடுகளைச்‌ செய்திருக்கலாம்‌. விடுதலைப்‌ புலிகளுக்கும்‌, புலித்‌ தலைவர்களுக்கும்‌ எதிரான கடும்‌ நடவடிக்கை, பாலாவையோ பிரபாகரனையோ காவற்துறைப்‌ புலனாய்வுப்‌ பிரிவினர்‌ ஆழமாகப்‌ புரிந்து கொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டியது. யாழ்ப்பாணத்து உளப்பாங்கு பற்றித்‌ தமிழ்‌ நாடு காவற்துறை ஆழமாக அறிந்திருந்தால்‌, தாம்‌ புரிந்த அவமரியாதையானது, பாலாவையும்‌ பிரபாகரனையும்‌ அச்சுறுத்திப்‌ பணிய வைப்பதற்குப்‌ பதிலாக, அவர்களைச்‌ சீற்றத்துக்கு உள்ளாக்கி இருந்தது என்பதை அவர்கள்‌ உணர்ந்திருப்பார்கள்‌. உண்மையில்‌ தம்‌ சுயமரியாதையும்‌ சுய கெளரவமும்‌ கண்ணியமும்‌ ஊறுபடுத்த ப்பட்டதாகவே அவர்கள்‌ கருதி ஆத்திரமடைந்திருந்தார்கள்‌. அவர்களுடைய எதிர்ப்பு உணர்வும்‌ மேலோங்கியிருந்தது. இந்திய அரசின்‌ கடும்‌ நடவடிக்கை, இவர்கள்‌ இருவருடைய சந்தேகங்கள்‌ பலவற்றை உறுதிப்படுத்தின. தமிழ்‌ மக்கள்‌ மட்டில்‌ இந்தியாவின்‌ கரிசனை எவ்வளவு என்பதையும்‌ அவர்களுக்கு உணர்த்தின. புதுடில்லியின்‌ உள்ளார்ந்த எண்ணங்களையும்‌ புரிய வைத்தன. எப்படியாயினும்‌ ஒரு வாரத்துக்குப்‌ பிறகு, வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காவலர்‌ திடீரென தமது உடைமைகளையும்‌ தூக்கிக்‌ கொண்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்‌. எவருக்கும்‌ எதுவித விளக்கமும்‌ இன்றி, வீட்டு மறியல்‌ நக்கப்பட்டது.

புதுடில்லிக்கும்‌ கொழும்புக்கும்‌ இடையே ராஜதந்திர முயற்சிகள்‌ மாதக்கணக்கில்‌ முடுக்கி விடப்பட்டிருந்தன. பங்களூரில்‌ நடைபெற இருந்த சார்க்‌ மாநாட்டில்‌ இனப்‌ பிரச்சனைக்கு அரசியல்‌ தீர்வு காணும்‌ முயற்சியில்‌ வழி கிடைத்து விட்டது என்று அறிவிக்க வேண்டும்‌ என்ற நோக்கமே அதற்குக்‌ காரணம்‌. இதன்‌ மூலம்‌ சார்க்‌ மாநாட்டில்‌ தாம்‌ அரசியல்‌ புகழ்‌ சம்பாதிக்க வேண்டும்‌ என்பது ரஜீவ்‌ காந்தியின்‌ அபிலா சையாக இருந்தது. சிநீலங்கா, வெவ்வேறு யோசனைகளையம்‌ முன்வைத்திருந்தது. அதிகாரப்‌ பகிர்வை வெவ்வேறு வடிவங்களில்‌ வழங்குவதோடு, கிழக்கு மாகாணத்தை மூன்று க்றாக்கும்‌ திட்டத்தையும்‌ அது உள்ளடக்கியது. சந்றேனும்‌ ஏற்க முடியாத இந்தத்‌ திட்டத்தோடு இந்திய, மற்றும்‌ சிறீலங்கா அதிகாரிகள்‌ பங்களூர்‌ சென்றனர்‌. இதை விவாதிப்பதற்காக, பாலாவும்‌ பிரபாகரனும்‌ அடிக்கடி புதுடில்லிக்கு கொண்டு செல்லப்பட்டனர்‌. ““அருகமர்‌ பேச்சுவார்த்தை” என்ற கிட்டம்‌ எடுபடவில்லை. மாநாட்டில்‌ அதை வெளியிடவும்‌ முடியவில்லை. அந்தப்‌ பேச்சுவார்த்தை “பங்களூர்‌ பேச்சுவார்த்தை” என்று அழைக்கப்பட்டது. விடுதலைப்‌ புலி அமைப்பு மீது தமது செல்வாக்கைப்‌ பிரயோகிக்க, தமிழ்நாடு முதலமைச்சர்‌ எம்‌.ஜி. ராமச்சந்திரன்‌ ஈடூபடுத்தப்பட்டார்‌. ஒரு நியாயமான பேச்சுவார்த்தையின்‌ அனுகூலம்‌ பற்றிப்‌ புலிகளுக்கு விளக்கி, அவர்கள்‌ அதை ஏற்குமாறு செய்ய: தமிழரான இந்திய வெளியுறவுச்‌ செயலர்‌ வெங்கட்ராமன்‌ அவர்களும்‌ ஈடுபடுத்தப்பட்டார்‌. உத்தேச திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்த விடுதலைப்‌ புலிகள்‌, சிறீலங்கா தலைவர்களுடன்‌ அதை விவாதிக்க மறுத்தனர்‌. திட்டத்தை நிராகரிப்பதற்கு புலிகள்‌ வழங்கிய விளக்கத்தை எம்‌.ஜி. இராமச்சந்திரன்‌ ஏற்கமாட்டார்‌ என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்‌, எதிர்பார்ப்பிர்கு மாறாக, புலிகளின்‌ விளக்கத்தை எம்‌.ஜி.ஆர்‌ ஏற்றுக்‌ கொண்டார்‌. யாரும்‌ இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும்‌ அது அங்கே நிகழ்ந்தது.

பங்களூர்‌ பேச்சுவார்த்தை தோல்வி கண்டதால்‌, ரஜிவ்‌ காந்தியின்‌ அரசியல்‌ மகுட எதிர்பார்ப்பும்‌ மண்‌ கெளவியது. உச்சி மாநாட்டிலே இனப்‌ பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டிருந்தால்‌, அது ரஜீவுக்கு ஒரு ராஜதந்திர மகுடமாக மாறியிருக்கும்‌. ஆனால்‌ நேர்மாநான ஒன்றே அங்கு நிகழ்ந்தது. ஜெயவர்த்தனா அங்கு நிகழ்த்திய உரை, ரஜீவை ஒரு தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கியது. உச்சி மாநாட்டு அரங்கத்தைப்‌ பயன்படுத்தி, ஆயுதம்‌ தரித்த தமிழ்‌ விடுதலை. அமைப்புகளுக்கு இந்தியா மறைமுகமாக வழங்கும்‌ ஆதரவை, பயங்கரவாதத்துக்கு இந்தியா வழங்கும்‌ ஆதரவாகக்‌ குறிப்பிட்டு நீண்டதொரு உரையை அவர்‌ நிகழ்த்தினார்‌.

தீர்வுக்காண அடிப்படையாக முன்வைக்கப்பட்ட அரசியல்‌ யோசனைகளை விடுதலைப்‌ புலிகள்‌ முற்றுமுழுதாக நிராகரித்திருந்தார்கள்‌. இதனால்‌, இந்திய அரசு பெரும்‌ மனக்கசப்பிற்கு உள்ளாகி இருந்தது. விடுதலைப்‌ புலிகளுடனான இந்திய உறவு மேலும்‌ விரிசல்‌ அடைவதற்கு இதுவும்‌ ஒரு காரணமாகியது. இந்திய அரசினரும்‌ வெவ்வேறு புலனாய்வுப்‌ பிரிவினரும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ மீது தமது அதிருப்தியை தெளிவாக உணர்த்த முடிவு செய்தனர்‌. விடுதலைப்‌ புலிகளும்‌ சரி, ஏனைய போராளிக்‌ குழுக்களும்‌ சரி, தொடாந்து இந்தியாவில்‌ இயங்க முடியாது என்று அவர்களுக்கு உறைக்கும்படி செய்யத்‌ தீர்மானித்தனர்‌. தமிழ்நாடு புலனாய்வுப்‌ பிரிவுகள்‌, மற்றும்‌ காவற்துறை ஆகியவற்றின்‌ துணையோடு, விடுதலைப்‌ புலிகளின்‌ தொலைத்‌ தொடர்பு சாதனங்களைக்‌ கைப்பற்றும்‌ இரண்டாவது மிக முக்கிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது.

பங்களூர்‌ அரசியல்‌ யோசனைகளை விடுதலைப்‌ புலிகள்‌ நிரா- கரித்தமையையிட்டு இந்தியா ஆத்திரம்‌ கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக பிரபாகரன்‌ அவர்களின்‌ தொலைத்‌ தொடர்பு சாதனங்களை இந்தியா பறிமுதல்‌ செய்தது. இது விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ புதுடில்லிக்கும்‌ இடையே நிலவிய உறவு மீது ஒரு பேரிடியாக அமைந்தது. இந்தியாவின்‌ உள்ளார்ந்த எண்ணங்கள்‌ தொடர்பாக பிரபாகரன்‌ கொண்டிருந்த மதிப்பீட்டூக்குச்‌ சிகரம்‌ வைத்தாற்‌ போல இந்த நடவடிக்கை அமைந்தது. அவரைப்‌ பொறுத்த வரையில்‌, இந்தியா தொடர்பான அனைத்து விடயங்களிலும்‌ ஓர்‌ ஆழமான அவநம்பிக்கையை அவர்‌ மனதிலே பதித்தது.

பங்களூர்‌ பேச்சுவார்த்தையின்‌ முறிவு இந்தியாவுக்கு அதிருப்தியைத்‌ தோற்றுவித்திருந்தது என்பதை பாலாவும்‌ பிரபாகரன்‌ அவர்களும்‌ உணர்ந்தே இருந்தார்கள்‌. இந்தியாவின்‌ அரசியல்‌ தீர்வு எதிர்பார்ப்புகள்‌ அவர்களுக்குப்‌ பலத்த ஏமாற்றத்தையும்‌ அயர்வையும்‌ ஏற்படுத்தியிருந்தன. வடக்கும்‌ கிழக்கும்‌ பிரிக்க முடியாத ஒரே தமிழ்ப்‌ பிரதேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும்‌ என்ற வேணவாக்‌ கொண்டிருந்த இவர்களுக்கு, கிழக்கு ..மாகாணத்தை முக்‌ கூறுகளாக்க முனைந்த யோசனை எள்ளளவேனும்‌ ஏற்க முடியாத திட்டமாக இருந்தது. கிழக்கு மாகாணத்தைப்‌ பிரிக்கும்‌ சிறரீலங்காவின்‌ யோசனையை புதுடில்லி ஆதரிக்குமேயென்றால்‌, இந்தியாவின்‌ எதிர்பார்ப்புகளுக்கும்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ இலக்குக்கும்‌ இடையே உள்ள இடைவெளி, நிரவல்‌ செய்ய முடியாத அளவுக்கு அகன்று விட்டது என்று பாலாவும்‌ பிரபாகரனும்‌ கருதினார்கள்‌. பங்களூர்‌ பேச்சுவார்த்தைக்குப்‌ பின்‌ பிரபர்கரன்‌ அவர்களுடைய தொலைத்‌ தொடர்பு சாதனங்களைப்‌ பறிமுதல்‌ செய்த நடவடிக்கை, அவர்களுடைய சந்தேகம்‌ சரியே என்று நிரூபித்ததோடு, ஏற்கனவே நலிவடைந்திருந்த உறவை மேலும்‌ சேதப்படுத்தியது.

தொடர்பு சாதனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்ட செய்தி பிரபாகரன்‌ அவர்களுடைய காதில்‌ எட்டியதும்‌, பாலாவுடன்‌ கலந்தாலோசனை புரிவதற்காக அவர்‌ எமது இல்லத்தினுள்‌ புயலெனப்‌ புகுந்தார்‌. கேடு விளைக்கும்‌ இத்தகைய திடீர்‌ முடிவை எடுத்த புதுடில்லி மீது அவருக்கு கடுஞ்சினம்‌. இந்த நடவடிக்கைக்கு காவற்துறையை அனுமதித்த முதலமைச்சர்‌ எம்‌.ஜி. இராமச்சந்திரன்‌ மீதும்‌ அவருக்குக்‌ கோபம்‌. இந்த நடவடிக்கையைப்‌ பார்க்கும்‌ போது, இந்தியாவில்‌ தாம்‌ தொடர்ந்து இருந்தால்‌ எதிர்காலத்தில்‌ தனது உயிருக்கே ஆபத்து நேரலாம்‌ என்றும்‌ அவர்‌ நம்பினார்‌. தமது பாசறைகளை மூடிவிட்டு யாழ்ப்பாணம்‌ திரும்புவதற்கு முன்னதாகத்‌ தமது சாதனங்களை மீட்க வேண்டும்‌ என்பதில்‌ அவர்‌ குறியாக இருந்தார்‌. வளைந்து கொடுக்காத அசையாப்‌ பிடிவாதம்‌ பிரபாகரன்‌ அவர்களுடைய ஆளுமையில்‌ ஊறிப்போயிருந்தது. அது இப்போது சுரந்து கிளர்ந்தது. தமது சாதனங்கள்‌ திருப்பித்தரப்படும்‌ வரை, சாகும்‌ வரையான உண்ணாவிரதம்‌ மேற்கொள்ள அவர்‌ முடிவு செய்தார்‌. இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவர்‌ அடுக்கும்‌ போது, அவருடைய ஊடறுக்கும்‌ கருவிழிகள்‌ அனல்‌ கக்கின. தமது சாதனங்களைத்‌ திருப்பித்‌ தர இந்தியா மறுக்குமேயானால்‌, உயிரற்ற தமது உடலமே எமது வீட்டின்‌ படிகளைத்‌ தாண்டும்‌ என்றும்‌ அவர்‌ சபதம்‌ உரைத்தார்‌. அந்தக்‌ கணத்தில்‌ இருந்தே தமது உண்ணா விரதத்தை எமது வீட்டில்‌ அவர்‌ தொடங்கினார்‌. உணவோ நீரோ அவர்‌ உதடு கடந்து உள்ளே செல்லவில்லை. இப்படியான தளராத உறுதிக்கு முன்னே பாலா வால்‌ எதுவும்‌ செய்ய முடியவில்லை. அதே சமயம்‌ பிரபாகரனுடைய நியாயத்தையும்‌ ஏற்காதிருக்க முடியவில்லை. தமிழ்நாடு அரசியல்வாதிகள்‌, அரசியல்‌ செயந்பாட்டாளர்கள்‌, ஊடகவியலாளர்கள்‌ என்று வெவ்வேறு பிரிவினர்‌ சாரி சாரியாக எங்கள்‌ வீட்டை மொய்த்தார்கள்‌. பிரபாகரனுக்குத்‌ தங்கள்‌ ஆதரவைத்‌ தெரிவித்தார்கள்‌. இந்தப்‌ போராட்ட நடவடிக்கையில்‌ தம்மையும்‌ இணைக்குமாறு அவருடைய தளபதிகளிந்‌ சிலர்‌ கெஞ்சினர்‌. அவருடைய உண்ணாவிரதப்‌ போராட்டத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும்‌, தமிழ்நாடு அரசு மற்றும்‌ புதுடில்லி மீதான கண்டனங்களும்‌ வேகம்‌ பெறத்‌ தொடங்கின. எமது வீட்டின்‌ முன்புறத்தே மக்கள்‌ கூட்டம்‌ திரளத்‌ தொடங்கியது. பிரபாகரன்‌ அவர்களுடைய நடவடிக்கையை ஆதரிக்கும்‌ உச்சாடனங்களும்‌ சுருதி. கூட்டின.

பிரபாகரன்‌ அவர்களுடைய தொலைதொடர்பு சாதனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டபோது முதலமைச்சர்‌ எம்‌.ஜி. இராமச்சந்திரன்‌ சென்னையிலிருந்து பல நூறு மைல்‌ அப்பாலுள்ள சேலத்தில்‌ இருந்தார்‌. நிலைமை கட்டுக்கடங்காது மீறும்‌ நிலை கண்டதும்‌, சாதனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது தமக்குத்‌ தெரியாது என்று அவரும்‌ புதுடில்லியும்‌ மாறி மாறிப்‌ பொறுப்பைத்‌ தட்டிக்‌ கழித்ததோடு, பழியை ஒருவர்‌ மீது ஒருவர்‌ சுமத்தவும்‌ தொடங்கினர்‌. தமது நேசத்துக்கும்‌ மதிப்புக்கும்‌ பாத்திரமான பிரபாகரன்‌ சாகும்‌ வரை உண்ணாவிரதப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டிருப்பதை அறிந்ததும்‌ எம்‌.ஜி.ஆர்‌ கவலை அடைந்தார்‌. இத்தகைய நடவடிக்கையை புலிகளின்‌ தலைவர்‌ மேற்கொண்டார்‌ என்றால்‌, அவர்‌ அதிலிருந்து பின்வாங்க மாட்டார்‌ என்பதும்‌ முதலமைச்சருக்குத்‌ தெரியும்‌. மாநில அரசின்‌ இந்த. ஆத்திரமூட்டும்‌ நடவடிக்கையை ஓட்டி, தமிழ்‌ மக்களிடையே ஒரு பரவ லான எதிர்ப்புணர்வு வேகம்‌ பெறத்‌ தொடங்கியிருந்தது. ஈழத்‌ தமிழரின்‌ வரலாற்று நாயகனுக்கு ஏதாவது நேர்ந்தால்‌, அரசியல்‌ பிரதிகூலங்கள்‌ படு பாதகமாக அமையும்‌ என்பதையும்‌ அவர்‌ உணர்ந்தார்‌. உண்ணாவிீர- தத்தின்‌ இரண்டாவது நாளன்று, முதலமைச்சரிடம்‌ இருந்து பாலாவுக்கு அவசரத்‌ தகவல்‌ ஒன்று வந்தது. அதில்‌ உண்ணாவிரதத்தைக்‌ கைவிடுமாறு பிரபாகரனை பாலா வலியறுத்த வேண்டும்‌ என்று எம்‌.ஜி.ஆர்‌ கேட்டிருந்தார்‌. காவற்துறையினரின்‌ நடவடிக்கைக்கான காரணத்தை விடுதலைப்‌ புலிகளின்‌ தலைவரைப்‌ பின்னர்‌ சந்திக்கும்போது விளக்குவார்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. தொலைத்‌ தொடர்பு சாதனங்கள்‌ திருப்பி ஒப்படைக்கப்பட்டாலன்றி புலிகளின்‌ தலைவர்‌ உண்ணாவிரத மறியலைக்‌ கைவிடவே மாட்டார்‌ என்று முதலமைச்சரிடம்‌ அப்பட்டமாக பாலா தெரிவித்தார்‌. நிலைமை பாரதூரமாகிவிட்டதை உணர்ந்த எம்‌.ஜி.ஆர்‌ கைப்பற்றப்பட்ட சாதனங்களை உடனே திருப்பி ஒப்படைக்குமாறு ஆணை பிறப்பித்தார்‌. பல்வேறு செய்தி ஊடகர்கள்‌, உள்ளூர்‌ அரசியல்‌ தலைவர்கள்‌, பெருந்திரள்‌ ஆதரவாளர்கள்‌ ஆகியோரின்‌ மத்தியில்‌ ஆயாசம்‌ அடைந்த - ஆனால்‌ மன உறுதியயும்‌ விடாப்பிடியும்‌ கொண்ட பிரபாகரன்‌ தமது நாற்பத்தி எட்டு மணிநேர உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்‌. பல வாரங்களின்‌ பின்னர்‌, பிரபாகரனுடனும்‌, பாலாவுடனும்‌ முதலமைச்சர்‌ நீண்ட நேரம்‌ கலந்துரையாடினார்‌. அதன்‌ பின்னர்‌ புலிகளிடம்‌ இருந்தும்‌ ஏனைய போராளிக்‌ குழுக்களிடம்‌ இருந்தும்‌ பறித்தெடுத்த ஆயுதங்கள்‌ அனைத்தையும்‌ புலிகளிடமே ஒப்படைக்க வேண்டும்‌ என்றும்‌ அவர்‌ ஆணையிட்டார்‌.

போராட்டத்தைப்‌ பொறுத்த வரையிலே, பிறர்‌ மீது தங்கியிருக்கலாகாது என்பதில்‌ எப்போதும்‌ உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த பிரபாகரன்‌ அவர்கள்‌, உண்ணாவிரதம்‌ முடிந்த சில வாரங்களில்‌, இந்தியாவின்‌ பிடியிலிருந்து விலகி யாழ்ப்பாணத்தில்‌ இருந்து சுதந்திரமாக இயங்குவதற்கான திட்டங்களைத்‌ தீட்டினார்‌. இந்தியக்‌ கரைகளில்‌ இருந்து 1987 முற்பகுதியில்‌ இரகசியமாக அவர்‌ வெளியேறி, தமது தாயகத்தை அடைந்தார்‌. பாலாவும்‌ நானும்‌ சென்னையில்‌ தரித்திருந்து, நாம்‌ வெளியேறும்‌ காலம்‌ வரும்வரை எமது அரசியற்‌ பணியைத்‌ தொடர வேண்டும்‌ என்று கேட்கப்பட்டோம்‌. ரஜவ்‌ நிர்வாகம்‌ மேற்கொண்ட நெருக்குவார, அடாவடித்தன ராஜதந்திரத்தினால்‌, ஏற்பட்ட நீண்டகால, கசப்பான அனுபவம்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ இதயங்களில்‌ ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இந்திய அரசியல்‌ அமைப்பின்‌ உள்ளார்ந்த சிக்கல்கள்‌, முரண்பாடுகள்‌ பந்றிய தெளிவான புரிந்துணர்வையும்‌ அவர்கள்‌ பெற்றிருந்தார்கள்‌. பிரச்சனைக்கான அரசியற்‌ தீர்வு, இந்தியாவின்‌ மத்தியஸ்தத்துடன்‌ அப்போதைக்கு இடம்பெற வாய்ப்பில்லை என்பதும்‌ தெளிவாகத்‌ தெரிந்தது. தமிழ்‌ மக்களுக்கு எதிரான 1983 ஆம்‌ ஆண்டு வன்முறைகளுக்குப்‌ பின்னர்‌, தமிழ்‌ மக்களின்‌ அரசியல்‌ போராட்ட வரலாற்றில்‌ 1987ம்‌ ஆண்டானது கொந்தளிப்பான ஒரு முக்கிய காலகட்டமாக விரியத்‌ தொடங்கியது. இந்த ஆண்டிலேயே இந்தியத்‌ தலையீடானது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது; தமிழ்‌ மக்களின்‌ உளப்பாங்கிலும்‌ அரசியலிலும்‌ ஆழமான தாக்கங்களையும்‌ பதித்தது.