7 யாழ்ப்பாணத்தில் போருக்குள் வாழ்ககை
1990 மார்ச் மாதம் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியதையடுத்து, அரியாலை மணியம் தோட்டத்தில் அமைந்திருந்த ஈ.ப்.ஆர்.எல்.எஃப் பினரின் படை முகாமை முற்றாக அழித்த விடுதலைப் புலி வீரர்கள் யாழ்குடாநாட்டை தமது முழுமையான கட்டுப்பாட்டின்கழ் கொண்டு வந்தனர். அதே சமயம் சிங்கள இராணுவத்தினர், யாழ்ப்பாணக் கோட்டை, பலாலி விமானத் தளம், ஆனையிறவு போன்ற கேந்திர நிலைகளில் முகாமிட்டிருந்தனர். கொழும்பில் நிகழ்ந்த பேச்சுக்களில் பங்குபற்றிக் கொண்டிருந்த நாம், மார்ச் மாத இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் வந்து, வல்வெட்டித் துறையில் தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து . குடியமர்ந்தோம். இந்திய இராணுவம் வெளியேறியதால், தமக்கு கிட்டிய : சுதந்திரத்தையிட்டு யாழ்ப்பாண மக்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்சி படனும் காணப்பட்டனர். இரு ஆண்டுகள் வரை ரு அந்நிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நீடித்து, இப்பொழுது முடிவடைந்து விட்டதால் யாழ்ப்பாணத்தில் இயல்புநிலை கதிரும்பியிருந்தது. யாழ்ப்பாண மக்களும் மண்டும் தமது வாழ்க்கையை சீரமைக்க தொடங்கிவிட்டனர். ஏப்ரல் 19ந் திகதி நல்லூர் கந்தசாமி கோவிலடியில் நிகழ்ந்த பூபதி அம்மா நினைவு நாள் கூட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் அணிதிரண்டனர். விடுதலைப் புலிகள் மீது யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்த நல்லெண்ணத்தையும், பேராதரவையும் எடுத்துக் காட்டுவதாக இந்நிகழ்வு அமைந்தது. இரு வாரங்களுக்கு பின்னர், மே மாதம் முதலாம் திகதி நிகழ்ந்த தொழிலாளர் தின பேரணிகளும் விழாக் காலம் பூண்டிருந்தன. யாழ் குடாநாடு அடங்கிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்தப் பேரணிகளில் கலந்து கொண்டனர். சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து மே தினக் கூட்டத்தில் பாலாவும், யோகியும் மக்களுக்கு விளக்கமளித்தனர். அப்பொதுக் கூட்டத்தில் பெண் தொழிலாளரின் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு எனக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
இந்த சமாதான இடைவெளியைப் பயன்படுத்தி நாம் எமது பழைய நண்பர்களையும், மூத்த போராளிகளையும் சந்தித்து உறவாட முடிந்தது. அன்று மகளிர் இராணுவப் பிரிவின் தளபதியாக பணியாற்றிய, சுகி தனது நண்ட நாள் காதலனான கிரேசியை திருமணம் செய்ய முடிவெடுத்தார். நண்ட காலமாக சமூக வைபவங்கள் எதிலுமே கலந்து கொள்ள முடியாதிருந்த எமது போராளிகளுக்கு மண்டைதீவில் கலகலப்பாக நிகழ்ந்த இத் திருமண வைபவம் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக அமைந்தது. எமது வளர்ப்பு நாய் ஜிம்மியை அல்வாயில் வசித்து வந்த பாலாவின் நண்பரான திரு. கந்தசாமி அவர்களிடம் ஒப்படைத்திருந்தோம். குனது நண்பரிடம் சென்று ஜிம்மியை திருப்பிப் பெறுவதற்கு பாலா ஆவலாக இருந்தார். இரு ஆண்டுகள் ஆகியும் இந்தப் பிராணி எம்மை மறக்கவேயில்லை. எம்மைக் கண்டதுமே மகிழ்ச்சி பொங்கத் துள்ளிக் குதித்து, ஆனந்த மிகுதியால் வீட்டு வளவைச் சுற்றி சுற்றி ஓடியது. இந்திய இராணுவத்தினால் நாம் வேட்டையாடப்பட்ட பொழுது, வடமராட்சியில் ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து எமக்கு புகலிடம் தந்த குடும்பங்களை சந்தித்து நன்றி கூறினோம். அந்த வேளைகளில் எமக்கு உதவி புரிந்த பல போராளிகள் இந்திய இராணுவ சுந்றிவளைப்புகளில் சிக்குப்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் என அறிந்து மிகவும் வேதனையடைந்தோம். எமக்கு உதவிய கிங்ஸ்லி என்ற ஒரு இளம் போராளி நாம் வடமராட்சியை விட்டு வெளியேறியதும் திருகோணமலை சென்று, அங்கு நிகழ்ந்த ஒரு மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இந்திய இராணுவம் வெளியேறியதால் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய மகிழ்ச்சி ஆரவாரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 1990 ஜுன் மாதம் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் புலிப் படைவீரர்களுக்கும் மத்தியில் மண்டும் போர் வெடித்தது. பிரேமதாசா அரசுக்கும் புலிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற பேச்சுக்கள் முறிந்து போர் தொடங்கியதும் யாழ்ப்பாணத்தில் நிலவிய நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் நல்லெண்ண சூழ்நிலையும் தகர்ந்து போயின. போர் ஆரம்பித்ததும், பிரேமதாசா அரசு தமிழ் மக்களை கடும் துன்பத்துக்கு ஆளாக்கியது. மின்சாரமும் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டன. இதனால் யாழ்ப்பாணம் இருளுக்குள் மூழ்கியதுடன் தொடர்புகள் அறுந்து உலகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டது. பொருளாதார ரீதியாகவும், சிங்கள அரசு தமிழர் தேசத்தின் கழுத்தை திருகியது. மிகவும் கடுமையான பொருளாதாரத் தடை திணிக்கப்பட்டதால் வடபுலத்தில் உணவுப் பொருட்களுக்கும், மருந்து வகைகளுக்கும் பெரும் தட்டூப்பாடு நிலவியது. மின்சாரத்துக்கும், எரிபொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால், கைதொழில்களும் போக்குவரத்தும் முடங்கின. விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் பெருகியது. வாழ்க்கைச் செலவு உச்சத்திற்கு உயர்ந்தது.
மெல்ல மெல்ல, யுத்தத்தின் கொடூரப் பிடியில் யாழ்ப்பாணம் சிக்கிக் கொண்டது. யாழ்ப்பாண குடாநாட்டில் மண்டும் விமானக் குண்டுத் தாக்குதல்களும், பீரங்கிக் குண்டுவீச்சும் ஆரம்பமாதியதும், பழைய பதுங்கு குழிகளை மக்கள் துப்புரவாக்கத் தொடங்கினர். புதிய பதுங்கு குழிகளும் வெட்டப்பட்டன. தற்பெருமையும், விடா முயற்சியும் கொண்ட யாழ்ப்பாண மக்கள், புதிய திருப்பத்தால் எழுந்த சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராகினர்.
போர் தொடங்கிய வேளையில், பருத்தித்துறை முனையில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் நாம் வசித்து வந்தோம். அது ஒரு அற்புதமான சூழல். நேர்த்தியாக கட்டப்பட்ட பழைய வடு; அதனைச் சூழ தென்னஞ்சோலை; இருபத்தி ஜந்து யார்கள் முன்னால் கடற்கரை. ஆபத்துகள் இருந்தபோதும், அந்த அழகிய சூழலை விட்டு உட்புறமாக குடியிருக்கும்படி கடற்படைத் தளபதி சூசையும், எமது மெய்ப் பாதுகாவலர்களான போராளிகளும் எம்மை வற்புறுத்தினார்கள். கடல் வழியாக, எமது வீட்டுக்கு முன்புறமாக சிங்கள இராணுவம் தரை இறங்கலாமென்றும் மிரட்டினார்கள். நாம் அசையவில்லை. ஆனாலும் கடற்படையினரால் கரையோரக் கிராமங்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள், எமது பகுதியில் நடைபெற்ற விமானக் குண்டுவீச்சுக்கள் தீவிரமடைந்தபோது அந்தக் கடற்கரை வீட்டில் தொட்ர்ந்து குடியிருப்பது புத்திசாலித்தனமல்ல என்று எமக்குத் தோன்றியது.
பருத்தித்துறை கரையோர வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து, பாழ்ப்பாணம் அத்தியடியிலுள்ள வீடு ஒன்றில் குடியமர்ந்தோம். இந்த இடம்பெயர்வு பத்து ஆண்டுகாலமாக யாழ்ப்பாணத்திலும், பின்னர் வன்னியிலும், தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வீடுமாறும் ஒரு வரலாற்றுப் ॥॥ லத்தின் ஆரம்ப நிகழ்வாக அமைந்தது. சிறீலங்கா விமானப் படையின் இலகுவான இலக்காக நாம் மாறிய காரணத்தால், நாம் தொடர்ச்சியாக இடம்பெயர நேர்ந்தது. நாம் குடியிருந்த பல வீடுகள் விமானக் குண்டுத் நாக்குதலுக்கு இலக்காகி அழிந்து போயின. பருத்தித்துறைக் ஐ லோரம் அமைந்திருந்த அந்த அழகிய வீடும் விமானக் குண்டு வீச்சுகக்கு இலக்காகி அதன் ஒரு பகுதி தகர்ந்து போயிற்று.
7.1 யாழ்ந்பாணக் கோட்டைச் சமர்
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறீலங்கா அரசிற்கும் மத்தியில் மீண்டும் போர் மூண்டதையடுத்து சமாதானத்திலும் சமரசப் பேச்சிலும் காட்டப்பட்ட முக்கியத்துவம் இப்போது விடுதலைப் போரில் திரும்பியது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்டெடுக்கும் தந்திரோபாயம் முதலிடத்தைப் பெற்றது. திரு. பிரபாகர னின் ஆய்வில், யாழ்ப்பாணத்தின் இதயத்தில் அமைந்திருந்த கோட்டை இராணுவத் தளம் விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை நோக்காகக் கொண்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை யாழ்ப்பாணத்திற்கு வடகரையோரமாக, பண்ணை பாலத்திற்கு அருகாமையில் அமையப்பெற்றிருக்கிறது. கோட்டைப் படைத்தளம் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததுமட்டூமன்றி, யாழ்ப்பாண நகரில் வாழ்ந்த மக்களின் உயிருக்கும், அச்சுறுத்தலாக இருந்தது. இந்தக் கோட்டை முகாமில் குடியிருந்த சிங்கள இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி பொதுசனங்கள் மத்தியில் உயிர்ச் சேதங்களை விளைவித்து வந்தனர். கோட்டைக்கு அருகாமையிலுள்ள யாழ்ப்பாண ் மருத்துவமனையும் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்தது. இத் தாக்குதல்கள் நிகழும்போது பீதியடைந்த நோயாளரும், மருத்துவமனை ஊழியரும் பாதுகாப்புத் தேடி மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதுண்டு. இது மாத்திரமன்றி, இந்தக் கோட்டை குறிப்பிடத்தக்க ஒரு அரசியற் குறியீடாகவும் விளங்கியது. ஒல்லாந்தரின் காலனித்துவ அட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக் கோட்டை தமிழர் தாயகம் மீதான அந்நிய ஆதிக்கத்தை குறிக்கும் ஒரு சின்னமாகவும் இருந்து வந்தது. சிநீலங்கா அரசைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணம் மீதும் அங்கு வாழும் மக்கள் மீதும் சிங்களத்தின் இறையாண்மையைக் குறிக்கும் சின்னமாகவே கோட்டை விளங்கியது. எனவே. கோட்டைத் தளத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்கான இராணுவ நலனும் அரசியல் நோக்கமும் விடுதலைப் புலிகளுக்கு இருக்கவே செய்தது. அந்த இலக்கை அடைவதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். ஆயினும், கோட்டைத் தளம் மீது நேரடியான வலிந்து தாக்குதலை நடத்துவதென்பது தற்கொலைக்கு ஒப்பானது. ஏனென்றால், ஆழமான அகழிகளால் சூழப்பட்ட இக் கோட்டை, எவரும் உள்ளே ஊடுருவமுடியாத பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பாக விளங்கியது. ஆகவேதான், கோட்டைத் தளத்தைச் சுற்றி முற்றுகையிட பிரபாகரன் முடிவெடுத்தார். முழுமையான போர் மூண்டு ஒரு வார காலத்தின் பின்பு, 1990 ஜுன் 18ந் திகதி கோட்டை மீதான முற்றுகைச் சமர் தொடங்கியது. விடுதலைப் புலிகளின் படையணிகள் கோட்டையைச் சூழ, பலம்பொருந்திய பாதுகாப்பு அரண்களை அமைத்து, முற்றுகையை இறுக்கின. அதனைத் தொடர்ந்து கோட்டைத் தளத்திற்குள் மோட்டார் எறிகணைகளும் ஏவப்பட்டன. முற்றுகை யிடப்பட்டிருந்த சிங்களப் படையினருக்கு, உலங்குவாறூர்திகள் மூலமாக விநியோகம் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் 50 கலிபர் இயந்திரத் துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள், கோட்டைக்கு அருகாமையில் நகர்த்தினர்.
இறுக்கமான முற்றுகைக்கு ஆளாகி, விநியோகம் துண்டிக் கப்பட்ட நிலையில், தொடர்ச்சியான மோட்டார் எறிகணைத் தாக்குதல்களுக்கும் ஆளாகிய சிங்களப் படையினர், பயங்கரமான உளவியல் நெருக்குவாரத்துக்கு இலக்காகினர். கோட்டைத் களம் விடுதலைப் புலிகளிடம் விழுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டு நின்ற பிரேமதாசா, யாழ்ப்பாணம் மீது மிகக் கொடேோமான குண்டுவீச்சை கட்டவிழ்த்துவிட்டார். சிநீலங்கா விமானப் படையினர் வசமிருந்த சகல விதமான குண்டுவீச்சு விமானங்களும், இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட உலங்குவானூர்திகளும் அணிதிரட்டப் பட்டு இராப் பகலாக குண்டு மழை பொழியப்பட்டது. போதாக்குறைக்கு பலாலித் தளத்திலிருந்து பீரங்கி எறிகணைத் தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில், கோட்டையை அண்டிய புலிகளின் நிலைகள் மீது நிகழ்த்தப்பட்ட விமான, பீரங்கிக் குண்டுவீச்சுக்கள் படிப்படியாக யாழ்ப்பாண நகரின் குடியிருப்பு பகுதிகள் மீது விஸ்தரிக்கப்பட்டது. இக் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் யாழ்ப்பாண மக்கள் மீது பெரிய அளவில் உயிர்ச்சேதத்தை விளைவித்ததோடு, ஆயிரக்கணக்கான வீடுகளையும் நாசப்படுத்தியது. குண்டுத் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இடம்பெயர விரும்பாத மக்கள் தமது இருப்பிடங்களில் பதுங்கு குழிகள் அமைத்து, தினமும் அவற்றிற்குள் பலமணிநேரத்தைக் கழித்தனர். கோட்டையிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலிருந்த அத்தியடியில் நாம் அப்பொழுது வசித்து வந்தோம். அந்தச் சொற்ப காலம் மிகவும் பயங்கரமானது. அப்பகுதியில், இரவு பகலாக உலங்கு வானூர்திகள் இயந்திரத் துப்பாக்கிகள் தாக்குதலை நிகழ்த்தின விமானக் குண்டு வீச்சு தொடர்ச்சியாக நடைபெற்றது. எந்த நேரத்திலும் எமது வீட மீது குண்டு வீசப்படலாமென நாம் தினமும் அங்கலாய்த்தபடி இருந்தோம். அப்பொழுது யாழ்ப்பாணத் தளபதியாக பணிபுரிந்த பானு: எமது வீட்டுக்கு வருகை தந்து எம்மை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். உள்ளூர் உளவாளிகளின் மூலமாக எமது இருப்பிடத்தின் விபரங்களை சிங்கள விமானப் படையினர் பெற்றிருப்பதாக புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது எனப் பானு சொன்னார். தளபதி பானுவின் ஆலோசனைக்கு அமைய நாம் எமது அத்தியடி வீட்டிலிருந்து உடனே வெளியேறி வடமராட்சியிலுள்ள வதிரியில் குடியமர்ந்தோம். ஒரு சில நாட்களின் பின்பு, விமானத்திலிருந்து வீசப்பட்ட பீப்பாய் குண்டு ஒன்று எமது அத்தியடி வீடு மீது விழுந்து வட்டை தரைமட்டம் ஆக்கியதாக அறிந்தோம்.
கோட்டை முற்றுகைச் சமர் 107 நாட்கள் வரை நீடித்தது. இறுதியில் செப்டெம்பர் 26ந் திகதி, திலீபனின் நினைவு நாளன்று யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது. கோட்டைத் தளத்திற்கு விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்டதால் அங்கு முடங்கிக் கிடந்த படையினர் பசியால் செத்து மடியும் பயங்கர நிலைக்கு தள்ளப்பட்டனர். இறுதியில், கோட்டைக்கு பின்புறமாக அமைந்திருந்த நிலவறை ஊடாக, பண்ணைக் கடல் வழியாக இப் படையினர் மீட்டெடுக்கப்பட்டனர்.
7.2 வடமராட்சியில் எமது வாழ்க்கை
வடமராட்சிக்கு நாம் திரும்பியபோதும் எமது நிச்சயமற்ற வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. பலாலி இராணுவத் குளத்திற்கு அண்மையில் தரைச் சண்டை நடைபெற்றதாயினும், வடமராட்சிப் பகுதிகள் விமானக் குண்டு வீச்சிற்கும் உலங்குவானூர்தி தாக்குதல்களுக்கும் கடற்படையினரின் எறிகணைத் தாக்குதல்களுக்கும் இலக்காகின. நாம் தொடர்ந்தும் ஒரு போர் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இத் தாக்குதல்கள் எமக்கு நினைவூட்டின. ஆகாயப் படையினரின் குண்டுவீச்சுகளும், உலங்கு வானூர்திகளின் தாக்குதல்களும் வடமராட்சி மக்களுக்கு கிலியூட்டின. விமானங்களும், உலங்குவானூர்திகளும் ஆகாயத்தைச் சுற்றி வலம் வரும்போது பாதுகாப்புத் தேடி மக்கள் கலைந்து ஓடுவது பரிதாபக் காட்சியாக இருக்கும். வீடுகளில் பதுங்கு குழிகள் வைத்திருந்தோர் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு நிலவறைக்குள் ஓடி ஒளிந்து கொள்வர். பதுங்கு குழிகள் இல்லாதவர்கள் (இவர்களே பெரும் பான்மையினர்) ஆகாயத்தில் சுற்றும் விமானங்களின் போக்குகளை அவதானித்தபடி எப் பகுதியில் குண்டுத் தாக்குதல் நிகழ்ப்போகிறது என்பதை கணித்தபடி இருப்பார்கள். பலவகையான குண்டுகள் குடியிருப்புகள் மீது கொட்டப்பட்டன. மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மட்டுமல்லாமல், பீப்பாய்களில் தயாரிக்கப்பட்ட எரிகுண்டுகளும் வீசப்பட்டன. இந்தப் பீப்பாய் எரிகுண்டு ஒன்று, ஒரு வீடு மீது விழுந்தால் முழுக் குடும்பமுமே எரிந்து சாக நேரும். வடமராட்சி மீது பறந்து செல்லும் போக்குவரத்து விமானங்களிலிருந்து இந்தப் பீப்பாய் எரிகுண்டுகள் வீசப்பட்டன. மிகவும் அருவருக்கத்தக்க விடயம் என்னவென்றூல், பீப்பாய்களில் மலத்தை அடைத்து ஆகாயத்திலிருந்து தமிழர்கள் மீது கொட்டியதுதான். இச் செயலானாது சிங்கள, ஆகாயப் படையினரின் இனவெறிக் குரோதத்தை வெளிப்படுத்தியது. ஒலியை விட வேகமாகச் செல்லும் “சுப்பர்சொனிக் ஜெட்” விமானங்களின் வருகை, தமிழர்களுக்கு எதிரான போரில் ஒரு பயங்கரமான புதிய பரிமாணத்தை திறந்தது. கறுப்பு புள்ளிகள் போன்று ஆகாய வெளியில் இவை சுற்றும்போது, அவை சாவின் சகுனமாகவே தென்படும். தமது அழிவாயுதங்களை கழற்றி விடுவதற்காக, அவை செங்குத்தாக கீழிறங்கும்போது ஏற்படும் கிறீச்சிட்ட அலறல் சத்தம் இரத்தத்தை உறைய வைக்கும். குடியிருப்புகள் மீதாக இந்த ஜெட் குண்டுவீச்சு விமானங்கள் நிகழ்த்தி வந்த கண்மூடித்தனமான தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அப்பாவிப் பொதுமக்களை கொல்வதிலும் காயப்படுத்துவதிலும், கிலிகொள்ளச் செய்வதிலும் ஆயுதம் தரித்த உலங்குவானூர்திகளும் தமது பங்கை செய்யத் தவறவில்லை. ஆகாயத்தில் சுற்றியவாறு அப்பாவி மக்களை வேட்டையாடுவது உலங்குவானூர்தி ஓட்டிகளுக்கு ஒரு கொழுது போக்கு. உதாரணத்திற்கு, நான் ஒரு தடவை பருத்தித்துறையிலுள்ள மந்திகை மருத்துவ மனைக்கு முன்பாக வசித்து வந்த எனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். அப்பொழுது அந்தப் பக்கமாக ஒரு உலங்குவானூர்தி வரும் சத்தம் கேட்டது. ஆபத்து வரப்போகிறது, எங்கோ தாக்குதல் நிகழப் போகிறது, என நாம் எதிர்பார்த்தோம். திடீரென, தானியங்கி இயந்திர துப்பாக்கியின் வேட்டுகள் அதிரத் தொடங்கின. தாழப்பறந்தவாறு, பருத்தித்துறை சந்தைப் பகுதியில் நின்ற பொதுமக்களை குறிவைத்து கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. பின்னர், அந்த வேடிக்கை விளையாட்டை முடித்துக் கொண்டு மந்திகை மருத்துவமனையை நோக்கி அந்த உலங்குவானூர்தி பறந்து வந்தது. இயந்திரத் துப்பாக்கி ரவைகளிலிருந்து தப்புவதற்காக நாம் ஓடிச் சென்று, சீமெந்து சுவர்களுக்கு பின்னால் பதுங்கிக் கொண்டோம். அரை மணி நேரம் வரை தனது “களியாட்ட விளையாட்டை” நடத்திவிட்டு, அந்த உலங்கு வானூர்தி அங்கிருந்து பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக இத் தாக்குதலின் போது எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆயுதம் தரித்த உலங்குவானூர்திகள் இவ்விதம் அடிக்கடி தாழப் பறந்து கண்மூடித்தனமாக தாக்குதல்களை நிகழ்த்திவந்ததால், வாகனங்களில் பயணம் செய்வது கூட ஆபத்தானதாக முடியும். மேலாகப் பறந்து திரியும் உலங்குவானூர்திகளின் கவனத்தை ஈர்க்காமல் சப்புவதற்கு நாம் எமது கார் வண்டியை எத்தனையோ தடவைகள் மரநிழல்களின் கீழ் மறைத்து வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் வல்லை வெளி வீதியை கார் கடக்கும்போது, ஆயுதம் தரித்த உலங்குவானூர்தி ஒன்று எம்மைத் துரத்தி வந்தது இப்பொழுதும் எனக்கு நினைவில் இருக்கிறது. இரு மைல்கள் தூரமான இந்த திறந்த வீதியில் உலங்குவானூர்திகள் பல அனர்த்தங்களைப் புரிந்திரு க்கின்றன. மக்கள் பயணிக்கும் பஸ்கள், வாகனங்கள் மீது இயந்திரத் துப்பாக்கியாலும் ஏவுகணைகளாலும் தாக்குதல்களை நடத்தி அப்பாவிப் பொதுசனத்தை கொன்றும் காயப்படுத்தியும் இருக்கின்றன. இந்த திறந்த வெலி வீதியால் பயணிகளை ஏற்றிவரும் பஸ் வண்டிகள், மேலாகப் பறந்து வரும் உ லங்குவானூர்திகளிடமிருந்து ஓடித் தப்புவது இலகுவான காரியமல்ல. எனவே, அப்பாவிப் பொதுமக்களை குறிவைப்பதில் இன்பம் காணும் வானூர்தி ஓட்டிகளுக்கு பஸ் வண்டிகள் இலகுவான இலக்குகளாகிவிட்டன.
வடராட்சியின் அழிவிற்கு சிறீலங்கா கடற்படையும், தனது பங்கை ஆற்றுவதற்கு தவறவில்லை. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை கரையோரமாக கடற்படையினரின் போர்க்கப்பல்கள் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கான வீடுகளும் நாசமாக்கப் பட்டன. பருத்தித்துறை கடலோரத்திலிருந்து சில நூறு யார்கள் தொலைவில் தும்பளை எனும் திராமமுண்டு. தமிழ் மொழி கற்றுக் கொள்வதற்காக இங்குள்ள ஒரு வீட்டுக்கு நான் சென்றுவருவதுண்டு. அப்பொழுது ஒரு தடவை அக் கிராமம் நோக்கி கடற்படையின। கடுமையான தாக்குதலை நடத்தினர். அப்பொழுது நானும் எனது ஆசிரியையும் பதுங்கு குழிக்குள் தஞ்சம் புக நேர்ந்தது.
இப்படியான சூழ்நிலையில், நிலத்தின் அடியில் நாம் ஒளிந்து வாழவேண்டியிருந்தது. நாம் எந்த வீட்டில் குடியமர்ந்தாலும் முதல்வேலையாக, அந்த வளவில் ஒரு பதுங்கி குழியை அமைக்கத் தவறமாட்டோம். ஆறு அடி ஆழமும் இரண்டடி அகலமுமாக நிலத்தை வெட்டி, முன்புறமாகவும் பின்புறமாகவும் வாசற்படிகள் அமைத்து, அதன் மீது பெரிய மரக்குத்திகளை அடுக்கி, அதற்கு மேலாக மண்சாக்குகளைப் போட்டு பதுங்கு குழிகளை நிறுவுவோம். முதலில் . யாழ்ப்பாணத்திலும் பின்னர் வன்னியிலும் நாம் வசித்த காலத்தில் இதுபோன்ற இருண்ட நில்வறைகள் தான் எமது பாதுகாப்பிற்கான புகலிடமாக அமைந்தன. எமது பாதுகாப்பிற்கான மெய்ப்பாதுகாவலராக போராளிகள் குழுவொன்று, எமது இருப்பிடத்திற்கு அயலான வீட்டில், அல்லது எமது காணிக்குள் குடிசைகள் அமைத்து எம்மோடு வாழ்ந்துவரும். எமது வீட்டை சுற்றியுள்ள வேலிகள் ஏழு அடி உயரம் வரை இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்டன. வெளியே இருந்து பார்த்தால் ஒரு “மினி” இராணுவ முகாம் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நாம் விரும்புகின்றோமோ இல்லையோ விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை முறை அப்படித்தான். இந்த இருப்பிடங்களின் வெளித் தோற்றத்தைப் பார்த்துவிட்ட, இவை இயக்கத்தின் வீடுகள் என பொதுமக்கள் கணித்துக் கொள்வார்கள்.
7.3 பெண்போரானணிகன் பற்றிய புதிய பார்வை
கோட்டை இராணுவத் தளம் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரிலும், அதனைச் சுற்றியுள்ள குதிகளிலும் வாழ்ந்த மக்களுக்கு அமைதியான பாதுகாப்பான சூழல் பறந்தது. அரசியல் நடவடிக்கைகளின் மையமாக விளங்கிய பாழ்ப்பாண நகரத்தில் குடியமர நாமும் முடிவெடுத்தோம். இந்த இருப்பிடம் பாலாவின் அரசியல் வேலைகளுக்கு வசதியாக அமைந்தது. அத்தோடு, இங்கிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் அவர் அடிக்கடி சந்தித்து பேச முடிந்தது. பெண்போராளிகளும் பல அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்கள் என்னிடம் வந்து இவை பற்றி விவாதிப்பார்கள். இவர்களில் ஒருவர் காயத்திரி. இவர் ஒரு மூத்த பெண் போராளி. சுதந்திரப் பறவைகள்” என்ற பெண்களுக்கான மாத இதழுக்கு ஆசிரியையாக பணி புரிந்தவர். தனது சஞ்சிகையின் வளர்ச்சிக்காக (திய கருத்துக்களை தேடி காயத்திரி என்னிடம் அடிக்கடி வருவார். அப்பொழுது பெண்களின் இராணுவப் பிரிவுக்கு தளபதியாகப் பணி ரிந்தவர் ஜெயந்தி. அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் ஜெயா. இவர்கள் இருவரும் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள். 1985ல் தமிழ்நாட்டில், பெண்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப் பாசறையில் முதலாவது அணியாகப் பயின்றவர்கள். அடுத்து மூத்த பெண் போராலி தீபா. தீபாவும் ஜெயாவும் ஆரம்பத்தில் சென்னையில் எமது வீட்டில் வசித்து வந்தவர்கள். ஜெயந்தி, ஜெயா, தீபா ஆகிய மூவரும் எமக்கு நெருக்கமானவர்கள். எமது இருப்பிடத்திற்கு அடிக்கடி வருவார்கள். ஜெயந்தி, என்னையும் பாலாவையும் தனது பயிற்சி முகாம்களுக்கு அழைத்து விருந்து தருவார். அவ்வேளை, ஜெயந்தியின் பொறுப்பில், தென்மராட்சியிலுள்ள கிளாலியிலும், வடமராட்சியுள்ள பொலிகண்டி யிலும் இரு பெரும் பயிற்சிப் பாசறைகள் அமைந்திருந்தன. இங்கு நாம் அடிக்கடி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாலா என்னோடு இங்கு வரும்பொழுது அன்றைய அரசியல் நிலைமையை விளக்கி பெண போராளிகளுக்கு வகுப்புகளை நடத்துவார்.
இப்பொழுது, யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகள் பற்றிய படிமம் அடிப்படையான மாற்றத்தைக் கண்டிருந்தது. 1990 ல் இந்திய அமைதிப் படை வெளியேறியதை அடுத்து, ஆயுதம் தாங்கியபடி கம்பீரமான சீருடை அணிந்து யாழ்ப்பாண வீதி வழியே வலம் வந்த ய் போராளிகளுக்கும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய இராணுவப்படையெடுப்பின்போது சாதாரண உடையுடன் வன்னிக்கு பின்வாங்கிய பெண் போராளிகளுக்கும் மத்தியில் அடிப்படை வேறுபாடு இருக்கத்தான் செய்தது. இப்போதைய பெண் போராளிகள் சிறந்த யத பயிற்சி பெற்றவர்கள்; நிறைய கள அனுபவம் உடையவர்கள்; தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இவ்வாறான புதிய பெண் போராளிகள், அணி அணியாக காவல் வலம் வருவதைக் கண்டு வியப்படைந்த பொதுமக்கள், சமதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளதை உணர்ந்தனர். இது சர்ச்சைக்குரிய விவாதங்களை எழுப்பியது. ப் போராளிகளின் இலட்சியப் பற்றையும் அர்ப்பணிப்புக்களையும் தமிழ் மக்கள் போற்றிப் பாராட்டத் தவறவில்லை. ஆயினும் அதே க ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பெண்களின் படிமத்திலும் பாரம்பரிய பங்குகளிலும் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தி விடுவது சாத்தியமென்றும் மக்கள் அஞ்சினார்கள். மரபுக்கும் மாற்றத்திற்கும் மத்தியில் காலம் காலமாக நடைபெற்றுவரும் விவாதம் இது. ட போராளிகளை மையமாகக் கொண்டு இப்பொழுது இச் சர்ச்சை மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. நீளமாக முடிவளர்த்து, சேலை உடுத்தி. அல்லது பாவாடை அணிந்து, தலை குனிந்தபடி பணிவடக்கத்துடல் நடந்து செல்லும் பண்டைய தமிழ் இளம் பெண்ணின் படிமத்தோடு பழகிப யாழ்ப்பாணத்து பழமைவாதிகளில் சில பிரிவினருக்கு, திருமணமாகாத இளம் பெண் போராளிகள் ஆயுதம் தரித்தபடி, சீருடையுடன் வீதிகளில் வலம்வருவது தமிழ்ப் பாரம்பரிய மரபிற்கும் பண்பாட்டிற்கும் ஆபத்தான அச்சுநுத்தலாகவே தென்பட்டது.
வீடு தோறும் விவாதங்களும் சர்சைகளும் கிளர்ந்தன. இயற்கை செயற்கை என்றும், மரபு மாற்றம் என்றும் சாதாரண பகுத்தறிவு மட்டத்தில் தர்க்கங்கள் சூடுபிடத்தன. ஆயுதம் தரித்த விடுதலைப் போராளிகளாக பெண்கள் புதிய பங்கு வகிப்பதை விரும்பராத சிலர், அது இயந்கைக்கு மாநானதென வாதிட்டனர். இயற்கைதான் பெண்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி. ஆண்களைவிட பெண்கள் பலவனமானவர்கள் மட்டுமன்றி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதே வாழ்க்கையில் பெண்கள் வகிக்கும் முக்கியமான பங்கு என்பது இவர்களது கருத்து. வாழ்வின் நியதியாக இயற்கையால் அருளப்பட்ட இந்தப் பங்கை பெண்கள் மீறினால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்றும், அது சமூக கட்டமைப்பையும் மழுங்கையும் சீர்குலைத்து விடும் என்றும் இவர்கள் வாதிடுவர். திருமணத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் அச்சாணியாக விளங்குபவள் பெண் என்றும், இந்த உறவுமுறைகளுக்கு மாறாக அவள் சிந்தித்தாலும், செயற்பட்டாலும் அது குடும்பத்தை மையமாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிற்கு பங்கம் . ஏற்படுத்திவிடும் என்பதும் ஒரு சாராரது கருத்து. தமிழ்ப் பெண்களையும் யாழ்ப்பாண சமூகத்தையும் பொறுத்தவரை, “பெண் விடுதலை” என்பது அவசியமில்லை என்ற பிற்போக்கான வாதத்தை முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த வாதங்கள் எல்லாமே தவறானவை என்பதும், பொருத்தமற்றவை என்பதும் எனது கருத்து. தமிழ்ப் பெண்களுக்கான விடுதலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தெளிவான பார்வை இல்லாத காரணத்தினாலேயே . இத் தவறான கருத்துகள் எழுகின்றன. ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்குகொள்வது என்பது, தமிழ் சமுதாயத்தில் பெண்களின் வாழ்நிலை சம்பந்தப்படூத்தப்பட்ட மட்டில், ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் குறிக்கின்றது என்பது உண்மை. எனினும் பெண்களின் மீட்சி என்பது ஆயுதப் போராட்டத்தில் பங்குகொள்வதோடு முடிவடைவதில்லை. மாறாக, பரந்த குறிக கோள்களை அடையும் நோக்கத்துடனேயே பெண்கள் ஆயுதப் போராட்டத்தில குதிக்கிறார்கள். இந்தப் பரந்த குறிக்கோள்கள் என்ன என்பது பற்றிய விவாதம், ஆரம்ப காலத்தில், யாழ்ப்பாண சமூகத்தில் பெரிதாக எழவில்லை. ஆயுதம் தரித்த பெண்ணின் உருவகம் மட்டுமே முக்கியமாகத் தென்பட்டது. இதனால் யாழ்ப்பாண சமூகத்தில் ஆயுதம் தரித்த பெண்ணின் வடிவமே பெண் விடூதலையின் குறிய்டாகத் தோற்றம் எடுத்தது. இந்தப் படிமம், பரந்துபட்ட பெண் சமூகத்தினரையும் பொது மக்களையும் கவர்ந்து விடவில்லை. அத்தோடு பெண் போராளிகள் தமது நீண்ட கருங்கூந்தலை கத்தரித்து விடுவதென மேற்கொண்ட துணிச்சலான தீர்மானம் பெரிய சர்ச்சையைக் கிழப்பியது. தமது ந்ண்ட முடியை இரட்டையாகப் பின்னி, சுற்நறிவளைத்துக் கட்டுவதுதான் பெண் போராளிகளின் பாணியாக இருந்தது. ஆனால் திடீரென குறுக வெட்டிய முடியுடன் பெண் போராளிகள் தென்பட்டபோது, அது சமூகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டனங்களும் கிளம்பின. குமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கையென பெண் போராளிகள் ம்து குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் பெண் போராளிகள் இது பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விரும்பினால், முடியை குறுக வெட்டலாம் என்ற இயக்கத்தின் முடிவு பெண் போராளிகள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. நேரத்தைப் பிடிக்கும் சிகை அலங்கார மரபிலிருந்து விடுபடுவதற்கு தமக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் உண்மையில் இந்த முடிவு இராணுவ தேவைக்காக மேற்கொள்ளப்பட்டது. போர்ப் பயிந்சியின்போதும், போர் நடவடிக்கைகளின்போதும் நீண்ட பின்னிய முடிகளை வைத்திருப்பது, இளம் பெண்போராளிகளுக்கு ஒரு தொல்லை கொடுக்கும் விடயம். எனினும் எல்லாப் பெண் போராளிகளுமே முடியை குறுக வெட்டவில்லை. அனேகமானோர் இரட்டையாக முடியைப் பின்னி, அவர்களது பாணியில் சுற்றி வளைத்துக் கட்டுவார்கள். என்னைப் பொறுத்த வரையில், முடியை எவ்விதம் வைத்துக் கொள்வது என்பது பற்றி ஒரு தேர்வுச் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்பது ஒரு முற்போக்கான விடயமே.
ஆயுதப் போராட்டத்தில் பங்குகொள்வது குறித்து தமக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி பெண போராளிகள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இலட்சியத்தில் உறுதியாக நின்ற அவர்கள், இந்த எதிர்ப்பு அலைகளை தன்நம்பிக்கையோடும் பெருந்தன்மையோடும் முகம்கொடுத்தார்கள். இதே வேளை போராட்டத்தில் பெருந்தொகை யான இளம் பெண்கள் இணைந்தார்கள். பெற்றோர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காலப்போக்கில் தணிந்து போனது. பெண்களும் போராட்டத்தில் பங்குகொள்ளும் யதார்த்த புற நிலையை தம்மால் மாற்றிவிட முடியாது என உணர்ந்த அவர்கள் நிலைமையை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்குகொள்வது என்பது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாகிவிட்டது. பலர் எதிர்பார்த்ததுபோல அன்றி எச்சரித்தது போல தமிழ்ப் பண்பாடு சீர் கலையவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பான பெண் போராளிகளின் படையணிகள் வளர்ச்சி பெற்று விரிவாக்கம் கண்டதுடன், விடுதலைப் போரிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன. 1991 ஜுலை 10ம் திகதி தொடங்கிய ஆனையிறவுச் சமரின்போது இது புலனாகியது. . இந்தப் பெரும் சமரில் பெண் போராளிகளைக் கொண்ட பல படைப் பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு துணிவாற்றலுடன் வீர சாதனை படைத்தனர். விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படையினருக்கும் மத்தியில் நிகழ்ந்த இந்த உக்கிரமான மோதல்கள் 24 நாட்கள் வரை நீடித்தன. அப்பொழுது விடுதலைப் புலிகளிடம் மரபு வழிப் போருக்கான கனரக ஆயுதங்கள் இருக்கவில்லை. நவீன ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருக்கவில்லை. அத்தோடு, புலிகளுக்கு அனுகூலமற்ற திறந்த வெளி நிலப்பரப்புகளிலேயே சண்டைகள் நிகழ்ந்தன. இந்தக் காரணங்களால் புலிகள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இறுதியில், புலிகளின் படையணிகள் சமர்க் களத்திலிருந்து தந்திரோபாயமாக பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்தச் சமரில் 123 பெண் போராளிகள் உட்பட 573 புலிவீரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தப் பின்னடைவிலிருந்து விடுதலைப் புலிகள் ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக் கொண்டனர். அதாவது, கமது படையணிகளை ஓரு மரபு வழி இராணுவக் கட்டமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தையும். தேவையையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்தப் போர் நடவடிக்கையை திட்டமிட்ட வேளையிலும், செயற்படுத்திய வேளை யிலும் மக்கள் வழங்கிய பங்களிப்பே ஆனையிறவுச் சமரின் முக்கிய அம்சமாக அமைந்தது. புவியியல் ரீதியாகப் பார்க்கப்போனால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொண்டையை நெரிடூவதுபோல அமைந்திருந்த இப் படைத்தளம் தமிழ் மக்களுக்கு நண்ட காலமாகவே எரிச்சலூட்டி வந்திருக்கிறது. இப்படைத்தளம் விடுதலைப் புலிகளால் அழிக்கப்படவுள்ளதும், அது சாத்தியமானால், யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் வன்னி மாநிலத்திற்கு சுதந்திரமாக சென்று வரும் வாய்ப்பு ஏற்படுமென்பதும் தமிழ் மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், உணவு வகைகள் வழங்குவதிலிருந்து, போக்குவரத்து வாகன வசதிகள் செய்வது வரை, பல்வேறு வழிகளில் யாழ்ப்பாணப் பொது மக்கள் ஆனையிறவுச் சமருக்கு பங்களிப்பு செய்தனர். எனக்கிருந்த மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில், காயமடைந்த போராளிகளுக்கு உ குவி செய்ய நானும் முன்வந்தேன். நாம் வசித்த வீட்டுக்கு அருகாமையில் இரண்டு மருத்துவ நிலைகளை ஜெயந்தியும் ஜெயாவும் நிறுவியிருந்தனர். அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் போராளிகளைப் பராமரிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. இது எனக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. முன்னேறிய நாடுகளில் பிரமாண்டமான வைத்திய வசதிகள் கொண்ட பின்புலத்துடன் மருத்துவ, சத்திர சிகிச்சை நோயாளிகளை பராமரிப்பது வேறு; மருத்துவ வசதிகளற்ற, தற்காலிகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிலைகளில் காய மடைந்தோரைப் பராமரிப்பது வேறு. இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு என்பதை பட்டறிந்து கொண்டேன். குடல் முளை அகற்றும் அறுவைச் சிகிச்சையின் பின்னர் ஏற்படும் துப்பரவான காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது வேறு; கூர்மையான பீரங்கிக் குண்டு சிராய்களால் பிளக்கும் தசைகளுக்கு மருந்து கட்டுவது வேறு. இளம் பெண்களுக்கு உடற்பயிற்சி விபத்தின்போது ஏற்படும் சிறிய முறிவுகள் வேறு. 50 கலிபர் இயந்திரத் துப்பாக்கி ரவை ஊடறுத்து 18 வயது இளம் பெண் ஒருத்தியின் கால் எலும்பு சிதறுவது வேறு.
மருத்துவப் பிரிவில் பணிபுரியும் பெண் போராளிகளுக்கு இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிறப்பான மருத்துவ தாதிப் பயிந்சி அளித்திருக்கிறார்கள். இந்த அடிப்படையான தாதிப் பயிற்சியோடு, மருத்துவக் கருவிகளும் போதிய மருந்துகளும் இல்லாத சூழ்நிலையில், இந்த இளம் தாதிகள் அங்கு வந்து சேரும் மிகவும் சிக்கலான, ஆபத்தான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் அபாரமானது. இயக்கத்தின் மருத்துவ நிலையங்களில் ஏராளமான படுகாயமடைந்த பெண் போராளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். படுகாயமடைந்தவர்கள், காயத்தின் வேதனை தாங்கமுடியாது புலம்பும் வேளைகளில் சிறுகாயமடைந்தோர் அவர்களைத் தேற்றுவது மனதை உருக்கும். காயமடைந்த பெண் போராளிகளின் தேவைகளையும் வேண்டு கோள்களையும் சமாளிப்பதில் எல்லையற்ற பொறுமையைக் கடைப்பிடத்தார்கள் மருத்துவத் தாதிமார். மருத்துவ தொழில் நுட்ப அனுபவம் இல்லாத போதும், காயங்களுக்கு மருந்து கட்டுவதில் தாதி- மாரின் கரங்கள் நுட்பமாக செயற்பட்டன. காயங்களிலிருந்து தொற்றுநோய் பரவாமல் தடுப்பதில் வெற்றிகரமாக செயற்பட்டனர். இளம் பெண்களுக்கு ஏற்பட்ட பெரும் காயங்களைப் பார்த்தாலேயே சிலருக்கு அங்கலாய்ப்பு ஏற்படக்கூடும். ஆனால் இங்கு நிலைமை அப்படியல்ல. போர் அனுபவத்தினாலோ அல்லது கடும் காயங்களின் வேதனையாலோ. பெண் போராளிகள் மனம் தளர்ந்து போகவில்லை. இவர்களுக்குப் பண புரிவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. காயங்களின் வேதனைகளையும் சகித்துக் கொண்டு, கேலியும் பகிடியுமாக சிரித்து மகிழும் இவர்களின் மகிழ்ச்சியில் நானும் இணைந்து கொள்வேன். “உனது காயத்தை அன்ரி தொட்டால்போதும் அது குணமாகிவிடும்” என்று காயமடைந்த பெண் போராளிகள் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அப்படியானதொரு அற்புத சக்தி என்னிடம் இருக்கவில்லை. அவர்கள் துரித கதியில் குணமாகி வந்ததற்கு அவர்களது இளமையே காரணம். என்றாலும், எனது பராமரிப்பில் அவர்களுக்கு இருந்த அபார நம்பிக்கை என்னை மகிழ்ச்சியடைய வைத்தது.
சுண்டுக்குளியில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை நிலையங்கள் அமையப் பெற்றிருப்பது, காலக் கெதியில் யாழ்ப்பாண பொதுமக்களுக்கு தெரிய வந்தது, இளம் பெண் போராளிகள் களத்தில் போராடி காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் செய்தி மக்கள் மத்தியில் ஆழமான அனுதாபத்தை தோற்றுவித்தது. தமது அக்கறையையும் நன்றியையும் தெரிவிக்க விரும்பிய யாழ்ப்பாண மக்கள், படுக்கைகள், தலையணைகள் சமைத்த உணவுகள், இளநீர்கள் என பல்வேறு பொருட்களை மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். சுண்டுக்குளியில் இயக்கத்தின் தற்காலிக மருத்துவ நிலையங்கள் அமையப் பெற்றுள்ளன என்ற தகவல் சிறீலங்கா ஆயுதப் படையினருக்கு தெரிய வந்தது. ஒரு நாள் மதிய நேரம், சிறீலங்காவின் குண்டுவீச்சு விமானங்கள் எமது மருத்துவ நிலைகள் மீது திடீரென்று தாக்குதலை நிகழ்த்தின. நான் திகைத்துப் போனேன். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் நான் அங்கிருந்து வீடு திரும்பினேன். காயமடைந்த போராளிகளுக்கு ஏதாவது தேவைகள் இருக்கின்றதா என்பதை அறியவே நான் அங்கு சென்றேன். மருத்துவ நிலையத்திலிருந்து நான் வீடு திரும்பி ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருக்கும் ஒரு பிரமாண்டமான வெடிச்சத்தம் அதிர்ந்தது. அதன் அதிர்வு அலையால் நான் தரையில் வீசப்பட்டேன். எமது வீடு மீதுதான் குண்டு வீச்சு நடைபெறுவதாக எண்ணினேன். உடனே எழுந்து பதுங்கு குழியை நோக்கி ஓடினேன். வீட்டுக் கதவை தாண்டியபோது, பயங்கர ஓசையுடன் இரண்டாவது குண்டும் வெடித்தது. அதன் அதிர்வு அப்பகுதியையே நடுங்கச் செய்தது. குண்டுச் சிதறல்களும் அவ்விடமெல்லாம் பறந்தது. நான் பதுங்கு குழிக்குள் ஒளிந்தேன். சிறிது நேரம் கழித்து எமது மெய்ப்பாதுகாவலரான போராளிகள் என்னிடம் ஓடிவந்தார்கள். குண்டுவீச்சு விமானங்கள் சென்றுவிட்டதாக சொன்னார்கள். எமது வீட்டுக்கு மிகவும் சமீபமாக விமானத் தாக்குதல் நிகழ்ந்ததால் நாம் எல்லோருமே பதட்டமடைந்து போனோம். குண்டுகள் எங்கே வீசப்பட்டிருக்கலாம் என்று நாம் அங்கலாய்த்தபோதுதான் எமது மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக நான் அங்கு ஓடிச் சென்றேன். அதிர்ஷ்டவசமாக, மருத்துவ நிலையத்திலிருந்த பெண் போராளிகள் எவருக்குமே உயிர்ச் சேதமோ அன்றி காயமோ
ஏற்படவில்லை. ஜெட் விமானங்கள் ஆகாயத்தில் சுற்றியதை அறிந்ததுமே காயமடைந்த போராளிகளும் தாதியரும் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பிப் பிழைத்தனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக வீதியால் அவ்வழியே சென்ற ஒரு அப்பாவிப் பெண் கலைசிதறி உ யிர் நீத்தார். ஆனையிறவுச் சமரை அடுத்து நாம் வசித்த சுண்டுக்குளி பகுதி அடிக்கடி விமானக் குண்டு வச்சுக்கு இலக்காகியது. எமது வீட்டிற்கும் குறிவைக்கப்படலாம் என அச்சுறுத்தல் எழுந்த காரணத்தினால் நாம் சுண்டுக்குளியிலிருந்து இடம் மாறி, கொக்குவில் பகுதியில் ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் குடியமர்ந்தோம். யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு வரை நாம் அந்த வீட்டிலேயே வசித்து வந்தோம்.
7.4 யாழ்ப்பாணத்தில் புலிகளின் நிர்வாகம்
போர்க்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட யாழ்ப்பாண மக்கள், இயல்பான செயற் பாடுகளோடு காலத்தை ஓட்டினர். அதே சமயம், விடுதலைப் புலிகள் இயக்கமும் தனது இராணுவ அரசியற் பிரிவுகளை விரிவாக்கம் செய்ததோடு, சிவில் நிர்வாக கட்டமைப்புகளையும் பலப்படுத்தியது. சட்டம் ஓழுங்கைத் தவிர பல்வேறு அரச நிறுவனங்களையும் செயற்படூவேதற்கு புலிகள் அனுமதித்தனர். அரச நிர்வாக கட்டமைப்பான கச்சேரி செயலகம் மற்றும், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் போன்ற துறைசார்ந்த இலாகாக்கள் அரச நிதியுதவியுடன் செயற்பட்டு வந்தன. மத்திய அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்து கண்காணிக்கும் நோக்குடனேயே ஒரு “நிழல்” நிர்வாகத்தையும் விடுதலைப் புலிகள் நிறுவியிருந்தனர். இந்த நிழல் நிர்வாக கட்டமைப்பை செயற்படூத்த அனுபவமும் ஆற்றலும் மிக்க பொதுமக்களையும் புலிகள் வேலைக்கு அமர்த்தினர். திரு. தமிழேந்தியின் தலைமையின் கழ் நிதிப்பிரிவு செயற்பட்டது. இப்பிரிவில் குடிமக்களான அனுபவம் பெற்ற கணக்காளர்களும் பணிபுரிந்தனர். ஒரு சிறப்பான வரி அறவிடும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தகர்களிடமும் நடுத்தர வியாபாரிகளிடமுமே வரி அறவிடப்பட்டது. இந்திய அமைதிப் படை வருவதற்கு முன் பொருளாதார ஆய்வு நிறுவனம், தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வை முன்னேற்றமடையச் . செய்யும் நோக்குடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கைப் பேணும் நோக்கில் முதலில் காவல்துறைக் கட்டமைப்பும், பின்னர் நீதி நிர்வாக சேவையும் உருவாக்கப்பட்டன. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஒரு . நடைமுறையான அரச கட்டுமாணத்தை விடுதலைப் புலிகள் நிறுவினார்கள். இதன் தலைமை செயலகம் யாழ்ப்பாணத்திலும், கிளை- கள் தமிழர் தாயகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் நிறுவப்பட்டன. திரு. பிரபாகரன், குறிப்பாக வட மாகாணத்தில் தனது நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்தி வந்த வேளையில், கிழக்கில் திரு. பிரேமதாசா தனது ஆயுதப் படைகளை கட்டவிழ்த்து விட்டார். சிங்கள ஆயுதப் படைகள், கிழக்கு மாகாண கரையோரப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பட்டினங்கள் நகரங்களைக் கைப்பற்ற, புலிப் படைப் போராளிகள் காட்டுப் புறங்களுக்கு பின்வாங்கினர்.
நாம் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிய வேளையில் இயக் கத்தின் அரசியல் அமைப்பான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், தலைமைச் செயலகத்தை நிறுவி, செயற்பட்டு வந்தது. யாழ்ப்பாணக் குடா நாடு அடங்கிலும் மக்கள் முன்ணியின் கிளைகள் நிறுவப்பட்டன. சட்டம், ஒழுங்கு, நிதிப் பிரிவு தவிர்ந்த ஏனைய சிவில் நிர்வாகக் கட்டமைப்புகள் மக்கள் முன்னணியின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கின. மக்கள் முன்னணியிலும், மந்றும் சிவில் நிர்வாக சேவைகளிலும் பொதுசன ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதால், விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு மக்கள் இயக்கம் என்ற வகையில் நற்பெயர் ஈட்டியது. ஆனால் காலப் போக்கில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புலிகளின் நிர்வாகம் விமர்சனத்துக்கு இலக்காகியது. வெளிநாடுகளில் தஞ்சம் கோருவதறந்காக கொழும்புக்கு அலை அலையாக அள்ளுப்பட்ட இளைஞர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடவுக் கட்டுப்பாட்டு முறை (பாஸ் முறை) ஒரு பெரிய சர்ச்சையையே உருவாக்கிவிட்டது. தமிழ் இளம் சமூகத்தினர் பெருந்தொகையில் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறுவதன் விளைவாக தமிழ்ச் சமூக கட்டமைப்பு சிதையக் கூடுமென புலிகள் அஞ்சினார்கள். இதனைத் கடுப்பதற்காகவே கடவுக் கட்டுப்பாட்டு முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழ்ப் பெற்றோர்களின் சிந்தனையோட்டம் மாறாக இருந்தது. குமது பிள்ளைகள் போர்ச் சூழலிலிருந்து வெளியேறி, வெளிநாடு சென்று, சுப்ட்சகரமான வாழ்வைத் தேடிக் கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் விரும்பினார்கள். இதனால் விடுதலைப் புலிகளின் கொள்கைக்கும் தமிழ்ப் பெற்றோர்களின் அபிலாசைக்கும் மத்தியில் முரண்பாடு நிலவியது.
பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் தோற்றுவித்த அடுத்த விடயம் தமிழ்ச் சினிமாப் படங்களாகும். பெரும்பாலான தமிழ்ச் சினிமாப் படங்கள் மெய்யான யதார்த்த வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோடு மக்களின் மனநிலையையும் மாசுபடுத்துவதாகவும் புலிகளின் தலைமைப் பீடம் கருதியது. ஆனால் மக்கள் அப்படிக் கருதவில்லை. படங்களை தெரிவு செய்யும் உரிமை தமக்கு உண்டு என்றும், இந்தத் தேர்வு உரிமையோடு படங்களை சுயமாக தணிக்கை செய்யும் ஆற்றலும் தமக்கு இருக்கின்றதென்றும் பெரும்பான்மையான மக்கள் கருதினார்கள். இவர்களது கருத்து சரியானதென்றே நானும் நினைத்தேன். போர்ச் சூழலில் மக்களுக்கு பொழுது போக்கு எதுவுமில்லை என்பதும் இச்சர்ச்சைக்குரிய பின் புலத்திலுள்ள ஒரு முக்கிய காரணம். பொழுது போக்கு மறுக்கப்பட்ட சூழலில்தான், மனித வாழ்வின் மேம்பாட்டிற்கு பொழுது போக்கு எத்தகை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. / போரும் வன்முறையும் தலைவிரித்தாடும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் எந்த வடிவிலான பொழுது போக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என மக்கள் அங்காலாய்த்துக் கொண்டிருந்த நேரமது. பொதும்க்களிற் பலர் எமது வீட்டிற்கு வந்து தமது விரக்தியை வெளிப்படையாகவே சொன்னார்கள். பல விடங்களில் அவர்களது கருத்தை நாம் ஏற்க வேண்டியிருந்தது. இந்த விரக்திகள், விமர்சனங்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டேயிருந்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தபோதும் பொதுமக்கள் அதனைப் பொறுத்துக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் சுதந்திர வீரர்கள் என்பதும் அவர்களே தமது சொந்தப் பிள்ளைகள் என்பதும் மக்களின் கருத்து. ஒரு புறத்தில் ஒரு நவீன அரசுக்கு எதிராக முழு அளவிலான போரை நடத்திக் கொண்டு, மறுபுறத்தில் தமது கட்டூப்பாட்டூப் பகுதியில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதில் புலிகள் இயக்கம் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களை மக்கள் அறிவார்கள். அதனால் விடுதலைப் புலிகள் மீது மக்களுக்கு அனுதாபமே மேலோங்கி நின்றது. ஒரு காவல் துறை நிர்வாகமும், நீதி நிர்வாக சேவையும் செயற்படத் தொடங்கியதை அடுத்து யாழ்ப்பாணத்தில் அபாரமான முறையில் குந்நச் செயல்களின் விகிதாசாரம் வெகுவாகக் குறைந்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாக இயந்திரத்தில் பெண்கள் பங்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குமிழழக் காவல் துறையினர் பெண்களைச் சேர்ந்து, பயிற்சியளித்து, காவல் துறை பெண் அதிகாரிகளாக சேவைக்கு அமர்த்தினர். காவல் துறையில் பெண்கள் இணைந்து கொள்வதால், பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்கள் தண்டிக்கப்படுவதுடன் பெண்களுக்கு நீதியும் வழங்கப்படும் என்ற கருத்தும் நிலவியது. குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரத்துடன் பெண் காவல்துறை உறுப்பினர்களும், பெண் போராளிகளும் வீதிகளில் நடமாடியதால் பெண் சமூகம் மத்தியில் நிம்மதியும் பாதுகாப்பும் நிலவியது. இரவு வேளைகளில் பயம் எதுவுமின்றி பெண்கள் பயணம் செய்ய முடிந்தது. பெண்களுக்கு கிட்டிய இப்புதிய அனுபவம் விடுதலைப புலிகளது நிர்வாகத்தின் மகத்தான சாதனை என்றே சொல்ல வேண்டும்.
தமது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடும் விடுதலைப் புலிகள் இயக்கம் கல்வியின் மேம்பாட்டிற்காக உழைத்தது. அரச கல்வி முறையில் தலைய்டு செய்யாமல் திரு. இளங்குமரன் (பேபி சுப்ரமணியம்) தலைமையில் தமிழ்ழ கல்விக் கழகம் நிறுவப்பட்டது. இக்கல்விக் கழகம் நிறுவப்பட்டு, தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் வரலாறு போன்ற துறை சார்ந்த பாடத் திட்டங்களில் புதிய நூல்களை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவியது. சிறீலங்கா அரசின் கல்வி இலாகாவால் வெளியிடப்பட்ட பாட நூல்கள் தமிழர்களது வரலாறு பற்றியும் நாகரீகம் பற்றியும் திரிபுபடூத்தப்பட்ட கருத்துகளும் தகவல்களும் நிறைந்து இருந்தன. இதனைக் கருத்திற்கொண்டே விடுதலைப் புலிகளின் கல்விக் கழகம், தமிழீழ மக்களின் உண்மையான வரலாந்றையும் தமிழ் மொழியின் அழகையும் ஆழத்தையும் எடுத்தியம்பும் புதிய பாட நூல்களை வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் இந்த முற்போக்கான கல்விக் கொள்கையானது, தமிழ் மக்களின் அறிவுத் தாகத்திற்கு இசைவாக இருந்ததால் யாழ்ப்பாண சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
7.5 பெண் போரானணிகளன்
இது இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் மத்தியில் பல முனைகளில் மோதல்கள் நிகழ்ந்தன. இந்த மோதல்களில் பெண் போராளிகளின் பங்களிப்பு விடுதலைப் போரின் இணைபிரியாத அம்சமாக வடிவெடுத்தது. ஆனையிறவுச் சமரில் பெண் போராளிகளே முக்கிய பங்கு வகித்ததைத் தொடர்ந்து “மின்னல் இராணுவ நடவடிக்கை” என்ற பெயரால் மணலாற்றில் நிகழ்ந்த தற்காப்புச சமரிலும், பெண் போராளிகள் பங்கு கொண்டனர். பலாலிப் பெருந்தளத்தின் எல்லையோரக் காவல் நிலைகளில் நிலை கொண்டிருந்த பெண் புலிகளின் போர் அணிகள், சிறீலங்கா இராணுவத்தின் மினி முகாம்கள் மீது துணிகரத் தாக்குதல்களை நடத்தி சாதனைகள் படைத்தனர். விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளின் பங்களிப்பு ஆழமாகிச் சென்றபோது, அவர்களது வர தீரச் ் செயல்கள் பற்றிய கதைகள் எனது காதுக்கு எட்டியது. இந்த இளம் பெண்கள் எதிர்கொண்ட திகைப்பூட்டும் சம்பவங்களையும், அபூர்வமான அனுபவங்களையும் எழுத்தில் வடிக்க வேண்டுமென எனக்கு ஒரு ஆசை பிறந்தது. காலமும், காலத்தின் விரிப்பில் கட்டவிழும் நிகழ்வுகளும், துரித கெதியில் ஓடிக் கொண்டிருந்தன. வரலாற்று நிகழ்வுகளை உட னடியாகப் பதியாவிட்டால் ஞாபகத்தில் பசுமையிலிருந்து அவை மங்கலாகிவிடலாம். அத்தோடு புதிதாக கட்டவிழும் நிகழ்வுகளால் பழைய வரலாற்றுச் சம்பவங்களின் உண்மைகளும் திரிவுபடலாம். ஆகையால் தான் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு நூல் வெளியிட முடிவு செய்கேன். பெண்களின் படைப்பிரிவுக்கு அன்று தளபதியாகப் பணிபுரிந்த ஜெயந்தி, எனது எழுத்து முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்புத் தர முன்வந்தார். அத்தோடு பல்வேறு சமர்களில் களமாடி வீரசாதனை படைத்த பெண் போராளிகள் சகலரையும் எனக்கு அறிமுகம் செய்து வைக்கவும் இணங்கினார். முக்கிய பெண் தளபதிகள் எனது வீட்டுக்கு வருகை தந்து போராட்ட வரலாறு பற்றி என்னுடன் கலந்துரையாடினர். பல சமயங்களில் நான் பெண் போராளிகளிடமிருந்து செவ்வி எடுக்கும்போது, அவர்களது சொந்தப் போர் அனுபவங்களை அவர்களது வாயால் கேட்கும் போது மெய்சிலிர்க்கும். மாவீரர் ஆகிவிட்ட தமது தோழிகளின் வீரம் செறிந்த வரலாறுகளை விபரிக்கும்போதெல்லாம் தாழ்ந்த குரலில் தன்னடக்க மாகவும் மரியாதையுடனும் கதைப்பார்கள். சிலர் தமது சொந்தப் போர்ச் சாதனைகளை கூறும்போது உணர்ச்சிவசப்படூவார்கள். சில சிக்கலான நிகழ்வுகளை சிலர் நடித்துக் காட்டியும் விளக்குவார்கள். ஆழமான அதிர்ச்சியூட்டூும் அனுபவங்களை சொற்களில் வடிக்க முடியாது திண்டாடுபவர்களும் உண்டு. போர்க்கள வெற்றிகள் பற்றிச் சொல்லும்போது எல்லோருமே நெஞ்சை நிமிர்த்தியபடி பெருமிதத்துடன் பேசுவார்கள். களமாடிக் கொண்டிருக்கும் தமது சக போராளிகளுக்கு அவசியமாகத் தேவைப்படும் ரவைகள் வெடிபொருட்களைக் காவியபடி, இருபுறத்திலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபடி இருந்தபோதும், துணிந்து சாவுக்கு பயப்படாது களமுனைக்குச் சென்ற சம்பவங்களை சில பெண் போராளிகள் விபரித்தார்கள். தாம் பசி கிடந்தபடி, போர் முனையில் நின்ற தமது சக போராளிகளுக்கு நேரம் தவறாது, சிரமமாக உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்லும் தன்னலமற்ற சேவை பற்றியும் சில பெண் போராளிகள் எடுத்துச் சொன்னார்கள். கள முனைகளில் காயமுந்றோருக்கு அவசர சிகிச்சை அளித்து, உயிராபத்தையும் பொருட்படுத்தாது அவர்களை சுமந்து செல்லும் பெண் மருத்துவப் பேராளிகளின் துணிச்சலான சாதனைகள் பற்றியும் சிலர் விபரித்தார்கள். சிங்கள ஆயுதப் படைகளின் திடீர் சுந்றிவளைப்புகளை உடைத்துச் சென்ற வியப்பூட்டும் சம்பவங்கள் பற்றியும் சொன்னார்கள். சில பெண் போராளிகள் தமது மரணம் பற்றி முன்னுணர்ந்து சொன்னதையும், பின்னர் அது அவ்வாறே நிகழ்ந்ததாகவும் எனக்கு சிலர் விசித்திரமான சம்பவங்களை கூறினார்கள். இப்படியான பல வியப்பூட்டும் சம்பவங்களை, வீரம் செறிந்த தனிமனித வரலாறுகளை, அலாதியான அர்ப்பணிப்புகளை இப் பெண் போராளிகளிடமிருந்து கேட்டபோது நான் மலைத்துப் போனேன். அவர்கள் மத்தியில் பிரசன்னமாக இருப்பதே எனக்குப் பெருமிதமாக இருந்தது. அவர்கள் கூறிய சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களது ஓட்டுமொத்தமான போரனுபவங்களையும் தொகுத்துப் பார்த்தபோதுதான் அவர்களது இலட்சியப் பற்றுறுதியையும், அர்ப்பணிப்பின் ஆழத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்ட காரணத்தினாலேயே பெண் போராளிகள் பற்றி விடயம் தெரியாது கண்டன விமர்சனங்களை எழுதுபவர்கள் மீது எனக்கு கடும் சினம் ஏற்படுவதுண்டு. விடுதலைப் புலிகணின் பெண் போராளிகள் என்ற எனது ஆங்கில நூல் 1993 ஜனவரி முதல் திகதி யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகியது. பின்னர் விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் இந்நூலினை லண்டனிலும் பாரிசிலும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் மகளிர் கட்டமைப்பின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி பற்றிய வரலாற்றுப் பதிவாகவே இந் நூல் அமைகிறது. தமிழீழ விடுதலைப் போரில் பெண் போராளிகள் பங்கு கொண்ட சமர்களையும் அவர்களது சாதனைகளையும் இந்நூல் விபரிக்கின்றது. 1986 ஒக்ரோபரில், மன்னாரில் நிகழ்ந்த சமரில் முதற் தடவையாக போராட்ட களத்திற்கு அறிமுகமாகியதில் இருந்து 1992 நவம்பர் 23ல் பலாலி இராணுவத் களம் ப்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பங்குகொண்டதுவரை, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது ஆறாண்டு கால ஆயுதப் போராட்ட வரலாற்றை இந் நூல் சித்தரித்துக் காட்டூகின்றது. காட்டுப்புற கெரில்லாப் போர் முறையிலிருந்து, மரபு வழிப் போர் வரை பல்வகையான போர் அனுபவங்கள் ஊடாக மகளிர் படையணியில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் இந்த வரலாற்று விவரணத்தில் விபரிக்க முயன்றுள்ளேன். பிரமாண்டமான இராணுவ இயந்திரமான இந்தியப் படைகளை, காட்டுப் புற, நகர்ப் புற கெரில்லாப் போர் வடிவில் முகம்கொடுத்து, புலிகளின் மகளிர் படையானது ஒரு வலுப்பெற்ற போராட்ட சக்தியாக உருவெடுத்ததையும் இந் நூலில் விபரிக்கின்றேன். இந் நூலில், ஒரு பகுதி பெண் போராளிகளுக்கு வழங்கப்படும் போர்ப் பயிற்சி பற்றி விபரித்துக் கூறுகிறது. எந்த வித, ஆபத்தான போர்ச் சூழலையும் எதிர்கொண்டு நிற்க வல்ல, ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய போராளிகளாக மாற்றும், மிகத் திறமான கடுமையான பயிற்சி பெண் போராளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பதை இப் பகுதியில் நான் எடுத்துக் கூறுகின்றேன்.
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, தமிழீழப் பெண் சமூகம் அரசியல் விழிப்புணர்வுடன் சுயநிர்ணய உரிமைக்கான தேசியப் போராட்டத்தில் பங்குபற்றி வந்துள்ளது புலனாகும். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நடைபெற்ற அகிம்சை வழிப் போராட்டங்களில் பெண்கள் தீவிரமாக பங்கு கொண்டனர். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களது பங்களிப்பின் ஒரு விரிவாக்கமாகவே ஆயுதப் புரட்சிப் போரிலும் பெண்கள் பங்கு கொள்கிறார்கள் என நான் எனது நூலில் வாதிடுகிறேன். ஆயுதப் போரில் பெண்களை ஈடுகொள்ளச் செய்த, அக, புற சூழல்களை இந் நூலில் எடுத்து விளக்கும் போது, இவை “அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுச் செல் நெறிகளால் உருவகித்தவை”1 எனச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். தேசிய இனக் . கட்டமைப்பில் ஒரு இணைபிரியாத அங்கமாக இருப்பதாலும், அரச ஒடுக்குமுறைக்கு நேரடியாக பலியாகி வருவதாலும், மக்களின் போராட்டம் என்ற ரீதியில் தமிழ்ப் பெண்கள் தாமாகவே முன்வந்து ஆயுத எதிர்ப்புப் போரில் பங்குகொள்கிறார்கள் என்றும் இந் நூலில் நான் வாதிடுகிறேன்.
1 Adele Ann. ‘Women Fighters of Liberation Tigers’ 1993. Thasan Press 1993. Chapter One Historical Background’ Page 1.
8 கண்டன ஆய்வாளருக்கு ஒரு பதில்
“விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்” என்ற எனது நூல். பெண்ணியம் பற்றிய அறிவாய்வு ஆவணமாக அமையவில்லை என்பதை நூலின் முன்னுரையிலேயே நான் தெட்டத் தெளிவாக விளக்கி யிருக்கிறேன். “ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் எதிர். கொள்ளும் பல்வேறான பெண்ணியப் பிரச்சனைகள் பற்றி முழுமையான ஆய்வு செய்வது இந் நூலின் குறியிலக்கிற்கு அப்பாற்பட்டது. எனினும், இந் நூலடங்கிலும் ஆங்காங்கே ஒரு சில பெண்ணியப் பிரச்சினைகளை மேலோட்டமாகத் தொட்டிருக்கிறேன்”2 என முன்னுரையில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
2 Ibid. Page iv.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஆங்கில எழுத்துக்கள் அரிதாகவே உள்ளன. ஆகவேதான், 1993 ல் வெளியான எனது ஆங்கில நூல், பெண் புலிகள் பற்றிய பல்வேறு திறனாய்வாளர்களினதும் கண்டன விமர்சனங்களுக்கு பலிக்கடா ஆனது. அரசியலிலும் கருத்தியலிலும் திறனாய்வுகளுக்கு இடமுண்டு. எனினும், திறனாய்வை இருவகைப்படுத்தலாம். ஒன்று ஆக்கபூர்வமானது; மற்றது எதிர்மறையானது. சில திறனாய்வாளர்கள் ஆக்கபூர்வமான ஆய்வை செய்கிறார்கள். இந்த ஆய்வுகள் புறநிலைப் பார்வை உடையதாக, நடூுநிலையானதாக அமைந்திருக்கும். இந்த ஆக்கபூர்வமான திறனாய்வுகள் பயனுடையவை: வரவேற்கத் தக்கவை. இவை பக்க சார்பு அற்றதாக, ஆய்வுக்கு ஆளாகும் பொருளின் அல்லது விடயத்தின் மெய்நிலையை வெளிக்காட்டூவதாக இருக்கும். அதே சமயம், எதிர்மறையான திறனாய்வு என்பது சாராம்சத்தில் ஆக்கக் கேடானதாக இருக்கும். புற நிலை ஆய்வுக்கு எதிர்மாறானதாக அமையும். இவ்வாய்வுகள் அனேகமாக தவறானதாக இருப்பது மட்டுமன்றி, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பொருளின் அல்லது விடயத்தின் மெய் நிலையை புலப்படுத்தத் தவறிவிடும்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்குகொள்ளும் பெண் போராளிகள் பற்றி எதிர்மறையான, கண்டன விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு முன்னணியில் நிற்பவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதிகளும் ஆவர். இவ்வகையான திறனாய்வாளர்கள், எப்பொழுதுமே ஒடுக்குமுறையான அரச இயந்திரத்தின் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அரசியந் போராட்ட வடிவமாக உருவாக்கம் பெற்றிருக்கும் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் நியாயப்பாட்டை கண்டித்து மாசு கற்பிப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம். ஆயுதப் போராட்டத்தில் பங்குகொள்ளும் பெண் போராளிகளை எதிர்மறையாக விமர்சிப்பதன் வாயிலாக, தமிழ் மக்களின் பொதுவான அரசியல் போராட்டம் மீது பரந்த அளவில் கண்டனத் தாக்குதலை தொடுப்பதும் இவர்களது தந்திரோபாயம். ஒட்டுமொத்தத்தில் பார்க்கப்போனால், ஒடுக்கப்படும் இனத்தின் இணைபிரியா அங்கமாக விளங்கும் பெண் சமூகத்தினர் கம்மைப் பேரழிவிலிருந்து காப்பாந்றிக் கொள்ள வேண்டிய தற்காப்பு உரிமையை இந்த எதிர்மறை விமர்சனங்கள் மறுத்துவிட முயற்சிக் கின்றன என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் இளம் பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டதன் வரலாற்றுப் புறநிலைகள் பற்றிய ஆழமான அறிவு எதுவுமின்றி, பெண் போராளிகளை கண்மூடித்தனமாக விமர்சித்து எழுதும் பெண்ணிய எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் சிலர் சிங்களப் பெண்ணியவாதிகளாவர். இவர்களது ஆய்வுகள் பக்க சார்படையவை. சிங்களப் பேரினவாத சித்தாந்த சகதிக்குள் இருந்து வருபவை. கொழும்பில் பிறந்து, வெளிநாட்டில் கல்வி பயின்ற தமிழ்ப் பெண்ணியவாதிகள் சிலரும் பெண் போராளிகள் மீது கண்டன விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். தமிழர் தாயகத்தில் நிகழும் அரச ஒடுக்குமுறை பற்றியோ, அதற்கு எதிரான ஆயுத எதிர்ப்பு முறை பற்றியோ, அவற்றின் வரலாற்றுப் புறநிலைகள் பற்றியோ இவர்களிடம் ஆழமான பார்வை இல்லை. இவர்கள் படித்த அறிவுஜீவிகளாக இருந்தபோதும், தமது ஆய்வுகளுக்கான தகவல் களை கொழும்பு ஊடகங்கள் உற்பத்தி செய்துவரும் செய்திக் குப்பைகளிலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். மானிடத்தை மீட்கும் தரிசனம் கொண்ட இரட்சகர்களாக இவர்கள் தம்மைக் கருதிக் கொள்கிறார்கள். அனைத்துலக பண்பாடுகள் ஒன்று கலந்து ஒரு பொதுவான மானிட நாகரீகத்தை அதியுன்னத விழுமியமாக வரித்துக் கொண்டதால், தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தை தாம் துறந்து விட்டதாக இவர்கள் போலிப் பெருமை கொள்கிறார்கள். இவர்களது பார்வையில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமானது ஒரு குறுகிய கேசியவாதத்தின் அசிங்கமான வெளிப்பாடாகும். இப்படியான திறனாய்வாளர்களில் ஒருவர்தான் ராதிகா குமாரசுவாமி. விருதலைப் புலிய் பெண்புலிகள்; இதுதான் விருதலையா?3 என்ற தலைப்பில், ஒரு ஆங்கில கொழும்பு வாரப் பத்திரிகையில் ராதிகா குமாரசாமி எழுதிய கட்டுரை, சமூகவியலாளர் மத்தியிலும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயுதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ்ப் பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் மிகவும் தவநான, பிறழ்வுபட்ட பார்வையிலிருந்தே இந்தச் சர்ச்சை எழுந்தது. ஆயுதப் போராட்டத்தை ஒரு அரசியற் போராட்ட வடிவமெனக் கருதுவதை அவர் கடுமையாகக் கண்டிப்பதும் ஒரு முக்கிய பிரச்சினையாகக் கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பற்றிய அவரது கண்டன ஆய்வில் பல்வேறு பெண்ணியப் பிரச்சினைகளையும் அவர் எழுப்புகிறார்.
3 Coomaraswamy, Radhika. LTTE Women Is This Liberation The Sunday Times January 5th 1997.
ராதிகா குமாரசுவாமியின் ஆய்வில், எனக்கு ஆச்சரியமூட்டிய விடயம் என்னவென்றால், அவர் தமிழரின் அடிப்படையான பிரச்சினைக்கு இருட்டடிப்புச் செய்ததுதான். 70,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்த, இன அழிப்பு வடிவிலான, அரச பயங்கரவாத ஓடுக்குமுறை பந்றி அவர் தனது ஆய்வில் எதுவுமே குறிப்பிடவில்லை. அடுத்து எனக்கு வியப்பூட்டிய விடயம் என்னவென்றால் தமிழரின் அரசி யற் போராட்ட வரலாற்றையும் அவர் மூடி மறைத்ததுதான். இரு தசாப்தங்களுக்கு மேலாக நிகழ்ந்த அமைதி வழிப் போராட்டங்கள் பந்றியோ, அவை எவ்வாறு அரச பயங்கரவாத வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்டன என்பது பற்றியோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆகவே, வரலாற்றுத் தளமும் பின்னணியுமற்ற அவரது ஆய்வில், அரச வன்முறைக்கு எதிரான தமிழரின் அரசியற் போராட்டம் இருட்டடிப்பாகிறது. இவ்விதம், அரச (வன்முறையை மூடிமறைக்கும் ராதிகா குமாரசுவாமி, தான் வன்முறைக்கு எதிரானவர் எனப் பிரகடனம் செய்கிறார். அத்துடன், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை “வன்முறையாளர்” என்றும் வசைபாடுகிறார். ராதிகாவின் ஆய்வுக் கட்டுரையை மிகவும் உன்னிப்பாக படித்ததிலிருந்து, இவருக்கு விடுதலைப் புலிகளின் இலட்சியம், கொள்கை, சித்தாந்தம் ஆகியன பற்றி மிகவும் குறுகிய அறிவு மட்டுமே இருப்பதுபோல எனக்கு தெரிகிறது. தனது சொந்தக் கற்பனைகளாலும் ஊகங்களாலும் பெறப்பட்ட தவறான . பார்வையின் அடிப்படையிலேயே பெண் புலிகளை இவர் சித்தரிக்க முனைகிறார்.
முதற்படியாக நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். அதாவது, மனித உரிமை, அகிம்சை, மானிடத்தின் மேம்பாடு போன்றவற்றில் ராதிகா குமாரசுவாமி கொண்டூள்ள இலட்சியப் பற்றை நான் பாராட்டுகின்றேன். அனைத்துலக மனித நேய அரசியலின் அடிப்படை விழுமியங்களை அவர் ஆதரித்தும், அவந்றிற்காக குரல் கொடுத்தும் வருகிறார். ஐ.நா சபையின் சாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் மனித உரிமைக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் எனக்கும் ராதிகாவுக்கும் எவ்வித முரண்பாடும் இருக்கப்போவதில்லை. மனித உரிமைகளும், சுதந்திரங்களும் மதிக்கப்படூுவது மானிட மேம்பாட்டிற்கு மையமானது. உலக அரசி யலில் இவை தொடர்ந்தும் முக்கிய இடத்தைப் பெறும். அத்தோடு, அமைதி வழியை ஆதரிப்பதிலும் கெளரவிப்பதிலும் எனக்கு சிக்கல் இல்லை. மானிடத்தின் மேன்மைக்கும், சமூகத்தின் உயர்ச்சிக்கும், நாகரீக வாழ்விற்கும் இத்தகைய உன்னத விழுமியங்கள் அடிப் படையானவை. மனித. நேயம், சிருஷ்டியின் அற்புதம், பல்லின உயிர்வாழ்வின் பிரமிக்க வைக்கும் அழகு, மானிடத்தின் அற்புத சாதனைகள் - இவ்விடயத்தில் ராதிகாவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள நான் தயார். எனினும், மானிட மேம்பாட்டிற்கு வழிகொலும் உன்னத விழுமியங்கள் பற்றி சிந்திப்பதோடு நாம் நின்றுவிட முடியாது. சமூக அநீதிகளாலும், அடக்குமுறையாலும் நசுக்கப்பட்டு மூச்சுத் திணறி நிற்கும் மனித குலத்தின் பெரும்பகுதி மக்களை நாம் புறம் தள்ளி விட முடியாது. பல்வகையான அடக்குமுறை வடிவங்களுக்கு இம்மக்கள் ஆளாகி நிற்கிறார்கள். சாதியத்தால் ஒடுக்கப்படும் மக்கள்; பாலியல் அடிப்படையில் பாரபட்சத்தையும் வன்றையையும் எதிர்கொள்ளும் பெண்கள்; பெரிய தேசிய இனங்களால் நசுக்கப்படும் சிறிய தேசிய இனங்கள்; இனவேறுபாடு, மத வெறுபாடு காரணமாக இன அழிவை எதிர்கொள்ளும் சமூகங்கள்; தோலின் நிற வேறுபாட்டால் அந்திக்கு முகம்கொடுக்கும் மக்கள் இப்படியாக இன்னும் எத்தனையோ வகையான அடக்குமுறைகளும் அநீதிகளும் இவ்வுலகில் தலை விரித்தாடூகின்றன. தமக்கே உரித்தான துன்பங்களோடும் துயரங்க ளோடும், போராட்டங்களோடும் ஓடுக்கப்பட்டூவரும் மனித சமூகங்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருவது யதார்த்த மெய்நிலை. இவற்றுள் சில சமூகங்கள் இன அழிப்புப் பரிமாணத்தில் தீவிரமான அடக்கு முறையையும் மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டு நிற்கின்றன. சமாதானப் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு போன்ற வழமையான சமரச முயற்சிகளும் இந்தச் சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொண்டுவரவில்லை. மாறாக இம் மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடரவே செய்கிறது. இப்படியான அவல நிலையில், தமக்கு எதிராக ஏவப்பட்டிருக்கும் இன அழிப்பு வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள இம்மக்கள் முடிவு செய்கிறார்கள். தற்பாதுகாப்பின் சட்டபூர்வமான இறுதி ஆயுதமாகவே இம்மக்கள் வன்முறை வடிவத்தை போராட்ட வழிமுறையாக தேர்ந்தெடுக்கிறார்கள். சகல விதமான சன நாயக, அமைதிப் போராட்டங்களும் வலுவிழந்து செயலிழந்து போன சூழ்நிலையில், அம் மக்களின் தேசிய வாழ்வுக்கு பேராபத்து ஏற்படும் வகையில் அரச ஒடுக்குமுறை கோர தாண்டவம் ஆடும் சூழ்நிலையில், ஓடுக்கப்படூவோர் கையாளும் வன்முறைக்கும், ஓடுக்குமுறையாளர் கையாளும் வன்முறைக்கும் பண்பியல்பில் வேறுபாடு உணடு. ஓடுக்கப்படுவோர் கையாளும் வன்முறை நியாயபூர்வமானது; கர்மமானது. ஏனெனில், ஒடுக்கப்படும் சமூகத்தின் உயிர்வாழ்வை பாதுகாக்கும் ஆயுதமாகவே இங்கு வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலையும் இதுதான். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இலங்கை மக்களிடம் இறைமையை மீள ஒப்படைத்தபோது ஒரு சிறந்த அரசாட்சிமிறbQையை வகுக்கத் தவறிவிட்டனர். இதனால் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை மக்களின் அரசியற் தலைவர்களிடம் சிக்கியது. அன்றையவரலாற்றுச் சூழலில், சமத்துவம், பல்லின ஐக்கியம், இன ஒருமைப்பாடு போன்ற உயரிய இலட்சியங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டால், இன்றைய நிலைமை வேறாக இருந்திருக்கும். இலங்கைத் தீிவையே உ லுப்பிய கோரமான நிகழ்வுகள் நிச்சயமாக நிகழ்ந்திருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இனவாதமும், தீவிரப் போக்குடைய தேசியவாதமுமே சிங்கள மக்களையும் அவர்களது அரசியற் பிரதிநிதிகளையும் ஆட்கொண்டது. ஒரு முற்போக்கான அரசமைப்பின் கீழ், சனநாயகம், சமத்துவம், சமாதானச் சக வாழ்வு போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு உன்னத சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக, சிங்கள , அரசியற் தலைவர்கள் இனவெறியையும் மதவெறியையும் காடவர் இழிவான அரசியலில் இறங்கினர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஆட்சிபீடம் ஏறிய அரசுகள், குடிமக்களின் நலனையும், நல்வாழ்வையும் பேணத் தவறினர். அரச ஆட்சிப்டத்தையே இனவாத நிறுவனமாக மாற்றினர். கடந்த ஜம்பது வருடங்களுக்கு மேலாக, சிங்கள அரசுகள் மிகவும் அநீதியான, சனநா யக விரோதமான கொள்கைகளை கடைப்பிடித்ததால், சிங்களத்திற்கும் தமிழினத்துக்கும் மத்தியில் வரலாற்று ரீதியாக நிலவிய ஒருமைப்பாடு சீர்குலைந்து முரண்பாடு தலைதூக்கியது.
8.1 இனக் கொலைக்கு எதிரான போராட்டம்
தமிழ் மக்கள் எதிர்கொண்ட அநீதிகளையும் அரச ஒடுக்குமுறையின் கொடுமைகளையும் நான் இங்கு விபரித்து எழுதுவது அவசியமில்லை. ஏனென்றால் இந்த ஒடுக்குமுறை வரலாறு செம்மையான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மிகவும் பாரதூரமானது; ஆழமானது. இருபது வருடங்களுக்கு மேலாக அவர்களுடன் கூடிவாழ்ந்து, அவர்கள் அனுபவித்த கொடுமைகளை நேரில் கண்ட ஒரு சாட்சியாக நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். அதாவது, அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டம், இப்பொழுது இனக் கொலைக்கு எதிரான போராட்டமாக மாறியிருக்கிறது. இந்த இனக்கொலை வடிவம் எடுத்த ஒடுக்குமுறைக்கு எதிராகவே, தமது உயிர்வாழும் உரிமையை நிலைநிறுத்த தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். இனக்கொலை என்ற குற்றச்சாட்டு எந்தளவு பாரதூரமானது என்பதையும் நான் அறிவேன். ஆகவே, ஒரு கேள்வி எழத்தான் செய்யும். அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை இன அழிப்பு வடிவமாகக் கொள்ளலாமா? அடுத்ததாக, எந்த அடிப்படையில் சிறீலங்கா அரசு மீது இக்குற்றச் சாட்டை சுமத்தலாம். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதாயின், முதலில் இனக்கொலை என்ற பதத்திற்கு தெளிவான ஒரு வரைவிலக்கணம் காணப்படவேண்டும். இரண்டாவது சிறீலங்காவில் இக்கொடுமைகள் தோன்றியதற்கான புற நிலைகளை ஆராய வேண்டும்.
இனக்கொலை என்ற பதத்திற்கு அனைத்துலகமும் அங்க்கரிக்கும் வகையில் தெளிவான வரைவிலக்கணமோ அன்றி அறிவி யற் கோட்பாட்டு விளக்கமோ இல்லை. 1995 ல் இனக்கொலை சம்பந்தமாக ஜ.நா மாநாட்டில் நிறைவேறிய தீர்மானத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் வரையறுக்கப்பட்டதாக, குறுகிய பார்வையுடையதாகவே இருக்கிறது. “ஒரு இன, அல்லது தேசிய, அல்லது மதக் குழுவை ஒரு பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயல்கள்தான் இனக்கொலை” என்ற குறுகிய விளக்கமாக இத் தீர்மானம் அமைகிறது. ஜேர்மெனிய தடுப்பு முகாம்களில் நச்சுவாயு செலுத்தப்பட்டு யூத இனத்தை அழிப்பதற்கான கொடுமை நிகழ்ந்தது, இப்படியான சில வரலாற்றுப் படுகொலைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அல்லது இனக்கட்டமைப்பைக் கொண்ட மக்கள் சமூகத்தை கூட்டுக்கொலை மூலம் அழித்தொழிக்கும் செயலையே இனக்கொலை எனப் பொதுவாக நம்பப்படுகிறது. ஐ.நா தீர்மானத்திலும் கொன்றொழிப்பு அம்சத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுதிறது.
கமிழ் மக்களும் பெருந்தொகையில் உயிரழிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இனவெறிக் கலவரங்கள், இராணுவ படையெடுப்புகள், காணாமற் போகுதல் ஆகியவற்றின்போது, ஆயிரமாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருவாரியான உயிரழிப்பின் அடிப்படையில் பார்க்கப்போனால், தமிழருக்கு இந்த வரைவிலக்கணம் பொருந்தலாம். எனினும் இந்த விளக்கம் போதுமானதல்ல. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் நுட்பமான, மிகவும் சிக்கலான இன அழிப்பை,
ஐ.நா தீர்மானம் தரும் வரைவிலக்கணத்தின் அடிப்படையில் புரிந்து கொள்வது கடினம். தமிழர்கள் எதிர்கொள்ளும் இனக் கொலை. வித்தியாசமானது. மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்டு, நீண்ட கால எல்லைக்குள் தமிழரின் அரசியல், சமூக, கலாச்சார, பொருண்மிய வாழ்வையும் அதன் அடிப்படைகளையும் படிப்படியாக, மெல்ல மெல்ல சீரழித்து, இறுதியில் அவர்களது இன அல்லது தேசிய அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டதுதான் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் இனக்கொலை. .
ஐ.நா. மாநாட்டு தீர்மானத்தை வரைந்த உலக அரசுகளில் சில, துமது சொந்த நடவடிக்கைகளை முடிமறைப்பதற்காக, இனக்கொலைக்கு ஒரு விரிவான, தெளிவான வரைவிலக்கணத்தை கொடுக்க விரும்பவில்லை. உலக பிரசித்தி பெற்ற சட்ட வல்லுனரான ரபேல் லெம்கின் என்பவரே முதன்முதலாக இனக்கொலை (Genocide) என்ற சொல்லைப் புனைந்தார். ஜரோப்பாவை யேர்மானியர்கள் அக்கிரமித்திருந்த காலத்தில் நிகழ்ந்த இனக்கொலை பற்றி அவர் ஒரு நூல் எழுதினார். அந்த நூலில் அவர் கீழ்க்கண்டவாறு இனக்கொலைக்கு ஒரு விரிவான விளக்கம் கொடுக்கிறார்.
“பொதுவாகச் சொல்லப் போனால் இனக் கொலை என்பது; உடனடியாகவே ஒரு இனத்தை அழித்து விடுவது என்ற அர்த்தமல்ல. அங்படிக் கொள்வதாயின் அந்த இனத்தைச் சார்ந்த அனைத்து உறுர்பினர்களுமே கூட்டாகக் கொலை செய்யய்படட வேண்ரும். இனக்கொலை என்பது; தேசிய இனக் குழுமங்கணின் வாழ்விற்கும் வனத்திற்கும் அடிப்படையாக வினங்கும் ஆதார தூண்களை அழித்துவிரும் நோக்கத்தைக் கொண்ட ஒருங்கிணைக்கங்பட்ட ஒரு அழிவுத் திட்டத்தையே குறிக்கும். இந்த ௮ழிவுத் திட்டமானது அந்த இனக் குழுமங்களை படிபடியாக அழிக்கும் நேோக்குடையது. தேசிய இனங்கணின் மொழி பண்பாடு; தேசிய உணர்வு மதம் அரசியல் சமூக நிறுவனங்கள்; நொருனாதார வாழ்வு ஆகியனவற்றை படிப்படியாக சிதைய்பது மட்ருமன்றி அந்த இனத்தைச் சேர்ந்த தனிமனிதர்கணின் கதந்திரம் உடல் நலம் கெளரவம் தனிய்பட்ட பாதுகாப்பு உயிர்வாழ்வு ஆகியன வற்றை அழிய்பதுமே இந்த் பலமுகம் கொண்ட அழிவுத் திட்டத்தின் நோக்கம். இனக் கொலையானது ஒரு இனத்தின் தேசிய வாழ்வை சிதைர்யழிர்யதையே இலக்காக கொண்டது. தணி மனிதர்களுக்கு எதிராக எருக்கப்பரும் நடவடிக்கை அந்தத் தனணிநபருக்காக அல்ல. மாறாக அவர் அந்த இனத்தைச் சேர்ந்த தணிமனித உறுப்பினர் என்பதற்காகவே”. 4
4 Lemkin, Raphael. Chapter IX ‘Genocide’ in ‘Axis Rule in Occupied Europe: Laws of Occupation’. Washington, D.C. Carnegie Endowment for International Peace, 1944. Page 79.
மேற்கண்ட வரைவிலக்கணத்தின் அடிப்படையில் பார்க்கப் போனால், தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு கடைப்பிடித்த ஓடுக்குமுறையானது இனக் கொலை அன்றி வேறொன்றுமல்ல. தமிழ்த் தேசிய இனத்தின் ஆதார தூண்களாக விளங்கும் மொழி, பண்பாடு, தாயக நிலம் மற்றும் சமூக அரசியல், பொருளாதா வாழ்வு ஆகியவற்றை படிப்படியாக சிதைத்தழிக்கும் நோக்கத்துடன் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி பீடம் ஏறிய சிங்கள அரசுகள் திட்டமிட்டுச் செயற்பட்டன. இந்த இனக்கொலைத் திட்டத்தின் நோக்கம் தமிழ் மக்களின் தேசிய கட்டுக் கோப்பையும் இன அடையாளத்தையும் அழித்துவிடூவதுதான்.
இனக்கொலை என்பது மனித விரோத உணர்வின் மிகவும் கொடூரமான ஒரு வெளிப்பாடு. அது படுபாதகமான ஒரு பயங்கரவாதச் செயல். அந்தப் பயங்கரத்தில் அது திளைத்து வளர்கிறது. மனித உயிர்களை அது சருகுகள் போல மிதித்து அழிக்கிறது. குடும்ப, சமூக உறவுகளுக்கு அது மதிப்பளிப்பதில்லை. பால் வேறுபாட்டிற்கோ அல்லது வயது வேறுபாட்டிற்கோ அது மரியாதை கொடுப்பதில்லை. இக் கூட்டு மனித அழிப்புப் பயங்கரவாதத்திற்கு பெண்களும் இலக்காகிறார்கள். இனக்கொலையின் நோக்கத்தை வெளிப்படுத்த பெண்களே ஊடகமாக தெரிவு செய்யப்படுகிறார்கள். இனக் கலவரங்களின் போதும் இராணுவப் படையெடுப்புகளின்போதும் பெண்கள் பரவலாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது இதற்கு உதாரணம். தனிமனித அடிப்படையில் பார்க்கப்போனால், பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணின் சுயாதீனத்திற்கும் சுயகெளரவத்திற்கும் பாதகமாக இழைக்கப்படும் ஒரு இழிசெயல்; உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவளுக்கு இழைக்கப் படும் ஒரு சித்திரவதை. சமூக அடிப்படையில் பார்க்கும்போது, பாலியல் வன்முறை என்பது சமூகத்தின் பண்பாட்டு மரபை மீறி, அச் சமூகத்தை அவமதிக்கும் செயலாகும். இவ்விதம் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையானது ஒரு இனத்தின் தேசிய கெளரவத்திற்கு இழுக்குச் சேர்ப்பதுடன் தேசிய உணர்வையும் புண்படுத்தி விடுகிறது. தேச கெளரவத்தை அவமதித்து அசிங்கப்படூத்துவதற்கு பெண்களை சாதன- மாக பாவிப்பது மட்டுமன்றி, இம் மக்கள் இனத்தின் தேசிய அடையா- ளத்தையும் அழித்துவிடும் ஒரு திட்டமுமாகும்.
ராதிகா குமாரசுவாமியும் அவரது சிந்தனை வட்டமும் எண்ணுவதற்கு மாறாக, தமிழ்ப் பெண்களுக்கு, கங்கள் தற்காப்புக்கும் தங்கள் இனத்தின் பாதுகாப்பிற்குமாக போராடும் உரிமையுண்டு. அந்த உரிமையை எவரும் மறுக்க முடியாது. ஒடுக்கப்படும் மகக்ளின் தற்காப்பு உரிமையை மறுப்பது அவர்களைக் கூட்டாக தற்கொலை புரியச் சொல்வதற்கு ஒப்பானதாகும். ஆகவே, ஆயுதப் போராட்டத்தில் குதித்துள்ள விடுதலைப் புலிப் பெண் போராளிகளை “வன்முறையாளர்’ என்றும் “பெண்மைக்கு சாவுமணி அடிப்போர்” என்றும், “சமூகத்தை இராணுவ மயப்படுத்துவோர்” என்றும் ராதிகா வர்ணிப்பது, விவாதத்தை குவநூன திசைக்கு இட்டுச் செல்வதாகும். தேசிய விடுதலைப் போரில் தமிழ்ப் பெண்களது பங்களிப்பின் ஒரு வளர்ச்சியும் விரிவாக்கமுமாகவே ஆயுதப் போராட்டத்தில் பெண்கள பங்களிக்கிறார்கள். ஆரம்பத்தில் அமைதி வழியில் நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் பெண்கள் பங்களித்தார்கள். இப்பொழுது போராட்ட வடிவம் மாற்றம் கண்டிருக்கிறது. ஆகவே ஆயுதப் போர் வடிவம் எடுத்துள்ள விடுதலைப் போரில் பெண்கள் கலந்து கொள்வது பற்றி ஆச்சரியப்படூவதற்கு எதுவுமில்லை. அமைதி வழிப் போராட்டங்கள் தோல்வி கண்டூள்ளதால், மீண்டும் பெண்களை அமைதி வழியில் போராடுமாறு வேண்டூவது அபத்தமானது. ராதிகாக்கு அடிப்படைப் பிரச்சினை புரியவில்லை. குமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அரச ஒடுக்குமுறைதான் பெண்களை ஆயுதப் போராட்டத்தில் குதிக்க நிர்ப்பந்தித்தது.
ஆயுதப் போராட்டம் பற்றி ராதிகாவுக்கு ஒரு தறவான கண்ணோட்டம் இருக்கிறது. அயுதப் புரட்சிப் போராட்டத்தை அவர் ஒரு இராணுவவாதமாகப் பார்க்கிறார். பெண்கள் ஆயுத பாணிகளாக நிற்பதை குவறாக எடைபோடும் அவர், தமிழ்ச் சமூகம் இராணுவமயமாவதால், இப்போக்கானது இறுதியில் சட்டம் ஒழுங்கு, சமாதானப் பாதை, பேச்சு ’ மூலம் தீர்வு போன்ற சனநாயக வழிமுறைகளை குழிதோண்டிப் புதைத்துவிடும் எனக் கருதுகிறார். தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமானது, தனது வரலாற்றுப் படிநிலை வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்துள்ளது. இக்கட்டத்தில் இளைஞரும், முதியோரும், பெண்களுமாக பரந்து பட்ட பொதுமக்கள் அனைவருமே ஒன்றுதிரண்டு, ஒரே தேசமாக கிளர்ந்தெழுந்து, தமிழ் மக்களை வேரோடு அழிக்க முனையும் ஈவிரக்கமற்ற இனவாத அரசுக்கு எதிராகப் போர் தொடுத்து நிற்கிறார்கள். இந்த வெகுசனக் கிளர்ச்சியை இராணுவ மயமாக்கல் என தவறாகப் பார்க்கிறார் ராதிகா குமாரசுவாமி. இன அழிப்புச் சூழலும், அதனை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்ததன் காரணமாகவே தமிழ்ப் பெண்கள் உட்பட அனைத்து மக்களும் ஆயுத எழுச்சிப் போரில் பங்குகொள்கிறார்கள். ஆகவே, ராதிகா எழுதுவதுபோல, விடுதலைப் புலிகள் இயக்கம் தனது படைபலத்தைப் பெருக்குவதற்காக சமூகத்தை இராணுவமயப் படுத்துவதாக கூறுவது ,தவறு. மாறாக, இனப் போரின் கொடூர ரூழ்நிலையால் எழுந்த வரலாற்றுத் தேவை காரணமாகவே தமிழரின் உரிமைப் போர் வெகுசன ஆயுதப் போராக வெடித்துள்ளது.
இராணுவ மயமாக்கல் பற்றியும், மனித உரிமை மீறல் பற்றியும், வன்முறை பற்றியும் கவலை கொள்ளும் ராதிகா குமாரசுவாமி, தனது அக்கறையை சிங்கள தேசம் மீது திருப்புவது நல்லது. அங்கு சிங்களப் பெண்கள், பெருந்தொகையில் அரச படைகளில் இணைந்து கொண்டு அரச இயந்திரத்தை வலுப்படுத்தி, ஆணாதிக்க நிறுவனத்திற்கு முண்டுகொடுத்து, தமிழருக்கு எதிராக சிங்கள இனவாதிகள் நடத்தும் கொடிய யுத்தத்திற்கு பங்களிக்கிறார்கள். சிங்களப் பெண்ணிய வாதிகளும் கூட, தமது சிங்கள சகோதரிகள் இராணுவத்தில் இணைந்து கொள்வதை கடுக்கவில்லை. அப்படியான ஒரு தேவையோ, அல்லது நிர்பபந்தமோ அவர்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு சமாதான வழி மூலமாக ஒரு நீதியான நியாயமான தீர்வு காண்பதற்கு சிங்களப் பெண்ணியவாதிகள் தமது பெண்மைப் பண்புகளை?” பிரயோகித்தால் அது சிங்கள தேசத்திற்கு பயனுள்ளதாக அமையும் சிங்களப் பெண்கள் ஒரு சனநாயக ஆட்சி யமைப்பைக் கொண்ட ஒரு தேசத்தில் வாழ்கிறார்கள். அங்கு மக்கள் ஆட்சி நடக்கிறது. சிங்கள மக்கள் தம்மைத் தாமே ஆட்சி புரிகிறார்கள். அவர்களது அரசமைப்பு அவர்களது மொழியை, மதத்தை, பண்பாட்டை மதிக்கிறது. சிங்கள மக்களுக்கு எதிராக யாருமே பாரபட்சம் காட்டுவதில்லை. அவர்களுக்கு எதிராக இனத்துவேச கலகங்கள் ஏவிவிடப்படூவதில்லை. இப்படியான சூழ்நிலையில் சிங்களப் பெண்கள் இராணுவத்தில் சேர வேணடிய அவசியமோ கட்டாயமோ இருக்க வில்லை.
8.2 பெண்களும் தேசியப் போராட்டமும்
சமகால சர்வதேச அரசியல் அரங்கில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் எத்தகைய முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன என்பதை ஜ.நா சபையில் பணிபுரியும் ஒரு அதிகாரி என்ற ரீதியில் ராதிகா குமார சுவாமிக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். இன்றைய உலகில், இன நெருக்கடிகள் தலைதூக்கியுள்ள பிரதேசங்களில் இனக்கொலைப் பரிமாணத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து வருவது குறித்து சர்வதேச சமூகம் ஆழமான கவலை கொண்டிருக்கிறது. கொஸோவோ, கிழக்குத் தீமோர் போன்ற நாடுகளில் சர்வதேச சமூகம் தலையிட்டு, இராணுவ பலத்தைப் பிரயோகித்து அங்கு சமாதானத்தையும் ஓழுங்கையும் நிலைநாட்டியுள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினையானது ஆசியாவிலேயே வன்முறை கொந்தளிப்பு மிகுந்த ஒரு நெருக்கடி என்பதை சர்வதேச சமூகம் அறியும். அத்தோடு, இலங்கையில் பெளத்த-சிங்கள அரசின் கொடுமையான ஒடுக்குமுறைக்கு எதிராக, விடுதலை வேண்டி தமிழர் தேசம் போராடி வருகிறது என்பதையும் அறியும். இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்ட சமூகம் என்பதும் அவர்களது போராட்டம் ஒரு தேசிய போராட்டம் என்பதும் வரலாற்று ரீதியான ஒரு அரசியல் உண்மை. தமிழர் தேசத்தின் சனத் தொகையில் அரைவாசிப் பகுதியினராக விளங்கும் தமிழ்ப் பெண்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணை பிரியாத அங்கமாக விளங்குகிறார்கள். தமிழரின் தேசிய விடுதலை இராணுவத்தில் இணைந்துள்ள பெண்களும், மற்றும் வெகுசன ஆர்ப்பாட்டப் பேரணிகளில் பங்குகொள்ளும் பெருந்தொகை யான பெண்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முதுகெலும் பாக விளங்குபவர்கள். வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்று முதிர்ச்சி பெறும் ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பாலானது; தேசிய உணர்வானது அன்றி, தேசியப் பிரக்ஞையானது மக்கள் அனைவரையும் ஒன்றுபட்ட சக்தியாக, சுதந்திரத்தை நோக்கிய இலட்சியப் பாதையில், அணிதிரட்டிவிடுகிறது.
தேசிய போராட்டங்களை வலுவாகக் கண்டிக்கிறார் ராதிகா குமாரசுவாமி. தேசிய அபிலாசைகளை அடையும் நோக்கில், தேசிய விடுதலைப் போராட்டங்கள் பெண்களைப் பயன்படுத்திச் சுரண்டுகின்றன என்பது அவரது வாதம். தேசியவாதம் என்பதும், தேசியப் போராட்டம் என்பதும் பிர்போக்கான அரசியலைச் சார்ந்தது என்கிறார் ராதிகா. தேசியவாதத்திற்கு பதிலாக சர்வதேசவாதத்தை அவர் முன்நிறுத்து கிறார். யுத்தத்தை எதிர்த்து சமாதானத்திற்கு ஆதரவாக, தேசிய பண்பாடுகளுக்கு அப்பால், பெண்ணினம் அனைத்துலக ரீதியாக ஒன்றுபட்ட சக்தியாக அணிதிரள வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. ஜ.நாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறை” என்ற துறையில் விசேட பிரதிநிதியாக பணிபுரியும் ராதிகா, தனது சொந்த மக்கள் அவதியுறும் நெருக்கடியையும் அதன் யதார்த்த மெய்யுண்மைகளையும் மறுதலித்து, ரு வித்தியாசமான, புதிரான கருத்துலகில் வாழ்ந்து வருகிறார் போலத் தெரிகிறது. தமிழழத்தில் அகதி முகாம்களிலும், இராணுவ அக்கிரமிப்பு பிரதேசங்களிலும் வாழ்ந்து கொண்டு, சதா மரணத்தையம், இராணுவப் பயங்கரவாதத்தையும், பாலியல் வன்முறையையும் எதிர்கொண்டவாறு அவலத்தில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு, சர்வதேசியம் பற்றியும், அனைத்துலப் பண்பாடு பற்றியும் யாராவது போதித்தால், நிச்சயமாக அவர்களுக்கு சினம்தான் ஏற்படும். நியூயோர்க், ஜெனிவா போன்ற நகரங்களில் ஒதுங்கி வாழ்ந்து கொண்டு சர்வதேச விழுமியங்கள் பற்றி தத்துவம் பேசுவது சுலபம். ஆனால் தமது நாளாந்த வாழ்வில் அவலத்தையும் பயங்கரத்தையும் சந்தித்து நிற்கும் குமிழ்ப் பெண்களுக்கு இந்த தத்துவங்களில் எவ்வித அர்த்தமுமில்லை.
தமிழ்ப் பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்குகொண்டதன் விளைவாக தமிழ் சமூதாயத்தில் பெண் பற்றிய உருவகத்தில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டூுள்ளதாகக் கூறுகிறார் ராதிகா குமாரசுவாமி. “திருமணமாகி, பல குழந்தைகள் பெற்றெடுத்து, சொத்தும் செல்வமும் படைத்த பெண்ணே தமிழ் இந்து சமுதாயத்தில் சிறப்புரிமை பெற்ற பெண்” என மானிடவியல் ஆய்வுக் குறிப்புகளை ஆதாரம் காட்டி வாதிடுகிறார் ராதிகா. “விலையுயர்ந்த பட்டூப் புடவைகள், பகட்டான தங்க நகைகள், கால் விரல்களில் வெள்ளி மோதிரங்கள், நெற்றியில் குங்குமப் பொட்டு, ஆகியன இந்த இலட்சியப் பெண்ணின் குறியீட்டுப் படிமங்கள்” 5 என்கிறார் ராதிகா. சொத்தும் செல்வமும், ஒப்பனை அலங்காரமும், நிறை யப் பிள்ளைகளும் பெற்றெடுத்த இந்து உயர்சாதிப் பெண்ணை குமிழ் சமூகத்தின் இலட்சியப் பெண்ணாக சித்தரித்துக் காட்டும் ராதிகா குமாரசுவாமி, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை “தமிழ்ப் பாரம்பரிய இலட்சியப் பெண்ணிற்கு “எதிர்மறையானவர்களாக” முற்றிலும் மாறுபட்டவர்களாக வர்ணிக்கிறார். பெபனை அலங்காரம் எதுவும் இல்லாமல், நகை நட்டு அணியாமல், பொட்டு இடாமல், பூச் சூடாமல், குறுகக் கத்தரித்த முடியுடன் ஷிப் புலி சீருடையோடு காட்சி தரும் பெண் புலிகளிடம் பாராம்பரிய தமிழ்ப் பெண்களுக்குரிய “பெண்ணியல்புகள்” எதுவுமே இல்லையெனச் சாடுகிறார் ராதிகா. “இரு பால் தன்மை” என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்யும் அவர், பெண புலிகள், ஆண் பாலாரின் இயல்புகளை கொண்டிருப்பதாக கண்டிக்கிறார்.
5 Coomaraswamy, Radhika. LTTE Women Is This Liberation’ The Sunday Times January 5th 1997.
ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கை கொச்சைப்படுத்துவதுதான் ராதிகா குமாரசுவாமியின் அடிப்படை நோக்கம். இந்த நோக்கத்துடனேயே அவர் மிகவும் தவறாக, மோசமான முறையில் பெண் புலிகளை திரிவுபடுத்திக் காட்ட முனைகிறார்.
முதலாவதாக, ராதிகா குமாரசுவாமி புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், விடுதலைப் புலிப் பெண்கள் தமிழரின் தேசிய விடுதலை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகள் என்பதையே. சிநீலங்கா அரசுடன் நண்ட காலமாகவே இடைவிடாது தொடர்ச்சியாக போர் நிகழ்ந்து வருவதால், தமிழர் இராணுவத்தில் அங்கம் வகிக்கும் பெண் போராளிகள், போர்ச் சூழலுக்கு, ஏற்றவாறு தமது நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ள ணநீிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். போர் முனைகளில் அகழி : களிலிருந்து களமாடும் பெண் போராளிகள், பட்டுப் புடவை உடுத்தி, நகைகள் அணிந்து, பூச் சூடி, ப்பனை அலங்காரம் செய்து, காற்றில் பறக்கும் நண்ட முடியுடன் காட்சி தரவேண்டுமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும். உலகின் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்களில் பங்குபற்றிய பெண் போராளிகள், பெண்புலிகள் போலவே சீருடை அணிந்து, நகை அணியாது, ஒப்பனை அலங்காரம் எதுவுமின்றி, குறுகிய முடியுடன் காணப்படுவதை புத்தகங்களில் வெளியாகியுள்ள படங்களிலாவது ராதிகா நிச்சயமாக கண்டிருக்கலாம். பகட்டை, அலங்காரத்தை, பெபனையை எல்லாம் துறந்து, தமது தேசத்தின் விடுதலைக்காக போராடிய அந்த வீராங்கனைகளை ஆண் இயல்பு கொண்டவர்கள் என ராதிகாவால் ஏளனம் செய்ய முடியுமா? பெண் போராளிகள் ஆணியல்பு கொண்டவர்களாக இருக்க வேண்டு மென்பது விடுதலைப் புலிகளின் கொள்கையல்ல - அத்துடன், பெண் புலிகள் “ஆயுதம் தரித்த கன்னிகளாக” இருப்பதில் புலிகள் இயக்கம் பெருமை கொள்கிறது என்று அவர் சொல்வதும் தவறு. (பேராசிரியர் பீட்டர் சோல்க்கின் எழுத்துகளிலிருந்தே “ஆயுதபாணிகளான கன்னிகள்” என்ற பதத்தை தழுவியிருக்கிறார் ராதிகா). “பெண் புலிகள் கன்னிகளாக இருக்க வேண்டும் என்பதையே புலிகள் இயக்கம் விரும்புகிறது. பாலுணர்வு ஒரு தீய சக்தி என்பதும் ஒரு வலுக்கெடுவான சக்தி என்பதும் புலிகளின் கருத்து’ என எழுதுகிறார் ராதிகா. இப்படியான மிகவும் அபத்தமான கருத்தை அவர் எங்கிருந்து பெற்நறுகொண்டார் என்பது புரியவில்லை. விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பற்றியும் அவர்களது ’ வாழ்வனுபவம் பற்றியும் அவருக்குள்ள ஆழமான அறியாமையையே இது புலப்படுத்துகிறது. நண்ட காலமாகவே விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம், தனது போராளிகள் மத்தியில் காதலையும், திருமணத்தையும், தாம்பத்திய உறவையும், பிள்ளைப் பேறையும் ஊக்குவித்து வருகிறது. காதல் உறவுகளின் நற்பேறாக அனேகமான புலிப் போராளிகள் திருமணம் செய்திருக்கிறார்கள். இத் திருமண வைபவங்களில் நாம் பங்குபநீறியிருக்கிறோம். போராளிகள் மத்தியில் காதல் உறவை ஊக்குவித்து, திருமணம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் ரு திருமண ஆலோசனை சபையையும் புலிகள் இயக்கம் நிறுவியுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் போராளித் தம்பதிகளுக்கு மாதாந்த கொடுப்பனவும், வீட்டு வசதியும் மற்றும் உதவிகளையும் இயக்கத்தின் நிதிப் பிரிவே வழங்கிவருகிறது. எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பு காதலையும் பாலுணர்வையும் பெண்மையையும் நசுக்கிவிட முனைகிறது என்ற ராதிகா குமாரசுவாமியின் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
சில பெண்ணியவாதிகளின் கோட்பாடுகளை மேற்கோள்காட்டி, பெண்மைக்கும் ஆண்மைக்குமுரிய வேறுபாடுகளை விளக்க முயல்கிறார் ராதிகா. தாய்மை, கனிவு, இரக்கம், பொறுமை ஆகிய பண்பியல்புகள் பெண்மைக்கு உரித்தானதென்றும், ஆணவம், அதிகாரவெறி, பகைமை யுணர்வு ஆகியன ஆண்களின் பண்பியல்புகள் என்றும். வாதிக்கும் ராதிகா, விடுதலைப் புலிகளின் சித்தாந்தமானது ஆக்கபூர்வமான பெண்ணின் பண்பியல்புகளுக்கு விரோமானது என்கிறார். உலகப் பெண்ணியத்தின் அதியுன்னத விழுமியம் உயிர்வாழ்வை மேம்படுத்து வது எனக் குறிப்பிடும் ராதிகா, விடுதலைப் புலிகள் இயக்கம் மரணத்தை தியாகமாக பூசிக்கிறது எனக் கண்டிக்கிறார்.
ஆண்களின் இயல்புகளையும் பெண்களின் இயல்புகளையும் வேறுபடுத்தி வகைப்படுத்தும் அறிவியற் கோட்பாடுகளில் எனக்குப் பெரிதும் நம்பிக்கை இல்லை. உலக சமாதானத்தையும் மனித விமோசனத்தையும் நோக்காகக் கொண்டு இத்தகைய தத்துவக் கருத்துக்களை புனையும் பெண்ணியவாதிகள் மீது எனக்கு அனுதாபம் உண்டு. ஆயினும், படைப்பையும், உ யிர்வாழ்வின் புனிதத்தையும் மற்றும் பெண்மையின் ஆக்கபூர்வமான பண்புகளையும் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் ஊக்குவிப்பதில்லை என்ற ராதிகா குமாரசுவாமியின் குற்றச்சாட்டு கேலிக்கூத்தானது. இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, ராதிகா குமாரசுவாமி உண்மைக்கு புறம்பாக, சான்றுகள் எதுவுமின்றி, வெறும் கற்பனையில் எழுதுகிறார் என்பதுதான். அரசியல், அறிவியல் மற்றும் இலக்கியத் துறையில், பெண் போராளிகள் தமிழில் எழுதிய படைப்புகள் எதையுமே கொழும்புப் பத்திரிகையாளர் போன்று ராதிகாவும் வாசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. பெண் போராளிகளின் உடையையும், வெளித் தோற்றத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வெறும் கற்பனையில் எழுதியிருக்கிறார் ராதிகா. தமிழ்ப் பெண்கள் ஆயுதப் புரட்சிப் போரில் பங்குகொள்வதும், களமாடி உ யிர்நத்த போராளிகளை மான்ரர்களாக கெளரவிப்பதும், ராதிகாவின் கற்பனை வளத்தில் புலிப் பெண்கள் பற்றி, விபரீதமான சிந்தனைகளை தூண்டிவிட்டிருக்கிறது.
ராதிகா குமாரசுவாமியின் மேலோட்டமான, குறுகிய பார்வையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத போராட்டம் வெறும் வன்முறையின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், விடுதலைப் போரில் ஈடுபடுபவர்கள் அனைவருமே வன்முறையாளர்களாகவும், மனித உயிர்களை அழித்தொழிப்பவர்க ளாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த வரட்டுத்தனமான கண்ணோட்டத்தில், தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோற்றம் . கொண்ட யதார்த்த புறநிலையும், வரலாற்றுச் சூழலும் முற்றாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. அதே போன்றுதான் போராட்ட இலட்சியமும் புறம் தள்ளப்டூகிறது. இனக் கொலை என்ற பேரழிவிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும் இலட்சியத்துடனேயே ஆண்களும், பெண்களுமாக, விடுதலைப் புலிப் போராளிகள் போராடுகிறார்கள். இதனை ராதிகா ஏற்க மறுக்கலாம். ஆனால் உண்மையில் உயிர்வாழ்வை, தமிழினத்தின் கூட்டான உயிர்வாழ்வை பாதுகாக்கவே விடுதலைப் புலிகள் போராடுகிறார்கள். இவ்விதமே தமிழ் மக்கள் தங்களது விடுதலைப் போராட்டத்தை நோக்குகின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிப் போராளிகளே அவர்களது பாதுகாவலர்கள்; தமிழ்ச் சமூகத்தின் உயிர்வாழ்வை பாதுகாப்பதற்காக தமது சொந்த உயிரை அர்ப்பணிக்கத் தயாரான சுதந்திரப் போராளிகள். இங்கு தற்கொடை என்ற ஒரு மகத்தான தியா- கத்தை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். கூட்டான மனித வாழ்வின் மீட்சிக்காக தனிமனித வாழ்வு அர்ப்பணமாகிறது. இது ஒரு உன்னதமான மனித தியாகம். இந்த உயரிய தியாகத்தின் அடிப்படையில்தான், விடுதலைப் புலிகளின் மாவரர்கள் பூசிக்கப்படுகிறார்கள். ராதிகா குமாரசுவாமி கண்டிப்பதுபோல புலிகள் இயக்கம் மரணத்தை பூசிக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்தமான ஒரு மக்கள் சமூகத்தின் வாழ்வுக்காக தனி மனித வாழ்வு அர்ப்பணமாவதற்கு புலிகள் இயக்கம் மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கிறது.
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடன் பல வருடங்களாக நான் கூடி வாழ்ந்திருக்கிறேன். அவர்களுடைய இன்ப துன்பங்களையும் அபிலாசைகளையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்திருக் கின்றேன். இந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் ஒன்றைக் கூற முடியும். அதாவது, ராதிகா குமாரசுவாமி கருதுவதுபோல, விடுதலைப். புலிகளின் கொள்கையிலும் சரி, அரசியற் தத்துவங்களிலும் சரி, பெண் போராளிகள், ஆயுதம் தரித்த கன்னிகளாகவே வாழ வேண்டும் என்ற கருத்தோட்டத்தை காணமுடியாது. அத்தோடு, ஆக்கமான பெண்மையின் பண்புகள் மறுக்கப்பட வேண்டுமென்ற சிந்தனைக்கும் இடமில்லை. சீருடையணிந்த ஒவ்வொரு பெண் போராளியின் தோற்றப்பாட்டிற்கும் பின்னே, பெண்மையின் சீரிய பண்புகளைக் கொண்ட கனிவான மென்மையான அன்புணர்வுடைய ஒரு தமிழ் இளம் பெண்ணைத்தான் காணமுடியும். காதலித்து, கல்யாணமாகி, தாம்பத்திய வாழ்வில் இன்பம் கண்டு, பிள்ளைப் பேறு கண்ட எத்தனையோ, எத்தனையோ “ஆயுதக் கன்னிகளின்” எண்ணிக்கையை இப்போது என்னால் நினைவில் நிறுத்த முடியவில்லை. எத்தனையோ திருமணமாகிய பெண் போராளிகளிடம் தாய்மையின் மகத்துவப் பண்புகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். உண்மை நிலை இப்படி இருக்கும் பொழுது, நிறையப் படித்த ராதிகா குமாரசுவாமி, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை “ஆயுதக் கன்னிகள்” என்றும் *வன்செயலாளர்கள்” என்றும் பாரம்பரிய தமிழ்ப் பெண்ணின் “எதிர்மறைகள்” என்றும் கேவலமாக இழிவுபடுத்த முயல்வது எனக்கு கவலையையும் சினத்தையும் தருகிறது.
8.3 பெண்களுக்கு அதிகாரமளித்தல்
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுக்கு உரிமையும் அதிகாரமும் வழங்கப்படுகிறதா என்ற விவாதத்தை நடத்தி, பெண் புலிகளுக்கு அதிகாரம் பறிக்கப்படுகிறது என்ற தீர்மானத்திற்கு வருகிறார் ராதிகா. ஒரு பெரிய இயந்திர சக்கரத்தின் ஒரு சிறிய பல் போன்ற விடுதலைப் புலிகளின் இயக்கக் கட்டமைப்பில் பெண் புலிகள் இயங்குகிறார்கள் என்றும், ஆண்களால் வகுக்கப்படும் கொள்கை களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதே அவர்களது பணி என்றும் வாதிடுகிறார் ராதிகா. இது ஒரு குருட்டுத்தனமான எதிர்மறையான விமர்சனம். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற பிரச்சினைக்கு அடிப்படையான விடயம் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை வடிவங்களை முதலில் இனம் கண்டு கொள்வதாகும். ராதிகா குமாரசுவாமி, இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள இனவாதமே தமக்கு எதிரான அடிப்படையான ஒடுக்குமுறை வடிவம் என்பதை உணர்ந்துதான் பெண் போராளிகள் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொள்கிறார்கள். இந்த ஒடுக்குமுறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பெண்கள் ஆயுதமேந்தி போராட்டத்தில் குதிக்கும்பொழுது அவர்கள் வல்லமை படைத்த சக்தியாக அதிகாரம் பெறுகிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் பங்களிப்பதே அதிகாரமூட்டப்படும் அனுபவமாகும். பெண் புலிகளை சீண்ட வேண்டும் என்ற அவாவில் ராதிகா குமாரசுவாமி இந்த உண்மையை மறைத்து விட முனைகிறார்.
பெண் போராளிகளின் உரிமைப் பிரச்சினையையும், அதிகாரப் பிரச்சினையையும் விவாதத்திற்கு எடூத்துக் கொள்ளும் ராதிகா, அவர்கள் எவ்விதமான புறநிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் கருத்தில் எடுக்கவில்லை. பெண்களின் சமூக, பொருளாதார வாழ்வை மேம்படுத்த பல்வேறு செயற்திட்டங்களை வகுத்தபோதும், அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திடமிருந்தோ அல்லது சர்வதேச நிறுவனங்களிடமிருந்தோ அவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை. தொடர்ச்சியாக, இடைவிடாது நிகழ்ந்த போர், அதன் விளை வாக தொடர்ச்சியாக இடம்பெயரும் மக்கள், அத்துடன் வளங்களின் பற்றாக்குறை, எல்லாவற்றிற்கும் மேலாக நிதி நெருக்கடி - இப்படியான சூழ்நிலையில், எவ்விதம் பெண் போராளிகள் தமது சமூக மேம்பாட்டு வேலைத் திட்டங்களை நிறைவு செய்வது? அப்படி இருந்தும், இந்த நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தம்மால் இயன்ற அளவிற்கு தமது வேலைத் திட்டங்களை அவர்கள் செயற்படுத்தி வருகிறார்கள்.
பெண்களுக்கு உரிமையும் அதிகாரமும் வழங்கும் பிரச்சினை பற்றிய விவாதத்தில், எதற்காக ராதிகா விடுதலைப் புலிகள் அமைப்பையும் பெண்போராளிகளையும் சர்ச்சைக்கு இழுக்கிறார் என்பது புரியவில்லை. தீர்மானங்கள் எடுபடும் இயக்கத்தின் உயர்மட்டத்தில் பெண்களுக்கு அதிகாரமில்லை எனக் குற்றஞ்சாட்டி பெண் புலிகளை இழிவுபடுத்தும் நோக்காகவும் இருக்கலாம். இந்த விடயம் பற்றி பரிசீலனை செய்வதற்கு முன்னராக, ராதிகாவுக்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது உலகடங்கிலுமுள்ள அரசுகள் மட்டத்திலும் சரி, நிறுவனங்கள் மட்டத்திலும் சரி, அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பெரியதொரு இடைவெளி நிலவுகிறது என்பது பெண்ணியவாதிகளின் கருத்து. ராதிகா பணிபுரியும், ஜ.நா நிறுவனத்தில் கூட இப்பிரச்சினை மேலோங்கி நிற்கின்றது. சில சமயங்களில் ஆட்சி பீட உயர்மட்டங்களில் பெண்கள் பெரும் பொறுப்புகளை வகிக்கலாம். ஆனாலும் அதே சமூகத்தில், கீழ்மட்டத்திலுள்ள பெரும்பான்மையான பெண்கள் உரிமை இழந்தவர்களாக, அதிகாரமற்றவர்களாக இருப்பதைக் காண முடிகிறது.
1990ல், நான் யாழ்ப்பாணம் திரும்பியதற்குப் பின்னர் பெண்களுக்கு உரிமையும் அதிகாரம் வழங்குவதும் சம்பந்தமாக நான் நிறைய எழுதியும் இருக்கிறேன்; விவாதித்தும் இருக்கின்றேன். எனது ஆரம்ப எழுத்துக்களையோ அன்றிப் பெண் போராளிகளின் அரசியல், இலக்கிய படைப்புக்களையொ ராதிகா குமாரசுவாமி படிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆயினும் விருதலைரம் புலிகணிண் பெண் போராணிகள் என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை மட்டும் வாசித்து, அதனை மட்டும் ஆய்வுப் பொருளாக எடுக்கிறார். இந்த நூல், விடுதலைப் புலிகளின் மகளிர் இராணுவக் கட்டமைப்பின் படிநிலை வரலாந்றை மட்டும் விளக்குகிறது. இப் புத்தகத்தில், சமாதானம். அகிம்சை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்மைத் குத்துவம், சூழல் பிரச்சினை, இனவிருத்தி, புரட்சி நிகழ்ந்த சமூகங்களின் பெண்கள், பெண்களும் வர்க்கமும், பெண்களும் தேசிய இனமும், போன்ற பெண்ணியப் பிரச்சினைகள் பற்றி நான் விவாதிக்கவில்லை என்பதால் இவ்விடயங்கள் பந்றி எனக்கு ஆழமான அறிவில்லை என்றோ அல்லது, அவற்றில் அக்கறை இருக்கவில்லை என்றோ ராதிகா கருதினால், அது பெரும் தவறு என்றே சொல்வேன். இந்தத் தவறான அடிப்படையில் நின்றுகொண்டுதான், என்னை ஒரு இராணுவவாதி என்றும் ஆயுத வன்முறையை தூண்டிவிடூுபவர் என்றும் ராதிகா என்மீது பழி சுமத்துகிறார். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பிரச்சினை பற்றி மேலும் தொடர்வதற்கு முன்னராக, பெண் விடுதலை சம்பந்தமான எனது கருத்தை நான் இங்கு சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன்.
எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளுக்கு அப்பால் செல்லக்கூடாது என்பதற்காகவே, “விடுதலைப் புலிகளின் பெண போராளிகள்” என்ற எனது நூலில் பெண்ணியப் பிரச்சினைகள் பற்றி நான் விபரித்து எழுதவில்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலின் தேவைக்கு ஏற்ப அந் நூல் எழுதப்பட்டது. தமிழ் இளம் பெண்கள், தமது சமூகத்தின் பழமைவாத பாரம்பரிய மரபுகளை முறித்துக் கொண்டு, தேசிய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொண்டதால் பெண்ணினத்திற்கு புதிய வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் திறந்து விடப்படும் சூழ்நிலை பிறந்துள்ளதாக நான் அந்த நூலில் எடுத்து விளக்குகிறேன். அத்துடன், ஆயுதப் புரட்சிப் போராட்டத்தில் பெண்கள் பங்குகொள்வதால் தமிழ் சமூகத்தில் பெண்கள் பற்றிய பழமைவாத, மரபுவாத பார்வைகளுக்கும் படிமங்களுக்கும் சவால் விடப்பட்டூுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறேன். . புரட்சிகரமான பாதையில் தாம் காலடி எடுத்து வைத்துள்ளது குறித்து பெண் போராளிகள் பெருமையும் தன்னம்பிக்கையும் கொண்டுள்ளனர் என்றும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். இக் கருத்தை, ராதிகா போன்ற பெண்ணியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, அதுதான் அன்றைய தமிழ் சமூகத்தின் யதார்த்த மெய்நிலையை பிரதிபலித்துக் காட்டியது.
பெண்கள் பங்குகொள்ளும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றிய தத்துவார்த்த பார்வைகள் முற்போக்கான கோட்பாடுகள் மூலமாகவே நெறிப்படுத்தப்படூகின்றன. நானும் அப்படியானதொரு முற்போக்கான தத்துவார்த்த சிந்தனையையும் வரித்துக் கொண்டேன். சோசலிச பெண்ணிய தத்துவத்தை அடிப்படையாக வரித்து கொண்டு, தேசிய விடுதலையுடன் சமூக மாற்றத்தையும் வலியுறுத்தினேன். அரச உருவாக்கம் பெற்றுவரும் ஒரு தேசிய இனக்கட்டமைப்பிலுள்ள . ஒடுக்குமுறை வடிவங்கள் சமூகப் புரட்சி மூலம் முற்றாக ஒளிக்கப்பட வேண்டும்; அப்படியான ஒரு அரசியல் வேலைத் திட்டத்தையே ஒரு தேசிய விடுதலை இயக்கம் உருவாக்க வேண்டும் என வாதிட்டேன். சமூகத்தில் எந்தெந்த மட்டத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நிகழ்கிறது என்பதை இனம் கண்டு, அவற்றை ஈழத்துக் கட்டும் நடவடிக்கைகள் அடங்கியதாக அவ் வேலைத் திட்டம் அமைய வேண்டும். இந்த சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட புரட்சி அரசி யலில் பெண்கள் நேரடியாகப் பங்குகொண்டு,தமது உள்ளாற்றல்களை நிறைவு செய்வதோடு, தாம் விரும்பும் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கவும் உழைக்க வேண்டும். இவ்விதம் புரட்சி அரசியலில் பெண்கள் பங்கு கொள்வது, அவர்கள் விடுதலை பெறவும், அதிகாரம் பெறவும் வழிகோலும்.
8.4 பெண்களும் புரட்சியும்
காலம் கட்டவிழ்ந்து செல்கிறது. உலக ஒழுங்கை உலுப்பி விடும் மாற்றங்களையும் திருப்பங்களையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. மண்வீடுகள் போல ஆட்சியமைப்புகள் கவிழ்கின்றன. அறிவியற் கோட்பாடுகளும் அரசியற் சித்தாந்தங்களும் அர்த்தமிழந்து செத்துவிடுகின்றன; சில, வரலாற்று குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுகின்றன. தேசிய விடுதலையும், சமூகப் புரட்சியும் நிகழ்ந்த நாடுகளில், பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என விரக்தியும் ஏமாற்றமும் தெரிவித்து பெண்ணியவாதிகளிடமிருந்து கண்டன விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
உலகத்தின் ஆட்சியதிகாரம் ஆண்களின் கையில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆண் வர்க்கம், தனது ஆணாதிக்க சிந்தனைப் போக்கை கைவிட்டு, அதிகாரத்தை பெண்களுக்கு பகிர்ந்து அளித்துவிடும் எனக் கனவு காணும் கற்பனாவாதி அல்ல நான். பெண் விடுதலை என்பது, நண்டதும், சிக்கலானதுமான ரு செல்நெறி. பெண்கள் விடுதலை பெறும் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு உன்னதமான உலக மழுங்கை கட்டியெழுப்புவதாயின், பெண்கள் அரசி யல் விழிப்புணர்வோடு, தாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் மீளாய்வு செய்து வர வேண்டும். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளும் பெண்களுக்கு தேசப் பற்றுணர்வோடு பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வும் இருப்பது அவசியம். இருபது. ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறேன். 1983 ல் “பெண்களும் புரட்சியும்” என்ற தலைப்பில் நான் எழுதிய சிறு நூலில், ஒரு தேசம் சுதந்திரம் அடைவதற்கும், அந்தத் தேசத்தில் சமூக மாற்றம் நிகழ்வதற்கும் பெண்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குகொள்வதோடு, பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டுமென வலியுறுத்தினேன். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொள்ளும் பெண்கள், தமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை வடிவங்களை இனம் கண்டு, அவை பற்றி விவாதித்து, அவற்றை அகற்றிவிடப் போராட வேண்டும். அப்படியான போராட்டங்களே தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதுடன், புரட்சிகரமான சமூக விடுதலைக்கும் வழிகோலும். இக் கருத்துக்களை நான் எனது நூலில் வலியுறுத்தியிருக்கின்றேன். -.
தமக்கு விடுதலை கிட்டூம் என்ற நம்பிக்கையோடு, பெண்கள் பங்குகொள்ளும் ஒரு தேசிய போராட்டத்துடன் நானும் நெருக்கமாக இணைந்து நிற்பதால், மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நான எனது எழுத்துகளிலும் வற்புறுத்தி வந்திருக்கின்றேன். 1991 ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்ற சமூகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விடயம் சம்பந்தமாகவும் நான விவாதித்துள்ளேன். “ஒரு பெண்ணிய பார்வை” என்ற எனது ஆங்கிலக் கட்டுரை, “சோசலிசமும் பெண்கள் ஒடுக்குமுறையும்” என்ற தலைப்பில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “சுதந்திரப் பறவைகள்” என்ற பெண் புலிகளின் அதிகாரபூர்வமான ஏட்டில் பிரசுரமாகியது. புரட்சிக்குப் பிந்திய சோசலிச நாடுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன். இக் கட்டுரை நீளமான, ஆழமான ஆவணமாக அமையாத போதும், இச் சமூகங்களில் பெண்கள் பல முரண்பாடுகளை சந்தித்து நிற்கிறார்கள் என்பதையும் சிக்கலான சமூக, அரசியற் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருந்தேன். தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற தவறுகள் நிகழாதிருக்க வேண்டும் எனக் கூறி, கட்டுரையின் முகவுரையில் கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.
“ஒரு பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக பெண்கள் உருவாக்கம் பெறவேண்டும். அவ்விதம் இருந்தால்தான், ஒரு கட்சியினது அல்லது அரசாங்கத்தினது முழுமையான வேலைத்திட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முக்கிய அம்சமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். பொருளாதாரத் திட்டமிடல் அதற்கான நிதி ஒதுக்கிடு, போன்ற விடயங்களில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க ஏதுவாக இருக்கும். ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்களுக்காக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பலியாகாது இருக்க வேண்டும். இது சாத்தியம் ஆவதென்றால், அடி மட்டத்திலிருந்து கட்டி யெழுப்பப்பட்ட மகளிர் அமைப்பு அரசியல் அதிகாரமுடையதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆண்களுடன் சமத்துவம் பெறுவது என்ற கோட்பாடுகளுக்கு அப்பால் பெண் உரிமைப் போராட்டத்தின் இலக்கு அமையப் பெற வேண்டும். ஆணாதிக்கப் பார்வையில்தான் இந்த உலகம் நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றது. . ஆண்களின் சிந்தனை, வாழ்க்கை முறை, செயற்பாடுகள், அதிகார உறவுகள் ஆகியனவை பெண்களின் தலைவிதியை தீர்மானிக்கும் அளவு கோல்கள் ஆகக் கூடாது. ஆணாதிக்கத்தால் வரையறுக்கப்பட்ட இவ்வுலகில், பெண்களின் உரிமைப் போராட்டம் உண்மையான பெண் விடுதலையை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். பெண் விடுதலை எனும் பொழுது, அது ஆண் விடுதலையோடும் தொடர்புடையது. ஆண்களும் தமது பழமைவாத உலகப் பார்வையிலிருந்து விடுபட வேண்டும். பெண் விடுதலை என்பது முற்றிலும் புரட்சிகரமான ஒரு அரசியல் இலட்சியத்தை குறித்து நிற்கிறது. பெண்கள் முழுமையான விடுதலை பெற்றுவாழும் ஒரு புதுமையான சமுதாயத்தையும் புதிய உலக தரிசனத்தையும் அது குறிக்கிறது. இப் புதுமையான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதாயின், தேசிய அரசி யலை நிர்ணயிக்க வல்ல அரசியல் அதிகாரம் பெண்களுக்குத் தேவை. பெண்களின் மேம்பாட்டையும் சமூகத்தின் உயர்ச்சியையும் இலக்காகக் கொண்ட இப் புதிய பார்வையை “பெண்ணிய நோக்கு” எனக் கூறலாம்.” 6
6 ‘Suthunthira Paravaikal’ May-June 1991.
மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் சர்வதேச பெண்ணியவாதிகள் எழுப்பும் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் பங்குபந்றுவதால் மட்டும் அவர்களது எதிர்கால விடுதலையை உறுதிப்படுத்த முடியாது. சமூகத்தின் இரும்புப் பிடியை உடைத்தெறிந்து, முழுமையான விடுதலை பெறுவதாயின் பெண் உரிமைப் போராட்டம் தொடர்ச்சியானதாக, வளர்ச்சியுடையதாக அமையவேண்டும். ஆணா திக்க சிந்தனையால் வனையப்பட்ட உலகை ஒழுங்கை ஏற்றுக் கொள்வதாலும் பெண் விடுதலைக்கு அது வழிகோலப் போவதில்லை. ஆண்களின் கருத்துலகிலும் பார்வையிலும் அடிப்படையான மாந்றம் அவசியம். எல்லாவற்றிற்கும் முக்கியமாக, அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு மகளிர் அமைப்பு, தேசிய உயர் மட்ட அரசி யலில் பங்கு கொள்வது அவசியம்.
இனி, பெண் புலிகள் பற்றிய ராதிகா குமாரசுவாமியின் கண்டன விமர்சனத்திற்கு வருவோம். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் “அதிகாரமற்றவர்களாக” இருக்கிறார்கள் என்றும் தர்மானங்கள் மேற்கொள்ளப்படும் இயக்கத்தின் உயர்மட்டத்தில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்றும் ஒரு தவறான வாதத்தை முன் வைக்கிறார் ராதிகா. நீண்ட காலமாகவே ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு, விடுதலை இலட்சியத்திற்கு பெண் போராளிகள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், இரு si தளபதிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டு, இயக்கத்தின் உயர் ப்டமான மத்திய குழுவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும், தலைமைப்பீடம் எடுக்கும் முடிவுகளில் பங்குகொள்வதோடு, பொது வாகவே பெண்களின் நலனுக்காக உயர்ப்டத்தில் குரல் எழுப்பி வருகிறார்கள். பெண்களின் இராணுவப் பிரிவின் பல்வேறு படையணி களையும் அரசியல், மற்றும் பிரிவுகளையும் சேர்ந்த மூத்த பெண் போராளிகள் கூட்டமாக எடுக்கும் முடிவுகளை கேணல் தரத்திலுள்ள இவ்விரு பெண் தளபதிகளும் இயக்க தலைமைக்கு எமர்பப்ப்பார்கள். விடுதலைப் புலிகளின் இயக்கக் கட்டமைப்பிலுள்ள பல்வேறு, அலகுகளிலும், பெண் போராளிகள் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வருகிறார்கள். இவாகள், எடுக்கும் முக்கிய தீர்மானங்கள் சமுதாய இயக்கம் மீது தாக்கத்தை விளைவிக்கறது. உதாரணமாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள ந்தி நிர்வாக சேவையில், நீதிபதிகளாகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் பெண்கள் பணிபரிகின்றார்கள். இவர்கள் எடுக்கும் முக்கிய தீர்ப்புகளும் தீர்மானங்களும் சமூகத்திலும், சாதாரண மக்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அத்தோடு பெண சட்டத்தரணிகள் பெண்கள் சம்பந்தப்பட்ட பல சிக்கலான பிரச்சினைகளுக்கு ந்தி வேண்டி வாதாடி வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவை எடுத்துக் கொண்டால், அப்பிரிவில் முதலாவது “மருத்துவராக இணைந்தவர் ஒரு பெண். இப் பெண மருத்துவரின் கடும் உழைப்பால் நூற்றுக்கணக்கான மருத்துவத் தாதிகள் லனா விடுதலைப் புலிகளின் நிதியைக் கையாளுவதிலும் பெண்கள் முக் ய பங்களிக்கிறார்கள். தத்தம் பிரிவுகளது நிர்வாகத்தையும், நிர்வாகச் செலவுகளையும் பெண்களே பொறுப்பேற்று நடத்துகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஊடகம், கருத்துருவாக்கம், மற்றும் பரப்புரைத் துறைகளில் பெண்களின் பங்கு முக்கியமானது. பெண்கள் கூட்டாகச் சேர்ந்த படங்கள், குறும்படங்கள், விவரணப் படங்கள், செய்தித் தொகுப்புகள் என்ற வகையில் கருத்துருவாக்கப படைப்புகளை தயாரித்து வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, மகளிர் பிரிவின் அதிகாரபூர்வ ஏடாக ஒரு மாதாந்த இதழை பெண் போராளிகளே எழுதியும் பிரசுரித்து வருகிறார்கள். பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் போராளிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும், இடம்பெயர்ந்த பெண்களினதும் புனர்வாழ்விற்கும், மேம்பாட்டிற்குமாக சமூக-பொருளாதார வேலைத்திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தியும் வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நிலவும் நிர்வாகக் கட்டமைப்பிலும் பெண் . போராளிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சில பகுதிகளின் அரசியல் நிர்வாகப் பணிகளை பெண்களே பொறுப்பேற்று நடத்துகிறார்கள். இந்த நிர்வாக அமைப்புகளின் பெண் பொறுப்பாளர்களுக்குக் கீழ் ஆண் போராளிகளும் பணி புரிகின்றார்கள். அரசியல் நிர்வாகத் துறைகளில், கெளரவத்துடனும், தன்னம்பிக்கையுடனும், முக்கிய பொறுப்புக்களை தாங்கி பணிபுரிந்து வரும் பெண் புலிகள், இயக்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரமுடையவர்களாகவே மாறிவருகிறார்கள். பெண் களுக்கு அதிகாரமளிப்பது என்பது, சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து படிப்படியாக மேல்நோக்கிய வளர்ச்சியையும் உயிர்ச்சியையும் கொண்டதாக அமைய வேண்டும். எந்தெந்த மட்டத்தில், எந்தெந்த வகையில் பெண் போராளிகள் அதிகாரமுடையவர்களாக செயற் படுகிறார்கள் என்பது ராதிகா குமாரசுவாமிக்கு அறவே தெரியாது. அதே போலவே, ஆயிரமாயிரம் தமிழீழப் பெண்கள், தமது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிவாரணமும், உதவியும் ஆலோசனையும் தேடி பெண் புலிகளின் அரசி யல், நிர்வாகச் செயலகங்களுக்கு படை எடுக்கிறார்கள் என்பதும் ராதிகாவுக்கு தெரியாது.
விடுதலைப் புலிகளின் அதிகாரபீடத்தில், தற்போது பதவியும் பொறுப்பும் வகிக்கும் பெண் போராளிகளின் எண்ணிக்கை குறித்த சில நாற்காலி விமர்சகர்களுக்கு திருப்தியில்லாமல் இருக்கலாம். ஆயினும், ]லிகளின் நிர்வாகக் கட்டமைப்பில், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் 5டுத்தர மட்டத்தில், பெருமளவு பெண் புலிகள் பணியாற்றி வருகிறார்கள் என்பது உண்மை. இவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் அதிகாரமும் பொறுப்பும் உள்ள உயர்மட்ட பதவிகளுக்கு உயர்த்தப்படுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பெண் போராளிகளுக்கு கிட்டும் புதிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்களின் பரப்பைப் பார்க்கும்போதும், இளம் புலிப் பெண்களின் அபாரமான தன் நம்பிக்கையையும் தன்மதிப்பையும் பார்க்கும்போதும், பெண்களுக்கு படிப்படியாக அதிகாரமளிக்கப்பட்டு வருகிறது என்று திடமாகச் சொல்லலாம். பெண் புலிகள் மட்டுமன்றி, தமிழீழப் பெண் சமூகமும் உரிமைகளும், அரசியல் அதிகாரமும் பெற்ற சக்தியாக வளர்ச்சி பெற்று வருகிறது எனலாம்.
தேச சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு, தமிழீழ அரசியலுக்கு ஆழமும் அர்த்தமும் கொடுத்துவந்த அதே வேளை, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் தலைவராக பதவி வகித்த திரு. மாத்தையா, அதிகார வெறியால் செய்த சதிகாரச் செயலால் விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, யாழ்ப்பாணத்தில் மக்கள் முன்னணி அரசி யலில் ஒரு பூகம்பமே வெடித்தது.
8.5 மாத்தையாவும் மக்கவ் முன்னணியும்
1993 ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு நாள். வெப்பமும் க்கமுமான இரவு 10 மணி இருக்கும். விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமான கிரு. மகேந்திரராசா (மாத்தையா) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள எமது வீப்டிற்குள் திடீரென்று நுழைந்தார். எமது வீட்டிலிருந்து சாகும் வரை உண்ணாவிரதம் அனுஷ்டிக்கப்போவதாகவும் அதற்கு ஒரு அறையை ஒதுக்கித் தருமாறும் வேண்டினார்.
அங்கலாய்ப்புடனும், பதட்டத்துடனும் அவர் காணப்பட்டார். சாரமும் சேட்டுமாக சாதாரண உடையணிந்திருந்த மாத்தையா, தனக்குத் தேவையான சில பொருட்கள் அடங்கிய சிறு பை னெறையும் காவி வந்தார். எமது வீட்டிற்குள் நுழைந்த கணத்திலிருந்தே தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார். மாத்தையா வின் முகத்தில் ஒரு கடுப்பு தென்பட்டது. அவரது மெய்ப் பாதுகாவலர்கள் ஆயுத பாணிகளாக எமது வீட்டுக்கு முன்பாக குவிந்து நின்றனர். மாத்தையாவின் பஜரோ வாகனம் எமது வீட்டு வெளிவாசலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த திடீர் திருப்பத்தால் திகைப்படைந்த எனது கணவர், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்ததன் காரணம் என்னவென்றும், எமது வீட்டை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என்வென்றும் மாத்தையாவிடம் வினவினார்.
புலிகள் இயக்கத்தின் உப தலைவர் பதவியிலிருந்தும், அரசியற் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் தாம் விலக்கப்பட்டது காரணமாக இயக்கத்தின் தலைமைப் பீடத்திலும், குறிப்பாக திரு. பிரபாகரன் அவர்கள் மீதும் தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாக மாத்தையா விளக்கினார். இயக்கத் தலைமையின் இம் முடிவு நியாயமற்றது என்றும், தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறிய அவர், தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவே சாகும்வரை உண்ணாவிரகமிருக்க தாம் முடிவு செய்துள்ளதாகவும் சொன்னார். எமது வட்டை தெரிவு செய்ததன் காரணத்தை விளக்கிய அவர், இயக்கத்தின் தலைவர்களும் தளபதிகளும் மட்டுமன்றி உள்ளூர் பத்திரிகையாளர்களும் எமது வட்டுக்கு வந்து செல்வதால், தமது உண்ணாவிரதப் போராட்டம் முழு இயக்கத்திற்கும் பொதுமக்களிற்கும் தெரிய வரும் என்றார்.
மாத்தையாவின் வழ்ச்சிக்கான காரணங்கள் என்னவென்பதை பாலாவும் நானும் நன்கறிவோம். மக்கள் முன்னணி என்ற இயக்கத்தின் அரசியற் கட்சியை, மாத்தையா ஒழுக்கம் கட்டுப்பாட்டுடன் செம்மையாக வழிநடத்தவில்லை. இதனால் மக்கள் ஆதரவுத் தளத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும், இயக்கத்தின் உபதலைவர் என்ற ரீதியிலும், மாத்தையா ஒரு சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்தது மட்டுமன்றி, கட்சியின் யாப்பை மீறும் வகையில் தனக்கு அடிவருடிகளாக இருந்தவர்களை அரசியல் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தினார். கிராமிய மட்டத்திலிருந்து, பிரதேச மட்டம் வரை தேர்தல் முறை மூலமாக கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென யாப்பு விதிக்கிறது. இதனால் மாத்தையாவின் நடவடிக்கை, கட்சியின் நிர்வாக அலகுகளை மக்களே தெரிவு செய்யும் சனநாயக வழிமுறைக்கு முரணாக அமைந்ததுடன், மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் நிறுவனமாக கட்சி இயங்குவதற்கும் தடையாக இருந்தது. இறுதியில் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியானது, ஊழல் மிகுந்த நிறுவனமாக மாறி, மாத்தையாவுக்கு விசுவாசமான ஒரு சில நபர்களின் அபிலாசைகளை மட்டுமே பிரதிபலித்தது. பரந்துபட்ட மக்களும் கட்சிம்து ஆத்திரமும் வெறுப்பும் கொண்டனர். இதனால் கட்சியைக் கலைத்துவிடுவதென கதலைமைப்ப்டம் முடிவெடுத்தது. இதன் விளைவாக கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும், இயக்கத்தின் உப தலைவர் பொறுப்பிலிருந்தும் மாத்தையா விலக்கப்பட்டார். மாத்தையா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவு இயக்கத்தின் மத்திய குழுவாலும், பொதுச் சபையாலும் மேற்கொள்ளப்பட்டபோதும், மாத்தையா அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையானது தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதத்தினால் மேற்கொள்ளப்பட்டது எனக் கருதிய அவர், அந்த முடிவுக்கு சவால் விடத் தீர்மானித்தார்.
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு, இந்தப் பிரச்சினையை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு நாம் இரவிரவாக மாத்தையா விடம் மன்றாடிக் கேட்டோம். அடுத்ததாக உண்ணாவிரதப் போராட்டத்தை எமது இல்லத்தில் நடத்துவதற்கு அவர் தீர்மானித்ததும் எமக்கு திருப்தியை அளிக்கவில்லை. சங்கடத்தையே தோற்றுவித்தது. உண்ணாவிரதம் எமது வீட்டில் நடைபெற்றால் இயக்கத்திற்கு எதிராக மாத்தையா நிகழ்த்தும் போராட்டத்திற்கு நாமும் துணை நிற்பதாக எம்மீதும் வணான சந்தேகம் ஏற்படலாம். இதனை மாத்தையாவுக்கும் தெளிவுபடுத்தினோம். இயக்கத்தின் முடிவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமை அவருக்கு இருந்துபோதும், எமது வீட்டை அதற்காகப் பயன்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என்று வாதாடினோம். இந்த நியாயப்பாட்டை மாத்தையா ஏற்றுக் கொண்டார். இறுதியாக. அவரது ஆட்சேபனைக் கடிதத்தை தலைவர் பிரபாகரனிடம் கையளிப்பதாக பாலா வாக்குறுதி கொடுத்ததை அடுத்து, மாத்தையா வின் உண்ணாவிரத நாடகம் முடிவுக்கு வந்தது. பாலசிங்கம் கும்பதிகள் வீட்டில் ஓரிரவு உண்ணாவிரதம் அனுஷ்டித்து தனது ஆட்சேபனையைத் - தெரிவித்துவிட்ட திருப்தியுடன் மாத்தையா தமது மெய்க்காவலர்களுடன் எமது வீட்டை விட்டுப் புறப்பட்டார். மாத்தையாவின் விவகாரத்தை பொறுத்த வரை, பின்னர் நாம் அறிந்த பூதாகர சம்பவங்களோடு ஓப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இந்த உண்ணாவிரத நிகழ்வு ஒரு சிறிய விடயமே.
ஒரு மாதத்தின் பின்னர், மாத்தையாவும் அவருது நெருங்கிய தோழர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். பிரபாகரன் அவர்களை கொலை செய்ய முயற்சித்த சதிக் குற்றசாட்டின்பேரில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் இவர்களைக் கைது செய்தனர். இயக்கத்தின் மூத்த தளபதிகளின் வழிநடத்தலில் மானிப்பாயிலிருந்த மாத்தையாவின் பாசறை இயக்கப் போராளிகளால் சுற்றி வளைக்கப்பட்டு மாத்தையாவும் அவர்களது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். இப்படியான திடீர் திருப்பத்தை அறிந்தபோது நாம் மலைத்துத் திகைத்துப் போனோம். அன்று எமது வீட்டுக்கு வருகை தந்த பிரபாகரன் அவர்கள் நடந்ததை விளக்கிறார். தன்னைக் கொலை செய்துவிட்டு, தலைமையைக் கைப்பற்ற மாத்தையா சதி செய்தார் என்றும், இந்திய வெளியுறவுப் புலனாய்வுத் துறையான றோ, இந்த சதித் திட்டத்தை கீட்டியது என்றும் அவர் சொன்னார். இந்தச் சதித்திட்டத்தின் முழுமையான பரிமாணங்களையும் அறிவதற்கு விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் முடிவடைய பல மாதங்கள் பிடித்தன. மாத்தையாவும் அவருக்கு கீழே பணியாற்றிய அவரது நெருங்கிய தோழர்களும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இறுதியாக, சதித்திட்டத்தின் முழுமையான பின்னணி அம்பலமாகியது. இந்த சதித்திட்டத்தில் முக்கிய பங்குவகித்த கதாநாயகர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிநாடாக்களிலும், ஒளிநாடாக்களிலும் (வ்டியோ) பதியப்பட்டன. இதே சமயம், விடுதலைப் புலிப் போராளிக ளுக்கு விசேட கூட்டங்கள் ஓழுங்கு செய்யப்பட்டு, இந்த சதித் திட்டத்தின் நோக்கம் பற்றியும் பின்னணி பற்றியும் அவர்களுக்கு விளங்கப் படுத்தப்பட்டது. இந்தக் கூட்டங்களின்போது, மாத்தையா தவிர்ந்து, இச் சதியில் நேரடியாக பங்கு கொண்ட பல மூத்த போராளிகள், தாமாகவே முன்வந்து சதிபற்றிய உண்மை விபரங்களை பகிரங்க வாக்கு மூலங்களாக தெரியப்படுத்தினர். இது ஒரு சிக்கல் நிறைந்த விபரீதக்: கதை. மாத்தையாவின் மிகவும் நெருக்கமான போராளிகளுடன், முதலில் இந்திய புலனாய்வுத் துறையினர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் இவர்கள் வாயிலாக மாத்தையாவுடன் தொடர்பு கொண்டனர். விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க சதி தீட்டப்பட்டது. சதி வெற்றிகரமாக நிறைவேறினால் மாத்தையாவுக்கு இந்தியாவின் ஆதரவு மட்டுமன்றி, பெருந்தொகையான நிதியுதவியும் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது. தமிழ் நாட்டில், இந்திய சிறை ஒன்றில் தடுத்த வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர், சிறையிலிருந்து இரகசியமாக விடுவிக்கப்பட்டு, பிரதான கொலையாளியாக பயிற்றுவிக்கப்பட்டார். சிறைக் காவலிலிருந்து தப்பியோடியதாக ஒரு புனைக் கதையுடன் இவர் யாழ்ப்பாணம் திரும்பி வந்தார். பிரபாகரன் அவர்களது படுக்கை அறையில் நேரக் குண்டு. வைப்பதே, மாத்தையாவின் சதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கிய. பணி. இந்த இளைஞர் தமது சிறையுடைப்புக் கதையுடன் யாழ்ப்பாணம் திரும்பியதும், அவர் மீண்டும் பிரபாகரனின் காவல் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் கைது செய்யப்படூவதந்கு சில நாட்களுக்கு முன்னதாக, எமது வீட்டுக்கு வருகை தந்து, தமது சிறையுடைப்பு சாகசம் பற்றி புளுகித் தள்ளினார்.
கொலைச் சதிக்கு பிரதான சூத்திரதாரி மாத்தையாவே என்பது, ஜஐயுறவுக்கு இடமின்றி, விசாரணை முடிவில் நிரூபணமாகியது. திரு. பிரபாகரனையும் அவருக்கு விசுவாசமான மூத்த தலைவர்களையும் களபதிகளையும் கொன்றொழித்துவிட்ட, விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியை தனதாக்கிக் கொள்வதே மாத்தையாவின் சூழ்சிசித் திட்டம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்து வத்தை அழிக்க சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 1994, டிசம்பர் மாதம் 28 ம் திகதி மாத்தையாவுக்கும் அவரோடு சேர்த்து செயற்பட்ட ஒரு சில சதிகாரர்களுக்கும் மரண தண்டனை வழங்கப் பட்டது.
விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியற் கட்சி கலைக்கப்பட்டு, கொலைச் சதிக் குற்றச்சாட்டில் மாத்தையா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புலிகளின் அரசியற் பிரிவு புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக பணியாற்றிய திரு. தமிழ்ச்செல்வன் அரசியற் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
8.6 சீதன முறைமை
திருமணத்தின் போது பெண்களுக்கு சீதனம் வழங்கும் முறையானது, யாழ்ப்பாண சமூகத்தில் ஆழமாக வேராடிய, நிறுவனமயப்பட்ட ஒரு வழக்காகும். யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய சொத்துடமைச் சட்டமாகிய தேச வழமைச் சட்டக் கோவையில் சீகன முறைமை ஒரு சமூக ஒழுங்கு முறையாக கொள்ளப்படுகிறது. மிகவும் சுவார்ஸ்யமான இந்தச் சொத்துடமை சட்டத்தில், தாய்வழியாகவும் தந்தைவழியாகவும் பெறப்படும் சொத்துக்களைப் பேணவைது பற்றிய விதிமுறைகள் அடங்கியுள்ளன. தாய்வழிச் சொத்துடமையின் மூலம், முந்நூறு ஆண்டுகால வரலாறந்றையடைய தேச வழமைச் சட்டத்திற்கும் அப்பாலானது. யாழ்ப்பாணத்து சீதன வழக்கு முறையின் வரலாற்று வேரும் ஆழமானது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், தென் மேற்கு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய திராவிடத் குமிழர் களிடமிருந்தே இன் வழக்கு முறை தோன்றியிருக்கலாமென நம்பப்படுகிறது. “மலபார்” என காலனித்துவவாதிகளால் வர்ணிக்கப்பட்ட, பண்டைய திராவிட இனத்தைச் சேர்ந்த கேரள மக்கள் மத்தியில் நில விய “மருமக்கள் தாயம்” என்ற சொத்துடமைச் சட்டத்திலிருந்தே ச்கன முறைமை தோன்றியிருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. காலனித்துவவாதிகள் இச் சொத்துடமைச் சட்டத்தை திருத்தியபோதும், பெண்களுக்கு சீதனம் வழங்கும் மரபு முறை, சாராம்சத்தில் மாறவில்லை. யாழ்ப்பாண தமிழ் சமூகத்தில் நிலையூன்றி, நடித்து வரும் சீதன முறைமை இன்றும் தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயித்து வரும் சக்தியாக விளங்குகின்றது. குறிப்பாக, பெண்களின் வாழ்வையே பாரதூரமாக பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. இந்தப் பிரச்சினையின் அடிப்படையில்தான் ஒரு தமிழ்ப் பெண்ணின் சமூக அந்தஸ்தும், அவளது சமூக பொருளாதார வாழ்வும் நிர்ணயமாகிறது.
நாம் லண்டனில் வாழ்ந்து வந்தபோதே யாழ்ப்பாண தமிழ் மக்களின் இச் சீதன வழக்கு முறை எனது கவனத்தை ஈர்த்தது. லண்டனில் எமக்குத் தெரிந்த இளைஞர்களில் பெரும்பாலானோர், யாழ்ப்பாணத்திலிருந்த தமது சகோதரிகளின் சீதனத்திற்காக உழைத்து பணம் சேர்ப்பதை அறிந்தோம். இரவு பகலாக ஓய்வின்றி உழைத்து, தமது சகோதரிகளுக்கு பெரும் தொகையில் சீதனம் சேர்க்கும் அங்கலாய்ப்பில், சீதன வழக்குமுறை பற்றி அவர்கள் கண்டனமும் அதிருப்தியும் தெரிவிப்பதைக் கேட்டிருக்கிறேன். சீதனச் சந்தையில் பண்டப் பொருட்கள் போல தமது சகோதரிகளுக்கு விலைபேசப்படூவதால் சீதன முறைமைய அவர்கள் சபிப்பதும் உண்டு. இதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்னவென்றால், இதே இளைஞர்கள் தமக்கு திருமணம் பேசப்படும்பொழுது, எடுத்துக்கொண்ட முற்றிலும் மாறான . நிலைப்பாடுதான், ஒரு சிலரைத் தவிர, அனேகமானோர் சீதனம் வாங்கியே திருமணம் செய்தனர். அதுமட்டுமன்றி சீதனம் வாங்கியதையும் நியாயப்படூத்த முனைந்தனர். எழுபதுகளின் கடைசியிலும், எண்பது களின் ஆரம்பத்திலும் பெண்ணியச் சிந்தனைகள் என்னிடம் தீவிரம் பெற்றிருந்த காலத்தில், ஒரு பெண் பணமும், சொத்தும் கொடுத்து கணவனை வாங்குகின்ற வாழ்க்கை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் கீழ்த்தரமான வழக்குமுறைக்கு தமிழ்ப் பெண்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவும் என்று நான் எண்ணினேன். ஆனால் நான் தெரிந்து கொண்டதை விட சீதன முறைமை மிகவும் சிக்கலானது என்பதை நரன் பின்னர் உணர்ந்து கொண்டேன். திருமணத்துக்கு முன்பாக, மண மகனுக்கும், அவரது குடும்பத்திற்கும் இணக்கப்பாடு கண்ட ஒரு தொகைப் பணமும் சொத்தும் வழங்கும் ஒரு எளிய நடைமுறையாக மட்டும் சீகன முறைமையை எடைபோட முடியாது.
சீதன வழக்கு முறையானது யாழ்ப்பாண சமூகத்தின் சமூக பொருளாதார வாழ்விற்கு ஒரு அச்சாணியான பிரச்சினை; குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் வாழ்விலும் கெளரவத்திலும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினை. தமிழ் சமூகத்துடன் நான் ஆழமாக நெருங்கிப் பழகியபோதுதான் சீதன வழக்கின் முழுமையான பரிமாணங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நான் பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிப் போராளிகளையும் இந்தியாவில்
சந்தித்த போது அவர்கள் சீதன முறைமையை வன்மையாக எதிர்த்தார்கள். விடுதலைப் புலிகளின் அரசியற் கொள்கைத் திட்டத்தில் சீதன ஒழிப்பு ஒரு முக்கிய அம்சமாக இடம்பெற வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். பெண்களை இழிவுபடுத்தும் இந் நடைமுறை முற்றாக ஓழிக்கப்படவேண்டுமென அக் காலத்திலிருந்தே பெண் போராளிகளும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள சீதன வழங்கு முறைக்கு கடுமையான எதிர்ப்பு நிலவும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களோடு கூடிவாழ்ந்த காலத்தில், சீதன நடைமுறைக்கு கூட்டான பெரும் எதிர்ப்பு வவில்லை எனக் கண்டபோது நான் ஆச்சரியமடைந்தேன். நான் நினைத்ததற்கு மாறாக, சீதன வழக்குப் பற்றி மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவின. சிலர், சீ்சன முறைமையை ஆதரிக்கவும் செய்தார்கள். குறிப்பாக படித்த பெண்கள் மட்டத்தில் சீதனத்திற்கு ஆதரவு நிலவியதைக் கண்டு நான் ஆச்சரியம டைந்தேன். சொத்துடைமை படைத்த பெண்களும் சீதன வழக்குக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தனர். குடும்பத்தின் பாரம்பரிய சொத்துடமைகளே பெண்களுக்கு சீதனமாக பராதீனப்படுத்தப்படு கின்றது என்றும், சீதன முறை அகற்றப்பட்டால் இந்தச் சொத்துரிமையை பெண்கள் இழக்க நேரிடும் என்பதும் இவர்களது கருத்து. கங்கள் பெண் பிள்ளைகள் திருமணம் செய்யும் போது, அவர்களுக்கு வீடாக, நிலமாக, நகையாக, பணமாக குடும்பச் சொத்தை பகிர்ந்தளிப்பது அல்லது நன்கொடை வழங்குவது தமது கடமை என்று பெற்றோர்கள் வாதித்தனர். பெற்றோருக்கு உரிய இந்த உரிமையையும், அன்பு வெளிப்பாட்டையும் சட்ட மூலமாக பறித்துவிடக் கூடாது என்பதும் அவர்களது வாதம். சீதனம் கொடுக்காமல் தமது பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது இயலாத காரியம் என்பது பெரும்பலானோரது கருத்து. சீதனம் என்பது தமக்கு உரித்தான பரம்பரைச் சொத்தையே குறிப்பது என்பதால், சீதன முறைமையை தடைசெய்து தமது சொத்துரிமையைப் பறிப்பது நியாயமாகாது என்றும் சில பெண்கள் வாதிட்டனர். சீதன வழக்கை கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட, சமூகத்தில் ஆழவேரூன்றி நிற்கும் இந் நடைமுறையை சட்டமூலமாக மட்டும் அழிப்பது மிகவும் கடினம் 1 கருத்துத் தெரிவித்தனர். சீதன நடைமுறையை ஒழித்துக் கட்டுவதாயின் சமூகத்தின் மனநிலையில் அடிப்படையான மாந்றம் நிகழவேண்டும் என்றும் இவர்கள் வாதித்தனர். சீதனப் பிரச்சினை பற்றிய விவாதம் எழுப்பிய பலரகமான சர்ச்சைகளும், கருத்துகளும் எனது மனதில் பதியவே செய்தது.
1993 ம் ஆண்டு காலப் பொழுதில், மணமகன்களிடம் இருந்தும், அவர்களது குடூம்பங்களிடம் இருந்தும், பேராசையுடன் மட்டுக்கு மீறிய அளவில், எழுப்பப்பட்ட சீதனக் கோரிக்கைகள், எத்தனையோ குடும்பங்களைப் பாதித்ததுடன், பெண்களின் வாழ்க்கையையும் சீரழியச் செய்தது. இதனால், சீதன முறைமை மிகவும் சூடுபிடித்த, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்தது. சீதனக் கொடுமை அழிக்கப்பட . வேண்டும் என்று 1992 ல் சர்வதேச மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்ப் பெண்கள், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை பிரபாகரன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, உடன் நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்தார்.
சீதன முறைமை பற்றி தமிழ் சமூகத்தில் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்கள் உலாவின. அத்தோடு இந்த வழக்குமுறை யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி நிற்கிறது. இப் பிரச்சினையை செம்மையாக கையாளாது விட்டால், பெரும் சமூக விளைவுகள் ஏற்படலாம். சட்டம் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டலாம் என்பதில் எனக்கும் பாலாவுக்கும் நம்பிக்கையில்லை. என்னைப் பொறுத்தவரை, சீதனப் பிரச்சினை பற்றிக் கூடுதலான, சரியான தகவல்களையும் ஆழமான அறிவையும் பெறவே நான் விரும்பினேன். சமூகத்தில் ஆழமாக வேரூன்றிக் கிடக்கும் இந்த நடைமுறை குறித்து, புலிகள் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருவதால், முதலில் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெறுவது அவசியமென நாம் கருதினோம். மக்களின் ஆதரவு இல்லாது போனால், சீதன முறைமையை ஒழித்துக் கட்டுவது கடினம் என்றும், சட்டத்தில் ஓட்டைகளை கண்டுபிடித்து நடைமுறை தொடர்வது சாத்தியமென்றும், சட்டம் இறுக்கமாக இருந்தால், அது தலைமறைவாக, இரகசியமாக . செயற்படலாமென்றும், நாம் கருதினோம். இறுதியில், சீதனப் பிரச்சினை குறித்து பொதுமக்களின் கருத்துக்களை ஆய்வு செய்வதென்றும், அத்தோடு இப் பிரச்சினை குறித்து பகிரங்க விவாதங்கள் நடத்துவதென்றும் முடிவாயிற்று. இதன் அடிப்படையில், கிராமங்களில், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகத்தில், மற்றும் பொது இடங்களில் எல்லாம் விடுதலைப் புலிகளின் அரசியற் போராளிகள், ஆண்களும் பெண்களுமாக பொதுக்கூட்டங்களை ஒழுங்கு செய்து அவற்றில் பங்குகொண்டனர். இப் பொதுக்கூட்டங்களில் எமது போராளிகள் சீதன வழக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் பரந்துபட்ட பொதுமக்களின் கருத்துக்களையும் வான் னர கேட்டறிந்தனர். சீதனம் குறித்து பொதுசன சர்ச்சையை தூண்டிவிடும் நோக்கில், புனைப் பெயரில் பாலா ஒரு கட்டுரையை எழுதினார். ஆனால் அதற்கு பதில் ஒருவரும் எழுதவில்லை. இதனையடுத்து, பல க பெயர்களில், சீதன வழங்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கட்டுரைகளை பாலாவே எழுதி, ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரித்தார். ஆனால் பத்திரிகை விவாதத்தில், வாசகர்கள் கருத்துத் தெரிவிக்கத் தயங்கியதால், அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது.
சீதன நடைமுறையின் சமூகச் சிக்கல்கள் பற்றி சரியான, ஆழமான அறிவைப் பெறும் நோக்கத்தோடு, சமூகவியல் ஆய்வு ஒன்றை நடத்தவும் இயக்கம் முடிவு எடுத்தது. இந்த ஆய்வுக்கான கேள்விக் “கோவையும் தயாரிக்கப்பட்டது. இந்தக் கேள்விகளின் அடிப்படையில் தரவுகள் பெறுவதற்காக பெண் போராளிகள் வடமாகாணம் முழுவதற்கும் அனுப்பப்பட்டனர். இந்த ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் பிரள் னையின் பல்வேறு பரிமாணங்களையும் ஆராய்ந்து தீர்வுகளைத் தீர்மானிக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்கப்புறம் சீதன வழக்கு முறையை தடைசெய்யும் புதிய சட்டங்களை உருவாக்கி, அவற்றை பொது மக்களிடம் விவாதத்திற்கு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாண சமூகத்தில் நிலவும் சீதன வழக்கின் மூலவேர் பற்றியும், அதன் இயங்கு முறை பற்றியும் கஆய்வு செய்து அறிய நான் முடிவெடுத்தேன். சீதனம் பற்றி ஆய்வு செய்து, யாழ்ப்பாணக் கல்விமான்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பழைய, பதிப்புகள் முடிந்துபோன சமூகவியல், ஆய்வு நூல்களையும், சட்டப் புத்தகங்களையும் படிப்பதற்கு எனக்கு அரிய வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில், நாளாந்தம் பல மணிநேரம் ஆய்வில் ஈடுபட்டேன். யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் சீதன வழக்குமுறை தோன்றியதன் மூல வரலாற்று வேர்களையும், பாரம்பரிய சட்டங்களையும் ஆய்வு செய்தபோது, எனக்கு ஒரு புறத்தில் ஆர்வமும், மறுபுறத்தில் அங்கலாய்ப்பும் ஏற்பட்டது. எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால், இந்த ஆய்வுகளின்போது பெண்களுக்கு கணிசமான அளவு சொத்துரிமை வழங்கும் ஒரு பூர்வீக தாய்வழிச் சொத்துடமை முறைமையின் வரலாற்று பூலத்தை நான் அறிய முடிந்ததுதான். இந்தப் பூர்வீக சொத்துடைமைச் சட்டத்தை படித்தபோது எனக்கு ஒரு அங்கலாய்ப்பும் ஏற்பட்டது. அதாவது, புதிய சீதன ஒழிப்புச் சட்டங்களை இயற்றுவதால் பெண்களின் சொத்துரிமை பலப்படுத்தப்பட வேண்டுமே தவிர பறித்தெடுக்கப்படக் கூடாது என்பதுதான்.
உலகத்தின் ஏனைய சமுதாயங்களில் சொத்துரிமையைப் பெறுவதற்கு பல நூற்றாண்டுகளாக பெண்கள் போராடி வருகிறார்கள். நிலைமை அப்படி இருக்கும்பொழுது யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் தாய்வழிச் சொத்து திருமண முறைக்கு பங்கம் ஏற்படுத்துவது புத்திசாலித்தனமல்ல. இந்த மரபுச் சட்டங்களை நன்கு பரிச்லனை செய்த பின்னரே அவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென எனக்குத் தோன்றியது. அத்தோடு இச் சட்டங்களிலுள்ள ஆக்கபூர்வமான நல்லம்சங்களைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, அவற்றை அகற்றிவிடக்கூடாது. சீதன முறைக்கு எதிராக சட்டம் இயற்றும்பொழுது இப் பிரச்சினை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என நான் கருதினேன். யாழ்ப்பாணத்தில் நிலவி ய தாய்வழிச் சொத்துடைமை முறை, பேச்சுத் திருமணம், மற்றும் பல சமூக-பண்பாட்டு வழக்குகளை ஆழமாக பார்த்தபோது சீதனப் பிரச்சினையானது பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடு என்பது தெளிவாகியது. சீதனப் பிரச்சினை சம்பந்தமான . எனது கருத்துக்களை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட முடிவெடுத்தேன். 1994 ல் உடையாத விலங்கு என்ற தலைப்பில் எனது நூல் வெளியாகியது.
எனது நூலின் முற்பகுதி, யாழ்ப்பாண மக்களின் மரபுவழிச் சட்டமான தேச வழமைச் சட்டத் தொகுப்பை பரிசீலனை செய்கிறது. இந்த ஆய்வு மூலமாக சீதன வழக்கு முறை தங்கி நிற்கும் சொத்துடைமை விதிகளையும், சொத்துடைமை உறவுகளையும் விளக்கியுள்ளேன். நூலின் இரண்டாவது பகுதி, சீதன வழக்கில் சமகாலத்தில் புகுத்தப்பட்ட நடைமுறைகள் பற்றியும் அவை தமிழ்ப் பெண்களின் சமூக வாழ்வில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் ஆராய்கிறது. அத்தோடு அரச ஒடுக்குமுறையும் அதனால் விளைந்த புறநிலைகளும் சீதனப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி, மோசமடையச் செய்துள்ளது என்பதையும் இப் பகுதியில் விளக்குகின்றேன். பேச்சுத் திருமணத்தையும் நான் கண்டித்து விமர்சிக்கின்றேன். இத் திருமண முறையானது பெண்களின் சமூக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதுடன், சாதியத்தையும் பேணி வளர்க்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். படித்துப் பட்டம் பெற்று, உயர்தொழில் புரியும் பெண்கள் கூட சீதன முறைக்கும், சமூக பாரம்பரியங்களின் மேலாதிக்கத்திற்கும் அடி பணிய வேண்டியுள்ளதை எடுத்துக் காட்டி, சீதன முறைமையிலுள்ள இறுக்கமான வளைந்து கொடாத பண்பாட்டு ஆதிக்கமானது பெண்களின் வாழ்நிலையை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக விளங்குவதாக சுட்டிக் காட்டுகிறேன். பெண்களின் வட்டு ஊழியம் பந்றியும், அதற்கும் சீதன முறைக்கும் மத்தியிலான உ நவுபற்றியும் ஆராய்கின்றேன். இறுதியாக, பெண்களின் கங்குநிலை பற்றியும், வளர்ச்சிக்கு குந்தகமாக நின்று பெண்களை அது முடக்கி வத்திருக்கும் தன்மைபற்றியும் விளக்குகின்றேன். ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சீதனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக பெண்களின் சொத்துரிமைகளை மேலும் பலப்படுத்த சட்ட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென முடிவுரையில் நான் பரிந்துரைக்கின்றேன்.
எனது நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரபல தமிழ்ழ இலக்கிய ஏடான, “வெளிச்சத்தில்? தொடர் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது. யாழ்ப்பாண பண்பாட்டு வாழ்வில் சீதனம் என்ற கோட்பாட்டிற்கு விரிவான விளக்கம் கொடுப்பதே இந் நூலை நான் எழுதியதன் நோக்கமாகும். எனது நோக்கத்தை இந் நூல் நிறைவு செய்யுமாயின் அதுவே எனக்குப் போதும்.
ஈற்றில் பிரபாகரன் அனர்களின் பணிப்பின் பேரில் விடுதலைப் புலிகளின் சட்டவாளர்கள் (நீதி நிர்வாகப் பிரிவினர்) சீதன நடைமுறை சம்பந்தமான புதிய சட்ட விதிகளை இயற்றினர். இப் புதிய சட்டங்கள், பெண்களின் சொத்துரிமையை பேணிப் பாதுகாத்ததுடன், மணமகனின் உறவினருக்கு ரொக்கப் பணமாக அன்பளிப்புக் கொடுக்கும் முறையை தடைசெய்தது. மனைவியின் சொத்து மீது கணவனுக்கு மேலாண்மை வழங்கும் தேச வழமையின் விதியை நீக்கியமையே புதிய சட்டங்களின் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துது.
8.7 பெண்களுக்கு எதிரான வன்முறை
1990 ல் இந்திய அமைதிப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேறியபோது, பாரிய சமூகப் பிரச்சினைகளையும் விட்டுச் சென்றன. நண்ட காலமாக பொருளாதாரம் வளர்ச்சி குன்றியமை சொத்துடைமைகளுக்கு ஏற்பட்ட பாரிய அழிவு, போரினால் மக்களது வாழ்வில் ஏற்பட்ட சீரழிவுகள், ஒரு அந்நிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு- இவையெல்லாம் யாழ்ப்பாண சமூகத்திற்கு மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினைகளை உருப்பெறச் செய்தன. பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களிலும் சீர்குலைவு ஏற்பட்டூள்ளது என்பதையும் யாழ்ப்பாண ப்ப கவலையோடு உணர்ந்திருந்தனர். சமூக ஒழுக்கத்தில் சீர்குலைவு ஏற்படாமல், மக்களின் வாழ்வில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் மாபெரும் பொறுப்பு விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டது. குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள விடுதலைப் புலிகளின் செயலகங்களில், சமூகப் பிரச்சினைகள் பற்றியும், குற்றச் செயல்கள் பற்றியும் பொதுமக்கள் பெருந்தொகையில் முறைப்பாடுகள் செய்தனர். யாழ்ப்பாண சமூகத்தின்: தனித்துவமான பாராட்டத்தக்க பாரம்பரிய பண்பாக விளங்கிவந்த சமூக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மீண்டும் நிலை நிறுத்துமாறு பொதுமக்கள் விடுதலைப் புலிகளைக் கோரினர். இப்படியான ஒரு சூழலில், சமூகத்தில் நண்டகாலமாக மாற்றமின்றி நிலைத்து நிற்கும் சில சமூகப் பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வுகளை முன்வைப்பது சாத்தியமானதே. சில பிரத்தியேக சமூகப் பிரச்சினைகளைப் பொறுத்த வரை, இவை பற்றி அழமாக ஆய்வு செய்த பின்னரே, இவை சம்பந்தமான கொள்கைகளும் தீர்வுகளும் வகுக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
குறிப்பாக பெண்கள், பாரிய சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு நின்றார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினை அள தெரிவு செய்து அவை பற்றி ஆழமான ஆய்வு செய்து அப்பிரச்சினைகளின் புறத்தோற்றத்திற்கும் பின்னால், உள்ள வ ண்மைக் ளைக் கண்டுபிடித்து, அவற்றின் அடிப்படையிலே முற்போக்கான கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டுமென நான் கருதினேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் அன்று, கசிப்பு, கள்ளச்சாராயம் காய்ச்சுவதென்ற குற்றச்சாட்டில் வறுமைக் கோட்டிலிருந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சைது செய்யப்பட்டனர். இவ்விதமாக இவ் ஏழைப் பெண்களைக் கைது செய்து, கடும் தண்டனைகளை வஷழங்கினாற் போல இந்தக் குற்றச் செயல்களை
ஒரேயடியாகத் தடுத்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்தப் பெண்களைக் கைது செய்து, சிறைகளில் கடுத்து வைத்து அல்லது குற்றப் பணம் அறவிடூவதால் இந்தச் சமூகப் பிரச்சினை தீர்வதற்கு மாறாக மேலும் மோசமடைந்து செல்லும் என்பதே எனது கருத்து. இத்தகைய பெண்கள் கைது செய்யப்படும்பொழுது, சமூகத்தில் அவர்களுக்கு குற்றவாளிகள் என்ற முத்திரை குத்தப்படுகின்றது. தாய்மாரிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்பட்டு தாய்மாரின் கவனிப்பையும் கட்டுப்பாட்டையும் பிள்ளைகள் இழந்துவிட நேரிடுகிறது. இந்த்ச் சமூகச் எக்க நிச்சயமாக கவனத்தில் எடுத்துக் கொள்ப்ப்ட வேண்டும். பெரும்பாலும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஊனமடைந்து வலது குறைந்த கணவனைக் கொண்ட பெண்கள் - இப்படியான பெண்கள் ம்தே குடும்பத்தைக் கொண்டு நடத்தும் பொறுப்பு. சுமத்தப்படுகிறது. இப்படியானவர்களே கசிப்பு, கள்ளச் சாராயம் வடிக்கிறார்கள். யாழ்ப்பாணச் சமூகப் பொருளாதார சூழலில், ஏதோ வருமானம் தேடிக் கொள்வதற்கு இந்தத் தொழிலைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இப்படியான பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வு காணவேண்டுமென்றால் நிச்சயமாக இவை செம்மையான சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாண சமூகத்தில் போர் சூழல், எதிர்மறையான பாரிய சமூகப் பிரச்சினைகளைத் தோற்று வித்துள்ளது என்பது உண்மையே. எனினும், ஒரு ஆக்கபூர்வமான சமூக மாற்றத்திற்கும் வழிகோல இவை வாய்ப்பளித்திருந்தன.
நான் யாழ்ப்பாணம் திரும்பியதிலிருந்து, தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிய வேண்டுமென்ற அவாவால் உந்தப்பட்டு, முதலில் சீதனப் பிரச்சினை பற்றி ஆய்வு செய்தேன். பின்னர், வீட்டுச் சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைபற்றி ஆய்வுசெய்ய ஆவல் கொண்டேன். 1994-95 காலப் பகுதி. அப்பொழுது எத்தனையோ சமூகப் பிரச்சினைகளுக்கு பெண்கள் முகம் கொடுத்து வந்தார்கள். இவ் வேளையில், சில தடனைகளில் பெண் ்் போராளிகளுடன் நிகழ்ந்த கலந்துரையாடல்களின் போது, குடும்பச் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினை தலை தூக்கியது. இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வு ஒன்றை நடத்தவேண்டுமென நான் முன்வைத்த யோசனைக்கு பதிலளித்த ஒரு பெண போராளி “அண்கள் மீது வன்முறை புரியும் பெண்களும் உண்டல்லவா?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார். குடும்பச் சூழலில் நிகழும் வன்முறை ஒரு சிக்கலான பிரச்சினை என்பது எனக்குத் தெரியும் - பின்னராக நான் மேற்கொண்ட ஆய்வுகளின்போது, ஆண்கள் மீது பெண்கள் புரியும் வன்முறைச் சம்பவங்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் ஈடுபட்டதை அறிய முடிந்தது. நான் குடும்பச் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறையையே எனது ஆய்வின் இலக்காகக் கொண்டேன்.
பெண்களின் நலன்களைப் பேணுவதில் தமிழழக் காவல் துறையினர் மிகவும் உறுதியாக நின்றனர். காவல் நிலையங்களில் பெண்கள் செய்யும் முறைப்பாடுகள் உடனடியாகவே விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். சமூக நலன்புரி நிறுவனங்கள், திருமண ஆலோசனை சபைகள், உளவள உதவி சேவைகள் இல்லாத காரணத்தினால் வீட்டில் கணவரால் அடித்துத் துன்புறுத்தப்படும் பெண்களும் தமிழீழக் காவற்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்வ துண்டு. காவற்துறையினரிடம் தமிழ்ப் பெண்கள் கொண்டிருந்த நம்பிக்கையையே இது புலப்படுத்தியது. கணவரின் வன்முறையை கடுத்து நிறுத்தி, குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும் என்பதே, முறைப்பாடு செய்யும் இப் பெண்களின் கோரிக்கையாக . இருந்தது. வன்முறையாளராக இருந்தாலும் தமது கணவன்மார் கண்டிக்கப்படுவதையோ அல்லது சிறையில் அடைக்கப்படுவதையோ பெரும்பான்மையான பெண்கள் விரும்பவில்லை. கணவன் மனைவியின் தாம்பத்திய உறவில் ஏற்படும் தகராறுகள் இயல்பானவை. அவற்றில் எவரும் தலையிடூவது உகந்ததல்ல. ஆயினும் கணவனால் மனைவி மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையானது ஒரு பாரதூரமான விடயம். இது பற்றி நாம் கவனமெடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே, இப்பிரச்சினைக்குள் பிரவேசித்து, பெண்களுக்கு எதிரான இந்த அந்தியை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த விரும்பினேன்.
தமிழீழக் காவற்துறையின் பொறப்பாளர் நடேசன் அவர்கள் எனது ஆய்வுத் திட்டத்திற்கு ஒத்துழைக்க முன்வந்தார். குடும்ப வன்முறை பற்றி முறைப்பாடு செய்த பெண்களிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர், தனது பதிவேடுகளைப் பார்வையிட என்னை அனுமதித்தார். முதலில் நான் இந்தப் பதிவேடுகளை கவனமாகப் படித்தேன். அதிலிருந்து இப் பெண்கள் எந்த அளவுக்கு வன்முறையை எதிர்கொண்டார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அதன் பின்னர் மிகவும் கொடூரமான வன்முறையை அனுபவித்த பெண்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினேன். குடும்ப இரகசியத்தையும் வெட்கத்தையும் பாராமல், பல மைல் தூரத்திலிருந்து சைக்கிளில் வந்து என்னை சந்தித்து, தமது தாம்பத்திய வாழ்வின் மறைவடக்கமான பல தகவல்களை இப் பெண்கள் ஒளிவுமறைவின்றிக் கூறியது எனக்கு ஆச்சரியத்தையே கந்தது. குடும்ப வன்முறையால் மனக்குழப்பம் அடைந்த ஒரு சில இளம்பெண்களைத் தவிர, பெரும்பான்மையான பெண்கள் தம்து மணவாழ்வின் அந்தரங்கங்களை மனக் கூச்சமின்றி ஒப்படைத்தார்கள் சிலர், தமது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை முழுமையாக கூறினர். இனனும் சிலர் தாம் நாளாந்தம் கொடுமையான முறையில் கணவன்மாரால் இம்சிக்கப்படூுவதாகவும் சொன்னார்கள்.
உண்மையில் என்னை கதிகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் ஆளாக்கிய விடயம் என்னவென்றால், அனேகமான பெண்கள் தினந்தோறும் மிகவும் கொடூரமான குடும்ப வன்முறைக்கு ஆளானபோதும், அவர்கள் தம்மைக் கொடுமைப் படுத்திவரும் கணவன்மார் மீது கொண்டுள்ள ஆழமான அன்பும் காருண்யமும்தான். வன்முறையாளரான கணவன்மார் மீது பெண்கள் காட்டும் அன்பும் அனுதாபமும் என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு தனிவிடயம். பெண்கள் தமது துணைவர் மீது காட்டும் பரிவும் சகிப்புத் தன்மையும் தமிழ்ப் பண்பாடு நியமங்களில் வேர்விட்ட பண்பு என்றே நான் ருதுகின்றேன். குடும்ப வன்முறை பற்றி யாழ்ப்பாணப் பெண்களுடன் நான் டத்திய செவ்விகளின்போது இன்னொரு முக்கிய விடயமும் எனது கவனத்திற்கு வந்தது. திருமண உறவில் பெண்களின் விருப்புக்கு மாறாக நிகழும் பாலியல் வன்முறைதான் அது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றி எனது ஆய்வைத் தொடர்ந்தேன். ஆனாலும் ஆய்வின் பரப்புக்கான பெண்களின் மாதிரிக் கூறுகள் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது. காவல்துறை நிலையங்களில் முறைப்பாடு செய்யாமல், கணவரின் வன்முறையை . மூடிமறைத்து மெளனம் சாதிக்கும் ஏராளமான பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் துணிவுடன் தமது பிரச்சினை களை வெளியிட மறுத்துவந்ததால் எனது ஆய்வு முயற்சியை முழுமை செய்ய முடியவில்லை. குடும்ப வன்முறையில் வர்க்க / சாதிய அம்சங்க ளும் இருக்கத்தான் செய்தன. தாழ்த்தப்பட்ட- சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களே, தமது குடும்ப விவகாரங்கள் பற்றி துணிந்து வெளிப்படையாகப் பேசினர். பெரும்பாலும் இவர்களது கணவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். மதுபோதையில்தான் வன் முறையைப் புரிகிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, உயர் சாதிப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலான குடூம்ப வன்முறைப் பிரச்சினைகள் அவர்களது வீட்டுச் சுவர்களின் பின்னால் மெளனித்து விடுகின்றன.
சமூக ஆய்வு என்பது எனது தனிப்பட்ட விருப்புக்கு உரிய விடயம். ஆனாலும், போராட்டத்திற்கு வேறு வழிகளிலும் கருத்துரு வாக்கம் தேவைப்பட்டது. தமிழழ விடுதலைப் போராட்டத்தை உலக அரங்கில் அறிமுகம் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆங்கிலத்தில் விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வமான ஏடுகள் எதுவும் இருக்க வில்லை என வெளிநாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த தமிழர் களிடமிருந்து எமக்கு புகார்கள் கிடைத்தன. இதன் விளைவாக, விடுதலைப் புலிகளின் கொள்கைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் அதிகாரபூர்வமான ஒரு ஆங்கில இதழை வெளியிட நானும் பாலாவும் முடிவு செய்தோம். இன்சயிட் ரிப்போர்ட் (Inside Report) என்ற பெயரில் இம்மாதாந்த ஏட்டில், போர்ச் செய்திகளோடு அரசியல் ஆய்வுகள், மனித உரிமை மீறல்கள், மற்றும் பல விடயங்களும் வெளிவந்தன. அனேகமான எல்லா விடயங்களையும் நானும் பாலாவுமே எழுதினோம். சில சமயங்களில் எமது ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட கட்டுரைகளையும் பிரசுரித்தோம். போர்ச் சூழலில், அதுவும் பிரசுர வழிகளும் வளங்களும் அற்ற ஒரு புற நிலையில் ஒரு பத்திரிகை யை ஒழுங்காக நடத்துவது இலகுவான காரியமல்ல. நாம் எழுதுவது மாத்திரமன்றி, எழுதியதை தட்டச்சில் அடிப்பது, தொகுப்பது, அச்சில் பதிந்ததை திருத்துவது, பக்கங்கள் வடிவமைப்பது மட்டுமன்றி அச்சகத்திற்கு சென்று, அச்சுச் சட்டங்களிலிருந்து எழுத்துகள் விழுந்து விடாமல் பார்த்து, பிரசுரம் முடியும் வரை அங்கு காத்து நிற்பது. இப்படியாக இப்பத்திரிகை வெளியீடு எமது நேரத்தை விழுங்கி வந்தது. ஆயினும் யாழ்ப்பாணத்தில் போர் வெடித்ததைத் தொடர்ந்து பத்திரிகை யைப் பிரசுரிக்க முடியவில்லை. எந்த ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தையும் போர்ச் சூழலில் தொடர முடியாது என்பதை நாம் பின்னர் உணர்ந்து கொண்டோம்.
8.8 யாழ்ப்பாணத்தில் போர் வெடித்தது
1994 / 1995 களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா குமாரதுங்கா அரசுக்கும் மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியபோது ஏற்பட்ட மகிழ்ச்சி ஆரவாரம், 1995 ஏப்ரல் 19 ம் தேதி, போர் மூண்டபோது தணிந்து போனது. பாலா, சமீபத்தில் எழுதி. வெளியிட்ட “நயவஞ்சக அரசியல்” 7 என்ற நூலில் இப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததன் காரணங்கள் பற்றி விபரமாக ஆராயப்படுகிறது.
7 Balasingham, Anton. “The Politics of Duplicity. Re-Visiting the Jaffna Talks’ First Edition 2000, Fairmax Publishing Ltd.
தமிழ் மக்களுக்கு தன்னாட்சி அல்லது பிரதேச சுயாட்சி வழங்கும் ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதை சிறீலங்கா இராணுவமோ, அன்றி பெளத்த தேசியவாத சக்திகளை முதுகெலும்பாக கொண்ட சந்திரிகா குமாரதுங்காவின் அரசோ விரும்பவில்லை. மாறாக. இவர்கள் ஒரு இராணுவத் தீர்வையே விரும்பினார்கள். மக்களிடம் சமா தானத்திற்கான மனுக்கோரி, சந்திரிகா ஆட்சி பீடம் ஏறியபோதும், சமாதானத்திற்கான போர்” என்ற ஒரு நாசகார திட்டத்தை முன்வைத்து, கடும்போக்குடைய இராணுவவாதிகள் பக்கம் சார்ந்தார். ஒரு நிரந்தரமான சமாதானத்திற்கு யுத்தம் அவசியம் என உலக வ நம்ப வைத்த வெளிவிவகார அமைச்சர் திரு. கதிர்காமர், போரை முன்னெடுப்பதற்காக அனைத்துலக நாடுகளிடமிருந்து பெருமளவு கடனுதவிகளையும் பெற்றுக் கொடுத்தார். இக் கடனுதவிகளைக் கொண்டு, பெருமளவு இராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டது. முழு அளவிலான ஒரு யுத்தத்தை முன்னெடுக்கும் நோக்கத்தோடு, எந்த விலை கொடுத்தும் எந்த விதமான நவன ஆயுதங்களையும் வாங்கும்படி முப்படைத் தளபதிகளுக்கும் அனுமதி வழங் ப்பட்டது.
கட்டவிழ்ந்து வரும் இந்த ஆபத்தான சூழ்நிலை என்னையும் லாவையும் திகைப்பூட்டச் செய்தது. தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டை தம்மால் பாதுகாக்க முடியுமென விடுதலைப் புலிகளின் தளபதிகள் சிலர், அத்த தன்னம்பிக்கை தெரிவித்தபோதும் நானும் பாலாவும் அப்படிக் கருதவில்லை. யாழ்ப்பாணம் மீது ஒரு பாரிய படையெடுப்பிற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது என்பதை உணர்ந்த நாம், விடுதலைப் புலிகளின் படையணிகள் இதற்கு முகம் கொடுக்க முடியாதிருக்கும் என நாம் சரியாகவே நிலைமையை எடைபோட்டோம். பலாலிப் பெருந்தளத்தில் பிரமாண்டமான படை குவிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே வேளை, குண்டு வச்சு விமானங்கள், டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் என்ற ரீதியில் கனரக ஆயுதங்களும் பலாலியில் குவிக்கப்பட்டு வந்தன. இந்தப் பாரிய படை குவிப்பே எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
இலங்கைத் தீவு முழுவதிலும் தனது இறையாட்சி நடைபெறுவதாக கூறிவந்த சிறீலங்கா அரசுக்கு, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஒரு தனியாட்சி நடத்துவது ஒரு சவாலாகவும் அவமானமாகவும் இருந்தது. சில அரச நிறுவனங்களை செயற்பட அனுமதித்த விடுதலைப் புலிகள், சட்டம் ஒழுங்கையும் ந்தி பரிபாலனத்தையும் தமது பொறுப்பில் வைத்திருந்ததுடன், ஊழலையும் சீர்கேட்டையும் தவிர்த்து, மக்களின் நலன் பேணும் நோக்குடன் அரச நிறுவனங்கள் அனைத்தையும் மேற்பார்வை செய்தனர். புலிகளின் ஆட்சியை சர்வாதிகார ஆட்சியென அரசாங்கம் கண்டித்தபோதும், தமிழ் மக்களின் பேராதரவு புலிகள் பக்கமே இருந்தது. இதனால், கொழும்பு அரசு சினம் கொண்டது. அத்தோடு, சுயநியர்ணய உரிமை என்றும், அரசி யல் சுதந்திரம் என்றும், தனியரசு என்றும் விடுதலைப் புலிகள் குமது கொள்கைப் பிரகடனங்களை அறிவித்து வந்ததும் சிங்கள அரச தலைமைக்கு அங்கலாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத் திறனும், இராணுவ பலமும், படிப்படியாக தமிழர் தாயகத்தை மீட்டெடுக்கும் அவர்களது உறுதிப்பாடும், ஈற்றில் தனியரசு என்ற தமிழ் மக்களின் அபிலாசையை மெய்ப்பித்து விடலாமென சிங்களத் தலைமை அஞ்சியது. எனவேதான், யாழ்ப்பாணத்தை இராணுவ ரீதியில் கைப்பற்றுவது சந்திரிகா குமாரதுங்கா அரசின் முக்கிய குறிக்கோளாக அமைந்தது. இந்த இராணுவக் குறிக்கோள் நிறைவேறுமானால், வடக்கில் தமிழரின் மேலாதிக்கத்திற்கு ’ சாவுமணி அடிப்பதோடு, புலிகளின் படை பலத்தையும் முறியடித்து விடலாம் என அரசாங்கம் கருதியது. அத்தோடு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டால், தமிழரின் இராச்சியத்தை வெற்றி கொண்ட வீராங்கனையாக சிங்கள-பெளத்த பேரினவாத சக்திகள் மத்தியில் தமக்குப் புகழோங்கும் என்றும் சந்திரிகா எண்ணினார். சமாதான தேவதை என சர்வதே உலகிற்கு வேடம் பூண்டு நடித்தபோதும், சந்திரிகா இராணுவப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். போர் மூலம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றிவிட்டால், தமிழரின் சுதந்திர இயக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிடுவதுடன், சிங்கள தேசியவாதிகள் மத்தியிலும் ஆதரவை நிலைநாட்டிக் கொள்ளலாமென அவர் உறுதியாக நம்பினார். யாழ்ப்பாணப் படையெடுப்பிற்கு பொறுப்பதிகாரியாக தனது மாமனாரான ஜெனரல் ரத்வத்தையையும், களத் தளபதியாக ஜெனரல் ஜானகப் பெரேரா வையும் சந்திரிகா நியமித்தார். ஜெனரல் ஜானக பெரேரா ஒரு கடும் போக்காளர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்தபோது கூட்டுக் கொலைகள் புரிந்து பெருந்தொகையான தமிழர்களை அழித்தவர். எண்பதுகளில் ஜே.வி.பி. கிளர்ச்சியை நசுக்க பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை கொன்றொழித்தவர்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, யாழ்ப்பாணத்தில் மோதல்கள் நிகழலாமென மக்கள் எதிர் பார்த்தார்களேயன்றி, பெரிய எடுப்பில் பாரிய படையெடுப்புக்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை. ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாலும் பல்லாயிரக்கணக்கான படையினரும், கனரக ஆயுதங்களும் பலாலிப் பெருந்தளத்தில் குவிக்கப்பட்டு வந்தன. கிழக்கு மாகாணத்திலிருந்தும், தென்னிலங்கை யிலிருந்தும், முப்பதினாயிரத்துக்கும் நாற்பதினாயிரத் துக்கும் மத்தியி லான துருப்புகள் அங்கு குவிக்கப்பட்டதாக பின்னர் அறிந்தோம். இடைக்கிடையே, பீரங்கி எறிகணைத் தாக்குதலும் விமானக் குண்டுவீச்சுக்களும் நடைபெற்றதாயினும், யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்க்கை இயல்பாகவே ஓடிக் கொண்டிருந்தது. பிரமாண்டமான அளவில், சிங்கள அரசு போர் ஆயத்தங்களை செய்துவருகிறது என்பதை மக்கள் அறியவில்லை. அப்படித்தான் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணம் மீது படையெடுத்தாலும், விடுதலைப் புலிகள் யாழ்பபாணத்தைப பாதுகாப்பார்கள் என்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவியது. உண்மையைச் சொல்லப் போனால், யாழ்ப்பாணம் ம்தான படையெபுப்புக் குறித்து நானும் பாலாவும் அங்கலாய்ப்புடன் இருந்தோம். யாழ்ப்பாணம் மீது பெரும் படையெடுப்பு நிகழ்ந்தால் பெருமளவில் உயிரிழப்பும். பொருளழிவும் ஏற்படுமென நாம் அஞ்சினோம். மிகவும் அடர்த்தியாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இப் பகுதியில் ஒரு பயங்கரமான மரபுவழி யுத்தம் வெடிக்குமானால், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவை எண்ணி நாம் திகிலடைந்தோம். தமிழீழ மக்களின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணம் சிங்கள இராணுவ ஆதிக்கத்தின் கழ் வழ்ந்துவிடும் சாத்தியம் குறித்தும் நாம் கவலையடைந்தோம்.
1995 ஜுலை 9 ம் தேதி, யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பின் முதலாவது கட்டம் ஆரம்பமானது. “முன்னோக்கிய பாய்ச்சல்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையில் விமானத் தாக்குதல், பீரங்கி எறிகணைத் தாக்குதல், ஆகியவற்றின் உதவியுடன் பல்லாயிரம் படையினர், யாழ்ப்பாண நகரை நோக்கி இரு முனைத் தாக்குதலை மேற்கொண்டனர். ஒரு படைப்பிரிவு, பலாலியிலிருந்து தெல்லிப்பளையூடாக அளவெட்டி, சண்டிலிப்பாய் நோக்கியும், மற்றைய படைப் பிரிவு, மாதகலில் இருந்து பொன்னாலைக் கடலோரமாக வட்டுக் கோட்டை நோக்கியும் நகர்ந்தன. விடுதலைப் புலிகளிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட எதிர்த்தாக்குதல் மேந்கொள்ளப்பட்டதால், சிங்களப் படையணிகள் நான்கு நாட்களுக்குள் வட்டுக்கோட்டையினதும் சண்டிலிப்பாயினதும் எல்லைகளை நெருங்கிவின. சிங்கள இராணுவம் மகத்தான போர்ச் சாதனைகளை புரிந்து வருவதாக கொழும்பு ஊடகங்கள் அரசாங்கத்திற்கு புகழாரம் செலுத்தின. யாழ்ப்பாணப் படையெடுப்பின் முதலாவது கட்டம் வெற்றியீட்டி வருவதைக் கண்ட யாழ்ப்பாண மக்களிடம் ப்தியும் பதகளிப்பும் ஏற்பட்டது. சிங்களத்தின் படையெடுப்பை முறியடிப்பதந்காக பெரியதொரு எதிர்த் தாக்குதலை மேற்கொள்ள ஆயத்தங்கள் செய்யப்படூவதாக திரு. பிரபாகரன் தன்னிடம் கூறியதாக பாலா என்னிடம் சொல்லியபோதுதான் எனக்கு மனஆறுதல ஏற்பட்டது.
1995 ஜூலை 14ந் தேதி “புலிப் பாய்ச்சல்” என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கம் எதிர்த்தாக்குதல் இராணுவ நட வடிக்கையை மேற்கொண்டது. அளவெட்டியிலும் சண்டிலிப்பாயிலும் ஊடுருவி நின்ற சிங்கள இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ படையணிகள் தாக்குதல்களை நிகழ்த்தி எதிரிக்கு பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின. இரு தினங்களாக கடும் சமர் நடைபெற்றது. இச் சண்டைகளின்போது சிங்கள விமானப் படையின் புக்காரா” குண்டுவீச்சு விமானம் ஒன்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே சமயம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சமீபமாக, “எடித்தேரா” என்ற போர்க்கப்பலும் கடற் கரும்புலிகளால் : தகர்த்து கடலில் மூழ்கடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் உக்கிரமான எதிர்த் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாது திணறிய அரச படைகள் இறுதியில், தமது இராணுவ நடவடிக்கையை கைவிட்டு குமது தளத்திற்கு பின்வாங்கின.
“புலிப் பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையின் வெற்றியும், சிங்கள விமானப் படை மீதும், கடற்படை மீதும் நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல்களும் யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்தது. ஆனால், உண்மையில், சிங்கள இராணுவத்தின் “முன்னோக்கிப் பாய்ச்சல்” படை நடவடிக்கையானது, விடுதலைப் புலிகளின் தற்காப்புப் படை பலத்தை பரீட்சித்துப் பார்க்க மேற்கொள்ளப்பட்ட திசை திருப்பும் தாக்குதல் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை. உண்மையான படையெடுப்பு மேற்கொள்ளப்படும் பொழுது, எந்த வழியாக யாழ்ப்பாணம் நோக்கி படை நகர்வு எடுக்கப்படும் என்பதில் புலிகளை குழப்பிவிடூவதும் “முன்னோக்கிப் பாய்ச்சலின்’ இன்னொரு நோக்கமாகும்.
“புலிப்பாய்ச்சல்” இராணுவ வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நிலவிய நிம்மதியும் இயல்பு நிலையும் நண்ட காலத்திற்கு நடிக்கவில்லை. 1995 ஜுலை மாத இறுதிப் பகுதியிலிருந்து சிநீலங்கா ஆயுதப் படைகள் யாழ்ப்பாணம் மீது பீரங்கி எறிகணை வீச்சையும் விமானக் குண்டுத் தாக்குதலையும் தீவரப்படுத்தின. இத் தாக்குதல்கள், யாழ்ப்பாண நகரையும் அதன் சுற்றுப் புறங்களையும் குறி வைத்து நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுத்தி, அவர்களைப் பயமுறுத்தி, மனத் தளர்வு உண்டு பண்ணும் நோக்கோடு கண்மூடித்தனமாக இத் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. விமானக் குண்டு வீச்சும், பீரங்கி எறிகணை வச்சும் நாளுக்கு நாள் தீவிரமாகி, இறுதியில் இரவிலும் தாக்குதல்கள் நீடிக்கப்பட்டன. நடுநிசியில், குண்டுவீச்சு விமானங்கள் எமது வீட்டுக்கு மேலாக ஆகாயத்தில் சுற்றும் பயங்கர இரைச்சலைக் கேட்டதும் நாம் பதட்டத்தோடு எழுந்தோடி. பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுவோம். இரவுக் குண்டு வீச்சின் தீவிரத்தால், யாழ்ப்பாண நகரமே நடூீங்கும். யாழ்ப்பாண மக்களுக்கு, ஒவ்வொரு இரவும் பயங்கர அனுபவமாக இருக்கும். அனேகமானோர் தூக்கமின்றி, அங்கலாய்ப்புடன் பதுங்கு குழிக்குள் முடங்கிக் கிடப்பர். இன்னும் பலர், ந தேடி யாழ்ப்பாண நகரை பகுகிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வர்.
எமது வீட்டிற்கு அண்மையில் பீரங்கி எறிகணைகள் விழுந்து வெடிக்கும். அப்பொழுதெல்லாம் எமது வீடு அதிர்வால் நடுங்கும். எமது வீட்டுக்கு மேலாக, எறிகணைகளின் விசை உந்துகள் வெடிக்கும் பொழுது ஏற்படும் பயங்கர ஓசையால் காதைப். பொத்தியபடி தூக்கமின்றிக் கழித்த எத்தனையோ இரவுகள் இன்னும் எனது நினை வில் நிலைத்திருக்கின்றது. எறிகணை வீச்சு, முடிவின்றி இரவிரவாகத் தொடர்ந்தது. நாமும் பதுங்கு குழிக்குள் பாய்ந்தோடிக் களைத்து சலித்துப் போனோம். இனி, நடப்பது நடக்கட்டும் என்ற தீர்மானத்தில், இரவில் எழுவதை நிறுத்திக் கொண்டோம்.
சிறீலங்கா ஆகாயப் படை விமானங்களும் கண்மூடித் தனமாகவே குண்டுவச்சுக்களை நடத்தின. விடுதலைப் புலிகளின் பாசறைகள் மீதே குண்டுத் தாக்குதல் நடத்துவதாக ஆயகாயப் படையினர் கறிக்கொண்டபோதும், குடிசன இலக்குகள் மீதே குண்டுகள் வீசப்பட்டன. சிறீலங்கா ஆகாயப் படையனிரின் படுமோசமான குண்டுத் தாக்குதல் சம்பவம், யாழ்ப்பாணத்திற்கு அண்மையிலுள்ள நவாலி இராயப்பர் தேவாலய வளவில் நிகழ்ந்தது. இந்தக் கத்தோலிக்க புனித தலத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களிடையே குண்டுகள் வழ்ந்து வெடித்து இரத்தக் களரியை ஏற்படுத்தியது. ஜலை 2ம் திகதி நடை பெற்ற இக் கொடூரத்தில், குழந்தைகள் வயோதிபர் உட்பட 120 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேர் வரை படுகாயமடைந்தனர். இம் மிருகத்தனமான படுகொலைகளைப் புரிந்து விட்டு, அதை மூடி மறைப்பதற்காக விடுதலைப் புலிகளின் பாசறை மீதே குண்டு வீ்சப்பட்டதாக சிறீலங்கா அரசு கதை கட்டியது. இந்தத் தருணத்தில், நல்ல வேளையாக சர்வதேச செஞ்சிலுவைச் “சங்கத்தினர் ஒரு அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டு கொல்லப்பட்டு, காயப்பட்டோர் அனைவருமே பொதுமக்கள் என்பதை உறுதிப்படுத்தியதுடன், பழியை விமானப் படை மீது சுமத்தினர். செஞ்சிலுவைச் சங்கத்தினரின் இத் தலையீடு இல்லாது போனால், இப் படுபாதக கொலைச் சம்பவம் பத்திரிகைத் தணிக்கை என்ற போர்வையின் கழ் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கும். தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு நடத்தி வந்த காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை, செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை அனைத்துலகத்திற்கு அம்பலப்படுத்தியது. இதனால், பெரும் சங்கடத்திற்கும் அவமானத்திற்கும் ஆளான சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திரு. கதிர்காமர், செஞ்சிலுவைச் சங்க தலைமைப் பிரதிநிதியை தமது செயலகத்திற்கு அழைத்து, இலங்கையில் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இன்னுமொரு கோரமான குண்டுவீச்சுச் சம்பவம் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் நிகழ்ந்தது. செப்டெம்பர் 22 ம் திகதி நிகழ்ந்த இக் குண்டு வீச்சுச் சம்பவத்தில் 24 மாணவ, மாணவிகள் கொல்லப் பட்டதுடன் 35 பேர் படுகாயமடைந்தனர்.
8.9 யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு
நாம் அங்கலாய்ப்புடன் எதிர்பார்த்திருந்த யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு “இடிமுழக்கம்” என்ற பெயருடன் 1995 ஒக்டோபர் 1ம் திகதி ஆரம்பமாகியது. “இடிமுழக்கம்” என்ற பெயருக்கு இசைவாக, பலத்த பீரங்கி விமானக் குண்டுவீச்சுகளுடன் படைநகர்வு தொடங்கியது. வலிகாமத்தில், குறிப்பாக, வசாவிளான், பத்தமேனி, அச்சுவேலி, புத்தூர் போன்ற இடங்களில் பாரிய குண்டுவீச்சுகள் இடம்பெற்றன. விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு நிலைகள் மீது பீரங்கி, விமானக் குண்டூமாரி பொழிந்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான சிங்களஆயுதப் படையினர் களத்திலே இறங்கினர். வசாவிளானிலும், பத்தமேனியிலும், நிலைகொண்டிருந்த புலிப் படைவீரர்களுக்கும் சிங்கள இராணு வத்திற்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. பல நாட்களாகத் தொடர்ந்த கோரமான சமரில் இரு தரப்பினருக்கும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. பலாலிப் பெருந்தளத்திலிருந்த பீரங்கிகள், இரவு பகலாக இடைவிடாது தொடர்ச்சியாக, வலிகாமம் கிழக்குப் பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்த வண்ணம் இருந்தன. இதன் கொடூரம் தாங்காமல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பாரம்பரிய கிராமங்களை விட்டு அகதிகளாக வெளியேறினர். “இடிமுழக்கம்” போர் நடவடிக்கை இரு வாரங்கள் வரை தொடர்ந்தது. தனக்கு ஏற்பட்ட பெரும் உயிர் இழப்புகளையும் பொருட்படுத்தாது, சிங்கள இராணுவம், புலிகளின் நிலைகளை அழித்து, அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பட்டினங்களைக் கைப்பற்றியது. இப் பட்டினங்கள் கைப்பற்றப்பட்டபோது எமக்கு ஒரு உண்மை புலனாகியது. அதாவது, வலிகாமம் கிழக்கு கரையோரப் பாதை வழியாகவே பாழ்பபாண நகர் நோக்கி முன்னேறி நகர இராணுவம் திட்ட பி டிருக்கின்றது எனபதுதான். இதனைப் புரிந்து கொண்ட விடுதலைப் புலிகளின் போரணிகள், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நெடுஞ்சாலையை மறித்து, நீர்வேலியிலும் கோப்பாயிலும் பலம்பொருந்திய பாதுகாப்பு அரண்களை கட்டி எழுப்பின.
நீர்வேலியும் கோப்பாயும் கைப்பற்றப்பட்டால், உடனடியாகவே சிங்களப் படையணிகள் செம்மணி வெளியூடாக விரைந்து முன்னேறி நாவற்குழிப் பாலத்தை கைப்பற்றி விடுவார்கள் என நாம் ஊகித்தோம். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாவற்குழிப் பாலம், வலிகாமத்தையும் தென்மராட்சிப் பிரதேசத்தையும் இணைக்கிறது. இப் பாலத்தை இராணுவம் கைப்பற்றுமாயின், யாழ்ப்பாண நகரம் உட்பட வலிகாமத்தில் வசிக்கும் ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் இராணுவத்தின் பொறிக்குள் சிக்கி விடுவார்கள். சந்திரிகா குமாரதுங்கா அரசாங்கத்தின் இராணுவ தந்திரோபாயமும் இதுவேதான். “இடிமுழக்கம்” இராணுவ நடவடிக்கை மெல்ல, மெல்ல தணிந்து, புலிகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை இராணுவம் பலப்படூத்திக் கொண்டிருந்த வேளையில், அடுத்த கட்ட நகர்வு எப்படியாக அமையுமென நாம் அங்கலாய்ப்புடன் காத்திருந்தோம். அடுத்த கட்ட நடவடிக்கை தீர்வானதாக அமையும் என எதிர்பார்த்தோம். எமது போராளிகள் மனவுறுதி தளராது இருந்தார்கள். எப்படியும் யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதென்ற உரமான உறுதி கொண்டிருந்தார் கள். ஆனாலும், அதே வேளை, அரசாங்கத்திடமும் படை பலம் இருந்தது; ஆயுத சக்தி இருந்தது; பெரும் உயிரிழப்பை சந்தித்தபோதும் தனது இராணுவ இலக்கை அடையவேண்டுமென்ற தவிர உறுதிப்பாடூம்
தீர்வான நாள் வந்தது. 1995 ஒக்டோபர் 17ந் திகதியன்று “சூரியக் கதிர்” (ரிவிரச) என்ற போர் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றும் இராணுவத் கந்திரோபாய நோக்குடன் படை நகர்வு ஆரம்பித்தது. பலத்த காவலரண்கள் கட்டி, புலிப் படைப் போரணிகள் நிலைகொண்டிருந்த நீர்வேலிப் பிரதேசத்தில் கடும் சமா மூண்டது. பாதுகாப்பான நிலைகளில் நின்றபடி, புலிவரர்கள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தினர். சினமடைந்த சிங்களப் படையினர் யாழ்ப்பாண நகர் மீதும் அதன் சுற்றுப் புறங்கள் மீதும் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை தொடுத்தனர். “சூப்பர் சோனிக்” குண்டுவீச்சு விமானங்கள் குடிசன பகுதிகள் மீது குருட்டுத்தனமாக தாக்குதல்களை நடத்தியது. கொக்குவில், பகுதியில், எமது வீட்டுக்கு அண்மையில் விமானக் குண்டுவீச்சும், எறிகணைத் தாக்குதல்களும் தவிரமடைந்தது. இதனால் நானும் பாலாவும் நாள் முழுதாக வீட்டுக்கும் பதுங்கு கழிக்கும் இடையே ஓட்டப் பந்தயத்தில் ஈடூபட்டிருந்தோம். எமது வடு விமானத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சத்தில் எமது மெய்ப் பாதுகாவலர்கள், சதா வானத்தையே நோட்டமிட்டபடி இருப்பார்கள். எமது வீட்டுக்கு அண்மையாக, குண்டு விமானங்கள், செங்குத்தாக தாழப்பறக்கும்போதெல்லாம் எம்மை எச்சரிப்பார்கள். சில சமயங்களில் எமது வீட்டுக்கு சமீபமாக குண்டுத் தாக்குதல் நிகழும்போது காற்றின் அதிர்வலைகள் பதுங்கு குழிக்கு உள்ளே நுழைந்து எம்மை உரசிச் செல்லும். ஒரு சமயம், எமது வீட்டுக்கு அருகாமையில் வெடித்த குண்டின் அதிர்வால் முழு வீடுமே நடுங்கி, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. காற்றின் அதிர்வலைகள் சுவரோடு என்னைத் தூக்கி வீசியது. நான் தரையில் சரிந்து விழுந்தேன். மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில், பாலாவை தரையில் படுக்குமாறு கத்தினேன். மின் விளக்குகளுடன் ஓடி வந்த எமது மெய்ப் பாதுகாவலர்கள், எம்மை அழைத்துச் சென்று பதுங்கு குழிக்குள் இருத்தினர். பதுங்கு குழிக்குள் காத்திருந்தபோதுதான், எமது வீட்டுக்கு அருகாமையில் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாக எமக்கு தகவல் வந்தது.
நிலையற்ற எதிர்காலமும், பீதியும் யாழ்ப்பாண மக்களை பீடித்தது. வலிகாமம் ஒரு மரண களமாக மாறியது. சமாதானத்திற்கான போர்” என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இந்த மனிதப் பேரவலம் குறித்து உலக அரசுகள் கவலையோ அக்கறையோ காட்டவில்லை. உலக ஊடகங்களும் மெளனம் சாதித்தன.
இந்த அவலங்கள் நிறைந்த இந்த ஆபத்தான கால கட்டத்தில், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் எந்தப் பாதையுூடாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேறப் போகின்றது என்பதை அறிவதற்காக, யாழ்ப்பாண புவியியல் வரை படங்களை நீண்ட நேரமாகப் படிப்பார் பாலா. புவியியல் ரீதியாக இராணுவத்தின் நகர்வுகளை எடைபோடுவதில் பாலாவுக்கு ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. போர்க் களத்தில் நாளுக்கு நாள் நிகழும் சம்பவங்களை அவதானித்து வந்த அவர், வீடுகள் வீதிகள் ஒழுங்கைகளும் பலமான பாதுகாப்பு அரண்களும் நிறைந்த கட்டுமாணப் பகுதியை ஊடுருவி, இராணுவம் நகரப் போவதில்லை என்று எனக்கு கூறினார். மாறாக, வலிகாமம் கரையோரமாக புத்தூரிலிருந்து செம்மணி வரை விரியும், உப்பாறு நீரேரிக்கும் யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட வெளிகள், சதுப்பு நிலங்கள் ஊடாகவே சிங்களப் படை நகர்வு இடம்பெறுமென சரியாகவே பாலா மதிப்பிட்டார். இதே பாதையால்தான் இராணுவம் முன்னேறி வருமென புலிகளின் களத் தளபதிகளும் மதிப்பிட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இப் பிரதேசத்தில் பலம் பொருந்திய பாதுகாப்பு அரண்களை புலிகளால் நிறுவ முடியவில்லை. அங்கிருந்த புலிகளின் நிலைகளும், எதிரியின் டாங்கிகளது பலம்வாய்ந்த சுடு சக்திக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
ஒக்டோபர் 29ம் திகதி, நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு சிங்கள இராணுவம் முன்னேறியது. *ரிவிரச” சமரில், இரத்தம் தோய்ந்த கடும் மோதலாக நீர்வேலிச் சண்டை அமைந்தது. நீர்வேலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, சிங்கள இராணுவத்தின் கவச வாகன அணிகள். நரேரியின் கரையோரமாக கோப்பாய் வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்தன. இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த, தமது படைப் பிரிவுகளை அணிதிரட்டி, இராணுவத்துடன் உக்கிரமாக மோதினார்கள் புலிகள். அப்பகுதியில் பயங்கரச் சண்டை தொடர்ந்தது. நிலைமை மோசமான கட்டத்தை அடைந்திருந்தது. கோப்பாய் வடக்கிலுள்ள புலிகளின் பாதுகாப்பு நிலைகளை சிங்களப் படையணிகள் கைப்பற்றினால், அவை உடனடியாகவே செம்மணி வழியாக நகர்ந்து நாவற்குழிப் பாலத்தை கைப்பற்றலாம். அப்படி நிகழ்ந்தால் வலி காமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருமே இராணுவ முற்றுகைக்குள் சிக்கிவிடூுவார்கள். இந்த ஆபத்துக் காரணமாக் மக்கள் மத்தியில் பீதியும் பதட்டமும் நிலவியது.
அரசியற் பொறுப்பாளர் திரு. கமிழ்ச்செல்வன் எமது வீட்டுக்கு அவசரமாக வந்து, என்னையும் பாலாவையும் எமது மெய்ப்பாது காவலரையும் உடனடியாக கொக்குவில் இருப்பிடத்திலிருந்து இம் மாறச் சொன்னார். சாவகச்சேரியில் கற்காலிகமாக எமக்கு ஒரு வீடு ஒழுங்கு செய்திருப்பதாகவும் சொன்னார். நாளை காலை, வலிகாமம் மக்களுக்கு இராணுவ நிலவரம் பற்றி அறிவிக்கப்படும் என்றும், நாவற்குழிப் பாலம் சிங்களப் படையினரிடம் வீழ்ச்சி அடைவதற்கு முன்பாக வலிகாமத்திலிருந்து வெளியேறுமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் தமிழ்ச்செல்வன் சொன்னார். சாவகச்சேரி பகுதியிலுள்ள மட்டுவில் என்னும் கிராமத்தில் எமக்கு ஒரு வீடு ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு செல்வதற்காக அவசர அவசரமாக நாம் பெட்டிகளைக் கட்டிக் கொண்டிருந்தபோது, எமது வீட்டுக்கு அண்மித்த பகுதிகளில் பெருவாரியாக எறிகணைகள் வழ்ந்து வெடித்தன. சிங்களப் படைகள் யாழ்ப்பாண நகரை நெருக்கி வருகின்றன என்பதை இந்த எறிகணைத் தாக்குதல் எடுத்துக் காட்டியது. நாம் சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்னேறிவரும் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளிலிருந்து தப்பிவிடூும் நோக்குடன், கட்டம் கட்டமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் கோப்பாய் - கைதடி வீதி வழியாக ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது துயரத்தால் எனது நெஞ்சம் கனத்தது.
அடுத்த நாள் காலை, விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சேர்ந்த போராளிகள், நிலைமையை மக்களுக்கு அறிவித்தார்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் யாழ்ப்பாண நகரை அண்மித்த வருவதாக ஓலிபெருக்கிகளில் நகரத்திலும் மற்றும் வலிகாமம் அடங்கிலும் அறிவித்தார்கள். சிங்களப் படைகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்க விடுதலைப் புலிகள் உறுதிபூண்டு நிற்பதாக கூறிய அவர்கள், எதிரியின் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களில் சிக்குப்படாமல் தப்புவதாயின் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து, தென்மராட்சியில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். பீதியும் பதட்டமும் அங்கலாய்ப்புடனும் இருந்த யாழ்ப்பாண மக்களுக்கு புலிகளின் எச்சரிக்கை பேரிடியாக விழுந்தது. அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். அதன் விளைவாக, மிகவும் அவசரமானதும், மிகவும் அவலமானதும் சீர்குலைந்ததுமான ஒரு மாபெரும் இடம் பெயர்வு தொடங்கியது.
8.10 பேரவலமான இடம்பெயர்வு
தமிழர் வரலாற்றிலேயே என்றும் நிகழாத மனிதப் பேரவலமாக இந்த இடம்பெயர்வு நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் வேண்டு கோளுக்கு இணங்கவும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் குமது உயிருக்கு நிகழப்போகும் ஆபத்தை உணர்ந்தும், வலிகாமத்தின் ஓட்டுமொத்த சனத்தொகையும் அதாவது, ஐந்து இலட்டசத்திற்கும் அதிகமான மக்களும், தமது கைகளில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, பிள்ளைகளையும், வயோதிபர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் இழுத்துக் கொண்டு, வீதிகளில் இறங்கினார்கள். நாவற்குழிப் பாலத்தைக் கடந்து தென்மராட்சிப் பகுதியிலுள்ள கைதடிக்குள் கால் வைத்துவிட வேண்டும் என்பதே எல்லோரதும் ஏக்கமாகும். இந்த அவசரமும் அங்கலாய்ப்பும் காரணமாக எல்லோருமே முண்டியடித்துக் கொண்டு வீதிகளில் இறங்கினார்கள் சாவகச்சேரிக்கு செல்லும் வீதிகள் எங்கும் சன சமுத்திரம். பயந்த, பதட்டமடைந்த சனத் திரளால் வீதிகள் நிறைந்தன. மூச்சுத் திணறடிக்கும் நெரிசல். மக்கள் திரள் வீதிகளில் அடர்த்தியாக இறுகியதால், நகர்வு இயக்கம் திடீரென நின்றது. மக்களின் ஒரேயொரு போக்குவரத்து சாதனமான சைக்கிள்களும் சன நெருக்கடிக்குள் சிக்கி அசைவற்று நின்றன. நெரிசல்பட்ட பெருங்கட்டமாக௯ மனித ஊர்வலங்கள் பல மைல்கள் தூரத்திற்கு நண்டு சென்றன. ஒரு சில யார்கள் தூரம் செல்வதற்கு பல மணிநேரம் பிடித்தது. இந்தப் பேரவலத்திற்கு மேலும் அவலம் சேர்ப்பது போல திடீரென மழை கொட்டியது. வானம் அழுது வடித்த கண்ணீர், தாகத்தால் தவித்த நாக்குகளை நனைத்த்து. அது மட்டுமே அல்லல்பட்ட மக்களுக்கு அன்று கிடைத்த ஒரு துளி ஆறுதல். பசியால் குழந்தைகள் கதறி அழுதன. செய்வதறியாது பெற்றோர் பதைத்தனர். வயோதிபர்கள் வீதியோரம் குந்தியிருந்து மூச்சிழுத்தனர். பசியும் தாகமும் வருத்த, மழையால் தெப்பமாக நனைந்ததால், நோய்வாய்ப்பட்டோர் மேலும் நோயுற்றனர். இந்த அவல நிகழ்வின் உணர்வு அழுத்தத்தால் ஒரு கர்ப்பிணிப் பெண், வ்தியோரமாக, திறந்த வெளியில் குழந்தை ஈன்றார். இத்தனை இன்னல்களுக்கும் மத்தியில், மக்களிடையே ஒரு உறுதிப்பாடு மட்டும் மேலோங்கி நின்றது. இனவெறி கொண்ட பகைவனின் கையில் சிக்கிவிடாது, தப்பிவிட வேண்டும் என்பதுதான் அந்த உறுதிப்பாடாகும்.
வலிகாமத்தின் முழுச்சனத் தொகையுமே ஒட்டுமொத்தமாக புலம்பெயருமென சிங்கள அரசும் அதன் ஆயுதப் படைகளும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பெரிய பரிமாணத்தில், தென்மராட்சித் திசை நோக்கி, யாழ்ப்பாண சன சமுத்திரம் இடம்பெயர்ந்து செல்வதை அறிந்ததும் சிங்கள ஆட்சியாளர் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். பெரும் போர் நடத்தி, இறுதியில் சன சஞ்சாரமற்ற ஒரு சூன்ய பிரதேசத்தையே சிங்கள இராணுவம் கைப்பற்றப் போகிறது என்பதை உணர்ந்ததும் அவர்களுக்கு மனமுறிவு ஏற்பட்டது. முன்னேறி வந்த சிங்களப் படைகளால், யாழ்ப்பாண மக்களின் இடப்பெயர்வை தடுத்து நிறுத்த முடியவில்லை. செய்வதறியாது தடுமாறிய ஆயுதப் படையினர், இடம்பெயர்ந்து செல்லும் மக்கள் மீது விமானத் தாக்குதலை நடத்தி, தமது கையாலாகாத நிலையையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர். செம்மணி வெளியில், நடந்த இக் குண்டு வீச்சில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; ஐவர் காயமடைந்தனர். இந்தக் கோழைத்தனமான செயல் மக்களின் உறுதிப்பாட்டை உடைக்கவில்லை. நாவற்கூழிப் பாலத்தை -மீக்கள் திரள் கடந்துகொண்டே இருந்தது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், ஐந்து இலட்சம் மக்கள் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து புலிகளின் கீழுள்ள தென்மராட்சிப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.
இடம்பெயர்ந்த சன சமுத்தரத்தால் சாவகச்சேரி நிரம்பி வழிந்தது. சாவகச்சேரி ஒரு வரலாற்றுப் பழமை மிக்க பட்டினம். சாவகச்சேரிச் சந்தை மிகவும் பிரபலமானது. அந்த நிலம் தரும் . கனிகளும் சுவைமிக்கவை. அந்தப் பட்டினத்திலுள்ள ஒவ்வொரு வீடும், புலம்பெயர்ந்த தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், வெளி யாருக்கும் தஞ்சம் வழங்கியது. ஒரு வீட்டில் மட்டும் 60 பேர் ரை. தங்கியிருந்து, தண்ணீர் வசதியின்றி, கழிப்பிட வசதியின்றி தவித்ததை நான் அறிவேன். சாவகச்சேரி முழுவதிலுமாக - பாடசாலைகள், கல்லூரிகள், கோவில்கள், தென்னஞ்சோலைகள், மாந்தோப்புகள் - எங்கு இடைவெளிகள் உண்டோ அங்கெல்லாம், மக்கள் முண்டியடித்துக் கொண்டு தமது குடும்பங்களுக்கு இடம் தேடினர். சாவகச்சேரி சந்தைக்கு மரக்கறி வாங்குவதற்கு நான் சைக்கிளில் சென்றபோது, மனதை உருக்கும் அந்த அவலக் காட்சியை நான் நேரடியாகக் காணமுடிந்தது. இடம்பெயர்ந்த மக்களும், அவர்களது மூட்டை முடிச்சுகளுமாக, சாவகச்சேரி நகரப் பகுதி நிரம்பி வழிந்தது. சில குடும்பங்கள், தமது மூட்டை முடிச்சுக்களை நிலத்தில் வைத்துவிட்டு, எங்கே போவதென்று தெரியாத திகைப்புடன், நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். இன்னும் சில குடும்பங்கள், சோர்ந்து சலித்துப் போய் வீதியோரமுள்ள மரங்களின் கீழ் இருப்பிடம் தேடிக் கொண்டார்கள். வெற்றுக் காணிகளில் அங்குமிங்குமாக குந்தியிருந்த மக்கள், தமது குடும்பத்தினரின் பசியைப் போக்குவதற்காக அடுப்பு மூட்டி, சமையலுக்கு ஆயத்தம் செய்தார்கள். குழந்தைகள் கண்களைப் பிசைந்தபடி அழுது கொண்டிருந்தார்கள். முதியோரும் நோய்வாய்ப்பட்டோரும் குளிர் நிலத்தில் . பய்களை விரித்துப் படுத்திருந்தார்கள்.
இந்த வரலாற்று அவலத்தை நேரில் பார்த்தபொழுது, ஒரு ஆழமான சோக உணர்வு என்னை ஆட்கொண்டது. இங்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து நிற்கும் மக்களில் அனேகமானோர், பூந்தோட்டங்களும் பழமரங்களும் நிறைந்த காணிகளையும், அவற்றில் கட்டப்பட்ட நேர்த்தியான, அழகான வீடுகளையும் கைவிட்டே வந்தவர்கள். பரம்பரை பரம்பரையாக, கடின உழைப்பால் தேடிய சொத்துக்களை கைவிட்டு வந்த இம்மக்கள், இப்பொழுது திடீரென, ஒரு நாள் பொழுதில், ஏதுமற்ற அகதிகளாக, பாழ்பட்ட இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெருமையும் கெளரவமும் மிக்க யாழ்ப்பாண மக்கள், இப்படியாக வீடு வாசலின்றி இருக்க இடமின்றி, ஏழ்நிலைக்கு தள்ளப்பட்டு ஏதிலிகளாக அலைந்து திரியும் இந்தத் துயரக் காட்சியை கண்டபோது துக்கம் நெஞ்சை அழுத்தியது. காலம் காலமாக, எண்ணற்ற நூற்றாண்டுகளாக தாம் வாழ்ந்து வந்த புனித நகரை, ஈழத் தமிழிரின் கலாச்சார தலை நகரை, கைவிட்டு வருவதற்கு முழுத் தமிழ் சமூகமுமே நிர்ப்பந்திக்கப் பட்டது.
சாவகச்சேரி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் யாழ்ப்பாண மக்கள் வாழ்ந்த வாழ்க்கை சகிக்க முடியாததாக இருந்தது. உருப்படியான தங்குமிட வசதியின்றி, எல்லாவற்றிற்கும் மெல போதுமான - உணவின்றி, இடம்பெயர்ந்த மல் தாங்கொணாத் துன்பங்களை அனுபவித்தனர். யாழ்ப்பாண மக்களின் பேரவலத்திற்கு மேலும் துன்பம் சேர்ப்பதுபோல, சிங்கள இராணுவம் க்க பிரதேசம் நோக்கி, பீரங்கி எறிகணைகளை ஏவியது. அப்பாவிப் பொதுமக்கள் மீது உயிர்ச் சேதத்தை விளைவித்து, அவர்களைக வ் கொள்ளச் செய்வதே இத் தாக்குதலின் நோக்கமாகும். தென்மராட்சி மீதும் எந்த நேரமும் படையெடுப்பு நிகழலாம் என்பதையும் இத் தாக்குதல்கள் அபாய எச்சரிக்கையாக மக்களுக்கு அறிவித்தன. இடம்பெயர்ந்த மக்களின் இப் பேரவலம் குறித்து, சந்திரிகாவின் அசோ, அன்றி சர்வதேச உலகமோ கவலையும் அக்கறையும் காட்டவில்லை.
யாழ்ப்பாண மக்களுக்கு இழைக்கப்பட்ட இக் கொடுமை பற்றி எதுவுமே தெரியாதது போல கொழும்பு ஊடகங்கள் a சாதித்தன. “பயங்கரவாதிகளான” விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாண மக்களை “விடுகலை?” செய்வதற்காக, “வீரம் படைத்த” சிங்கள இராணுவம் நிலைநாட்டிவரும் “வீர சாதனைகள்” பற்றியே கொழும்புப் பத்திரிகைகள் புகழ் பாடின. யாழ்ப்பாண மக்களின் இடம்பெயர்வு பற்றி, ஆழ்ந்த கவலை தெரிவித்து ஒரு தனி நபர் மட்டும் குரல் எழுப்பினார். சொந்த மண்ணிலிருந்து வேரறுந்து, புலம்பெயர்ந்துள்ள லயாழ்ப்பாண மக்களுக்கு உலக அரசுகள் உதவவேண்டுமென முன்னாள் ஐ.நா. பொதுச் செயலர் திரு. பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி ஒரு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த மனித அவலம், சர்வதேசமயமாகிவிடுமோ எனப் பயந்த சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திரு. கதிர்காமர், இலங்கையில் எவ்விதமான மனித ப்ட் நிகழவில்லை என மறுத்தார். ஒரு சிறிய இடம்பெயர்வுச் சம்பவத்தை பெரிதுபடுத்தவேண்டாமென ஐ.நா. செயலாளர் நாயகத்தை கண்டித்த “தமிழரான” இந்த அமைச்சர், ஒரு இறைமையுள்ள. நாட்டின் “உள்விவகாரத்தில்’” தலையிடவேண்மாமெனவும் எச்சரித்தார். யாழ்ப்பாணத் தமிழருக்காக கவலை தெரிவித்த ஒரேயொரு குரலையும் திரு. கதிர்காமர் நசுக்கிவிட்டார்.
8.11 வன்னிக்கு இடம்பெயர்வு
முழுக் குடாநாட்டையுமே கைப்பற்றுவதற்கு உறுதிபூண்டு நின்ற ஒரு பாரிய மரபு வழி இராணுவத்துடன் போராடிக் கொண்டு, இடம்பெயர்ந்துள்ள ஐந்து இலட்சம் மக்களின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்வது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளங்களுக்கு அப்பாற்பட்ட விடயம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு சில அதிரடிப் படைப் பிரிவுகள் மட்டுமே வலிகாமத்துக்குள் *ஊடுருவிச் சென்று ஆக்கிரமிப்பு இராணுவம் மீது தாக்குதலை நடத்தி வந்தது. குடாநாட்டில் நிலைகொண்டிருந்த ஏனைய படையணிகள் அனைத்தையும் வன்னிக்கு இடம் மாற்ற விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முடிவு செய்தது. சிநீலங்கா ஆயுதப் படைகள், வெகுவிரைவில் தென்மராட்சி மீதும் வடமராட்சி மீதும் படையெடுத்து முழுக் குடாநாட்டையும் கைப்பற்ற முயற்சிக்கும் என்பது புலிகளுக்கு தெரிந்த விடயமே. எனினும் சாவகச்சேரியில் நிலைகொண்டிருந்து, ஒரு தற்காப்புப் போரை நடத்துவதென்பது, தற்கொலைக்கு ஒப்பானது. புலிப் போராளிகளுக்கு மட்டுமன்றி, நெரிசலாக அடர்ந்து நின்ற பொதுசனத்திற்கும் இது பேரழிவை உண்டு பண்ணும். இதனை நன்குணர்ந்துதான், விடுதலைப் புலிகள் தமது படையணிகளை படிப்படியாக வன்னிக்கு அனுப்பி வைத்தனர். தென்மராட்சியில் போர் விரிவாக்கம் பெறலாம் என்ற அச்சத்தில், இடம் பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் ஏற்கனவே வன்னிக்கு சென்றுவிட்டனர். தென்மராட்சியில் இடம்பெயர்ந்து நின்ற மக்களை வன்னிக்குச் சென்று குடியமருமாறு விடுதலைப் புலிகள் வற்புறுத்தவுமில்லை, ஆலோசனை கூறவும் இல்லை. பெரும் சனத் தொகையை வன்னிக்கு அனுப்பி, அவர்களது புனர்வாழ்வுக்கு வசதி செய்து கொடுப்பதிலுள்ள பாரிய நடைமுறைச் சிக்கல்களை புலிகள் அறிவார்கள். இடம்பெயர்ந்த யாழ்ப்பாண மக்களும் குழம்பிய நிலையில் இருந்தார்கள். நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி வன்னிக்கு செல்வதா, அன்றி இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசம் ஆகிவிட்ட யாழ்ப் பாணத்திற்கு திரும்பிச் செல்வதா என்று முடிவெடுக்க முடியாத குழம்பிய நிலையில் மக்கள் இருந்தார்கள். எனினும் இராணுவ நிலைமையை பொறுத்திருந்து அவதானிக்க அவர்கள் முடிவெடுத்தார்கள். புலி ஆதரவாளர்கள், அனுதாபிகள் என்று பகிரங்கமாக முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. இராணுவத்தின் பழிவாங்கலுக்கு அஞ்சிய இப் பிரிவு மக்கள் புலிகளைத் தொடர்ந்து சென்று வன்னியில் குடியமர்ந்தார்கள். எங்களுக்கும் வன்னிக்கு செல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. நாம் திரு. பிரபாகரனின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருந்தோம். அந்தத் தகவலும் சீக்கிரமே வந்தது.
ஆபத்துக்கு உதவும் எமது நண்பரான கட்ற்படைத் த்ளபதி சூசை, எம்மைக் கிளாலிக் கரைக்கு அழைத்துச் சென்றார். கடற்புலிகளின் பீரங்கிப் படகு ஒன்றில் எம்மை வன்னிக்கு அழைத்துச் செல்ல முடிவாகி இருந்தது. கிளாலி நீரேரிக் கரையில் ஆழமற்ற நீர்ப் பரப்பில் நாம் நின்று கொண்டிருந்தோம். தளபதி சூசை “வாக்கி டோக்கியில்” நாம் நிற்கும் திசையை அறிவிக்க, பெண் த்து த்வம் எமது பக்கமாக படகை ஓட்டிவந்தனர். நாம் நின்ற இடத்திலிருந்து நூறு யார் தொலைவில் படகு நிறுத்தப்பட்டது. தொடை அளவு சேற்று நீர்வரை நடந்து சென்று படகிற்குள் ஏறிக் கொண்டோம். சில நிமிடங்களில் படகு புறப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டகன்று, வல்ல ஒரு புகிய வாழ்வுக்கு முகம் கொடுக்க கிளாலி நீரேரியில் பயணத்தை மேற்கொண்டோம்.
நாம் சேர வேண்டிய இடம் விஸ்வமடு. கிளிநொச்சிப் பட்டினத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைக் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. வன்னியில், நல்லூர் அறு நாம் தரையிறங்கிய தைத் தொடர்ந்து, எம்மை ஒரு வாகனத்தில் விஸ்வமடு நோக்கி ஓட்டிச் சென்றார் சூசை. வாகனத்தில் நாம் சென்று கொண்டிருந்த பகுதி பொருளாதார வளர்ச்சியற்ற பினதங்கிய பீரதேசமாகவே, அந்த இருட்டில் கூட எனக்குத் தென்பட்டது. .விஸ்வமடுவிற்கு நாம் சென்று ப் இரு மருங்கிலும், பரந்த நெல்வயல்களும், காட்டுப் புதர்களும் அங்காங்கே களும் தென்பட்டன.
விஸ்வமடுவில் சொற்ப காலமே நாம் வசித்தோம். வன்னியில், தொடர்ச்சியாக இடப்பெயர்வுகள் நிகழ்ந்த எமது வாழ்வில், விஸ்வமடு ஆரம்ப கட்டமாக அமைந்தது. கடும் உழைப்பாளிகளான யாழ்ப்பாணக் கமக்காரர்கள் வாழ்ந்த ஒரு விவசாய கிராமமாக விஸ்வமடு விளங்கிற்று. பல ஆண்டுகளுக்கு முன்னர், அரசாங்க குடியேற்றத் திட்டம் ஒன்றின் கீழ் வழங்கப்பட்ட அடர்ந்த காட்டு நிலங்களை, செழிப்பு மிக்க நல் வயல்களாகவும், தென்னஞ்சோலைகளாகவும் மாற்றியிருந்தார்கள் இவ் விவசாயிகள். விஸ்வமடுவில் பல விவசாயக் குடும்பங்களுடன் நாம் நட்புறவு கொண்டோம். இக் கிராமத்தில் எமது வாழ்க்கை போர் நெருக்குவாரங்கள் அற்றதாக, அமைதியாக ஓடியது. கிளிநொச்சி ஒரு வர்த்தக மையமாக விளங்கியது. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களில் பெரும்பான்மையானோர் அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் அரசியற் தலைமைச் செயலகம் கிளி நொச்சியில் அமைக்கப்பட்டது. நாம் அடிக்கடி அங்கு சென்று வந்தோம். 1996 ஏப்ரல் 18ம் திகதி, நாம் விஸ்வமடூவில் வசித்துக் கொணடிருந்த வேளை “சூரியக் கதிர் 2” இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகி, எவ்வித மோதல்களுமின்றி, தென்மராட்சிப் பகுதியை சிங்கள இராணுவம் கைப்பற்றியதாக அறிந்தோம். இப் படையெடுப்பு எதிர்பாராத விதத்தில் திடீரென நடைபெற்றதால், குழப்பமும் திகிலுமடைந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் கிளாலிக் கரையை நோக்கி ஓடினர். கிளாலி நீரேரியைக் கடந்து, வன்னிக்கு இடம்பெயரும் நோக்கத்தோடு அங்கு வந்த மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. கிளாலிக் கரையோரம் குவிந்த பெரும் சனத் திரளை மறுகரைக்கு ஏற்றிச் செல்ல அங்கு போதுமான படகுகள் இருக்கவில்லை. இந்த மனித அவலத்திற்கு மேலும் வேதனை சேர்ப்பதுபோல, சிறீலங்கா குண்டுவீச்சு விமானங்களும், உலங்குவானூர்திகளும் கீழாகப் பறந்து வந்து கிளாலி நோக்கி ஓடிச் சென்ற மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களைத் தொடுத்தது, வன்னிக்கு மக்கள் இடம்பெயர்வதை தடுக்கவே விமானப் படை முயன்றது. ஒரு சில படகுகளில் சென்ற மக்கள் மீதும் வானூர்திகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி உயிர்ச்சேதத்தை விளைவித்தன. வன்னிக்கு தப்பிச் செல்ல முடியாமல், சிங்கள ஆக்கிரமிப்பு படையின். பொறியில் சிக்கிய மக்களுக்கு, வலிகாமத்திலுள்ள கமது கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணம் திரும்பிச் சென்ற. விவகாரத்தை சந்திரிகா அரசுக்கு கிட்டிய மாபெரும் அரசியல் வெற்றியாகவும், யாழ்ப்பாண மக்கள் “பயங்கரவாதிகளின்” பிடியிலிருந்து. “விடுதலை” செய்யப்பட்டூவிட்டதாகவும் அரச ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிட்டன.
என்னைப் பொறுத்தவரை, இடம் பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணம் திரும்பியமை போராட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதமுடியாது. மாறாக, இதுவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையே. இது மக்களுக்கும் போராட்டத்துக்கும் நன்மை பயப்பதாகவே அமையும். முதலாவதாக, இடம்பெயர்ந்தவர்களில் அனேகமானோருக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தமாக ஒரு வீடு இருந்தது; பழக்கப்பட்ட சமூகச் சூழல் இருந்தது. தென்மராட்சியில் அவலமான அகதி வாழ்வைத் தொடர்வதிலும் ME சொந்த வீடுகளுக்கு திரும்புவதே மேலானது. இடம்பெயர்ந்து ஏதிலிகளாக மனம் முறிந்து வாழ்வதைவிட சுயமரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ்வதற்கு வாய்பைத் தேடுவதே உகந்தது என நான் கூறுவேன். இரண்டாவதாக யாழ்ப்பாணத்திலுள்ள தமது சொத்துடைமைகளை மக்கள் மீட்டெடுப்பது மயம் அப்பொழுதுதான் தமிழ் மக்கள் தமது தாயக நிலங்களுக்கு உரிமை கொண்டாடலாம். அல்லாது போனால், திருகோணமலை மாவட்டத்தில், நிகழ்ந்ததுபோல தமிழரின் வெற்று நிலங்களிலும், வீடுகளிலுமாக சிங்களக் குடியேற்றம் நிகழ்வது சாத்தியம். மூன்றாவதாக, தமிழ் தம் தமது வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் பற்றும். பாசமும் கொண்டிருப்பது ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு அத்தியாவசியமான. இந்த நிலம் எமது சொந்த நிலம் என்ற மண் பற்றும், இந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் சிங்களவர் அந்நியர் என உணர்வும் இருப்பது அவியும் யாழப்பாண மண்ணிலிருந்து யாராவது வெளியேற வேண்டுமாயின் அது சிங்கள இராணுவத்தினராக இருக்க வேண்டுமே தவிர, யாழ்ப்பாண மக்களல்ல.
இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர், வலிகாமத்தி லுள்ள தமது கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பியதையடுத்து, ஜெனரல் ஜானக பெரேராவின் தலைமையிலான சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டை, படிப்படியாக ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றியது. மக்களுக்கு “விடுதலை” பெற்றுக் கொடுத்தவர்கள், மக்களின் ஓடுக்குமுறையாளராக மாறினார்கள். சுற்றி வளைப்புகள், கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதை செய்தல், கொலை செய்தல், ஆகிய நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்ட உண்மைக ளாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமற் போயினர். யாழ்ப்பாணத்தில், செம்மணி போன்ற இடங்களில் கூட்டுப் புதைகுழிகள் தோண்டி எடுக்கப்பட்டன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கழ், யாழ்ப்பாண மக்கள் கொடுமைகளுக்கு ஆளாவது, வழமையான செய்திகளாக உள்ளூர், வெளியூர் ஊடகங்களில் பிரசுரமாகி வந்தன.