4 இந்திய-புலிகள் யுத்தம்
“அதென்ன. இடிச்சத்தமா?” யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள எங்கள் வீட்டில் போராளி ஒருவரிடம் நான் வினவினேன். வீட்டு விறாந்தையில் நின்றபடி வெளியே பார்த்தேன். காலை வேளை; நிர்மலமான வானம்; தூரத்து இடிமுழக்கம் கில் விழுந்து கொண்டிருந்தது. “இல்லை அன்ரி” போராளியின் குரலில் அற்றாமை இழையோடியது. “அது இந்தியாக்காரர்; பலாலி இராணுவ முகாமில் இருந்து யாழ்ப்பாண நகரம் மீது ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.” யாழ்ப்பாண நகரம் மீது ஷெல் அடி நாட்கணக்கில் நடந்து கொண்டிருந்தது முன்பு ஒரு நாள் எமது போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த இந்திய இராணுவம் இன்று தனது இறாணுவ, ஆற்றலையும், ஆயுதங்களையும் எமக்கு எதிஅராகத் திருப்பி விட்டிருந்தது. இது தலைகீழான ஒரு நிலைமை மாற்றம். ஆசிய அரசியல் அரங்கின் சகடவோட்டம். சென்னையில் இருந்த காலம் தொடக்கம், விடுதலைப் புலிகளுக்கும் புதுடில்லிக்கும் இடையே அடிக்கடி நிலவிய கருத்து மோதல், முரண்பாடு சந்தேகம் ஆகியவை அடங்கிய உறவின் சிகரமாக இப்போது பர்ங்கமான் போர் ஒன்று, விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. இது நடந்தது 1987 ஒக்டோபரில்.
விடுதலைக்கான போராட்டத்தில் வரிந்து செல்லும் கொடுந்துயர் நிறைந்த இந்தக் கால கட்டத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது எதிரும் புதிருமான உணர்வுகள் சலனப்பட்டு மிதந்து வரும். தமிழர் தாயகத்தில் இந்தியா, சிறீலங்கா, விடுதலைப் புலிகள் ஆகியோரின் அரசியல் நலன்கள் முரண்பட்டவையாக இருந்தபோதிலும், போருக்கான காரணத்தை இப்போது வகைப்படுத்திப் பார்க்கும் போது தப்பபிப்பிராயமும் அச்சமுமே அடிப்படைக் காரணம் எனக் கூறலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை மாறி மாறிச் சுமத்திக் கொண்டிருந்தாலும், இறுதியில் இந்தப் போரின் கொடிய அனாத்தங்களுக்கு முகம் கொடுத்தவர்கள் தமிழ் மக்களே என்பதுதான் ய் இதில், ஈடு செய்யமுடியாத ஒப்பற்ற மனித வளத்தையும், பாருள் வளத்தையும் தமிழினம் பறிகொடுத்தது. அதில் எதிர் வார்த்தைக்கே இடமில்லை, தாக்குதலுக்கு உள்ளான வேளையில் தமிழீழ மக்கள், பாராட்டத்தக்க வகையிலே தனியொரு இனமாக, ஒன்றுபட்டு நின்றார்கள்; வளைந்து கொடுக்க மறுத்தார்கள். தமது வரலாற்றின் நெருக்கடி மிக்க இந்தக் காலப்பகுதியில், இரக்கமற்ற கொடிய எதிரிக்கு முகம் கொடுக்கும் கட்டத்தில் உண்மையிலேயே மலைக்க வைக்கும் துணிச்சலோடும், தனித்துவத்தோடூம் அளவிட முடியா மனோ பலத்தோடும், தமிழ் மக்கள் நிமிர்ந்து நின்றார்கள்.
அவல சம்பவங்கள் அடுதொடராக நிகழ்ந்தன. அவை, ஒரு புறம். மக்களின் தேசிய உணர்வுகளை ஒன்று திரள வைத்து, கூட்டு விழிப்புணர்வைத் தோற்றுவித்தன. மறுபுறம், இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பாரதூரமான குப்பபிப்பிராயங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்தன. இதனால், இரு சாராருக்கும் இடையே விரிசலும் பகைமை உணர்வும் வளர்ந்தன. விடுதலைப் புலிப் போராளிகளில் முன்னணியில் இருந்தவர்களும் மக்களால் நேசிக்கப்பட்டவர்களுமான சிலருடைய மரணம் தவிர்க்கப்படக்கூடியதும், அனாவசிமாகவும் இருந்தபோதும், அது தோற்றுவித்த சமூகச் சீற்றத்தில் நானும் மனசாரப் பங்கு கொண்டேன். இறந்த அந்தப் போராளிகள் மாவீரர் மட்டுமல்ல, எமது நெருங்கிய கூட்டாளிகளுமாவர். ஆனால் உலகின் மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசுக்கும் ஒரு கெரில்லாப் படைக்கும் இடையே நிலவிய பொது உறவு, சீர்படூத்த முடியாத அளவுக்கு எவ்வாறு சீரழிந்தது என்பதையும், பகிரங்கமான இராணுவ மோதலுக்கு எவ்வாறு இட்டுச் சென்றது என்பதையும் புரிந்து கொள்வது புதிராக இருக்கிறது. எப்படியோ, விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே 1987 ஒக்ரோபர் 10 இல் போர் மூண்டபோது தமிழினம் விக்கித்து நின்றது.
போர் தொடங்கிய முதற்கட்ட வேளையில், நாம் வல்வெட்டித்துறையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்தக் கட்டத்தில் இடையறாத பீரங்கிச் சத்தமே காதில் விழுந்தது. போர் எவ்வளவு தீவிரமாகவும் எங்கெங்கு நடைபெறுகிறது என்பதும் எமக்கு முதலில் தெரியாது. பிரபாகரன் அவர்களைத் தேடிச் சென்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டுத் திடலிலே இந்திய இராணுவம் இறங்க முற்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது பற்றியோ, பலாலி இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முனைப்பட்டது பற்றியோ எமக்குத் தெரியாது. ஆனாலும் நாள் செல்லச் செல்ல பொதுமக்களும் போராளிகளும் பலியாவது எண்ணிக்கையில் அதிகரித்துச் செல்லும் துயரச் செய்தி எம் காதுகளை எட்டியது. இடையறாத பீரங்கி ஒலியும், எமது இழப்புகள் அதிகரிக்கும் செய்தியும், நிலைமை இனிச் சுமுகமாக முடியாது என்ற உண்மையை எமக்கு உறைக்கச் செய்தது. மோதல் தொடங்கிய வேளை, பாலா யாழ்ப்பாண நகரில் இருந்தார். இந்தியப் படைகளின் யாழ்ப்பாண நகரச் சுற்றி வளைப்பை ஊடறுத்து, பாலாவும் சில போராளிகளும் வெளியே வந்து வல்வெட்டித் துறையில் உள்ள எமது இல்லத்தை அடைந்த பின்னரே போர் நிலைமை பற்றியும் மோதலுக்கு முன்னும் பின்னும் நிலவிய நிலைமை பற்றியும் தெளிவான விபரம் எனக்குத் தெரிந்தது. வீடு திரும்பிய வேளை, உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பாலா அயர்வடைந்திருந்தார். நிலைமை சீரழிவு கண்டு ஆற்றாமையும் துயரும் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராஜ தந்திரிகளுக்கும் படைத்தளபதிகளுக்கும் இடையே அனைத்துத் தொடர்புகளிலும் தீவிரமாக பாலா ஈடுபட்டு இருந்தவராதலால், அரசியல் கோலம் வேகமாக சீரழிவதையும் இராணுவ. மோதல் தவிர்க்க முடியாது இருக்கப்போகிறது என்பதையும் அவர் கணிப்பிட்டிருந்தார். ஆயினும் போர் மூள்வதை அவர் விரும்பவில்லை. இந்தியாவுடன் போரைத் தவிர்ப்பதற்காக தம்முடைய இராஜதந்திரத் திறன்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் ஆற்றல்களையும் கூடுமான அளவு பயன்படுத்தி வந்தார். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சம்பவங்களும், எதிர்விளைவுகளும் அடுத்தடுத்து வேகமாக நிகழ, விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்குமிடையே நேரெதிர் மோதலாக அது பரிணமித்திருந்தது. போரின் நீண்ட காலப் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது எம் இருவருக்கும் புரிந்தது. இந்தியாவுக்கும். விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான எதிர்கால உறவு மட்டுமல்ல, போராட்டமும் இனிப் போரினால் ஏற்கனவே களைப்புற்றிருந்த தமிழ் மக்களும் உடனடியாகப் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதையும் உணர்ந்திருந்தோம். தமிழ் மக்களுக்கு இது ஒரு பாரதூரமான பின்னடைவாகவே அமைந்தது.
இந்திய அமைதிப்படை தொடர்பாகவும் புதுடில்லி தொடர்பாகவும் யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்த கணிப்பும். எதிர்பார்ப்பும் தகர்ந்து போயின. இந்திய இராணுவம் தம்மீது கொலைக் கருவிகளைப் பிரயோகிக்கிறது என்பது, அவர்களை வாயடைக்கச் செய்தது. இத்தகைய கடுமையான இராணுவ நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள, மனதாலும், உணர்வாலும் மக்கள் தயாராக இருக்கவில்லை. தமது வரலாற்றுப் பகைவரான சிங்களவரின் வெறுப்பையும் இனவாதத்தையும் புரிந்து கொள்ள அவர்களால் முடிந்தது. ஆனால் பண்பாட்டு அடிப்படையிலும் இன அடிப்படையிலும் உறவுடைய அண்டை நாட்டவர், கொலைபுரியும் எதிரிபோல நடக்க முற்பட்ட போது தமக்கு துரோகம் இழைக்கப்பட்டது போல மக்கள் விக்கித்த நிலையில் நின்றார்கள். சிங்கள அரச ஓடுக்குமுறையாலும் நீடித்த போராலும் பல கசாப்தங்களாக அரசியல் மற்றும் இராணுவ வன்செயலுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள், இந்திய இலங்கை ஓஒப்பந்தம் காரணமாகக் கிடைத்த போரோய்வுக்கு அமைவாக, சிறிது கால அமைதியைச் சுகித்து வந்திருந்தார்கள். இந்தியாவுடன் போர் மூண்டதும் அவர்கள் அதிர்ந்து போனார்கள். தம்மீதும் தமது போராட்டம் மீதும் இது பாரதுரமான தாக்கங்களை ஏற்படுத்தப் போவதையும் அவர்கள் உணர்ந்தார்கள். வல்வெட்டித்துறையிலே வீதி முனைகளிலும் வடுகளிலும் மக்கள் சிறு சிறு குழுக்களாகக் கூடினார்கள்; ஆழ்ந்த கவலையுடன் அவர்கள் காணப்பட்டார்கள். தாம் எதிர்நோக்கப் போகும் பாரிய அவல நிலையைப் பற்றிய கவலையே அவர்களிடம் இருந்தது.
வல்வெட்டித்துறையில் இருந்து விடுதலைப் புலிப் போராளி அணிகள் யாழ்ப்பாணப் போர்முனைக்கு நகரத் தொடங்கின. துப்பாக்கிகளைத் தோளில் சுமந்த வண்ணம் வரிசை வரிசையாக அவர்கள் நடந்து செல்வது தெரிந்தது. யாழ்ப்பாண நகரிலே தங்கள் உறவினர்க்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காக, மக்கள் சிலர் அங்கும் இங்கும் ஆந்றாமையோடு ஓடி ஓடித் திரிந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்ததாக வதந்திகள் சிறகு கட்டிப் பறந்தன. பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளும் சொத்துக்களும் தூள் தூளாக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் தேடிச் சிதறி ஓடும் மக்களால் வதிகள் நிரம்பி வழிவதாகவும் கதை உலாவியது.
இரண்டரை ஆண்டுகளின் பின்னர், எதிர்பாராத சம்பவங்களின் விளைவாக, இந்தியப்படை, தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது. முடிவிலே, புதுடில்லி - சுட்டிப்பாகக் கூறுவதானால், ரஜவ் நிர்வாகம், மானுடத்துக்கு எதிரான குற்றம் புரிந்தது தெரிந்தது. ஆறாயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய கடின உழைப்பால் பெற்ற சொத்துக்களின் சேதம் மதிப்பிட முடியாததாக இருந்தது… ஆயிரமாயிரம் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். குடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். - சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கூட்டுக் கயமைப் பாலியல் வன்தாக்குதலுக்கு ஆளானார்கள். இத்தகைய பெருந்தொகைப் படுகொலைகளையும் சொத்துடைமைச் சேதங்களையும் புரிய வேண்டிய அவசியம் எதுவாக இருந்தது என்பது பற்றிய நியாயத்தை, புதுடில்லி இதுநாள் வரை, திருப்திகரமாக விளக்கத் தவறிவிட்டது. இந்தக் கொடிய நிகழ்வுகள் இடம் பெற்றபோதும், தங்கள் நம்பிக்கைக்குரிய பலம் மிக்க அண்டை நாடு தமது நம்பிக்கையைத் தகர்த்த போதும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியா ஓர் ஆதரவு நாடாக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் இன்னமும் எதிர்பார்ப்து வியத்தற்குரியதே.
குறித்த ஓர் ஆண்டில், அரசியல் இராணுவ நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக குவிந்து ஏற்படூத்திய பாதிப்புகளின் விளைவாக, இந்திய- விடுதலைப் புலிகள் போர் நிகழ்ந்தது. தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றிலே பாரதூரமான அவலங்களை ஏற்படுத்திய ஆண்டு, இந்த ஆண்டு. அதுவே 1987!
4.1 சிங்கன இராணுவ படையெருர்பு
பிரபாகரன் அவர்கள் 1987 ஜனவரியிலே இந்தியக் கரைகளை விட்டு அகன்றபோது, இந்தியாவின் அடாவடித்தன இராஜதந்திரம் தொடர்பாக, கசப்புணர்வுடனேயே வெளியேறினார். தாம் வெளியேறிய போது இருந்த பகைமை நிலைமையை விட, இனித் தொடரப் போகும் நிலைமை கூடுதலான பேரிடரை விளைவிக்கப் போகின்றது என்பதை அப்போது அவர் ஊகித்திருக்க முடியாது. நாமும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆயினும், அரசியல், இராணுவ நிலவரம் தொடர்ந்து சீரழிந்து செல்ல இந்தியாவோ, சிநீலங்காவோ அனுமதிக்கப் போவதில்லை என எண்ணினோம். அரசியல் இணக்க முயற்சிகள் தோல்வி கண்டிருந்தன. விடுதலைப் புலிகள் தங்கள் இராணுவ ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருந்தார்கள். பிரபாகரன் அவர்களும் தாம் யாழ்ப்பாணம் திரும்பிய பின், போராட்டத்தை எவ்வாறு நடத்த விரும்புகிறார் என்பது பற்றிச் சில இலக்குகளை வைத்திருந்தார். ஆனால், சில அரசியல் முனைப்புகளும் இராணுவ நடவடிக்கைகளும் நிலைமையைச் சீரழிக்கத் தொடங்கியிருந்தன. பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணம் சென்றடைந்தவுடன் தெரிவித்த தகவலில், யாழ்ப்பாண த்பகற்பத்தில் முக்கிய இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு ஆயத்த மாக சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய படை நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அறிவித்தார். சிறீலங்காப் படைகளின் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் மேந்கொள்ளப்படும்போது, பெருந்தொகையான பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்படப் போகிறார்களோ என்று பெருங்கவலை அடைந்தோம். இராணுவத் தாக்குதல் திட்டத்தோடு, சிங்கள அரசு, வடக்கின் மீது ஈவிரக்கமற்ற பொருளாதாரத் தடையைச் சுமத்தியது. மக்கள் மது இது சொல்லொணாத் துயரப் பளுவை ஏற்றியது. சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகளுடன் நடத்திய போரில், இஸ்ரேலியரின் கிளர்ச்சி முறியடிப்பு நுட்பத்தைத் தருவித்துப் பயன்படுத்தியது. கெரில்லாப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தி, இயக்கம் பெற்றிருந்த மக்கள் ஆதரவைத் துண்டிப்பதே, அவர்களுடைய கிளர்ச்சி முறியடிப்பு முயற்சியின் குறியாக அமைந்தது. இஸ்ரேலியர் வழங்கிய அறிவுரைப்படி கெரில்லா படைத் தாக்குதல் நடக்கும்போதும், அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போதும், மக்களைக் கூட்டாகத் தண்டிக்கும் நடைமுறையை சிறீலங்கா அரசு ஆண்டாண்டாகக் கடைப்பிடித்து வந்தது. கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த முறை “கூட்டுத் தண்டனை முறை” என்று அழைக்கப்பட்டது. மக்களின் மன உறுதியை முறியடிப்பதே இதன் நோக்கமாகும். வடக்கின் மீது பொருளாதாரத் தடையைச் சுமத்தி, கூட்டுத் தண்டனை மூலம் மக்கள் மீது ஆந்றொணாத் துன்பத்தைப் பளுவேற்றும் போது பொதுமக்கள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்று ஜெயவர்த்தனா அரசு தவறாக எடைபோட்டது. எதிர்பார்ப்புக்கு மாறாக, பொதுமக்களின் சீநீறம் சிங்கள அரசுக்கு எதிராகவே திரும்பியது.
அரச படைகள் தங்கள் இராணுவத் தாக்குதல் நடவடிக்கை களை 1987 முற்பகுதியில் தொடர்ந்து நடத்தின. விடுதலைப் புலிப் போராளிகளிடம் இருந்து அதற்குப் பலத்த எதிர்ப்புக்கு கிடைத்தது. சிநீலங்கா இராணுவத்தின் தாக்குதந்போரும், விடுதலைப் புலிகளின் கற்காப்புப் போரும் அதிகரித்து நண்டன. தமிழரின் தாயகம் எங்கும் போராட்டம் இடம்பெற்றது. உக்கிரமடைந்த இந்த வன்செயலைச் சென்னையில் இருந்து நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இன அழிப்பு எண்ணத்துடனேயே ஜெயவர்த்தனா இந்த இராணுவ நடவடிக்கையை நடத்துகிறார் என்றும் அஞ்சினோம். வன்முறையும் எதிர்வன்முறையும் 1987 முற்பகுதியில் தீவிரம் பெற்றதோடு, மே மாதம் 26 ல் முழு நிலை படையெடுப்பில் சிங்கள அரசு ஈடுபட்டபோது, அந்த வன்முறையும் உச்சத்தை எட்டியது. அந்தத் தாக்குதலுக்கு சிங்கள அரசு “விடுதலை நடவடிக்கை” என்று பெயர் சூட்டியது.
மக்கள் அடர்த்தியாக வாழும் ்ற்ர்் மீது சிறீலங்கா அரசு தனது கூட்டுப்படைத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்ட்தோடு, கமிழ் மக்களின் பாதுகாப்பை அது முற்றாகப் புறக்கணித்தது. பிரபாகரன் அவர்களுடையதும், பல புலித் தளபதிகளினுடையதும் சொந்த இடம் வடமராட்சியே. வடமராட்சி மக்களைத் தண்டித்து. புலிகளுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவை முறியடிப்பதே இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அந்த வேளையில், வடமராட்சியில் இருந்த புலிப் போராளிகளின் தொகை மிகச் சிறியதே. ஆனால் அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அரச படைக- ளின் எண்ணிக்கையோ மிகப் பெரியது. இதுவும் அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் இருந்து எம்மை வந்தடைந்த செய்திகளின் படி, ஆயிரமாயிரம் அரச படையினர் மிகக் கொடூரத் தாக்குதலைத் தொடுத்திருந்தனர். பெருந்தொகைப் பொதுமக்கள் காயமடைந்தும் பலியாகியும் இருந்தார்கள். பெருமளவு சொத்துக்களும் அழிக்கப்பட்டிருந்தன. எரியூட்டும் குண்டுகள் கண்மூடித்தனமாக விமானத்தில் இருந்து பொழியப்பட்டன. இடைவிடாத பீரங்கிக் குண்டுகளும் ஏவப்பட்டன. ஒரு சிறிய புவியியற் பரப்பின் மீது பாரிய தாக்குதல் குவிக்கப்பட்டது. பலத்த சேதம் விளைந்தது. கண்மூடித்தனமான பேரழிவை ஏற்படூத்துவதே அரசின் நோக்கம் என்பது புரிந்தது.
பாதுகாப்பற்ற கரையோரத் தமிழ்க் கிராமங்கள் மீது கடலிலே இருந்து கடற்படைப் பீரங்கிப்படகுகள் ஏவிய எறிகணைகள் பொதுமக்களையே இலக்காகக் கொண்டிருந்தன. சிறீலங்கா இராணுவம் வடமராட்சியை ஆக்கிரமித்த பின், அது நடத்திய தேடுதல்களும், சுற்றிவளைப்புகளும், இளைஞர்களைக் கைது செய்து சிங்களத் தெற்கில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்குப் பிரித்து அனுப்பி வைப்பதும், அச்சம் தரும் நடவடிக்கைகளாகவே அமைந்தன. இராணுவத் தாக்குதல் பொதுமக்களையே இலக்காகக் கொண்டிருந்தது என்பதை நிரூபித்தது. இராணுவச் சுற்றிவளைப்புகளின் போது தமிழ் இளைஞர்கள் காணாமற் போயிருக்கிறார்கள். அவ்வாறே சிங்களத் தெற்கில் உள்ள வெவ்வேறு தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் தமிழ் இளைஞர்கள் காணாமற் போயிருக்கிறார்கள். இவற்றை மனித உரிமை அமைப்புகள் விளக்கமாக பதிவு செய்திருக்கின்றன.
வடமராட்சியை ஆக்கிரமித்த சிறீலங்கா இராணுவப் படைகள் யாழ்ப்பாண தீபகற்பத்திலும் மேலும் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்த பகுதியான வலிகாமம் மீதும் தனது நடவடிக்கையைத் தொடங்கியது. விடுதலைப் புலிகளும் தங்கள் பங்குக்கு வடமராட்சிக்குள் ஊடூருவினார்கள். ஆக்கிரமிக்கும் இராணுவம் மீது கெரில்லாத் தாக்குதல்களை நடத்தி பலத்த உயிர்ச் சேதத்தையும் விளைவித்தார்கள். ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான ஒரு முக்கிய பதிலடித் தாக்குதலில், விடுதலைப் புலிகள் முதற்தடவையாக கரும்புலித் தாக்குதல் அணியையும் பயன்படுத்தினார்கள். வடமராட்சி இராணுவத் ் தலைமைப் பணிமனை மீது நிகழ்த்தப்பட்ட இந்தத் திகிலூட்டும் தாக்குதலில் கப்டன் மில்லர் தாமாகவே முன்வந்து தமது உயிரைக் கொடைபுரிந்து விடுதலைப் புலிகளின் முதற் கரும்புலியானார். வடம ராட்சி கரவெட்டி வாசியான கப்டன் மில்லர் சிறீலங்கா இராணுவத்தின் புதிய தலைமைப் பணிமனைகளை உள்ளடக்கியிருந்த நெல்லியடி மத்திய கல்லூரிக்குள் வெடிபொருள் நிரம்பிய லொறி வண்டி ஒன்றை வேகமாக ஓட்டி மோதினார். அதனால் ஏற்பட்ட வெடி கட்டடத்தை குரைமட்டமாக்கியது. நூற்றுக்கணக்கான அரச படையினரைக் கொன்றது. அந்தப் பகுதியில் இராணுவ அஆக்கிரமிப்பையே நிலை குலையச் செய்தது. விடுதலைப் புலிகளின் போராட்டப் பதிவேட்டில் 1987 ஜுலை 5, ரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
சிநீலங்கா இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தை அங்கலாய்ப்போடு புதுடில்லி பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள் வளர்ந்து செல்வதும், மக்கள் மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களும் புதுடில்லியில் அச்சத்தைத் தோற்றுவித்தன. யாழ்ப்பாணக் குடாநாடு மீது கொழும்பு நடத்தும் இராணுவ நடவடிக்கை தொடர்பாகப் புதுடில்லி வெளியிட்ட கண்டன அறிக்கையில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளால் இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்ற தொனி காணப்பட்டது. பெருந்தொகையான தமிழ்ப் பொதுமக்கள் உயிர்ச் சேதத்துக்கு ஆளாகி வருவது தொடர்பாக இந்தியா தெரிவித்த ஆழ்ந்த கவலைக்கு சிநீலங்கா அரசு பதிலளிக்கத் தயங்கிக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இந்தியா தலையிடவேண்டும் என பரந்து பட்ட இந்திய மக்களிடமிருந்து எழுந்த நெருக்குவாரமும் புதுடில்லியை நிர்ப்பந்தித்தது. எனவே, யாழ்ப் பாணத்தில் முற்றுகைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளுடன் 1987 ஜுன் 2ம் திகதியன்று ஒரு கூட்டம் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பொருளாதாரத் தடையாலும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளாலும் மக்களுக்கு ஏற்பட்ட இடுக்கண்ணுக்கு நிவாரணம் வழங்கி அவர்களைத் தக்க வைப்பதே இந்தப் படகுகள் அபைப்பப்பட்டதன் நோக்கமாகும். ஆனால் கடுப்பும், திமிரும் கொண்ட சிறநீலங்காக். கடற்படை, தனது கடல் எல்லைக்குள் இந்திய உதவிப் படகுகளை நுழைய விடாது தடுத்து, விளக்கம் எதுவும் வழங்காது இந்தியாவுக்குத் திருப்பியனுப்பியது. யாழ் தீபகற்பத் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிபுரிய முற்பட்ட வேளை சிறீலங்காவால் அவமானப்படுத்தப்பட்ட இந்தியா, தனது விமானப் படைப் போர் விமானங்களின் பாதுகாப்போடு, தளர்ந்து கிடந்த யாழ்ப்பாண மக்களுக் அத்தியாவசிய உணவுப் பண்டங்களை விமான பொட்டலங்களாக வானிலிருந்து சொரிந்தது. வெகுண்டெழுந்த சிங்கள அரசு, தனது வான் எல்லையை இந்தியா அடாத்தாக மீறிவிட்டதாக குற்றம் சாட்டியது தனது இறைமையை இந்தியா அவமதித்து விட்டதாக சிறீலங்காவும், இனப்படுகொலையை சிறீலங்கா புரிவதாக இந்தியாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறிக் குற்றம்சாட்ட, இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையே அரசியல் முறுகல் நிலை உரமேநறியது.
4.2 இந்திய - இலங்கை உடன்பாரு
கொந்தளிப்பான இந்த நாட்களில் கிட்டு எம்மிடம் சென்னைக்கு வந்தார். யாழ்ப்பாணத்தில் கிட்டுவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் அவர் தப்பிப் பிழைத்திருந்தார். அந்தத் தாக்குதலில் கால் துண்டிக்கப்பட்ட நிலையிலே மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை வந்திருந்தார். இதே காலகட்டத்தில், இலங்கைத் தேசிய நெருக்கடிக் அரசியற் தீர்வு ஒன்றை உருவாக்கும் முயற்சி வ் இந்தியாவுக்கும் இடையே தீவிரம் பெறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இந்த முயற்சி புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளுடன் காத்திரமான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை, இந்தப் புதிய அரசியல் முயற்சி பாலாவுக்கு திருப்தி தரவில்லை. விடுதலைப் புலிகளைக் த லோசிக்காமல், ஓர் அரசியற் தீர்வை அவர்கள் எப்படி எடுக்க i செய்யலாம் என்பதே அவர் வாதம். எவ்வளவுதான் த் பேச்சுக்களை நடத்தனாலும் சரி, இரு நாடுகளுக்கும் மத்தியில் அரசியல் இணக்கம் காணப்பட்டாலும் சரி, விடுதலைப் புலிகளைப் புறக்கணித்து எடுக்கும் முடிவானது புலிகள் மீதும் தமிழினம் மீதும் திணிக்கப்பட்ட ஓர் தீர்மானமாகவே இருக்கும். அதே சமயம் தமது தேசம் த வமல் | விடயங்களை ஆராய்ந்து விவாதிக்கும் தமிழ் மக்களின் சனநாயக உரிமை மீறப்பட்டதாகவும் இருக்கும். நிலை இவ்வாறு மாற்றமடைவதை- யொட்டி, நாம் கவலையோடு இருக்கும்போது, தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக மாநில காவல்துறையினர் பாலாவை அழைத்துச் சென்றனர். பிரபாகரனும் அவருடைய அணியும் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படூுவதாக அவரிடம் அங்கே கூறப்பட்டது. அவர்களோடு சேர்ந்து பாலாவும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு அரசி யல் கலந்தாலோசனைக்காகச் செல்ல வேண்டும் என்று அவருக்கு அங்கு கூறப்பட்டது. பிரபாகரனுடைய அணியில் யோகியும், யாழ்ப்பாண அரசி யல்துறைப் பொறுப்பாளர் திலீபனும் இருந்தனர். புதுடில்லியில் இருந்து பாலா எனக்குத் தகவல் தந்தார். இந்திய இலங்கை ஓப்பந்தம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட உடன்படிக்கை ஒன்றிலே புதிய யோசனைகள் கங்களுடைய அங்க்காரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவி த்தார் விடுதலைப் புலிகளின் பார்வையிலே அந்த உடன்படிக்கை ஏற்க முடியாத ஒன்று என்றும் கூறினார். தாம் தங்கியிருந்த பயணிகள் விடுதி அறைக்குள்ளேயே தமது நடமாட்டம் முடக்கப்பட்டிருப்பதாகவும், கரும்பூனை அதிரடிப் படையினரால் தாம் சூழப்பட்டிருப்பதாகவும் பாலா அறிவித்தார். யோகரத்தினம் யோகியின் கருத்து வெளிப்படையாவே இருந்தது. தமது அணியினர் அச்சுறுத்தப்படுவதாகவும், தாம் வீட்டு மறியலில் வைக்கபட்டிருப்பதாகவும் யோகி கூறினார். தொலைபேசியில் அவருடைய சீற்றம் தெரிந்தது. தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே தொலைபேசித் தொடர்பு கட்டுப்படூத்தப்படூவதாகவும், அது காரணமாக சிறிது காலத்துக்கேனும் பாலாவிடமிருந்து தொடர்பு எதுவும் கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் கூறினார். புதுடில்லியில் இருந்து சில நாள் கழித்து அவர்கள் சென்னை மீண்டபோது புதுடில்லியில் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை பந்றியே பாலா ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். ஜெயவர்த்தனாவுக்கும், ரஜவுக்கும் இடையே கைச்சாத்தாக இருந்த ஒப்பந்தம் தொடர்பாகத் தமது ஆழமான நம்பிக்கையீனத்தை பாலா வெளியிட்டார். புதுடில்லியிலே விடுதலைப் புலிகளின் அணி, கடுமையான நெருக்குவாரத்துக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதாக என்னிடம் அவர் ஒப்புக் கொண்டார். வெளித் தொடர்பு துண்டிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் விடுதி அறைகளில் அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் படித்துப் பார்த்துத், தங்கள் ஒப்புதலை வழங்க, சில மணி நேர அவகாசமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலி அணி ஒப்புதல் அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் டிக்சிற், அச்சுறுத்தியிருந்தார். விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்றால் என்ன? நிராகரித்தால் என்ன? அது கைச்சாத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படூம் என்றும் அவர் நிர்தாட்சண்யமாகக் கூறியிருந்தார். டிக்சிற் அவர்களுடைய வரம்பு மீறிய, அடாவடித்தனமான இராஜதந்திர அணுகுமுறை குறித்து பிரபாகரன் அவர்களும், பாலாவும் சினமடைந்திருந்தார்கள். தமிழ் மக்களின் அரசி யல் வேணவாவை அந்த ஓப்பந்தம் சிறிதேனும் நிறைவேற்றாததால், விடுதலைப் புலிகளோ, ஈழத் தமிழ் மக்களோ, அதை ஏற்கமாட்டார்கள் என்று இந்திய இராஜதந்திரியிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். கடும் நெருக்குவாரம், தொந்தரவு, அச்சுறுத்தல் ஆகியவனவற்றை எதிர்கொண்டபோதும், விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து தளரவில்லை. இறுதியில், இந்தியப் பிரதம மந்திரி ரஜீவ் காந்தி அவர்கள், பிரபாகரன் அவர்களையும் பாலாவையும் தமது இல்லத்துக்கு அழைத்தார். ஒப்பந்தம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை பாலாவும், பிரபாகரனும் பிரதமருக்கு தெளிவு படுத்தினார்கள். அதில் கூறப்படும் மாகாண வடிவமைப்பில் உள்ள வரையறைகளையும் குறை பாடுகளையும் விளக்கினார்கள். வடக்கும், கிழக்கும் ஒன்றானது; இணைந்தது; தமிழ் மக்களின் தாயகம்; இந்த ஐக்கிய ஒன்றிணைவை ஒப்பந்தத்தில் கூறுவது போல கருத்து வாக்கெடுப்புக்கு விடுவது அநியாயமானது; - எற்கமுடியாது- என்றும் அவர்கள் வாதாடினார்கள். ஜெயவர்த்தனாவைத் தமிழ் மக்கள் நம்பவில்லை என்றும் ஒருபோதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்க மாட்டார் என்றும் ரஜவ் காந்திக்கும் அவர்கள் விளக்கி உரைத்தார்கள். அதே A ஒப்பந்தம் கூறும் வடிவம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஒப்பந்தத்தில் கூறப்பட்டவாறு. அது கைச்சாத்தான எழுபத்தியிரண்டு மணிநேரத்துக்குள் தமிழ் விடுதலை அமைப்புகளின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையானது ஒரு பெரிய தவறு என்றும் இந்தியத் தலைவருக்கு விளங்கப்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அவர்களால் ஏற்றுக் கொள்ளப். படமுடியாதது என்ற போதிலும், அதை அவர்கள் எதிர்க்கக்கூடாது என்று ரஜவ் அவர்கள் வற்புறுத்தினார். வடகிழக்கில், இடைக்கால நிர்வாக. அரசு ஒன்றை குறைந்த அதிகாரங்களோடு விடுதலைப் புலிகளுக்கு . வழங்குவதாகவும் உறுதியளித்தார். ரஜீவின் யோசனை மட்டில் பிரபா- கரன் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு ரஜீவின் திட்டத்திற்கு தாங்கள் சம்மதித்ததாகவும் பாலா என்னிடம் கூறினார். புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாகப் பிரபாகரன் அவர்களுக்குத் திருப்தி இல்லை. சென்னையில் உள்ள எமது வீட்டுக்கு அவர் வந்தபோது, அவருடைய போராளிகள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இடையிலான ஓஒப்பந்தத்தின் உள்ளடக்கமானது போராட்டத்தை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதை அறியும் பதக- ளிப்போடு போராளிகள் இருந்தார்கள். தம் மட்டில் இந்திய அதிகாரிகள் அடாவடித்தனமாகவும் அராஜகத்துடனும் நடந்து கொண்டதாகக் கருதிய பாலாவும் பிரபாகரனும் கடுப்புடன் இருந்தார்கள். ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் இதே உணர்வே அவர்களிடம் மேவி நின்றது. டிக்சிற் அவர்களை ஒரு புத்தி சாதுரிய இராஜதந்திரியாகப் பலர் கருதியபோதும், விடுதலைப் புலிகளின் கலைமை அவரைக் குரூபியாகவும், கபட தாரியாகவும் நம்பிக்கைக்கு அருகதையற்றவர் என்றுமே கருதியது. இந்த ஒப்பந்தத்தைத் தயாரிக்கும்போது, தமிழ் மக்களை இது எவ்வளவு தூரத்துக்குப் பாதிக்கும் என்பது கவனத்துக்கு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் புலிகள் வகித்த முக்கிய பங்கையும் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். ஒப்பந்தம் தொடர்பாகத் தெளிவாகவும், விரிவாகவும் விவாதிப்பதற்கு அவர்களுக்கு போதிய காலமும், இடைவெளியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் புறம் தள்ளி, புதுடில்லியில் விடுதலைப் புலித் தலைவர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டமை வியப்பையே கருகிறது. இந்த வரலாற்று முக்கியம் பெற்ற நிகழ்வு தொடர்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதும், அது உருவாக்கப்பட்டபோது அவர்கள் புறம்தள்ளப்பட்டார்கள் என்பதுமாகும். விடுதலைப் புலிகளின் போராட்டம் மட்டிலும், புதுடில்லி சென்ற அவர்களின் பிரதிநிதிகள் மட்டிலும் அடாவடித்தனமான போக்கைக் கடைப்பிடித்தமையால் இறுதியில், இந்தியா அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பெரிய விலை கொடுக்க வேண்டிநேர்ந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதை அடுத்து இலங்கையில் இரண்டு இனங்களினிடையேயும் நேர்மாநான கருத்துக்களே நிலவின. சிங்களத் தென்னிலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வு தலைதூக்கியிருந்தது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலைய்டு செய்திருப்பதை சிங்கள மக்கள் குறைகூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தார்கள். வடக்கையும் கிழக்கையும் பொறுத்த வரையிலே, காலாகாலமாக இந்தியாவை ஒரு நேச நாடாகவும், பாதுகாப்பாளராகவும் கருதி வந்த தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரச படைகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை கண்காணிக்க வந்த இந்திய அமைதிப் படை தமக்கு பாதுகாப்பையும் அமைதியையும் தரும் எனக் கருதினார்கள். 1987 ஜுலை 30 ல் பலாலி வந்திறங்கிய இந்தியப் படையினர் யாழ்ப்பாண தீபகற்பத்துக்குள் பிரவேசித்த போது, படையினருக்கு பரவலாக மலர் மாலை சூட்டி வரவேற்பளித்தார்கன். அமைதிப் படை வந்த மூன்று மாதங்களுக்குள் அந்தப் படை தொடர்பாக இரண்டு இனங்களும் கொண்டிருந்த கருத்து நேரெதிர்த் துருவங்களைத் தொட்டன. இந்தியப் படைகளை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் ஆக்கிரமிக்கும் படையாக வெறுத்து எதிர்த்தார்கள். சிங்களவரிற் சில பிரிவினர், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாம் இது வரை நடத்திய போரை, தமக்குப் பதிலாக இந்தியப் படைகள் நடத்திக் கொண்டிருப்பதையொட்டி மகிழ்ச்சியடைந்தனர். விடுதலைப் புலி களுக்கும், சிறீலங்கா அரச படைகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை: நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்திய அமைதிப் படை வந்திருப்பதாக புலிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்தத்துக்கு அமைவாக புலிகள் நடக்கத் தவறினால், புலிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக . ஆயுதங்களைக் களையவும் அமைதிப் படையை பயன்படுத்தத் தீர்மானித்திருந்தது என்பது விடுதலைப் புலிகளுக்குச் சிறிதும் தெரியாது. ஆயினும் பலாலி இராணுவத் தளத்தில் இந்தியர் கனரக இராணுவத் தளபாடங்களை இறக்கியபோது புலிகளுக்குச் சந்தேகம் முளைவிட்டது. அமைதி காக்கும் பணியுடன் பீரங்கி வண்டிகளும், கனரக ஆயுதங்களும், எவ்வாறு இணையலாம் என்ற கேள்வி சந்தேகமாக அப்போது உருவெடுத்தது.
இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசித்ததை அடுத்து, ஓகஸ்ட் 4 ல், பிரபாகரன் அவர்கள், தமது மக்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார். யாழ்ப்பாணம் சுதுமலையில் நிகழ்ந்த இப் பொதுக் கூட்டத்துக்கு மிகப் பெரும் சனத்திரள் அணிதிரண்டது. “நான் இந்தியாவை நேசிக்கிறேன்” என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய மிகப். பிரபல்யம் வாய்ந்த உரை அது. ஒப்பந்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டையும் இந்திய அமைதிப் படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றியும் அவர் அதில் விளக்கினார். இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ பலத்தினால் தமது இலட்சியங்கள் கட்டுப்படுவதை அவர் ஒப்புக் கொண்டார். ஆயினும், தனித் தமிழ் நாடு தொடர்பான போராட்டத்தைக் கைவிட அவர் மறுத்தார். மிகக் கவனமாகத். தொகுக்கப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையிலே தமிழ் மக்களின் வேணவாவை அவர் வெளியிட்டதோடு, இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கும் சுயநிர்ணயத்துக்கான தமிழ் மக்களின் போராட்டமும் உரசுவதையும் அவர் எடுத்துச் சொன்னார். அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் அவருடைய கூற்றை, யதார்த்தமானவை என்று நிரூபித்தன. தொடக்கத்தில் இருந்தே ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்துவதில் சிக்கல் காணப்பட்டது. சிறநீலங்காவினதும், இந்தியாவினதும் கருத்துக்கள் மட்டும் கவனிக்கப்பட்டதேயன்றி, பாதிப்புக்கு உள்ளான தமிழ் மக்களின் . அங்கலாய்ப்புகள் பொருட்படூத்தப்படவில்லை. எடுத்துக்காட்டாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்ற கடப்பாடுகளைத் துரிதமாகச் செயற்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அமைதிப் படைத் தளபதிகளும் சிங்கள இராணுவ அதிகாரிகளும் வேகம் காட்டினார்களேயொழிய, ரஜ£வ் காந்தி வாக்குறுதியளித்த இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படூவதை வேண்டுமென்றே தாமதப் படுத்தினார்கள். இதனால் விடுதலைப் புலிகளிடையேயும் குமிழ் மக்களிடையேயும் சந்தேகம் எழுந்தது நியாயமானதே! விடுதலைப் புலிகள் கணிசமான அளவு ஆயுதங்களை ஒப்படைத்திருந்தனர். சிறீலங்கா அரசுக்கு எதிரான அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்தியிருந்தனர். இந்த நிலையிலே வடக்குக் கிழக்கில் இடைக்கால நிர்வாக அமைப்பை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று விடுதலைப் புலித் தலைவர்களும் போராளிகளும் எதிர்பார்த்து நின்றார்கள். மாறாக இந்தியர்கள் மெளனமாக இருக்க, தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை சிறீலங்கா அரசத் தலைவர் ஜெயவர்த்தனா தீவிரப்படூுத்தியதோடு, கிழக்கிலே புதிய காவற்துறை நிலையங்களைத் திறந்து கொண்டிருப்பதை ஆற்றாமை நிலையில் நின்று விடுதலைப் புலிகள் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தது.
4.3 திலீபனின் சாகும் வரை உண்ணாவிரதம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திலீபன் என்ற இளம் புலித் தலைவன் நல்லூர்க் கந்தசாமி கோவில் முன்றலில் செப்டெம்பர் 14 ல் இருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இந்தியா தனது உறுதி மொழியை நிறைவேற்றத் தவறியதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், தமிழ் மக்களின் ஆற்றாமை உணர்வை, தேசிய மக்கள் எழுச்சியாக ஒன்று திரட்டும் வகையிலும் தில்பனின் உண்ணா மறியல் அமைந்தது. அவருடைய இந்த சாத்வீகப் போராட்டம் தனித்துவம் வாய்ந்தது. ஆயுதப் போராளியான திலீபன், மாபெரும் இந்தியத் தலைவரான மகாத்மா காந்தியால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட, ஆன்மீகப் பண்பு கொண்ட அகிம்சைப் போராட்ட வழியைக் கையாண்டு, தமிழ்ழ மக்களின் இக்கட்டான நிலையை இந்திய மக்களுக்கு உணர்த்த முனைந்தார். தமிழ் மக்களும் சரி, விடுதலைப் புலிகளும் சரி, தமது விடுதலைக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பது, விடுதலை மட்டில் அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான பற்றாகப் பிரதிபலிக்கிறது; அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் சகிக்க முடியாதஆழத்தையும் அது பிரதிபலிக்கிறது. இத்தகைய தாங்க முடியாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பவர்களும், இன அழிப்புக்கு உள்ளானவர்களும் மட்டுமே தமது இனத்தின் சுபீட்சத்துக்காகத் தம்மையே பலியாக அர்ப்பணிக்கத் தயங்க.மாட்டார்கள் என்பது, திலீபன் என்ற அத்தியாயம் புகட்டும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக, பிரபாகரன் அவர்களுடைய அணியில் ஒருவராக திலீபனும் புதுடில்லி சென்றிருந்தார். அங்கே இந்தியப் பிரதமருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் திலீபனுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஜீவ் காந்திக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதைத் திலீபன் அறிந்திருந்தார். அது நிறைவேற்றப்படாது போனதைக் கண்டதும், தமது மக்களும், தமது போராட்டமும் ஏமாற்றப்பட்டு விட்டதாகத் திலீபன் கருதினார். எனவே அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அவர் முடிவு செய்தார். திலீபனின் இந்த உண்ணாவிரதம் பற்றிய செய்தியும் விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படைக்கும் இடையே அரசியல் உறவு சீர்குலைந்து போகும் செய்தியும் எமது செவிகளை எட்டியதும் இந்தியாவை விட்டு யாழ்ப்பாணம் புறப்படத் தீர்மானித்தோம்.
இந்திய-இலங்கை ஓஒப்பந்தம் கைச்சாத்தானதை அடுத்து சென்னையில் இருந்து சில விமானப் பயண வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த சில ஈழத் தமிழ்ப் பிரமுகர்கள், வடக்குக் கிழக்கில் உள்ள தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப, இந்த விமானப் பயண ஏற்பாடுகளை இந்திய அதிகாரிகள் செய்திருந்தார்கள். ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை. கடந்த சில ஆண்டுகளாக எம்மைச் சந்திக்கச் சென்னைக்கு வந்த பல போராளிகள் பாக்கு நீரிணையை படகிலே கடந்து செல்லும் போது தாம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள், இடர்பாடுகள் பற்றி நிறையக் கூறியிருந்தார்கள். அந்த இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க நாம் ஏன் தயங்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அடிக்கடி சீர் மாறும் பாக்கு நரிணையைக் கடக்க நாம் புறப்பட்ட அன்று விண்மீன் நிறைந்த நிர்மலமான வானமும், அமைதியான பளிங்கு போன்ற கடலும், இதமான கால நிலையும், எமக்குச் சாதகமாக அமைந்தன. குறுகிய கடற்பயணம். ஆபத்து எதுவும் கிடையாது. மகிழ்ச்சியான பயணமாக அமைந்தது. 1987 செப்ரெம்பரில் இருளின் போர்வையில், பாக்கு நரிணையைக் கடந்து, வல்வெட்டித்துறை வெண்மணற் கடற்பரப்பில் கால்பதித்த போது, எனது நண்ட கால வேணவா ஒன்று நிறைவேறியது. ஆனாலும் போராட்டத்துக்கு இத்தனை காலமாக வழங்கிய ஆதரவை அடுத்து, தமிழீழக் கரையை அடைந்த்து மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்ற போதிலும், யாழ் மண்ணில் நிலவிய துயர நிலை, அந்த மகிழ்ச்சியின் இனிமையைக் கட்டுப்படுத்தியது. சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தில்பன் தொடங்கிச் சில நாட்களே கழிந்திருந்தன. யாழ்ப்பாண தீபகற்ப மக்கள் இதனால் கவலையோடு இருந்தார்கள். . ஆனாலும் உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நடைபெறும் நாட்டிடம் இருந்து நீதிகேட்டு, தனியொரு மனிதன் நடத்தும் இந்த அகிம்சைப் போராட்டத்தை அவர்கள் முழுமையாக ஆதரித்தார்கள். தீபகற்பத்தை நாம் சென்றடைந்த பின், எமது முதல் முக்கிய பணிகளில் ஒன்றாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோவில் முன்றலுக்கு திலீபனைப் பார்க்கச் சென்றோம். யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பண்பாட்டு: மையம் நல்லூர் கந்தசாமிக் கோயில். அவர்களுடைய ஆன்மக மையமும் அதுதான். சிறீலங்கா அரச ஒடுக்குமுறையை எதிர்க்க விடுதலைப் புலிப் போராளியாக முகிழ்த்த திலீபன், இந்திய அரசின் கபடத் தனத்தைத் தோலுரித்துக் காட்டத் கனியொருவராகப் புறப்பட்டிருந்தமை, அவருடைய போராட்ட இயல்பின் தன்மையைக் காட்டியது. கிட்டு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காகப் பல தடவைகளில் அவர் ஆயுதச் சமரில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. தமது மக்களின் அரசியலையும் மனோபாவத்தையும் மிகத் தெளிவாகத் திலீபன் புரிந்து வைத்திருந்தார். தேசியப் போராட்டத்தில் பெண்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதை பலமாக ஆதரித்து வந்தார் என்று விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளிகள் அடிக்கடி குறிப்பிடுவர். பெண்கள் நிலையை உயர்த்தும் முயற்சியின் பிதாமகர்களில் ஒருவராகத் திலீபன் மதிக்கப்பட்டார். இத்தகைய வரலாறு உடைய ஒருவர் போராளிகளோடு மட்டுமல்ல யாழ்ப்பாணப் பொதுமக்களோடும் நன்றாக ஓட்டிக் கொண்டார் என்பது வியப்பல்ல. ஒப்பந்தத்துக்கு முந்திய பேச்சுவார்த்தைக் காலகட்டத்திலேயே திலீபனை பாலா சந்தித்தார். புதுடில்லியில் ஒரே அறையில் இரண்டு பேரும் தங்கினார்கள். ஓட்டிக் கொள்ளும் இந்த இளைஞனை பாலாவுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. இப்பொழுது யாழ்ப்பாணத்திலே மிக முரண்பாடான ஒரு சூழலிலே, அதுவும் தில்பனின் உயிர் ஒடுங்கிக் கொண்டிருக்கும் கட்டத்தில் அவரைச் சந்திப்பது, பாலாவுக்கு ஆற்றொணாத் துயர் கரும் ஒரு சந்திப்பாக இருந்தது.
நல்லூர் கந்தசாமி கோயில் வளாகத்துக்குள் நாம் சென்ற போது சன சமுத்திரமே எம்மை எதிர்கொண்டது. எரிக்கும் வெய்யிலில் வெள்ளை மணலில் மக்கள் திரள் அமர்ந்திருந்தது. ஒன்று திரண்டு பொங்கும் உணர்வு காற்றில் கனத்தது. ஒரு தெய்வீகத் தன்மையையும் அந்தச் சூழல் பிறப்பித்தது. தனது மக்களின் அரசியல் உணர்வுகளையும் வேணவாக்களையும் ஒன்று திரட்டிய உருவினனாக மேடையிலே தளர்வுந்றுக் கிடந்த அந்த இளைஞன் காணப்பட்டான். தில்பனுடைய உண்ணாவிரதம் மேலும் ஒன்றைச் சாதித்திருந்தது. சுமிழ் இனத்தின் ஆன்மாவையே அது தொட்டிருந்தது. பொதுமக்களின் ஒன்றுதிரண்ட ஆதரவையும் அது பெற்றிருந்தது. ஒடிந்து விழக்கூடிய அந்த இளைஞனின் ஒப்பற்ற தியாகம் அவனுடைய மக்களின் கூட்டப் பலம் என்ற மகா சக்தியாக வடிவெடுத்திருந்தது. திலீபனின் உண்ணாவி ரகப் போராட்டமானது ஒரு பொது நலனுக்காகத் தனியொருவன் தன்னை உதிர்க்கும் ஒப்பற்ற தியாகம். மந்றவர்கள் சுதந்திரமாகவும் கண்ணியத்தோடும் வாழவேண்டும் என்பதற்காக வீரம் மிக்க ஓர் இளைஞன் தனக்குத்தானே மரண தண்டனை வழங்கும் உயர் கொடை; தன்னைத் தானே சிலுவையில் அறைந்த ஒப்பற்ற அர்ப்பணிப்பு. ஆழ்ந்த மரியாதையோடும் பணிவோடும் பாலாவும் நானும் மேடை மீது ஏறி, உறை நிலையிலிருந்த திலீபனுடன் பேசச் சென்றோம். எந்கனவே பல நாட்களாக நீரோ, உணவோ ஏற்காததால், உலர்ந்து வெடித்த உதடுகளோடு காணப்பட்ட திலீபனால் முணுமுணக்கவே முடிந்தது. களையிழந்த திலீபனுடன் பேச பாலா குனிந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். எதிர்பார்த்தது போல, அரசியல் நிலவரம் பற்றியே திலீபன் விசாரித்தான். விரைவிலேயே அங்கிருந்து அகன்றோம். அதன் பின் அந்த உன்னதத் தியாகியை நாம் உயிரோடு பார்க்கவில்லை.
திலீபனின் உண்ணாவிரதம் நாளேற ஏற, சனது படுக்கையில் இருந்து பொதுமக்களுக்கு உரை நிகழ்த்த அவனால் இயலாது போயிற்று. நிலைமை படிப்படியாகச் சீரழிய அவன் அமைதிப் படுக்கையில் ஆழ்ந்தான். அவனுடைய மக்களின் கண் எதிரே அவன் வெளிப்படையாகவே வலுவிழந்து பலம் கரைய தமிழ் மக்கள் இந்தியா மட்டிலும் அமைதிப்படை மட்டிலும் கொண்டிருந்த சீற்றமும் வெறுப்பும் உருப்பெருக்கத் தொடங்கின. மக்களிடையே பிரபலமான இந்த இளைஞன் தம் கண் எதிரிலே துடிதுடித்துச் சாகும் போது, தமக்கென்ன என்று பாராமுகமாக இருக்கும் இந்தியாவினதும், அமைதிப்படையினதும் புறக்கணிப்புப் போக்கை அவர்களால் நம்ப முடியவில்லை. ஒடுங்கிக் கொண்டிருக்கும் திலீபனினது உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரேயொரு காரியம் நடந்தாலே போதுமாக இருந்தது. இந்தியாவின் தூதுவர் டிக்சிற் தமது செருக்கை ஒருபுறம் ஒதுக்கிக் கொண்டு, தில்பனைப் போய்ப் பார்த்து, தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை இந்திய அரசு நிறைவேற்றும் என்று வாக்களித்திருந்தாலே அது போதுமாயிருக்கும். ஆனால், திலீபனின் உண்ணாவிரதம் தொடங்கிய காலத்தில் புதுடில்லி அதை அசட்டை செய்தது. தனிப்பட்ட ஒருவருடைய அபத்தமான வண் செயல் என்று நிராகரித்தது. ஆனால், பலர் கவனத்தையும் ஈர்த்து ஒரு தேசிய எழுச்சியாக இந்திய எதிர்ப்பு உணர்வுகளோடு உண்ணாவிரதப் போராட்டம் வளரத் தொடங்கியதால் புதுடில்லி கலவரம் அடைந்தது; நிலைமையை ஆராய யாழ்ப்பாணம் செல்லுமாறு டிக்சிற்றை நிர்ப்பந்தித்தது. திலீபனின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டிய செப்ரெம்பர் 22 ம் திகதியன்று திரு டிக்சிற், பலாலி விமானத் தளத்தில் வந்திறங்கினார். அங்கு பிரபாகரன் அவர்களும் பாலாவும் அவரைச் சென்று சந்தித்தார்கள். அவர் செருக்கோடும் கடூஞ்சினத்தோடும் காணப்பட்டார் என்றும், திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு எதிராகத் தமிழ் மக்களைத் தூண்டிவிடும் விடுதலைப் புலிகளின் ஆத்திரமூட்டும் செயலே என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார் என்றும் பாலா பின்னர் என்னிடம் கூறினார். பிரபாகரன் அவர்கள் அங்கே நிறையப் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கிறார். அந்த இந்திய இராஜதந்திரி நல்லூர் சென்று, மரணப் படுக்கையில் இருக்கும் அந்த இளைஞருடன் பேசி, இந்தியா தனது வாக்குறுதியை உறுதிப்படுத்தி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்க வேண்டும் என்று பிரபாகரன் பரிந்து கேட்டிருக்கிறார். ஆனால் டிக்சிற் தமக்கே உரித்தான செருக்குடனும் மமதையுடனும், விடுதலைப் புலிகளின் தலைவர் விடுத்த வேண்டுகோளை நீராகரித்திருக்கிறார். தமது பயணத் திட்டத்தில் அது அமையவில்லை என்றும் உ தறியிருக்கிறார். டிக்சிற் அவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த முக்கிய கட்டத்தில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்திருந்தால், இனப் பிரச்சனையில் இந்தியாவின் நேரடித் தலையீடு வேறொரு வடிவம் பெற்றிருக்கும். ஆனால் தமது உயிரை இத்தகைய வகையில் தியாகம் செய்ய மனமுவந்து முன்வந்த திலீபனின் அர்ப்பணிப்பு மக்களின் ஆன்மாவைத் தொட்டது. செப்ரெம்பர் 26 லே அநியாயமாக அவர் உயிர் பிரிந்தபோது அமைதிப்படை மட்டில் மக்களுக்கு இருந்த கசப்புணர்வு மேலும் வேரோடியது. அடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அமைதிப்படை மட்டிலும் இந்தியா மட்டிலும் தமிழ் மக்களுக்கிருந்த நம்பிக்கையைத் துகர்த்தன.
திலீபனின் மரணத்தின் பின்னரும் நான் வல்வெட்டித்துறையிலே தங்கியிருந்தேன். இந்த அமைதியான கரையோர மீன்பிடிக் கிராமத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தேன். வரட்டும் வெய்யிலில் தகிக்கும் வல்வெட்டித்துறை மக்கள் துணிச்சலுக்கும் பெயர் போனவர்கள். போர்க்குணம் மிக்கவர்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் குணம் இயல்பாகக் கொண்ட பெருமை மிக்கவர்கள். இவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். இந்தப் பழைமை வாய்ந்த வரலாற்று நகரிலேயே வியக்கத்தகு விடுதலை வீரன் திலீபனுக்கு நான் மரியாதை செலுத்தினேன். த்பகற்பம் முழுவதும் நடைபெற்றதுபோல வல்வெட்டித்துறையிலும் ஒவ்வொரு வீட்டின் . முன்பாகவும் திலீபனின் படம் தாங்கிய சிறு கூண்டு; அந்தச் சிற்றாலயத்தினுள் மெழுகுவர்த்திகள்! வீதியோரக் கம்பங்களில் துக்க வெளிப்பாடாக கிடுகுகள்! கோவில் பள்ளிகளில் இருந்து ஒலிபரப்பி மூலம் முகாரியாக ஓப்பாரி! இராணுவச் சீருடை அணிவித்து புலிக் கொடி யால் போர்க்கப்பட்டு, மலர்ப் போர்வையால் மூடப்பட்ட மைய ஊர்தியில் வளர்த்தப்பட்ட திலீபனின் உடலம், தீபகற்பத்தில் கிராமம் கிராமமாக மெதுவாக இறுதிப் பயணம் புரிந்து கொண்டிருந்தது. தங்கள் வரலாந்றுத் தியாகிக்கு இதய அஞ்சலியைச் செலுத்த மக்களும் திரண்டு கொண்டிருந்தார்கள். வல்வெட்டித்துறையில் தரித்து இறுதி அஞ்சலியை ஏற்றுக் கொண்டபின், கிராமத்தின் பிரதான பாதையூடாக இராணுவ முரசத்தின் சோக தாளத்துடன் திறந்த பேழையில் திலீபனின் உடலம் அடுத்த கிராம அஞ்சலிக்காக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. 1 இரு மருங்கும் அமைதி பூத்து அஞ்சலித்து நின்ற கிராம மக்களோடு நானும் அங்கே துயர் “பகிர்ந்து நின்றேன். சத்தியாக்கிரகத்தின் பிதாமகரான மகாத்மா காந்தியையே தனது உண்ணாவிரதத்தினாலும், தற்கொடைத் தியாகத்தினாலும் விஞ்சிய அந்த இளைஞனுக்கு என் இறுதி அஞ்சலியைச் செலுத்தினேன். உணவை மட்டும் அல்ல, பானத்தைக் கூட மறுத்த தன் சுயமறுப்புச் செயலால், காந்தியையே விஞ்சி நின்றவன் திலீபன்!
4.4 மூத்த தளபதிகளுக்கு ஏற்பட்ட அவலம்
வல்வெட்டித்துறையின் பெயர் பூத்த குடிகளில் ஒருவர் குமரப்பா! விடுதலைப் புலிகளின் மூத்த போராளி; அவருடைய குடும்பம் பெரியது. வல்வெட்டித்துறையிலேயே வாழ்ந்தார். எமது சென்னை வாழ்க்கைக் காலத்தில் இருந்தே, அதாவது, எழுபதுகளில் இருந்தே எம்மோடு நட்புப் பூண்டவர். எண்பதுகளின் தொடக்க காலத்தில் கடந்-பொறியியல் கந்க அயர்லாந்து சென்றார். அங்கிருந்து, எம்மைச் சந்திக்க அடிக்கடி லண்டன் வருவார். தமிழ் மக்களுக்கு எதிராக 1983 லே கலவரங்கள் இடம்பெற்றதும், படிப்பை உதறிவிட்டு, எம்மைத் தொடர்ந்து சென்னை வந்தவர். போராட்டத்தில் திரும்பவும் நேரே ஈடுபட யாழ்ப்பாணம் சென்றார். அங்கிருந்து மட்டக்களப்புக்கு பிரதேசப் பொறுப்பாளராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கேதான், தமது மனைவி ரஜினியைக் கண்டு காதல் வயப்பட்டார். ஒப்பந்தம் கைச்சாத்தாகி, நல்லிணக்கம் காணப்பட்ட ஆரம்ப நாட்களில் குமரப்பாவைத் திருமணம் புரிய, ரஜனி, வல்வெட்டித்துறைக்கு வந்து சேர்ந்தார். சென்னையில் இருந்து அரசியல் அலுவலாக பாலா யாழ்ப்பாணம் சென்றபோது, அந்தத் தருணத்தை வாய்ப்பாக எடுத்த குமரப்பா, தமது திருமண முதற்சாட்சியாகக் கலந்து கொள்ளுமாறு பாலாவை அழைத்தார். திருமணம் நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். எனவே ரஜனியை நான் அப்போது சந்திக்கவில்லை. நான் வல்வெட்டித்துறை வந்ததும், குமரப்பா செய்த முதல் வேலையில் ஒன்று, தமது இளம் மனைவியை எனக்கு அறிமுகம் செய்ததுதான். தமது புதுமணப் பெண்ணை எமது வீட்டுக்கு அவர் அழைத்து வந்தபோது பூரித்துப் போனேன். ஏனோ தெரியாது, ரஜனி யைச் சந்தித்த அந்தக் கணம், இன்னமும் என் மனதில், தெளிவாக பசுமரத்தாணி போலப் பதிந்திருந்தது. அதற்குக் காரணம் என்ன? வெண் நிலாவொளி, குமரப்பாவின் முகத்தில் பட்டூத் தெறித்த போது, மகிழ்ச்சிப் பூரிப்புடன் இருந்த அந்த இளம் முகத்தில் ஒரு கணம் பளிச்சிட்டது அழகா? அல்லது ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்தும் வெட்கமா? அன்று, வெள்ளி நிறைந்த இரவு. கதகதப்பாகவும் அமைதியாகவும் இருந்தது. குமரப்பாவும் ரஜனியும் ஒரு இரட்டைக் கதிரையில் அமர்ந்திருந்தார்கள். அவருடைய கரம் அவளுடைய தோளை அணைத்தபடி இருந்தது. அந்த மாப்பிள்ளை தனது மணப் பெண்ணை உற்றுப் பார்த்தபோது அவர் பூத்த முறுவல் இப்பொழுதும் என் நினைவில் நிந்கிறது. ஆனாலும் குமரப்பா யாழ்ப்பாணத் தளபதி பொறுப்பை வகித்ததால் தமது இளம் மனைவியுடன் அதிக நேரம் செல விட இயலவில்லை. பாலா, கிரமமாக குமரப்பாவுடன் யாழ்ப் பாணத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தார். குமரப்பா இல்லாத வேளை, நான் அடிக்கடி அவர்களுடைய குடும்ப வீட்டுக்குச் சென்று ரஜனியைச் சந்திப்பேன். எல்லாமே அமைதியாகவும் குதூகலமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொடுூந்துயர் அவர்களைத் தாக்கும் என்றோ, குமரப்பாவின் உயிரைப் பறிக்கும் என்றோ, ரஜனியின் இதயத்தைச் சிதறடிக்கும் என்றோ எவர்தான் எதிர்பார்த்தார்?
மாலை ஐந்தரைபோல, நான் ரஜனியைச் சந்திக்கச் சென்றேன். கடந்கரையில் உலாவச் செல்வது என்பதுதான் திட்டம். குமரப்பா அப்போது வீட்டில் இருந்தார். ஆறு மணிக்குத் தாம் வெளியே போக இருப்பதாகக் கூறினார். தாம் புறப்படுவதற்கான ஆயத்தம் செய்யப் போவதால், நாம் உலவச் செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். ஆனால் நாம் விரைவாக உலவிவிட்டுத் திரும்பினோம். புதிதாகத் திருமணமான அவர்களைத் தனியே விட்டு நான் கண்ணிமாக அங்கிருந்து அகன்றேன். வழியில் திருகோணமலைத் தளபதி புலேந்திரன் ஒரு பெரிய மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்வதைக் கண்டேன். தாம் ஓட்டும் அந்த வண்டியின் பலமும், தம்முகத்தில் அறையும் காற்றும் அவருக்குத் தெம்பூட்டுவது தெரிந்தது. குமரப்பா செல்லும் அதே திக்கில் தான் புலேந்திரனும் செல்கிறார் என்பதும் சில . நிமிடங்களில் அவர்கள் சந்திக்கப் போகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஒழுங்கை ஒன்றில் நான் எனது சைக்கிளில் திரும்பும் போது, புலேந்திரன் என்னைக் கண்டார். முகமெல்லாம் பல்லாக, பளிச்சென்று சிரித்தபடி, கையை அசைத்த வண்ணம் வீதியால் கடந்து சென்றார். குமரப்பாவின் திருமணத்துக்குச் சில வாரங்கள் முன்னதாகத்தான் புலேந்திரன் திருமணம் புரிந்திருந்தார். தமிழ்நாடு திருப்போரூர் முருகன் கோவிலில் சுபாவை அவர் திருமணம் புரிந்தபோது, அந்த வைபவத்தில் நாமும் கலந்து கொண்டோம். இந்தக் கோவிலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிரபாகரன் அவர்களுடைய திருமணமும் நடைபெற்றது.
மறுநாள் பருத்தித்துறைக் கடலில் வைத்து, குமரப்பாவும் புலேந்திரனும், வேறு பதினைந்து போராளிகளும் சென்ற படகை சிறீலங்கா கடற்படை வழிமறித்துப் பிடித்திருப்பதாக பாலா எனக்குத் தெரிவித்தார். பலரீலி இராணுவத் தளத்தில், சிறநீலங்காவினதும், இந்தியாவினதும் இராணுவப் பாதுகாவலில் அவர்கள் வைக்கப்பட்டு இருந்தார்கள். எனக்கு அது வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது; ஆனால் அவ்வளவு கோபமூட்டவில்லை. பொருட்படுத்தத் தேவையற்ற சம்பவம் இதுவென்றும், விரைவிலேயே அவர்கள் விடுவிக்கப்படூுவார்கள் என்றும் கருதினேன். யாழ்ப்பாணத்தில் நிலைமை அமைதியாகவும், சாதாரணமாகவும் இருந்தது. போர் ஓய்வும் நடைமுறையில் இருந்தது. அமைதிப்படை அமைதியைப் பேண, சிங்களப் படைகள் தங்கள் பாசறை களில் அடங்கி இருந்தன. அது தவிர, இந்திய-இலங்கை ப்பந்தத்தின் கட்டூப்பாடுகளுக்கு அமைவாக இந்தியாவிடம் ஆயுதங்கள் ஓப்படைக்கப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பும் வழங்கப்பட்டிருந்தது. இப்படியான நிலைமையில், அந்தக் கடல் கைதை அடுத்து, பாரதூரமாக ஏதும் நடக்கக்கூடும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. குமரப்பாவும், புலேந்திரனும் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளாக அமைதிப் படை அதிகாரிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். ஆகவே அவர்களுக்குத் தீங்கு எதுவும் நேராது இந்தியாக்காரர் பார்த்துக் கொள்வர் என்று நாம் நம்பினோம். அவர்கள் கைது செய்யப்பட்டதன் நோக்கம் இந்திய அதிகாரிகளுக்குத் தெளிவு படுத்தப்பட்டதும், அவர்கள் விடுவிக்கப்படூவார்கள் என்று கருதினோம். பதறிப்போன குமரப்பாவின் இளம் மனைவிக்கு, என் மூலமாக இதே விளக்கத்தையே பாலா வழங்கியிருந்தார். ஆனால், பலாலித் தளப் பாதுகாவந்கூடத்துக்கு மறுநாள் சென்றுவிட்டுத் திரும்பும்போது, பாலா கலவரமடைந்தே காணப்பட்டார். துப்பாக்கி நீட்டியபடி சிங்களப் படையினர் மூர்க்கமாகச் சூழ்ந்து நிற்க, குற்றவாளிகளைப் போல அவர்கள் வைக்கப்பட்டிருந்தது பாலாவைக் கலவரப்படுத்தியிருந்தது. கட்டடத்துக்கு வெளியே இந்திய ராணுவ அதிகாரிகளும் ஒரு சிறிய படையணியினரும் தங்கியிருந்தனர். விடுதலைப் புலிப் போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சிறீலங்கா அரசாங்கம் கடுமையான பிடிவாதத்தோடு நிற்பதாக இந்திய அமைதிப்படைத் தளபதி ஹர்க்கிரத் சிங், பாலாவிடம் கூறினார். இந்தச் சம்பவங்களின் புதிய திருப்பம் பாலாவுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் உடனடியாக இந்திய தூதுவர் டிக்சிற் அவர்களோடு தொடர்பு கொண்டார். தமது இராஜதந்திர வல்லாண்மையைப் பயன்படுத்தி, புலிப் போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று பாலா கேட்டார். எமது போராளிகளிற் சிலர் மூத்த தளபதிகளாகவும் போர்க்கள நாயகர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரும் பட்சத்தில், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் டிக்சிற் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். டிக்சிற் அவர்களும் போராளிகளை விடுவிக்க தம்மாலான அனைத்தையும் புரிவார் என்று பாலாவுக்கு உறுதியளித்தார்.
கைது செய்யப்பட்ட போராளிகளை கொழும்புக்கு கொண்டு வரவேண்டும் என்று ஜெயவர்த்தனா அரசும், குறிப்பாக போர் வெறி பிடித்த தேசிய பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத் முதலியும் பிடிவாதமாக இருந்தார்கள். ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு முன்னதாக புரிந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப் போவதாகக் கூறினார்கள். குமரப்பாவும், புலேந்திரனும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மூத்த தளபதிகளாகத் திகழ்ந்தவர்கள். பல சமர்களில் வெற்றி வாகை சூடியவர்கள். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களால், போர்க்கள நாயகர்களாக உயர்ந்து ஏற்றப்படூபவர்கள். புகழ் பெற்ற இந்தக் கெரில்லாத் தலைவர்களைத் தேடி வேட்டையாடப் பல ஆண்டுகளாக முயற்சித்துத் தோல்வி கண்ட லலித் அத்துலத் முதலி இந்தத் தளபதிகள் தமது படையினரால் கைதாகி வ இடப்பட்டமை, தமது அதிர்ஷ்டம் என்றே கருதினார். கொடுமைக்குப் பெயர். பெற்றவர்களும், லலித் அத்துலத் முதலியின் கீழ் இயங்குபவர்களுமான புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக எமது போராளிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அவர்களுடைய உயிருக்குப் பேராபத்து நேரும் என்பதை நாம் முழுமையாக உணர்ந்தோம். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று லலித் அத்துலத் முதலி எவ்வளவு வெறியாக இருந்தார் என்பதும் எமக்குத் தெரியும். “விசாரணை?” என்பது சிறீலங்க த்தி வேறு அர்த்தம் கொண்டது. | த வ் விடுதலைப் புலிகள் என்றால், எழுந்தமானக் கொலைத் தீர்ப்பு! சிங்களக் காவல்துறையினரிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் அகப்படும் தடுப்புக்காவல் கைதிகளின் மனித உரிமை மீறல்களின் கறைபடிந்த வரலாறுகள் எமக்குத் தெரியுமாதலால், இப்போது காவலில் இடப்பட்டிருந்த எமது போராளிகளும், சித்திரவதைக்கும், எழுந்தமானப் படுகொலைக்கும் உள்ளாவார்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இருக்கவில்லை.
அமைதிப் படை அனுமதியோடு, குமரப்பா, புலேந்திரனையும் ஏனையேோரையும் பாலா சந்தித்தார். இவர்களிற் பெரும்பாலானவர்கள் எமக்கு அறிமுகமானவர்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய கதி பற்றி அவர்களுக்கு பாலா எடுத்துரைத்தார். அவர்கள் அதிர்ச்சியும் ஏற்றமும் அடைந்தார்கள். விசாரணைக்கு என்று தாம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டால் சித்திரவதை, அடுத்து மரணத்தை சந்திக்க நேரும் என்பதை உணர்ந்தார்கள். தங்கள் முடிவை அவர்கள் தம்மிடையே விவாதித்து, ஏகமனதான தீர்மானத்துக்கு வந்தார்கள். தங்கள் தலைவர் பிரபாகரனுக்கு அவர்கள் எழுதிய கடிதங்களில் கங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். துயரமும் கொடுமையும் நிறைந்த இந்த நிகழ்ச்சித் திருப்பங்களை பிரபாகரன் அவர்களிடம் விபரித்த பாலா, கடிதங்களையும் ஒப்படைத்தார். ஏகமனதாகவும், இரகசியமாகவும் அந்தப் போராளிகள் மேற்கொண்ட முடிவை, அவர்களுடைய கடிதங்கள், விடுதலைப் புலித் தலைவருக்குக் கூறின. விசாரணை என்ற போர்வையில் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை க்கும், அநேகமாக மரணத்துக்கும் சிங்கள அரசினால் தாம் உள்ளாக்கப்படுவதைக் காட்டிலும், விடுதலைப் புலி மரபுப்படி, தம் உயிரைத் தாமே மாய்க்கத் தாம் விரும்புவதாகத் தங்கள் தலைவருக்குத் தெரிவித்திருந்தார்கள். சிங்கள இனவாத அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து கொடுத்தால், அது தங்கள் எதிரிக்கு எதிராக நடத்தும் தற்காப்புப் போரின் நண்ட, உறுதியான வரலாற்றைக் கறைபடுத்திவிடும் என்றும், அதற்கு நேரெதிராக, கெளரவமான மரணத்தைத் தழுவத் தாம் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். சயனைட் குப்பிகளை அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டிருந்தார்கள்.
இந்தச் சம்பவங்களின் பாடுகேடான திருப்பம், பிரபாகரன் அவர்களுக்குக் கடூஞ் சீற்றத்தையும், ஆழமான ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தன. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் பபடையின என்று அவர் கருதினார்; பொது ரர க நல் பன்விப்ப்ப் பெற்ற போராளிகளை மீட்டெடுக்க வேண்டியதும் இந்திய இராணுவ அமைப்பின் பொறுப்பு என்றும் அவர் நம்பினார். ஆகவே அவர்களை மட்டெடுக்குமாறு டிக்சிற் அவர்களை வெகுவாக நிர்பந்திக்குமாறு அவர் பாலாவை கேட்டுக் ப்ப கப்ப மறுநாள் காலை, பலாலி விமானத் தளத்துக்கு விரைந்த பாலா, கொழும்பில் இருந்த டிக்சிற் அவர்களுடன் தொடர்பு கொண்டார். திலீபன் விவகாரத்தை விட மிகவும் பாரதூரமான கெடுதி ஒன்று உருவெடுத்திருப்பதை பாலா அவருக்கு விளக்கினார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையே நிலவும் உறவில் பெரியதொரு நெருக்கடி ஏற்படக்கூடாது என்றால், விடுதலைப் புலிப் போராளிகளை விடூவித்தாக OT றும் கெஞ்சினார்; நியாயம் உரைத்தார்; எச்சரித்தார். a ங் ப்பம் க் குமிழர் தாயகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தி அமைதியைச் சிதறடிக்கலாம் என்று டக்சிற் அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் டிக்சிற், கலவரம் அடைந்தார் என்றும், போராளிகளைக் கொழும்புக்கு கொண்டு செல்லும் முயற்சியைக் கைவிடுமாறு ஜெயவர்த்தனாவை நிர்ப்பந்தித்தார் என்றும், எப்படியாயினும், அவருடைய முயந்சி வெற்றியளிக்கவில்லை என்றும் பாலா என்னிடம் கூறினார். நிலைமையை மேலும் மோசமாக்கியது என்னவென்றால், டிக்சிற் அவர்களுக்கும், அமைதிப்படைத் தளபதிக்கும் இடையே நிலவிய சுமூகமற்றதும் நிலிவடைந்ததுமான உறவாகும். இந்திய இராஜதந்திரியின் ஆணைகளை ஏற்க அந்தத் தளபதி எடுத்த எடுப்பிலேயே மறுத்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. புதுடில்லியின் அதிகாரபீடத்துக்கு . உண்மையான கொந்தளிப்பு நிலையை எடுத்துரைக்க டிக்சிற் தவறிவிட்டார். மாறாக சிறீலங்கா போர் அமைச்சருக்கு முழு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும் “கிழட்டு நரி?” தமது செல்வாக்கைப் பிரயோகிக்ககலாம் என்று எண்ணி டிக்சிற். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார். இரண்டு ஆண்டுகளின் பின் அரசுத் தலைவர் பிரேதாசா காலத்தில், கொழும்பு அரசுடன் நாம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், ஜெயவர்த்தனா வின் கடும்போக்குக்கு லலித் அத்துலத் முதலியே பிரதான காரணம் என்று ஜனாதிபதி பிரேமதாசா அவர்களிடம் இருந்தே அறிந்தோம். பிடிவாத தீர்மானத்துடன் இயங்கிய தேசிய பாதுகாப்பமைச்சரே அரசுத் தலைவரை ஆட்டிப் படைத்தார் என்றும், விடுதலைப் புலிப் போராளிகளைக் கொழும்புக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தாம் பதவி விலகிவிடுவார் என்றும் அவர் மிரட்டியிருந்தார் என்று -பிரேமதாசா விபரமாகக் கூறியிருந்தார். இறுதியில் லலித்தின் மிரட்டலுக்கு வளைந்து கொடுத்த ஜெயவர்த்தனா, இந்தியத் தூதுவரின் வேண்டுகோளுக்கு இசைய மறுத்திருக்கிறார். போராளிகளின் விடுதலையை வென்றெடுக்கத் தாம் கொழும்பு அரசிடம் மேற்கொண்ட முயற்சி தோற்றுவிட்டதாகவும், ஒக்ரோபர் 5ம் நாள் மாலையில், அவர்களை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல முடிவாகி இருப்பதாகவும் பாலாவிடம் டிக்சிற் தெரிவித்திருக்கிறார்.
இந்த இறுதி முடிவு பற்றிக் கேள்விப்பட்டதும் பிரபாகரன் அவர்கள் அடக்க முடியாச் சினம் கொண்டார். தடுப்புக் காவலில் உள்ள தம் போராளிகளின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவது கமது கடமை என்று அவர் உணர்ந்தார். பிரபாகரனும் அவருடைய தளபதிகளும் தங்கள் கழுத்தில் இருந்த சயனைட் குப்பிகளைக் கழற்றி, பாலாவின் கழுத்திலும், மாத்தையாவின் கழுத்திலும் சூட்டினார்கள். காவலில் பரக்கும் போராளிகளிடம் அவற்றை ஒப்படைக்குமாறு ஆணை பிட்ப்பட்டது. போராளிகள் கொண்டு செல்லப்படும் நாளன்று, கயக்கத்தோடும், மனமின்றியும், சயனைட் குப்பிகளைக் கழுத்திலே மாலையாக அணிந்த வண்ணம், பாலாவும், மாத்தையாவும் அவர்களைப் போய்ச் சந்தித்தார்கள். குமரப்பா தமது மனைவிக்கென்று சில பணிப்புரைகளைத் தெரிவித்தார். புலேந்திரனும் தமது மனைவிக்குச் செய்தி வழங்கினார். திருமணமாகி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த கரன், தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆவலை வெளியிட்டார். விடுதலைப் புலிப் போராளிகளின் முடிவு இதுவே என்றாயிற்று. கொழும்புக்கு விமானம் புறப்படச் சில நிமிடங்களே இருந்தபோது, குமரப்பாவும் புலேந்திரனும் அவர்களுடைய கூட்டாளிகள் பதினைந்து பேரும் ஓரே வேளையில் குப்பி கடித்தார்கள். அவர்களைச் சூழ நின்ற அரச படையினர் தம் கண்முன்னே நிகழும் விபரீதத்தைக் கண்டதும் அவர்கள் மீது ஆத்திரத்துடன் பாய்ந்து கூட்டுத் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு துப்பாக்கி முனைகளால் அவர்களை அடித்துத் தாக்கியிருக்கிறார்கள். ஆனால் கணப் பொழுதினுள் எல்லாமே முடிந்து விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அதே இடத்தில் உயிர்ப் பலியானார்கள். ஐந்து பேர் இதிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிர் பிழைத்தார்கள்.
விடுதலைப் புலிப் போராளிகளின் கூட்டுத் தற்கொலைச் செய்தி பொதுமக்களுக்கும் எனக்கும் அறிவிக்கப்பட்டது. ஒக்ரோபர் 5, மாலையிலே வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலித் தளத்தில் இருந்து “வாக்கி ரோக்கி”’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது. அழுத்தம் திருத்தமாக ஆறுதலாக பெயர்கள் படிக்கப்பட்டன: “குமரப்பா, போய்விட்டார்; புலேந்தி அம்மான் போய்விட்டார்…?” அதன் பின் ஒவ்வொரு பெயராக, இந்த அவலத்தின் பெயர்ப்பட்டியல் முழுமையாக, படிக்கப்பட்டது. எனது செவிகளையே நம்ப முடியாதவளாக விக்கித்துப் போய் உட்கார்ந்தேன். இது எப்படி நடந்திருக்கலாம்? இது உண்மையாக இருக்க முடியாது. என்ன நடந்தது? அதன் பின் தூரத்தில் இருந்து ஓலம் ஒன்று சன்னமாகக் கேட்டது. எமது வீட்டில் இருந்து ஒரு கால் மைல் தூரத்தில் குமரப்பாவின் மனைவிக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது; இன்னொரு பக்கத்தில் இருந்து வருத்தமும் துயரமும் கலந்த உணர்ச்சி ஒப்பாரி ஓவென்று கேட்டது; இன்னொரு குடும்பத்துக்குத் தகவல்; அதன் பின் இன்னொன்று; இன்னொன்று; இப்படியே கிராமம் முழுவதும், திறந்4, ஒரே சொந்த வீடாக ஒப்பாரி ஓலம் ஓங்கியது.
குமிழ்ச் சமுதாய மரபுப்படி, மக்கள் செத்த வீட்டுக்குப் போய் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவது மரபு. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த வல்லெட்டித்துறை போன்ற சிறிய கிராமத்தில் அது பொதுவான ஒன்று. மாவீரராகப் பலர் உயிர் நீத்து தேசிய வீரர்களாகிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மாவீரர்களின் தரத்துக்கு வணக்கம் செலுத்தவும், அவர்கள் குடும்பத்தினரோடு துயர் பகிரவும் எல்லோரும் விரும்பினார்கள். மறுநாள் காலை, வல்வெட்டித்துறையில் வாழ்ந்து கொண்டிருந்த மூத்த விடுதலைப் புலிப் போராளியான நடேசன் அவர்களுடைய மனைவியான வனிதாவுடன் மாவீரராகிவிட்ட அனைவரது வீடுகளுக்கும் சென்றோம். வனிதா ஒரு சிங்களப் பெண்மணி. கிராம மக்களும் மாறி மாறி ஒவ்வொரு வீட்டுக்குப் போவதும், இந்தத் துயரமான சம்பவம் பற்றிக் கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். ஆற்றாமை, துயரம் ஆகிய இரண்டு உணர்வுகளும் எங்கும் வியாபித்திருந்தன. ஆண்கள் கூடிக் கூடிக் கீழ் குரலில் உரையாடினார்கள் & பெண்கள், உறவினரும் சரி, சினேகிதிகளும் சரி, தரையிலே இருந்து மார்பில் அடித்து ஒப்பாரி வைத்து தங்கள் கூட்டுத் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பாலா வீடு திரும்பும் வரை காத்திருந்து, குமரப்பாவின் இளம் மனைவி ரஜனியைப் பார்க்க மறுநாட்காலையே போனேன். ரஜனியைச் சந்திப்பதை நினைக்க எனக்கு உள்ளூர நடுக்கம். இந்த இளம் பெண்ணின் முகத்தை எப்படித்தான் பார்க்கப் போகிறேனோ? என்ன கூறப் போகிறோம்? அவர் வீட்டுக்கு போவதற்காக ஆடை மாற்றும்போது எனது வயிறு பிசைந்தது. துயரக்கதை உணர்த்த வெளிர் நிறச் சேலை அணிந்து கொண்டேன்.
துயர் தோய்ந்து ஆடிப்போயிருந்த கிராமத்தின் ஊடாக, குமரப்பாவின் வீட்டுக்கான அந்தச் சொற்ப தூரத்துக்கு நடந்து சென்றோம். அங்கேதான், ரஜனி இருந்தார். வீட்டுக்கு அருகே வரும்போது, அதே பக்கமாக ஊர்ந்து கொண்டிருக்கும் சனத்திரளில் நாமும் . அங்கமானோம். வீட்டுக்கு அருகே செல்லச் செல்ல ஒப்பாரியும் பலத்து ஒலித்தது. குமரப்பாவின் வீட்டு முன் வாயிலுக்குச் செல்லும் ஒழுங்கையில் மக்கள் நெருக்கியடித்து நின்றார்கள். ஆனாலும் நாம் . உள்ளே செல்வதற்காகப் பிரிந்து வழிவிட்டார்கள். ரஜனி நாராய்க் கிழிந்து கிடந்தார்; துயரத்தால் உருக்குலைந்திருந்தார்; பிதற்றிக் கொண்டிருந்தார்; தமது துயரத்தை எங்கே எவ்வாறு போக்குவது என்று வகையறியாது தவித்துக் கொண்டிருந்தார். முன்வாயிலுக்கு சில யார் தூரத்தில் எம்மைக் கண்டதும் பிய்தெறிந்து என்னிடம் பாய்ந்து வந்தார்; என்னைக் கட்டி அணைத்து வேலியோடு சாய்ந்து, நெஞ்ச அவலத்தோடு ஓலமிட்டார். “அன்ரி, அன்ரி என்ரை அவர், என்ரை அவர்.” என்று கதறினார். எனது தோளில் சாய்ந்தவாறு ஆற்றமுடியாதவராக விம்மினார். அவரை மெதுவாக அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றேன். எண்ணுக்கணக்கற்ற சொந்தக்காரப் பெண்கள் தரையிலே அமர்ந் திருந்தார்கள்; ரஜனியோடும், குமரப்பா குடூம்பத்தோடும் துயர் பகிர்ந்து, ஆறுதல் கூற அங்கே எல்லோரும் கூடியிருந்தார்கள்.
ரஜனி இரவு முழுவதும் ஆற்றாமையோட அரற்றிக் கொண்டிருந்தார். நான் தூங்க முயன்றேன். ஆனால் எனது உணர்வுகள் விழித்தே இருந்தன. இரவின் அமைதியைக் கிழித்தபடி “அத்தான், அத்தான்” என்று ரஜனி தேம்புவது என் காதில் விழுந்த வண்ணமே இருந்தது. தமிழ்ப்பண்பாட்டின் படி தனது கணவரை முதல் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. மரியாதையாக ““அத்தான்”” என்று அழைப்பதே மரபு.
ரஜனி வீட்டில் துயர் பகிர்வதோடு செத்த வீட்டுச் சடங்கு முடியவில்லை. பிரதான ஈமச் சடங்குகள் மறுநாள் மாலை நடைபெற இருந்தன. கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில், ஒரு பெரிய பொதுவான இறுதிச் சடங்காக நடத்த ஏற்பாடாகியிருந்தது. இப்படியான சந்தர்ப்பத்தில் எனது உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறேன்? ஆனால் நானும் மந்றவர்களைப்போல எனது உணர்ச்சிகளை அடக்கியே ஆக வேண்டும். பலியாகிவிட்ட விடுதலைப் புலி மாவீரர்களுக்கு ஒரு தேசிய பிரியாவிடை வீரவணக்கம் செலுத்த ஏற்பாடாகிக் கொண்டிருந்த அதே சமயம், மீட்கப்பட்ட மாவீரரின் உடலங்கள், இறுதி இராக் காவலுக்காக அவர்களுடைய வடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வல்வெட்டித்துறை மைதானம் சனத்திரளால் விம்மி வழிந்தது. வீழ்ந்து பட்ட பன்னிரண்டு மாவீரர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டிருந்தார்கள். துயரக் கனதி எங்கும் வியாபித்திருந்தது. திறந்திருந்த உடலப் பேழைகளைக் கடந்து மக்கள் மரியாதையுடன் வரிசையாக நடந்தார்கள். தமக்குத் தெரிந்த வீரரின் காலடியில் நின்று சிலர் விம்மினார்கள். ரஜனியும், புலேந்திரனின் மனைவி சுபாவும் அலறி யடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உறவினர்கள் அவர்களைக் கட்டப்படுத்தியபடி நின்றார்கள். கரனின் மனைவி குகாவும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். உறவினர்களே அவர்களையும் தேற்றிய வண்ணம் இருந்தார்கள். விம்மலும், ஓலமும் ஒப்பாரியும், ஒவ்வொரு திக்கிலும் கேட்டன. கவிதை, பாடல், இரங்கல் உரை என்று புகழாரம் ஒன்றன்பின் ஒன்றாக ஓலிபரப்பிகளை நிறைத்தன. இன்னும் சில நாட்களில் இந்தியப் படையுடன் நடைபெற இருந்த சமரில் உயிர் துறக்க இருந்த சந்தோசமும் புலிகளின் சார்பில் அன்று இரங்கல் உரை நிகழ்த்திய முக்கியமானவர் ஆவார். கனத்த இதயங்களோடும் சுரத்தே இல்லாதவர்களுமாக பிரபா கரன் அவர்களும் ஏனைய விடுதலைப் புலித் தலைமை உறுப்பினர்களும் உடல் பேழைகளை மெதுவாகக் கடந்து சென்றார்கள்; கடந்து போன ஆண்டுகளில் பிரபாகரன் அவர்களைப் பின்பற்றிய மிகுந்த விசுவாசமும், நம்பிக்கையும் உடைய சில மூத்த விடுதலைப் புலிப் போராளிகளின் உடலப் பேழைகளைக் கடக்கும் போது கால்கள் தயங்கின; பழைய நினைவுகள் சுரந்து வந்தன.
பிரபாகரன் அவர்கள் அங்கிருந்து அகன்றதும், தீ மூட்டுவதற்கு முன்னதாக, தமிழ் மரபுப்படி, அந்தக் களத்தில் இருந்து ரஜனியும், சுபாவும், குகாவும் அகற்றப்பட்டார்கள். ரஜனி தனக்கு எதிர்ப்புறமாக எடுத்துச் செல்லப்பட்ட தனது கணவனின் உடலப் பேழையை விடாது பற்றிப் பிடிக்கப் போராடினார். அவரைப் பிடித்து அணைத்து அப்பால் கூட்டிச் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய அரற்றலை ஏற்கனவே தாங்க முடியாத செவிகளில் “அத்தான், அத்தான்” என்ற அவருடைய அலறல் துயரச் சுமை ஏற்றன. புலேந்திரனுடைய உடல் பேழையைத். தூக்கிச் செல்ல முற்பட்டபோது, இனிமேல் அதைப் பார்க்க முடியாது என்ற உணர்வு தாக்க, அதை விடாது அணைத்தபடி திமிறிய சுபாவைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் பெரும்பாடாகியது. ஒவ்வொன்றாக, மிகக் கண்ணியமாக ஒரு வரிசையில் சுமந்து செல்லப்பட்ட உடலப் பேழைகள் அடுக்கப்பட்ட சிதைகளில் வைக்கப்பட்டன. தமிழ் மரபுப்படி, வெள்ளை வேட்டியணிந்து வெறும் மேலுடன், முதிய தந்தையர் தமது மைந்தரின் உடற் பேழைகளின் அருகே அமைதியாக வெறித்த பார்வையுடன் நின்றார்கள். எரியும் கொள்ளிகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. இராணுவ மரியாதை வேட்டுக்கள் காற்றில் கலந்த பின், அந்த. முதியவர்கள் முன்னே அடி வைத்து ஒரே கணத்தில், சிதைகளுக்கு தீ மூட்டினார்கள். தங்கள் வம்ச விருத்தி வித்தின் இறுதிக் கருகலை உறுதிப்படுத்தினார்கள்.
உப்பிய கரும் புகைத் திரள் வானை ஊடறுத்தது; மக்கள் விறைத்து நின்றார்கள்; பொருமல் ஒலி அந்தப் பெருங் கூட்டத்தில் இருந்து விம்மலாக எகிறியது. எல்லாமே ஒரு கோரக் கனவாகத் தோன்றியது. ஏன் இது நேர்ந்தது? இத்தனை தொகை மக்களின் இதயங்கள் ஏன் சீலம் சீலமாகக் கிழிந்தன. இத்தகைய பேரிழப்பையும், துயரத்தையும் அடைய மக்கள் அப்படி என்ன கொடுமை புரிந்தார்கள்? போரோய்வு ஒன்று நடைமுறையில் இருப்பதாகக். கூறப்படும்போது மக்கள் இத்தகைய துயரத்துக்கு உள்ளாக்கப்பட்டமையும் போராட்டம் இத்தகைய சோதனைக்கு உட்பட்டமையும் இயல்புக்கு மாறான புதிரல்லவா? திலீபன்: பலியானதை உடனடுத்து இப்படி ஒரு பேரிடர் நேர்ந்தமை, மக்களை வகையறியாத் திகைப்புக்கு உள்ளாக்கியது. பொதுமக்கள் பார்வையில் இந்திய அமைதிப் படையும் புதுடில்லி நிர்வாகிகளும் சாயம் வெளுத்து நின்றார்கள். கொழும்பு மீதிருந்த அவநம்பிக்கையும் அதி- கரித்தது. காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை என்றுமே பூரண குணம் காணும் என்று எனக்குப் படவில்லை.
செத்த வீட்டூச் சடங்கிலிருந்து திரும்பும்போது உணர்ச்சிகள் வற்றியகோது போன்ற மனநிலையோடு சென்றேன். சில நாட்கள் முன்னதாகத்தான், புதிய மலர்ந்த முறுவலோடு, மகிழ்ச்சியான மாப்பிள்ளைகளாக புலேந்திரனையும், குமரப்பாவையும் பார்த்திருந்தேன். இப்பொழுது உயிரற்ற உடலங்களாக அவர்களைப் பேழைகளில் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஏனைய பொராளி களையும் எனக்கு நேருக்கு நேர் தெரியும். சென்னையிலோ வல்வெட்டித்துறையிலோ எனக்கு அறிமுகம் ஆனவர்கள். இழப்பும் துயரமும் என் நெஞ்சை நிறைத்தன. வாழ்க்கையின் சகட வோட்டத்திலிருந்தும், நிலையில்லாத் தன்மையிலீருந்தும், துயரமும் கசப்பும் நிறைந்த பாடத்தை அன்று கற்றேன்.
கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள், அரசியல் நிலைமையைக் கட்டுப்படூத்தமுடியாத அதல பாதாளத்தை நோக்கி விரையச் செய்திருந்தன. விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படைக்கும் இடையே நிலவிய உறவு என்றுமே முன்னைப்போல இருந்ததில்லை; இருக்கவும் மாட்டாது என்பதும் உறுதியாயிற்று. இன மோதல்களும், அவற்றையடுத்து பழிவாங்கலாக அப்பாவிச் சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டமையும் தேசிய துயரத்தின் துரதிர்ஷ்டவசமான வெளிப்பாடுகளாக இடம்பெற்றன. மிகவும் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை! விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப் படைக்கும் இடையே அதிகரிக்கும் முறுகல் நிலை! துயர நிகழ்வுகளால் கொதிப்படைந்த பொதுமக்கள் வெளிப்படையாகவே இந்தியப் படைகளுக்குப் பணியமறுத்தார்கள். அதே சமயம், சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது பழி சுமத்தியதோடு, புலிகள் மீது இந்திய இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தது. பிரதம இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர் ஜீ அவர்களும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சீ. பான்ற் அவர்களும் கொழும்புக்கு விமானம் மூலம் சென்று, அரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினார்கள். இராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்க இந்தியா தீர்மானித்திருப்பதாக அவர்கள் ஜெயவர்த்தனாவுக்குத் தெரிவித்தார்கள். ஜெயவர்த்தனாவுக்கு இதனால் பெரும் மகிழ்ச்சி! இந்திய இராணுவம் பயிற்சி கொடுத்து, ஆயுதம் வழங்கி, காப்பாற்றி வந்த தமிழ்ப் புலி கெரில்லா வீரர்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே திரும்புகின்றன என்றால் தமது தந்திரம் இறுதியாகப் பலித்துவிட்டதையொட்டி அவருக்குத் திருப்தி. ஜெயவர்த்தனாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி; ஆனால் தமிழ் மக்களுக்கு இது பேரிடி! பலாத்காரம் மூலம் விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகள் ஆக்குவதற்காக யாழ்ப்பாணம் மீது இந்திய இராணுவம் படையெடுப்பதற்கான தேதி ஒக்ரோபர் 10 என்று குறிக்கப்பட்டது. குமது இராணுவ நடவடிக்கை பற்றி, தமிழ்ப் பொதுமக்கள் எதுவும் அறியக்கூடாது என்பதற்காகவும், இராணுவ அத்துமீறல்கள், போர்க் கொடூரம் பற்றி உள்ளூர் மற்றும் அனைத்துலக கண்டனங்கள் வரக்கூடாது என்பதற்காகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள சுதந்திரமான செய்தி ஊடகம் மீது இந்திய இராணுவம் திடீரென்று துரித நடவடிக்கை எடுத்தது. இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணிநேரம் முன்னதாக, ஒக்ரோபர் 10 அதிகாலையில், “ஈழமுரசு? முரசொலி ஆகியவற்றின் அச்சுக்கூடங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதோடு, செய்தியா ளர்களும் கைது செய்யப்பட்டார்கள். வானொலி, தொலைக் காட்சி நிலையங்களும் தகர்க்கப்பட்டு ஒலி, ஒளி பரப்புப் பொறிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. யாழ்ப்பாண மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் வெளியீட்டுச் சுதந்திரத்தையும் முடக்கி ஜன நாயகத்தின் கருவியையே தகர்த்து ஒழிக்கும் பாதகக் கொடுமையை உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடு புரிந்தது. புகழ் பெற்ற யாழ்ப்பாண நகரை நோக்கி ஒல்லாந்தர் கோட்டையில் இருந்து தாக்கப் புறப்பட்ட இந்தியப் படைகளை எதிர்கொண்டு ஒக்ரோபர் 10ம் தேதி காலையில் ஆயுதம் தரித்த விடுதலைப் புலிகளின் சிறிய அணிகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டன. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முழு அளவிலான போர் தொடங்கியது. வன்செயல், சாவு, அழிவு என்ற புதிய முன்னெப்போதும் காணாத ஒரு நச்சு சுழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டது.
4.5 பவான் இராணுவ நடவடிக்கை
இந்திய இலங்கை ஓப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இந்தியப் படைகளை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி வைப்பதற்கு முன்னதாக தேவைப்பட்டால், விடுதலைப் புலிகளை வலுக்கட்டாயமாக நிராயுதபாணிகளாக்க எழுபத்தியிரெண்டு மணிநேரம் தாராளம் என்று இந்திய இராணுவ உயர் பீடம் கணிப்பிட்டிருந்தது. அது, அப்பட்டமான இராணுவத் தப்புக் கணக்கு என்று நிரூபணமாகியது; விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப் பலம், போராட்ட வடிவம், மன உறுதி ஆகியவை தொடர்பாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு விட்டது என்பது நிரூபணமாயிற்று. யாழ்ப்பாண மண்ணில் 1987 ஒக்ரோபர் 10ம் திகதியன்று மோதல் தொடங்கியபோது ஒரு சிறிய கெரில்லாப் படையை அடித்துத் துடைத்து ஒழிக்கும் சிறிய பணியாகவே இருக்கும் என்றே இந்திய இராணுவம் கருதியது. “ஒப்பரேசன் பவான்” (அதாவது பவான் இராணுவ நடவடிக்கை) என்ற பெயரில் விடுதலைப் புலிகளை பலவந்தமாக நிராயுபாணி களாக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சிறைப்பிடிப்பதன் மூலம், அமைப்பின் தலையை வெட்டிவிடத் திட்டமிடப்பட்டது. தலையை அகற்றிவிட்டால், புலிப் போராளிகள் சீர்குலைந்து, மனம் தளர்ந்து இறுதியில் எதிர்ப்பு இன்றியே சரணடைந்து விடூவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே விடுதலைப் புலிகளின் ஆக்ரோஷமான எதிர்த்தாக்குதலையே இந்தியப் படைகள் சந்திக்க நேர்ந்தது. பிரப் கரன் அவர்களையும் அவருடைய மூத்த தளபதிகளையும் சிறைப்பிடிக்கும் நோக்கத்தோடு ஒக்ரோபர் 12ம் திகதியன்று தனது விசேட அதிரடிப் படைப் பிரிவை வான்வழியாக யாழ்பல்கலைக்கழக வளாகத்திற்குள் இந்திய இராணுவம் இறக்கியது. ஆனால் நிராயுதபாணிகளாக்கும் முயற்சி - எதிர்பார்த்ததுபோல் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொண்டார்கள். இந்திய இராணுவத்தின் வரலாற்றில் இந்தியா கண்ட மிகப் பெரும் இராணுவத் தோல்விகளில் ஒன்றாக பவான் நடவடிக்கை பெயரெடுத்தது.
பிரபாகரன் அவர்களுடைய தலைமைப் பணிமனை புறநகரில் உள்ள கொக்குவில், பிரம்படி ஒழுங்கையில் இருப்பதாக இந்தியப் புலனாய்வுப் புரிவு தகவல் திரட்டியிருந்தது. இது, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ படத்துக்கு அருகாமையில் உள்ளது. இந்தக் கட்டடங்களுக்கு இடையே ஒரு திறந்த வெளி. வான்வழியாக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒரு நல்ல இறங்கு தளமாக அமையும் என்பதால், கவரப்பட்ட இந்தியர், மோட்டூத்தனமான ஆபத்து நிறைந்த இராணுவ நடவடிக்கையில் இறங்கினர். இராணுவத் திட்டமிடல் போர்முறை என்று வரும்போது, மிக உயர்ந்த உள்ளுணர்வுடைய பிரபா- கரன் அவர்கள் தமது தலைமைப் பணிமனை மீது முக்கிய அதிரடித்தாக்குதல் நடப்பதாயின் அது எங்கே தொடங்கும் என்று முன்கூட்டியே இடத்தைப் புரிந்திருந்தார். அந்த மைதானத்தைச் சூழவுள்ள பல்கலைக்கழக: கட்டடங்களில் தாமே தேர்ந்தெடுத்த போராளிகளை நிறுத்திக் காத்திருந்தார். ஒக்ரோபர் 12 அதிகாலையில் உலங்குவானூர்திகள் பதின்மூன்றாவது சீக்கிய இளவணிப் படையினரையும் ஆகாய அதிரடிப் படையினரையும் வானத்தில் இருந்து இறக்கியபோது, காத்திருந்த விடுதலைப் புலிகளின் இயந்திரத் துப்பாக்கிகளிடம் இருந்து ஆக்ரோஷமானதும், குயவு தாட்சண்ய மற்றதுமான எதிர்ப்புக் கிடைத்தது. படையினருக்குக் கிடைத்த அதேயளவு சேதம் இந்திய உலங்குவானூர்திகளுக்கும் கிடைத்தன. ஏற்கனவே வந்திறங்கி விடுதலைப் புலிகளின் தொடர் துப்பாக்கி வேட்டுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியப் படையினருக்கு உதவியாக மேலும் படையின ரைக் கொண்டு வந்து இறக்க உலங்குவானூர்திகளுக்கு இயலாது போயிற்று. வந்திறங்கிய இந்தியப் படையினர் சுற்றிவளைத்து தனியாக்கப்பட்டனர். ஒக்ரோபர் 12ம் திகதியன்று தங்கள் கடைசித் துப்பாக்கி ரவை தீர்ந்த முன் மதியம் வரை தங்கள் உயிருக்காக அவர்கள் போராடினார்கள். உயிர் சுப்ப முனையும் இறுதி முயற்சியாக கூர்முனைக் கத்தியால் குத்தும் தாக்குதலிலும் ஈடுபட்டார்கள். இந்த நடவடிக்கையின் படுதோல்வி வரலாறு கூறுவதற்காக் ஒரேயொரு இந்தியப் படையினரே உயிர் தப்பினார். சிறப்புப் பயிற்சி பெற்ற சீக்கிய அதிரடிப்படையினர் இருபதியொன்பது பேர் இந்தச் சமரில் கொல்லப்பட்டார்கள்.
அதே சமயம், வான்குடைப் பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர், சீக்கிய படையணியிலிருந்து பிரிந்து பிரபாகரன் அவர்களை அழித்தொழிக்கும் இராணுவ இலக்கை மட்டும் தங்கள் தனி இலக்காகக் கொண்டு அவர் இருந்த இடத்தை குறியாக வைத்து நகரத் தொடங்கினர். அவருடைய தலைமைப் பணிமனையை அவர்கள் சென்றடைந்தபோது, இந்திய நடவடிக்கை தொடங்குவதற்கு சில மணிநேரம் முன்னதாக அவர் வெளியேறி விட்டதைக் கண்டறிந்தார்கள். மட்டுமீறிய நம்பிக்கையோடும் தவறான கணிப்போடும் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராகப் புரியப்பட்ட மிக மோசமான கொடூர சம்பவமாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. முற்றுகைக்கு உள்ளாகி முழிபிதுங்கி நின்ற இந்திய அதிரடிப்படையினர், தமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு சூழலில் தாம் யாரைத் தேடிச் செல்கிறார்களோ, அவரை முன்பின் பார்த்தறியாத நிலையில், தமது இராணுவத் தாக்குதல் இலக்குக்குள் அகப்பட்ட தமிழ்ப் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றார்கள். திணறிக்கொண்டிருந்த அதிரடிப்படையினருக்கு உதவியாக ஏவப்பட்ட மோட்டார், பீரங்கி எறிகணைகளும், பொதுமக்கள் பலரைப் பலியெடுத்தது. அருகே அமைந்திருந்த யாழப்பாணத்துக் கோட்டையில் இருந்து புறப்பட்ட கனரக டாங்கி வண்டிகள், எதிர்பட்ட பொதுமக்களை புல்லை நெரிப்பதுபோல் அரைத்துச் சென்றன.
இந்தியப் படைகள் அனாவசியமாக இரத்த வெறியாடிய படுகொலைக் களத்தை விட்டு அகன்றபின், நெரியலில் பிய்ந்த உடலத் துண்டங்களும், துப்பாக்கிச் சல்லடையிட்ட சடலங்களும் அந்தப் பகுதியில் இறைந்து கிடந்தன. இந்தக் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கையால் மொத்தம் நாற்பது தமிழ்ப்பொதுமக்கள் உயிரிழந் தார்கள்; பெருந்தொகையினர் காயமடைந்தார்கள்.
பவான் இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது; தீவரமடைந்தது. தீபகற்பத்து வலிகாமப் பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதி மீது பீரங்கி ஷெல் அடிகள் மழைபோல பொழிந்தன. சொத்துக்களைச் சிதறடித்து கற்குவியல் ஆக்கின. மக்களைத் துண்டம் துண்டமாகச் சிதறடித்தன. பலரை நிரந்தர ஊனமானவர்கள் ஆக்கின.
கமிழ்ப் பொதுமக்களை இந்தியப் படையினர் ஒருபுறம் கண்டதுண்ணடமாக வெட்டிச் சரிக்க, மறுபுறம், தீபகற்பத்தின் பிரதான வீதிகளூடாக யாழ்ப்பாண நகரை நோக்கி, சமவேளைப் படைநகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நகர்வின்போது, அசைவு கண்டதும் சுடும் இந்திய இராணுவத்தினர் சென்ற பாதையில், கோர மரணங்களும், எழுந்தமானக் கொலைகளும் இடம்பெற்றன. ஆக்கிரமிக்கும் வெளிநாட்டுப் படையாக இந்தியப் படையினர் சூறையாடினர். கூட்டம் கூட்டமாக சென்ற இந்தியப் படையினர், மிருகத்தனமான பாலியல் வன்தாக்குதல் புரிய, அச்சத்தோடும் ஆற்றாமையோடும் எண்ணற்ற .குமிழ்ப் பெண்கள் ஓலமிட்டனர். மிகப் புனிதமானது என்று தமிழ்ப் பெண்கள் பேணி வந்த, கற்பு, கண்ணியம், பெருமை ஆகியவை “அமைதிக்காப்பாளர்களால்” சிதைத்தழிக்கப்பட்ட வேளைகளில், பெண்களின் கதறல்களும் ஓலமும் அடுத்தடுத்து காற்றைக் கிழித்து காயப்படுத்தின.
நகரும் இந்தியப் படையின் வழியில் இருந்த ஒவ்வொரு வீடும் சூறையாடய்பட்டது. காசும் நகையும் விலை உயர்ந்த பொருட்களும். களவாடப்பட்டன. யாழ்ப்பாணம் மீதான தாக்குதலால் இந்தியப் படையினர் பெரும் பொருளீட்டினர். ஆனால் யாழ்ப்பாண பொதுமக்களைப் பொறுத்த வரையிலே அவர்கள் பெற்றதெல்லாம், அதிர்ச்சி; திகில்; அவமதிப்பு! இந்திய அமைதிப்படை மட்டில் மக்கள் மனப்பேதலிப்பும் வெறுப்பும் கொண்டார்கள். அதுவே விடுதலைப் புலிச் சுதந்திரப் போராளிகளுக்கு ஆதரவாகவும் வடிவெடுத்தது. போர்க்கோல உலங்குவானூர்த்திகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள், கனரக பீரங்கி வண்டிகள் சகிதம் இந்தியர்கள் பெரியதொரு மரபுவழிப் போரைத் தொடுத்தார்கள். விடுதலைப் புலிப் போராளிகள் தெளிவான போர்க்களப் பரிச்சியத்தோடும், தேர்ந்தெடுத்த நகர்புற கெரில்லா தாக்குதல் வழிகளைக் கையாண்டார்கள். இறுதியில் மூன்றுநாள் போர் என்று இந்தியர் தொடக்கிய பவான் இராணுவ நடவடிக்கையை இரண்டு வார காலம் நடிக்கச் செய்தார்கள். போரினால் களைத்துப்போன குமிழ்ப் பொதுமக்கள், ஏற்கனவே சிநீலங்கா இராணுவப் படைகளிடம் பெருமளவு உயிர்களைப் பறி கொடுத்திருந்தார்கள். அவர்களுடைய சொத்து க்களும் அழிபட்டிருந்தன. இப்பொழுது, இன்னொரு அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியில் தாம் சிக்கியிருபபதை உணர்ந்தார்கள். அமைதிப் படை என்ற பெயரில் வந்த எதிரியிடம் கண்ட குரூர உக்கிரத்தை அவர்கள் இதற்குமுன் சிங்களப் படையிடம் கூடக் கண்டதில்லை.
“பவான் நடவடிக்கை” நடத்தப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களையவே. ஆனால் அதைத் தொடக்கிய தீவிரமான ஆரம்ப கட்டத்தில் நியாயம் கூற முடியாத அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஊனம் அடைந்தார்கள். அதைவிட, சனத் தொகை யின் பெரும்பகுதி தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இருப்பிடங்களை இழந்தது. குறிக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பாய்ந்தோடினார்கள். வேறு சிலர் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேறினார்கள். பின்னே தங்கியிருந்தவர்கள் எப்படி நடப்பார்கள் என்று ஊகிக்க முடியாத, குரூரப் போக்குடைய இந்தியப் படைகளால் தாம் கொல்லப்படலாம் அல்லது காயப்படூத்தப்படலாம் என்று தெரிந்தே இருந்தார்கள். இத்தகைய பகைமைச் சூழலில் காயமடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் இருந்து . யாழ்ப்பாண தீபகற்பத்தின் வடமராட்சியிலும் சாவகச்சேரியிலும் உள்ள உள்ளூர் மருத்துவ மனைகளுக்கு மாந்ற வேண்டியது தவிர்க்க முடியாததாயிநற்று. வசதிகள் குறைந்த இந்தச் சிறிய மருத்துவ மனைகளில் விடுதலைப் புலிப் போராளிகளையும் பெருந்தொகையாக காயம் அடைந்து கொண்டிருக்கும் பொதுமக்களையும் வைத்துப் பராமரிப்பது கடின மாகியது.
வீடுவாசல்களை இழந்த பெருந்தொகை மக்கள் வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறையில் உள்ள தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தங்கியிருக்க வந்தார்கள். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சில புலிப் போராளிகள் தங்கள் கூட்டாளிகளையும் தம்மோடு கூட்டி வந்திருந்தார்கள். இந்தத் தேசிய நெருக்கடிக்கு வல்வெட்டித்துறை மக்கள் தயக்கமின்றி முகம் கொடுத்தார்கள். தங்கள் மண்பற்றையும் பெருந்துணிச்சலையும் வெளிக்காட்டினார்கள். பல குடும்பங்கள், காயமடைந்த புலிப் போராளிகளுக்கு இருப்பிடமும் தஞ்சமும் அளித்தார்கள். அவர்களில் ஒருவர் கிட்டுவின் தாயார்; கிட்டு அம்மா என்று வாஞ்சையோடு அழைக்கப்படுபவர். தமிழ் ஈழத்தை பற்றுறுதியோடு ஆதிரிப்பவர். போராட்டத்தின் தேவைகளுக்காகத் தமது வீட்டையும் இதயத்தையும் முழுமனதாக திறந்து விட்டிருந்தார். நண்ட காலமாக விடுதலைப் புலிப் போராளிகளை ஆதரித்து பராமரித்த வரலாறு அவருடையது. யாழ்ப்பாண மருத்துவபீட மைதானத்தில் இந்தியப் படையினர் இறங்கும்போது போராளிகள் பதுங்குத்தாக்குதல் நடத்திய வேளை அதில் காயமடைந்த மூத்த தளபதி பொட்டு அம்மானை பத்திரமாக வைத்திருக்கக்கூடிய மிகப் பாதுகாப்பான இடம் கிட்டு அம்மாவின் வீடே என்று முடிவு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது காயமடைந்த முதற் புலிப்போராளி பொட்டு அம்மானே ஆவார். உடனடியாக இவரை யாழ்ப்பாணம் அரச மருத்துவமனைக்கு விரை வாகக் கொண்டு போயிருக்கிறார்கள். வயிற்றில் ஏற்பட்ட கடுங்காயத்தால் உயிர்போகும் நிலையில் இருந்த இவரைக் காப்பாந்ற அவசர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறிது சுகம் காணப்பட்டதும், வல்வெட்டித் துறையிலுள்ள கிட்டு அம்மாவின் பாதுகாப்பான வீட்டுக்கு அவர் கொண்டு போகப்பட்டார். அங்கே அவரோடு வேறும் இரண்டு மூத்த போராளிகள் தரித்திருந்தார்கள். பொட்டு அம்மானுக்கு வேறு காயங்களும் இருந்தன. தானியங்கித் துப்பாக்கிச் சூடு தைத்து முழங்கையின் முட்புரித் தசைநார்கள் கிழிந்து போயிருந்தன. மிகக் கவனமான பராமரிப்பும், இடையறா மருந்து கட்டலும் தேவைப்பட்டது. காலிலும் பாதத்திலும் கூட, சிறு காயங்கள். அதாவது அவர் படுகாயம் அடைந்திருந்தார்.
4.6 கொடூரமான படுகொலைகள்
பொட்டு அம்மானும் வேறு புலிப் போராளிகளும் கிட்டூவின் வீட்டில் இருப்பதை அறிந்தோம். எமது வீட்டிலிருந்து சில நூறு யார் தூரத்தில் அந்த வீடு இருந்தது. சுகம் விசாரிக்க அங்கே போனோம். வடு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. காயமடைந்த போராளிகள் படுக்கையிலேயே கிடந்தார்கள். கிட்டு அம்மா பொறுப்பாக இருந்தார். அறுபதைத்தாண்டிய அந்தத் தாயார், அன்னைக்குரிய அரவணைப்போடு அவர்களைச் செல்லமாகப் பராமரித்துக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சில் நகைச்சுவை இருக்கும். கலகலவென்ற சிரிப்பொலியும் குறும்பும் நையாண்டியும் இருக்கும். இருபத்தினான் க. மணி நேரமும் ஓடியாடிப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருடைய உறவினரும், அயலவர்களும் உணவு வழங்கியும் அவருக்காகக் கடை கண்ணிக்குச் சென்று உதவினார்கள். எனது மருத்துவத்தாதி ஆற்றலுடன் நானும் உதவி புரிந்தேன். புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு எனது உதவி, பளுவைக் குறைத்தது. பொட்டு அம்மானையும் வேறு சிலரையும் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். பொட்டு அம்மானின் வயிற்றுப் புண் நன்றாக குணமடைந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயம் மட்டும் மாறுவதாக இல்லை. பெரிய கட்டூப்போட வேண்டியிருந்தது. ஆனால் ஊரநர் கசிந்து கொண்டிருந்தது. பெரிய புண் ; பயங்கர வலி. உள்ளூர் மருத்துவமனையில் அடிக்கடி மயக்க மருந்து எடுத்து அதன் பின்னரே மிகக் கவனமாகத் துப்புரவு செய்ய வேண்டியிருந்தது. பொட்டு அம்மான் உட்பட கடுங்காயம் அடைந்தவர்களை, பருத்தித்துறை மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது நானும் உடன் சென்றேன்.
மந்திகை மருத்துவமனையில் போரின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. குண்டுச் சிராய்களோடு பொதுமக்களும், காயமடைந்த போராளிகளும் மருத்துவமனைப் படுக்கையில் நிரம்பி வழிந்தார்கள். இனித் தாங்காது என்ற அளவுக்கு அங்குள்ள மருத்துவ வளங்கள், வற்றும் அளவுக்கு பயன்படூத்தப்பட்டன. அங்குள்ள மருத்துவர்களுக்கு உதவியாக நோபல் பரிசு பெற்று சர்வதேச பிரெஞ்சு மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றினார்கள். ஒரு தடவை எமது வழமையான மருத்துவமனைப் பயணத்தின்போது இரத்தம் ஓட, ஓட வலிதாங்கமுடியாது அரற்றிக் கொண்டிருந்த பல பொதுமக்கள் தொடர்ந்து, தொடர்ந்து மந்திகை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்கள். சாவகச்சேரிப் பக்கத்தில் இருந்து அவர்கள் வருவது தெரிந்தது. இந்திய அமைதிப் படையினரால் சாவகச்சேரியில் பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டதாக காயப்பட்டவர்களும், அவர்களோடு கூடி வந்தவர்களும் கூறினார்கள்.
அந்த நாள் 1987 ஒக்ரோபர் 27ம் திகதியாகும். இந்திய இராணுவத்தின் வரலாற்றில் வெட்கப்படவேண்டிய நாளாகவும், தமிழ் மக்களின் துயர வரலாற்றில் ஒரு பயங்கர சோக நாளாகவும் அது அமைந்தது. இயந்திரத் துப்பாக்கிகளும் ஏவுகணைகளும் பொருத்திய உலங்குவானூர்திகள் சாவகச்சேரி நகருக்கு வந்து, உள்ளூர்ச் சந்தைக்கு மேலே வட்டமிட்ட வண்ணம் இருந்தன. சந்தையில் அடர்த்தியான சனத்திரள். ஆறுதலாகச் சாமான் வாங்குவதில் மக்கள் ஈடுபட்டார்கள். மக்கள் எதிர்பாராத நிலையில், உலங்குவானுர்திகள் திடீரென்று மக்களைக் குறிவைத்து தாக்குதலை நடத்தின. வானூர்திகளிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மக்கள் மத்தியில் விழுந்து வெடித்துச் சிதறின. மக்கள் பீதியால் நாலா பக்கமும் ஓட அங்கே ஒரே குழப்பமும் களேபரமும்!உலங்குவானூர்திகள் அகன்ற பின் அங்கே விளைந்த அனர்த்தம் வெளி வெளியாகத் தெரிந்தது. சிதறிய உடலங்கள் குடல் எறியப்பட்டுக் கிடந்தன. பலருக்குப் படுகாயம்: வலி! அதிர்ச்சி! பயங்கரமான காயங்களில் இருந்து இரத்தம் ஆறாக ஓடியது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப, மக்கள் வாகனங்களைத் தேடினார்கள். இதன் விளைவாக மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தது. மருத்துவமனையின் இந்த நெருக்கடியில், நானும் உதவ முன்சென்றேன். யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கூடுதலான வசதிகள் இருந்தபோதிலும். அங்கே செல்ல, காயம் பட்ட பொதுமக்கள் மறுத்தார்கள். ஒருவாரம் முன்னதாக, அதாவது ஒக்ரோபர் 21 ம் திகதியன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் ் இடம்பெற்ற குரூரப் படுகொலையால் மக்கள் பீதியடைந்திருந்தார்கள். அந்த மருத்துவமனைக்குள் இந்தியப் படையினர் . நுழைந்து காட்டுமிராண்டித்தனப் படுகொலை புரிந்தபோது, மருத்துவர்கள், தாதியர், பணியாளர் என்று 21 பேர் அங்கு கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தியப் படையினர் மருத்துவமனைக்குள் சென்று, தானியங்கித் துப்பாக்கிகளால் சிலாவிச் சுட்டு, நோயாளிகள் மீதும் மருத்துவ பணியாளர் மீதும் எறிகுண்டுகள் வீசி வெறியாட்டம் ஆடினார்கள். அந்த இந்திய வெறி யாட்டத்துக்கு உதவியாக, மோட்டார் எறிகணைகளும் ஏவப்பட்டன. மருத்துவமனைச் சுவர்களை அவை துளைக்க புகையும் தூசியும் அங்கே நிரம்பி வழிந்தன. சமாதானத்தையும் சரணடைவதையும் உணர்த்தும் வகையில், மருத்துவப் பணியாளர்கள் கைகளை உயரத் தூக்கியபடி நின்றபோதும், இந்திய அமைதிப் படையினர் நேரெதிரில் நின்று அவர்களைச் சுட்டு வீழ்த்தி ஏறிகுண்டுகளையும் அவர்கள் மீது வீசியிருக்கிறார்கள். நோயாளிகள் எதுவித எரிச்சலூட்டும் செயலைச் செய்யாத போதிலும், இந்திய ராணுவக் காட்டுமிராண்டித்தனத் தாக்குதலில் மருத்துவமனைப் பணியாளரும் நோயாளிகளுமாக ஜம்பத்தியொருவர் கடூங்காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்லத் தயங்கியதன் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள முடிந்தது.
உடனடி மருத்துவச் சிகிச்சைக்காக, மருத்துவ மனையைத் தயார் செய்ய நாம் முற்படூுவதற்கு இடமளிக்காத வகையில், காயப்பட்டவர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். ஒரேயொரு கூடமே அறுவைச் சிகிச்சைக்காக இருந்தது. அதனுள்ளே காயப்பட்டவர்கள் பலர் குவிந்திருந்தார்கள். காயமடைந்தவர்கள் எல்லா வயதிலும் இருந்தார்கள். தங்கள் அன்புக்கு உரியவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்போடு அவர்களுடைய உறவினர்களும் அறுவைச் சிகிச்சைக்காக கூடத்துக்குள்ளே முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அறுவைச் சிகிச்சைப் படுக்கையில் ஓர் இளம் பெண். வயிற்றில் பல காயங்கள். கிழிந்து போன குடலில் இருந்து எறிகுண்டுச் சிராய்கள் நீக்கப்பட்டு கிழியல்கள் பல தைக்கப்பட்டன. காயம் பட்ட ஒருவருடைய கால் குருதி நாளத்திலிருந்து சீறும் ரத்தத்தை அவருடைய உறவினர் ஒருவர் பொத்திப் பிடித்தபடி மருத்துவருக்காக காத்திருந்தார். முப்பது வயது ஆண் நோயாளி ஒருவர் என் பொறுப்பில் இருந்தார். அவருடைய நெஞ்சில் ஒரு துளை. வயிந்றிலும் கிழிந்த காயங்கள். வயிற்றுச் சவ்வு சிதைந்திருக்குமோ என்று மருத்துவர்கள் சந்தேகித்தார்கள். இடைத். தொடைக்குக் கழே இரத்தம் வந்து கொண்டிருந்தது. கிழிந்த காயங்களுக்கு கீழே கடுங்காயம் இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றியது. முதலுதவி செய்தவர்கள் தலையைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். அதில் ரத்தக் கறை! மண்டையோடு கிழிந்திருந்தது. எனது கால்மீது ஏதோ சிந்திக் கொண்டிருந்தது. ஓடும் நீர் எங்கேயிருந்து வருகிறது என்று ஒரு கணம் யோசித்தேன். கீழே பார்த்தபோது, அந்தக் காயக்காரரின் மண்டையோடு ஆழமாகப் பிழந்திருப்பதைக் கண்டோம். அவரை எவராலும் காப்பாற்ற முடியாது என்பது உறுதியாயிற்று. யன்னலூடாக வெளியிலிருந்து ஆந்றாமையோடு பார்த்துக் கொண்டிருந்த அவருடைய உறவினர்கள் அவர் இறந்ததும் கதறி அழுதார்கள். அடுத்த ஒரு அறையில் சில முஸ்லிம்கள். சிதறிக் கிடந்த ஒரு உடலத்துக்கு அருகே குவிந்து நின்றார்கள். சிதறிப்போன பாகங்களை மருத்துவர்கள் ஒன்றாகப் பொருத்தி புதுமை செய்யமாட்டார்களோ என்ற தவிப்பு அவர்களுக்கு! அன்று மரணம்தான் வெற்றி பெற்றது. ஒருவருடைய சிதைந்துபோன முண்டத்தைக் கூட அவருடைய உறவினர்கள் கொண்டுவந்திருந்தார்கள். துண்டிக்கப்பட்ட மனித உடல் உறுப்புக்கள் கழிவுக் கூடையில் நிரம்பி வழிந்தன. சிந்திய இரத்தம் தரையில் பசையாக உறைந்து கொண்டிருந்தது. பயங்கரமும் அவலமும் நிறைந்த சூழலே அங்கு நிலவியது. அன்று மட்டும் இந்திய அமைதிப் படையால் சாவகச்சேரியில் முப்பது தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எழுபத்தி ஐந்து பேருக்கு பெரிதும் சிறிதுமாக காயம்.
பலமணிநேரம் கழிய காயத்தோடு வந்த பலரோடு அல்லாடி முடிய, உடைந்த உடலங்களையும் பழுதுபார்த்துச் செப்பனிட்டு முடிய, காயக்காரர் படுக்கைப்பிரிவுக்கு உயிரோடு போராட அனுப்பி வைக்கப்பட்டு முடிய அறுவைச் சிகிச்சைக் கூடத்தை துப்புரவாக்கும் பணியே மீதமிருந்தது. அசுர பணி நடந்த அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தேன். வழுவழுப்பான வெள்ளைத்தரையில் வளைந்து நெளிந்து செல்லும் சிவப்பு இரத்த சிற்றோடைகள். குப்பைச்சாக்குகள் மனித உடலுறுப்புகளால் நிரம்பியிருந்தன. அவற்றில் இருந்து கையும் காலும் நீட்டிக் கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு முதுகெலும்பின் ஊடாக ஒரு நடுக்கம் ஏற்படும் நிலை! வாளிகளில் இரத்தம் ஊறிய பஞ்சுப் பொதிகள். எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் நடந்ததற்கு சாட்சியாகக் கிடந்தன. கை கழுவும் நீர்க் கிண்ணங்களில் நீர் சிவப்பாக இருந்தது. பயன்படுத்தப்பட்ட கையுறைகள், அடுத்த ஆட்டத்துக்காக உலர்த்தி வைத்த நிலையில் இருந்தன. அன்று மாலை நடந்ததை நினைத்தால் ஆத்திரம்தான் வரும். சூதுவாதற்ற மக்கள் மீது இத்தகைய குரூரக் கொடுமையைப் புரிந்து விட்டு அதற்கு நியாயம் கற்பிக்க முயலும் மனித சிந்தனை மனச்சாட்சியற்றதாகவே இருக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் இவர் இவரென்று தெரிந்தெடுக்கபடாது சகட்டு மேனிக்கு தாக்கப்பட்டவர்கள். எவரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்தபோது நான் உயிர் தப்பியதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்ற உணர்வைத் தந்தது. அன்று பாதிக்கப்பட்டவர்களை விட நான் எதிலும் வேறுபட்டவளல்ல என்பதும், இப்படியான சந்தர்ப்பங்களில் நான் பிரித்தெடுத்துக் காப்பாற்றப்பட இடமே இல்லை என்பதையும் உணர்ந்தேன். நான் மட்டும் எப்படிக் காப்பாற்றப்படலாம்? பிழையான நேரத்தில் பிழையான இடத்தில் நான் இருக்கவில்லை என்பதால் தப்பிப்பிழைத்தது எனது அதிர்ஷ்டம்! ஆனாலும் இந்த மக்களின் அவலத்தையும் அவர்கள் படும் துயரத்தையும் நேரே பார்க்கும்போது, நடந்து கொண்டிருக்கும் கொடுமையின் தன்மையைச் சிந்திக்க முடிந்தது. ஒரு அந்நிய ஆக்கிரமிப்பின் அரக்கத்தனமான ஒடுக்குமுறைக்கும் பயங்கரத்துக்கும் குறிப்பிட்ட இந்த இன மக்களே உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் உர முடிந்தது. என்னைப் பொறுத்த வரையிலே குமிழ் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட கொடூரமும், பேரழிவும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாமே நிர்ணயிக்கும் அரசியல் உரிமை பெற முழுமையான அருகதை உடையவர்களாக்கப் போதுமானவை என்றே கூறுவேன்.
இந்தியப் படைகள், வலிகாமத்தில் பலமாகக் காலூன்றிக் கொண்டு, வடக்கே வடமராட்சியிலும் தெற்கே தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரியிலும் தங்கள் இராணுவ நடவடிக்கையை நடத்தி விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைப் பறித்தெடுக்க களம் குதித்தார்கள். சாவகச்சேரியே முதலில் இந்தியப் படைகளிடம் வ்ழ்ந்தது. கண்முடித்தனமாக பொதுமக்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களின் சொத்துக்களும் உடைமைகளும் சூறையாடப்பட்டன. இவையெல்லாம் அந்தப் பகுதிகளில் தேடுதல் நடத்தி அழிக்கும். நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டன. இவை யெல்லாம் பதிவேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
தேசியப் போராட்ட காலங்களில் ஓப்பந்ற தீரமும் அர்ப்பணிப்பும் நிறைந்த தனித்துவமான நீண்ட வரலாறு கொண்டவர்களே சாவகச்சேரி மக்களாவர். பெருந்தொகை விடுதலைப் புலிப் போராளிகளையும் அநேகம் மாவீரர்களையும் வழங்கிய தாய் மண் அது. பின்னொரு நாளில். சாவகச்சேரி மக்கள் தயங்காது வழங்கிய தொடர்ந்த ஆதரவால் விடுதலைப் புலிகளின் எதிர்ப்புப் பேராட்டம் இந்தியப் படைகளை ஆட்டங்காண வைத்தது. தாக்குவதற்கு மீளத் திரள்வதும், திட்டமிடுவதும், அங்கிங்காக பதுங்கியிருந்து தாக்குதல் நடத்து வதுமாகப் புலிப்படைவீரர்கள் சுறுசுறுப்படைந்தார்கள். சாவகச் சேரி மீதான இந்திய இராணுவ அக்கிரமிப்பு செறிவடைந்த நிலையிலும் விடுதலைப் போராளிகள் தாக்குப்பிடித்து தப்பிப் பிழைத்தார்கள் என்றால் அது அவர்களுடைய துணிச்சலையும் மன உறுதியையுமே காட்டுகிறது. சாவகச்சேரியிலே இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு நிலவிய இந்தக் காலப் பகுதியில் இப்பிரதேச விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தளபதியாக பொறுப்பு வகித்தவர் தமிழ்ச்செல்வன் ஆவார். பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுக்குப் பொறுப்பாளரானார்.
வடமராட்சி பிரதேசத்தில் வரவர விமானப்படை நடை வடிக்கைகள் அதிகரித்தன. வடமராட்சி எல்லைகளில் இந்திய காலாட் படையினரின் காவல் உலா அணிகளும், வேவு முயற்சிகளில் நடமாடக் காணப்பட்டன. இந்திய இராணுவத் தலைமைப் ப்டம் தனது கவனத்தை விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் மீது திருப்பத் தொடங்குகிறது என்பதையே அவை உணர்த்திற்று. விரைவில் அந்தப் பகுதியில் இந்தியப் படை நடவடிக்கை அதிகரிக்கப் போகிறது என்பது தெளிவாகியது. எனவே, யாழ்ப்பாணம்-உடுப்பிட்டி பிரதான வீதி வழியாக இந்திய காவல் உலாப் பிரிவு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க காணப்பட்டதாக எமது போராளிகள் மோப்பம் பிடித்து அறிவித்ததும், எமது வேளை வந்துவிட்டது என்பதை உணர்ந்தோம். எமது வீட்டை விட்டு வெளியெறி வடம ராட்சியின் மையப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம். அதுதான் எமக்குக் கிடைத்த ஒரே வழி! ஏனென்றால் எமது மண்ணுக்கு வடக்கே பாக்கு நீரிணை எனும் பெருங்கடல்! இந்துமாகடலின் ஒரு கற்று! தென் இந்தியாவையும் இலங்கையையும் அது பிரித்துக் கொண்டிருந்தது. வடகடலிலே சிறீலங்காவினதும் இந்தியாவினதும் போர்க்கப்பல்கள் தங்கள் கடற்காவலை பலப்படுத்தியிருந்ததால், அப்போதைக்கு கடற்பயணம் எதையும் நினைத்துப் பார்க்க முடியாது. அது குவிர எம்மோடு போர் புரிந்து கொண்டிருந்த இந்தியாவே வடக்கு எல்லையில் எமது நகர்வுக்காக காத்துக் கொண்டிருந்தது. வன்னிக் காட்டின் மத்தியில் நிரந்தர கெரில்லாப் போராளி வாழ்க்கை என்பது எமக்குச் சாத்தியமானதாகத் தோன்றவில்லை. பாலாவின் உடல் நலத்தையே நாம் முதலில் கருத்தில் வைக்க வேண்டியிருந்தது. வயதில் இளையனவராகவும் சுகதேகியாகவும் அவர் இருந்திருந்தால் வன்னி வாழ்க்கை சாத்தியமாக இருந்திருக்கலாம். இரண்டாவதாக நாம் இரண்டு பேருமே இயக்கத்தின் இராணுவப் பிரிவில் அல்லாமல் அரசியல் பிரிவிலேயே கூடுதலாக ஈடுபட்டிந்தோம். ஆகவே தலைமறைவாக காட்டுக் கெரில்லா போரில் ஈடுபடுவதைக் காட்டிலும் மக்கள் மத்தியில் பணிபுரிந்தால் அல்லது அனைத்துலக சமுதாயம் மத்தியில் பணிபுரிந்தால் போராட்டத்துக்கு கூடுதலான பங்களிப்பவர்களாக இருப்போம். அதைவிட கிரமமாக இன்சுலின் மருந்து பெறவேண்டும் என்ற கவலையும் புறக்கணிக்கக் கூடிதொன்றல்ல. காட்டுப் பகுதியில் நாம் வாழ்ந்தால் இன்சுலினைக் கிரமமாகப் பெறுவோம் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. இந்தக் காரணங்களை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கினாலும் எமது விருப்பமும் வேணவாவும் மக்கள் மத்தியில் வாழவேண்டும் என்பதேயாகும். அத்தோடு வடமராட்சியில் தலைமறைவு வாழக்கை வாழ எம்மால் இயலும் என்றும் கருதினோம். இனி, போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் பாலாவுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இந்திய இராணுவத்துடன் போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரபாகரன் தம்மை அனுப்பி வைப்பார் என்று பாலா கருதினார். ஆனால் இந்தியர் தமது இராணுவ முயற்சியை இடைநிறுத்த விரும்பவில்லை. பவான் போர் நடவடிக்கையானது பிரபா கரன் அவர்களையே இலக்கு வைத்துத் தொடக்கப்பட்டது. இதனால் அவர் தீபகற்பத்தை விட்டு வெளியேறி வன்னிக்காட்டின் மையப் பகுதியை அடைந்திருந்தார். அங்கேயிருந்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற இராணுவத்துக்கு எதிராக, காட்டூப்புற கெரில்லாப் போர் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.