1 புதிய தரிசெினங்கன்
நாம் பிரியவேண்டிய வேளை வந்துவிட்டதை உணர்ந்தேன். படகின் வெளியிணை இயந்திரத்தின் விசிறிகள் சுழன்று, சுழன்று, கடலைக் கடைய கடல்நீர் வெண்நுரையாக வழிந்து கொண்டிருந்தது. பதினேழு ஆண்டுகளாக நாம் வாழ்ந்த மண்ணை, நாம் நேசித்த மண்ணை, நாம் கூடிவாழ்ந்த மக்களை விட்டூப்பிரிந்து செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. கரையிலே எம்மோடு கூடிப் பழகிய விடுதலைப் புலிப் போராளிகள். இளம்பெண்களும், ஆண்களும், பழைய நண்பர்களுமாக எல்லோருமே “போய்வாருங்கள்” என்று கைஅசைத்தபடியே கரைநளம் நின்றார்கள். நீலம் பாரித்த கரையோர நீர்ப்பரப்பிலிருந்து இந்து மா கடலின் மங்கலான ஆழப் பகுதிக்குள் படகு மெதுவாக எம்மை உந்திச் சென்றபோது, கரையிற் தென்பட்ட மனித உருவங்களும் நீள்கரையோர இயற்கைக் காட்சியும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. குளமாகிவிட்ட எனது கண்களில், கடலோர நிலப்பரப்பு ஒரு மெல்லிய கறுப்புக் கீறாக மறைந்து கொண்டிருந்தது. என்னில் ஒரு பகுதியை பின்னால் விட்டுவிட்டு நான் போய்க்கொண்டிருந்தேன்.
எம்மை எதிர்கொண்டு ஓடி வந்தது இந்துமாகடல். நாம் பிசகான வேளையில் வந்திருக்கின்றோம் என்பதையும், அடுத்துவரும் பலமணிநேரம் வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு நிலைமை மோசமானதாக இருக்கப்போகின்றது என்பதையும் அது குயங்காமல் எமக்கு உணர்த்தியது. வேண்டாத விருந்தாளிகளாக நாம் அந்தப் பரந்த நீர்ப்பரப்பில் நின்றோம். மேலெழுந்து சுழற்றியடித்த அலைகள் வெளிப்படையாகவே தமது சீற்றத்தைக் காட்டின. விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசை, படகின் அணியத்தில் கட்டளை நிலையெடுத்துநின்று, படகைப் பொறுப்போடு நேர்த்தியாகச் செலுத்திக்கொண்டிருந்தார். கொந்தளிக்கும் கடலிலே, சீறியெழும் அலைகளினூடாக சூசையும் அவரது அணியினரும் இலகுவாக படகோட்டும் இலாவகம் கண்டு நான் மரியாதை கலந்த வியப்போடு நின்றேன். வெறியாடும் கடல்மீது தடுமாறிச் செல்லும் படகில் உறுதி தளராது அவர்கள் கால்பதித்து நின்றார்கள். குளிர்நீர் படகு மீது சவுக்கடியாக விழுந்து அவர்களைத் தெப்பமாக நனைத்தபோதும் தடமையில் கண்ணாக நின்று செல்லும் திசையின் இலக்கைக் குறிவைத்து, படகினை நுட்பமாக இயக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இளம் போராளிகள்தான். ஆயினும் வயதிற்கு மிஞ்சிய சாமர்த்தியமும் தன்நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. சினந்து எழும் அலைகளின் மிரட்டல்களுக்குக் கிறங்காது, கடலும் படகும் ஆட, தாமும் இலாவகமாக அந்த ஆட்டத்திற்கு ஒத்திசைவாக அசைந்தவாறு அவர்கள் படகோட்டினார்கள். தளபதி சூசை காட்டிய திசையிற் பார்த்தோம். எமக்குப் பின்னால், தூரத்திலே, மங்கலாக இரண்டு கரும்புள்ளிகள் தெரிந்தன. இரண்டும் படகுகள். எமது வேகத்திற்கு அனுசரணையாக வந்துகொண்டிருந்தன. நாம் சென்று கொண்டிருந்தது போன்ற அதே மாதிரியான படகுகள். ஆனால் தூரத்தில் சிறிய உருவத்தில் தெரிந்தன. துள்ளிப் பாய்ந்து, முல்லைத்தீவுக் கடற்பரப்பை உழுதபடி வந்து கொண்டிருந்தன. எமது காவற் கவசங்கள் இவை. துணிச்சல், தியாகம், அர்ப்பணிப்பு - அவற்றோடு வெடிமருந்துகளும் நிரம்பிய படகுகள். இவர்கள் கடற்கரும்புலிகள். எமது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டவர்கள்.
நாம் உயிர்வாழவேண்டும் என்பதற்காக, தமது உயிரையும் கொடுக்கத் தயாராக வந்தவர்கள். எமது பயணத்துக்கு அச்சுறுத்தலாக சிரீலங்கா கடற்படைப் படகுகள் வருமேயானால் அவற்றோடு மோதி அவற்றை அழித்தொழிக்கும் முடிவோடு வந்து கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் இவர்கள். எமது உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எத்தகைய தியாகத்தையும் புரிய மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது, இந்த அன்பிற்கும், பதிப்புக்கும் சகுதியுடையவள் அல்ல என நான் உணர்ந்து கொண்டது இநுதான் முதற்தடவையல்ல. தளபதி சூசையை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். சிங்களக் கடற்படையால் எழக்கூடிய ஆபத்துகள்பற்றி அவர் நன்கறிவார் என்பதும், அப்படியான ஆபத்தான கூம்றிலை எழுந்தால் அதனை சமாளித்து வெற்றிகொள்ளும் திறனாற்றல் அமிடமுண்டு என்பதிலும் எமக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எனது கணவர் பாலாவைப் பொறுத்தவரை அவருக்கு பேலதிகமாக ஒரு ஆபத்து. இருந்தது. அது அவருக்கு உள்ளே, அவருடைய உடலில் இருந்தது.
பாலாவுக்கு சிறுநரக நோய். சிறுநரகச் செயற்பாடு பாதிக்கப்பட்டு நாட்பட்டிருந்த வியாதி திடீரென சமீபத்தில்தான் கடுமையாக்கி அவர் தப்பிப் பிழைத்திருந்தார். அவர் பிழைத்தது அதிசயம்தான். அவரைப் பராமரித்துவந்த மருத்துவர்களின் கருத்து அழுதான். இருபத்தைந்து ஆண்டுகளாக நீடித்த நீரிழிவு நோய் அவரை நன்றாகப் பதம் பார்த்து விட்டது. அவரது நோயின் நிலைமையைச் சோதித்துப் பார்க்கக்கூடிய மருத்துவக் கருவிகள் எதுவும் முல்லைத்தீவில் இருக்கவில்லை. இதனால் அவரைச் சோதிக்கவோ, அவரது நோய் எத்தகையை கடூமைநிலை கண்டிருக்கின்றது என்ற விளக்கம் பெறவோ முடியவில்லை. அறுவைசிகிச்சை செய்தபின்னர் தான் சிறுநீரகம் பெருமளவு இயங்கவில்லை என்பதும், சிறுநீரக முடக்கம் மிக மோசமாக இருந்தது என்பதும் எமக்கு முழுமையாகத் தெரியவந்தது. அவருடைய இடது சிறுநீரகம் ஒரு தேங்காய் அளவிற்கு உப்பி இருந்தது என்பதும், எந்நேரமும் வெடித்துப் பிளக்கும் நிலையில் இருந்தது என்பதும் எமக்கு முன்னரே தெரிந்திருந்தால், மருத்துவப் பராமரிப்பும், சிகிச்சைக் கருவிகளும் இல்லாமல் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை மேற்கொள்ள எமக்குத் துணிவு வந்திருக்குமோ தெரியாது.
முல்லைத்தீவில் பாலாவின் சிறுநீரகம் கடுமையாகப் பாதிப்படைந்து, அதனால் உயிராபத்து ஏற்பட்டு அதிலிருந்து அவர் தப்பிப் பிழைத்தபோதும் அவரது உடல்நிலை மிக மோசமாகவே இருந்தது. அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இருந்ததால்தான் அவர் தப்பிப் பிழைத்ததோடு, மிகவும் நீண்ட, ஆபத்தான வங்காள விரிகுடாக் கடற் பயணத்தையும் சமாளித்தார் என்று கூறவேண்டும். வன்னி என்றால் அங்கே மலேரியா, நெருப்புக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, விஷக்காய்ச்சல்; இனி எந்த நாளும் வரக்கூடிய வெவ்வேறு நோய்கள்! இவைகளால் சுகதேகிகளுக்கே அங்கு ஆபத்து ஏற்பட்டு விடுகின்றது. சிறுநீரக நோயால் உயிர் ஆபத்து நிலையில் இருந்த பாலாவுக்கு இவை நிச்சயமாகச் சாவைக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனபடியால், ஒருபக்கம் அவருடைய சிறுநீரக, நீரிழிவு வியாதிகள். மறுபக்கம் வன்னி வெப்ப சூழலில் எழக்கூடிய நோயாபத்துக்கள். பாலாவின் உடல்நலம் வேகமாக மோசம் அடைவதை அவதானித்த இயக்க உறுப்பினர்களும் சரி, பொதுமக்களும் சரி, அவர் பயணம் செய்யக்கூடிய நிலையில் இருக்கும்போதே, எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவரை வெளியேற்றிவிட வேண்டும் என்று ஒரே குரலில் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
இதனால் ஒருபுறம் பிரிவுக் கலக்கம்; மறுபுறம் நோய் அச்சம். இவற்றுக்கு மத்தியில்தான் தமிழீழத்தைவிட்டு நாம் கடல்மார்க்கமாக வெளியேறுவதற்கு பிரபாகரன் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இப்படியான பயணத்தில் ஆபத்து இருப்பது எமக்குத் தெரியும். ஆனால் வேறு வழி இருக்கவில்லை. ஒன்றில் முல்லைத்தீவில் தங்கிநின்று சாவைச் சந்திக்க வேண்டும். அல்லது, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளவேண்டும். சிலசமயம் வெளிநாட்டில் சரியான மருத்துவப் ॥ராமரிப்புப் பெற்று, அவர் மேலும் சிறிது காலம் உயிர்வாழ இயலுமாய் இருக்கும் என்பதையும் சிந்தித்தோம். ஆனால் சமுத்திரத்தில் இறங்கியதும் இரக்கமற்ற கடுமையான கடற்சூழல் பாலாவை அடுத்த ஆபத்தான கட்டத்துக்கு தள்ளிவிட அதிகநேரம் பிடிக்கவில்லை. ஆர்ப்பரித்துக் குமுறும் அந்தப் பென்னம் பெரிய கடலில், எமது சின்னஞ்சிறிய படகு, முக்கி முக்கித் தத்தளித்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது. அடிவானத்தில் ஒளி மங்கிக்கொண்டிருந்தது. அந்த நேரம் பாலாவின் முகம் வெளிறத் தொடங்கியது. இயலாமை அதிகரிப்பது தெரிந்தது. அவர் வயிற்றை எக்கி, எக்கி வாந்தி ஈடுத்துக்கொண்டிருந்தார். அதனைக் கடற்புலி வீரர்கள் பாத்திரங்களில் ஏந்திக் கொட்டினார்கள். அவருடைய நெற்றியையும் தாங்கிப் பிடித்தார்கள். எனக்கும் கடல் குமட்டல் குணம். ஆற்றாமை என்னையும் தொற்றிக்கொண்டது. கடற்பயணக் கனதி என்னையும் தாக்கியது. இந்தப் பயணம் பந்றி நான்கொண்ட அச்சங்கள் இப்பொழுது மெய்யாகி விட்டதை உணர்ந்தேன். நாம் புறப்படுவதற்கு முன்னரே, அனேகமாக மூன்றுவகை உடல்நல ஆபத்துகள் பாலாவுக்கு வரலாமென அறிந்து கொண்டேன். அவருடைய இரத்த அழுத்த மாத்திரைகள் தாழ்ந்த குருதி அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அடுத்தது கடல்வாந்தியால், உடலில் நீர் வற்றி, சிறுந்ரக வியாதியைக் கடூுமையாக்கிவிடலாம். இனி, அளவுக்கு மிஞ்சி வாந்தி எடுத்தால் குருதியோட்டத்தில் “குளுக்கோஸ்” குறைந்து மயக்க நிலை ஏற்படலாம். எனக்கும் குமட்டல். தியங்கிப் போனேன். இடையில் விழித்து அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள். இது எந்தவகையான உடல்நல ஆபத்து? அனுமானிக்க முடியவில்லை. சூசையின் பார்வை ஏதாவது செய்யும்படி என்னைக் கெஞ்சியது. பாலா கையை நீட்டினார். “குளுக்கோஸ்” குறைவு ஏற்பட்டிருப்பதை சைகையால் காட்டினார். தமக்கு சீனி வேண்டும் என்பதையும் உணர்த்தினார். மிகத் தேவையான மருந்து அது. நான் ஆயத்தமாகக் கொண்டு சென்ற பொதியில் இருந்து சீனி எடுத்துக் கொடுத்தேன். அதை நக்கிய சில நிமிடங்களில் அவருடைய நெற்றி வியர்வை உலர்ந்தது. அந்த நேரம் என்னால் இயன்றது அவ்வளவுதான். படகு ஆடிய ஆட்டத்தில் மிக எளிமையான மருத்துவ உதவியைக் கூட வழங்க முடியவில்லை. படகின் பக்கவாட்டில் பாலா சரிந்து படுத்தார். ஆனால் வெகுவாக நைந்து போயிருந்தார். தமது நெற்றிக்கு முன்னே அவர் தமது கையைச் சோர்வாக சுழற்றியபோது, அவருக்குத் தலை கிறுகிறுக்கிறது என்பதும், இரத்த அழுத்தம் வடிந்திருக்க வேண்டும் என்பதும் எனக்குப் புரிந்தது. சில நிமிடங்கள் வயிற்றை மீண்டும் எக்கப் போகிறார் என்பதும் அதன் பின் களைத்து விழப்போகிறார் என்பதும் தெரிந்தது. அவருடைய உடலும் சோர்ந்து, துவண்டுபோய் இருந்தது.
எமது பயணம் தொடர்ந்தது. பாலாவின் நிலை ஒன்றில் நேரம் போகப் போகத் தேறி, சமாளிக்கும் நிலைக்கு வந்துவிடும். அப்படி யானால், தொடர்ந்து செல்லலாம் என்ற நம்பிக்கை. அல்லது அவரால் இயலாமல் போய்விடும். அந்த நிலையில், திரும்பிவிட வேண்டும் என்ற முடிவு. எனக்கு இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. ஆனால் நாம் போக வேண்டிய தூரத்தைவிட, ஓடி வந்து விட்ட தூரம் அதிகம் என்பது தெரிந்தது. ஆகவே கதிரும்பப்போவதில்லை. பயணம் தொடர வேண்டியதுதான். வேறு வழியில்லை என்பது அவருக்கும் தெரியும். சூசை என்னைப் பார்த்தார். கடற்போராளிகள் ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதையாவது செய்ய வேண்டும் என்று சூசை தவித்தார். படகின் வேகத்தைக் குறைக்குமாறு ஓட்டியிடம் உரத்துக் கூறினார். “கடற்படைப் பீரங்கிப் படகுகள் திருகோணமலையிலிருந்து புறப்பட்டு விட்டன,” என்று பதில் வந்தது எட்டத்திலிருந்து வரப்போகும் ஆபத்தை உதாசீனப்படுத்தியவராக, “கொஞ்ச நேரம் மெதுவாக ஓட்டு,” என்று சூசை திரும்பவும் கத்தினார். ஆழக்கடலின் ஊடாகவும், அதிகரிக்கும் இருட்டின் ஊடாகவும், கடலின் நிலைமைக்கு ஏற்றவாறும், பாலாவின் உடல் உபாதைக்கு ஏற்றவாறும் படகின் வேகத்தை மாற்றியபடி சென்று கொண்டிருந்தோம். சூசை தான் குந்தியிருந்த அணியத்தின் விளிம்பிலிருந்து ஒரு கணமும் நகரவில்லை. கடல் மீது, தமது கூர்மையான பார்வையைத் தூரத்தில் பரத்தியபடி இருந்தார்; அவ்வப்போது பாலாவின் மீது ஒரு கண்ணோட்டம். இனித் தமது தோழர்களுக்கு திசை பற்றியும் வேகம் பற்றியும் குறிப்புகள். சூசையும் அவருடைய வர்களும் இப்படிப்பட்ட பயங்கரச் சூழலில் வாழப் பழகியவர்கள். களைப்பின் சுவடோ, ஆபத்தின் கலக்கமோ அவர்களில் தெரியவில்லை. தற்கொடைத் தியாகத்தின் முதிர்ச்சியில் முகிழ்ந்த அமைதி வடிவமாக, ஓர் ஒத்திசைவோடு இயங்கும் உடலின் வெவ்வேறு உறுப்புகள் போல சூசையும் அவருடைய வீரர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருந்த உ பத்திரவத்திற்கு முடிவே இல்லையா என்று நான் அயர்ந்து கொண்டிருந்தபோது, “அங்கை பாருங்கோ அன்ரி” என்று இயந்திரங்களின் இரைச்சலுக்கு மேலாக, சூசை என்னை நோக்கிக் குனிந்து கத்தியபடியே, தூரத்தில் மினுங்கிய ஒளியைச் சுட்டிக் காட்டினார். “வந்து சேர்ந்திட்டம்,” என்று சொல் டில் கப்பல் நிற்பதை கப்ப சிறிது ன்ற கொண்டிருக்கும் எமது படகை ஒரு கப்பலோடு அணைத்துப் பிடிக்க, வீரர்கள் முயன்றுகொணடிருந்தார்கள். இரவின் கனதி இளகியது. அவ்வளவு நேரமும் ஒரே சுருதியில் கடல் அலைச் சத்தத்தையும் இயந்திர இரைச்சலையும் மீறி, பரபரப்புடன் பழகிய குரல்கள் களை கட்டின. “வாருங்கோ அன்ரி, வாருங்கோ”. என்னைத் தூக்கிக் கப்பலில் ஏற்றுவதற்காக கரங்கள் நணடன. பாலா ஏற்கனவே ஏறிவிட்டார். வாக்கி - ரோக்கியால் தகவல் கொடுக்கப்பட்டதால் கப்பலில் இருந்து வீரர்கள் அணி ஒன்று படகுக்குள் இறங்கி, அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் கழுவித் துடைத்து, கதகதப்பான அறை ஒன்றில் படுக்க வத்திருந்தார்கள். பலசாலி இளைஞர்கள்! என்னையும் கப்பலில் ஏற்றி, ஒரு சிற்றறைக்குள் பத்திரமாகச் சேர்த்து விட்டார்கள். இரவுக் குளிரிலும், மழையிலும் தெப்பமாக நனைந்த பின், கதகதப்பான ஒரு வீட்டுக்குள்ளே நுழைவது போல இருந்தது. ஆனால் வாந்தி எடுத்ததால் துவண்டு போயிருந்தேன். தூங்க முடியவில்லை. ஒரு படியில் அமர்ந்து, முழங்காலில் முகத்தைப் புதைத்தபடியிருந்தேன். பாலா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை. இனி, எனது தலைச்சுற்றலால் ஏற்பட்ட ஆயாசம். ஒரு குரல் காதில் விழுந்தது. சிந்தனை கலைந்தது. “அன்ரி நான் போயிட்டு வாறன்”. குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தேன். சூசை! மேலே நின்று ஒரு கையை ஊன்றியபடி, கீழே குனிந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக எங்களோடு வெகு நெருக்கமாகப் பழகியவர்; தாராள குணத்தோடு நடந்தவர். மூன்றாவது தடவையாக எங்கள் உயிரைக் காப்பாந்றியவர். அந்த இளைஞரிடம், அநதத் தருணத்தில் என்னால் கூற முடிந்ததெல்லாம், “சரி, தம்பி!” என்றது மட்டும்தான். வேறு எதுவும் கூற வேண்டாம் என்று அவருடைய முகம் வேண்டியது. திரும்பிச் செல்வதற்காகத் தமது வீரர்களை அழைத்தபடி அவர் திரும்பி நடந்தார். பெடியள் ஒவ்வொருவராக வந்து விடை பெற்றார்கள். எம்மோடு நன்றாகப் பழகியவர்கள். இந்தப் ப்ப்னத்தில் கூடி வந்து எம்மைக் காப்பாற்றியவர்கள். - விடைபெற்றதும் கேகமாகத் திரும்பி நடந்தார்கள். காரிருளில், கொந்தளிக்கும் கடலில், சிறீலங்கா பீரங்கிப் படகுகளிடம் அகப்படாமல், முல்லைத்தீவுக்கு, ஆபத்து நிறைந்த பயணம் மேற்கொள்ளும் ஆயத்தங்களில் பிள்ளைகள் துரிதமாக ஈடுபட்டார்கள்.
சூசையும் அவருடைய வரர்களும் எமது கப்பலில் இருந்து சிறிது அப்பால் பாதுகாப்பாகச் . சென்றபின் நாமும், மென்மையாக அசைவதை உணர்ந்தேன். எமது கப்பல் நகர்ந்து கொண்டு இருந்தது. இயந்திரத்தின் இரைச்சல் அனுக்கமாகவேதான் கேட்டது. தொட்டிலில் மெதுவாக ஆடும் குழந்தை போன்ற உண்வு, இல்லையென்றால் கப்பல் புறப்பட்டதே தெரிந்திருக்காது. இந்தக் கடலையும் சரி, இந்தப் பெரிய படகின் கனதியையும் சரி, சமாளிக்கக் கூடிய இயந்திரம் இது என்பது தெளிவாகத் தெரிந்தது. எமது பயணத்தின் இந்த இரண்டாவது கட்டத்தில் எம்மைக் கொண்டு செல்லும் அலுவல்களில் கப்பல் வீரர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். கடற் பயணத்தில் எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு மூத்த கடற்புலி உறுப்பினர்களில் ஒருவரான சுடரொளியிடம் ஓப்படைக்கப்பட்டிருந்தது. “பாலா எங்கே? என்ன நடக்கிறது,” என்று சுடரொளியிடம் விசாரித்தேன். “அவர் நல்லாய் இருக்கிறார். யோசியாதேயுங்கோ,” என்று நம்பிக்கை தரும் பதில் வந்தது. “அவர் நல்ல நித்திரை!” என்றார். அந்த வார்த்தை நிம்மதி தந்தது. பயணக்களை, பிரியாவிடை, மனப்பளு எல்லாம், அந்தப் பெரிய கப்பல் தந்த கதகதப்புக்குள் புதைய அப்படியே உறங்கிவிட்டேன்.
எவ்வளவு நேரம் துயிலின் அணைப்பில் இருந்தேனோ தெரியாது. ஒரு தீனமான குரல், “அடேல் தேத்தண்ணி தாறீரோ?” என்று கேட்டு என்னை எழுப்பியது. இந்தத் தொந்தரவு எரிச்சலாகவும் இருந்தது; அதே நேரம் மன ஆறுதலாகவும் இருந்தது. கடற் குமட்டலையும், பாலாவைப் பற்றிய கவலையையும் தற்காலிகமாகவாவது மறந்திருந்த என்னைக் குழப்பியதால் எரிச்சல்! அதே சமயம், அவர் எழுந்து உண்ணவும் பருகவும் எதையாவது தேடுமளவுக்குத் தேறி வெளியில் வந்தது மகிழ்ச்சி! எப்படியோ, சூடாக தேனீர் அருந்திவிட்டு, உற்சாகமாக இருந்தார். பெரிய கப்பலின் கதகதப்பும், அது ஆட்டமில்லாமல் ஓடியதும் அவருக்குத் தெம்பைத் தந்திருக்க வேண்டும். நான் பருகிய தேனீர் வயிற்றுக்குள் அங்கும் இங்கும் ஓடிவிட்ட குமட்டலாக வெளியே சீறிக்கொண்டு வந்து தரையில் சிந்தியது. அடூத்த சிலமணி நேரமாவது நான் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்று எனக்கு அது எச்சரிக்கையாகவும் அமைந்தது. கடற் பயணத்தின் இந்தத் தொடக்கக் கட்டத்தில் அந்தப் பயங்கரக் குமட்டல் என்னை அலைத்திருந்தது. இப்போது நான்தான் ஏலாவாளி. ஆடி அசைவதே பாடாக இருந்தது. ஆனால் பாலா, பெரிய கப்பலில் விரைவாகச் சுதாரித்துக் கொண்டார். அதன்பின் .நாமும் வழமையான பராமரிப்பையும், கண்காணிப்பையும் அவருக்கு வழங்க முடிந்தது.
வங்காள விரிகுடா. அந்தப் பெரும் கடற்பரப்பில் காலைக் கதிரவ னின் ஒளிபடரத் தொடங்கியது. வானமும் வெளுத்தது. கடலின் நலமும் துல்லியமாகப் பளிச்சிட்டது. இந்து மாகடலின் ஆழப்பகுதியில் எங்கள். வருகைக்காக ஒரு மாதத்திற்கு மேலாக நங்கூரமிட்டுக் காத்திருந்த வேறொரு கப்பலை நோக்கி நாம் போய்க்கொண்டிருந்தோம். முல்லைத்தவில் இருந்து நாம் புறப்படுவது தாமதமாகி இருந்தது. காலநிலைச் சீரின்மையும், கடற் கொந்தளிப்புமே அதற்குக் காரணம். இந்தக் கப்பலை வந்தடையத் காமதமானதற்கும் அதுவே காரணம். நாம் கப்பலுக்கு அண்மையிலே சென்றோம். அந்தக் கப்பலில் பணிபுரிபவர்கள் எமது வருகைக்காகத் தவிப்போடு காத்திருந்தார்கள். அந்த வீரர்கள் மட்டில் கவலையாகவும் இருந்தது, பெருமையாகவும் இருந்தது. ஏனென்றால், வங்காள விரிகுடாவின் கொந்தளிக்கும் கடலில் ஒரு. மாதத்திற்கு மேலாக, பொறுமையோடு சமாளித்துக் கொண்டிருந்தார்கள். உணவுப் பண்டங்களும், குடிநரும் வெகுவாகக் குறைந்திருந்தன. எம்மை மீட்கும் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் இந்தப் பண்டங்கள் வெகுவாக அருந்தலாகிவிட்டிருந்தன. இன்னும் தாமதித்திருந்தால் உணவும் நீரும் கப்பற் பணியாளருக்கே பிரச்சினையாகிவிட்டிருக்கும். ஆகவே, நாம் போய்க் கப்பலை அடைந்தபோது அவர்களுக்குப் பெரும் நிம்மதி. உலகச் சமுத்திரம் ஒன்றின் நடுவே மிதந்து கொண்டும், அங்குமிங்கும் அடித்துச்செல்லப்பட்டூம், எங்கும் போக முடியாமலும் வதையும் செய்ய முடியாமலும் திடீர் திடீரெனப் புயல் சீறும் அந்தக் காலில் தரித்து நிற்பது விளையாட்டு அல்ல. ஆனாலும் அவர்களுடைய பெரிய கப்பலை நாம் அண்மித்தபோது அவர்கள், வீரர்களுக்கே உரிய ஓர்மத்தோடும், உற்சாகத்தோடும் கையசைத்து எமக்கு முகமன் கூறினார்கள். அந்தப் பரந்த நீர்ப்பரப்பைச் சுற்றிப் பார்வையைப் படரவிட்டேன். எல்லையற்ற இந்தப்பேரண்டத்தில் எந்தவித முக்கியத்துவமும் இல்லாத துரும்புகள் நாம் என்ற ஒடுங்கிய உணர்வே அந்த வேளை இதயத்தில் வியாபித்தது.
எமது கப்பலில் இருந்து இன்னுமொரு சரக்குக் கப்பலில் நாம் ஏற வேண்டும். அருகருகாக அணுகியபோது எதிர்பாராத ஒரு பிரச்சனை ஜோ ன்றியது. அமைதியாக நிற்கமாட்டேன் என்று கடல் பிடிவாதமாக இருந்தது. கடும் கடலடி! எத்திக் கொண்டிருக்கும் இரண்டு கப்பல்களின் பக்கத் தடையணைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதும், மோதிய அதிர்ச்சியில் விலகி வழிவதும், அப்படி விலகும்போது இரண்டுக்கும் நிடையே பென்னம்பெரிய இடைவெளி கிழிவதும், இவையெல்லாம், ஒரு கூப்பலில் இருந்து அடுத்த கப்பலுக்குச் செல்வது முடியவே முடியாது என்று உணர்த்தியது. கப்பலின் தளத்தில் நாம் எல்லோரும் நின்றுகொண்டிருந்தோம். என்ன செய்வது என்ற சிந்தனை! ஜம்பது அடி கீழே, கடலின் பயமும் பயங்கரமும் தெரிந்தன. அதில் இரும்புக் கலங்கள் இரண்டும் முட்டி மோதிக் கொண்டிருந்தன. இரண்டுக்கும் குறுக்காக நடைப் பலகையைத் தொடுத்து அதில் நடப்பது என்பது அசாத்தியம். கப்பல்களின் ஆட்டத்தில் பலகை பொறிந்து விடும். ஒரு கப்பலில் இருந்து அடுத்த கப்பலுக்குக் கம்பான் வடத்தில் கப்பல் வீரர்கள் ஏறியதுபோல எம்மாற் போக முடியாது. பாலா எப்படித் தமது பலத்தையெல்லாம் திரட்டி எகிறிப்பாயப் போகிறாரோ என்ற சிந்தனை வந்ததும், மனம் எதையெதையோ எல்லாம் கற்பனை செய்யத் தொடங்கியது. இரண்டு கப்பல்களுக்கும் இடையே அடித்து ஆர்க்கும் அலைகளில் அவர் விழுவதுபோன்ற பிரமை. அப்படியான சந்தர்ப்பத்தில் அவர் காயமடைய, வேறு பிரச்சனைகள் தோன்றப்போகின்றன என்றும் பிரமை. கப்பல்களின் பக்கத் தடையணைகள் ஒன்றோடொன்று மோதிப், பிரிந்து, கள்ளாடி உருள்வதைப் பார்க்கும் போது, சாகும்வரை பொருதும் இரண்டு கலைமான்களின் மோதல் போலப் பட்டது. இந்தப் பிரச்சனையில் எப்படித் தீர்வு காணப்போகிறோம் என்ற வினா எம்மைத் தாக்கியது. நாம் பாய வேண்டி இருக்கும், ஆனால் எப்போது என்பதே கேள்வி. காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கடலில் சீர் ஏற்பட்டு கப்பல்கள் ஆடாமல் நிற்கும் ஒருநிலை வருமளவும் “வாடி இருக்கத்?” தீர்மானித்தோம். “பாலா அண்ணாவை எறியுங்கோ, நாங்கள் பிடிப்பம்!?” என்று விரித்த கரங்களோடும், கரிசனையோடும் சரக்குக் கப்பலில் நின்ற வீரர்கள் கூறினார்கள். “பாயுங்கோ நாங்கள் ஏந்திறம்!” என்று, உரக்கக் கூறினார்கள். ஆனால் இரண்டு கப்பல்களுக்கும் இடையே உருளும் நீரைப் பார்க்கும்போது, கரணம் தப்பினால் மரணம் என்பது நன்றாகப் புரிந்தது. இவ்வளவு தூரம் வந்த நாம் அவசரப்பட விரும்பவில்லை. கப்பல்களுக்கும், கடலுக்கும் இடையே ஒரு கண அமைதி வரும்வரை காத்திருந்து, அந்தக் கணம் வந்ததும், உதவிப் பலசாலிக் கரங்கள் பல இங்கிருந்து உந்தித்தள்ள, ஓர்மப் பாய்ச்சலோடு, அங்கு நீண்டு காத்திருந்த வீரர்களின் கரங்களில் பாலா பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். அவர்களுக்குப் பெரும் நிம்மதி.
பாலா பத்திரமாக “எல்லையைக் கடந்ததும்?” இரண்டு பக்கத்திலுமுள்ள வீரர்களுக்கு ஏற்பட்ட நிம்மதி வெளிவெளியாகத் தெரிந்தது. இனி, நானும் எம்மோடு வழித்துணை வருபவர்களும் பக்கம் மாறவேண்டியதுதான். கப்பல்கள் மோதின; உரசின; மேலும் கீழும் ஆடின, கீழே உள்ள ஆழம் தெரியாத ஆழியின் தயவிலே கிடந்தன. “வாருங்கோ அன்ரி பாயுங்கோ!””’ என்னால் இயலும் என்ற நம்பிக்கை அவர்களுடைய குரல்களில் தெரிந்தது. உண்மைதான். சரியான தருணம் வந்ததும், காற்றிலே எகிறிப் பாய்ந்து, காத்திருந்த கடற்புலி வீரர்களின் நம்பிக்கையான கரங்களில் போய் விழுந்தேன்.
இந்தப் பெரிய இரும்புக் கலத்திற் போய்ச் சேர்ந்தவுடன் நாம் தங்க வேண்டிய பகுதிக்கு இட்டுச் செல்லப்பட்டோம். கப்பலின் பருமனோடு ஒப்பிடும்போது, கப்பல் ஓட்டிகளின் ஒதுக்கிடம் மிகச் சிறியது. ஆனால் சிறிய பயணம் புரிபவர்களுக்கு இப்படியான ஒதுக்கிடத்தில் வசிப்பது, அப்படியொன்றும் கடினமானதல்ல. ஆனால் மாதக்கணக்கில் தரையையே தொடாமல், இந்தப் புறாக்கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீரர்களை நினைக்க அனுதாபம் பெருகியது. இன்னமும் உற்சாகம் குன்றாமல் அவர்கள் இருப்பது வியப்பாக இருந்தது. சமைப்பது போன்ற ஒரு சாதாரண அலுவல்கூட, கப்பலின் அசைவோடு ஒத்திசைவாக இருக்க வேண்டும். கோரமான அலைஅடிக்கும் வேளையில், ஒரு மலைபோன்ற அலைமேல் கப்பலை நேராக ஏற்றி, அடுத்த நீர்ப்பள்ளத்தில் அது பொத்தென்று விழும்போது அந்த ஆட்டத்தில் சமைக்கவே முடியாமல் போய்விடும். சில தடவைகளில் சமைத்த, சூடான உணவு நாவிலே பட, பலநாட்கள் பிடிப்பதுண்டு என்று கப்பல் வீரர்கள் எனக்கு விளக்கினார்கள். மலைபோன்ற அலைகள் கப்பலின் முன் அணியத்தில் அடித்துத் தெளிக்கும்போது அந்தக் காட்சி எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்ற எண்ணமே உள்ளூர நடுங்க வைத்தது. அப்படியான ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட வேண்டாமே என்று ஆசைப்பட்டேன். கப்பற் தளத்திலே மணித்தியாலக் கணக்கில் சிந்தனை வயப்பட்டு நின்று, கரைகாணாக் கடலின் அந்தமில்லா அதைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதே நீரின் அசாத்திய வலுவும், அதன் குணாம்சமும் என்னை மலைக்க வைத்தன. பறவை மீன் நீர்மீது சுறுக்காகக் கெந்திக் கெந்தி நீரில் அமுங்குவதையும் நட்பான ஓங்கில்கள் எம் கப்பலுக்கு வழிகாட்டிச் செல்வதையும் பார்க்கும்போது, இந்தப் பூமிக் கிரகத்தில் ஒரு பிரத்தியேகமானதும் மிக ரம்மியமானதுமான உயிரின வாழ்க்கை முறை, கடல்வடிவில் நிலவுவதையும் அதில் மனிதன் தற்காலிக யாத்திரீகனாகவும் சிலவேளைகளில் உரிமையின்றித் தலையிட்டுத் தொந்தரவு புரிபவனாகவும் வந்து போவதையும் என்னால் அனுமானிக்க முடிந்தது.
நாட்கள் உருண்டோடின. கப்பலும் உழுதோடியது. கடலைப் பார்த்தபடி நிற்பதிலேயே எனது பொழுது பெரும்பாலும் கழியும். அப்படிச் செய்வது என்னை ஈர்த்தது, மகிழ்வூட்டியது. பாலாவுக்கும் குமட்டல் குணம் நின்றுவிட்டது. கப்பல் ஓட்டிகளுடன் நன்றாக ஓட்டிக்கொண்டார். கப்பல் முதல்வரின் சிற்றுறைச் சீட்டாட்டத்தில் பாலாவும் ஒரு கை. எமது பயணத்தின் இந்தக் கட்டத்தில் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அச்சத்தைத் தரும் மருத்துவச் சிக்கல் எதுவும் எழவில்லை. பயணம் முழுவதிலும் மருத்துவ ஆலோசனை துண்டிக்கப்பட்டதால் தவிப்பு நிலை. இப்படியான நிலையில், கடல் நீரில் ஃபோம் பெட்டித்துண்டங்கள், பிளாஸ்டிக் பைகள், மிதக்கும் போத்தல்கள் - இவற்றைக் கண்டபோது ஆழமான நிம்மதி மூச்சு! அந்தக் கஞ்சல் கிழிஞ்சல்களைப் பார்த்தபோது என்னுடைய அச்சமும், பொறுப்பும் ஒரு முடிவுக்கு வரப்போவதை உணர்ந்தேன். முடிந்த பயணமோ பெரிது! மீதிப் பயணம் சிறிதே!
கடலில் அங்கும் இங்கும் மிதந்துகொண்டிருந்த கஞ்சல்களின் தொகை அதிகரித்து, நிர்மலமான அழகு கெடத் தொடங்க, மனித சமுதாயம் வாழும் தரைக்கு அருகே திரும்பவும் வரத்தொடங்கிவிட்டோம் என்பது புரிந்தது. நுகர்வுப் பொருட்கள் அருந்தலாகவும், தேவை அதிகமாகவும் உள்ளதும், பல ஆண்டுகளாகப் போரினாற் சீரழிக்கப்பட்டதுமான வடக்குக் கிழக்கு இலங்கையில் வாழ்ந்த எனக்கு, அளவுக்கு மிஞ்சிய நுகர்ச்சியினாலும், பொருளாதார வளர்ச்சியினாலும் உருவாகும் புறச்சூழற் பிரச்சினைகள் பற்றிய நேரடி அனுபவம் இருக்கவில்லை. இனி, வடக்கில் நிலவும் வீட்டுப் பொருளாதாரத்தில் பொருள் சிக்கனம் இருந்தது. இயற்கை உற்பத்திப் பொருட்களும் கட்டுப்பாடான அளவு பயன்படுத்தப்பட்டன. ஆகவே, வீணாக்கப்படுதல் அங்கு மிகக் குறைவு. சொல்லப்போனால், எங்கும் பசி. எங்கேனும் பணம் இல்லை. இதனால் மூக்கு. முட்ட உணவு புசிக்க முடியாது. சுரண்டிக் கொட்டும் மீதமும் இயற்கைத் துப்பரவாளரான காகத்திற்கு உணவாகிவிடும். வடக்குக்கான மின் விநியோகம், 1990 இல் போர் மூண்டதிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. ஆகவே, புதிய மின் கருவிகளை வாங்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கவில்லை. ஆகவே பிளாஸ்டிக் கழிவுக் குவியலை ஒழித்துக் கட்டும் பிரச்சினையும் இல்லை. ஏனைய உலகத்தோடு ஆண்டுக் கணக்கில் தொடர்பு துண்டிக்கப்பட்டு, யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும், வடபாகக் காடுகளிலும் வாழ்ந்த பிறகு, இப்பொழுது புலிப் பொருளாதாரம் எனப்படும் வளரும் நாடு ஒன்றின் பிரதேசக் கடல் எல்லைக்கு அருகாக வந்திருந்தோம். அந்தக் கடலில் அதிகம் அதிகமாக இறைந்து மிதந்த கிழிஞ்சல், கஞ்சல்களின் படுமன், அந்த நாட்டின் உளப்பாங்கோடு பின்னிப்பிணைந்த சுகபோக நுகர்வுப் போக்கையே பிரதிபலித்தது. இயற்கை உலகின் வளத்திற்கு இது கேடானது என்ற உணர்வு இப்போக்கில் காணப்படவில்லை.
கடற்பயண இறுதிக் கட்டத்துக்குத் தயாராகக் காத்திருந்தோம். அனைத்துலகக் கடலிலேயே எமது கப்பல் கரித்திருந்தது. நீரில் சலனம் இல்லாமல், கண்ணாடி போல அது பளபளத்தது. இதுவரை எமது பயணம் சுமூகமாகவே இருந்ததால் எமக்கும் ஒரு நிறைவும் மகிழ்ச்சியும். ஆனால், பயணம் இன்னமும் முடியவில்லை. நியாயப்படி பார்த்தால், பயணத்தின் ஆபத்து இனிமேற்தான். சிலநாள் கழித்து எம்மைக் கரைக்குக் கொண்டு போவதற்காக, ஒரு சிறிய இழுவைக்கப்பல் அருகே வந்து ஓட்டியபடி நின்றது. அதில் ஏறி, எமது இறுதித் தளத்துக்குப் புறப்பட்டோம். பல மணிநேரப் பயணம். பாலா படுத்தபடியே பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவர் ஓட்டியருகே படகுக்காரரோடு அமர்ந்து வெளியே பார்த்தபடியே வந்தார். எல்லோரும் விழிப்போடு சுற்றுமுற்றும் பார்த்தபடியே சென்றோம். வெளிநாடு ஒன்றின் கரைக்கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருந்தோ மாதலால் அகப்படக்கூடாது என்பதற்காக, கரைக் காவலரும் கடற்படையினரும் வருகின்றார்களா எனப் பார்த்தபடியே சென்றோம். கரையை நோக்கி நீண்ட நேரம் பயணம் செய்த பின், நாம் ஒரு விரை படகுக்கு மாந்றப்பட்டோம். ஒரு சிறிய இறங்கு துறைக்கு அது எம்மை வேகமாகக் கொண்டு சென்றது. நாம் நள்ளிரவில் கரைக்கு அருகே சென்றபோது, ““வந்று” நேரம், கரைக்குச் செல்ல முடியவில்லை. நாம் அடைய வேண்டிய இடத்திற்குச் சென்ற பின்னரும், காத்திருக்க நேர்ந்ததால், அயர்வே ஏற்பட்டது. நர் அமைதியாக இருந்தது. ஆனால் சூழ்நிலை அமைதியாக இல்லை. சில நூறுயார் தூரத்தில் எமது படகு மிதந்து கொண்டிருந்தது. கரைக் காவலரோ, கடற்படையினரோ இடையில் வந்து விசாரிக்க முற்பட்டால், காட்டூவதற்குச் சட்டமுறையான பத்திரம் எதுவும் எம்மிடம் இல்லை. திடீரென எமது வர்களில் ஒருவர் மெதுவாகச் சரிந்து, கடலுக்குள் இறங்கி, காணாமந் போய்விட்டார். எமது சிறிய படகும் நீரோட்டத்தோடு வழியத் தொடங்கியது. போனவர், ஒரு டிங்கியை வலித்தபடியே, பின்னர் எம் அருகே வந்தார். வளைந்து, நெளிந்து டிங்கியிலேறி, தரை தட்டக்கூடிய கரை பார்த்து, டிங்கியில் தரை நோக்கிச் சென்றோம். நள்ளிரவு தாண்டிச் சிறிது நேரத்தில், முன்பின் அறிமுகம் இல்லாத நிலத்தில் நாம் நின்றோம். ஒரு நான்கு சக்கரவண்டி எம் அருகே வந்து நின்றது. பாதுகாப்பான ஓர் இடத்திற்கு அது எம்மை விரைவாகக் கொண்டு சென்றது.
1.1 பாலசிங்கத்தை சந்தித்தேன்
1978 இல், இலங்கைத் தீவைச்சேர்ந்த அன்ரன் பாலசிங்கம் என்ற தமிழர் ஒருவரை நான் திருமணம் செய்தபோதுதான் எல்லாமே ஆரம்பமாகியது. அந்த இணைப்பின்போது, ஒரு இனத்தின் கூட்டுப் பிரக்ஞையையும் அதன் வரலாற்றையும் மணந்து கொண்டேன். தனது இனத்தின் பலங்களையும், பலவீனங்களையும், பெருமைகளையும் குறைபாடுகளையும் தன்னுள் அடக்கிய அந்தத் தமிழனின் ஆன்மாவைப் புணர்ந்து கொண்டேன். உலகின் மிகப்பழைமை வாய்ந்த கீழைத்தேய நாகரீகங்களில் ஒன்றினது சமூகத்திலும், கலாச்சாரத்திலும் வாழ்வதற்கு அந்த வரலாறு என்னை ஈர்த்தது. எனது கணவருடைய பண்டைய வரலாற்றுத் தோற்றுவாய் நிலமான இந்திய தென்திராவிட தமிழ் நாட்டுக்குக் கவர்ந்து இழுக்கப்பட்டேன். தமிழீழம் எனப்படும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழ் மக்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணம் என்ற எனது கணவரின் பிறந்த மண்ணில் பல ஆண்டுகள் வாழ்ந்தேன். கூர்மதியோடு நடத்தப்பட்ட இனப்படுகொலை முயற்சியை எதிர்த்து, உயிர்த்துவப் போராட்டத்தை நடத்தும் ஒரு மக்கள் இனத்தின் துன்ப துயரங்களில், மகிழ்ச்சியில், கொண்டாட்டங்களில் நானும் மூழ்கி எழுந்தேன். இதன் விளைவாக எனது வாழ்விலே கடந்த இருபத்திமூன்று ஆண்டுகளாக, நினைத்துப் பார்க்கமுடியாத புதுவகை அனுபவங்களைப் பெற்றேன். முதலில் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். அரச ஒடுக்குமுறையினதும், அரசின் கருவறுப்பு முயற்சியினதும் தாக்குதலின் பயங்கரத்தை நேரடியாக அனுபவித்துக் கொண்டிருந்த மக்களோடு கூடி வாழ்ந்து, அவற்றில் பங்கெடுத்த ஒரே வெளிநாட்டவர் நானேதான். மன ஓர்மத்தை உடைக்க வல்ல அடக்குமுறைகளை வியக்கத்தகு முறையில், தனித்துவ வழிகளால் எதிர்கொண்டு, அவற்றைத் தாங்கி முறியடித்த இம் மக்களது வீரத்தின் பல சிறப்பு வெளிப்பாடுகளையும் நேர்நேராகத் தரிசித்த ஒரே வெளிநாட்டவரும் நானேதான். இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்களிடையே நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குப் பெருமை தருவது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அருகேயிருந்து நேரடியாகப் பார்க்கவும், அந்த அமைப்பின் வீரர்கள் புரியும் மகத்தான வரலாற்றுப் போராட்டத்துக்கும் வியக்கத்தகு தியாகத்துக்கும் நேரடிச் சாட்சி பகரவும் எனக்குக் கிடைத்த வாய்ப்பு. இரண்டாவது, எனக்கு முக்கியமானது. இந்த விடுதலை அமைப்பும், அந்த இன மக்களும் என்னை நம்பினார்கள். எனக்கு மரியாதை செலுத்தினார்கள். ஒரு வெளி ஆளுக்கு தங்கள் உள் ஆத்மாவையே திறந்து காட்டினார்கள். குமிழ் மக்களுடனான எனது அனுபவம் எவ்வளவு ஆழமானது என்பதை ஒரு தமிழ்ச் சிநேகிதி, வன்னி விசுவமடுவில், தனது தோட்டத்திற்குள் நின்ற செழுமையான மாமரத்தின் குளிர்மையான நிழலில் உரையாடிக் கொண்டிருந்தபோது என்னை “வெள்ளைக்காரத் தமிழ்ப்பெண்” என்று எடுத்த எடுப்பில் கூறியதி லிருந்து உணரலாம்.
இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பாலசிங்கத்தை சந்தித்து நேசிக்கத் தொடங்கியபோது, எனது வாழ்க்கை இத்தகைய திருப்பங்களைச் சந்திக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. எனது சமூகக் கலாச்சார சூழலில் இருந்து முற்றிலும் முரண்பாடான சூழலைச்சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்கின்றேன் என்ற அந்த . ஒன்றே, எமது திருமணம் மறக்கமுடியாதபடி ஒரு வித்தியாசமான திருமணமாக அமைந்தது. அதெப்படி இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களில் இருந்து வரும் இரண்டு பேர், திருமணம் என்ற பொதுத்தளத்தில் சந்திக்கக் கூடுமாக இருக்கின்றது? அது வெறும் உடற் கவர்ச்சியாக இருந்திருக்க முடியாது. கவர்ச்சியேதான் என்றால் எமது அந்த உறவு அவ்வளவு ஆழமாகவும், நெஞ்சார்ந்தமாகவும் இருந்திருக்க முடியாது. அப்படியென்றால் எம்மைப் பிணைத்தது எது? இத்தகைய இரு அசாதாரண பாதையில் என்னை அவரோடு இட்டுச் சென்றது எது?
பல ஆண்டுகளுக்கு முன்னதாக நான் மணம் புரிந்த பாலசிங்கம் இப்போதும் சாராம்சத்தில் அதே மனிதராகவே இருக்கின்றார். ஆனால் காலமும் சூழலும் அவரை இன்றைய நிலையிலுள்ள சிந்தனையாளராகவும், ஆளுமையாளராகவும் அஆக்கியிருக்கிறது. கால்நூற்றாண்டுக்கு முன் நான் மணம்புரிந்த மனிதரை ஒரு ஆன்ம்கவாதி என்றுதான் கூறுவேன். ஆன்மீகவாதி என்று கூறும்போது, நிறுவனமாகிவிட்ட சமயங்களையும், நிலைபெற்ற சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடைப்பிடிப்பவராக நான் அவரைக் குறிப்பிடவி ல்லை. மாறாக நேர்மை, நற்சீலம், மனிதநேயம் ஆகியவை பொதிந்த மனிதராக அவர் இருந்தார் என்றே கூறுவேன்.
நாம் முதலில் சந்தித்தபோது பாலாவுக்கு வயது முப்பத்தியாறு. அப்போது கழைத்தேய தத்துவ சிந்தனைகளை, குறிப்பாக, இந்திய வேதாந்த தத்துவங்களை அவர் நிறையவே படித்திருந்தார். புத்தரின் போதனைகளில் அவருக்குத் தனியான நாட்டம் இருந்தது. உண்மையில் இளவயதிலேயே பெளத்த தத்துவம் அவரை வெகுவாகக் கவர்ந்ததால் இலங்கையில் பெளத்த கல்விமான்களைத் கரிசித்து விளக்கங்களையும், தத்துவத்தெளிவையும் பெற்றிருக்கிறார். பொது மேடைகளில் பெளத்த உரைகளைக் கூட நிகழ்த்தியிருக்கிறார். உண்மையான பெளத்த தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் சிறீலங்காவில் நிலவிய பெளத்தத்தில் அவர் நம்பிக்கை இழந்தார். இனவாத மற்றும் குறுகிய தேசியவாதக் கோட்பாடுகளால் அது களங்கப்பட்டூவிட்டதாக அவர் கருதினார். ஆயினும் தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட பேரிழப்பே அவருக்குள் அளப்பரிய சிந்தனா சோதனையை ஏற்படுத்தியது. தம்மையும், தாம் தீவிரமாகக் கடைப்பிடித்த தத்துவங்களையும் தாமே கமக்குள் கேள்விக்குரியவை: ஆக்கினார். அவருடைய முதல் மனைவி கடும் சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு உயிரைத் தக்க வைக்க வெளி இணைப்புக் குருதிச் சுத்திகரிப்பு இயந்திரத்தில் தங்கியிருக்க வேண்டிய அறுதிநிலை எற்பட்டபோது, தர்மம் பற்றியும், அறுநெறிபற்றியும் பாலா கொண்டிருந்த நிலைப்பாடு சோதனைக்கு உள்ளாகியது. கடும் நோயினால் படிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த தமது அழகிய இளம் மனைவியைக் கண்காணித்துப் பராமரிக்கும்போது மனோரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அவருக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் மனிதம் பற்றியும், மானுட உலகம்பற்றியும் அவருடைய உள்ளார்ந்த தத்துவ சுயதேடலை மேலும் ஆழமாக்கியது. உடல் நோயின் விளைவாக மானுட சரீரத்தில் ஏற்படும் சீரழிவும் மாற்றமும், அத்தோடு நித்தமும் மரணத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையும் மானுட இருப்பின் அர்த்தம் பற்றி அவரை ஆழமாகச் சிந்திக்க வைத்தன. தனித்துவம் வாய்ந்த அனுபவங்களையும் அவர் பெற்றார். அவை தந்த சிந்தனைத் தெளிவு அவரை ஒரு மதியூகியாக்கின. யதார்த்த உலகிலே அவர் ஒரு பகுத்தறிவுவாதியாகக் காலூன்றவும் வழிகோலின.
ஒருபுறம் கடுமையான பொருளாதாரப் பிரச்சினை. மறுபுறம் மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் அவருடைய துணைவியின் மன உளைச்சலுக்கும், உடல்பராமரிப்புத் தேவைக்கும், ஈடுகொடுக்கும் பொறுப்பு. இவற்றுடன் போராடிய இந்தக் கட்டம், பாலாவின் வாழ்வில் ஒரு தார்மீகச் சவாலாக அமைந்த காலம்; அவருடைய ஆளுமையின் திண்மையே சோதனைக்கு உள்ளான காலம் இது. அவருடைய வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தில் அவர் முகம்கொடுத்த சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் அவருடையை சகிப்புத் வ! எல்லைக்கு, அவரை இழுத்துச் சென்றிருந்தன. கர்மம், நல்லறம் ஆகியவை, வெறும் நூல்களிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் வார்த்தைகள் அல்ல. அன்றி வலிந்து ஊட்டப்படுபவனவும் அல்ல. மாறாக, அவை எமது உயிர்வாழ்வின் மூலாதாரமாக எழுபவை. எண்ணமும், செயலும் ஒத்திசைவு கண்ட திறனாற்றல் அவை என்பதை அவர் பட்டறிந்து, உணர்ந்து தேறினார். அவருடைய மனைவி, ஐந்து ஆண்டு காலம் உயிரைத் தக்க வைக்கும் வெளியிணைக் குருதிச் சுத்திகரிப்பு இயந்திரத்தில், கூடுதலான காலம் வீட்டிலேயே அழுந்திய பின், காலமானார். தாங்கொணா மன நெருக்குவாரத்திற்கு பாலா உள்ளான இந்தக் காலகட்டத்திலேதான், தமது ஆயுட் கண்டமும் இதுவே என்ற கொடுமை அவர் முகத்தில் உறைத்தது. நீரிழிவு நோய் பாலாவுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், சுய தேடல்களின் விளைவாகவும், உள்ளார்ந்த புலன்களின் கூர்மைப்படுத்தப்படுத்தப்பட்ட ஒரு பிரதிபலிப்பாகவும் முகிழ்ந்து, புடமிட்ட ஒரு புதுமைப் பிறவியாக அவர் தேறினார். இதன் விளைவாக ஆன்மீகர் என்று வர்ணிக்கக்கூடியவராக அவர் மாறினார். இத்தகைய ஓர் ஆன்மீகரையே எனது. துணைவராகப் பெற வேண்டும் என்ற தேடலில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும் நான் சந்தித்த அந்த மனிதரை, என் கணவராகிவிட்ட அந்த மனிதரை வெறும் வார்த்தைக- ளால் வர்ணிக்க விரும்பும் நான் அவரை ஒரு “உண்மையான மனிதப் பிறவி?” என்பேன். நான் மணக்க இருப்பவரிடம் என்னென்ன குணாம்சங்கள் இருக்க வேண்டும் என்று. காத்திருந்தேனோ, அவை எல்லாம் பாலாவிடம் பொதிந்து இருந்தன. முதிர்ச்சி; விவேகம்; மனோ பலம்; இனி, இவற்றிலும் மோலாய் பரிவு. விவேகம் எனும் போது ஒரு புத்திஜீவியை நான் எதிர்பார்க்கவில்லை. மனோபலம் எனும் போது ஒரு பயில்வானாகவோ, சண்டியனாகவோ இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்த சீலங்களோடு உள்ள அந்த அசாதாரண மனிதரைச் சந்திக்க நம்பிக்கையோடு காத்திருந்தேன். அவர் அடக்கமுள்ளவராக இருக்கவேண்டும்; ஆனால் கோழையாக இருக்கக் கூடாது. சாதாரணமானவராக இருக்க வேண்டும்; ஆனால் அவரில் ஆழம் இருக்க வேண்டும். உறுதியான கொள்கைப் பிடிப்பு இருக்க வேண்டும்; ஆனால் மமதை இருக்கக்கூடாது. தயாள குணமும், பெருமையும் இருக்க வேண்டும்; ஆனால் அகங்காரம் கூடாது. இனி சுயநலவாதியாகவோ, முன்யோசனையற்றவராகவோ இருக்கக்கூடாது. இந்தப் புருஷ லட்சணங்கள் பொருந்தியவரைத்தான் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். அவரை முதலில் சந்தித்த ஓரிரு வாரங்களிலேயே பாலாதான் என்னுடையவர் என்பதைப் புரிந்து கொண்டேன். சாதாரண அன்றாட முறைகள் தொடர்பாக, இனி பணம் சேமிப்பது தொடர்பாக, சாதாரண ஆட்கள் பொதுவாகப் புரியும் காரியங்களில் அவர் அக்கறை இல்லாமல் இருந்ததற்கு - அவருடைய ஆன்மீகப் பண்புகளே காரணமாக இருந்திருக்க வேண்டும். பொருளிய பாதுகாப்பு மட்டில் அவர் பற்று இல்லாமல் இருந்ததால், கையில் காசு இல்லாக் கையறு நிலைக்கு, இயல்பாகவே நாம் தள்ளப்படவும் நேர்ந்தது. ஆனால் எம்மிடமிருந்த சொந்பப் பணத்தோடு பாலா எப்படியோ சமாளித்தார். இல்லை! நிலைமையைச் சமாளித்தோம் எனலாம். அன்றாடச் சமாளிப்பேதான். ஆனால் ஒருவரை ஒருவர் நேசித்த நிலையில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தோம்.
வாழ்வு, சத்தியம் ஆகியவை தமது மனதிலே தோற்றுவித்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியில், மேற்குலக தத்துவ மரபுகள் பொதிந்த பெருந்தொகை நூல்களை பாலா படித்தார். அவருடைய ஆன்மீக ஈடுபாட்டைச் சமநிலைப்படுத்திய ஒரு முக்கிய செல்வாக்காக மாக்சியமும், நவமாக்சியமும் அமைந்தன. பாலா நன்கு கற்றுத் தேர்ந்த துறைகளே அவை. ஆனால், இவை தொடர்பாக பிரத்தியேகக் கருத்துகளையும், விமர்சனங்களையும் அவர் கொண்டிருந்தார். தந்தக் கோபுர அறிவுஜீவிகளின் தத்துவங்களை அவர் நிராகரித்தார். அவ்வாறே, புரிந்துகொள்ள முடியாத பூடகமான கருத்துருவங்களையும் மனித ஆற்றல்களால் சாதிக்க இயலாத விடயங்கள் பற்றிக் கூறும் சிந்தனை வடிவங்களையும் அவர் நிராகரித்தார். மாறாக தத்துவம் உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற மாக்சிய தத்துவ சிந்தனைக் கீற்று, அவருக்குப் பிடித்திருந்தது.
மானுட சமுதாயத்தை ஓர் உயர் நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறும் இந்த எதிரும், புதிருமான தத்துவ எண்ணக் கருக்களின் இடைப்பட்ட ஒரு நுண்ணிய பாதையை பாலா கடைப்பிடித்தார் என்றே கூறுவேன். ஒரு புறம் மானுட சமுதாயத்தின் அவசிய தேவையான தனியாளின் அகநிலை மாற்றத்தை முதன்மைப்படுத்தும் கீழைத்தேய தத்துவ ஞானம். மறுபுறம் சோசலிச சிந்தனை; கூட்டுமுயற்சி மூலம் அரசியற் செயற்பாட்டை இது வலியுறுத்துவது, - மனித வாழ்க்கையில் உண்மையான நிலைமாற்றத்திற்கு வழிசமைத்துக் கொடுக்கும் மூலபலத்தைக் கொண்டது இது. புரட்சிகர அரசியலில் நாம் ஈடுபடுவதற்கு முந்திய ஓர் காலகட்டத்தில், மானுட மேம்பாட்டை வலியறுத்தும் அகநிலை, புறநிலை சார்ந்த தத்துவ தரிசனங்களைப் புணர்த்திப் பார்க்க பாலா முயன்றார். இதன் வெளிப்பாடே அவருடைய கலாநிதி ஆய்வு முயற்சி. இதில் மாக்சின் சமூக தத்துவத்தையும் சிக்மண்ட் பிராய்டின் உளவியல் தரிசனத்தையும் இணைத்து இழைக்க முயன்றார். ஆனால் அவருடைய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவைகள் அவருடைய ஆய்விலும் கற்பித்தலிலும் அடிக்கடி தலையிட்டுக் கொண்டிருந்தன. அந்தத் தருணத்திலேயே, ஒன்றில் அறிவியல் ஆய்வு வாழ்க்கையை அல்லது புரட்சிப்போக்கு அரசியலை அவர் தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமது மக்களின் போராட்டம் நியாயமானது என்றும் அதற்கு ஊழியம் புரிவதே தர்மம் என்றும் அவர் கருதியதால், புரட்சிப் போக்கு அரசியலையே அவர் தேர்ந்தெடுத்தார்.
முற்போக்கும், முதிர்ச்சியும் பொதிந்த இத்தகையை ஆளுமையாளரையே நான் நேசித்தேன். என்னிடமிருந்த முதிர்சசியின்மை, முழுமையின்மை ஆகியவற்றைக் குறை நிரப்பவும், பாலாவின் பக்குவம் எனக்கு உதவியது. பின்னோக்கிப் பார்க்கும்போது இப்போது ஒன்றைக் காண்கின்றேன். எனது நுண்ணிய உள் உணர்வுகளையும், மனோ நிலையையும் பொருத்தமான வார்த்தைகளில் வடிக்க பாலா உதவினார் என்பேன். அவருடைய ஆழ்ந்த அறிவும், நேரடி அனுபவமும், உளப் பகுப்பாய்வுத் திறனறிவும் எனக்குள்ளே தடைகளால் அமுக்கப்பட்டு, வெளிப்படாதிருந்த உணர்வுகளைச் சீண்டி, அறிவு வடிவம் பெற உதவின. காலப்போக்கில், எனது வாழ்வில் முதற்தட வையாக, எனக்குள்ளே கரைந்து உறைந்திருந்த ஒரு இருண்ட பக்கத்துக்கு வெளிச்சம்போட்டூுக் காட்டவும் சமூக வாழ்வில் முழு ஈடுபாட்டோடு, ஆழமாக ஈடுபடவும் என்னால் இயலுமாயிற்று. மொழியை நுட்பமாக வெளிப்படுத்தும் ஆற்றலையும் பெற்றேன். இதனால் எனது எழுத்து, எனது உரையாடல், எனது உறவாடும் திறன் ஆகியவற்றின் பரி- மாணங்களை விரிவுபடுத்த முடிந்தது. இதன் காரணமாக பாலாவுடன் எனக்கு ஏற்பட்ட உறவு மேலும் ஆழம் அடைந்தது. எனக்குள் . மகிழ்சசியையும், திருப்தியையும் ஏற்படுத்தியது. . அவர் அருகே இருக்க வேண்டும் என்ற ஒன்றே தேவைபோல இருந்தது. முன்பெல்லாம் அமைதி யற்ற, திருப்தியற்ந ஒருவராக இருந்தேன். முன்பொருகாலம், இந்த யதார்த்த உலகின் பண்புகளான . பண ஆசை, பொருள் ஆசை ஆகியவற்றில் ஊறிப்போயிருந்தேன். இப்போது இன்னொரு மனிதப் பிறவியுடன்:- நெருக்கமாக நடித்த உறவு முதன்மை பெறத்தொடங்கிய போது, அவையெல்லாம் மங்கத் தொடங்கின.
எங்கள் திருமணம் 1978 செப்ரெம்பர் 1ம் திகதி இடம்பெற்றது. எளிமையான சிக்கல் இல்லாத ஜந்து நிமிடச் சடங்கு. தெற்கு இலண்டன் பிறிக்ஸ்டன் நகர திருமணப் பதிவாளர் பணிமனையில், அரச அதிகாரி ஒருவர் தலைமையில் நடந்த சடங்கு. இந்தச் சமூகக் கடப்பாடு கூட் எண்ணியிருந்ததை விட ஒரு வாரம் பிந்தியே நடந்தது. திருமணம் செய்யத் தீர்மானித்து, மறுநாளே சம்பிரதாயங்களை. நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தபோது, இருபத்திநான்கு. மணிநேர கால அவகாசத்திற்கென குறித்த பணம் எம்மிடமில்லை. ஆனபடியால் செய்யக்கூடிய சிறந்த வழி, ஒரு வார அறிவித்தல் கொடுத்து, காத்திருப்பதுதான்.
நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தவிர, வேறு எவருக்கும் நாம் எமது திருமணம் பற்றித் தெரிவிக்கவில்லை. என்னைப் பொறுத்த வரையில் திருமணம் என்பது நம் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தம். எப்படியாயினும் இரகசியம் எதுவும் நீண்டகாலம் தாக்குப். பிடிக்காத ஒரு சமூகத்தில், விஷயம் வெளியே கசிய மாலையிலேயே கூட்டம் சேர்ந்தது. உறைப்பான ஆட்டிறைச்சிக் கறியோடு. கல்யாணச் சாப்பாடு. விஸ்கியும் தண்ணீராக ஓடியது. . ஆட்டமும் குதிபோட்டது. என்னுடைய கல்யாண ஆடை, ஒரு மண்ணிற கொட்றோய் பாவாடை, வண்ணச் சட்டை. சடங்குக்கு இரண்டு மணி . முன்னதாக ஓடிப்போய் வாங்கியவை. எப்படியோ இந்தத் திருமணத்தில் எனது ஆன்ம பங்காளனுடன் இணைந்து கொள்ள நான் கொடுத்து வைத்தவள் என்ற திருப்தி. எமது உறவில் ஏற்படுத்திய கவிர்க்கமுடியாத உரசல்களையும், இந்த உறவுதான் சுமூகப்படூத்தியிருக்க வேண்டும்.
பாலசிங்கத்தைத் திருமணம்செய்வது என்பது ஒன்று. ஒரு புரட்சிப் போராட்டத்தில் சம்பந்தப்படூுவது என்பது வேறொன்று. திருமணத்தின் பின் எனது உள்நோக்கம் வேறொன்றாக இருந்திருந்தால், பாலாவைத் திசை திருப்பி, அவரை வேறொரு பக்கம் நான் கவர்ந்து சென்றிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. அரசியற் பாதையையும், தமிழ் மக்களின் போராட்ட ஈடுபாட்டையும் நான் தேர்ந்தெடூுத்ததன் காரணம் என்ன? எமது உறவின் தொடக்க நிலையில், காத்திரமான ஓர் உலகை உறுதிப்படூுத்துவதில் அல்லது அதில் தளம்பாமல் இருப்பதில் பாலா உதவினார் என்பது உண்மையே. ஆனால் (பிசிறல் இல்லாமல் நிரந்தரமாகக் கருத்துகளைப் பொறிக்கக்கூடிய வெறும் எழுது பலகையாக) ஆணி அடிக்கக்கூடிய வெறும் பசுமரமாக நான் இருந்தேன் என்பதை என்றுமே ஓப்புக் கொள்ளமாட்டேன்.
அவ்வாறேதான் இலண்டனிலிருந்து இந்தியாவுக்கோ, சிறீலங்காவுக்கோ எனக்குப் புரியாத சூழ்நிலையில் நான் தாவிக் குதிக்கவும் இல்லை. காதலனது யாழின் நரம்புகளிலிருந்து சுரக்கும் இசைக்கு நடனமாடும் மடமாதாக நடக்கவுமில்லை. எடுப்பார் கைப்பிள்ளையாகவோ, இங்கும் அங்கும் அலையும் சிந்தை உடையவளாகவோ இருக்கவுமில்லை. தமிழ் மக்களின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் எனது ஈடுபாடு என்பது ஒரு சிந்தனா வளர்ச்சியாகும்; உணர்ச்சி. விருத்தியாகும்; கருத்து, சிந்தனை ஆகியவற்றின் படிமாற்றமாகும். சுட்டிப்பாகக் கூறினால் ஒரு தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சிப் போக்கு எனலாம். அவுஸ்திரேலியக் கரைகளில் எனது பாதுகாப்பான வாழ்க்கைக் கூண்டை விட்டு, விரிந்த உலகமான இங்கிலாந்துக்கு உள்ளும், ஐரோப்பாவுக்கு உள்ளும் நான் நுழைந்த போது எனது ஆளுமையும் நிச்சயமாக முகிழ்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். அல்லது என்னைப்பொறுத்த வரையில் எனது குறுகிய மனப்பான்மைக் கவசம் தகர்க்கப்படத் தொடங்கியபோது அது நேர்ந்திருக்க வேண்டும். இங்கிலாந்துக்கே உரித்தான விசேட பண்பாக அனைத்துலக மானுட சமூகங்கள் அங்கு ஒன்றுகூடி வாழ்கின்றன. இந்த அகில மனித வர்க்கக் கலவையுடன். ஊடாடியபோது, சமுகமயமாக்கலினால் நான் பெற்ற எனது சுயமே சவாலுக்கு ஆளாகியது. புதிய பார்வைகள், புதிய சிந்தனைகள், புதிய வாழ்க்கை முறைகள் என்னை ஈர்த்தன. இறுதியில் உலகம் பற்றிய எனது பார்வையும் சிந்தனையும் அடிப்படையாக மாற்றம் கண்டன. இதற்கு எனது கணவரும் வடிகால் அமைத்தார். மரபுத் தகர்ப்பில் நங்கூர மனவுறுதியை அவர் தந்தார். நான் சிந்திக்கவோ, எதிர்பார்க்கவோ முடியாத அளவுக்கு, எனது வாழ்வைச் செழுமைப்படுத்திச் செல்லக்கூடிய வகையில் தளைகள் இல்லாத ஒரு உணர்ச்சிப் பாதுகாப்பை அவர் தந்தார்.
1.2 அவுஸ்திரேலியா வில் எனது மூலவேர்கள்
1950ம் ஆண்டு, ஜனவரி 30, இரவு. அவுஸ்திரேலிய வரகல் நகரத்தின் மருத்துவமனை. எனது அன்னை, தான் பெற்றெடுத்த தனது மூத்த பெண் குழந்தையை அங்கே தொட்டிலில் இட்டு ஒரு தாயின் கனிவோடு என்னைக் குனிந்து பார்த்தார். . நான் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அமைதியான நல்வாழ்க்கை வாழவேண்டும் என்றே அந்த நேரம் நெஞ்சார அவர் விரும்பியிருப்பார். நான் ஒரு சின்னஞ் சிறு மலரை நினைவூட்டுவதாக என் அன்னை கூறுவார். தனது சின்னஞ்சிறிய மலர் இவ்வளவு அரிய அனுபவம் நிறைந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் என்று அவர் அன்று நினைத்தே இருக்கமாட்டார். எனது தந்தைகூட, தனது மகள், ஒரு முற்றிலும் வித்தியாசமான வாழ்வைத் தேர்ந்தெடூுப்பாள் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்.
விக்ரோறியா மாநிலத்தின் லத்ரோப் பள்ளத்தாக்கின் நுழைவாயிலில் மிக அழகிய மலைக் குன்றுகளால் சூழப்பட்டு ஒய்யாரமாக அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமே வரகல். 50 ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் திருமணம் புரிந்து கொண்ட தருணத்தில், என் தந்தைக்கு ரெயில்வேயில் வேலை கிடைத்தது. ஆகவே விக்ரோறியா மாநிலத் தங்க வயல் நகரமான பெண்டிகோவில் இருந்து அவர்கள் வரகலுக்கு குடிபெயர்ந்தார்கள். என்னை விட வேறு மூன்று பிள்ளைகளைப் பெற்றார்கள். அண்ணா பிறென்ற்; தம்பி டேவிட்; தங்கை லின்லி.
இரண்டாவது உலகப் போரை அடுத்து வந்த போர் மீட்சிப் பொருளாதாரம் நாட்டில் நடைமுறையில் இருந்த காலத்திலேயே எனது பெற்றோர் திருமணம் செய்திருந்தார்கள். அச் சூழலில் எனது தந்தையின் வருவாயோடு, நான்கு பிள்ளைகளை வளர்ப்பதிலும், வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பதிலும், திருமணமான புதிதில் எனது பெற்றோர் - அம்மா பெற்றி புளோரன்ஸ், அப்பா அல்பேட் புரூஸ் வில்பி - இரண்டு பேருமே சில ஆண்டுகள் அவதிப்பட்டார்கள். அப்பாவுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையே சம்பளம். அதில் வளர்ந்து கொண்டிருக்கும் நான்கு பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதும் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுப்பதும் என் பெற்றோர்க்கு எளிதாக இருக்கவில்லை. ஆனாலும் விரும்பியது கிடைக்காமல் எப்போதாவது நான் இருந்ததாக எனக்கு நினைவில்லை. வெளி உதவி இல்லாமலே தங்களது பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர் வைராக்கியம் என் பெற்றோர் இருவரிடமும் இருந்தது. ஆகவே தங்கள் பொறுப்பைப் பூர்த்தி செய்ய அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். வீட்டூப் பொருளாதாரச் சுதந்திரம் ஒரு குடும்பத்தின் அணிகலன் என்று கருதப்பட்டது. இதற்காகத் தமது அறுபது வயதில் ஓய்வு பெறும்வரை எனது தந்தை நாள்தோறும் கடுமையாக உழைத்தார். ஒரு புறம் அப்பா உழைத்து, வருவாயைக் கிரமமாகக் கொண்டு வ, மறுபுறம் அம்மா வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார்; சிக்கனமாகச் செலவு செய்து, கடன் இல்லாமலும் உணவுத் தட்டுப்பாடு இல்லாமலும் பார்த்துக் கொண்டார்… பின்னர், பிள்ளைகள் வளர்ந்து பள்ளி செல்லத் தொடங்கிய பின்னர் தான், அம்மா நகரத்துக் கடை ஒன்றில் உதவியாளராகச் சேர்ந்து, குடும்ப வருமானத்தை அதிகரித்தார்.
தூம்பத்திய வாழ்க்கையிலும் சரி, பிள்ளைகளுக்கு நற்பண்புகளை ஊட்டூவதிலும் சரி, எனது பெற்றோரிடையே பொது இணக்கம் நிலவியது. அதே சமயம், இரண்டு பேருக்கும் கனித் தனிப் பண்புகளும் இலட்சியங்களும் கூட இருந்தன. அப்பா. ரெயில்வே ஊழியராகவும். உறுதியான தொழிற்சங்க வாதியாகவும் இருந்ததால் அம்மாவைவிட அரசியல் ஈடுபாடு உடையவராக இருந்தார். ஒடுக்கப்பட்டவர் மட்டில் அப்பாவுக்கு ஆழ்ந்த அனுதாபம் இருந்தது. . தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக அவர் கொண்டிருந்த உறுதியான ஈடுபாடு அவருடைய தொழிற்கட்சி அரசியலில் பிரதிபலித்தது. அப்பா அரசியலின் பக்கம் சாய, அம்மாவின் ஈடூபாடு சமூகம் மற்றும் வாழ்வின் கத்துவாம்சங்கள் பற்றி இருந்தது. வாழ்வின் அர்த்தத்தையும் மானுட உலகையும் அறிந்து கொள்வதிலும் அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதிலும் அம்மா ஆழ்ந்த அக்கறை காட்டினார். தொழிலாளர் நலன்களிலும் அவர்களுடைய அரசியல் எதிர்காலத்திலும் அப்பா தம்மை அர்ப்பணிக்க, தனி மனித நற்பண்புகள், சீலங்கள், வாழ்க்கையின் | முழுமை ஆகியவற்றில் அம்மா ஆழ்ந்தார். இந்த இரண்டு வெவ்வேறு ஆளுமைகளின் சங்கமமே என் மனதில் பதிந்து, நான் இன்று ஈடுபட்டிருக்கும் சூழலுக்கும் திசைக்கும் என்னை ஓஒழுக்காற்றுப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் குடும்பத்தில் ஒரு பிள்ளை மட்டும் ஏனைய பிள்ளைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை நெறியைக் . கடைப்பிடிப்பது என்பதை விளங்குவது கூடக் கடினமானதே. அநேகமாக, . எனது பெற்றோரின் வெவ்வேறு திசையிலான ஈடுபாடுகளின் புணர்ச்சியே எனது இன்றையை ஆளுமையின் உருவாக்கம், வளர்ச்சி ஆகியவற்றின் தளமாக அமைந்திருக்க வேண்டும். ஏனைய எனது குடும்ப | உறுப்பினர்களின் வாழ்க்கையை விட, எனது வாழ்க்கைப் பாதை, முற்றிலும் மாறுபட்டதாகவும் பிரச்சனைக்கு உரியதாகவும் அமைந்த போதிலும், அதை ஆதரிப்பதற்கு எனது பெற்றோர் என்றுமே தயங்கிய- தில்லை. அத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்தில் எனது ஈடுபாட்டை அனுதாபத்தோடு அவர்கள் புரிந்துகொண்டதை வியத்தகு வகையில் உணர்த்தினார்கள்.
எனது தொடக்கப் பள்ளி, உள்ளூரிலேயே. பிரமிப்புத் தரும் எதையும் நான் அங்கு சாதிக்கவில்லை. அதன் பின் நகரத்து இரண்டாம் நிகலைப் பள்ளி. அங்கு ஓ லெவல் - சாதாரண தரம் வரை படிப்பு. மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அவுஸ்திரேலியாவில் 60 களிலே சாமானியர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்புக் கிடைப்பதில்லை. பல்கலைக்கழகக் கல்வி பெறுவதானால், ஒன்றில் பணக்காரராக இருக்க வேண்டும் அல்லது புலமைப் பரிசில் பெறத்தக்க திறமைசாலிகளாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதிலும் நான் செ்த்தியில்லை (?). ஆனால் சிறுவயதில் இருந்தே நான் இலட்சியக் கனவு கண்டுகொண்டிருந்த துறை ஒன்றுக்குள் சென்று, தாகம் தணிக்கத் தீர்மானித்தேன். மருத்துவத் தாதித் தொழிலில் சேர்ந்து கொண்டேன். பின்னோக்கிப் பார்க்கும்போது, அதுவும் என்னை நானே நன்றாகப் புரிந்து கொள்ளக் கிடைத்த பல ஆண்டுகால அனுபவத்தோடு ஒன்றென்பதை இப்போது உணர்கின்றேன். மருத்துவத் தாதித் தொழில், என் வாழ்வு முழுவதும் என்னில் உருவாகிக் கொண்டிருந்த என் ஆளுமையின் இரண்டு கூறுகளைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. எந்த வடிவிலே துயரத்தைக் கண்டாலும் அதன் மட்டில் அனுதாபம் கொள்வதும் ஓடிச் சென்று என்னை அதனோடு இணைத்துக் கொள்வதும், ஒரு கூறு. . மனிதாபிமான உணர்வுகள் மாறாமலேயே தொடர்ந்தும் வாழ வேண்டும் என்ற அவாவுடன் இருப்பது இரண்டாவது கூறு. மருத்துவத் தாதித் தொழிலில் ஈடுபட்டபோது, ஒரு கரிசனையான தொழில் பார்க்க வேண்டும் என்ற எனது வேணவாவும் நிறைவேறியது. அதைவிட முக்கியம், சிறிய நகர வாழ்க்கையிலிருந்து ஒரு பெரிய நகரத்துக்குள், ஒரு புதிய உலகத்துக்குள் சென்றேன். தாதியர் கல்வி என்பது, ஏதோ பெரியது என்று இல்லாவிட்டாலும், இரண்டாம் நிலைக் கல்வியால் பெற்ற அறிவோடு, இது மேலதிக அறிவாகச் சேர்ந்தது. எப்படியாயினும், எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால், எனது இரண்டு வேணவாக்களையும் அடைய, தாதியர் தொழிலை மீள நாடமாட்டேன். அவ்வளவு தூரம் ஏவலுக்கு பணியும் தொழில் அல்லாத வேறு தொழிலையே நாடுவேன். ஒன்றில் சட்டம் படிப்பேன், அல்லது புவி, மற்றும் அதன் உயிரினம் தொடர்பான இயற்கை அறிவியல் கற்பேன்.
மருத்துவத் தாதியருக்கான மூன்று ஆண்டுக் கடும் பயிற்சி பெற்ற பின், ஒரு தொழில் தகைமை கிடைத்தது. எனது சாதனையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஓராண்டு மருத்துவிச்சி பயிற்சியும் பெற்றேன். இது எனக்கு இரண்டாவது மருத்துவத் தொண்டுத் தகைமையைத் தந்தது. அதாவது, தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஏற்றம் தந்தது. இருபத்தொரு வயதில் எனக்கு இரண்டு தொழில் தகமைகள். திருமணம் புரியும் நோக்கம் அந்த வேளையில் கிடையாது. இனி, அவுஸ்திரேலியாவில் தங்கி வேறு எதுவும் செய்வதற்கு இல்லை. ஆகவே வெளிநாட்டுப் பயணம் ஒன்றுதான் தவிர்க்க முடியாததும் அன்றைய நாட்டு நடப்பும் ஆகும். எனது நண்பி ஒருவருடன் சிறிது கலந்தாலோசித்த பின், அவுஸ்திரேலியாவை விட்டூ வெளியேறத் திட்டமிட்டோம். கையில் எடுத்த பையோடு நாட்டுக்குத் திரும்பாத ஒரு வழிப்பயணச் சீட்டோடு புறப்படுகின்றேன் என்று எனக்கு அன்று தெரியாது. நான் வெளியே காலடி எடுத்து வைத்தநாள் இன்னும் நல்ல ஞாபகம். பிரிவுத் துயரம் பொங்கி வழிந்தது. இன்று கூட, அந்த நினைவு வரும்போது, அன்றைய அதே விம்மல் நெஞ்சினுள் பொருமுகிறது. அன்று கடும் வெய்யில். ஒரே அவியல். இருபத்தியிரண்டு வயதை நான் எட்டிக்கொண்டிருக்கும் பருவம். எனக்குள் ஒரு ஆற்றாமை உணர்வு. சாப்பிட முடியவில்லை. முதற் தடவையாக நாட்டைவிட்டு வெளியேறும் ஒரு பயணி. உலகின் மறு பக்கத்துக்கே செல்வது போலல்லாமல் வேறொரு உலகத்துக்கே செல்வது போன்ற உணர்வுடனான பிரியாவிடை. விமானத்திலே கூட பின்புறத்திலேயே எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி உணவோ, பானமோ பரிமாறப்படூும்போது, கடைசியாகத் தான் எனக்குக் கிடைக்கும். விமானத்தில் ஏறிய மறுகணமே எனது கனத்த உணர்ச்சிகள் எல்லாம் அகன்று, பாரம் கழன்றதுபோல, தோள் இலகுவாக இருந்தது. விமானம் புறப்படு முன்னரே , அகோரப் பசி வயிந்றைப் பிறாண்டியது.
எனது வெளிநாட்டூப் பயணம் எனது வாழ்வில் ஒரு சந்திப் பிரிவாக அமைந்தது. அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய முப்பது ஆண்டுகளில் ஒரு தடவை மட்டும் நான் அங்கு சென்றிருக்கிறேன். அவுஸ்திரேலியாவிலிருந்து எனது வெளியேற்றம் எனது வாழ்வின் ஒரு அத்தியாயத்தை மூடியது; எனது சிந்தனையிலும் எனது ஈடூபாடுகளிலும் அடிப்படை மாற்றம் ஏற்பட வழிகோலியது. வாழ்க்கை நீரோட்டத்தில் மூழ்கி, உலகின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வருபவர்களுடன் ஊடாடும்போது, என்னை முழுமையாக ஆட்கொள்ளப்போகும் இந்த ’ அற்புத அனுபவ வேறுபாடுகளிலிருந்து நான் பயன் அடைவதானால், எனது கருத்து, சிந்தனை, நடத்தை ஆகியவற்றுக்கு நேரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
அவுஸ்திரேலியச் சிநேகிதிகள் இருவருடன் லண்டனையும், ஐரோப்பாவையும் சுற்றிப் பார்த்தேன். இந்தப் பயணம் முழுவதிலும் சரி, இங்கிலாந்தில் நான் சீவித்த போதும் சரி, பல ஓஸ்திரேலியர்களுடன் பழகக் கிடைக்காதது என் அதிர்ஷ்டம். இல்லையென்றால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எனது அவுஸ்திரேலியக் கலாச்சாரத்தையும், உறவுகளையும் இடம் பெயர்ப்பதாக மட்டும் இருந்திருக்கும். மாறாக நான் தரிசித்த நாடுகளில் உள்ளூரவர்களோடு கூடி வாழவும் பணியாற்றவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தமை பெரிதுதானே? உதாரணமாக றோம் நகரில் ஒரு மேட்டுக் கோபுர மாடிக் க டிடத்தில் குடியிருந்து கொண்டு தனியார் இருதய மருத்துவமனை ஒறில் தாதித் தொழில் பார்த்தோம். பின்னர், மிகச் சொற்ப காலத்துக்கு நான்கு இத்தாலியப் பிள்ளைகளின் செவிலித் தாயாக நான் பணி புரிந்தேன். ஜரோப்பிய நாடுகளில் சீவித்து வேலை பார்த்ததால், அங்கெல்லாம் மக்களின் கலாச்சார, மற்றும் மொழி ஊடாட்ட வாழ்க்கையில் பங்கு பற்றவும் அதைக் கூர்ந்து அவதானிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. உல்லாசப் பயணப் பகுதிகளை மட்டும் தொட்டுத் தொட்டுத் தரிசித்து இந்த ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றிருக்க முடியாது. கையில் உள்ள காசு கரைந்துவிட்டால் இங்கிலாந்து திரும்புவோம். அங்கே தொழில் முகவர் மூலம் வசதியான மருத்துவத் தாதிப் பணி புரிந்து கைநிறையச் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் ஐரோப்பாவின் மத்திய அல்லது வட பகுதிக்கு உலா புறப்பட்டுவிடுவோம். இரண்டு ஆண்டுகள் இந்த மாதிரியான வாழ்வு. அதன் பின் இரண்டு சிநேகிதிகளும் அவுஸ்திரேலியா திரும்ப, நான் எனது வாழ்வை மீளாய்வு செய்ய லண்டனில் தனியே விடப்பட்டேன்.
அந்த நாடோடி வாழ்க்கை சில ஆண்டுகளே நிலைத்தது. ஆனால் எனக்குக் கிடைத்த அந்த அனுபவமே இணையற்றது. உலகமே அதற்கு ஈடாகாது. ஆனாலும் நான் அடுத்த கட்டத்துக்கு சென்றாக வேண்டும் என்று உணரும் காலம் வந்தது. மேலே படிக்கலாமா என்றும் சிந்தித்தேன். ஆனால் எனது தன்னம்பிக்கையின்மை உணர்வு இன்னமும் என்னை விட்டு அகலவில்லை. பட்டப் படிப்பை நாடூவது என்றாலும் “ஏ” லெவல் உயர்தரச் சித்திகள் இல்லை. ஆகவே அது வீண் கனவு என்றே அஞ்சினேன். அதன் பின், ஓராண்டுகால மூலாதார உடல் நலப் பராமரிப்புக் கல்வி கற்கலாமா என்று சிந்தித்தேன். இதுவே எனது வாழ்வின் அடுத்த ஏணிப் படியாக அமைந்தது. உண்மையில் சமூதாயம் சார்ந்த இந்த உடல் நலப் பராமரிப்புப் பயிற்சி எனக்கு வெகுவாகப் பொருந்தி வந்தது. அடிப்படை மருத்துவ அறிவை மருத்துவத் தாதிப் பயிற்சி தந்திருந்தது; அதன்பின் மருத்துவிச்சிப் பயிற்சி மிகத் தேவையானதாக அமைந்தது. ஆனால் எனது ஐரோப்பிய பயணமேதான், பிற மக்கள், பிற கலாச்சாரங்கள், பிற இனங்களில் இருந்து நான் ஒதுங்கி வாழாது இருக்க உதவியது. அதுவேதான், பல இன சமுதாயம் ஒன்றில் சமுதாயப்பணி புரிய மிகத் தகுதி வாய்ந்தவளாக என்னை ஆக்கியது. ஒரு. புலமைக் கல்வி கற்பதற்குத் தேவையான “ஏ லெவல்” தக௲மைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக எனக்கு ஏற்கனவே கிடைத்த பயிற்சித் தகைமைகளும் தொழில் அனுபவங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சவுத்பாங் பல்கலைக்கழகத்தில் மூலாதார உடல்நல பராமரிப்புக் கல்விக்காக அனுமதிக்கப்பட்டேன். உடல்நல தரிசித்தல் புலமைக்கான ஓராண்டுக் கல்வி இது. மருத்துவ நிலையங்களில் இருந்து வெளியே சென்று, சமுதாயத்துக்குள் நுழைந்து ஆரம்ப உடல் நல பராமரிப்புப் பணியாளராகக் கடமை புரிவதற்குத் தேவையான பயிற்சியையும் ஆற்றலையும் எனக்கு இது ஊட்டியது.
ஒரு பெரிய வட்டகையில் பணி நியமனம் கிடைத்தது. வெவ்வேறு சமூக மட்டங்களும் கலாச்சாரங்களும் உள்ள பகுதி இது. சிக்கலான, அதே நேரம் படிமானமாகாத பல பிரச்சனைகளை நான் எதிர்நோக்க நேர்ந்தது. ஒரு புறம் மூலாதார உடல்நலப் பராமரிப்பு ஏற்பாட்டு அமைப்பு, மறு புறம் நான் தீர்க்க வேண்டிய சமூகப் பிரச்சனைகள். இவற்றிடையே நான் ஊடாட வேண்டிய நிர்ப்பந்தம். இரண்டுமே சுவையான அனுபவங்கள். அதே நேரம் சவாலாகவும் இருந்தன. எனது மனதில் புதிய கேள்விகளையும் அவை தொடுத்தன. அரசின் நிதி தொடர்பான கொள்கைகள் சரியா? முன்னுரிமைகள் சரியா? என்று வினாத் தொடுத்தேன். அரச சேவையின் ஆற்றலின்மையைக் கண்டித்தேன். ஆட்களைப் பற்றி அறிக்கை எழுதி, வகைப்படுத்தி, பட்டியலிடுவது தொடர்பான முங்குமுறை எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அதாவது நிறுவன அமைப்பின் மீதே நான் கேள்விகள் தொடுத்தேன் எனலாம். சமூக அமைப்புத் தொடர்பான ஆழமான அறிவு பெறுவேன் என்றால், நான் கேட்கும் கேள்விகளுக்கும் சிந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் தெளிவு கிடைக்கும். அதுவே எனக்கு நன்மை பயக்கும் என்றும் நம்பினேன். சமுதாய ஓட்டம் தொடர்பான எனது அறிவு போதாது என்று என் உள் உணர்வு க்றியது. ஆகவே, துணிச்சலைத் திரட்டி, சமூக விஞ்ஞானப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தீர்மானித்தேன். சமூகக் கருவறை தொடர்பாக, ஒழுங்கான, நேர்த்தியான அறிவு ஆழத்துக்கு ஈடுகொடுக்கும் ஆற்றல் எனக்கு உண்டா என்ற சந்தேகம் என்னைக் குடைந்தது. ஒரு பட்டப் படிப்புக்கான சவாலை எதிர்கொள்ளும் தகைமை எனக்கு இருப்பதாக சவுத் பாங்க் பல்கலைக் கழகம் கருதி, சமூக விஞ்ஞானப் பட்டப் படிப்புக்காக என்னை ஏற்றுக் கொண்டபோது, மகிழ்ச்சி கரை புரண்டோடியது. அறிவு நிரம்பியதும், அறிவு ஆழத்தோடு நான் புழங்க வேண்டியதுமான முற்றிலும் வேறுபட்ட ஒரு சமூகச் சூழலுக்குள் நான் . நுழைவது, எனது இருபத்தியேழு வயதில் எனக்கு ஒரு சவாலே. ஆனாலும் அதற்காக ஆவலோடு காத்திருந்தேன்.
சவுத்பாங்க் பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞானப் பட்டப்படிப்புப் பாட விதானம், பெரிய பரப்பாக இருந்தது. குறிப்பாக சமூகக் கோட்பாட்டியல் அதிக அறிவு ஆழம் கொண்டிருந்தது. சமூகப் பரி- மாணங்களை ஆழ, அகலக் கற்றோம். கைத் தொழில் உலகத்துக்கு முந்திய காலப் பகுதியில் இருந்து, முதலாளித்துவத்துக்குப் பிந்திய காலம் வரையுள்ள பரப்பை அலசினோம். ஆபிரிக்காவில் இருந்து ஆசியா வரையும், பின் அமெரிக்கா வரையும் உள்ள கண்டங்களையும், நாடுகளையும், வரலாற்று அடிப்படையில் அளவிட்டோம். தனி மனித உளப் பாங்கிலிருந்து, கிட்லர் கால யேர்மனியின் தேசியவாத பேரெழுச்சிகள் வரை சமூக அமைப்புகளின் கருத்துலகங்களை ஆராய்ந்தோம். விரிவுரையாளர்கள் பல்வேறு அரசியற் கருத்துகளைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆயினும் இடது சாரி அரசியற் கருத்தைக் கொண்டவர்களே ஆதிக்கம் செலுத்தினர். சுருங்கச் சொன்னால் எனது பட்டப்படிப்பு கணிசமான அளவு அரசியல் அறிவையும், மற்றும் விஞ்ஞானக் கோட்பாட்டுக் கல்வியையும் ஊட்டியது. இது, எனக்குப் பெரிதும் உதவியது. நான் பாலாவைச் சந்தித்ததும் சவுத்பாங்க் பல்கலைக் கழகத்திலேயேதான். அப்போது அவர் தமது கலாநிதி ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் பகுதிநேர பல்கலைக்கழக மேற்பார்வை ஆசானாகவும் பணி புரிந்துகொண்டிருந்தார். அப்போது நான் இரண்டாம் ஆண்டில் பயின்றேன். பல்கலைக் கழகத்தில் எமது பழக்கம் உளப்பூர்வக் காதலாக மலர்ந்து திருமணத்தில் கனிந்தது. எனது அறிவாந்றலைக் கூர்மைப்படுத்தவும், சிக்கலான சமூகக் கோட்பாடுகளை நான் புரிந்து கொள்ளவும் பாலா உதவினார். உலகின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்த மாணவர்கள் அங்கே இருந்தார்கள். ஏதோ ஒரு போராட்டத்தை ஆதரிப்பவர்களாக அல்லது அது பற்றி பரப்புரை புரிபவர்களாக அவர்கள் இயங்கினார்கள். இதனால் பல்கலைக் கழகம் ஒரு சுறுசுறுப்பான அரசியற் செயற்பாட்டுத் தேன்கூடாக அமைந்தது. உலகில் இடம்பெறும் வெவ்வேறு சமூக, மற்றும் தேசிய அடக்குமுறைகள் பற்றிய அறிவையும் இச் சூழல் எனக்கு ஊட்டியது. இதுவே புரட்சிகளின் காலமாகவும் திகழ்ந்தது. தீவிர இடதுசாரி அரசியலும், தொழிற்சங்கப் போராட்ட எழுச்சிகளும் பிரித்தானியாவில் கலை விரித்து. ஆடிக்கொண்டிருந்தன. ஆபிரிக்காவிலும், மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும் உள்ள பல மூன்றாம் உலக நாடுகள், விழுதோடிய குடியேற்றவாத அடக்குமுறைகளிலிருந்தும், பேரரசுகளின் பொருளாதார உ றிஞ்சல்களிலிருந்தும், சுதந்திரம் பெறுவதற்காக தேசிய விடுதலைப் போராட்டங்களைத் தொடுத்து நின்றன. ஓடுக்கப்பட்டவர்கள் மட்டில் எமக்கு உள்ளார்ந்த அனுதாபம் இருந்தது. ஆகவே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), சிம்பாவே ஆபிரிக்க தேசிய ஒன்றியம் (ZANU), தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு (SWAPO), கிழக்குத் தீமோரியர், எரித்திரியர், சந்தனிஸ்தா, பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO), எல் சல்வடோரியர், சிலியர் போன்றோரின் பேரணிகளிலும் கூட்டங்களிலும் தீவிரமாகக் கலந்து கொண்டோம். பிரித்தானியாவின் கொழம்யூனிஸ்ட் கட்சியுடன் கூடிப் பணி புரிந்தோம். நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக பேரணி நடத்தினோம். அணு ஆயுத ஒழிப்பு இயக்கத்தை ஆதரித்தோம். இக் கால கட்டத்தில் பிரித்தானி யாவில் தலை தூக்கிய இனவாதத்தை வெறுத்தோம். எமது வீட்டில் குழுக் கலந்துரையாடல்களுக்குப் பல தரப்பினரையும் அழைத்தோம். விடுதலை அமைப்புகளின் பிரதி நிதிகளையும் அங்கு வரச் செய்தோம். ஒடுக்குமுறை தொடர்பான எனது சொந்த உணர்வுகள் பலவற்றைப் பெண்ணியம் நிரற்படூுத்தியது. உலகத்தோடு நான் தொடர்பு பேணும்போது, பெண் என்ற வகையில் எனது உணர்வுகள் என்ன, அனுபவங்கள் என்ன என்பதனை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளையும் வடிகால் அமைத்துத் தந்தது. எனது தளர்வான மனப் போக்குகள் உறுதியான சிந்தனைகளாகத் திரண்டது இந்தச் சூழலிலேதான். இந்தச் சிந்தனைகளே ஒரு மூன்றாவது உலக நாட்டின் தேசிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்திலே பங்கெடுக்க இறுதியாக என்னை இட்டுச் சென்றன.
எமது இந்தப் பருவத்தில் நாம் இருவரும் அரசியல் விழிப்புணர்வு கொண்டிருந்தோம்; அரசியந் செயற்பாட்டிலும் ஈடுபட்டோம். ஆனால் எமது அரசியல் உள்நாட்டுப் பிரச்சனைகள் பற்றியதாக அல்லாது அனைத்துலக விடுதலைப் போராட்டங்கள் பற்றியதாகவே இருந்தது. நாம் என்றுமே பிரித்தானியத் தொழிற் கட்சியில் சேரவில்லை. அதன் போராட்டப் போக்கோடும் எமக்குத் தொடர்பு இருக்கவில்லை. பிரித்தானிய கொம்யூனிஸ்ட் கட்சியோடு கூடி வேலை செய்வதே பிரித்தானியாவில் குறைந்த பட்ச புரட்சி அரசியலில் நாம் ஈடுபடக்கூடியதாக இருந்தது. எப்படியோ, அந்த உறவும் ஆழமானதாக இருக்கவில்லை. சொற்ப காலம் மட்டுமே நீடித்தது. இலங்கைத் தமிழ் மக்களின், சுய நிர்ணயம், மற்றும் அரசியந் சுதந்திரம் ஆகியவற்றை எதிர்த்த இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கான சோவியத் யூனியனின் ஆதரவு, இனி மாஸ்கோ எஜமானருக்கு பிரித்தானிய கொம்யூனிஸ்ட் கட்சி காட்டிய பற்றுறுதியும், பணிவும், எமது பார்வையிலே பிற்போக்கானதாகப்பட்டது; மன விரக்தியைத் தந்தது; அரசியல் அடிப்படையில் தவறாகவும் தோன்றியது. பிரித்தானிய அரசியலில் எனக்குக் கவலை யைத் தந்த முக்கிய விடயம், இங்கிலாந்தில் வளரத் கலைப்பட்ட இனவெறியும், பாசிசமும் தான். பிற மக்கள் மட்டில் குரோதத்தைத் நூண்டும் தத்துவத்துடன் அமைந்த ஓர் அரசியல் இயக்கத்தினர், த்ம்மிலிருந்து வேறுபட்ட மக்களைவிட ஏதோ ஒரு வகையில் தாம் உயர்ந்தவர் என்று வலியுறுத்தும் அரசியல் இயக்கமாக வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குக் குமட்டியது. உண்மையில் இந்த இனக் குரோதச் சூழல் நேரடியாகவே வாழ்க்கையை அமுக்க முற்பட்டது. அதை என்னால் பொறுக்க முடியவில்லை. இனக் குரோதம் பாலா மீதும் இங்கிலாந்திலுள்ள அவருடைய நண்பர்கள் மீதும் தொடுக்கப்பட, அதைப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு வாளாவிருக்க வேண்டி இருந்தது. ஒரு சம்பவம்; ஒரு தமிழ் இளைஞர் எம்மைப் பார்க்க வந்து கொண்டிருந்தார். வெள்ளை இன இளம் காடையர் கும்பல் ஒன்று அவரைச் சூழ்ந்து அடித்து நொருக்கியது. முகத்தில் இரத்தம் வழிய, நடுங்கியபடி எமது வீட்டு வாசலுக்கு அவர் வந்தார். பின்னர் எமது மாடி வீட்டிலிருந்து தனியே வெளியே போக அவர் அஞ்சினார். பாதாள ரெயில் நிலையத்துக்கு அவரோடு நாம் கூடிச் சென்றால் மட்டுமே புறப்பட்டுச் செல்ல அவர் இணங்கினார். இதைவிட இனக்குரோதக நேரடி அச்சுறுத்தல் அனுபவமும் கிடைத்தது. ஒரு நாள் எமது உயர் மாடி வீட்டில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தோம். அங்கு வந்த இனக்குரோத வெள்ளையர் கும்பல் ஒன்று, வாயில் கதவை உடைத்து உள்ளே பாய முயன்றது. பாலாவும், நண்பரும், நானும் கதவைத் தள்ளிப் பிடித்தபடியே காவற்துறையினரைக் கூப்பிடுமாறு காடையர் வாதில் விழும் வண்ணம் உரக்கக் கூறி, அவர்களை விரட்டினோம்.
வேறின மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அவர்கள் உரிமைகள் பறிக்கப்படூும்போது, வேறுபட்ட கலாச்சாரம் என்பதால் அவமானப்படுத்தப்படும்போது, என்னிடமிருந்த இனவெறியெதிர்ப்புணர்வு விழித்தெழுந்தது. பிரித்தானியாவில் இனவெறி அனுபவம் என்னைக் கொதிப்படையச் செய்தது. ஆனால் பாலாவுக்கு இது வியப்பைத் தரவில்லை. அதை இயல்பானதாகவே எடுத்துக் கொண்டார். தமது நாட்டு இன வெறியோடு அதை ஓப்பிட்டூப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரித்தானியாவில் முகிழ்ந்து வந்த இனவெறித் தத்துவம், தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையிலே, பாலாவின் மக்களுக்கு எதிராகக் கட்டி எழுப்பப்பட்ட இனக்குரோதம், இன மேலாதிக்கம் என்ற மாயையில் கட்டி எழுப்பப்பட்டது. இலங்கையில் நிலவிய இனக் குரோதமானது சிங்கள-பெளத்த பேரினவாத சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்டது. இனத்தால் ஆரியர் என்றும், மதத்தால் பூர்வீகப் புனித மதம் என்றும் ஒரு புராணத்துக் கற்பனையில் கட்டப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் குற்றங்களைப் புரிபவர்களில் சிங்கள அரசினரே முதன்மை பெற்றிருந்தனர். இலங்கையின் இனவாதமானது இனப்படுகொலைப் பரிமாணத்தை எட்டியது. படுமோசமான மனித உரிமை மீறல்கள் அங்கே நடந்திருக்கின்றன. எழுபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். பாசிசம், பேரினவாதம், போன்ற சித்தாந்தங்கள் வரலாறு முழுவதிலும் வெளிப்பாடு கண்டு சிங்கள மக்களை ஒரு மேன்மையான இனம் என்ற மாயைக்குள் சிறைப்படுத்தியது. இந்தக் கருத்தியற் போக்கு மிகவும் ஆபத்தான, கெடுதலான நாசகார சக்தியாகும். இது மும்முரமாக எதிர்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
தனி ஒருவரையும் சரி, மக்கள் இனங்களையும் சரி, நெரித்து ஒடுக்கும் மேலாண்மைத் தத்துவங்களை நான் அவருவருத்து ஒதுக்குபவள். ஐரோப்பாவில் நான் மேற்கொண்ட பயணங்களாலும் இங்கிலாந்தில் பல்வேறு இன மக்களிடையே பணிபுரியும்போது கிட்டிய அனுபவங்களாலும் பெற்ற படிப்பினையோடு, எல்லாக் கலாச்சாரங்களிலும் இருந்து வரும் மக்களை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு மரியாதை காட்டவும் பயின்றிருந்தேன். எனவே, இனக்குரோத அடிப்படையில், சொல்லாலோ, செயலாலோ மக்கள் தாக்கப்படூும்போது என்னால் அதைச் சிறிதும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. மானுட வரலாற்றின் பரப்பை நாம் அளவிடூம்போது, அதில் இனவாதம் ஒரு பெரிய பங்கை வகித்திருப்பதை நாம் காணலாம். மக்களைப் பிளவுபடுத்துவதில் ஒரு முக்கிய சக்தியாகவும், மக்களிடையே மனிதாபிமானம் அற்ற செயல்களுக்கு ஓர் றய கலம் அது செயற்படுகின்றது.
மனித சமூகத்தினர், ஒருவர் மட்டில் ஒருவர் கொண்டுள்ள தவறான, எதிர்மறையான கருத்தோட்டங்களிலிருந்தே இனவாதம் தோற்றப்பாடு காண்கிறது. உதாரணமாக, மனிதத் தோலின் நிறம் பற்றிய குவநான பார்வை; மற்றும் போலியான உயர்வு மனப்பான்மை, கலாச்சார வேறுபாடு, சமயம், வரலாறு போன்ற கருத்தியற் கண்ணோட்டங்களிலிருந்தும் இனவாதம் தோற்றம் கொள்கிறது. எனது வாழ்க்கை அனுபவம் மேலும், மேலும் ஆழம் அடைய, எனது பார்வையில், இந்தப் பூமிக் . கிரகமானது அனைத்து மனித சமூகத்தினரதும் பொதுவான வாழ்விடமாகத் தோன்றுகின்றது. மனித இனம் என்ற ஓரே இனத்தினதும், ஏனைய உயிர் வடிவங்களினதும், இயந்கையான வாழ்க்கைத்தளம் இந்த உலகம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு என்னைப் போலவும், உங்களைப் போலவும், அனைத்து உயிர்களுக்கும் உரிமை உண்டு. பலவகைக் கலாச்சாரங்கள் மனித சமுதாயத்தைச் செழுமைப்படுத்துகின்றன. ஏனெனில் கலாச்சாரங்கள், மானுட ஆன்மீக வளர்ச்சியின் வெளிப்பாடுகளாகும். உலகமைந்த
அனைத்து கலாச்சாரங்களும் மதிக்கப்படவேண்டும். அமைதியும், ஒத்திசைவும் வாழ்க்கையில் செழுமையும் நிலவ வேண்டுமானால் கலாச்சாரங்கள் வளர்ச்சியடைய வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இதுவே எனது கருத்தாகும்.
1.3 போராட்ட அரசியல்
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கள அரசினால் தமிழ் மக்கள் கொடூரமாகவும், அநியாயமாகவும் ஓடுக்கப்பட்டதன் வரலாறு, அனைத்துலக மனித நேய அமைப்புகளினால் செம்மையாக ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஆண்டாண்டாக அரசு திட்டமிட்டு நடத்தும் இந்த இன ஒடுக்குமுறை எனது கணிப்பில் இனப் படுகொலை முயற்சியே! ஆயினும், அனைத்துலக அரசுகள் இந்தத் தார்மகக் குற்றச் சாட்டை மறுக்கலாம் (இனப்படுகொலை விவகாரத்தை பின்னர் விவாதிக்க இருக்கின்றேன்). தமிழர் தேசிய அடையாளத்தின் அடித்தளத்தையே - அதாவது அதன் மொழியை, கலாச்சாரத்தை, பொருளாதார வாழ்வை, இனி, பாரம்பரிய வாழ்நிலத்தை, இன ஒடுக்குமுறை, தாக்குகின்றது. இதற்குமேல், இனக் கலவரங்களின் போதும், போரின் விளைவாகவும், தமிழ் மக்கள் பெருந்தொகையாக பூண்டோடு அழித்தொழிக்கப்படுகின்றார்கள். இனி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்த கலவரங்களால் ஏற்பட்ட இன விரட்டலாலும், புலம்பெயர்வுகளாலும் தமிழ் மக்களின் இனக் கட்டமைப்பு துண்டாடப்படுவது கூட இன்னொரு வகை: இனப்படுகொலைக் கூறுதானே! விடாது தொடர்ந்த கொடிய அரச ஒடுக்குமுறைக்கு, தொடக்கத்திலிருந்தே இயல்பான எதிர்ப்புக் கிளர்ந்தது. ஆரம்பக் கட்டங்களில், வன்செயலந்ற அரசியற் போராட்டங்கள் மூலம் ஒடுக்கு முறைக்கு தங்கள் எதிர்ப்பைத் தமிழ் மக்கள் வெளிப்படுத்தினார்கள். அகிம்சை என்ற அமைதித் தத்துவத்தின் அடிப்படையில் மகாத்மா காந்தி என்ற அகிம்சா மூர்த்தியால் வகுக்கப்பட்ட வன்செயல் துறந்த போராட்ட முறை இது. அகிம்சையின் ஆன்மீக, மற்றும் ஒழுக்க சீலங்களைக் காழ்ப்புணர்வோடு சிங்கள அரசு உதாசீனப்படூத்தியது. இதனால் அகிம்சைப் போராட்டத்தின் தார்மீகப் பலமானது, சிங்களத்தின் அடாவ- டிப் பலத்தை எதிர்கொள்ள முடியாது வலுவிழந்த சக்தியாக மாறியது. தமிழ் இனத்தின் அனைத்து அமைதிப் போராட்டங்களும் கொடூரமாக நசுக்கப்பட்டன.
நீடித்துச் செல்லும் இன நெருக்கடிக்குத் தீர்வு காண, தமிழ், சிங்கள இனங்களின் தலைவர்கள் செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் செயலிழந்து செத்துப்போயின. இதனால், இரண்டு இனங்களிடையேயும், பகைமையும், நம்பிக்கையின்மையும் ஆழமாகியது. கண்மூடித்தனமான கைது, கொடுமையான சித்திரவதை, காணாமல் ஆக்குதல், சட்டம் மீறிய கொலைகள் ஆகியவை அரச படைகளின் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாயின.
மேலும், தமிழ்ப் பகுதிகள் மீது அரச படைகள் நிகழ்த்திய ஆக்கிரமிப்பும், அடக்குமுறைகளும், அரசினால் கோலம் இடப்பட்டு, சிங்களக் காடையரால் நிறைவேற்றப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இனக்கலவரங்களும் ஆயிரமாயிரம் கமிழ் மக்களைக் கொன்றொழித்தன. தீவிரமடைந்த அரச ஒடுக்குமுறையும், சிங்கள இனவாத அரசியற் தலைமை மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையனமும், விரக்தியும், பிரிந்து சென்று தனியான தமிழ் அரசை நிறுவுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகளைத் கள்ளியது.
1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் . நாடாளுமன்ற அரசியல் கட்சியாக முகிழ்த்த தமிழர் ஜக்கிய விடூுலை முன்னணி (TULF), தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர அரசுக்காகப் போராடத் தமிழ் மக்களின் வாக்கு ஆணையைக் கோரியது. வட கிழக்கில் TULF பெருவெற்றியட்டியது; பெரும்பாலான இருக்கைகளை வென்றது; அரசி யல் சுதந்திரத்தையும் இறைமையுள்ள அரசையும் ஈட்டும் வகையில் போராட்டத்தை நடத்த மக்களின் ஆணையைப் பெற்றது. TULF ந்கு மக்கள் ஆணை கிடைத்த போதிலும், மக்கள் ஆதரவுடனான இந்த அரசி யல் இலக்கை அடைவதற்கு, அதனிடம் ஒத்திசைவான கொள்கையோ, தந்திரோபாயமோ, அர்ப்பணிப்போ இருக்கவில்லை. அதனால் அந்தக் கட்சி செயலிழந்து, மலட்டுத் தன்மையடைந்து, இறுதியில் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உடந்தையாகச் செயற்படும் பாதையைக் கடைப்பிடிக்க முற்பட்டது. சுதந்திர அரசை உருவாக்குவதற்கான புரட்சிக வழிமுறையைக் கோரி நின்ற போராட்ட உணர்வுடனான தமிழ் இளைஞர்களுக்கு TULF ன் உடந்தை அணுகுமுறையானது கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்தது. அரசின் வன்செயலுக்கும், ஒடுக்குமுறைக்கும் பெருமளவு முகம் கொடுக்கும் இளைஞர்கள் பொறுமையை இழந்தார்கள். நாடாளுமன்ற அரசியற் போராட்டத்தின் கையாலாகாத் தன்மையிலும் விரக்தி கொண்டார்கள். தமிழ் மக்களின் இலட்சியமான தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான அகவய, புறவயச் சூழல்கள் அப்போது முதிர்ந்திருந்தன. இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் தேசிய விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்திலே தம்மை அர்ப்பணிக்கப் பெருந்தொகை இளைஞர் அமைப்புகள் முளைவிட்டன. ஓடுக்குபவரின் ் வன்செயலை, ஒடுக்கப்படுபவரின் வன்செயல் முகமுகமாகத் தரிசிக்கும் வேளையும் முதிர்ந்தது.
வடக்குக் கிழக்கில் தோன்றிய விடுதலை அமைப்புகள் பலவற்றின் ஆதரவாளர்களும், பரப்புரையாளர்களும் இலண்டனில் இருந்தனர். சிநீலங்காவின் கொடிய அட்டூழியத்தில் இருந்தும், இன ஓடுக்குமுறையில் இருந்தும் தப்பியோடிய இளம் சமுதாயத்தினரிடமிருந்தே விடுதலை அமைப்புகளுக்கு ஆதரவு பெருமளவாகக் கிடைத்தது. தாம் நேரில் பட்ட துயர நினைவுகளையும், அனுபவங்களையும் மறக்காதிருந்த அவர்கள் ஓடுக்கப்பட்ட தம் மக்களோடு இறுக்கமாகத் தம்மை இனம் கண்டு கொண்டார்கள். தங்கள் தாயகம் மட்டில் நீடித்த உணர்ச்சிபூர்வமான பற்றுணர்வையும் கொண்டிருந்தார்கள்.
70 களின் பிந்திய காலகட்டத்தில் லண்டனில் எம்மோடு கூடிப்பழகிய தமிழ் நண்பர்கள் எல்லோருமே அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறீலங்கா அரசினால் ஏதோ ஒரு வடிவில் ஓரம் கட்டப்படூவதிலிருந்தும், அரச அட்டூழியத்திலிருந்தும் தப்பிப் பிழைப்பதநற்காகவும் லண்டன் வந்தவர்கள். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியல் இலட்சிய ஆணை, அவர்களுடைய வேணவாவுக்கு உரம் ஊட்டியது. 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலை அடுத்து, தமிழர்க்கு எதிராகக் கலவரங்கள் தலைதூக்கியபோது, அவை லண்டனிலே தமிழ் அரசியலுக்கு விழிப்பூட்டின. எமது பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் இளம் மாணவர்கள், தேசியப் பற்றுணர்வோடு பாலாவை நாடி வந்தார்கள். எல்லோருமே பொறிபறக்கும் உணர்வோடும் உற்சாகத்தோடும் இருந்தார்கள். இளைஞர் ஒருவரின் பெயர் ஞானசேகரன். பாலா தம்முடைய பத்திரிகை அனுபவத்தையும், எழுத்துத் துறைசார்ந்த அறிவையும், அடிப்படையாகக் கொண்டு அரசியல் ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார். பாலா அதற்கு இணங்கினார். அந்த ஆவணம் விரைவாகப் பரவி, இலண்டனிலுள்ள விடுதலைப் புலி வட்டத்தைச் சேர்ந்தது. 70 களின் நடுப்பகுதியில் இலண்டனில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக இருந்த கிருஷ்ணன் அவர்களும் அதிகாரபூர்வப் பேச்சாளரான ஆர். இராமச்சந்திரன் (அன்ரன் ராஜா) அவர்களும் எமது வீட்டுக்கு வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இராமச்சந்திரன் வ்கள் (அவரை ராமாசார் என்றே அழைக்கின்றோம்) விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களுடைய தலைமை பற்றியும் விரிவான உண்மையான விளக்கத்தைத் தந்தார். விடுதலைப் புலிப் போராளிகளின் துணிச்சல் மனவுறுதி, இலட்சியப் பற்று ஆகியவை எம்மை வெகுவாகக் க் விடுதலைப் புலிகளுடனான எமது வரலாறு ஆரம்பமாகியது. ராமா சார் எமது ஆயுட் கால நண்பரானார்; கத்தி வல்லாளராகவும் செயற்பாட வால் அதர்கக போதும், எமது நட்பு வட்டம் விரிவானதாக இருந்தது. ஆயுதப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்திருந்த அனைத்துத் தமிழ்க். குழுக்களின் ஆதரவாளர்களும் எமது வீட்டுக்கு கிரமமாக வந்து சென்றார்கள். அனைத்து வெவ்வேறு அமைப்புகளையும் சேர்ந்த பல ளம் தமிழ் மாணவர்களுக்கு பாலா அரசியல் வகுப்புகள் நடத்தினார். இந்த வகுப்புகளில் விரிவுரை நிகழ்த்த வெவ்வேறு நாடுகளிலுள்ள விடுதலை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் நாம் அழைத்தோம்.
இவர்கள் தமது விடுதலை அமைப்புகளின் நடவடிக்கைகளோடு தொடர்புடைய விவரணப் படங்கள், பரப்புரை ஆவணங்கள் ஆகியவற்றைத் தம்மோடு கொண்டூவந்தார்கள். எரித்திரியர் தங்கள் போராட்ட வரலாற்றை எடுத்து விளக்கினார்கள். கிழக்குத் தீமோர் பிர- திநிதிகள், இந்தோனேசிய இராணுவம் புரிந்த இனப்படுகொலை வடிவி லான ஓடுக்குமுறைபற்றி விரித்துரைத்தார்கள். ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு இன்னும் இருபது ஆண்டுகளே உள்ள நிலையில் அவர்களுடைய பிரதிநிதிகள் இனவெறிக்கு எதிரான போராட்டம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார்கள். தலைமறைவாக வாழ்ந்த சிலி நாட்டுப் பிரதிநிதிகளும் எம்மை வந்து சந்தித்தார்கள்; பினோச்சியின் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம் பற்றி எம்மோடு உரையாடினார்கள். இந்த அமைப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு நாம் நிதி திரட்டிக் கொடுத்தோம்.
தமிழ் மக்கள் அரசியல் விழிப்போடு இருந்தது போல, சிங்கள இடதுசாரிகளும் விழிப்பாக இருந்தார்கள். தனித்தமிழ் அரசுக்கான கோரிக்கை சர்ச்சைக்குரிய விவாதத்தைத் தோற்றுவித்தது. சிங்கள ெதுசாரிகளுக்கு, இருதலைக் கொள்ளியெறும்பு நிலை. ஓர் இன மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற சோசலிசக் கோட்பாட்டை ஆதரித்து, புரட்சியாளராக காட்டிக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாடு, அதே சமயம், ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை எதிர்க்கும் நிலைப்பாடு. இடதுசாரிச் சிங்கள அரசியல்வாதிகளிடையேயும், புரட்சியாளர்களிடையேயும் ஏற்பட்ட இந்த வெளிப்படையான கோட்பாட்டூக் குழப்பம் பாலாவுக்குச் சீற்றத்தைக் கொடுத்தது. இந்தக் கோட்பாட்டுக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கத் தீர்மானித்தோம். இந்த முயற்சியில் பாலா கடினமாக உழைத்தார். கோட்பாட்டுத் தெளிவுடைய அரசியல் ஆவணம் ஒன்றைத் தயாரித்தார். அதில், தமிழ். மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார். அவர் எழுத, நன் கட்டச்சிலிட்டேன். இந்த ஆவணத்தை அச்சுருவாக்க எங்கள் கல்விக்கான உதவிப் பணத்தைச் செலவிட்டோம். “தமிழ்த் தேசியப் பிரச்சனை பற்றியது..” என்ற பெயரில் அது வளியாகி, பொதுமக்களிடயே விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தமது இரண்டாவது வெளியீட்டைத் தமிழில் எழுதினார்: “சோசலிசத் தமிழீழத்தை நோக்கி” என்ற தலைப்பு. இந்த வெளியடு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சென்றடைந்தது. பிரபாகரன் அவர்கள் நூலைப் படித்தார். அதன் உள்ளடக்கம் அவரைக் கவர்ந்தது. அதன் பின்னர் அவா் பாலாவைச் சந்திக்கவும் விரும்பினார். தமிழ் நாடு, சென்னைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இயக்கத்தின் தலைமையை அங்கேதான் முதற்தடவையாகச் சந்தித்தோம்.