8 வன்னியில் அனுபவித்த இன்னல்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னியை நோக்கிய தந்திரோபாயப் பின்நகர்வு, இராணுவ ரீதியில் பார்க்கப்போனால், திரு. பிரபாகரனின் மதிநுட்பமான முடிவாகும். நுழைய முடியாத, அடர்ந்த காடுகளை கவசமாகக் கொண்ட வட இலங்கையின் இதய பூமியில் ஒரு பாரிய படைத் தளத்தை அமைத்துப் பலப்படுத்திய திரு. பிரபாகரன், விடுதலைப் புலிகளின் இராணுவ இயந்திரத்தை மறுசீரமைக்கும் பிரமாண்டமான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். | போர்த் திறனில் வல்லுனர் என்ற ரீதியில், காடுகள் நிறைந்த வன்னியின் பெருநிலப்பரப்பை பாதுகாக்க வேண்டும் என்பதையும், அங்குதான் எதிர்காலத்துச் சமர்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்பதையும் அவா உணர்ந்திருந்தார். சிங்களத் தலைமையின் இராணுவ அபிலாசை களையும் அவர் நன்கறிவார். சிங்கள இராணுவம் பாரிய படை யெடுப்புக்களை மேற்கொள்ளலாமென எதிர்பார்த்த திரு. பிரபாகரன். காட்டுப் புற கெரில்லாப் போரிலும், மரபுவழி யுத்தத்திலும் நன்கு பயின்ற, மிகவும் சக்தி வாய்ந்த ஒரு விடுதலை இராணுவத்தைக் கட்டியெழுப்ப முடிவு செய்தார். விடுதலைப் புலிகளின் படையணிகளை ஆட்பல ரீதியாகவும், போர்த் திறன் ரீதியாகவும் வல்லமை படைத்த சக்தியாக உருவாக்கும் நோக்கில் பெருமளவில் ஆட்சேர்ப்பை நடத்தி, பயிற்சித் திட்டங்களை செயற்டடுத்தினார். இப் போர்த் திட்டங்கள் நிறைவு பெற்றதும் வன்னிப் பிராந்தியத்திலுள்ள ஒரு பெரிய சிங்கள இராணுவத் தளம் மீது வலிந்து தாக்குவதற்கு திட்டம் தீட்டினார். 1996ம் ஆண்டு, ஜுலை மாதத்தின் ஆரம்பப் பகுதியில் இப் போர் நடவடிக்கை இடம்பெறவிருந்தது.
ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். தாக்குதல் நடவடிக் கையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் மந்திராலோசனையில் தூக்கமற்ற பல இரவுகளை தமது மூத்த தளபதிகளுடன் திரு. பிரபாகரன் செலவிடுகிறார் என்பதும் எமக்குத் தெரியும். எந்த இராணுவத் தளம் தாக்குதலுக்கு ஆளாகப் போகின்றது என்பதை நாம் இறுதிக் கட்டத்தில்தான் அறிய முடிந்தது. வன்னியில் சிங்கள இராணுவத்தின் நிலைகளை நன்கு அறிந்திருந்த பாலா, முல்லைத்தீவு இராணுவத் தளம் தாக்கப்படப் போகின்றது என்பதை சரியாகவே எதிர்வு கூறினார். திரு. பிரபாகரனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தபோதும், இராணுவ தாக்குதல் திட்டங்கள் பற்றி, பாலா அவரிடம் கேட்டறிவதைத் தவிர்த்துக் கொண்டார். ஆயினும் ஒரு போர் நடவடிக்கையோ அன்றி ஒரு தாக்குதல் சம்பவமோ நிகழ்ந்தவுடன், அது பற்றிய முழு விபரங்களையும் சேர்த்துக் கொண்டு, முதன் முதலாக திரு. பிரபாகரன் பாலாவை சந்திக்க வருவார். இந்தத் தகவல்களை ஆதாரமாக வைத்து, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு பத்திரிகை அறிக்கையை தயாரிப்பார் பாலா.
1996 ஜுலை 18ம் திகதி, “ஓயாத அலைகள்” என்ற பெயரில், முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பாரிய இராணுவத் தாக்குதலை நிகழ்த்தியது. முல்லைத்தீவு இராணுவ முகாம் ஒரு பெரும் தளம். பழைய முல்லைத்தீவு பட்டினத்தை உள்ளடக்கியதாக 2900 மீட்டர் நளமும், 1500 மட்டர் அகலமும் கொண்ட நிலப்பரப்பில் இத்தளம் அமையப் பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும், இராணுவ கட்டளைப் பீடமாகவும் செயற்பட்டு வந்த இப் பெரும் தளம், முல்லைத்தீவு கடலோரமாக நிலைகொண்டிருந்தது. நன்கு பயிற்சி பெற்ற, நவீன ஆயுதங்கள் தரித்த, விடுதலைப் புலிகளின் படையணிகள், தரை மார்க்கமாகவும், கடல் வழியாகவும் முல்லைத்தீவு இராணுவத் தளம் மது தாக்குதலைத் தொடுத்தன. பல மணி நேரமாக நிகழ்ந்த கடூம் சண்டையை அடுத்து இராணுவத் தளத்தின் முன்னணிப் பாதுகாப்பு வலையம் ஊடறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மினிமுகாம்களையும், பீரங்கி மோட்டார் தளங்களையும், மையக் கட்டளைப் பீடத்தையும் புலிப் படைவீரர்கள் கைப்பற்றினர். 24 மணி நேரத்திற்குள் முல்லைத்தீவு பெருந்தளம் முழுமையாக விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்தது. இதனையடுத்து, உதவிப் படையணிகளை அவசரமாக இராணுவம் அனுப்பி வைத்தது. இப்படையணிகள் முல்லைத்தீவு களத்திற்கு ஆறு மைல் தெற்கே, கடல்வழியாக தரையிறங்கி, நிலைகளை அமைத்தனர். இப் படையணிகளை விடுதலைப் புலிகள் சுந்றி வளைத்துத் தாக்கி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதன் விளைவாக அவர்கள் அங்கிருந்து பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டனர். இதனையடுத்து, முல்லைத் தீவு கடலோரமாக சிங்கள இராணுவத்தினரை தரையிறக்கு வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை புலிகளின் படையணிகள் முறியடித்தன. ஜுலை 26ம் திகதி வரை சண்டைகள் தொடர்ந்தன. இறுதியில், உதவிக்கு அனுப்பப்பட்ட சிங்களப் படையணிகள், சிதைந்த நிலையில், பின்வாங்கின. சிங்கள இராணுவம் என்றுமில்லாதபடி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இச்சமரில் ஆயிரத்து முந்நூறு படையினர் கொல்லப்பட்டனர். 122 எம். எம் பீரங்கிகள், 120 எம்.எம் கனரக மோட்டர்கள், அவைக்குரிய ஆயிரக்கணக்கான எறிகணைகள், மற்றும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை இதுவொரு மகத்தான இராணுவ வெற்றி. முல்லைத்தீவு சமரில் முந்நூற்று முப்பத்தியிரண்டு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இறுதி நாள் சமரின்போது (26 ஜுலை) முல்லைத்தீவு பெரும் தளத்திலிருந்து இராணுவத் தளபாடங்களை புலிப் படைவரர்கள் அகற்றிக்கொண்டிருந்த சமயம், சிங்கள இராணுவம் ஆனையிறவுத் தளத்திலிருந்து *சத்ஜெய?” என்ற பெயரில் மின்னல் வேகத் தாக்குதலை நடத்தி, பரந்தனைக் கைப்பற்றியது. முல்லைத்தீவில், என்றுமில்லாத பெரும் தொகையில் உயிர்ச்சேதமடைந்து படுதோல்வியை சந்தித்ததன் காரணத்தால் அதிர்ச்சியுற்று இடிந்துபோன சிங்கள மக்களை திசைதிருப்பும் நோக்குடனேயே பரந்தன் மீதான படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. பரந்தனைக் கைப்பற்றியதையடுத்து, 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி கிளிநொச்சி பட்டினத்தை கைப்பற்றும் நோக்குடன் “சத்ஜெய 2 என்ற போர் நடவடிக்கையை சிங்கள இராணுவம் முடுக்கிவிட்டது. விடுதலைப் புலிப் போராளிகளின் உக்கிரமான எதிர்த்தாக்குதல் காரணமாக சிங்களப் படையினரால் தமது இராணுவ இலக்கை முழுமையாக அடையமுடியவில்லை. கிளிநொச்சிப் பட்டினத்தின் ஒரு பகுதி மட்டும் இராணுவத்திடம் வீழ்ந்தது. பலநாட்களாக சண்டை தொடர்ந்தது. முல்லைத்தீவில் சந்தித்த பேரிழப்புகளுக்கு பழிவாங்கும் நோக்கத்துடன், சிங்கள ஆயுதப் படைகள் பீரங்கிக் குண்டுகளை சரமாரியாகப் பொழிந்தும், விமானத் தாக்குதல்களை நடத்தியும், கிளிநொச்சிப் பட்டினத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் தரைமட்டமாக்கினர்.
கிளிநொச்சியில் கடும்சமர் நடந்து கொண்டிருந்த வேளை, நாம் கிளிநொச்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இராமநாதபுரம் எனப்படும் வன்னியின் பூர்வீகக் கிராமத்தில் வசித்து வந்தோம். எமது வீட்டிலிருந்து சரியாக இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமொன்று அமைந்திருந்ததால், அப் பகுதி நோக்கி தொடர்ச்சியாக விமானத் தாக்குதலும், பீரங்கிக் குண்டுவச்சும் இடம்பெறுவதுண்டு. இதனால் மீண்டும் ஆபத்துக்கள் நிறைந்த யுத்த பூமிக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு, மீண்டும் போரின் முழக்கங்கள் காதுகளை செவிடாக்கின.
இரவு வேளைகளில், நாம் வசித்த பகுதிக்குள் வெடித்துச் சித நிய ப்ரங்கிக் குண்டுகளின் அதிர்வால் எமது வீடு நடுங்கும். அவ்வேளைகளில், பாதுகாப்பிற்காக பதுங்கு குழிக்குள் சென்று ஒதுங்கவும் நாம் துணியவில்லை. அந்த நிலவறைக்குள் கொடிய விச ஜந்துகள் குடியிருந்தன. பீரங்கிக் குண்டால் உடல் சிதறிச் சாவது எத்தனை சாத்தியமோ, அதே போன்றே பதுங்கு குழிக்குள் குடியிருந்த விசப் பாம்புகள் தீண்டிச் சாவதும் சாத்தியமாக இருந்தது. எமது பதுங்குகுழி வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தது. குழிக்கு மேலாக பனைமரக் குத்திகள். அதற்கு மேலாக மண்சாக்கு மூட்டைகள். எமது மெய்ப்பாதுகாவலர்கள், அடிக்கடி அக் காப்பபணை சோதனை செய்வதுண்டு. ஒரு நாள், எமக்குத் திகைப்பூட்டும் வகையில், ஒரு பெரிய நாக பாம்புத் தோல், பதுங்கு குழிக்குள், பனைமரக் குத்திகளின் அடுக்குகளிற்குள்ளிருந்து தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். ஒரு நாகபாம்பு குடியிருப்பது ஊர்ஜிதமாகிவிட்டது. பனைமரக் குத்திகளின் இருண்ட இடைவெளிக்குள் பதுங்கியிருந்தது அப் பாம்பு. சில சமயம் குடும்பமாகக் குடிநடத்தலாம். சீற்றம் கொண்ட நாகம் தீண்டி, மெல்ல மெல்லச் சாவதை விட, இரவில் மெய்மறந்த தூக்கத்தில் திடீரென குண்டு வெடித்துச் சாவது பரவாயில்லையென எமக்குத் தோன்றியது. நாம் அப்படியே தீர்மானித்து, அதிஷ்ட தேவதையின் கையில் எமது விதியை ஒப்படைத்தோம்.
எமது வீட்டுக்கு சமீபமாக, எறிகணைகளும், விமானக் குண்டுவீச்சும் நிகழ்ந்தபோதும், இராமநாதபுரத்தில் நாம் வசித்த காலம் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. ரம்மியமான இயற்கைச் சூழலில் ஒரு அழகான வீடு; அதைச் சுற்றித் தென்னைமரச் சோலை கிழன்று விசாலித்து வளர்ந்து நின்ற வேம்புகள். முற்றத்தில் பல இனத்தைச் சேர்ந்த மாமரங்கள் செழிப்பாக காய்த்து கனியாகக் கொட்டின. மரச் சோலைகள், வன்னியின் வெப்ப சூழலைத் தணித்து, வீட்டைக் குளிர்மையாக்கின. இதனால் அங்கு வசிப்பதற்கு இதமாக இருந்தது. எமது அயலில் வாழ்ந்தவர்கள் மரபுவழிவந்த வன்னி மக்கள். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த இம்மக்கள், ஏதோ ஒரு வழியில், விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்து வந்தார்கள். இராமநாதபுரத்தில் எமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்தபோதும், சில இடையூறுகளும் இருக்கத்தான் செய்தன. ஒதுக்குப் புறமான கிராமம் என்பதால், சனப்பெருக்கம் நிறைந்த பகுதிகளிலிருந்தும், விடுதலைப் புலிகளின் செயலகங்களிலிருந்தும் அது தனிப்படுத்தப்பட்டூும் இருந்தது. அப்பொழுது எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதால், நீண்ட தூரப் பயணத்தை போராளிகள் தவிர்க்க வேண்டியிருந்தது. இதனால் எமது வீட்டிற்கு அதிகமானோர் வருவதில்லை. இந்த சூழ்நிலையில், கிளி நொச்சி மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் நேரம் நெருங்கியபோது, எம்மை அங்கிருந்து விலகி, போராளிகளின் இருப்பிடங்களுக்கு சமீபமாக குடியிருக்குமாறு பணித்தல் வந்தது. இதன்படி நாம் இராமநாதபுரத்திலிருந்து வெளியேறி, முல்லைத்தவில் ஓட்டிசுட்டானுக்கு அண்மையிலுள்ள வரலாற்றுப் புகழ் மிக்க கந்சிலைமடுவில் குடிபுகுந்தோம். இங்குதான் வன்னியின் கடைசி மன்னன் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் உள்ளது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய இம்மாவரன் இறுதியில் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
8.1 வன்னியில் எமது வாழ்ககை
இலங்கையின் வடபாகத்திலுள்ள வன்னிப் பிரதேசம் மழை வீழ்ச்சி குறைந்த ஒரு வரண்ட பூமி. வன்னி இராசதானியை ஆட்சிபுரிந்த பழைய தமிழ் மன்னர்கள் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குளங்களை அழைத்து நீரியல் விஞ்ஞானம் தழுவிய விவசாய உற்பத்தி முறையை உருவாக்கினர். முற்காலத்தில், வன்னிப் பிரதேசத்தில் உணவு உற்பத்தி தழைத்தோங்கியதால் தேவைக்கு மிகுதியானவை யாழ்ப்பாணத்திற்கும் தென்னிலங்கைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன என்று வன்னிக் கமக் காரர்கள் என்னிடம் சொன்னார்கள். சமூகக் கூட்டுறவு முறையிலான உற்பத்திக்கும் விநியோகத்துக்கும், ஊக்கமளித்த நீரியல் நீர்பாசன கமச் செய்கைக்கு அந்நிய காலனித்துவம் முடிவுகட்டியது. இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சிப் பீடம் ஏறிய சிங்கள அரசுகள் வன்னிப் பிரதேசத்தை முற்றாகப் புறக்கணித்தன. எந்த விதமான பொருளாதார திட்டங்களையும் செயற்படுத்தாமல் ஒதுக்கி வைத்தன. இதன் விளைவாக வன்னி மாநிலம் அபிவிருத்தியடையாத பின்தங்கிய பிரதேசமாக இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நிர் மாணிக்கப்பட்ட பழைய மன்னர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த குளங்களும், கால்வாய்களும் பாவனையின்றி தூர்ந்து உடைந்து போயின. இடையிடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அணைகள் அடித்துச் செல்லப்பட்டதால் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. நீர்பாசன முறை சிதைவுற்றதன் விளைவாக வன்னியில் வேளாண்மை சமூகத்தின் வாழ்க்கை அவலத்திற்குள்ளானது. இது ஒருபுறமிருக்க சிங்கள அரசினால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக நடுத்தர நிலச் சொந்தக்காரர்களுக்கும் வித்தியாசமான புதிய நெருக்கடிகள் தோன்றின.
வன்னியிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் தமது வீட்டுப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பவர்கள். வீட்டு வருவாயுடன் வாழ்பவர்கள். தென்னை, வாழை, மாமரங்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, இனி நெல் விழைச்சலில் கிடைக்கும் அரிசி, அத்துடன் தோட்டத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், ஆகியன வன்னி மக்களின் வீட்டு வருவாமாக இருந்தன. இந்த வருவாயுடன் அவர்களால் குமது விழக சமாளிக்க முடிந்தது. ஆயினும் உழவு இயந்திரங்கள் நரிறைக்கும் இயந்திரங்கள், ஆகியனவற்றிற்கு வையான் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. அத்தோடு உர வகைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அரசினால் விதிக்கப்பட்ட இப் பொருளாதாரத் தடைகளினால், வீட்டு வருவாயில் கங்கியிருந்த விவசாய சமூகம் மட்டுமன்றி வன்னியிலுள்ள ஏனைய சமூகங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். எரிபொருள் கிடைக்காததால், உழவு இயந்திரங்களைப் பாவிக்க முடியாத விவசாயிகள், பண்டைய முறைப்படி உழவு மாடுகளையும், கலப்பையையும் வயலுக்குக் கொண்டு சென்றனர் உழவு இயந்திரங்களை பாவிக்க முடியாததால், வில்லான் கூலிச் சுமையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. உரவகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விளைச்சல் வெகுவாகக் குன்றியது. இதனால் உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ விற்பனை செய்ய முடியவில்லை. அத்தோடு, சேமித்து வைக்கும் வசதி யில்லாததால் அவை அழுகிக் கெட்டுப் போவதுமுண்டு. உற்பத்தி செலவு அதிகரிப்பு, உற்பத்திப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான களஞ்சிய வசதியின்மை, சந்தைப்படுத்தும் வாய்ப்பின்மை ஆகிய காரணங்களால் மதக பயிர்ச் செய்கை மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்த்தனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. புகையிலைச் செய்கையிலும் இதே சிக்கல் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. புகையிலையை தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் சேமித்து வைத்த புகையிலைகள் அழுகிக் கெட்டுப் போயின. செய்கைபண்ணிய செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியவில்லை. கடனையும் செலுத்த முடியவில்லை. பண நெருக்கடியால் அன்றாட செலவுக்கே அல்லற்பட நேர்ந்தது. இந்தப் பொருளாதாரப் பிரச்சனைகளுடன் தடுமாறிக் கொண்டிருந்த மக்களுக்கு, வன்னியில் போர் தீவிரமடைந்து பரவியதால், இடம்பெயர்வு என்று இதுவனை காணாத் புதிய நெருக்கடி தோன்றியது. கிளிநொச்சி மீதான தாக்குதலைத் தொடாந்து. வன்னியுடாகளச் செல்லும் நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் நோக்குடன், “ஜெயசிக்குறு” என்ற பெயரில் சிங்கள இராணுவம் பெரியதொரு படையெடுப்பை மேற் கொண்டது. இதனால் என்னியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர நேர்ந்தது. வன்னிய விவசாயிகள் தமது வீடுகள், வயல்கள், கால்நடைகள், வீட்டுப் பொருனாதார வாழ்வு ஆகியவற்றைக் துறந்து பாடசாலைகள். கோவில்கள். அகதி முகாம்களில் கஷ்சமடைந்தனா.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து இறுதிப் பதிவரை நாம் வன்னியில் வசித்து வந்தோம். அப்பொழுது. மூன்று கைப்பட மக்கள் சமூகத்தை நாம் வன்னி௰ல் காணக்கூடியதாக இருந்தது. ஒக, உ_ளிஙரூர் வாசிகள். இரண்டான்து யாழ்ப் பணக்திலிருந்து இடம்பெயாந்கு க்கள், மூன்றானது உள்ளூரில் இடம் பெயர்ந்த வன்னி மக்கள், (1999ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், ஓயாத அணில்கள் - 3 இராணுவ நடவடிக்கையின் மூலம் வன்னி மாநிலக்தை விடுகலைப் புலிகளி! மீட்டெருக்குனதைத் தொடர்ந்து உள்ளூரில் இடம்பொயர்ந்கு என்னி மக்களி தமது சொந்த நிலங்களுக்குல் திரும்பிச் சென்று தமது இயல்பான வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர் என பின்பு அரிர்கோம்!. இதேவேளை, யாழ்ப்பாணத்திவிருந்து இடம்பெயர்ந்து வந்து மக்கள் முங்றாகளே வேறுபட்ட பிரச்சனைகள் முகம்கொடுக்க கேணடியருந்கது. சிஸ் ட்டை முழ சுக்குடன் வன்னிக்கு எங்கு இணிகளுக்கு இருப்பிடம் இருக்களில்லவை, வேலைவாய்ப்பும் கிடைக்களில்$லை. இணையான இவர்களது முக்கிய பிரச்சனையாக இருந்தது. வேறு வார்ச்கைகளில் சொல்வதானால் ஏதிலிகளான நிலையிலிருந்தே இவர்கள் மீணடும் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பயிர் செய்யக்கூடிய நிலங்களைக் தெரிவு செய்து, அவற்றைத் துப்புரவு செய்து, புதிய குடியேற்றத் திட்டங்களை அன்மத்து, இவகளை கூடியே்றுவகற்கு புலிகள் அமைப்பின் சமூக பொருளாதாரப் பிரிவுகள் கடும் முயற்சிகளை எடுத்தன, இது ஒருபுறமிருக்க, சுயமரியாதை கொண்டவர்களும், தங்கள் வழியைத் தா ங்கே பார்குதுக் கொன்னதாகக் கூறி கனி எழி சென்றனர். ெனிநாந்களிலுள்ள தமது சொந்த பந்தங்களிடமிருந்னு நிதியுதுவியைப் பெறுறு இளர்கள், குடிசைகளை அமைத்து ஒருவாறு நிலைமையைச் சமாளித்துபோதும், குடும்ப வாழ்னை ஓட்டக்கூழுப வேனலைனாய்ப்பைப் பெரழுழுயவில்லை. கவெளிநாடுகளிவிருந்து உசுவிபெொழுடியா த ஏழ்மையான மல்கனே பெரும பாசிப்பிற்கு ஆளாகினர். இகாகள் விடுதலைப் புலிகளிடமிருந்தும். அரச சார்பற்ற நிறுவனங்களிட மிருந்தும் சிறிய உதவிகளைப் பெற்று அகதி முகாம்களில் மிகவும் அவலமான வாழ்க்கையை நட கூதிவருகினறுனர். பணமின்றி. மூடியிருக்க எசதியின்றி, விரக்தியின் வினிம்பியகு தளிளஙய்பட்ட இம்மக்கள். செஞ்சிலுளைச் சங்கத்தினர் கொய்து பிளாளங்டிக் விரிப்புகளை மரங்களின் கழ் கட்டி அனற்றிய்குள் குழுயிருந்தனர். வீதியோரங்களில் அவர்கள் வீசிக்சு பகுதியால் நாங்கள் பகம் தடவைகள் சென்றிருக்கிறோம். மழைகொட்டும் வேளைகளில். பிளாஸ்டிக் கூடாரங்கள் அருகே. முற்றாகத் தோய்ந்து நனைந்தபடி கூனிரில் அனர்கள் நடுங்கிக் கொண்டிருப்பதையும் மழைய வெள்ளமாகப் பெருகி அவர்கள் சித்த சூழலை சேறும் சகதியுமாக மாற்றி யிருப்பதையும் நாம் நேரில் கண்டிருக்கின்றோேயம். 1905, 007 ம் அண்ப்களில், வன்னியில், கொடிய மலேரியா நோய் பரவியபோதும் இடம்பெயர்ந்த மக்கள் பேரனலத்திர்கு ஆளாகினார்கள். பொருளாதாரக் தடையினால் மருந்துகள் பெறமுடியாக சூழலில். விதிகளோரமும் மூலைமுடுக்குகளிலும் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்ட மக்கள் நந டுங்கியபடி போகுமிடம் தெரியாமல் அனஸ்தைப்பட்டனர். மலேரியா சகொற்றி, உடலை எரிக்கும் காய்ச்சலையும் அதனைத் தொடர்ந்து வும் குளிரையும் சமாளிப்பதற்காக, போசாக்குக் குறைவினால் துவண்டுபோன மது உடன், துவாய் அஸ்லது மெயஸ்லிய போர்னையினால் முடிக்கொண்டு எீதிகளில் அலைவதையும் நாம் கண்டிருக்கிறோம், தாய்மார்கள் தங்கள் நோயுற்ற குழந்தைகளை சுமந்தவண்ணம் கொட்டும் மழையில் அல்லது சுட்டெரிக்கும் வெய்யிலில் யருத்துவமனனக்கு செல்னதற்காக பாஸ்கரிப்பு நினலையங்களில் பலமணிநேரமாக காத்து நிற்பதையும் நாம் பார்ச்திருக்கின்ரோம். பனங்சிறுகாக காத்து நிற்பதை விட கால்நடையில் செல்வது உ கந்குது என எண்ணி வதியோரமாக தள்ளாடியபடி நடந்து செல்லும் நடைப் பிணங்களையும் நாம் காணக்கூடியதாக இருந்தது.
சொந்த முயற்சியினால் பலர் வேலை தேட முயற்சித்தபோதும் வேகஸைவாய்ப்பின்மையே பலருக்கு பாரிய பிரச்சனையாக உரு கத்துது. இதனால் ஏற்பட்ட பணமிந்நுக்கடி இடம் பெயர்ந்த யாழ்ப்பாண மக்களின் சுயகெளரனக்கதையும் தனிக்துவத்கைபும் பாதித்குதுடன் அவர்களை துன்பத்தின் எல்லைக்கே தூர சதிச் சென்றது, பொருளாதாரக் கடைகளும், வாழ்க்கைச் செலவு உயர்வும், உணவுக்காக பண்ணத் பசெல்னிடமுடியாத நிலைக்கு பல கூமும்பங்களைதக் தள்ளியது. பட்டிவியாஸ் பல் குடும்பங்கள் அளலப்பநீினதைக் கேள்வியுற்றுதும் விந்தைப் புலிகளின் புனர்வாழ்வு அணமப்பினர் இந அவலஸ்ப்படும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்து உதவினர். வன்னி முழுவதிலும் போசாக்கின்மை பரவியிருந்தது. போசாக்கின்மையால், பானை வயிறும், மெலிந்த காலும், சுருங்கிய தோலும் செம்பாட்டூநிற முடியுமாக குழந்தைகள் காட்சியளித்தனர். மலேரியா, நெருப்புக் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கும் சாதாரண காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் “பரசித்மோல்’ போன்ற மாத்திரை களுக்குக் கூட தட்டுப்பாடு நிலவியது. இந் நிலைமை மக்களின் அவல நிலையை மேலும் மோசமாக்கியது. இதனால் உயிரைப் பறிக்கும் நோய்களுக்கு மக்கள் ஆளாகும் ஆபத்து நிலவியது.
ஆயிரக்கணக்காக இடம்பெயர்ந்த மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் அல்லலாக இருந்தது. இந்த மக்களில் பலர், அக்கரைப் பச்சையைத் தேடி வவுனியாவுக்குச் சென்றனர். வவுனியா சென்ற மக்களை சிங்கள இராணுவமும் காவல்துறையும் கைது செய்து, அகதி முகாம்களுக்குள் தடுத்து வைத்தது. சுதந்திரமாக நடமாடும் உரிமை பறிக்கப்பட்ட இம் மக்கள் திறந்த வெளிச் சிறைகளில் தொடர்ந்து வாழவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் துணிச்சலான, ஆபத்தான பயணத்தை மேற் கொண்டோருக்கும் அங்கே அகதிமுகாம்களுக்குள் முடங்கவேண்டிய பரிதாப நிலை எழுந்தது. நிதி நெருக்கடியும் வளங்களின்: பற்றாக்குறையும் காரணமாக, விடுதலைப் புலிகளின் ஆதரவில் இயங்கிய உள்ளூர் புனர்வாழ்வு நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு படாதபாடு பட்டன. சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கம் ஈவிரக்கமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தது. உணவிற்கும், மருந்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடையை கடுமையாக இறுக்கிய அரசாங்கம் நிவாரண உதவிகளையும் வெட்டியது. இதனை ஆட்சேபித்து, இடம்பெயர்ந்த மக்கள் அரசுக்கு எதிராக பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். இந்த எதிர்ப்புகளாலும் பயனெதுவும் ஏற்படவில்லை. இதே சமயம், அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள், வன்னியில் இயங்கிவந்த அரச சார்பற்ற நிறுவனங்க ளையும் முடக்கிவிட்டன. அவதிப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை இந் நிறுவனங்களால் செய்ய முடியவில்லை. இதனால் இந் நிறுவனங்கள் மீது மக்கள் சந்தேகம் கொண்டனர். இவை அரசாங்கத்திற்கு. துணைபோவதாக - எண்ணினர். வன்னியில் தலைதூக்கிய மாபெரும் மனித அவலத்தை உலகத்தின் கவனத்திற்குக்கொண்டு வராததால், அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டதாக மக்கள் குற்றம் சுமத்தினார்கள். இடம்பெயர்ந்த மக்கள் அனைவருமே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அன்றி அனுதாபிகள் என்று அரசாங்கம் கருதியது. அதனால் திட்டமிட்டு கூட்டுத் தண்டனையாக இம்மக்கள் மீது அரசாங்கள் பல்வேறு துன்பங்களை வேண்டுமென்றே சுமத்தியது. இடம்பெயர்ந்த வன்னி மக்களின் துயரைத் துடைக்கும் நோக்குடனேயே விடுதலைப் புலிகள் இயக்கம் பொருளாதாரத் தடை நீக்கத்தை பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனையாக விதித்தது. இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பத்தில், நோர்வே அரசின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப் பட்டால்தான் பேச்சுக்களில் பங்குபற்ற முடியுமென விடுதலைப் புலிகள் அறிவித்தனர். ஆனால், பொருளாதாரத் தடையை நீக்கி, வன்னியில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதில் குமாரதுங்காவின் அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
உள்ளூர் விவசாயிகள், இடம்பெயர்ந்த மக்கள் போன்ற சமூகப் பிரிவினரைத் தவிர முல்லைத்தீவு, மன்னார் கரையோரப் பகுதிகளில் பெருந்தொகையான மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மீனவ சமூகத்தவரில் ஒரு பகுதியினர், முன்பு திருகோணமலையிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து, உள்ளூர் மக்களுடன் இணைந்தவர்கள். எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வன்னியில் வாழ்ந்த மீனவ சமூகம் பெரிதாகப் பாதிக்கப் பட்டதுடன், வறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டது. எரிபொருள் இல்லாததால் பெரும் இழுவைப் படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க முடியவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் முற்றாக முடக்கம் கண்டது. வேலையின்மையாலும், சந்தைக்கு கொண்டு செல்ல எதுவுமில்லை என்பதாலும் வருமானம் அறவே இல்லாத நிலையாலும் மீனவ மக்கள் பெரும் அவலத்திற்கு ஆளாகினர். கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு, வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்தார்கள். துணிந்து கடலில் இறங்கிய நூற்றுக்கணக்கான மீனவர்களை சிங்களக் கடற்படை ஈவிரக்கமின்றி கொன்றொழித்தது. அவர்களது துயர வாழ்க்கைக்கு மேலும் துன்பத்தைச் சுமத்துவதுபோன்று, கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்த விமானக் குண்டு வீச்சுகள் மீனவ மக்களின் குடிசைகளையும் படகுகளையும் நாசமாக்கின.
8.2 “ஜெயசிக்குறு” பமடையெருப்பு
இலங்கை இராணுவத்திற்கு பெரும் இகழைத் தேடிக் கொடுத்த “ஜெயசிக்குறு (வெற்றி நிச்சயம்) என்ற போர் நடவடிக்கை L221 மே. மாதம் 13ந் திகதி ஆரம்பமானது. இலங்கை இராணுவ நிறுவனம், முன். என்றும் இல்லாதவாறு பெருமளவில் பேராவலுடன் தொடங்கிய படையெடுப்பு முயற்சி இது. தென் ஆசியாவிலேயே நண்ட காலத்திற்கு நீடித்த வரலாற்றுச் சமர் இதுவென கருதப்பட்டது. இந்தப் போர் நடவடிக்கையை தயார்படுத்த நான்கு மாதங்கள் சென்றன. ஆயினும் இரண்டு வருடங்கள் வரை இந்தக் கொடும் சமர் இழுபட்டு ந்ண்டு சென்றது. இலங்கையின் வரலாற்றிலேயே சிங்கள இராணுவத்தினருக்கு ஏற்பட்ட அவமானம் மிக்க படுதோல்வியாக இச் சமர் முடிவடைந்தது. இந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை வன்னியின் இதய பூமியில் இரண்டு போர்முனைகளைத் திறந்து விட்டது. ஒன்று கண்டி - யாழ்ப்பாண நெடுஞ் சாலையிலுள்ள ஓமந்தை நொச்சிமோட்டைப் பகுதியிலும்; இரண்டாவது, நெடுங்கேணிக்கு அண்மையிலுள்ள கென்ட் - டொலர் பண்ணைப் பகுதி யிலும் போர் முனைகள் திறக்கப்பட்டன. வன்னியின் மையப் பகுதியூடாக வவுனியாவிலிருந்து கிளிநொச்சிவரை செல்லும் 80 கிலோ மீட்டர் தூரமான நெடூஞ்சாலையைக் கைப்பற்றுவதே இப் படையெடுப்பு நடவடிக்கையின் தந்திரோபாய நோக்கமாகும். வன்னிப் பெருநிலத்தை இரு பிரதேசங்களாக பிளவுபடுத்தி, விடுதலைப் புலிகளின் இராணுவ தளங்களை அழிப்பதே இப் படையெடுப்பின் அந்தரங்க திட்டமாகும். இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவலின்படி திரு. பிரபாகரனது தளமும் வன்னியின் மையப் பகுதியில் அமையப் பெற்றிருக்கின்றது என்பது அரசாங்கத்தின் கணிப்பு. எனவே, புலிகளின் தலைவரது பிரதான தளத்தை தேடி அளிப்பதும் இப் படையெடுப்பின் முக்கிய குறிக்கோளாகும். படைநடவடிக்கை ஆரம்பமானதும், பல்லாயி ரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர், விமானக் குண்டூவீச்சுகளின் உதவியோடு பீரங்கிகள், டாங்கிகள் சகிதம் இரு கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த முனைகளிலிருந்து முன்னேறினர். மரபுவழி யுத்தத்தில் தேர்ச்சி பெற்றிருந்த விடுதலைப் புலிப் படையணிகளும் ஆக்கிரமிப்பாளரை மூர்க்கமாக எதிர்த்ததால் சண்டை உக்கிர மடைந்தது. ஆக்கிரமிப்பு இராணுவம் நெடுங்கேணியை நோக்கி முன்னேற முயன்றபோது கற்சிலைமடுப் பகுதியிலும் எறிகணைகள் விழுந்து வெடிக்கத் தொடங்கின. இதனால் முல்லைத்தீவிலுள்ள புதுக் குடியிருப்பில், ஒரு வீட்டிற்கு இடம்பெயர்ந்தோம்.
புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது, சிங்கள இராணுவமும், விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் ஏவிவிடும் பீரங்கி எறிகணைகளின் பேரோசை நாளாந்த நிகழ்வாகிப் போனது. இதே சமயம், விமானப் படையின் போர் விமானங்கள், அகதி முகாம்கள் மீதும், பொதுசனக் குடியிருப்புகள் மீதும் கண்மூடித்தனமாக நடத்திய குண்டுவீச்சுகளில் பெருந்தொகையில் அப்பாவிப் பொதுமக்கள் உயிர் நீற்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. எறிகணைகளின் முழக்கங்கள் எமக்கு நன்கு பழக்கமாகிவிட்டன. பீரங்கிகளிலிருந்து ஏவப்படும் எறிகணைகள், மோட்டார் குண்டுகள், டாங்கிகளின் தாக்குதல்கள், ஆகியனவற்றை அவற்றின் ஓசைகளிலிருந்தும் அதிர்வுகளிலிருந்தும் நாம் அனுமானித்துக் கூறமுடிந்தது. இவை எங்கிருந்து எத்தகைய தொலைவிலிருந்து நடைபெறுகின்றன என்பதையும் எம்மால் தீர்மானிக்க முடிந்தது.
“ஜெயசிக்குறு” படையெடுப்பு ஒரு நீண்ட காலச் சமராக நீடிக்கப்போகின்றது என்பதை நாம் கண்டறிந்திருந்தோம். ஏனென்றால், தனது படைபலம் அனைத்தையும் ஒன்று திரட்டி சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பை முறியடிக்க வேண்டுமென திரு பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டிருந்தார். இந்த நோக்கத்துடன் கேணல் கருணாவின் தலைமையி லான மட்டக்களப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போரனுபவம் பெற்ற புலிப்படை வீரர்களை வன்னிக்கு அழைத்து, அவர்களை வன்னிப் பெரும் சமரில் ஈடுபடுத்தினார். நாட்கள், மாதங்களாக கடும் போர் தொடர்ந்தது. ஆயினும் நாங்களும் புதுக்குடியிருப்பு மக்களும், முடிந்த அளவிற்கு, வாழ்க்கையை இயல்புநிலை போன்று ஓட்டிக்கொண்டிருந்தோம். ஆயினும், எமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள், எமது பகுதியில் விமானத் தாக்குதல்கள் நிகழ்ந்த வேளைகளில், எம்மோடு சேர்ந்து, எமது வீட்டுக் காணிக்குள் கட்டப்பட்டிருந்த பதுங்குகுழிக்குள், பதுங்கவும் நேர்ந்தது. விமானத் தாக்குதல் முடிந்ததும் நாங்கள் பதுங்கு குழியிலிருந்து வெளியேறி எமது உரையாடலைத் தொடர்வோம். அத்துடன் விமானத் தாக்குதல் எங்கே நிகழ்ந்தது? உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதா? போன்ற செய்திகளை அறியவும் காத்திருப்போம்.
புதுக்குடியிருப்பு ஒரு சிறிய பட்டினம்தான். ஆயினும் முல்லைத்தவு மாவட்டத்தில் அதிக சனத்தொகை கூடிய இடமும் அதுதான். “புதிய குடியேற்றம்” என்பதுதான் புதுக்குடியிருப்பு என்பதன் அர்த்தம். நாமும் எம்மைப் போன்று பலரும் இங்கு புதிதாக குடியேறியிருந்தோம். பல்வேறு பாரம்பரிய கிராமங்களால் சூழப்பெற்ற இப்படினத்தில், விவசாயிகள், மீனவர்கள், மற்றும் பல்வேறு சாதிப் பிரிவினர், கத்தோலிக்கர், இந்துக்கள், உள்ளூர்வாசிகள், இடம்பெயர்ந்தோர் என பலவகைப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். இராணுவத் தாக்குதல்கள், இனவாத வன்முறைகள், அல்லது பலவந்தமான சிங்களக் குடியேற்றம் ஆகிய காரணத்தால் மட்டக்களப்பு, திருகோணமலை, கொக்கிளாய், கொக்குத்தொடூுவாய் போன்ற இடங்களிலிருந்து வடக்குக் கரையோரமாக இடம்பெயர்ந்த மக்கள் இறுதியில் புதுக்குடியிருப்பில் குடியேறினர். நாம் புதுக்குடியிருப்பில் வசித்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களையும் அங்கு சந்தித்தோம். நாயாறுக்கு அருகாமையிலிருக்கும் கொக்கிளாயி லிருந்து இடம்பெயர்ந்த ஒரு கூட்டுக் குடும்பம், எமக்கு அயலவர்களாக, தென்னஞ்சோலைக் காணியில் குடியிருந்தனர். சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாக, இக்குடும்பம் தமது சொந்தக் கிராமத்தை. யும் வீட்டையும் கைவிட்டூவந்து இங்கு வசித்து வருகின்றார்கள். இப் கூட்டுக் குடும்பத்திலுள்ள ஆண்கள், தங்களது கடின உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் இந்தக் காணியில் மூன்று குடிசை வடுகள் அமைத்து, கஷ்டத்துடன் அன்றாட சீவியத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் எப்பொழுதுமே குதூகலமாக இருப்பார்கள். எலும்பும் தோலுமாக மெலிந்து போயிருந்த அந்தக் குழந்தைகளின் கலகலப்பு எனக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது. உற்சாகமான களிப்பூட்டும் குரல்களால் “அன்ரி, அன்ரி” என்று வேலிக்குள்ளால் என்னை அழைப்பார்கள். “ஓ ந்களுக்கு என்ன வேண்டும்” என்று நான் கேட்பேன். “உங்களுடைய கோழிகளின் முட்டைகள் சிலவற்றை தருகிநீர்களா. எங்களுடைய கோழி அடை கிடக்கிறது. நீங்கள் முட்டைகளைத் தந்தால் அவற்றை அடை வைக்கலாம்” என்று குழந்தைகள் சொன்னார்கள். அவர்களுடைய அவசரத்தைப் பார்க்கப்போனால் நான் கொடுக்கப் போகும் முட்டைகளிலேயே அவர்களது வாழ்க்கை தங்கியிருப்பதுபோல தென்பட்டது. என்னிடம், பல்வேறு வித்தியாசமான இனத்தைச் சேர்ந்த கோழிகள் இருந்தன. அவை, அயல்வீட்டுக்கும் சென்று வருவதுண்டு. அந்த அழகான கோழி இனங்கள் குழந்தைகளின் ஆசையைக் கிளறியிருக்க வேண்டும். அவை போன்ற கோழி இனங்களை வளர்க்க அவர்கள் விரும்பியிருக்கலாம். என்னிடமிருந்த புதிய முட்டைகள் எல்லாவற்றையும் நான் அவர்களிடம் கொடுத்தபோது அவர்கள் அளவடைந்த மகிழ்ச்சியுற்றனர். ஒரு மாதம் கழித்து தங்கள் வீட்டில் பொரித்த கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கை பற்றிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டனர். கோழி வளர்ப்பு அந்தக் குடும்பத்திற்கு சிறு வருமானத்தைக் கொடுத்ததுடன், சத்துணவு உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது.
யாழப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த மற்றுமொரு குடும்பத்தினர் எங்கள் வீட்டின் பின்பக்கத்திலிருந்த காணியில் வசித்து வந்தனர். கங்கள் குடும்பத்தின் நகைகளையும், பொருட்களையும் ஈடுவைத்து, அந்த தரவை நிலத்தில் சிறிய குடிசையை கட்டி வாழ்ந்து வந்தனர். தங்களது கெளரவத்தை இழந்துபோகாது, மரியாதைபுடன் வாழவேண்டும் என்பதற்காக அந்தக் குடும்பத்தின் பெற்றோரும் வயது வந்த பிள்ளைகளும் படாதபாடுபட்டனர். கங்களுடைய ஏழ்மையை தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தி, அசல் யாழ்ப்பாணத்தவர்களுக்குரிய கற்பெருமையுடன் தனியாக ஒதுங்கி வாழ்ந்தனர். தாயும் மகளும், தங்களது சொற்ப வருவாய்க்கு ஏற்றவாறு விறகு பொறுக்கி, சிக்கனமாக, எளிமையான உணவு சமைத்து அமைதியாக வாழ்ந்து வந்தனர். தமிழர்களுக்கே உரித்தான தராள பபா த் இத் தாயும் மகளும், எனக்கு அடிக்கடி, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம், மற்றும் ருசியான பலகாரங்களை அனுப்பி வைப்பார்கள். இந்தக் குடும்பம் விடுதலைப் புலிகளின் நெருக்கமான ஆதரவாளர்கள். ஒரு மகனும், ஒரு மகளும் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்கள். இன்னொரு மகள், தனது இருபது வயதின் ஆரம்பத்தில் கரும்புலிகள் பிரிவில் ஒரு உறுப்பினராக செயற்படுகிறார். தாயாரின் உருக்கமான வேண்டுகோளில் மனமுருகிய அவரது மகன் புலிகள் அமைப்பிலிருந்து விலகி மீண்டும் குடும்பத்தில் இணைந்துள்ளார். ஆனால் இரு பெண் பிள்ளைகள் புலிகள் அமைப்பில் அங்கத்தவர்களாக செயற்பட்டனர். இறுதியாக வறுமையின் கொடுமை தாங்கமுடியாது, இக் குடும்பம் அக்கரைப் பச்சையைத் தேடி வெளிநாடு செல்ல முடிவெடுத்தது. புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அவர்கள் இந்தியா பயணமானபோது அவர்கள் செல்லமாக வளர்த்த அழகான “பொமனேரியன்” நாய்க் குட்டியை எனது பராமரிப்பில் விட்டுச் சென்றனர்.
எமது மந்றைய அயலவர் புதுக்குடியிருப்பில் காலம் காலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு வகைப்பட்ட சமூகப் பிரிவினர் இருந்தபோதும் புதுக்குடியிருப்பு சமூக அமைப்பில் இரண்டு மூன்று மூத்த குடும்பத்தினரே பூர்வீகக் குடியினராக இருந்தனர். பரந்த கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த இக் கமக்கார சமூகப் பிரிவினர் சொத்துடமை உள்ளவர்கள். சம்பிரதாயம் பேணும் இந்துக்களாக பண்டைய மரபுகளை கழுவி வாழ்ந்த இவர்கள், கமது சொந்த உ றவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்கள். இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, கோவில்களையும் சமயச் சடங்குகளையுமே சுற்றி வருகிறது. இருந்தபோதிலும், இக் குடும்பத்தினர் தங்களுடைய சமூகச் சடங்குகளுக்கு என்னை அடிக்கடி அழைத்து, தமது வாழ்வோட்டத்தில் எனக்கும் ஒரு சிறிய பங்கைத் தந்தனர். அண்மையிலுள்ள இந்து ஆலயத்தில் நிகழும் சமய வைபவங்களுக்காக அந்த வட்டுக்கார அம்மா அடிக்கடி சமையல் செய்வார். அப்பொழுதெல்லாம் அவருடைய பத்து வயது மகன் தனது தாயார் கொடுத்த பொங்கல் பிரசாதத் தட்டுடன் எனது வீட்டு சமயலறை வாசலில் தரிசனம் கொடுப்பார். கமான அந்த அம்மையாரின் கணவர் பாலாவுக்கு நன்கு தெரிந்தவர். விளைச்சல் காலத்தில், சாக்கு மூடைகள் நிறைய கச்சான், கடலைகளை பாலாவுக்கு அனுப்பி வைப்பார். சிவா, சக்தி என்ற பெயரில் இரு மயில்களை நாம் வளர்த்து வந்தோம். பாலாவின் அலுவலகத்தைச் சுற்றி ஏராளமான அணில்கள் மகிழ்ச்சியுடன் விளையாடும். இந்த அணில்களுக்கும், மயில்களுக்கும் தினமும் காலையில் ப த்ப்மபு! விதை களை ஊட்டுவதில் பாலாவுக்கு ஒரு இன்பம். நாம் “பரா’ என்று அன்புடன் அழைக்கும் திரு பரராஜசிங்கத்திற்கு இந்தக் குடும்பத்தினர் நெருங்கிய உறவினர். எமது நெருங்கிய நண்பரும், தமிழீழ விடுதலைப் ப அமைப்பின் நீகித்துறைப் பொறுப்பாளருமான பரா, எமது வீட்டுக் அண்மையில்தான் வசித்து வந்தார்.
தென்னை மரங்களும், மர முந்திரிகையும் சோலையாக வளர்ந்து நிற்கும் நான்கு ஏக்கர் காணியில், ஒரு ரம்மியமான சூழலில், எமது புதுக்குடியிருப்பு வீடு அமைந்திருந்தது. நாம் அன்புடன் வளாத பல்வேறு செல்லப் பிராணிகளும், பறவைகளும், ஊர்வனவும் எங்களைச் சூழ்ந்து வாழ்ந்தன. கொடிய விசப் பாம்புகளைத் தவிர எல்லாவிதமான பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் எமது வீட்டு வளவில் சுதந்திரமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. எமது வீட்டு சூழலில் தமக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்பதை இந்த உயிரினங்களும் உணர்ந்திருக்கலாம். அணில்கள் ஆனந்தமாக கூடி வாழ்ந்து பெருகின. மயில்கள் ஆடிக் கழித்துத் திரிந்தன. பூனைகளும், கட்டாக்காலி நாய்களும் கூட வட்டுக்கு வந்து சென்றன. சோலையாக நின்ற மரங்களில், பறவைகள் கூடுகள் அமைத்து குஞ்சுகள் பொரித்தன. எமது வ்ட்டுச் சூழல் உயிரினங்களின் காப்பகமாக விளங்கியது. வீட்டு முற்றத்தில் விசாலித்து நின்ற மாமரத்தின் நிழலில் கீழ், வட்ட வடிவில் அழகான ஒரு கொட்டகை. அதனைச் சூழ தென்னைமரச் சோலை. அதுதான் பாலாவின் செயலகம். இந்த அழகான அமைதியான “ஆசிரமத்தில்” தான் எம்மைத் தேடிவரும் விருந்தினர்களை நாம் வரவேற்று உரையாடூவதுண்டு. பல வகையான சமூக உறவுகளின் மையமாக எமது வீடு அமையப் பெற்றது எனலாம். எமது வீட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் களர்த்தப்பட்டு இருந்ததால், விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த போராளிகளும் பொதுமக்களும் எமது இருப்பிடம் வந்து செல்வார்கள். பல்வேறு அலுவல்களுடனும், பிரச்சினைகளுடனும் அவர்கள் வருவார்கள். தலைவர் பிரபாகரனுக்கும், தமக்கும் மத்தியில், பாலா ஒரு உறவுப் பாலமாக இருக்கிறார் எனப் போராளிகளும் பொதுமக்களும் கருதினார்கள். பல்வேறு பிரச்சனைகள், மனக்குறைகள், கோரிக்கைக ளாக சொல்லப்படுபவைகளை பாலா பொறுமையுடன் செவிமடுப்பார். தம்மால் தீர்வுகாண முடியாத பிரச்சனைகளை திரு. பிரபாகரனிடம் எடுத்து விளக்கி, தலைவர் மூலமாக அவற்றிற்கு தீர்வு காண்பார்.
8.3 எனது பார்வையில் திரு. பிரபாகரன்
எமது வீட்டிற்கு திரு. பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பார்தகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார். அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டு கால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம். இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப் பாதை யில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதே வேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படூம் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார்.
தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு. பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து. கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவயுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது. ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான. மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு ப கண்ணோட்டங்கள் தம் பு காரணம் என்ன?
1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு. பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு “குழந்தைப்” போர்வீரனாகவே களத்தில் இறங்கினார். சிறுபிராயத்திலிருந்தே அவர்சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒரு தலைமறைவு கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக அவர் ஒரு “தேடப்படும் நபராக” மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவ வேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது. காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், கேசிய கெளரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளைய்ட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக் கொண்டார். தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது.
ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடூுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதி பலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஓடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு. பிரபாகரன் ’ திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார். இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிங்கள அரசின் இனவெறிக்கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும். அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ் மொழிமீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றது. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை கமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளி வானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார். தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கெளரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது; தமிழீழ மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பது பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காண முடியாது. சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார். அவரது சில போர்த் தந்திரோ பாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.
பிரபாகரன் ஒரு கரும ஹர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான குத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயந்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார். தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச யந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது.
தனது போராட்ட இலட்சியத்தை பிரபாரகன் இன்னும் அடைய வில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான . ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழ்ழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்தி லிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டூள்ளனர்.
தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு. பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார். ஒருமுகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் ஆபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று.
திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக் கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலா சைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு. பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது. உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக் கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு. பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமை யென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டூு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு. போராட்ட வாழ்வு காலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிந்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார்.
சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவநறைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக் கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கை யின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து. ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப் படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடிய வில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவு வகை களை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்தி லிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு.
போர்க்கலையில் திரு. பிரபாகரன் அபாரமான ஆறறல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீிருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து. அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டூப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது.
தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபா கரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக் கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது. மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக் கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும்பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக் கொண்டார்.
மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார். தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கெளரவிப்பார். வரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபா கரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது. துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.
“நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது””என்று நான் பாலாவிடம் கேட்டேன். “இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்நம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்” என்று பாலா சொன்னார். கனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செய்ற்படும்போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு. பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது, நீதியானது, நியாயமானது. எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம்.
ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் கலைவருமாவார். தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும்பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக் கடப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடத்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை. பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீது படிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதிவிட முடியாது. பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக குகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாண பெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும் மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக் கொடுப்பார்.
பிரபாகரன் குடும்பப் பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது. பிரபாகரனுக்கு “கடமை ஓய்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார். 1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா. 1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன். முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டுமன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்துவருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண்குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர். பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குடடி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம். நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்ல முடியாது.
8.4 புலிகணின் திருமண வைபவங்கண்
விடுதலைப் புலிகள் அமைப்பின் திருமண வைபவங்களின்போதும், மற்றும் இந்த அமைப்பின் பல்வேறு பிரிவுகளாலும் நடத்தப்படும் சமூக நிகழ்வுகளின்போதும் திரு. பிரபாகரனையும் அவரது துணைவியான மதியையும் நாம் அடிக்கடி சந்திப்பதுண்டு. இந் நிகழ்வுகளில் பங்குகொள்வதே நாம் கழித்த மகிழ்ச்சிகரமான வேளைகள் எனலாம். ஏனென்றால் இந்நிகழ்வுகளின் போது பல மாதங்களாக காணமுடியாதிருந்த களத் தளபதிகளையும், மூத்த உறுப்பினர்களையும் போராளிகளையும் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். விடுதலைப் புலிகளின் திருமண வைபவங்கள் முற்போக்கானவை எனச் சொல்லலாம். ஏனென்றால் இத் திருமண வைபவங்களில் தமிழ்ப் பண்பாட்டின் பிற்போக்கான அம்சங்கள் களையப்பட்டு ஆக்கபூர்வமானவை சேர்க்கப்பட்டிருக்கும். உதாரணமாக விடுதலைப் புலிகளின் திருமண வைபவம் மிகவும் எளிமையானதாகவே நடைபெறும். சமயச் சடங்குகள் எதுவும் இராது. புதுமணத் தம்பதிகள் உறுதிமொழியெடுத்து, பதிவேட்டில் கைச்சாத்திட வேண்டும். மணப்பெண் கூறை அல்லது சிவப்புச் சேலையை அணிந்திருப்பார். மணமகன் வெள்ளை வேட்டியும், வெள்ளை சேட்டும் அணிந்திருப்பார். தமிழரின் பண்பாட்டிற்கு அமைய திருமண உறவுச் சின்னமாக மணமகன் மணமகளுக்கு தாலி கட்டூவார். ஆயினும் அதிலும் ஒரு மாற்றம். வழமையான தங்கச் சங்கிலியாகக் கட்டப்படும் தாலிக் கொடிக்குப் பதிலாக மஞ்சள் கயிறு கட்டப்படும். தங்கத்தால் செய்யப்படும் தாலியும் மதச் சின்னங்கள் அற்றதாக, சதுர வடிவில் தமிழ்க் கலாச்சார சின்னங்கள் பொறிக்கப்பட்டதாக இருக்கும். ஆடம்பரமான செலவுடன் தடல்புடலாக நடத்தப்படும் திருமணங்களுக்கு பதிலாக, மிகவும் எளிதான முறையில் நடத்தப்படும் இவ் வைபவம் புதுமையானதுதான்.
புலிகளின் திருமண வைபவத்தின்போது மணமகளின் தோழிகளாக வரும் பெண் போராளிகளுக்கு மூத்த களத் தளபதியான விதுசா தலைமை வகிப்பது வழக்கம். களத்தில் .கனல்பறக்கும் தளபதி யாக செயற்பட்டபோதும், சமூக வைபவங்களில் கூச்சமும், நாணமும் காட்டும் விதுசா, பரந்த புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவார். தனது தலைமையின் கீழுள்ள இளம்பெண் போராளிகள் தாம்பத்திய உறவில் இணைவதைக் காணும்பொழுது அவருக்கு உள்ளூர ஆனந்தம். இவ்வைபவங்களின்போது விதுசாவுடன் மூத்த பெண் போராளிகள் காணப்படுவர். இவர்களில் ஒருவர் தணிகைச் செல்வி. இவர் சிங்கள இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றிய பின்பு, பெண் போராளிகளுக்கு தலைமைதாங்கி, யாழ்ப்பாணத்தில் சகலைமறைவான கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் அரசியற் பிரிவில் செயலாற்றியதால், குமிழ்ப் பெண்களின் சமூகப் பிரச்சினைகள் பற்றிய ஆழமான அனுபவம் தணிகைச் செல்விக்கு இருந்தது. இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிரமித்து நின்ற காலத்தில், தலைமறைவாக நான் அங்கு வாழ்ந்த அனுபவம் எனக்கும் இருந்ததால், யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் தணிகைச் செல்விக்கு ஏற்பட்ட ஆபத்தான அனுபவங்களை என்னால் புரிந்துணர்வுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது. எதிரிப் படைகளால் சூழப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில், தலைமறைவு வாழ்க்கை நடத்துவது கத்தி முனையில் நடப்பது போன்று ஆபத்தானது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும், யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆபத்தான தலைமறைவு வாழ்க்கையின்போது அவருக்கு உயிராபத்து நிகழவில்லை. 2000 ஆண்டு மன்னாரில், பெண் போராளிகளின் படையணிப் பிரிவுக்கு தலைமைதாங்கி நடத்திய சண்டையின்போது தணிகைச் செல்வி வரச் சாவைத் தழுவிக்கொண்டார்.
விடுதலைப் புலிகளின் திருமண வைபவங்கள், அனேகமாக இயக்கத்தின் செயலகங்கள் ஒன்றில் நிகழ்வது வழக்கம். திருமண வைபவத்தையடுத்து, விருந்தினர்களுக்கு சிற்றுண்டி அல்லது சாப்பாடு பரிமாறப்படும். நண்பர்களும், தோழர்களும் ஒன்றுகூடி, கேலியும் கிண்டலுமாக சிரித்துப் பேசும் மகிழ்ச்சி ஆரவாரக் குரல்கள், விண்மீன்கள் ஒளிர்கின்ற அந்த வானத்தின் கழ், இரவின் தூய்மையான காந்றை நிரப்பும். இப்படியான வைபங்களில் டாக்டர் பத்மலோஜினி போன்றவர்களும் வருகை தருவதுண்டு. பத்மா என நாம் அன்பாக அழைக்கும் இவர்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன் முதலாக இணைந்து கொண்ட பெண்மருத்துவ நிபுணர். யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நான் வாழ்ந்த காலகட்டத்தில் என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகிய நண்பி. இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் போர் மூண்ட ஆரம்ப காலத்தில், வல்வெட்டித்துறையிலுள்ள ஊறணி மருத்துவமனையில் I கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் நான் முதன் முதலாக , பத்மாவை சந்தித்தேன். விழுப்புண் அடைந்த எமது இயக்கப் போராளிகள் சிலர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பத்மா அவாகளைப் பராமரித்து வந்தார். ஒரு தடவை காயமடைந்த போராளிகளை நான் பார்க்கச் சென்றபோது, பத்மா என்னிடம் ஒரு உதவி கேட்டார். இந்திய அமைதிப் -படை எந்நேரமும் தன்னைக் கைது செய்யலாம் என்றும், சைனைட் நஞ்சைக்கொண்ட கண்ணாடிச் சிமிழ் ஒன்றை பெற்றுத் தருமாறும் என்னிடம் கேட்டார். ஆபத்துக்களை. எதிர்நோக்கியபோதும், பத்மா காயமடைந்த எமது போராளிகளுக்கு இரகசியமான இடங்களில் தொடர்ந்தும் சிகிச் சையளிக்கத் தவறவில்லை. இறுதியில், இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், உளவியல் ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளானார். இந்திய இராணுவம் அவரை தடுத்து வைத்திருந்த படைமுகாமிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவரை விடுவிக்கக் கோரியதால், பத்மா ஈந்றில் விடுதலை செய்யப்பட்டார். இந்திய இராணுவத்தினரால் அவரது உளவுநுதியை உடைக்கமுடிய வில்லை. போர்க் களத்திலும், விடுதலைப் புலிகளின் மருத்துவமனைகளி லும், காயமடைந்த போராளிகளுக்கு பத்மா தொடர்ந்தும் சிகிச்சைய ளித்து வந்தார். காலப்போக்கில் அவரது பொறுப்புச் சுமை அதிகரித்தது. அடிப்படை மருத்துவ சிகிச்சை முறைபற்றியும், தாதிப் பேணுகை பற்றி யும், அவர் மருத்துவப் பிரிவுத் தொண்டர்களுக்கு பயிற்சி நடத்துவதுண்டு. அவருக்கு ஓய்வான நேரங்களில் பொதுமக்களுக்கும் தொண்டாற்றுவார். இறுதியில் அவர், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. கரிகாலனை திருமணம் செய்துகொண்டார்.
விடுதலைப் புலிகளின் திருமணங்கள் மற்றும் இயக்கத்தின் விசேட வைபவங்களை ஓழுங்கு செய்யும் பொறுப்பை திரு. பிரபாகரன் எப்பொழுதும் திரு. தமிழ்ச்செல்வனிடமே ஒப்படைப்பார். தமிழ்ச் செல்வன், 1984ம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் மிகவும் இளம் பிராயத்தில் போராட்டத்தில் இணைந்தவர். இளைஞராக இருந்தபோதும் அவரிடம் காணப்பட்ட இலட்சிய வேட்கையும் உறுதிப்பாடும் பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ்ச் செல்வனுக்கு பயிற்சி முடிந்ததுமே, அவரைத் தனது மெய்ப் பாதுகாவலர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து தனது உள்வட்டத்துக்குள் இணைத்துக் கொண்டார். பின்னர் தமிழ்ச் செல்வன் தென்மராட்சிப் பிராந்தியத்தின் தளபதியாக பதவி உ யர்த்தப்பட்டார். தென்மராட்சித் தளபதியாகப் பொறுப்பேற்றதை அடுத்து, மிகவும் ஆபத்தான சவாலை எதிர்கொள்ள வேணடிய௰ நிர்ப்பந்தம் தமிழ்ச் செல்வனுக்கு ஏற்பட்டது. தென்மராட்சியை ஆக்கிரமித்து நின்ற இந்திய அமைதிப் படையை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடித்ததால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதி யாக அவர் பதவியுயர்வு பெற்றார். யாழ்ப்பாணத்தில், பல சமர்களில் பங்குபற்றிய தமிழ்ச் செல்வன் பலதடவைகள் காயமடைந்தார். விழுப்புண் அடைந்த தழும்புகள் இன்னும் அவரது உடலில் இருக்கின்றன. பூநகரிச் சமரின்போது மிகவும் ஆபத்தான முறையில் அவர் படுகாயமடைய நேர்ந்தது. அவருக்கு சமீபமாக விழுந்து வெடித்த விமானக் குண்டுச் சிதறல்கள் அவரது இடது காலை சிதைத்தது. கால் எலும்பு நொருங்கி, தொடைச் சதை சிதறி, மெருமளவு இரத்தம் சிந்தியபடி அவர் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் அப்பொழுது தப்பிப் பிழைத்தது ஒரு அதிசயம்தான். அவர் முழுமையாக குணமடைய நீண்ட காலம் பிடித்தது. ஊன்று தடியுடன் நடைபயின்று, கடமையில் ஈடுபட்டார். மாத்தையாவின் சதிமுயற்சியை அடுத்து, கிட்டுவும் வங்கக் கடலில் இந்திய கடற்படையின் தலையீட்டால் அகால. மரணத்தைத் தழுவிக் கொண்டதற்குப் பின்னர் தமிழ்ச்செல்வன் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார். இப்பொழுதும் அப்பொறுப்பில் அவர் பணிபுரிந்து வருகிறார்.
பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால், அரசியல் துறைப் பொறுப்பாளர் என்ற பதவியுடன் வேறு பல பொறுப்புகளும் அவர் மது சுமத்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் முக்கிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதும் இப் பொறுப்புகளில் ஒன்று. அரசியல் நிர்வாகத் துறைக்கு பொறுப்பாளரான திரு. சுதா (தங்கன்) தமிழ்ச் செல்வனின் உதவியாளர். இவர் மிகவும் திறமைசாலி. அயராது உழைப்பவர். மதிநுட்பமாகச் சிந்தித்து செயற்படுபவர். நாம் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் வசித்தபோது, எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் பொறுப்பை தமிழ்ச்செல்வன் சுதாவிடம் ஒப்படைத்திருந்தார். தமிழ்ச்செல்வனின் அக்கறையோடு சுதாவின் ஆற்றலும் இருந்த காரணத்தினால் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் எமது வாழ்க்கை வசதியாக அமைந்தது. தமிழ்ச்செல்வன் எம்மீது தூராள மனப்பான்மை EE anil, நாம் வசதியோடு வாழவேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார். வவுனியா நகரிலிருந்து விசேடமாக பெறப்பெற்ற முல களையும் மரக்கறிவகைகளையும் அவர் எனக்கு அடிக்கடி அனுப்பி வைப்பார். இயக்கத்தோடு இணைந்த பாலாவின் நீண்ட வரலாற்றிற்கும், அவரது அனுபவத்திற்கும் ஆழ்ந்த அறிவிற்கும் மதிப்பளிக்கும் தமிழ்ச்செல்வன், பல விடயங்களை அவருடன் கலந்தாலோசித்து அவரது ஆலோசனையைப் பெறுவார். அரசியற் செயற்பாடுகளில் தனது மதிநுட்பத்தைப் பாவித்து தமிழ்ச்செல்வனுக்கு பாலா ஆதரவு அளித்து வந்தார். அரசியல் பிரச்சினைகள் பற்றி அலசுவதற்கு மட்டுமன்றி உணவு அருந்துவதற்காகவும் தமிழ்ச்செல்வன் எமது வீட்டுக்கு அடிக்கடி வருவார். மீன் தலையுடன் நான் சமைக்கும் பால்சொதி அவருக்கு மிகவும் பிடிக்கும்.
8.5 விருதலைப் போரின் நாயகர்கன்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களாக, பொதுமக்களாலும் போராளிகளாலும் போற்றி மதிக்கப்படும் மூத்த களத் தளபதிகளும் எமது வீட்டுக்கு வருகைதருவதுண்டு. இம் மூத்த தளபதிக ளில் நருவர் சூசை. கடற்புலிகளின் விசேட தளபதியான சூசை வடமராட்சியிலுள்ள பொலிகண்டி எனும் கடலோரக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனக்கும் பாலாவுக்கும் நெருக்கமானவர். சூசைக்கும் எமக்கும் மத்தியிலான உறவு மிகவும் நண்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டை இந்திய இராணுவம் ஆக்கிமித்திருந்த வேளை, நாம் வடமராட்சியில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தி லிருந்தே சூசையை எமக்கு நன்கு தெரியும். பிரேமதாசா அரசுடன் பேச்சுக்களை முடித்துக் கொண்டு 1990ல் நாம் யாழ்ப்பாணம் திரும்பியபோது மீண்டும் சூசையுடன் தொடர்பைப் புதுப்பித்தோம். கடற்புலிகளின் விசேட தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னராக, அவர் வடமராட்சிப் பிரதேசத்தின் தளபதியாக பணிபுரிந்தவர். அந்தக் காலத்தில்தான் சூசையின் திருமணத்தை பாலா மழழுங்கு செய்தார்.
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவுத் தளபதி என்ற பொறுப்பில் சிறப்புடனும் செல்வாக்குடனும் முன்னேற்றம் அடைந்தார் சூசை. கடற்படைப் பிரிவை கட்டியெழுப்புவதில் அவர் ஈட்டிய வெற்றிகள்தான் அவரது புகழுக்கு காரணம். சூசை திரு. பிரபாகரனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். ஈழப் போரில் கடலாதிக்கத்தின் கேந்திர முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்த பிரபாகரன், தமிழரின் கடற்படையை கட்டியெழுப்புவதில் சூசைக்கு சகல விதமான உதவிகளையும் செய்து வந்தார். பிரபாகரனின் பேரார்வமும், ஆக்க - சிந்தனையும், சூசையின் கடின உழைப்பும், நிர்வாகத் திறனும் ஒன்றிணைந்ததால், விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவு, கடற்போரில் ஆற்றல் மிகுந்த சக்தியாக உருவெடுத்து சிறீலங்காவின் கடற்படைக்கு பெரும் சவாலாக அமைந்தது. சூசையின் தலைமையின் கழ் செயற்பட்ட கடற்புலிகள், எத்தனையோ கடற்சமர்களில் ஈடுபட்டு, சிங்களக் கடற்படைக் கப்பல்களை பெரும் தொகையில் நாசம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி, மிகவும் சாதுரியமான, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தரையிறக்கங்களைச் செய்து, வெற்றிகரமான பல தரைச் சமர்களுக்கும் உதவி புரிந்திருக்கின்றார்கள்.
கடற் சமர் புரிதல், தரையிறக்கம் செய்தல், போராளிகளின் போக்குவரத்திற்கு உதவுதல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டுவரும் கடற் புலிகளிடம் ஒரு சிறிய பிரிவுண்டு. இவர்கள் தினமும் ஆழ்கடலில் மீன்பிடித்து, தமது பிரிவிற்கும், பயிற்சி முகாம்களுக்கும் மீன் விநியோகம் செய்வர். இந்த மீன் பிடிப் பிரிவினால் பயன் பெறுபவர்களில் ஒருவர் பாலா பாலாவுக்கு மீன் நன்கு பிடிக்கும். அதுவும், உடன் மீன் என்றால் ன்றாம் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் மதிய போசனத்திற்காக, கரையிலிருந்து சூசை அனுப்பி வைக்கும் விதம் விதமான உடன் மீன்களை ரசித்து உணபார் எனது கணவர்.
சமூகத்தில், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் இயல்புள்ளவர் என்பதால், சூசை பொதுசனங்கள் மத்தியில் பிரபல்யமானவர். நேர்மையும், பரிவும், பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகும் பண்பும் அவருக்குண்டு. அவருடைய அன்புள்ளமும், தாராள மனப்பானமையும அவரது மனைவியான சுதாவைக் கவர்ந்திருக்க வேண்டும். சூசைக்கும் சுதாவுக்கும் இரண்டு குழந்தைகள். மூத்த பெண் குழந்தையின் பெயர் சிந்து. ஆண் குழந்தையின் பெயர் மணியரசன் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நாம் வசித்தபோது, சூசையும் அவிரது குடும்பத்தினரும் எமது வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். நாமும் அவர்களது வீட்டுக்கு சென்று வருவோம். அவர்களது வீட்டில் எமக்கு பிரமாதமான விருந்து தருவார்கள். மிகவும் பாசத்துடன் உ பசரிப்பார்கள் சுதா, வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி என்னுமிடத்தைச் ச்ர்க்தவிர் விடுதலைப் போராட்ட களத்தில் முதற்பலியான சங்கரின் (சத்தியநாதன்) சகோதரி. சங்கர் உயிர்நத்த தினமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வருடாந்த மாவரர் நாளாக கொண்டாடப்படுகின்றது. அன்பும் அமைதி யான பண்பும் கொண்ட சுதாவின் குணவியல்பு சூசையின் குடும்பத்தின் சிறப்பியல்பு. குடும்பத்தில், எப்பொழுதுமே அமைதியான ஒரு ஆனந்தத்தைக் காண முடியும்.
விடுதலைப் போரில் புகழீட்டிய களத் தளபதிகளில் சொர்ணம் முக்கியமானவர். இவரும் எமது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். உயர்ந்த உருவம். திடகாத்திரமான உடற்கட்டு. சொர்ணத்தின் போராட்ட வரலாறு எண்பதுகளின் நடுப்பகுதியில் ஆரம்பமாகிறது. அப்பொழுது அவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராகப் பணிபுரிந்தார் பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய உதவியாளர் என்ற் தகைமையுடன், சொர்ணம் சென்னையிலுள்ள எமது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். இந்தியப் படை தமிழழத்தை ஆக்கிரமித்திருந்த காலத்தில்தான் சொர்ணத்தின் அபாரமான துணிவும் போர்த் திறனும் நிர்வாக ஆற்றலும் வெளிப்பாடு கண்டது. இதனால் புலிகளின் ர்க் கட்டமைப்பில் அவருக்கு பதவியுயர்வு கிடைத்ததுடன், ஈந்றில் பிரபாகர னின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் பொறுப்பாளராக முக்கிய பணியில் அமர்த்தப்பட்டார். இயக்கப் போராளிகளும் சரி, அவரது பொறுப் பதிகாரத்தின் கீழ் பணிபுரிந்த போராளிகளும் சரி, அவருக்கு அன்பையும், மதிப்பையும், மரியாதையையும் சொரிந்தனர். போராளிகள் மத்தியில் அவர் பழகும்பொழுது இது வெளிப்படையாகத் தெரியும். களத்தில் முன்நின்று படைநகர்த்த எப்போதும் தயார் நிலையில் இருக்கும் துணிவு, போரினால் எழும் துன்ப துயரங்களை சுமக்கும் உறுதிப்பாடு, தனது தலைமையின் கீழுள்ள வீரர்களை ஒழுக்கத்துடனும் கட்டூப்பாட்டூுடனும் வைத்திருக்கும் ஆற்றல், ஆகிய பண்புகள் காரணமாகவே சொர்ணம் மீது போராளிகள் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர். பல சமர்களில் அவர் மகத்தான வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். பல தடவைகளில் காயமும் அடைந்திருக்கிறார். பெரிய உருவமும், மென்மையான உள்ளமும் படைத்த இந்த இளம் வீரன், யாழ்ப்பாண சமர் ஒன்றின்போது நெஞ்சில் படுகாயமடைந்து யாழ்ப்பாண மருத்துவமனையில் அவதியுற்றதைக் கண்டபோது எமக்கு மனவருத்தமாக இருந்தது.
நாம் வலிகாமத்தில் வசித்து வந்தபோது, எமது பாதுகாப்பின் பொறுப்பையும் திரு. பிரபாகரன் சொர்ணத்திடம் ஒப்படைத்திருந்தார். பிரபாகரனின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் பிரிவிலிருந்து, எமது பாதுகாப்பு தேவைகளுக்காக, போராளிகள் குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு எமது வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டது. எமது பாதுகாப்பு சூழ்நிலையைக் கண்காணிக்கவும், எமது மெய்ப்பாதுகாவலர்களான போராளிகளின் தேவைகளைக் கவனிக்கவும், சொர்ணம் எமது வீட்டுக்கு அடிக்கடி வருவார். ஆறடி இரண்டு அங்குல உயரமிருக்கும். கட்டமைப் பான உடல். நேர்த்தியாக சீருடையணிந்த கம்பீரமான தோற்றம். பெரிய இராணுவப் பொறுப்புகளைச் சுமந்தபோதும், மென்மையாக, எளிமை யாகப் பழகுவார் சொர்ணம்.
திரு. பிரபாகரனுக்கு மெய்ப்பாதுகாவலராக 24 மணிநேரம் தொண்டு செய்தும், பின்பு போர்க் களங்களில் உயிராபத்திற்கும் மத்தியில் பணிபுரிந்து வந்த சொர்ணம் திருமணம் செய்துகொண்டபோது நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஜெனி எனப்படும் அழகான இளம்பெண்ணை மணந்துகொண்டார். ஜெனி ஒரு பெண் போராளி. அப்பொழுது, பெண்கள் படைப்பிரிவின் கட்டளைப் ப்டத்தில், மூன்றாம் இடத்தில் அவர் பணி புரிந்தார். சிங்கள இராணுவத்தின் யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பின்போது அவர் வசித்த வீடு மீது குண்டு வீசப்பட்டது. அப்பொழுது கர்ப்பிணியாக இருந்த ஜெனி தெய்வாதீனமாக உயிர் . தப்பினார். இச் சம்பவத்தின்போது சொர்ணம் வீட்டிலில்லை. முன்னேறி வந்துகொண்டிருந்த சிங்களப் படையணிகளை எதிர்த்து களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தார். வன்னியில் நாம் வசித்தபோது, சொர்ணம் திருகோணமலைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் ஜெனியைப் பிரிந்து நண்ட காலமாக திருகோணமலையில் அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. பிரிவுத் துயரிலிருந்த ஜெனிக்கு சிறு ஆறுதல் கொடுப்பதற்காக நானும் எனது கணவரும், அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவோம். நாம் வன்னியிலிருந்து வெளியேறிய பொழுது, இரு சிறிய பெண் குழந்தைகளுடன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
மூத்த களத் தளபதிகளில் வீரத்திற்கு இலக்கணமாக திகழ்ந்து, போர்க் கலையில் விற்பன்னராக விளங்கி, பல்வேறு களம் கண்டு பல சாதனைகளைப் படைத்தவர்கள் என்றால் பானுவையும், தீபனையும், பால்ராஜையுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். போராளிகளிடமும் பொது மக்கள் மத்தியிலும் இம்மூவருக்கும் பெருமதிப்புண்டு.
முன்னாள் யாழ்ப்பாணத் தளபதியாகப் பணிபுரிந்த பானு அபார துணிச்சலுடையவர். போர்க் களத்தில் தனது உயிரை துச்சமென மதித்து படை நடத்துபவர். கிட்டு பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியாக பணிபுரியும் அவர், தனது படைப் பிரிவினரை மிக உயர்ந்த நிபுணத்துவ தரத்திற்கு வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிப் படையணிகள் தலை சிறந்த மரபுவழி இராணுவ சக்தியாக வளர்ச்சி பெற்றமைக்கு இவருக்கும் பங்குண்டு. இவரது தலைமையின் கீழ் இயங்கும் பீரங்கி, மோட்டார் படைப்பிரிவுகள் பல்வேறு முக்கிய சமர்களில் பிரமாதமான வெற்றி களைய்ட்டி, விடுதலைப் போருக்கு பெரும் பங்காற்றின.
அரசியல் நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக பானு எமது வீட்டுக்கு வந்து போவார். பானுவிடமிருந்தே வன்னியின் நில வரைபடங் களை பாலா பெறுவதுண்டு. போர்க்கள நிலவரங்களையும் எதிரியின் படை நகர்வுகளையும் விபரமாக அறிந்து கொள்வதற்கு இந் நிலவரைபடங்கள் பாலாவுக்கு உதவியாக இருக்கும். பாலாவின் கிண்டலும் பகிடியும் பானுவுக்கு நன்றாகப் பிடிக்கும். பானு ஒரு நகைச் சுவை ரசிகர். எனவே, இருவரும் சந்தித்து உரையாடும்போது பாலாவின் செயலகக் கொட்டில் சிரிப்பொலியில் அதிர்ந்தபடியிருக்கும்.
மூத்த களத் தளபதிகளில் முக்கியமான இடத்தை வகிப்பவர் தீபன். இவர் வன்னியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எத்தனையோ களங்கள் கண்டவர். போர்க் கலையில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்று முதிர்ந்தவர். மென்மையாகப் பேசுவார். அடக்க ஓடுக்கமானவர். போர்க் கலையில் அவரது அபாரமான திறனாறந்றல் காரணமாக இயக்கத்தில் அவருக்கு பெயரும் புகழும் மேலோங்கி நிற்கின்றது. அப்படிப்பட்ட பிரபல்யமான ஒருவர் மிகவும் பணிவாகவும் அடக்கமாகவும் மக்களோடும் போராளிகளோடும் பழகுவதைக் காண ஆச்சரியமாகவே இருக்கும். வெளித்தோற்றம் இவரது உள்ளார்ந்த இயல்புகளைப் புலப்படுத்தத் தவறினும், போர்க்கலையில் இவர் ஒரு வித்தகர். உறுதியில் ஒரு இரும்பு மனிதர். இப்படியான இவரது சிறந்த பண்புகளே போராளிகளை களத்தில் அபூர்வ சாதனை புரியத் தூண்டுகின்றன. தீபன் எமது வீட்டுக்கு வருகை தந்து பாலாவுடன் உடையாடும்பொழுதெல்லாம் கள நிலவரங்களை துல்லியமாக எடுத்து விளக்குவார். அத்தோடு பாலாவிடம் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நிலைமைகள் பற்றியும் ஆவலுடன் கேட்டறிவார்.
விடுதலைப் போரில் மகத்தான சாதனைகளைப் படைத்து, நண்ட கள அனுபவங்களைக் கொண்டவர் பால்ராஜ். இவர் மிகவும் அரிதாக எமது வீட்டுக்கு வந்தபோதும் எமக்கும் அவருக்கும் மத்தியில் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் உண்டு. நம்பமுடியாத அளவிற்கு இந்த மாவீரன் மிகவும் அடக்கமானவர்; தற்பெருமையற்றவர்; எளிமையானவர். போர்க் களத்தில் அவர் ஈட்டிய சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. பால்ராஜ் அபாரமான துணிவுடையவர். தனது தலைமையின் கீழுள்ள. போராளிகளுடன் பாசத்துடன் நெருங்கிப் பழகுவார். அவர்களது நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். இதனால் போராளிகள் இவர் மீது ஆழமான நேசமும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள். களத்தில் போராளிகள் செய்யும் அர்ப்பணிப்புகளையும் சாதனைகளையும் கருத்தில்கொண்டு, தனது ஓய்வான நேரத்தின் பெரும் பகுதியை, முகாம்களில் போராளிகளுடன் செலவிடூவார் பால்ராஜ.
1993ம் ஆண்டு நிகழ்ந்த “யாழ்தேவி” சமரில் பால்ராஜ் காய மடைந்தார். பீரங்கிக் குண்டு வெடித்து அவரது கால் ஒன்றைச் சிதைத்தது. அவரது காலைத் துண்டிப்பதில்லையென மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதனால் சிதைந்துபோன கால் குணமாகும்வரை அவர் அனுபவித்த வேதனையும் வலியும் விபரிக்க முடியாதது. நாம், அடிக்கடி யாழ்ப்பாண மருத்துவமனைக்கு சென்று பால்ராஜை பார்த்து வருவோம். அப்பொழுதெல்லாம் அவர் அனுபவித்த உடல் உபாதை, அவரது முகத்தில் தெரியும். நீரிழிவு வியாதியும் இருந்ததால் அவர் குணமடைவதில் தாமதமேற்பட்டது. பல மாதங்களாக மருத்துமனைப் படுக்கையில் வேதனையுடன் போராடி இறுதியாகக் குணமடைந்தபோதும் அவர் நொண்டித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. என்றாலும், தனது விழுப்புண் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தனக்கு நிகழ்ந்ததை அற்ப விடயமாகக் கருதும் அவர், இதனைவிட எத்தனையோ பெரும் துன்பங்களை போராளிகள் அனுபவித்த்துமட்டூுமன்றி மகத்தான தியாகங்களையும் புரிந்துள்ளனர் எனச் சொல்வார். இப்பொழுதும் யுத்த அரங்கில் களத் தளபதியாக பணிபுரிந்து வருகிறார் பால்ராஜ்.
திரு. தமிழேந்தி தனித்துவமானவர். எவருடனும் ஓஒப்புவமை செய்ய முடியாத வித்தியாசமான மனிதர். பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். மிகவும் அரிதாக எப்பொழுதாவது எமது வீட்டுக்கு வந்து செல்வார். இவர் ஒரு மூத்த உறுப்பினர். ஆரம்ப காலங்களிலிருந்து பிரபாகரனது வலது கரமாக இயங்கி வருபவர். காலப்போக்கில் இவர்களது உறவு மிகவும் நெருக்கமாக மாறியது. பிரபாகரனின் உள்வட்டத்தில் ஒருவாராக செயற்பட்ட திரு. தமிழேந்தி நீண்ட காலமாகவே விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவிற்கு: பொறுப்பாளராக இருந்து வருகிறார். பல ஆயிரம் கோடி பணத்தைக் கையாண்ட இம் மனிதர் நேர்மையானவர்; ழழுக்க சீலர். விடுதலைப் போரின் வெற்றிக்கு ஆயுதம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அது போன்றதுதான் நிதியும் என்பது தமிழேந்தியின் தத்துவம். இந்தக் கொள்கையுடன் நீண்ட காலமாகவே, எத்தனையோ நெருக்கடிகள் மத்தியிலும் இயக்கத்தின் நிதிப் பிரிவைச் சிறப்பாக, பொறுப்பாக கையாண்டு வருகிறார். இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளின் செலவீனங்களுக்கு நிதியைப் பகிர்ந்து வழங்குவதில் இவர் காட்டும் கண்டிப்பும் இறுக்கமும் சில சமயங்களில் இவருக்கு கண்டன விமர்சனங்களையும் தேடிக் கொடுப்பதுண்டு.
தமிழ் மொழியிலும், பண்டைய தமிழ் இலக்கியத்திலும் இவருக்குள்ள அலாதியான காதல், திருவள்ளுவரின் அறநெறித் தத்துவத்திலுள்ள ஆழமான பந்று, தென்னிந்திய திராவிட இயக்கத்தின் சீரழிவால் அவருக்கு ஏற்பட்ட ஆதங்கம் - இவற்றால் தமிழ்த் தூயவாதி என்ற பட்டப் பெயரையும் இவர் தேடிக்கொண்டார். இப்படியான தனிப் போக்குகளும் பற்றுகளும் இருந்தபோதும் தமிழேந்தி மிகவும் பண்பான மனிதர்; மதிநுட்பமுடையவர். விடுதலைப் போராட்டத்தில் மூன்று சகோதரர்களை களப் பலி கொடுத்தவர் என்பதாலும், போராளிகளும் பொதுமக்களும் செய்த அளப்பரிய ஈகங்களுக்கு பெருமதிப்பு அளிப்பார் என்பதாலும் தமிழ் மக்கள் தமிழ்ழத் தனியரசுக்கு உரித்தானவர்கள் என்பதில் தமிழேந்திக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
விதுஷா பெண் தளபதிகளில் மிகவும் பிரபல்யமானவர். எல்லோரினதும் மதிப்பிற்குரியவர். தனித்துவமான சிறப்பியல்புகளைக் கொண்டவர். விதுஷா எமது வீட்டிற்கு அரிதாக, எப்பொழுதாவது வருவார். எனினும் இவரை . இளம் வயதிலிருந்தே எமக்குத் தெரியும். வடமராட்சியில் கப்பூது எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அபூர்வமான செயற்திறனைக் கொண்ட இவ் வீராங்கனை மிகவும் தன்னடக்கமானவர். விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்கும் மத்தியில் பேச்சுக்கள் நிகழ்ந்த காலத்தில் நான் முல்லைத்தீவிலுள்ள அலம்பில் காட்டிற்கு விஜயம் செய்தபோது, பெண்களுக்கான அதிரடிப் பயிநீசி முகாமில் விதுஷாவைச் சந்தித்தேன். இயக்கத்தில் இணைந்த அந்த ஆரம்ப காலத்தில் அவருக்கு பதவி எதுவும் இருக்கவில்லை. ஆயினும் 1990ம் ஆண்டிலிருந்து போர்க்களத்தில் குதித்த விதுஷா, எத்தனையோ சமர்களில் பங்குபந்றி வீர சாதனைகள் படைத்தார். அவரது அபாரமான துணிவும் தலைமைத்துவப் பண்புகளும் காரணமாக அவர் படிப்படியாக பதவியுயர்வு பெற்று மூத்த கள ஆண் தளபதிகளுக்கு சமநிலையாக கேணல் ரக மேற்பதவிக்கு உயர்த்தப்பட்டார். ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற ரீதியிலும், கெரில்லாப் போரிலும் மரபுவழிப் போரிலும் பெண்களின் பங்கு என்ற ரீதியிலும், ஒரு தசாப்பதத்திற்கு மேலான விதுஷாவின் கள அனுபவமும் தலைமைத்துவமும் பிரமாத மானது. உலக இராணுவ வரலாற்றில் போற்றுதற்குரிய பெண் போராளி என்ற உன்னத இடத்தை அவர் பெற்றிருக்கிறார். கடந்த பத்து வருடங்க ளுக்கு மேலாக, பெண் போராளிகளுக்கு தலைமை தாங்கி படை நகர்த்தியதோடு, போர் முனைகளில் அவர்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பிலுள்ள போராளிகளில், ஏராளமான களங்களைக் கண்டு அனுபவ முதிர்ச்சி அடைந்தவர்களில் விதுஷாவும் ஒருவர்.
எமது வீட்டுக்கு வருகை தரும் போராளிகளும் நண்பர்களும் பல்வேறு கருத்துகளைச் சொல்வார்கள். கண்டன விமர்சனங்களையும் முன்வைப்பார்கள். சிலரது உரையாடல்கள் நகைச் சுவை நிறைந்ததாக இருக்கும். இவர்களில் முக்கியமானவர் திரு. புதுவை இரத்தினதுரை. புதுவை எமக்கு நெருங்கிய நண்பர். புகழ்வாய்ந்த கவிஞர். ஈழத்து இலக்கிய வட்டத்தில் மிகவும் பிரபல்யமானவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தானப் புலவர். அபாரமான ஆளுமையுடைய மனிதர்.
எல்லாப் பிரச்சினைகளையும் ஆழமாக, அக்கறையுடன் அலசிப் பார்க்கும் இயல்பு புதுவைக்கு உண்டு. சில விடயங்களில் உறுதியான, கடும் போக்கையும் கொண்டிருப்பார். சிற்பக் கலையிலும் அவர் ஒரு விற்பன்னர். இதனால் அவரது உலகப் பார்வை தமிழ்ப் பண்பாட்டை மையமாகக் கொண்டிருக்கும். தமிழ் மொழியில் மட்டுமன்றி, தமிழரின் பண்பாட்டு முறைமைகள் பற்றியும் புதுவையிடம் ஆழமான அறிவுண்டு. இதனால் தமிழரின் வாழ்க்கை முறையில் பொதிந்து கிடக்கும் பல்வேறு அர்த்த பரிமாணங்கள் பற்றி நான் புதுவையிடம் விளக்கம் பெற்றுக் கொள்ள முடிந்தது. மனதில் உள்ளதை மனம் திறந்து பேசும் உரிமை தனக்குண்டு என்பதை அச்சமின்றி அடித்துக் கூறும் புதுவையின் சீரிய மாண்பு எனக்குப் பிடிக்கும். புதுவையின் வாயிலிருந்தே மிகவும் கூர்மையான, உயிர்த்துடிப்பான விமர்சனங்கள் வெளிவரும். அதுபோலவே அவரது நகைச் சுவையும். மொழியை மிகவும் நுட்பமாகவும் லாவகமாகவும் கையாண்டு கிண்டலாக அவர் சொல்லும் பகிடிகள் வயிறு குலுங்கச் சிரிப்பூட்டும். அவர் அடிக்கடி எமது வீட்டிற்கு வருகை தருவார். நாமும் அவரது வீட்டிற்கு செல்வோம். அப்பொழு. தெல்லாம், தனது வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஒரு வெற்றிலையை எனக்குத் தந்துவிட்ட, தனது வெற்றிலையின் காம்பை நுள்ளி எறிந்து விட்டு அதன் முதுகில் சுண்ணாம்பைத் தடவி, பாக்குச் சீவல்களை வைத்து மடித்து, பின் அதனை வாய்க்குள் செருகி, உதடுகள் இரத்தமாக சிவக்கும் வரை நன்றாக மென்று அசைபோட்டவாறு நகைச் சுவையோடு உரையாடுவார் புதுவை. இப்படியாக பல குளிர்மையான மாலைப் பொழுதுகளை மகிழ்ச்சிகரமாக அவருடன் கழித்தோம்.
விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராக புதுவை பணியாற்றி வருகிறார். அத்துடன் பிரபல தமிழ் இலக்கிய ஏடான “வெளிச்சத்தின்” மேற்பார்வை ஆசிரியராகச் செயற்பட்டு, அச் சஞ்சிகையை நீண்ட காலமாகப் பிரசுரித்து வருகிறார். £வெளிச்சம்” சஞ்சிகைக்கு பாலா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். “£பிரம்மஞானி” என்ற புனைப்பெயரில், தத்துவம், சமூகவியல், அரசியல் போன்ற துறைகளில் தொடர்ச்சியாக பல கட்டுரைகளை எழுதி யிருக்கிறார். புதுவையின் ஊக்குவிப்பும், முயற்சியும் காரணமாகவே “உடையாத விலங்குகன்” என்ற தலைப்பில் சீதனப் பிரச்சினை பற்றி நான் எழுதிய ஆங்கில நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தொடர்ச்சியான கட்டுரைகளாக “வெளிச்சத்தில்” பிரசுரமாகின.
புதுக் கவிதை இலக்கியத்தில் புகழீட்டியவர் புதுவை. சரியாகச் சொல்லப்போனால் அவர் ஒரு மக்கள் கவிஞர். அவரது கவிதைகள் விடுதலைப் போராட்டத்தையும் அந்தப் போராட்ட சூழலில் வாழும் மக்களின் அவலம் நிறைந்த அன்றாட வாழ்க்கையையும் உணர்வு பூர்வமாக, மெய்யுண்மையாக பிரதிபலித்துக் காட்டும். புதுவை ஒரு விடுதலைக் கவிஞரும் கூட. அவரது விடுதலைக் கவிதைகள் மிகவும் பிரபல்யமானவை. தமிழர் தேசமெங்கும் எல்லா மக்களாலும் உணர் வுடன பாடப்படும் கவிதைகள்.
எமது வீட்டுக்கு அடிக்கடி விஜயம் செய்யும் நண்பர்களில் ரவியும் (ரவீந்திரன்) ஒருவர். ரவி ஒரு சிரேஷ்ட உறுப்பினர். புலிகள் அமைப்பின் அதிகாரபூர்வ இதழான “விடுதலைப் புலிகள்” பத்திரிகையின் ஆசிரியர். அடுத்தது திரு. ஜெயராஜ். புலிகள் அமைப்பின் தினசரிப் பத்திரிகையான “ஈழநாதத்தின்’ ஆசிரியர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கை நெறி தவறாமல் எழுத வேண்டும் என்பதால் ரவியும், ஜெயராஜும் பாலாவின் வழிகாட்டலில் தங்கியிருந்தனர். அரசி யல் நிலையிலும், போர்க்கள நிலஹங்களிலும் ஏற்படும் மாற்றங்கள், திருப்பங்களை அறிந்து கொள்வதற்காக ஜெயராஜ் எமது வீட்டிற்கு தினமும் வருவார். இராணுவ, அரசியல் நிலைமை பற்றிய மாதாந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதவேண்டும் என்பதால், ரவி பாலாவை அடிக்கடி சந்தித்து, கலந்தாலோசனைகள் நடத்துவார். விடுதலைப் புலிகளின் இராணுவ கந்திரோபாய நகர்வுகள் பற்றி விபரிக்கும் கட்டுரைகள் திரு. பிரபாகரனுக்கு அனுப்பப்படவேண்டும். அவரது ஒப்புதலைப் பெற்ற பின்னரே அக்கட்டூுரைகள் “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் பிரசுரமாகும். புலிகள் அமைப்பின் கொள்கையை விளக்கி “விடுதலைப் புலிகள்” பத்திரிகைக்கு சில சமயங்களில் பாலாவும் தத்துவார்த்த . கட்டுரைகளை எழுதுவார். புலிகள் அமைப்பின் கொள்கையை வகுக்கும் தத்துவாசிரியர் என்ற நீதியில் மட்டுமல்லாமல், பத்திரிகைத் துறையில் நிறைய அனுபவம் பெற்றவர் என்பதாலும் பாலாவின் ஆலோசனையும் வழிநடத்தலும் ரவிக்கும், ஜெயராஜிற்கும் தேவைப்பட்டது. அத்தோடு திரு. பிரபாகரனுடனும், தமிழ்ச்செல்வனுடனும், மற்றைய மூத்த தளபதிகளுடனும் பாலாவுக்கு தனிப்பட்ட உறவும் தொடர்பும் இருந்ததால் அன்றாட செய்திகளை மட்டுமன்றி, அரசியல் - இராணுவ நிலைமைகளையும் திருப்பங்களையும் எடுத்து விளக்கும் ஆற்றல் பாலா விடம் இருந்தது.
ரவியின் மனைவி சோபனா விடுதலைப் புலிகள் அமைப்பில் பணிபுரிந்தவர். மகளிர் அமைப்பின் மாதாந்த ஏடான “சுதந்திரப் பறவைகள் ’ பத்திரிகையில் அவர் பணிபுரிந்த காலத்திலிருந்து சோபனாவை எமக்கு நன்கு தெரியும். ஜெயராஜின் மனைவி கங்கா. இவர் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவ்விரு தம்பதிகளும் எமது நெருங்கிய நண்பர்கள் என்பதால் அடிக்கடி எமது இருப்பிடத்திற்கு வந்து செல்வார்கள்.
8.6 தொடரும் போர்
கண்டி - யாழ்ப்பாண நெடூஞ்சாலையைக் கைப்பற்றி, வன்னிப் பெருநிலப்பரப்பை இரு கூறுகளாக துண்டாடும் நோக்கத்தோடு தொடக்கப்பட்ட “ஜெயசுக்குறு” படைநகர்வு, 18 மாதங்களாக நிகழ்ந்த கொடிய சண்டைகளைத் தொடர்ந்து மாங்குளத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென உறுதிபூண்டு நின்ற புலிப் படைவீரர்கள், மிகவும் மூர்க்கமான எதிர்த் தாக்குதலைத் தொடுத்தனர். சிங்கள இராணுவப் படையணிகளுக்கு பின்புறமாகவும், பக்கவாட்டாகவும் உக்கிரமான தாக்குதலை நடத்தி, அரச துருப்புகளுக்கு பாரிய உயிர்ச் சேதங்களை விளைவித்தனர். புலி வீரர்களின் ஆக்ரோசமான எதிர்த் தாக்குதல்களின் விளைவாக அரச படைகளின் மனவுறுதி உடைக்கப் பட்டது. *ஜெயசுக்குறு”’ சமரில் 3000 இராணுவத்தினர் கொல்லப் பட்டதுடன் 7000 பேர் வரை காயமடைந்தனர்.
வன்னிக் காடுகள் விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பரீட்சியமான பிரதேசம். இந்த மண்ணில்தான் புலிவீரர்கள் உலகத்தின் நான்காவது பெரிய இராணுவமாகிய இந்தியப் படையுடன் போராடி சாதனைகளைப் படைத்தனர். காட்டு கெரில்லாப் போரில் ஆழமான அனுபவத்தைக் கொண்டிருந்ததாலும், தமக்கு பழக்கப்பட்ட, இராணுவ ரீதியாக அனுகூலமான நிலத்தில் நின்று போராடியதாலும், புலிப் படைவீரர்கள் சிங்கள அரச படைகளுக்கு பெரும் சவாலாக விளங்கினர். முல்லைத்தீவு பெரும் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தளபாடங்களை ஆதாரமாகக் கொண்டு பீரங்கி, மோட்டார், டாங்கி எதிர்ப்புப் படைப் பிரிவுகளை உருவாக்கிய பிரபாகரன், அவற்றை “ஜெயசுக்குறு” படையணிக்கு எதிராக ஏவிவிட்டார். தமிழீழத்தின் முழுப் படை பலத்தையும் அணிதிரட்டி வன்னிப் பிரதேசத்தை பாதுகாக்க அவர் உறுதி பூண்டிருந்தார். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் மூத்த தளபதி யான கேணல் கருணாவின் தலைமையில் இயங்கிய ஜெயந்தன் படையணியை வன்னிக்கு வரவழைத்தார். ஜெயந்தன் படையணி போர் அனுபவத்தில் முதிர்ந்த, போர்க் கலையில் பல சாதனைகளைப் புரிந்த ஒரு சிறப்புப் படைப்பிரிவு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வன்னிப் பெருஞ்சமரில் ஜெயந்தன் படையணி யின் பங்களிப்பு மகத்தானது. அது வன்னிச் சமரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஜெயந்தன் படையணி, சாள்ஸ் அன்ரனி படையணி, இம்ரான் - பாண்டியன் படையணி, மாலதி படையணி, சுகன்யா படையணி, சோதியா படையணி: மற்றும் வேவுப் பரிவு, டாங்கி எதிர்ப்பு விசேட அணி, கரும்புலி அணி, விமான எதிர்ப்பு அணி போன்ற சகல படைப் பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரே கட்டளைப் பீடத்தின் கீழ் எதிரிப் படைகள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்தப் பாரிய எதிர்த் தாக்குதலுக்கு கேணல் கருணா, கேணல் தீபன், கேணல் பால்ராஜ், கேணல் பானு, கேணல் விதுஷா ஆகிய மூத்த களத் தளபதிகள் தலைமை தாங்கி படை நடத்தினர்.
‘ஜெயசுக்குறு’ படையெடுப்பில் அமெரிக்காவில் பயிந்சி பெற்ற 53, 54 படைப் பிரிவுகள் உட்பட, 30,000 சிங்கள இராணுவத்தினர் ஈடூபடுத்தப்பட்டனர். சண்டைகள் மிகவும் மூர்க்கமானதாக நீண்ட காலத்திற்கு இழுபட்டன. விமானக் குண்டுவீச்சு உட்பட பாரிய சுடு சக்தியை பிரயோகித்த போதும், சிங்கள ஆயுதப் படையினரால் தமது தந்திரோபாய இலக்கினை அடைய முடியவில்லை. ஊடுருவ முடியாத பாதுகாப்பு அரண்களை நிறுவி புலிப் படை வர்கள் கடுமையான எதிர்த் தாக்குதலை நிகழ்த்தியதன் விளைவாக புளியங்குளம், கனகராயன் குளம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பட்டினங்களில் சிங்களத் துருப்புகள் முன்னேற முடியாமல் பல மாதங்களாக முடங்கிக் கிடந்தன. இந்தப் பட்டினங்களில் நிகழ்ந்த பயங்கரமான சண்டைகளில் சிங்கள இராணுவம் பெருமளவில் உயிர்ச் சேதத்தை சந்தித்தது. இச் சண்டைகளின்போதுதான் சிங்கள இராணுவத்தின் சிறப்புப் படையணிகள் சிதைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கில் இப் படையணிகளைச் சேர்ந்த அதிரடிப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 18 மாதங்களாக தொடர்ந்த கடும் சமரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள இராணுவம் மாங்குளத்தை அண்மித்தது. அப்படியிருந்தும் மாங்குளத்தில் விடுதலைப் புலிகளின் அரண்களை சிங்கள இராணுவத்தால் உடைக்க முடியவில்லை. 1998ம் ஆண்டு செப்டெம்பர் 27ம் திகதி “ஓயாத அலைகள் 2” என்ற வலிந்து தாக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள் கிளி நொச்சிப் பட்டினத்தையும் அதன் சுற்றூாடலையும் கைப்பற்றினர். தமது சிறப்புப் படையணிகளை ஈடுபடுத்தி, கிளிநொச்சி சமரில் புலிகள் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில்தான் சிங்கள இராணுவம் மாங்குளத்தைக் கைப்பற்றியது. எனினும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்தமை சிங்கள இராணுவத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. யாழ்ப்பாணம் வரை பாதை திறக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு இதுவொரு பேரிடியாக விழுந்தது. கண்டி - யாழ்ப்பாண நெடுஞ்சாலை வழியாக மெல்ல மெல்ல வதைபட்டு முன்னேறிய சிங்களப் படைகளின் பயணம் மாங்குளத்துடன் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
“ஜெயசுக்குறு” சமர் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முல்லைத்தீவிலுள்ள புதுக்குடியிருப்பில் எமது வாழ்க்கை இயல்பான முறையில் ஓடிக்கொண்டிருந்தது. நாளாந்தம் கேட்கும் பீரங்கிகளின் முழக்கம் எமது வாழ்க்கையின் ஓர் அம்சமாகிவிட்டது. இடைக்கிடையே முல்லைத்தீவு கரையோரமாக நடைபெறும் விமானக் குண்டுவீச்சுகளும் கடற்படை பீரங்கி தாக்குதல் களும் இயல்பான நிகழ்வாகிவிட்டன. நாளாந்த போர் நிலவரங்களை பிரபாகரனின் செயலகத்திலிருந்து அறிந்து கொள்வோம். அந்தச் செய்திகளை, பாலா உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவிப்பார். திரு. பிரபாகரன் அல்லது மூத்த களத் தளபதிகள் யாராவது எமது வீட்டிற்கு வரும்பொழுது, கள நிலவரங்கள் பற்றிய விபரங்களை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வோம். ஈழநாதம் பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பாள ரான திரு. தினேஷ் எமது வீட்டிற்கு அடிக்கடி வருவார். இவர் ஒரு சிரேஷ்ட உறுப்பினர். அத்துடன் எமது நண்பரும் கூட. “ஜெயசுக்குறு” சமர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஆபத்தையும் பொருட்படுத்தாது, இவர் துணிவுடன் போர்க் களத்திற்கு அடிக்கடி சென்று போர் நிலவரங்களை எமக்கு வந்து விளக்குவார்.
வன்னிப் பெருஞ்சமரில் பங்குபற்றி “ஜெயசுக்குறு” படை யெடுப்பை முறியடித்ததில் கேணல் கருணாவின் தலைமையி லான ஜெயந்தன் படையணி மகத்தான பங்காற்றியது. இதனால் கேணல் கருணா, புலிப் படை வீரர்கள் மத்தியில் புகழையும் பெரும் மதிப்பையும் பெற்றார். வன்னி மக்களும் நன்றி கலந்த அன்புடன் அவரைப் பாராட்டினர். கேணல் கருணா போர்க்கலையில் வித்தகர். பல களங்களைக் கண்ட வரர். தனது அறிவை வளர்க்க வேண்டும் என்பதில் அவருக்கு ஒரு அலாதியான ’ஆசை உண்டு. தனது சொந்த முயற்சியினால் ஆங்கில மொழியைக் கற்றறிந்து தேறினார். ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததால் அவரால் பல விடயங்களை வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. இராணுவ விஞ்ஞான நூல்களையும், அரசியல் ஆய்வு களையும் அவர் விரும்பிப் படிப்பார். எனவேதான் கருணா எமது வீட்டுக்கு வரும்பொழுதெல்லாம் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் நிலவரங்கள் பற்றி கேள்விக் கணைகளுடன் வருவார். பாலாவும் இந்தச் சந்தர்ப் பங்களைப் பயன்படுத்தி, வன்னிக் கள நிலைமைகள் பற்றி துருவி ஆராம்ந்து விபரமான விளக்கத்தைப் பெறுவார். மட்டக்களப்பு போராளிகள் அன்புடன் மனம் திறந்து உறவாடும் இயல்புடையவர்கள், . போரிலும் திறமைசாலிகள்; வீரம் படைத்தவர்கள். தென் தமிழீழத்தில் அரச ஒடுக்குமுறை ஈவிரக்கமற்றதாக, கொடுமையானதாக இருந்ததால், இந்தச் சூழலில் பிறந்து வளர்ந்து புலிகள் இயக்கத்தில் இணைந்த இளம் பரம்பரை, அரச ஒடுக்குமுறையின் கருவியாக இயங்கும் ஆயுதப் படைகளுடன் போரிடூவதில் அபாரமான மனவுறுதியும் துணிவும் படைத்ததாக விளங்கியது. தென் தமிழீழ புலி வீரர்களுக்கு மரபு வழி போர்க் கலையில் கடும் பயிற்சிகளைப் பெறுவதற்கு திரு. பிரபாகரன் வாய்ப்பளித்தார். இப் பயிற்சிகளால் தேர்ந்த ஜெயந்தன் படையணி எதிரி இராணுவத்திற்கு மரண அடிகளைக் கொடுத்தது.
8.7 பாலா கருமையாக நேயுற்றார்
1998 ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி, மாலை வேளை. நு பெண போராளியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெள்ளை வேட்டியும் சேட்டும் அணிந்து துப்புரவாக புதுப்பொலிவுடன் காணப் பட்டபோதும் பாலாவின் முகத்தில் ஏதோ பிசகு இருப்பது போல் எனக்குப் பட்டது. சிறிது உற்றுப் பார்த்தபோது அவரது கண்கள் சிறிதாக வீங்கியிருப்பதை நான் அவதானித்தபோதும், பிற்பகல் தூக்கத்தால் ஏற்பட்டிருக்கலாமென எண்ணி நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. திருமண வைபவத்தில் புலிகள் அமைப்பின் மருத்துவரான டாக்டர் சூரியை சந்தித்தபோது பாலாவின் முகம் அதைத்திருப்பதை அவரிடம் குறிப்பிட்டுச் சொன்னேன். கடந்த இரு வாரங்களாக பாலாவுக்கு வயிற்றுக் கோளாறு இருப்பதையும், கண்களும் குதிக்காலும் வீங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி, சில சமயம் இவை சிறுநீரக . வியாதியின் தோற்றப்பாடாக இருக்குமோ என நான் வேடிக்கையாக சொன்னபோது டாக்டர் சூரி சிறிது வியப்படைந்து கலவரத்துடன் காணப்பட்டார். அடுத்த நாள் காலை, பாலா சிறுநீர் கழிக்கவில்லை என அறிந்ததும், அவர் கடுமையாக நோயுற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த சம்பவத்துடன் எமது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் கட்டவிழத் தொடங்கியது. வன்னியில் பாலா சுகவீனமடைந்து சாவின் விளிம்பை அடைந்தபோது எமது வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறியது.
பாலாவின் நோய்க் குறிகளை அறிந்ததும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் அவரை வந்து பரிசோதனை செய்து பார்த்தார்கள். நோயை இனம்கண்டு காட்டக்கூடிய மருத்துவக் கருவிகளோ அன்றி பரிசோதனை ஆய்வு வசதிகளோ புதுக்குடியிருப்பில் இருக்கவில்லை. வெளிப்பாடாக தென்பட்ட நோய் குறிகளை அடிப்படையாக் கொண்டு, புலிகளின் மருத்துவர்களும் உள்ளூர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரும் கலந்தாலோசித்து, சிறுநரகத்தில் தொற்றுநோய் என தற்காலிகமாக முடிவெடுத்தனர். பரீட்சார்த்த குளாயில், சிறுந்ரை நெருப்பில் சூடு காட்டியபோது அதில் தென்படும் புரதப் பொருளின் அளவைக் கொண்டே சிறுநரகத்தில் கோளாறு உள்ளதாக மருத்து வர்களால் கணிப்பிடமுடிந்தது. வழமையான தொற்றுநோய் தடுப்பு மருந்துகளால் பாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவருக்கு குணம் ஏற்படவில்லை. படிப்படியாக அவரது நோய் கடுமையாகிறது.
பாலாவுக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பு, புலிகள் அமைப்பின் மூத்த மருத்துவரான. டாக்டர் சூரியிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரி, ஆற்றலும் அனுபவமும், அன்பும் பண்பும் நிறைந்த ஒரு இளம் மருத்துவர். 1996ம் ஆண்டு, வன்னிக்கு இடம்பெயர்வதற்கு முன்பாக, யாழ்ப்பாண பொது வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து நிறைய அனுபவம் பெற்றவர் சூரி. அதன் பின்பு வன்னிச் சமர்களில் காயம டைந்த ஏராளமான போராளிகளுக்கு சிகிச்சை அளித்தவர். பாலாவுக்கு ஏற்பட்டுள்ள சிறுந்ரக நோய்க்கு உகந்த சிகிச்சையளிக்கும் ஆற்றலும் அனுபவமும் தமக்கு இல்லையென அவர் வருத்தப்படுவார். தமது கண்காணிப்பிலுள்ள நோயாளர் மீது, கடமையுணர்வுடனும் பெரும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளும் சூரி, பாலாவின் பராமரிப்பை பொறுத்தவரை, தனது சொந்தக் கணிப்பிற்கு மாறாக எந்த முடிவும் எடுக்க மறுத்தார். அவரது சக மருத்துவரும் எனது நண்பியுமான டாக்டர் பத்மலோஜினியுடனே சூரி கலந்தாலோசிப்பார். அத்துடன் சிறுநீரக வியாதிகள் பற்றி ஏராளமான மருத்துவ நூல்களையும் அவர் படித்தார். பாலாவுக்கு பயனுள்ள சிகிச்சை அளிப்பதாயின், முதலில் செம்மையான பரிசோதனைகள் நடத்தி அவருக்குள்ள நோய் என்னவென்பதை கண்டுபிடிக்கவேண்டும் என்பது சூரியின் கருத்து. பாலாவின் பராமரிப்பில் பழமையான முறைமையைத் தான் சூரி கடைப்பிடித்தார். சரியான முறையில் ஆய்வுகளும் பரிசோதனைகளும் செய்யாமல் நோயின் குன்மையைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம் என்பது அவருக்குத் தெரியும். அப்படியான சூழலில் கண்மூடித்தனமாக சிகிச்சை அளிப்பது காலக்கெதியில் ஆபத்தானதாக முடியும் என்பது அவரது கணிப்பு. எனவே, தனது அறிவிற்கும் தனக்குள்ள வசதி வரம்பிற்குள்ளும் பாலாவுக்கு சிகிச்சை அளித்துவந்த சூரி, உயிர்ரசாயனவியல் ஆய்வுகளின் அடிப்படையில், விஞ்ஞான ரீதியில், நோயின் தன்மையை இனம் கண்டுகொள்ள கடும் முயற்சி எடுத்தார். உள்ளூர் மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவர் ஒருவரின் உதவியுடன், நோயாளியின் உண்மையான பெயரை தெரியப்படுத்தாமல், பாலாவின் இரத்த, சிறுநீர் மாதிரிக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக, அவந்றை கொழும்புக்கு அனுப்பும் வழிமுறையை கண்டுபிடித்தார். இதனையடுத்து. பாலாவின் இரத்த, சிறுநீரக மாதிரிக் கூறுகள் ஆய்வுக்காக வெவ்வேறு பெயர்களில் கொழும்புக்கு அனுப்பப்பட்டு வந்தன.
மாதிரிக் கூறுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர், ஆய்வு முடிவுகளுடன் டாக்டர் சூரியும், சக மருத்துவர் ஒருவரும் எமது வீட்டுக்கு வருகை தந்தபொழுது, ஏதோ பாதகமான செய்தியுடன் தான் வருகிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். பாதகமான அல்லது சோகமான செய்திகளை வெளியிடத் தயங்கும் சூரி, அந் நேரங்களில் தனக்குத் துணையாக இன்னொருவரை அழைத்துவருவது நடைமுறை என்பதை அனுபவம் மூலம் நாம் அறிந்து வைத்திருந்தோம். நீண்ட கால நீரழிவு காரணமாக பாலாவின் சிறுநீரகங்களின் செயற்பாடு பாரதூரமான முறையில் பாதிக்கப்பட்டிருபபதாக ஆய்வுகளிலிருந்து தெரிய வந்தது. பாலாவின் இடது சிறுநீரகம் முற்றாக முடக்கம் கண்டிருந்தது என்பதை அப்பொழுது நாம் ஒருவரும் அறிந்திருக்க வில்லை. மோசமான சிறுநீரக வியாதி என்பது ஒரு புறமிருக்க, பாலாவின் இரத்தத்தில் சாம்பரம் (Potassium), wமூத்திரை (Urea) ஆகியவற்றின் அளவுகள் ஆபத்தான நிலையை எட்டியிருந்தன. இதற்கு வன்னியில் எந்த விதமான சிகிச்சை வசதிகளும் இருக்கவில்லை. பாலாவின் உடல் நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியது. திரு. பிரபாகரன், எமது வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்து, பாலாவின் உடல் நிலை பற்றி. விசாரித்துச் செல்வார். அவருக்கு பாலாவைப் பீடித்திருக்கும் ஆபத்தான வியாதி பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
கடந்த 15 ஆண்டு காலமாக, உணவக்கும் மருந்துக்கும் விதிக்கப்பட்ட தடை காரணமாக வட மாநிலத்தின் சுகாதார பராமரிப்பு வசதிகள் சிதைந்து போனதுடன் வெகுசனத்தின் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. “பனடோல்?” போன்ற அடிப்படையான மருந்துகளுக்கே பெரும் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் பெரும் . அவலங்களுக்கு ஆளானதுடன், சில சமயங்களில் அநியாயமான சாவுகளும் நிகழ்ந்தன. இது மாத்திரமன்றி, நோய்களை அறுதியிட்டுக் கூறும் வைத்திய உபகரணங்களும் இல்லாததால் நோயாளிகளின் உயிருக்கே பெரும் ஆபத்து ஏற்படும் நிலையும் எழுந்தது. புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் “எக்ஸ்ரே ’ படமெடுக்கும் கருவிகள் இருக்கவில்லை. நீண்ட காலமாகவே இவ் வசதிகள் அங்கு இல்லாததால், மல்லாவி போன்ற தொலைவிலுள்ள இடங்களுக்கு நோயாளிகள் பயணம் செய்ய நேரிடும். மல்லாவியிலும் சில சமயங்களில்”எக்ஸ்ரே ’ கருவிகள் இயங்குவதில்லை. மருத்துவ மனைகளின் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. மருத்துவ ஆய்வு கூட கருவிகளை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சு மறுத்துவந்தது. நோயாளிகளின் மாதிரிக் கூறுகளை ஆய்வு செய்து, நோய்களை அறுதியிட்டுக் கூறுவதற்கு ஏதுவான ஆய்வுகூட பரிசோதனைக் கருவிகளும் இருக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில் தான் பாலா கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
சிறுநீரக வியாதிக்கான மருத்துவ வசதிகள் இல்லாத ஒரு சூழலில் பாலா குணமடைவது சாத்தியமாக இருக்கவில்லை. ஏனைய நோயாளிகள் போல் அவரால் கொழும்பு செல்ல முடியாது. எனவே வரையறுக்கப்பட்ட வசதிகளையும், மருந்துகளையும் பாவித்து, நோய்க் குறிகளுக்கு சிகிச்சை அளித்து சமாளிப்பதைத் தவிர அங்குள்ள மருத்துவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. பல கடவைகள் சிங்கள இராணுவம் எல்லைக் காவல் நிலைகளை மூடிவிடூவதுண்டு. இது எனக்கு ஆழமான மனக்கலக்கத்தை ஏற்படூத்துவதுண்டு. ஏனென்றால் ப்பில் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படும்போது பாலா வின் இரத்த மாதிரிக் கூறுகளை கொழும்பிற்கு அனுப்ப முடியாது போய்விடும். அவ்வேளைகளில், பாலாவின் நோய் எந்த அளளிந்கு மோசமாகியுள்ளது என்பதை இரத்தப் பரிசோதனைகள் இல்லாமல் கண்டுகொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் டாக்டர் சூரி மிகவும் விரக்தியடைந்து காணப்படுவார். தனது பராமரிப்பிலுள்ள நோயாளியின் உடல்நிலை மாற்றங்களை அறியமுடியாத வசதிகளற்ற ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு, அந்த நோயாளி படிப்படியாக மோசமடைந்து வருவதைக் காண அவருக்கு வேதனையும் விரக்தியுமாக இருக்கும். இரத்த அழுத்தம் காரணமாக பாலாவுக்கு அடிக்கடி தாங்கமுடியாத தலைவலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது அங்கு கிடைக்கக்கூடிய பழைய வகையான இரத்த அழுத்த தடுப்பு மருந்துகளைப் பாவித்து நிலைமையை சமாளிக்க் முடிந்தது. சில சமயங்களில் அசாதாரணமாக இதயத் துடிப்பு ஏற்படும். இரத்தத்தில் சாம்பர (Potassium) நிலை மோசமாவதை அது குறிக்கும். அவரது நீரிழிவு நோய்க்கு அவசியமான இன்சுலின் ஊசி மருந்து கிடைக்காமல் போனதும் நிலைமையை மோசமாக்கியது. பாலா பாவிக்கும் இன்சுலின் மருந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும். இந்த மருந்தை ழுங்கான முறையில் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொடுப்பார் திரு. பிரபாகரன். துரதிர்ஷ்ட வசமாக இம்முறை நாம் சேமித்து வைத்திருந்த இன்சுலின் மருந்து பழுதடைந்துவிட்டது. வேறுவழியின்றி காலாவதியான பழுதடைந்த மருந்தையே பாவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். எனினும் இரண்டு வாரங்களின் பின்பு, பனிக் கட்டிகளுக்குள் அடைக்கப்பட்ட புதிய இன்சுலின் மருந்துகளை எமக்குக் கையளித்தார் திரு. பிரபாகரன்.
பாலாவின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. படுக்கையால் எழுந்திருக்க முடியாத் நிலை. சிறுநீரக நோய்க்கு அவசர சிகிச்சை பெற வேண்டிய கட்டம் வந்துவிட்டது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு வன்னியில் எவ்வித வசதியுமில்லை என்பதால் மருத்துவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை. மனம் கலவர மடைந்த இத்துயர வேளைகளில், பாலாவின் செயலகத்தில் பத்திரிகைகள் படித்தவாறு நீண்ட நேரமாக அமைதியாக காத்திருப்பார் கபில் அம்மான். இவர் ஒரு மூத்த உறுப்பினர். எமக்கு நெருங்கிய நண்பர். 1984ம் ஆண்டிலிருந்தே இவரோடு நாம் உறவாடி வருகிறோம். அப்பொழுது பாலா நடத்திய அரசியற் பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிய இளம் போராளிகளில் கபில் அம்மானும் ஒருவர். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நிறைய கள அனுபவம் பெற்றவர். கபில் அம்மான் மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவர். மனிதம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் இவர் ஆழமாக சிந்திப்பார். இவ்விடயங்கள் குறித்து பாலாவுடன் கலந்துரையாடுவார். பாலாவின் கடும் சுகவீனம் குறித்து கபில் அம்மானுக்கு ஆழமான கவலை. அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். ஆனால் எனக்கோ பாலாவுக்கோ எவ்வித தொல்லையும் கொடுப்பதில்லை. பாலாவின் உ டல்நிலைபற்றி மட்டும் விசாரித்துக் கொள்வார். தான் எத்தகைய உதவியும் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்பது போல அவர் அமைதியாக, நீண்ட நேரம் பாலா வின் ஆசிரம குடிசையில் அமர்ந்திருப்பார்.
பாலா கடுமையாக சுகஃனமுற்றிருக்கிறார்; அச் சுகவனத்தி லிருந்து மீளமாட்டார் என்ற செய்தி காட்டூுத்தி போல அமைப்பு அடங்கிலும் பரவியது. இத் தகவலை திரு. பிரபாகரன் தனது தளபதிகளுக்கும் அறிவித்திருந்தார். இதனையடுத்து தளபதிகளும் மூத்த உறுப்பினர்களும் ஒருவா ஒருவராக எமது வீட்டிற்கு வந்து சென்றார்கள். சிலர், கடைசி சந்திப்பாகவும் நினைத்து வந்தார்கள். . பாலாவைப் பார்க்க வந்த மூத்த தளபதிகளில் ஒருவர் பொட்டு அம்மான். எமது பழைய நண்பரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்) தனது மனைவி வெற்றிச்செல்வியுடன் மல்லாவியிலிருந்து வந்திருந்தார். பாலாவின் கடும் சுகவீனம் அவரை கவலையடையச் செய்திருந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், எமக்கு எல்லோரிடமிருந்தும் ஆறுதலும் அனுதாபமும் வந்து குவிந்தது. பாலா சுகவீனமடைந்த ஆரம்ப கட்டத்தில் எனக்கு முதன் முறையாக கைகொடுத்து உதவி புரிந்தவர் இந்திராணி, முன்னாள் ஈரோஸ் தலைவரும், விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகருமான திற், பாலகுமாரின் மனைவியான இந்திராணி ஒரு பயிற்சி பெற்ற தூாதியாஙார், மருத்துவ அறிவு உள்ளவர் என்பதால், மற்றவர்களைவிட இமத தான் பாலாவின் ஆபத்தான நோய்பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. 10 அறிவு காரணமாகவே, சில சமயங்களில், எமது வீட்டுக்கு வரும் பது அவரது கண்கள் கலங்கும். மோசமாகிவந்த பாலாவின் உ டல்றிலை குறித்து இந்திராணி கவலையடைந்த போதும் தன்னால் முடிந்த அளவிற்கு உடலுதவிகளைச் செய்து வந்தார். பசி குறைந்த நிலையிருந்த பாலாவுக்கு, அவரது உடலுக்கு எவ்வகையிலும் ஊரு விளைவிக்காத வகையில், பசியைத் தூண்டும் சுவையான ஓ ஙு வகைகளை சமைத்து வருவார். பாலாவின் நோய்பற்றியும், அவரைப் பராமரிக்கும் முறைகள் பற்றியும் நான் இந்திராணியிடம் கேட்। றிந்து கொள்வேன். தாதிப் பராமரிப்பு பற்றிய பல விடயங்களை நான் மறந்து போயிருந்தேன். எனவே, அவருடன் உரையாடும்போது பல விடயங்கள் நினைவுக்கு வரும். பாலாவின் உடல் உபாதையை குறைப்பதற்கு, சில ஆலோசனைகள் சொல்லுவார். ஒட்டுமொத்தத்தில், இந்திராணியின் உறவும் உரையாடல்களும் எனக்குப் பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தது.
வனீதா எனது பழைய நண்பி. தமிழ்ழ காவல் துறையின் பொறுப்பாளர் திரு. நடேசனின் மனைவி. இவர்கள் எமது வீட்டுக்கு அண்மையில் வசித்து வந்தனர். பாலா சுகவீனமுற்ற பொழுது வனீதா எமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சில சமயங்களில் கணவனுடன் குடும்பமாக வருவார். எமது வீட்டுக்கு வரும்பொழுது தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். சிறுநரக நோய் என்பதால், மருத்துவர்கள் பாலாவின் சாப்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். எனவே நான் வழமையாக சமைத்து வந்த உணவு வகைகளை சமைக்க முடியவில்லை. இதனால் எனது சமையலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதே வேளை, பாலாவுக்கு சத்துணவும் கொடுக்க வேண்டும். வித்தியாசமான உணவு வகைகளை சமைப்பதற்கு நான் வனீதாவிடம் ஆலோசனை கேட்பேன். அவர் யோசனைகள் கூறுவது மட்டுமன்றி, வித்தியாசமான உணவுகளை சமைப்பதில் எனக்குப் பயிற்சியும் தருவார். ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு, ஒரு சிங்களப் பெண்மணி தமிழ் உணவு வகைகளை சமைப்பது பற்றி பயிற்சி அளிப்பதென்பது ஒரு வினோதமான விடயம்தான். அதுவும் தமிழ் மொழியில் நாம் கதைத்துப் பேசி தமிழ் உணவுகளை சமைக்கும் வேடிக்கையைப் பார்த்தவர்கள் சிரிக்கத்தான் செய்தார்கள். திரு. நடேசனும் வனீதாவும் எமது குடும்ப நண்பர்கள். நடேசன் எமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்பொழுதெல்லாம் தமிழீழ காவல் துறையின் நிர்வாகம் பற்றி அவர் பாலாவுடன் கலந்தாலோசனைகள் நடத்துவார். பாலாவின் கருத்துகளை அவர் அக்கறையுடன் செவிமடுப்பார். தமிழீழ காவல்துறையில் புதிதாக சேர்க்கப்பட்ட உ றுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக பல வகுப்புகளை நிகழ்த்தி யிருக்கிறார் பாலா. போரினால் பொதுமக்களுக்கு பாரிய சமூக பொருளாதார பிரச்சனைகள் தோன்றியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, குற்றத்தை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமைகளில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு பாலா தமது வகுப்புகளில் வலியுறுத்துவார். குற்றங்களுக்கு பின்னணியிலுள்ள சமூக, பொருளாதார சிக்கல்களை கருத்தில் எடுத்து, ் பொதுமக்களை அன்புடனும் கருணையுடனும் அணுகுவதன் அவசியத்தையும் எடுத்து விளக்குவார்.
சட்டம் ஓழுங்கை நிலைநிறுத்தும் விடயத்தில், சில சமயங்களில் காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கும் பொழுது பொதுமக்களிடமிருந்து பாலாவுக்கு முறையீடுகள் வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் மக்களின் மனச்சாட்சியாக நின்று, இம் முறையீடுகள் பற்றி நடேசனுடன் கலந்துரையாடுவார் பாலா. நடேசன் ஒரு மூத்த உறுப்பினர். முற்போக்கு சிந்தனையுடைய அரசியற் பின்னணியை உடையவர். ஆகவே, நாம் கூறும் கருத்துகளுக்கு அவர் மதிப்பளிப்பார். நாம் முன்வைக்கும் விமர்சனங்களையும் ஆக்கபூர்வமாக எடுத்து கொள்வார்.
புதுவையின் மனைவியான ரஞ்சினியும் எனக்கு உதவியாக இருந்தார். பாலா விரும்பி உண்ணும் சுவையான உணவுகளை தயாரித்து அனுப்பி வைப்பார். சில சமயங்களில் சூசையின் மனைவி சுதாவும் எமது வீட்டுக்கு வருகை தந்து உணவு தயாரிப்பதில் எனக்கு. உதவி செய்வார்.
மோசமடைந்திருந்த பாலாவின் உடல்நிலை குறித்து, டாக்டர் சூரி, திரு. பிரபாகரனுக்கு அடிக்கடி அறிக்கைகளை அனுப்பி வைப்பார். ஏனைய மருத்துவர்களும் பாலாவின் நோய்பற்றி தமது அபிப்பிராயங்களை பிரபாகரனுக்கு தெரியப்படூத்தினர். சிறுநரக முடக்கத்திற்கு சிகிச்சை வசதிகளுள்ள ஒரு நவீன மருத்துவமனையில் பாலாவை அனுமதிக்க வேண்டுமென்றும், அதந்கு அவரை காலம் தாழ்த்தாது உடனடியாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூட்டாகக் கருத்துத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரச சிகிச்சைக்காக தமிழ் நாட்டிற்கு பாலாவை அனுப்பிவைப்பது பற்றி ஆராய்ந்தோம். இந்த யோசனைக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் ஆதரவும் அனுதாபமும் தெரிவித்தபோதும் எமது இயக்கம் மீது இந்திய அரசு தடைவிதித்திருந்த காரணத்தால் இந்தியா செல்வது ஆபத்தான காரியம் என்பதை உணர்ந்தோம். நோர்வே அரசின். உதவியை நாடுமாறு எமது சர்வதேச செயலகத்திற்கு திரு. பிரபாகரன் பணித்திருந்ததைத் தொடர்ந்து இந்த வெளிநாட்டின் உதவியை நம்பி நாம் ஆவலுடன் காத்திருந்தோம்.
8.8 சந்திரிகாவின் நிபந்தனைகள்
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திரு. ஏ.சி.எஸ். ஹம்து நோர்வே அரசுடன் நெருங்கிய தொடர்புடையவர். கொழும்பிலுள்ள நோர்வேயின் தூதுவர் திரு. ஜோன் வெஸ்போக்கின் நண்பர். எதிர்காலத்தில் சிநீலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் பட்சத்தில் பாலா முக்கிய பங்கு வகிப்பார் என்றும் அவரது உடல்நலம் தேறுவதற்கு நோர்வே அரசு உதவவேண்டுமென்றும் திரு. ஹமீது நோர்வேயின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பாலாவுக்கு உதவ நோர்வே அரசு முன்வந்தது. முதலில் அவரது நோயும், உடல்நிலைபற்றியும் அறிந்து கொள்ளும் பொருட்டு நோர்வே அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடியது. இதனைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி திரு. மக்ஸ் ஹடரன் ஒரு மருத்துவ நிபுணருடன் புதுக்குடியிருப்பிலுள்ள எமது வட்டிற்கு வருகை வந்து பாலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். “பாலாவை உடனடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என வற்புறுத்திய செஞ்சிலுவைச் சங்க மருத்துவர், பாலா வின் இரத்த, சிறுநீர், மாதிரிக் கூறுகளை மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு எடுத்துச் சென்றார்.
மனிதாபிமான அடிப்படையில், பாலாவை வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கும் திட்டத்துடன் நோர்வே அரசும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை அணுகின. சிறுநரக செய்லின்மையால் பாலா கடுமையாக நோயுற்றிருக்கிறார் என்ற செய்தியை சந்திரிகாவுக்கு அறிவித்த அவர்கள், வெளிநாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் அதற்கு நோர்வே அரசு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். எதிர்காலத்தில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் சமாதான பேச்சுவார்த்தை நிகழும் பட்சத்தில் பாலாவின் பங்கு முக்கியமானதாக அமையும் என்பதால் அவரது உடல் நிலை தேற உதவுவது அவசியமெனவும் நோர்வே . தூதுவர் சந்திரிகா அம்மையாருக்கு எடுத்து விளக்கினார். இப் பிரச்சினை சம்பந்தமாக கொழும்பில் நீண்ட மந்திராலோசனைகள் நிகழ்ந்தன. இந்த இரகசிய கலந்துரையாடல்களில் வெளிவிவகார மந்திரியும் சந்திரிகா வின் ஆலோசகருமான திரு. கதிர்காமரும் கலந்து கொண்டார். ஆக்கபூர்வமான முறையில் பேச்சுகள் நடைபெறுவதாகவும், பாலாவை வெளிநாட்டிற்கு அனுப்பும் நடைமுறைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப் படுவதாகவும் நோர்வே அரசு ஓஸ்லோ நகரிலுள்ள எமது இயக்கப் பிரதி நிதிகள் வாயிலாக எமக்குத் தெரியப்படுத்தியது. இந்தச் செய்திகள் எமக்கும், திரு. பிரபாகரனுக்கும் நிம்மதியைக் கொடுத்தன. இந்தச் செய்திகளால் ஊக்கமடைந்த திரு. பிரபாகரன், மனிதாபிமான நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது போர்க் கைதிகளை விடுதலை செய்தார். இதனைத் தொடர்ந்து சந்திரிகா குமாரதுங்கா அரசிடமிருந்து ஒரு நல்ல செய்தியை நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நாட்கள் பல கழிந்தன. அரசாங்கத்திடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. பாலாவின் உடல்நிலையும் மோசமாகி வந்தது. விரக்தியடைந்த நாம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடர்பு கொண்டோம். தமது அமைப்பு மீது கதிர்காமர் சந்தேகமும் நம்பிக்கையீனமும் கொண்டூள்ளதால், பாலாவின் பிரச்சனை சம்பந்தப்பட்ட விவகாரத்தில், செஞ்சிலுவைச் சங்கத்தை ஓரங்கட்டி வைத்திருப்பதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதி எமக்குத் தெரி வித்தார். இது எமக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஏக்கத்துடன் எதிர்பார்த்திருந்து இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர் இறுதியில் நோர்வே அரசிடமிருந்து பதில் வந்தது. பாலாவை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி செய்வதானால், “மனிதாபிமான” முயற்சிகளாக சில நிபந்தனைகளை (உறுதிப்பாடுகளை) விடுதலைப் புலிகள் இயக்கம் நிறைவு செய்ய வேண்டுமென சந்திரிகாவும், கதிர்காமரும் இணைந்து ஒரு பட்டியல் தயாரித்திருப்பதாக நோர்வே அரசு எமக்குத் தெரிவித்தது.
முதலாவதாக, வடகிழக்கில் அரசாங்க நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், அரச சொத்துடமைகளை தாக்கி அழிக்கக் கூடாதென்றும், விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உறுதியளிக்க வேண்டும். இரண்டாவதாக, ஆகாய கடல் மார்க்கமாக வடகிழக்கு பிரதேசத்திற்கு செய்யப்படும் விநியோகத்திற்கு எவ்வித குந்தகமும் இழைக்கப்படக்கூடாது. மூன்றாவ தாக, நாடு அடங்கிலுமுள்ள அரச சொத்துடமைகள் எதனையும் தாக்கியளிக்கக்கூடாது. நான்காவதாக, தடுத்து வைக்கப்படிருக்கும் எல்லாப் போர்க் கைதிகளையும், (செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும்) உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்திற்குத் தெரியாமல், புலிகள் இயக்கம் 250 போர்க் கைதிகளை சிறை வைத்திருப்பதாக அரசாங்கம் எண்ணியிருந்தது. ஐந்தாவதாக, புலிப் படையில் இணைக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட போராளிகள் அனைவரையும் இயக்கத்திலிருந்து நீக்கி, உற்றார் உறவினரிடம் கையளிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் சங்கடமான நிலையை சந்திரிகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைகிறார் என்பதை அவர் முன்வைத்த நிபந்தனைகளிலிருந்து நாம் ஊகிக்க முடிந்தது. இந்த நிபந்தனைகள் எல்லாம் இராணுவ ரீதியானவை. கடுமையான சிறுநரக நோயினால் உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரை வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு விடுத்த மனிதாபிமானக் கோரிக்கைக்கும் இந்த நிபந்தனைகளுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இது. சந்திரிகாவின் ஈவிரக்கமற்ற, வஞ்சகமான மனநிலையையே எடுத்துக் காட்டியது. நானும் பாலாவும் உடனடியாகவே இந்த நிபந்தனைகளை நிராகரித்து விட்டோம். இயக்கத்தை அவமதிக்கும் இந்த நிபந்தனை களை ஏற்றுக் கொள்வதைவிட தன்மானத்துடன் சாவதே மேலானது என பாலா தீர்மானித்தார். இப்படியான ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனை களை திணிக்க முனைந்த சந்திரிகா மீதும் கதிர்காமர் மீதும் பிரபாகரன் கடும் கோபம் கொண்டார். அரசின் மனிதாபிமானமற்ற நிலைப்பாடானது புலிகளின் தலைமைப் பீடத்திற்கு சந்திரிகா மீது ஒரு ஆழமான கசப்புணர்வை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் சமாதானத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு மனிதாபிமான கோரிக்கைக்கு சிறிதளவு காருணியம் காட்ட மறுக்கு இவர், மிகவும் கடினமான, சிக்கல் நிறைந்த இனப் பிரச்சினையை எப்படித் தீர்த்து வைப்பார்? அந்த நேரத்தில், விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் இப்படியானதொரு கேள்விதான் மேலோங்கி நின்றது.
இந்த சூழ்நிலையில், ஒரு அதிசயம் நிகழ்ந்தது போன்று, மோசமடைந்து வந்த பாலாவின் நோயில் சிறிது தணிவு ஏற்பட்டது. இரத்த மாதிரிக் கூறுகளின் பரிசோதனையிலிருந்து இது புலனாகியது. எனினும் மருத்துவ சிகிச்சைக்காக பாலாவை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டிய அவசியம் . இருக்கத்தான் செய்தது. மருத்துவ வசதியற்ற வன்னி சூழ்நிலையில், சிகிச்சை எதுவுமின்றி பாலாவை வைத்திருப்பது ஆபத்தானதென மருத்துவர்கள் கருதினார்கள். ஒவ்வொரு நாளும் பாலா வைப் பராமரிப்பது எனக்குப் பெரிய பாடாகப் பட்டது. உணவுக் கட்டுப்பாடு. மிகவும் இறுக்கமாக இருந்ததால் பாலா மிகவும் மெலிந்து வாடிப் போயிருந்தார். அப்பொழுது மாரி காலம் அண்மித்துக் கொண்டிருந்தது. மாரி காலம் தொடங்கினால், பேய் மழையும் பெரும் காந்றுமாக சில மாதங்களுக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும். அக் காலத்தில், கடற் பயணம் சாத்தியமாக இருக்காது. எனவே, மாரி காலத்திற்கு முன்பாக, கடற் பயணம் செய்யும் உடல் நிலையில் இருக்கும் வேளையில் பர்லாவை வன்னியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்பது எனது அவா. திரு. பிரபாகரனும் மதிவதனியும் எமது வீட்டுக்கு வந்தபொழுது எனது மனதிலிருந்த ஏக்கம் உணர்வு பூர்வமாக வெளிப்பாடு கண்டது. பாலாவின் . கொடிய நோய் பற்றியும், அதற்கு உடன் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் பற்றியும், இதில் தாமதம் ஏற்பட்டால் பாலாவின் உயிருக்கு. ஆபத்து ஏற்படலாம் என்பது பற்றியும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திணறியபடி நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். எனது மனக் கலக்கத்தைக் கண்டதும் திரு. பிரபாகரனுக்கு நிலைமை புரிந்து விட்டது. பாலா மீது அவருக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அத்தோடு எனது கணவரின் உடல் நலத்திலும் ஆழமான அக்கறையும் உணடு. தனக்குள்ள சக்தியையும் வளங்களையும் பிரயோகித்து “பாலா அண்ணாலை” வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை பெற வழிசெய்வதாக எனக்கு வாக்களித்து ஆறுதல் கூறினார் பிரபாகரன். சொல்லியபடியே உடன் செயற்பட்டார். பாலாவை வெளியேற்றுவதற்காக ஒரு கப்பலை ஓழுங்கு செய்யுமாறு இயக்கத்தின் சர்வதேச செயலகத்திற்கு பணித்தார். ஒரு சில வாரங்களில், முல்லைத்தீவுக்கு சமீபமாக ஆழ் கடலில் ஒரு கப்பல் எமக்காக நங்கூரமிட்டு காத்திருப்பதாக அறிந்தோம்.
நாம் தமிழீழத்தை விட்டு பயணிக்கப் போகிறோம் என்ற தகவல் பரவியதும் இயக்கத்தின் தலைவர்களும் போராளிகளும் நண்பர்களு மாக எமது வசிப்பிடத்திற்கு படையெடுத்தனர். நாம் புறப்படும் தினமான 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி நெருங்கி வந்த நாட்களில் . கவலை காரணமாக எனக்குப் பசியே தோன்றவில்லை. பாலா புறப்பட்டுச் செல்வது அவசியம்தான். ஆனால் போராட்டத்தையும் மக்களையும் விட்டுச் செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாம் புறப்படும் நாளன்று பிற்பகல் தமிழேந்தி எமது வீட்டுக்கு வந்தபொழுது நேரம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தேன். எம்மை ஏற்றிச் செல்லும் “பஜரோ?” வாகனத்துடன் கமிழ்ச்செல்வன் வந்தபோது புறப்படும் வேளை மிகவும் அண்மித்துவிட்டது என்பதை உணர்ந்தேன். முல்லைத்தீவு கரையோரமுள்ள கடற்புலிகளின் தளத்திற்கு எம்மைக் கூட்டிச் செல்வதற்காக சூசையின் வாகனம் எமது வீட்டுக் காணிக்குள் நுழைந்தபோது நாம் சீக்கிரமே புறப்பட்டுச் செல்லப் போகிறோம் என்பதை உணர்ந்தேன். இறுதியாக திரு. பிரபாகரனுக்காக காத்திருந்தோம். அவர் வந்ததும் பாலாவுடனும் என்னுடனும் சிறிது நேரம் உரையாடிவிட்டு எமக்கு பிரியாவிடை தந்தார். எல்லோரும் தமது சோகத்தை மறைப்பதற்காக கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தனர். பதினைந்து வருடங்களுக்கு மேலாக, மிகவும் பாசத்துடன் வளர்த்த தனது விசுவாசமான நாய் ஜிம்மியின் சோகமான முகத்தை உறந்றுநோக்க முடியாது திணறிய எனது கணவர், தனது உணர்ச்சியை அடக்கியவாறு தமிழ்ச்செல்வனின் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். நான் ஜிம்மியின் தலையைத் தடவி விட்டேன். பின்பு அங்கு குழுமி நின்ற எல்லோரையும் ஒரு தடவை நோட்டம் விட்டு இறுதியாக பிரபாகரனைப் பார்த்தேன். அதுதான் இறுதிக் கட்டம். எமது வாகனம் வீட்டிலிருந்து விரைவாகப் புறப்பட்டூச் சென்றது.
476